நேசம்-வேஷம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ நேசம் புதிரானது.
❖ நேசம் என்பது பலர் எதிர்பார்த்தும் கிடைக்காத ஒன்று!
❖ பலர் மற்றவருக்குக் கொடுக்க முயற்சித்தும் கொடுக்க முடியாத ஒன்று! என்ன! குழப்பமாக இருக்கிறதா?
❖ நேசத்தைப் பற்றிப் பலர் பேசியிருந்தாலும் அதில் முக்கியமான சிலரின் கூற்றைத் தெரிந்து கொண்டால் உங்கள் குழப்பம் தீர்ந்துவிடும். புத்தர் - 'உன்னை நேசி' இயேசு - 'உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி'
ரிஷி கூற்று - ‘உன்னை நேசிக்காமல் பிறரை
நேசிக்கவே முடியாது’
இன்று மூன்று பேரின் கூற்றையும்
தெரிந்து கொண்ட பிறகு கீழ்க்கண்ட
உண்மைகளைப் புரிந்துகொள்வது
வெகு சுலபம்.
❖ ‘பிறரை நேசிக்கும் அளவுக்குத்தான்
நீங்கள் உங்களை நேசிக்க முடியும்.
உங்களை நேசிக்கும் அளவுதான்
பிறரை நீங்கள் நேசிக்கும் அளவு.
❖ வேஷம் அல்லது உள்வெறுப்பு
கலந்த நேசமாக
உங்கள் நேசம் இருந்தால்…
அது பிறரைத் தீண்டுவதைவிட
முதலில் உங்களைத்தான் அதிகம் தீண்டும்’.

❖ நேசத்தின் வேஷம்
கலையுங்கள்...
நேசத்தின் தோஷமும்
(மனிதாபமின்மை)
நேசத்தின் தோஷமும்
(ஆரோக்கியமின்மை)
உயிர்வாசத்தின் தோஷமும்
(ஆனந்தமின்மை)
நொடியில் பறந்தோடும்.
புது வழி பிறக்கும்.
பஞ்சு மனம்
❖ தவறான மனிதர்கள் உருவாவதற்குத் தவறான
வளர்ப்புமுறை காரணமா? என்று சிலர்
என்னிடம் கேட்பார்கள்.
❖ வளர்ப்பு முறையில்தான் எப்போதும் தவறு இருக்கிறது என்று சொல்ல முடியாது. வளர்ப்பவரின் முதிர்ச்சியில்தான் எப்போதும் தவறு இருக்கிறது.
❖ குழந்தையைக் கண்டிக்க -
குழந்தையின் மனோநிலை பற்றிய
ஞானமும், வாழ்க்கையின் போக்கு
பற்றிய ஞானமும் வேண்டும்.
குழந்தைக்குச் செல்லம் கொடுக்கவும்
மேற்கூறிய இரண்டும் தேவை.
❖ குழந்தைகள் மூளையிலிருந்து
செயல்படுவதில்லை.
குழந்தைகள் இதயத்தில் இருந்து
செயல்படுகிறார்கள்.
❖ உங்களது வார்த்தைகளையும்,
எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் அதிகம்
கவனிப்பதில்லை. ஏனென்றால் அவை
மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
உங்களது முகபாவங்களையும்,
உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள்
முழுமையாக கிரகிக்கின்றன.
ஏனென்றால் அவை இரண்டும் இதயம்
சம்பந்தப்பட்டவை.
❖ உங்களுடைய ‘முகமுடி’ ‘அழுத்தப்பட்ட உணர்வுகள்’
‘வெறுப்புகள்’
‘துக்கங்கள்’ - ஆகியவை உங்களின்
முகபாவங்கள் மூலமும் வெளிப்படும்.
அப்படியே அவை குழந்தைக்குச்
சென்றுவிடும்.
❖ காரணம் குழந்தையின் மனம் பஞ்சு போன்று
நீங்கள் கொடுக்கும் நிறத்தை
அப்படியே கிரகித்துவிடுவதுதான்.
- இது சூட்சுமமான உண்மை.
❖ அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் ஆழ் மனதில், சண்டை என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும். பிஞ்சு மனதில் கலவரம் என்ற விதை விதைக்கப்படுகிறது.


