KAILASA Library/பகவத்கீதை/ஆன்மீக சத்தியங்கள், சமுதாய விதிகளிலிருந்து வேறுபட்டதுSign in
பகவத்கீதை

ஆன்மீக சத்தியங்கள், சமுதாய விதிகளிலிருந்து வேறுபட்டது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தர்மம் என்பது ஆன்மீக நேர்மை. இது எந்த விதத்திலும் சமுதாயம் மற்றும் மதங்கள் வகுத்த விதி மற்றும் கட்டுப்பாடுகளுடன் சம்பந்தப்பட்டது அல்ல; அவற்றுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. விதிகளை மீறுவது மனித இயல்பு. வேகத் தடை இருக்கும்போதுதான் ஓட்டுநர், மிக வேகமாக வண்டியை ஓட்டுவார், அதிலும் குறிப்பாக அங்குப் போக்குவரத்து அதிகாரி இல்லை என்று உணர்ந்தால், இன்னும் வேகத்தைக் கூட்டுவார்.

விதிகள், முக்கியமாக சமுதாய விதிகள், ஒருவருடைய சுதந்திரமான செயல்பாடுகளையும் வெளிப்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றன. விதிகள் மற்றவர்களின் தேவைக்காகத்தானே தவிர நமக்கல்ல.

மதத்தின் விதிகளும் கட்டளைகளும் இன்னும் மோசமானவை. அவை ஆசை மற்றும் அச்சத்தை அடிப்படையாகக்கொண்டு, நம்மை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டவை.

சமுதாய தலைவர்களைப்போல், தங்களுக்கு மக்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லையென்று மதத் தலைவர்களுக்குத் தெரியும்.

அதனால் அவர்களுக்கு நுண்ணிய கட்டுப்பாட்டு நுணுக்கங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. அதனால் அவர்கள் பாவம் என்ற கருத்தைக்கொண்டு வந்தார்கள். பாவத்துடன், சொர்க்கம் நரகம் போன்றவற்றையும் மதங்கள் ஏற்படுத்தின.

நமக்குள் தெய்வீகம்
வாழ்கிறது.
அதனால்
முக்தியடைவதற்கு நாம்
பாடுபட வேண்டியதில்லை.
நாம் வெறுமனே
நமக்குள் இருக்கும்
தெய்வீகத்தை
உணர்ந்தாலே போதும்.

'நீங்கள் பாவி அல்ல' என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நமக்குள் தெய்வீகம் வாழ்கிறது. நம்முடைய ஒரே பாவம், உண்மையான பாவம், நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணராததுதான்!

அதனால் முக்தியடைவதற்கு நாம் பாடுபட வேண்டியதில்லை. நாம் வெறுமனே நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்தாலே போதும்.

இந்து வேதத்தில் ஆன்மீக உண்மைகள் யம என்று அழைக்கப்படுகின்றன. அது ஸத்யம், அஹிம்ஸை, அஸ்தேயம், அபரிக்ரஹம் மற்றும் ப்ரஹ்மசரியம் என்று பல பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.

ஸத்யம் என்றால் உண்மை. உண்மை என்பது எண்ணம், சொல் மற்றும் செயலில் உண்மையுடன் இருப்பது. எது உள்ளேயிருக்கிறதோ அதுவே வெளியே காட்டப்படுகிறது.

ஒருவர் விழிப்புணர்வுடன் நிகழ்காலத்தில் வாழும்போது, மனமும் அஹங்காரமும் செயலற்று இருக்கும்போது, நமக்குள் உணர்ந்ததை அஹங்காரத்தைக்கொண்டு வடிகட்டாமல், எந்தவித மாற்றமுமில்லாமல் வெளிப்படுத்தும்போதும் மட்டுமே ஸத்யத்தை வெளிப்படுத்த முடியும்.

அஹிம்ஸா என்பது தீங்கு செய்யாமல் இருத்தல். அதாவது எண்ணத்தால், வார்த்தையால், செயலால் தீங்கு செய்யாமல் இருத்தல்.

