என்றென்றும் வாழும் மஹாபாரதம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பரமஹம்ஸரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூக்ஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.
சிறந்த ஸத்குருவும் தத்துவஞானியுமான சங்கரர், "கீதையைச் சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்குளிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்," என்று சொல்கிறார். "நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்," என்று சொல்கிறார்.
பரமஹம்ஸரின் பகவத்கீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், பரமஹம்ஸரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸத்யத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!
முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!
- நித்யானந்தா பதிப்பகம்
பகவத் கீதை
உங்களின் சுதந்திரத்திற்கான தீர்வு
அத்தியாயம் - 10
படைப்பவனும் நானே!
படைக்கப்பட்டதும் நானே!
படைப்பும் நானே!
மற்ற எல்லாமும் மாயையே.
என்னை அறிந்துகொள்ளுங்கள்...
விடுதலை அடைவீர்கள்!
வினாக்களின் வாசலில்
✍ ஸ்வாமிஜி, நீங்கள் சரணடைதல் பற்றிச் சொன்னீர்கள். சரணடைதலும், எல்லாவற்றையும் துறத்தலும் ஒன்றா?
✍ ஸ்வாமிஜி, மற்ற குருமார்களையும் பின்பற்றலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது, அழகான மலர்களை வைத்து ஒரு மாலையை உருவாக்கிக்கொள்வதுபோல என்றும் சொல்கிறீர்கள். அதனால் என்ன பயன்? ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவதுதானே தொடரும்! இதனால் ஒருவர் எங்கும் நிறைவடைய மாட்டாரே!
✍ தாவோவின் கொள்கைப்படி, எல்லா விஷயங்களிலும் நன்மையும் தீமையும் இருக்கிறது. இந்த ஸ்லோகங்களில், கிருஷ்ணரும் இதைத்தான் சொல்கிறாரா?
✍ ஸ்வாமிஜி, ஆசிரமத்தில் வசிக்க முடியாதவர்களின்நிலை என்ன? அவர்கள் ஆன்மீகச் சாதனைகளில் வெற்றி அடைய முடியாதா?
✍ குருவை அடைய எது உயர்ந்த வழி?
✍ ஒருவர் தம்மைத்தாமே அறிந்து ஜீவன்முக்தி அடைய வேண்டுமானால், அஹங்காரத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறீர்கள். அஹங்காரத்தை நம்முடைய ‘அடையாளமாக’த்தான் நாம் தூக்கிக்கொண்டு சுற்றித் திரிகிறோம் என்றும் சொல்கிறீர்கள். ஆனால் பொருள் சார்ந்த இவ்வுலகில் வாழ்வதற்கு நமக்கு ஒரு ‘அடையாளம்’ தேவைப்படுகிறதே. இல்லாவிட்டால் நாம் எப்படிச் செயல்படுவது?
✍ பாற்கடலைக் கடைந்ததையும் அதிலிருந்து பல ஜீவன்கள் வெளிப்பட்டதையும் பற்றி கிருஷ்ணர் இங்கே பேசுகிறார். பாற்கடல் கடைதல், அதிலிருந்து ஜீவன்கள் வெளிப்படுதல் - இந்த நிகழ்ச்சியின் தாத்பரியம் என்ன?
✍ நீங்கள் ஞானியைப் பற்றியும், யோக தண்ட எனப்படும் ஜென் தடியைப் பற்றியும் பேசினீர்கள். குருவானவர் கருணையின் அவதாரமாக இருக்கும்போது, ஜென் தடி ஏன் தேவைப்படுகிறது?

நீங்களே இறுதியானவர்
பகவத்கீதையின் பத்தாவது அத்தியாயமான விபூதி யோகம் என்கிற இந்த அத்தியாயம், தெய்வத் தன்மைகளை, இறைப்பண்புகளை வெளிப்படுத்தும் யோகமாக இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் அவருடைய பெருமைக்குரிய சிறப்புத் தன்மைகளை, இறைப்பண்புகளை வெளிப்படுத்துகிறார். ஒன்பதாவது அத்தியாயத்தில், இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு நமக்குள்ள ஆழமான தொடர்பை உணர்வது எப்படி என்கிற இறுதி இரகசியத்தை அவர் விவரித்தார்.
அவரே இறுதியானவர் என்பதையும், அவர் தம்மைத்தாமே எப்படி வெளிப்படுத்திக் காட்டுவார் என்பதையும் இந்த அத்தியாயத்தில் மிக விரிவாகவும் விளக்கமாகவும் விவரிக்கிறார்.
