KAILASA Library/பகவத்கீதை/Sign in
பகவத்கீதை

பகவத்கீதை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பகவத்கீதை

அத்தியாயம் - 16

Bhagavad Gita (Tamil) - Chapter 16

உணர்வால் வழிபடுகிறேன்

அர்ஜுனன் என்பவர் வாழ்ந்த ஒரு ‘தனி மனிதர்’ மட்டும் அல்ல...
உங்களுக்குள் வாழ்கின்ற ஒரு ‘தனி மனித நிலை’யுங்கூட!
தனி மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள
விரும்பும் அனைவரும் அர்ஜுனர்களே!

கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், இராஜ யோகம் என
எந்தப் பாதையில் நீங்கள் சென்றாலும், அர்ஜுனனது சந்தேகங்களை
நீங்களும் ஒருநாள் நிச்சயம் எதிர்கொள்வீர்கள். பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்காக
அளித்திட்ட இந்தத் தீர்வுகளை எல்லாம், அர்ஜுனனைப் போன்று நீங்களும் உங்கள்
வாழ்விற்கான அடித்தளமாகத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தீர்களென்றால்...உறுதியாகச்
சொல்கிறேன்...அர்ஜுனனுக்கு கிடைத்த விச்வ ரூப தரிசனத்தை நீங்களும்
தரிசிப்பீர்கள். உங்கள் வாழ்வின் தேரோட்டியாக பகவானே அமர்ந்திருப்பார். இதை
என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

என்னுடைய வாழ்வில் பகவத்கீதை மாபெரும் பங்காற்றியுள்ளது. என்னுள் தேடுதலைத்
தீவிரப்படுத்தியுள்ளது. ‘இறைவன் வாழ்கிறார்’ என்பதை எனக்கு அனுபவமாக
உணர்த்தியுள்ளது.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் பகவத்கீதையை, பாடப் புத்தகங்களைப் படித்ததை
விடவும் அதிகமாகப் படித்தேன்...பரீட்சை நாட்களில்கூட பகவத்கீதையைத்தான்
முதலில் படித்தேன். உறங்கும் வரை கீதையைப் படித்துவிட்டு, காலையில்
கண்விழித்தவுடன் மீண்டும் எடுத்துப் படித்தேன். என்னுடைய இலக்கை அடைவதற்கு
ஸ்திரமான ஆணிவேராக பகவத்கீதை இருந்தது என்றால் அது மிகையாகாது.
பகவத்கீதைக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

பகவத்கீதை என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை, அளித்திட்ட ஆன்ம
பலத்தை, உணர்வு உருமாற்றத்தை விளக்கவும், நன்றி சொல்லவும் வார்த்தைகளால்
இயலவில்லை...உணர்வால் வழிபடுகிறேன்.

– பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்

portrait

பகவத்கீதை

விளக்கவுரை - பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்

உங்களை கடவுளாக்கும் தீர்வு

அத்தியாயம் - 16

ISBN : 1-60607-149-1
ISBN13 : 978-1-60607-149-6

Ebook ISBN :
979-8-88572-966-6

நித்யானந்த ஹிந்து
பல்கலைக்கழகம்

பகவத்கீதை – கடவுளின் கீதம்
வாழும் அவதார சக்தியாம் பரமஹம்ஸ
நித்யானந்தர் ஆற்றிய ஆங்கில பகவத்
கீதை தியான சத்சங்கங்களைத் தமிழில்
மொழிபெயர்த்து தொகுத்து உங்கள் கைகளில்
தவழவிட்டிருக்கிறோம்.
– நித்யானந்த ஹிந்து பல்கலைக்கழகம்

நித்யானந்த ஹிந்து
பல்கலைக்கழகம்

ஸ்ரீமத்பகவத்கீதை

[ஜீவன்முக்த விஞ்ஞானம்]

பரமஹம்ஸ நித்யானந்தரின்

விளக்கவுரை

தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்

அத்தியாயம் - 16

நித்யானந்த ஹிந்து பல்கலைக்கழகம்

உலகம் முழுவதிலும் உள்ள
நித்யானந்த தியானபீடத்தின்
ஸந்யாஸிகளுக்கும்
ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும்
வழங்கப்பட்ட
ஆங்கில பகவத்கீதை
தியான சத்சங்க தொகுப்பின்
தமிழ் மொழிபெயர்ப்பு.

Banyan tree with hanging aerial roots
A large banyan tree

உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியான பீடத்தின் ஸந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

அன்பான வாசகர்களே,

மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக்கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்காகவும்தான்.

உங்களிடம் எவ்வளவு வேகமாகக்கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். பரமஹம்ஸர் வழங்கிய சத்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் பரமஹம்ஸர் ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.

எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைக் கூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரிசெய்து வெளியிட உதவியாக இருக்கும்.

- இப்படிக்கு,
மக்களுக்கான ஆனந்த சேவையில்
நித்யானந்தா ஹிந்து பல்கலைகழகம்.

இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட தகுந்த ஆசிரியர்களின் நேரடியான மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும். மேலும், இந்தக் நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது, நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் நித்யானந்த பீடம் பொறுப்பாகாது.

புத்தக வெளியீடு: நித்யானந்தா ஹிந்து பல்கலைகழகம்

பக்கங்கள்: 267

காப்புரிமை: copy right © 2019. All copy right reserved.

முதல் பதிப்பு: ஜனவரி, 2019 -சுத்தாத்வைதத்தை வெளிப்படுத்தும் வருடம்

பிரதிகள்: 1000

Ebook ISBN: 979-8-88572-966-6

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாகப் பெறப்படும் நன்கொடை, நிதி முழுவதும் நித்யானந்த தியான பீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்குச் சேவையாகச் சென்றடைகிறது.