பிரபஞ்ச விழிப்புணர்வை உணரும்போது,
நாம் இந்தப் பிரபஞ்சத்தோடு
ஒன்றிணைந்தவர் என்பதை உணரும்போது
மற்றும் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை
உயிரினங்களுடன் நாம் ஒன்றிணைந்தவர்தான்
என்பதை உணரும்போது அஹிம்ஸா
தோன்றுகிறது.

பிரபஞ்சம் என் மீது
பொழிவது எல்லாமே
என்னுடைய ஒட்டு மொத்த
முன்னேற்றத்திற்காகவும்
மேன்மைக்காகவும்தான்
என்று முடிவுசெய்து
கொள்ளுங்கள்.

இந்த உணர்தல் நிகழும் போது, அங்குத் தீங்கு செய்வதற்கென்று ‘மற்றொரு பொருள்’ என்று ஏதாவது இருக்குமா, என்ன?

இந்த உணர்தல் ஒருவருக்குள் மலரும்பொழுது, வன்முறை மறைந்து கருணை மலரும்.

அஸ்தேயம் என்பது பேராசைப்படாமல் இருத்தல். அதாவது பொருட்கள் மீது பேராசைப்படாமல் இருப்பது மட்டுமல்லாமல், குணங்கள், பிறருடைய கவனம், விருப்பங்கள் போன்றவற்றை அடைவதில்கூட பேராசைப்படாமல் இருத்தல்; பிரபஞ்ச விழிப்புணர்வின் நிலையில் தனக்கிருக்கும் தனித்துவத்தை உணர்தல். மேலும் பிரபஞ்ச இருப்பு சமமாகவும், தனித்துவமான முறையிலும் அனைவருக்கும் கருணையைப் பொழிகிறது என்பதை உணர்ந்துகொள்ளுதல். அதன் பிறகு மற்றவர்களுடைய தார்மீக உரிமையைப் பறிக்க வேண்டுமென்ற விருப்பம் எங்கிருந்து வரும்?

முடிவு செய்யுங்கள். பிரபஞ்சம் பிறருக்கு என்ன அளிக்கிறதோ, அது அவர்களுடைய நன்மைக்காகத்தான். பிரபஞ்சம் என் மீது பொழிவது எல்லாமே என்னுடைய ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்காகவும் மேன்மைக்காகவும்தான் என்று முடிவுசெய்து கொள்ளுங்கள்.

அபரிகிரஹம் என்பது பேராசையினால் ஆசைகளை வளர்த்துக்கொண்டு அவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருக்காமல் எளிமையாக, குறைந்த தேவைகளுடன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பதைக் குறிக்கிறது.

பிரஹ்மச்சர்யம் என்பதன் பொருள் புத்திசாலித்தனத்துடனும் தன்னிச்சையான இயல்புடன் நிகழ்காலத்தில் வாழ்தல் என்பதாகும்.

பிரஹ்மச்சர்யம் என்பது உண்மையுடனும், உண்மையிலும் வாழ்தல். இந்த வார்த்தை பெரும்பாலும் திருமணம் செய்யாமல் வாழ்தல் என்ற தவறான அர்த்தத்தில் மொழி பெயர்க்கப்படுகிறது.

உண்மையில் அதன் பொருள் என்னவென்றால், ஒருவர் தம்மைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கொண்டிருக்கும் கற்பனைகள், மாயைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் விட்டு விடுவதையே குறிக்கிறது. அதன் பொருள் புத்திசாலித்தனத்துடனும் தன்னிச்சையான இயல்புடன் நிகழ்காலத்தில் வாழ்தலே.

இந்தக் காலகட்டத்தில் இந்த லட்சியங்களை முழு மனத்துடன் பின்பற்றுதல் என்பது மனிதர்களுக்குச் சாத்தியமில்லாததாக இருக்கிறது. இந்த வாழ்வை வாழ்வதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்ட ஸந்யாசிகள் அவற்றை நிறைவேற்றுவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறது. தினசரி உலகியல் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இவை அடைவதற்குச் சாத்தியமில்லாததாகவே இருக்கிறது.