எல்லா அடையாளங்களையும் கடந்த ஜீவன் - 'அவதார புருஷர்'
என்னுடைய புகைப்படங்களை நானே பார்த்து ரசிப்பதையும், என்னைப் புகழ்ந்து எழுதிய பாடல்களை நானே கேட்டு ரசிப்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான் சில நேரங்களில் விதவிதமாக உடையணிவதைப் பார்த்து, என்னை நானே அலங்காரமாகக் காட்டிக்கொள்வதாக நினைத்திருப்பீர்கள்.
என்னைப் பொறுத்தவரை 'நான்' என்கிற இந்த உடல் நிஜம் கிடையாது. என்னுடைய தோலே எனக்கு அன்னியம்தான், அதனால் அதன் மீது என்ன உடுத்தி இருக்கிறேன் என்பதை விட்டு விடுங்கள்.
நீங்கள் என்னை
எப்படிப்
பார்க்கிறீர்களோ,
அப்படியேதான் நானும்
என்னைப் பார்க்கிறேன்!
-பரமஹம்ஸ நித்யானந்தர்
பெரும்பாலான நேரங்களில் இரண்டே
இரண்டு துண்டு காவித் துணிகளை
த்தான் அணிந்திருப்பேன். என்னைப்
பொறுத்தவரையில், சில முக்கிய விசேஷமான
சமயங்களில் அணியும் விலையுயர்ந்த உடை
களும் சரி, காவித்துணியும் சரி, இரண்டுமே
ஒன்றுதான். நீங்கள் என்னைப் எப்படிப்
பார்க்கிறீர்களோ, அப்படியேதான் நானும்
என்னைப் பார்க்கிறேன்! சம நிலையோடு
பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
ஒரு ஞானமடைந்த இருப்புத் தன்மைக்கு எந்த அடையாளமும் இருக்காது. பிரபஞ்சத்தோடு கலந்து இருப்பது மட்டும்தான் அவருடைய ஒரே அடையாளமாக இருக்கும்.
ஜகத்குரு கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் தம்மைப் பற்றி பேசும்போது, தாம் 'பிரபஞ்ச க்ருஷ்ணர்', 'பரப்ரம்ம க்ருஷ்ணர்' என்ற கருத்தில்தான் பேசுகிறார். அவர் இந்த உடல் சார்ந்த கிருஷ்ணராக - வஸுதேவனின் மகனான வாஸுதேவ கிருஷ்ணராகப் பேசவில்லை.
கீதை முழுவதையும் கிருஷ்ணர் பிரபஞ்ச விழிப்புணர்வில் இருந்து கொண்டு உபதேசித்தார். குறிப்பாக, அடுத்த அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு பிரபஞ்ச விழிப்புணர்வாகத் தம்மைத்தாமே வெளிப்படுத்திக் காட்டுவதற்கு முன்னர், அவர் இந்த அத்தியாயத்தில் பிரபஞ்ச விழிப்புணர்வின் உச்சத்தில் இருந்தார்.
இங்கே ஜகத்குரு கிருஷ்ணர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, மொத்த மனித சமுதாயத்திற்குமே ஒரு மிகப்பெரிய பரிசு. இந்த அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகங்கள்தான் பகவத்கீதையின் மிச்சமிருக்கும் எல்லா ஸ்லோகங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஸ்லோகங்கள்தான் கீதையைப் புனித நூலாக ஆக்குகிறது.
10.1 பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்:
ஓ அர்ஜுனா! மிகக் கவனமாகத் திரும்பவும் கேள். நீ என் ஆத்ம நண்பன், நான் உன்னுடைய நலனுக்காகவே பேசப்போகிறேன்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சீடருக்கும் குருவுக்கும் இடையிலான உறவு பல வடிவங்களில் இருக்கும். பொதுவாக இது ஐந்து வடிவங்களில் இருக்கும்.
குருவுக்கும் சீடருக்குமான அடிப்படை உறவு தாஸ பாவம் எனப்படும். இது எஜமானருக்கும் வேலைக்காரருக்கும் இடையிலான உறவைப்போல இருக்கும். இராமருக்கும் அனுமாருக்கும் இடையில் இந்த வகையான உறவுதான் இருந்தது.
அடுத்தது, வாத்ஸல்ய பாவம்; இது, குழந்தை கிருஷ்ணருக்கும் யசோதைக்கும் இருந்ததைப் போன்ற தாய்க்குத் தன் குழந்தையிடம் இருக்கும் உறவு.
மூன்றாவது வகை, மாத்ரு பாவம்; இது குழந்தைக்குத் தன் தாயோடு இருக்கும் உறவு. இராமகிருஷ்ணருக்கு, அன்னை காளியோடு ஏற்பட்ட உறவைப் போன்றது.