இப்படிப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில்
கோபக்காரர்களாகவும், கலவரக்காரர்களாகவும்
எளிதில் மாறி விடுவார்கள்.
❖ 'சண்டைச் சச்சரவு' இல்லாமல்
'அன்போடும்'
'பரிவோடும்'
'ஒருவருக்கொருவர் ஆதரவாக'
இருக்கும் பெற்றோர்களைத் தினமும்
பார்த்து வளரும் குழந்தையின் மனதில்
அன்பு, விட்டுக் கொடுத்தல், உதவி செய்தல்
என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம்,
ஒரு தன்மை என்று பதிந்துவிடும்.
❖ இதுபோல் அன்பும், பண்பும் விதைக்கப்பட்ட
பிஞ்சு மனதிற்குக் கலவரம், கோபம்,
சண்டை, அடுத்தவர்களைத் துன்புறுத்தல்
என்பது எல்லாம் நஞ்சாகத் தெரியும்.
❖ கள்ளம் கபடம் இல்லாமல் உங்களை
முழுமையாக நம்பும் குழந்தைகளுக்கு
அமிர்தத்தைக் கொடுக்க
முயற்சி செய்யுங்கள்.
உங்களின் மன முதிர்ச்சியே
அந்த அமிர்தம்.
❖ உங்கள் குழந்தைகளுக்கு...
பணம் சேர்த்து வைப்பதோடு,
பண்பை அதிகம் சேகரியுங்கள்.
புகழ் சேர்த்து வைப்பதோடு,
தெளிவை அதிகம் சேகரியுங்கள்.
❖ குழந்தை வளர்ப்பு முறையைக்
கற்றுக்கொள்வதைவிட, உங்களை வளர்க்கும்
முறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

கோயில்கள்
❖ விக்ரக வழிபாட்டை உற்சாகப்படுத்தாத
புத்தர்கூட கோயில்கள் என்ற அமைப்பை
பெரிதும் ஆதரித்திருக்கிறார்.
❖ மதம் எதுவானாலும்,
தெய்வம் எதுவானாலும்
கோயில்கள் எல்லோருக்கும் பொதுவானது.
❖ மனிதனின் சக்தித் தேவையை
பெருமளவில் பூர்த்தி செய்யும்
சக்திச் சிகிச்சையளிக்கும் மையங்கள்,
கோயில்கள்.
❖ கோயில்கள், ஆலயம், மசூதி என்ற பெயரில்
எல்லா மதங்களும் கோயில் தத்துவத்தை
வரவேற்கின்றன.
கோயிலின் தத்துவம்:
❖ குணமளிக்கும் சக்திகளைத் தொடர்ந்து
வெளியிடும் புனிதக் கட்டிடங்களுக்குப்
பெயர் கோயில்கள், கோயில்கள்
தெய்வ சக்தியான ஆனந்த சக்தியூட்டும்
மருத்துவமனைகள்.