என்னுடைய அனுபவத்தில் யமவில் சொல்லப்பட்டுள்ள ஆன்மீக ஒழுக்கத்திற்குரிய விதிகள் அனைத்தும் முக்தியடைந்ததினால் ஏற்பட்ட விளைவுகளேயன்றி, முக்தி அடைவதற்கான பாதையல்ல.

இந்த நவநாகரிக உலகத்தில், தம்மை நோக்கி ஒருவரை அழைத்து வருகிற பாதையாகக் கிருஷ்ணர் குறிப்பிடுகிற தர்மபாதை என்பது த்யானபாதைதான். நாம் த்யான பாதையில் செல்லும்போது, நாமாகவே அந்த தர்ம சக்ரத்திற்குள் நுழைந்து விடுகிறோம். அது நம்மைக் கிருஷ்ண விழிப்புணர்விற்குள் எடுத்துச் செல்கிறது.

மனத்தை அமைதிப்படுத்துவதற்கான செயல்முறையே த்யானம். மனம்-இல்லா நிலையை அடையக்கூடிய இந்தச் செயல்முறையில் அஹங்காரம் விழுகிறது. நம்முடைய உண்மையான இயல்பு தெய்வீகமே என்பதை உணர்வதற்கு இருக்கிற தடை நீங்குகிறது. நாம் யாரோ அதுவாக ஆகிறோம். நாம் கடவுளுடன் ஒன்றிணைந்தவர் என்பதை உணர்கிறோம்.

எதனாலும் உங்களைப் பந்தப்படுத்த முடியாது.

கேள்வி: ஒருவர் எப்படி பந்தத்திலிருந்து விடுபடுவது? அதை வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாததுபோல் தோன்றுகிறதே!

நான் என்னுடைய பக்தர்கள் வீட்டில் தங்கும்பொழுது அவர்கள் என்னிடம், "ஸ்வாமிஜி, நீங்கள் இந்தப் புதிய இடத்தில் நன்றாகத் தூங்கினீர்களா?" என்று கேட்பார்கள்.

நான் அவர்களிடம், "நீங்கள் ஏதாவது ஒரு வீாட்டுடன் பந்தப்படும்போதுதான் வேறு ஒரு வீடு உங்களுக்குப் புதிய இடமாக மாறிவிடுகிறது, அதனால் நீங்கள் போராடுகிறீர்கள். உங்களுக்கு எந்த வீட்டின் மீதும் பந்தம் இல்லாதபோது, நீங்கள் எங்குச் சென்றாலும் அங்கும் உங்கள் வீட்டில் இருப்பது போன்று இயல்பாக இருப்பீர்கள்," என்று சொல்வேன்.

எங்களுடைய ஆச்‌ரம குறிப்புகள், நான் கடந்த இரண்டு வருடங்களில் 1200 வீடுகளுக்குச் சென்றுள்ளதாகச் சொல்கிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு நான் நாற்பது வீடுகளுக்குச் செல்வேன். இந்த உலகம் முழுவதும் நான் நூற்றுக் கணக்கான வீடுகளுக்குச் சென்றிருந்தாலும் எந்த ஓர் இடத்தையும் புதிது என்று நினைத்ததில்லை. நான் எங்குச் சென்றாலும் அங்கு இயல்பாகத்தான் உணர்வேன்.

'ஸ்வாமிஜி, நீங்கள் நன்றாகத் தூங்கினீர்களா?

> மனத்தை அமைதிப்படுத்துவதற்கான செயல்முறையே த்யானம். உங்களுக்குச் சௌகரியமாக இருக்கிறதா?" என்று மக்கள் என்னிடம் மறுநாள் கேட்பார்கள்.