நான்காவது, ஸக பாவம் எனப்படும்
நட்புறவு. குருவையே மிக நெருங்கிய
நண்பனாக நினைப்பது. கிருஷ்ணருக்கும்
அர்ஜுனனுக்கும் இடையே இருந்த உறவை
இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
ஐந்தாவது வகை, மதுர பாவம் எனப்படும் காதல். ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் இந்த வகை உறவுதான் இருந்தது.
கிருஷ்ணர், அர்ஜுனனோடு தமக்கு இருக்கும் நட்பை எடுத்துக்காட்டுவதால், இங்கே

அவர் நான்காவது உறவான ஸக பாவத்தை வெளிப்படுத்துகிறார். அவர், தம்முடைய சீடர் அர்ஜுனனுக்கு குருவாகவும் இருக்கிறார்; அதே சமயம் நண்பராகவும் இருக்கிறார்.
பகவத்கீதையின் கடைசி அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்தப் பிரபஞ்ச சக்தியோடு ஆழமாக இணைந்திருக்கும் உணர்வைப் பெறுவதற்கான ஒரு நுட்பத்தை அல்லது புரிதலைக் கொடுக்கிறார். அர்ஜுனன் தம்முடைய ஆத்ம நண்பன் என்பதால், மிக உயர்ந்த எல்லா மறைபொருட்களையும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வெளிப்படுத்துகிறார்.
எதிரியாக நினைத்தாலும் இறுதியில் என்னோடு கலந்திடுவாய்
பொதுவாக, நம்முடைய தனிப்பட்ட அஹங்காரத்தினால், பூரணத்துவத்தை நம்முடைய எதிரியாகப் பார்க்கிறோம். நாம் மிகப்பெரிய கடலின் சின்னச் சின்ன அலைகளைப் போன்றவர்கள்தான். ஆனால் எப்படியோ திடீரென இந்தச் சின்ன அலை, கடலையே தம்முடைய எதிரியாக நினைக்கத் தொடங்கிவிட்டது.
அலை உருவாகும்போதும், அலையாக இருக்கும்போதும் அல்லது அது வீழ்ந்துவிடும்போதும்கூட, கடலோடு அது தொடர்புகொண்டுதான் இருக்கிறது. ஆனால் எப்படியோ, கடலோடு தனக்குத் தொடர்பில்லை என்று அலை எண்ணத் தொடங்கிவிட்டது. அது மட்டுமல்லாமல், கடலோடு அது சண்டை போடவும் தொடங்குகிறது.
> அலையின்
> தனிப்பட்ட அடையாளம்
> காணாமல் போகவேண்டும்.
> ஜீவன் முக்திக்கு
> இதுவே முதல் படி.
தனக்கு கடலோடு முழுவதுமாகத்
தொடர்புண்டு என்று அலை உணர
வேண்டுமானால், அது கடலால் விழுங்கப்பட
வேண்டும். அஹங்காரம் கரைய வேண்டும்.
அலையின் தனிப்பட்ட அடையாளம்
காணாமல் போக வேண்டும். ஜீவன் முக்திக்கு
இதுவே முதல் படி.
நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட
அடையாளங்களின் மாயையில்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு அலையும் மற்ற அலையோடு
உறவை ஏற்படுத்திக்கொள்கிறது.
ஆனால் அவை கடலோடு உறவை
ஏற்படுத்திக்கொள்வதில்லை. ஒவ்வொரு
அலையும் மற்ற அலைகளை, அதனுடைய
அப்பாவாக, அம்மாவாக, மனைவியாக,
குழந்தையாக அடையாளப்படுத்திக்கொண்டு
அவர்களுடன் உறவை ஏற்படுத்திக்
கொள்கிறது.
ஆனால் முடிவில், அலை கடலோடு
கலந்துவிடுவதுபோல், இந்த ஒவ்வொரு
உறவுக்கான அலைகளும் கடலோடு
கலந்துவிடும்.
அலையைப் பொறுத்தமட்டில், அதன் சொந்த அடையாளம் நிலையற்றது என்பதைப்போலவே, அது உறவாக நினைக்கும் சுற்றியுள்ள அத்தனை அலைகளும்கூட நிலையற்றவைதான் என்பது தெரிந்தாலும் கூட, அது அவ்வளவு எளிதில் கடலில் கரைந்து விடுவதில்லை.