உங்கள் உடல் ஒரு கோயிலா?
❖ காளையால் இழுக்க முடியாத
அளவுக்கு அதிக சுமையை வைத்து,
'இழு!' என ஏவும்போது அது
தடுமாறினால் அது தவறு செய்வதாக
பொருள்படுமா?
❖ உடலில் தகுதிக்கும் தேவைக்கும்
அதிகமான அளவு உணவை உள்ளே
தள்ளிவிட்டு...
❖ 'எனக்கு ஜீரணக்கோளாறு' என உடல்
மேல் பழிபோட்டால் என்ன அர்த்தம்!?
யார் பொறுப்பு... சொல்லுங்கள்.
❖ 'You are Food' என ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.
❖ 'Your eating habit tells, who you are' எனச் சொல்கிறது.
❖ 'உணவுக்கும் மனித குணத்துக்கும் நேரடித்
தொடர்புண்டு. நாவைக் கட்டுப்படுத்தியவன்,
தவ குணத்தையும் கட்டுப்படுத்தியவன்' எனச்
சொல்கிறது வேதாந்தம்.
❖ உண்ணும்போது சாந்தமாய் நிதானமாய்
உண்ணமுடிகிறதா...?
'போதும்' என்ற உணர்வு வந்ததும்,
காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல
உண்ணுவதை நிறுத்த முடிகிறதா...
நாவிற்கு மட்டும் மதிப்பளிக்காமல்
'என் உடலுக்கு இந்த உணவு,
இவ்வளவு உணவு பொருந்துமா?'
என உடலை மதித்து உணவருந்துகிறீர்களா...

❖ உடல் கோயில்,
உணவு பிரசாதம்.
நீங்கள்தான் அர்ச்சகர்.
உங்களின் இரப்பை என்னும்
கற்பகிரகத்திற்குச் செல்லும் பிரசாதங்கள்,
பிரசாதங்கள்தானா... ஒரு நாளின் மூன்று
வேளையும் பூஜை புனிதமாக
நடைபெறுகிறதா...?
❖ கோயிலுக்குள் அராஜகமோ,
துஷ்பிரயோகமோ கூடாது.
கோயிலின் புனிதம் காக்கப்பட்டால்,
அங்கு தெய்வ சக்தி விழித்துக் கொள்ளும்.
எல்லாம் சுலபமாகும்.
ஆரோக்கியமான மனிதன்
❖ மக்கள் தெய்வமாக, வீடு மாளிகையாக
உலகம் சொர்க்கமாக - நீங்கள் உணர்ந்தால்,
நீங்கள் ஆரோக்கியமான மனிதர்.
❖ ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஆனந்தமாக இருப்பார்கள்.
❖ ஆனந்தமாக இருப்பவர்கள் நிச்சயம்
ஆரோக்கியத்தோடு இருந்தே
ஆகவேண்டும். வேறு வழியே இல்லை
- இது ‘ஆனந்த சூத்திரம்’.
❖ உடல் பிரச்சினை - நோய்.
மனப் பிரச்சினை - வேதனை.
உணர்வுப் பிரச்சினை - ஆரோக்கியக் குறைவு.
❖ ஆரோக்கியம் குறைய ஆரம்பித்ததிலிருந்தே
நோய் உருவாக ஆரம்பிக்கின்றது.
நோய் திடீரென்று தோன்றுவது இல்லை.
தோன்றவும் முடியாது.
❖ ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாகக்
குறைந்து பின் வேதனை கொஞ்சம்
கொஞ்சமாக அதிகரித்து - எதிர்பாராத
தருணத்தில் அது நோயாக வெடிக்கிறது.
❖ நோய் என்பது
பல நாட்களாக இருக்கும்
ஆரோக்கியக் கேட்டின் வெளிப்பாடு.
❖ உங்கள் உற்சாகம்,
சந்தோஷம் குறைய
ஆரம்பிக்கும்போதே,
உங்களின் ஆரோக்கியத்தை
இழக்க ஆரம்பிக்கிறீர்கள்.
- மனதளவில் புண்பட்டு இருப்பவர்களே அடுத்தவர்களின் மனதைப் புண் படுத்துவார்கள்
- உங்களுடைய அணுகுமுறை ஆரோக்கியமாக இருந்தால் போதும். ஆரோக்கியமான உறவுகள் தானாகக் கிடைக்கும்.