"இதில் என்ன இருக்கிறது? என் கையை நீட்டினால், எனக்கு நல்ல உணவு கிடைக்கிறது. என் கால்களை நீட்டினால் தூங்குகிறேன். அவ்வளவுதான்," என்று சொல்வேன். அதுதான் வாழ்க்கை வேறு ஒன்றும் இல்லை.

நீங்கள் ஒரு வீ்ட்டுடன் பந்தம்கொள்ளாமல் இருந்தால், இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் இயல்பாக இருப்பீர்கள். நீங்கள் தளர்வாக இருப்பீர்கள்.

Figure

அடுத்து, 'ஸ்வாமிஜி, நீங்கள் எப்படித் தொடர்ந்து பிரயாணம் செய்கிறீர்கள்?' என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. வியாபாரத்திற்காகப் பயணம் செய்யும் மக்களிடமிருந்து இந்தக் கேள்வி வரும்.

"நாங்கள் ஒன்று அல்லது இரண்டு இடத்திற்குச் சென்று திரும்பி வந்தவுடன், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, தினசரிக் கடமைகள் மற்றும் தினசரி வாழ்க்கையில் ஒரு சௌகரியமான உணர்வு பெற ஒரு வாரமாவது தேவைப்படும், உங்களால் எப்படித் தொடர்ந்து பயணம் செய்ய முடிகிறது?" என்று அவர்கள் கேட்பார்கள்.

நான் ஒரு வாரத்திற்கு

> ஒரு குறிப்பிட்ட இடத்துடன் நம்மைப் பிணைத்துக்கொள்ளாமல் இருந்தால்தான், நம்முடைய மனத்தில் நிலைகொள்ள முடியும்.

மேல் எந்த இடத்திலும் தங்குவதில்லை. இப்பொழுது இங்கு ஆச்ரமம் இருப்பதால் ஒரு வாரத்திற்கு மேல் தங்கிக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் ஒரு வாரத்திற்கு மேல் எப்போதும் தங்கமாட்டேன்."

இரகசியம் என்னவென்றால் ஒரு வீ்ட்டுடன் உங்களை இணைத்துக்கொள்ளாதீர்கள். அப்பொழுது மட்டுமே இந்த முழு உலகத்துடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். அதனால் உலகத்தில் எங்கிருந்தாலும் நீங்கள் சொந்த வீட்டில் இருக்கிற உணர்வை அடைவீர்கள். நீங்கள் எங்குச் சென்றாலும், ஆழமான, தளர்வான, ஆனந்தம் மற்றும் பெருமகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். இங்கே கிருஷ்ணர் சொல்வதுபோல, "எந்த வீட்டைப் பற்றியும் கவலைப்படாமல், என்னிடம் பக்திப்பூர்வமாக இருக்கும் மனிதர் எனக்கு மிகவும் பிரியமானவராகிறார்."

ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்துடன் தம்மைப் பிணைத்துக்கொள்ளாமல் இருந்தால்தான், தம்முடைய மனத்தில் நிலைகொள்ள முடியும்.

மக்கள் ரமண மஹரிஷியிடம் த்யானம் செய்வதற்கான ஒரு வழிமுறையைச் சொல்லுமாறு கேட்டபொழுது, அவர் மக்களை அருணாச்சலமலையின் மீது கவனத்தை வைத்து, அதை வலம் வருமாறு அறிவுறுத்தினார்.

‘இவர் ஏன் இதைச் சொல்கிறார்? நடந்து
கொண்டிருக்கும் எப்படி நம்மால் தியானிக்க
முடியும்? எல்லா த்யானங்களும் கண்களை
மூடிக்கொண்டு, கால்களை மடக்கி
உட்கார்ந்துதானே செய்ய வேண்டும்’ என்று
அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

அப்படி இல்லை. உடல் அசையும்பொழுது, மனத்தை நிலைநிறுத்தச் செய்வது எளிது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எங்கள் த்யான முகாம்களில், சக்கரங்களின் சக்தியைப் பெருக்குகிற த்யான நுட்பங்களைக் கற்றுத் தருகிறோம். அவற்றுள் விசுத்தி சக்ரத்திற்கான த்யானம் ஒன்று இருக்கிறது.