நாம் அலையாக இருக்கும்போது, நம்மையும் தாண்டி கடலோடு நமக்கு இருக்கும் தொடர்பைப் புரிந்துகொள்வது கஷ்டம். 'நாம் அலை' என்ற நம்முடைய தனி அடையாளத்தையும் தாண்டி உயரும் போதுதான், நாம் மிகப்பெரிய கடலின் ஒரு பகுதி என்பதைப் பார்க்க முடியும்.
மனித உடலில் கோடிக்கணக்கான செல்கள் ஒன்றுக்கொன்று முழு இசைவோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு தனிப்பட்ட செல்லுக்கும்கூட, அதற்கென்று தனிப்பட்ட ஒரு அறிவு இருக்கிறது.
ஓர் அழகான ஒருமித்த தன்மை (oneness), மனித உடலில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. செல்லின் அறிவு மையம் (central intelligence) என்று சொல்லப்படும், இருக்கும் நியூக்ளியஸை நீக்கி விட்டாலும்கூட அணுவால் வாழ முடியும்.
ஆனால் இந்த செல், நமது மொத்த உடலின் ஒரு பாகமாக இருக்கும்போது, அந்த தனிப்பட்ட ஒரு செல்லின் அறிவு மட்டுமே வேலை செய்வதில்லை. உடல் - மன அமைப்பின் மொத்த அறிவும் சேர்ந்து வேலை செய்கிறது. இந்தக் கூட்டுணர்வுதான் (Collective intelligence), இந்த அருமையான மனித உடல்-மன அமைப்புதான் பிரச்சினை இல்லாமல் வேலை செய்வதைத் தீர்மானிக்கிறது.
அர்த்தமில்லா அஹங்காரம் உங்களுக்கு உதவாது
ஒரு சின்ன கதை:
ஒருவர் ஒரு கிராமத்திற்குப் போயிருந்தார். அவர் அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார். ஆனால் அந்த இடம் தமக்கு ஒத்துவருமா என்பதை அறிய விரும்பினார்.
வழியில் ஒரு விவசாயியைப் பார்த்து, "இந்தக் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் எப்படி?" என்று கேட்டார்.

> நம்முடைய
> அஹங்காரம்,
> இந்த உலகில்
> நாம் மிகவும்
> முக்கியத்துவம்
> வாய்ந்தவராக
> இருக்கிறோம் என்று
> நம்மை
> நினைக்க வைக்கிறது.
அந்த விவசாயி சொன்னார்: "அந்த மனிதர் இந்த ஊருக்கு ஒன்றுமே செய்வதில்லை. அவர் ஒரு உதவாக்கரை,"என்றார்.
அந்தப் புதியவர் இன்னும் கொஞ்ச தூரம் போனதும், வழியில் ஒரு குயவரைப் பார்த்தார். திரும்பவும் அதே கேள்வியை அவரிடம் கேட்டார்.
உடனே குயவர், "இவர் வந்த பிறகு என்னுடைய வாழ்க்கையே மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கிறது. அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெறக் கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்," என்றார்.
பிறகு அவர் ஓர் ஓட்டலுக்குச் சாப்பிடப் போனார். அந்த ஓட்டல் சொந்தக்காரரிடம், "இந்தப் பஞ்சாயத்து தலைவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அவர், "எந்த முட்டாள் அவரைத் தலைவராக்கியது என்று தெரியவில்லை. அவருடைய வேலையைப் பற்றியே அவருக்கு ஒன்றும் தெரியாது," என்றார்.
இப்போது அந்தப் புதியவருக்கு, அந்தப் பஞ்சாயத்து தலைவரே தம்மைப்பற்றியும் தம்முடைய வேலையைப் பற்றியும் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவல் வந்துவிட்டது. உடனே அந்தப் பஞ்சாயத்து தலைவரைப் போய்ப் பார்க்க அனுமதி வாங்கினார். அவரிடம் கேட்டார், "நீங்கள் இந்த வேலைக்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்?"
அவர் சொன்னார், "சம்பளமா? நான் இந்த வேலைக்காக எதுவுமே வாங்குவதில்லை. இந்தப் பதவி எனக்கு ஒரு கௌரவத்தை, ஒரு அந்தஸ்தைக் கொடுக்கிறது. அதனால்தான், இந்தப் பதவியை நான் ஏற்றுக்கொண்டேன்," என்று பதிலளித்தார்.
நம்முடைய அஹங்காரம்தான், இந்த உலகில் நாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறோம் என்று நினைக்க வைக்கிறது. அந்த அந்தஸ்தைப் பாதுகாக்க நாம் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.