எங்கே இருக்கிறது அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும்?
❖ பொதுப்படையாக சொல்ல வேண்டுமானால் -
அதிர்ஷ்டம், துரதிர்ஷம் இரண்டுமே
அதனதன் இஷ்டப்படி வாழ்வில் வந்து
போகும் விஷயங்கள்.
❖ வாழ்வை எதிர்கொள்ளும் தைரியமும்,
பக்குவமும் இருந்தால் மாத்திரமே
அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும்,
துரதிர்ஷ்டத்தை ஜீரணிக்க முடியும்.
❖ கூர்ந்து ஆராய்ந்தால்
ஒரு உண்மை புரியவரும்.
‘அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்ற
இரண்டு தனிப்பட்ட நிலைகள் இல்லவே
இல்லை’ என்று தெரிய வரும்.
❖ சுலபமாக...
கை நோகாமல்...
அதிகம் உழைக்காமல்...
நல்ல பலனைக் கொடுத்த வாழ்க்கை
அம்சங்களை நாம் 'அதிர்ஷ்டம்' என்று
கூறி சந்தோஷப்படுகிறோம்.
❖ கைநோக...
உடல் நோக உழைத்தும்...
எதிர்பார்த்த பலனைத் தராத வாழ்க்கை
அம்சங்களுக்கு நாம் 'துரதிர்ஷ்டம்' என்று
கூறித் துக்கப்படுகிறோம்.
❖ துரதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என்ற இரண்டு
வாழ்க்கை அம்சங்களுமே நமக்குக்
கிடைக்கும் பலனின் அளவைப் பொறுத்து நாமே
நிர்ணயிப்பவை.


❖ துக்க சந்தோஷ மனநிலைகளைப்
பொறுத்து...
அதிர்ஷ்டம் கூடத் துரதிர்ஷ்டமாகத்
தெரியலாம்.
துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாகத்
தெரியலாம்.
❖ உங்களுக்கு கிடைக்கும் பலன்களும்,
உங்களின் மனநிலையும் சேர்ந்துதான்
அதிர்ஷ்டத்தை அல்லது துரதிர்ஷ்டத்தை
உருவாக்குகின்றன.
❖ வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்தத் துடிப்பவனுக்கு,
- நீங்கள் கற்பனை செய்யும், 'அதிர்ஷ்டங்கள் பல' வாழ்வில் காத்துக்கொண்டு இருக்கின்றன.
❖ நேரத்தை சரியாகப் பயன்படுத்தாமல் மந்தமாக நேரத்தை வீணடிப்பவனுக்கு,
- நீங்கள் கற்பித்துக் கொள்ளும் 'துரதிர்ஷ்டங்கள் பல' காத்துக் கொண்டிருக்கின்றன.
❖ அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் கனவு! துரதிர்ஷ்டம் பயந்தாங்கொள்ளிகளின் பீதி!
❖ சுறுசுறுப்பான தைரியசாலிக்கு இரண்டுமே
ஒன்று! இரண்டின் மூலமும் வாழ்வில்
முதிர்ந்துகொண்டே இருப்பார்கள்.

தைரியசாலி அதிர்ஷ்டசாலி!
❖ பயம் என்ற ஒரு மனப்புண்தான்
துரதிர்ஷ்டம் என்ற வாழ்க்கையின்
சாதாரண அம்சத்தைப் பெரிதுபடுத்திக்
காண்பிக்கும்.
❖ பயத்தை விட்டொழித்து விட்டுத்
தைரியமாக வாழ்க்கையை அணுக
ஆரம்பித்தால் துரதிர்ஷ்டம் பயமுறுத்தாது.
'எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லையே!
எனக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்குமா?'
என்ற ஏக்கம் இருக்காது.
❖ பயத்திலிருந்து மனதைத்
தைரியத்திற்குத் திருப்பினால்
துரதிர்ஷ்டத்தைக் கூட
அதிர்ஷ்டமாக மாற்றலாம்.
- மனதின் பயமும், உழைப்புக் குறைவும்தான் அதிர்ஷ்டத்தை நோக்கி எதிர்பார்ப்புத் தீயை மூட்டுகிறது.
- அதே செயல்கள்தான் உங்களால் ஜீரணிக்க முடியாத - சாதாரண வாழ்க்கை அம்சங்களைச் சுற்றித் துக்கப் புகையை கிளப்பி துரதிஷ்டமாகக் காண்பிக்கிறது.
- துரதிர்ஷ்டம் என்பது ஒருவரால் ஜீரணிக்க முடியாத சாதாரண வாழ்க்கை அம்சங்களே!
- அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பதும், துரதிர்ஷ்டத்தை நினைத்துத் துக்கப்படுவதும் புத்திசாலி செய்யும் காரியம் அல்ல.
- புத்திசாலி புத்தியைப் பயன்படுத்தி வாழ்வின் எல்லா அம்சங்களிலும் புகுந்து


ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்ட புதுத் தெம்போடு வெளியே வருவான்.
❖ தைரியமாக சுறுசுறுப்போடு
வாழ்க்கையை அணுகுங்கள்.
சாதாரண வாழ்க்கை அம்சங்கள்
அதிர்ஷ்டமாக மாறும்.
நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று பலராலும்
பிரமிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்டத்தின்
சூட்சுமம் இதுதான்.
❖ வாழ்வில் கொட்டிக் கிடக்கும்
அதிர்ஷ்டங்களை உங்களுக்கு
சொந்தமாக்குங்கள்
அதிர்ஷ்டசாலியாகுங்கள்.
பெருமை எனும் சிறுமை
❖ எத்தனைப் புதுப்புது வழிகள்
கண்டுபிடிக்கிறான் மனிதன்,
பெருமை பேசித் திரிவதற்கு!
❖ தன்னைப் பற்றித்
தானே பெருமைக்காக தம்பட்டம்
அடித்துக் கொள்வது ஒரு வகையென்றால்
இன்னொரு வகை
இன்னும் தந்திரமானது.
❖ தாங்கள் சம்பந்தப்பட்ட காரியங்களை
நேரடியாகப் பேசாமல்
மறைமுகமாகப் பேசுவதால்தான்
பெருமையடைவதாக நினைப்பார்கள்.
ஒருவிதக் கற்பனையோடு உலகில்
வாழ்வார்கள்.
❖ தனக்குத் தெரிந்த V.I.P. பற்றி,
தன் மதம் பற்றி,
தன் ஜாதி பற்றி
பெருமையடிப்பதைத் தாண்டி
பிள்ளைகள்,
நண்பர்கள்,
உறவினர்களைச் சுற்றிச் சுற்றியே
நாம் பெருமையடித்துக்
கொள்ளும்போதெல்லாம்
நம் அடிமனதில்
நம் பெருமைக்காகவே அவர்களின்
பெருமையைப் பேசுகிறோம்.
❖ இதைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே
புரிந்து கொள்ளலாம்.
சும்மா பெருமை பேசுவது தவறல்ல.
அது நல்ல உரையாடலின் ஒரு பகுதியே.
ஏதோ ஒரு வகையில் 'நான் தகுதி
குறைந்தவன்' என்ற ஆழ்மன எண்ணம்
தரும் தூண்டுதலால்... மீண்டும் மீண்டும்
பெருமையடிப்பதற்காக மனிதன் முனைய
ஆரம்பிப்பதே தவறு.
இது ஒருவித சுயபாதகமே.
பெருமை பேசித் திரிவது போன்ற
சிறுமை வேறில்லை. காரணம்
உள்ளிருக்கும் சிறுமைதான்
வெளியே பெருமையடிக்க,
வெட்டி பந்தாவில் இறங்கும் அளவுக்குக்
கூட ஒருவனைத் தூண்டுகிறது.
❖ உங்களிடமுள்ள பெருமை எனும் சிறுமைகளைக் கண்டுபிடிக்க உதவும்.