இந்த த்யானம், மனத்தை விசுத்தி சக்ரத்தில் வைத்து உடலை அசைக்கிற, கிட்டத்தட்ட ஓடுகிற செயலைக் கொண்டுள்ளது; சக்தியைப் புகுத்துகிற ஆழமான த்யானம். உடல் அசையும்பொழுது மனத்தை நிலைநிறுத்துவது எளிதான செயல்.

ஒருவர் உண்மையிலேயே நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, ஒருவர் தெளிவாக இருக்கும்பொழுது, ஒருவருடைய விழிப்புணர்வு மலர்ந்திருக்கும்பொழுது, அங்கு இருமை என்பது இருக்க முடியாது. நம்முடைய இந்தச் சிறிய ‘நான்’ அந்த மேலான ‘பிரபஞ்ச நான்’ உடன் கலந்துவிடுகிறது. நாம் தெய்வத்துடன் இணைகிறோம். அனைவராகவும் நாமே இருக்கிறோம். பிறகு அங்கு நண்பர், பகைவர் என்ற பேச்சுக்கு இடமேது?

> ஒருவருடைய விழிப்புணர்வு
> மலர்ந்திருக்கும்பொழுது,
> அங்கு இருமை என்பது
> இருக்க முடியாது.

நாம் இயற்கையுடன் ஒன்றியிருக்கிறோம். வெப்பம், குளிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு இடமேது? நாம் இந்தப் பிரபஞ்சத்தோடு இணைந்திருக்கும்பொழுது, எல்லாம் ஒன்றாக இருக்கும்போது, யார் யாரை அவமானப் படுத்துவது அல்லது பெருமைப்படுத்துவது, யார் யாரால் அவமானப்படுத்தப்படுவது அல்லது பெருமைப்படுத்தப்படுவது? மானம், அவமானம் என்ற உணர்ச்சிகளைப் பற்றிய கேள்விக்கு இடம் ஏது?

அனுபவமும் அனுபவிப்பவரும் ஒன்றாக மாறி விடுகிறது. அனுபவமும், வெளிப்பாடும் ஒன்றாகிவிடுகிறது.

இலச்சினை

உங்களால் உங்கள் மனத்தை மாற்ற முடியும்! உங்கள் மனத்தை மட்டும் அல்ல, உங்கள் உடலையும் மாற்ற முடியும்!

கிருஷ்ணர், நம்மை இந்த நிலைக்கு, நம்மில் காணப்படும் எல்லா வேற்றுமைகளும் எங்கு மறைகின்றனவோ அந்த நிலைக்கு, கிருஷ்ண உணர்வு நிலைக்கு, அவரோடும் தெய்வீகத்தோடும் ஒன்றிய நிலைக்கு அழைத்துச் செல்கிறார்.

உடல் எடுத்ததே ஞானமடைவதற்குத்தான்...

கேள்வி: ஸ்வாமிஜி, நம்முடைய அன்றாட விழிப்பும், தூக்கமும்கூட ஒரு பிறப்பு இறப்பு போன்றதுதான் என்றால், நாம் பிறப்பெடுக்கும்போது, இந்த உலகியல் வாழ்க்கையை நாமே உருவாக்கிக் கொள்வதுபோல், நாம் ஒவ்வொரு முறை தூங்கி எழுவதையும், நம்முடைய இந்த உடலிலேயே நாம் ஒரு புதிய பிறப்பெடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகக் கருதலாமா?

ஆமாம். ஒவ்வொரு நாளும் நம் உடலையும் மனத்தையும் மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பே!