மற்றவர்களுக்கு நம்முடைய அஹங்காரம் ஒன்றுமே இல்லை. ஒவ்வொருவரும் அவரவர்களுடைய வாழ்க்கையில்தான் மிக அதிக அக்கறை உள்ளவர்களாக இருக்கிறார்கள்; அவரவர்களுக்கு அவரர்களைப் பற்றிய கவலைதான் பிரதானமாக இருக்கிறது. அதனால் நம்மைப் பற்றி நினைப்பதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.
இன்னொரு கதை:
சுஜூகி என்ற ஜப்பானிய ஞானி, தம்முடைய குரு இறந்ததும், மிகவும் துக்கப்பட்டு அழுது கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த ஒருவர், "நீங்கள் ஒரு ஞானி, குருவின் மரணத்திற்கு நீங்கள் அழக் கூடாது," என்றார்.
அதற்கு சுஜூகி, "என் குரு இந்தப் பூமியிலேயே ஒரு அசாதாரணமான மனிதர்," என்றார்.
உடனே அந்த மனிதர், "அவரிடம் அப்படி என்ன சிறப்பு?" என்று கேட்டார்.
அதற்கு சுஜூகி, "தம்மை மிகவும் சாதாரண மனிதராக நினைத்துக்கொண்ட ஒரு அசாதாரண மனிதர் இவர். இவரைப்போல, வேறு யாரையும் நான் பார்த்ததே இல்லை," என்று சொன்னார்.
ஞானிகள் எப்போதுமே மிகச் சாதாரணமாகத்தான் இருப்பார்கள். ஞானமடையாதவர்கள்தான் தங்களைப் பற்றி அசாதாரணமாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்!
ஆனால் எப்போது நாம் அதிகமான துன்பத்தில் இருப்பதாக நினைக்கிறோமோ, அப்போதுதான் நம்முடைய அஹங்காரம் திருப்தியாக இருக்கிறது. நம்மைநாமே அசாதாரணமானவர்கள் என்று நினைத்துக்கொள்கிறோம்.
நம்முடைய எதிரி பெரிதாக இருக்கும்போது மட்டும்தான், நம்மை நாமே பெரியவர்களாக நினைத்துக்கொள்வோம். நம்முடைய எதிரி சிறியவர்களாக இருக்கும்போது, நம்மையும் நாம் சிறியவர்களாகவே நினைத்துக்கொள்கிறோம்.
இதனால்தான், நம்முடைய துன்பங்கள் பெரிதாக இருக்கும்போது, நாம் நிம்மதி அடைகிறோம். அப்போது நம்முடைய அஹங்காரம் திருப்தியாக இருக்கிறது.
நம்முடைய வாழ்க்கையையே, நம்முடைய துன்பங்களை வைத்துத்தான் நாம் எடை போடுகிறோம். அதனால்தான் நாம் தொடர்ந்து மற்றவர்களைத் துக்கப்படுத்துவதோடு அல்லாமல், நம்மையும் துக்கப்படுத்திக்கொள்கிறோம்.
சுஸூகியின் குரு தம்மை மிகவும் சாதாரணமாக நினைத்துக் கொண்டதாலேயே, அசாதாரணமானவராகத்தான் இருந்தார். ஆனால் இந்த உலகத்தில் வாழும் நாம் ஒவ்வொருவரும் நம்மை அசாதாரணமானவர்களாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
எப்போது மனிதர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்களோ, அப்போது அவர்கள் தங்களைத் தாங்களே பெரிதாக நினைக்கிறார்கள்.
ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொருவரும் தங்களை அசாதாரணமானவர்கள் என்றுதான் நினைக்கிறார்கள். ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய பிரச்சினைகளையும், தங்களுடைய விவாதங்களையும் மிகப்பெரியதாக நினைக்கிறார்கள்.
எவர் ஒருவர் தம்மைச் சாதாரணமாக நினைக்கிறாரோ, எளிமையில் நம்பிக்கை வைத்திருக்கிறாரோ, அவர் மற்றவர்களுடைய விஷயங்களுக்கும் மதிப்பு கொடுப்பார். தம்மை மற்றவர்களின் பாதத்தில் சமர்ப்பிப்பது எப்படி என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
நம்முடைய அஹங்காரத்தால்தான், நம்மைநாமே அசாதாரணமானவர்களாக நினைக்கிறோம். நம்மால்தான் உலகின் பல வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக நினைக்கிறோம். நாம் எல்லோருமே பிரபஞ்ச சக்தியின் தனித்தனி படைப்புக்கள்தான், ஆனாலும் உலக இயக்கத்திற்கு நாம் பொறுப்பாளிகள் கிடையாது.
