KAILASA Library/பகவத்கீதை/ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறைSign in
பகவத்கீதை

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஸம்ஸ்க்ரு'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால், அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒது க்கிவிடுகிறோம்.

ஆனால், ஸம்ஸ்க்ரு'த மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துக்களும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை எழுத்து1234
ககடவுள் (ka)அக்கா (kka)கங்கை (ga)கடம் (gha)
சசரம் (cha)சச்சரவு (chcha)ஜாடி (ja)மஜ்ஜை (jha)
டபட்டம் (ta)பட்டம் (tta)படம் (da)டம்டம் (dha)
ததங்கை (tha)தாத்தா (ththa)தானம் (da)தர்மம் (dha)
பபசு (pa)அப்பா (pha)பம்பரம் (ba)பந்தம் (bha)
ச’ச’ரணாகதி

ஸம்ஸ்க்ரு'த வார்த்தைகளில் வரும் எழுத்து சாதாரணமாக அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ருதத்தில் மூன்று வகை ‘ஸ’க்கள் உண்டு.

1. ஸ 2. ஷ. ஆனால், மூன்றாவதுவிதமான ‘ஸ’க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது ‘ஸ’ வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு ‘ஸ’ வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறியை இந் நூலில் பயன்படுத்தியுள்ளோம்.

ச’ரணாகதி, சி’வன் - இது போன்ற வார்த்தைகளில், ச’ - என ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனை, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் ssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு’ என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் ‘ரு’ வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஜ்ஞாநி’, ‘ஆஜ்ஞா’ என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் ऽ என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு ‘அ’ என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் ‘ந,ன,ண’ என்று மூன்று வகை ‘ந’ க்கள் உண்டு, ஆனால், ஸம்ஸ்க்ருதத்தில் ‘ந,ண’ என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது. அதனால் நாம் தமிழில் ‘ன’ என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸம்ஸ்க்ருத வார்த்தைகளைப் பொறுத்தமட்டில், ‘ந’ என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுநந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், படிப்போரின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில், ‘ன’ என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

நமது உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத்கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸம்ஸ்க்ருதத்தில் ச்ருதி (Sruti) என்பார்கள். ச்ருதி என்றால் ‘காதால் கேட்பது’ என்று பொருள்.

பகவத்கீதையைப் பொதுவாக ‘கீதை’ என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் ‘புனிதப் பாடல்’ என்று பொருள். வேதங்களும் உபநிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளோகவே இருக்கின்றன. ஆனால், கீதை, ஹிந்து மத இதிஹாஸ கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான ச்ருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபநிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. ஸத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான ஸத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபநிஷதங்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது கீதை. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த இதிஹாஸமோ அல்லது இதிஹாஸத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.