நான் உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன். உங்களால் உங்கள் மனத்தை மாற்ற முடியும்! உங்கள் மனத்தை மட்டும் அல்ல, உங்கள் உடலையும் மாற்ற முடியும்! ஏனென்றால் உங்கள் உடல் உங்கள் மனத்தால்தான் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு நாள் தூக்கமும் விழிப்புமே, நம்முடைய வாழ்க்கையையே நாம் மாற்றிக்கொள்வதற்காக, நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பம்தான். ஒவ்வொரு தூக்கமும் இறப்பே. ஒவ்வொரு விழிப்பும் பிறப்பே. ஜநநம், மரணம் என்கிற பிறப்பு, இறப்பு இதுதான். ஒவ்வொரு நாளுமே நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பம்தான்.

விழிக்கும்பொழுது உங்களுடைய ஸூக்ஷ்ம உடல் உங்கள் ஸ்தூல உடலில் குடியேறுகிறது. அப்போது உங்கள் மனத்தில் எழுகிற எண்ணங்களே நாள் முழுவதற்கும் உங்களுடைய மனநிலை மற்றும் செயல்களை முடிவு செய்யக்கூடிய மனப்போக்காக மாறுகின்றன.

நீங்கள் காலையில் எழுந்தவுடன்,
படுக்கையில் இருந்துகொண்டே உங்கள்
கைகளை உச்சந்தலையிலிருந்து கால் விரல்
நுனிவரை எடுத்துச் செல்லுங்கள். உங்கள்
கைகள் உங்கள் தலையை உணரும்பொழுது
உங்களுக்கு அழகான தலையும், அற்புதமான
தலை முடியும் இருப்பதாக உங்களுக்குள்
நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு உண்மையிலேயே அப்படி இருக்கிறதா, இல்லை, அப்படி இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். வெறுமனே சொல்லுங்கள். பிறகு உங்களுக்கு இப்படி ஒரு அழகான தலையையும் அற்புதமான முடியையும் கொடுத்ததற்காக அந்தப் பிரபஞ்ச சக்திக்கு நன்றி சொல்லுங்கள்.

இந்த மாதிரி, உங்கள் தலை முதல் பாதவிரல்கள்வரை போய் ஒவ்வொரு அங்கத்தையும் உணர்ந்து உங்களுடைய நன்றியை எல்லா அங்கத்திற்கும் அளியுங்கள்.

இந்த முழுப் பயிற்சியையும் செய்வதற்கு பத்து நிமிடங்கள் ஆகும். இந்த தியானம், அந்த நாளுக்குரிய உங்கள் மன நிலையை முடிவு செய்வதோடு மட்டுமல்லாமல், உங்களைப் பற்றிய ஒரு உறுதியான அபிப்ராயத்தை உங்களுக்குள் ஏற்படுத்தி உங்களை நீங்களே நேசிக்கவும் வைக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த தியான நுட்பமாக இருக்கும். இந்த நேசம் பிறர் மீதும் அன்புகொள்கிற விதத்தில் மாறிவிடும். ஆமாம். ஒவ்வொரு விடியலும் உங்களுடைய வாழ்க்கையையே மாற்றக்கூடும். அதை நீங்கள் அனுமதித்தீர்களானால் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால், இது சாத்தியமே!

பக்தி யோகத்தின் ஸத்யங்களை, நம்முடைய வாழ்வே அன்புதான், நம்முடைய சுவாசமே அன்புதான் என்கிற அனுபவத்தை நமக்குள் உணர வேண்டும் என்று எல்லாம் வல்ல சக்தியான பரப்ரம்ம கிருஷ்ணரைப் பிரார்த்திப்போம். பக்தியை விழிப்புணர்வோடு அனுபவிக்க, பக்திபூர்வமான அன்பை உணர, என்றும் முடிவில்லா ஆனந்தமான நித்யானந்தத்தை நாம் உணர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்று அவரிடம் பிரார்த்தனை செய்வோமாக.

நன்றி.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு
ப்ரம்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு 'ஷ்ணார்ஜுநஸம்வாதே
பக்தியோகோ நாம த்வாதஶோ'த்யாய: ||

இது ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'பக்தி யோகம்' எனப் பெயர் படைத்த பன்னிரண்டாவது அத்தியாயம்.

நித்யானந்தம்