கடலின் சக்திக்கு தான்தான் காரணம் என்று அலை ஒருபோதும் சொல்லிக்கொள்ள முடியாது. அது கடலின் ஒரு பாகம் என்று தன்னை உணர்ந்தே ஆக வேண்டும்; அதற்குப் பதிலாக, அது கடலில் இருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ள நினைத்தால், அது வீண் முயற்சிதான்.
இந்த உலகம் நம்மால்தான் இயங்குகிறது என்று நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உலகம் நம்மால் இயங்கவில்லை. அது நமக்காக இயங்கிக்கொண்டிருக்கிறது!
உலகம் இன்று இயங்கிக்கொண்டிருப்பதுபோல், ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன், நீங்கள் பிறப்பதற்கு முன் இயங்கிக்கொண்டிருந்திருக்காது என்று நினைக்கிறீர்களா? இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதற்காக, உலகம் இயங்காமல் நின்றுவிடப் போகிறதா?
‘பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு,
இந்த உலகமே இருண்டு விட்டதாக
நினைத்துக்கொள்ளுமாம்!’ என்பது
பழமொழி .
அதுபோல் நெருப்புக் கோழியும் தனக்கு
ஆபத்து வரும்போது தன் தலையை
மண்ணில் புதைத்துக்கொண்டு, யாரையும்
தன்னால் பார்க்க முடியாததால் தன்னையும்
யாரும் பார்க்க முடியாது என்று
நினைத்துக்கொள்ளுமாம்!
நீங்கள் இந்த உலகில்
இல்லை என்பதற்காக,
உலகம் இயங்காமல்
நின்றுவிடப் போகிறதா?
என்னை விட்டு உங்களைப் பிரிப்பது அஹங்காரமே - இறைசக்தி
ஒரு சின்ன கதை:
ஒருவர் ஒரு படகில் போய்க் கொண்டிருந்தார். படகோட்டி அவரால் முடிந்தவரைக்கும் வேகமாகப் படகை ஒட்டிக் கொண்டிருந்தார். ஆனால் படகில் உட்கார்ந்திருந்த அந்த மனிதரோ, அக்கரைச் சீக்கிரமாகச் சென்றடைய வேண்டுமென்ற அவசரத்தில் இருந்தார். அவரால் பொறுமையாக உட்கார முடியவில்லை.
அவர் படகிலேயே இங்கும் அங்குமாக வேகமாக நடக்கத் தொடங்கினார். பிறகு கொஞ்ச நேரத்தில் படகிற்குள்ளேயே ஓடத் தொடங்கினார்.
படகோட்டி, "தயவுசெய்து உட்காருங்கள், என்னைப் படகை ஓட்ட விடுங்கள்," என்று சொன்னார்.
அதற்கு அந்த மனிதர், "எனக்கு உட்கார நேரமில்லை. நான் உடனடியாக அக்கரைக்குப் போக வேண்டும்," என்றார்.
நம்மேயே நாம் உற்றுக் கவனித்தோமானால், இதைத்தான் பல நேரங்களில் நாமும் செய்து கொண்டிருக்கிறோம். படகிற்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்வதால் என்ன ஆகிவிடப் போகிறது?
இரமண மகரிஷி ஓர் அழகான கதை சொல்வார்:
ஒருவர் தம்முடைய சாமான்களை எல்லாம்
தலையில் சுமந்துகொண்டே இரயிலில்
பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.
சக பிரயாணி, "ஏன் சுமையைத் தலையில்
சுமந்துகொண்டிருக்கிறீர்கள்? அதைக்கீழே
போட்டுவிட்டு நிம்மதியாக உட்காருங்கள்,"
என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர்,
"இரயிலில் நிறைய பாரத்தை ஏற்ற வேண்டாம்
என்றுதான் நானே சுமக்கிறேன்," என்றாராம்.
தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள்,
உலகம் நம்மால்
இயங்கவில்லை.
அது நமக்காக
இயங்கிக்
கொண்டிருக்கிறது!
அந்த இரயில் அவரை மட்டுமல்ல,
அவர் தலையில் இருக்கும் பாரத்தையும்
சேர்த்துத்தான் சுமந்துகொண்டிருக்கிறது
என்பதை அவர் கொஞ்சமும் உணரவில்லை!
இதப்போலத்தான், கடவுள் நம்மை
மட்டுமல்ல, நம்முடைய மனத்தையும்
அன்புடனும் அக்கறையுடனும்
கவனித்துக்கொள்கிறார். ஆனால்
நீங்களே உங்களைக் கவனித்துக்
கொள்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.
அது உங்கள் மனத்தின் முட்டாள்தனம்.
