KAILASA Library/பகவத்கீதை/முன்னுரைSign in
பகவத்கீதை

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் பகவத்கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த குருமார்களானஇராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலர், இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

பரமஹம்ஸ நித்யானந்தர் அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும், நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் ஸத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச்செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

பரமஹம்ஸரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூக்ஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.

சிறந்த ஸத்குருவும் தத்துவஞானியுமான சங்கரர், “கீதையைச் சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்,” என்று சொல்கிறார். “நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள்,” என்று சொல்கிறார்.

பரமஹம்ஸரின் பகவத்கீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், பரமஹம்ஸரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிவாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, அவர்களின் இறுதிநிலையான ஸத்யத்தை உணர்வதற்கான பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!

முடிவற்ற பேரின்பநிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

  • நித்யானந்தா பதிப்பகம்

பூர்ணத்வம்

ஞானத்திற்கான நுட்பமான, ஆனந்த வாழ்வின் இரகசியமான 'பூர்ணத்வம்' பகவத்கீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் அளிக்கப்பட்டு்ள்ளது. இங்கு அனைவருக்கும் புரியும்வகையில், 'பூர்ணத்வம்' என்பதின் தாத்பரியம் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 'பூர்ணத்வம்' எனும் வார்த்தைக்கு இப்பகுதியில் வரும் விளக்கத்தைப் படித்துணர்ந்து கொண்டீர்களானால், புத்தகத்தின் உள்ளே நீங்கள் 'பூர்ணத்வம்' பற்றிப் படிக்கும்பொழுது, அந்த சத்தியத்தின் ஆழத்தை அருமையாக உணர்வீர்கள்.

பூர்ணத்வம் - ஓர்அறிமுகம்

ஒவ்வொரு ஜீவனும் அடைய விரும்புவது - ‘பூர்ணத்வம்’

வாழ்வின் மிக உயர்ந்த சத்தியம், மிக உயர்ந்த இலட்சியம் - ‘பூர்ணத்வம்’

ஒவ்வொரு ஜீவனும் பூர்ணத்தன்மையை அடைய வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் - பிரபஞ்சத்தின் நோக்கம். அதனால்தான் நம் வேதங்களும் சாஸ்திரங்களும் இறுதியில் பூர்ணத்வ நிலையையே வலியுறுத்துகின்றன. இப்புத்தகத்தின் நோக்கமும் -நீங்கள் அனைவரும் பூர்ணத்தன்மையை உணர்வதே.

இங்கு, வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர்...

நம் அன்றாட வாழ்வில், நாம் மிக உயர்ந்த சத்தியமான பூர்ணத்துவத்தைக் கடைபிடிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தை உணர்வது எவ்வாறு? பூர்ணத்வத்தை அனுபவிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தில் வாழ்வது எவ்வாறு? என்பதை எளிய நடையில், அனைவரும் புரிந்துகொள்ளும் முறையில் வழங்கியுள்ளார்.