கடவுள் நம்மை
மட்டுமல்ல
நம்முடைய
மனத்தையும்
அன்புடனும்,
அக்கறையுடனும்,
கவனித்துக் கொள்கிறார்.
நாம் எல்லோரும் அந்தத் தெய்வீகத்தின் அலைகள். நாம் இந்தப் பிரபஞ்ச சக்தியின் ஒரு பாகம். நாம் தனியாக ஒரு தீவைப்போல வாழ முடியாது. நாம் தனியான ஓர் இருப்புத் தன்மையாக வாழ முடியாது. விரிந்த கடலில் இருக்கும் அலைபோல, நாம் இந்த மொத்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறோம்.
அஹங்காரம்தான், நம்மை ஒரு தனிமனிதனாக நினைக்க வைக்கிறது. அஹங்காரம்தான், நாம் இந்தப் பிரபஞ்ச சக்தியின் ஒரு பாகம்தான் என்று உணர்வதிலிருந்து நம்மைப் பிரித்துத் தனிமைப்படுத்துகிறது. ஆனால் உண்மையில் நாம் பிரபஞ்சத்தின் பகுதிகளாகவும் அதனால் தாங்கப்படுபவர்களாகவும் இருக்கிறோம்.
இரண்டு வழிகளில் வாழலாம். ஒன்று, ஸத்யத்தை வரவேற்று அதைத் தழுவிக்கொள்வது. அதற்கு நம்முடைய அஹங்காரம் கரைய வேண்டும். அப்பொழுது மட்டுமே நம்மால் ஸத்யத்தை எதிர்கொள்ள முடியும். ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், ஸத்யம்தான் கடவுள்.

கடவுள் என்பது ஆகாயத்தில்
அல்லது பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு
மூலையில் மறைந்து கொண்டிருக்கும்
தனிப்பொருள் அல்ல; நம்மைச் சுற்றி
இருக்கும் ஸத்யம் அவர்தான்.
இரண்டாவது, பெரும்பாலானவர்கள்
இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும்
அதே முறையிலேயே வாழ்வது.
ஸத்யத்தின் சாரமே இல்லாத அதாவது ஸத்யம் இல்லாத தவறான அஹங்காரத்தைக் காப்பாற்றுவதற்காகவே ஒரு கூட்டை, ஒரு கனவுலகை நம்மைச்சுற்றி உருவாக்கிக்கொள்கிறோம். இதைத்தான் மாயா என்று சொல்கிறோம்.
ஸம்ஸ்க்ருதத்தில் மாயா என்ற சொல்லுக்கு அழகான விளக்கம் உண்டு. யா மா இதி மாயா- இல்லாத ஒரு பொருள், ஆனால் இருக்கும் ஒரு பொருளைப்போலவே நமக்குத் தொல்லை கொடுக்கும், அதுதான் மாயா.
நாம் அஹங்காரத்தை மையமாக வைத்து, இந்தப் பொய்யான உலகத்தையே நம்முடைய மேலுறையாகக்கொண்டு அதற்குள் மறைந்து இருக்கும்வரை, நமக்குப் பக்கத்தில் இருக்கும் கடவுளை நம்மால் உணர முடியாது.
உங்களின் உயிருக்கும் நானே சொந்தம்
- இறைசக்தி
நம்முடைய உடலுக்குள்ளே போய், வெளியேவரும் நம்முடைய ப்ராணனே நமக்குச் சொந்தமில்லை. அது பிரபஞ்ச சக்தியின் சொத்து. ப்ராணன் என்பது நாம் உள்ளிழுத்து வெளிவிடும் காற்று அல்ல. ப்ராணன் என்பது நாம் சுவாசிக்கும் காற்றானது தன்னூடனே எடுத்துச் செல்லுகிற உயிர்ச் சக்தியைக் குறிக்கிறது. அது, நாம் சுவாசிக்கும்போது காற்றின் மூலமாக உள்ளே போகிறது.
காற்று என்பது ப்ராணனை உள்ளே கொண்டு செல்லும் ஒரு வாகனம், அவ்வளவுதான். வீடு கட்டத் தேவையான பொருட்களை ஒரு லாரி எடுத்து க்கொண்டு போய் இறக்குவதுபோல, காற்று, ப்ராணனை உள்ளே கொண்டு செல்கிறது. நமக்கு உயிர்வாழக் காற்று தேவையில்லை, ப்ராணன்தான் தேவை.
தொடர்ந்து, காற்றானது ப்ராணனைக்
கொண்டுபோய் உள்ளே விட்டுவிட்டு
வெளியே வருகிறது. தொடர்ந்து
நாம் பிரபஞ்ச சக்தியிடமிருந்து ப்ராண
சக்தியைக் காற்றின் மூலமாக எடுத்துக்
கொள்கிறோம்.
உள்ளே செல்லும் மூச்சு எடுத்துச்செல்லும் ப்ராண சக்தியின் அளவு வெளியேறும் மூச்சில்
உள்ள ப்ராண சக்தியின் அளவைவிட அதிகமாக
இருந்தால், நாம் நம் வாழ்க்கையை நோக்கிச்
சென்றுகொண்டிருக்கிறோம். பிறகு நாம்
விரிவடைகிறோம்; நம்முடைய உடலையும்
சக்தியையும் பலப்படுத்திக்கொள்கிறோம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
நம்முடைய வெளிமூச்சு, உள் மூச்சைவிட
அதிகமான ப்ராணனை வெளியே எடுத்து
வந்தால், நாம் மரணத்தை நோக்கிப் போய்க்
கொண்டிருக்கிறோம்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம், நம்மை என்னவாக நினைத்துக் கொண்டிருந்தாலும், ப்ராணன் உள்ளேயும் வெளியேயும் போய் வரவில்லை என்றால் நம்முடைய உயிர் இயங்காது.
நம்முடைய உடல் முடியும் எல்லையோடு, நாமும் முடிந்து விடுவதாக த்தான் மீண்டும் மீண்டும் நினைக்கிறோம். அதைத் தாண்டி வெளியில் இருக்கும் எல்லாமே வெளி உலகம் என்று நினைக்கிறோம்.
இந்த உடல் நம்முடைய எல்லை கிடையாது. நம் உடல் எல்லைக்கு வெளியே இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிற இந்த வெளி உலகை நம்முடைய எதிரியாகப் பார்க்கிறோம்.
ஒரு நாள் சூரியன் உதிக்கவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள். சூரியக் கதிர்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா? இந்தக் காற்று இல்லாமல் மறைந்து போனால் நம்மால் வாழ முடியுமா?

சூரியன்
நாம் வாழ்வதற்கு, லட்சக்கணக்கான
மைல்களுக்கு அப்பால் இருக்கும் சூரியனைச்
சார்ந்து இருக்கிறோம் என்றால், நம்முடைய
எல்லை எப்படி இந்த உடலோடு முடிந்துவிட
முடியும்?
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம்
இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு
ஆழமாகத் தொடர்புகொண்டிருக்கிறோம்.
எதிர்க்கும் எண்ணம்தான் வன்முறை
நம்மால் தனியாக வாழ முடியாது. நாம் முழுமையாகப் பிரிக்கப்பட்ட தனிப்பட்ட ஜீவன்களோ அல்லது சுயமாக நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய ஜீவன்களோ கிடையாது.
நாம், ஒன்றுக்கொன்று தொடர்புடைய அந்த முழுமையின் ஒரு பாகமாக இருக்கிறோம். முழுமையைப் பற்றிய கண்ணோட்டத்தை நாம் இழந்துவிடும்போது, நமக்குள் இருக்கும் தொடர்பையும் நம்மால் உணர முடியாமல் போய் விடுகிறது.
நாம்
ஒன்றுக்கொன்று
தொடர்புடைய
அந்த முழுமையின்
ஒரு பாகமாக
இருக்கிறோம்.
உடல் உறுப்பில், செல்களின் செயல்பாடு
பற்றிய ஆராய்ச்சி மிகவும் ஒரு ஆச்சரியமான
தகவலை வெளியிட்டிருக்கிறது.
அதாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,
ஒரு செல்லானது வளர்ச்சியிலோ அல்லது
சுய பாதுகாப்பிலோதான் அதனுடைய
கவனத்தைக் குவித்திருக்கும். அது தனது
இரண்டு வேலைகளில் ஒன்றை மட்டும்தான்
செய்யும்.
ஒரு செல்லினால் ஒரே நேரத்தில் இரண்டையும் செய்ய முடியாது.
ஒரு தட்டின் ஒரு பக்கத்தில் ஊட்டச் சத்தையும், மறுபக்கத்தில் ஒரு செல்லையும் வைத்தோமானால் அந்தச் 'செல்', அந்தத் தட்டில் ஊட்டச்சத்து இருக்கும் இடத்தை நோக்கி நகரும். ஊட்ட சத்துக்குப் பதிலாக விஷத்தை வைத்தால், அது விஷத்தை விட்டுத் தூரமாக விலகி நகர்ந்து விடுகிறது.
ஊட்டச்சத்து, நஞ்சு இரண்டையும் ஒரே தட்டில் வைத்தால் அந்தச் செல் குழப்பமடைந்து எங்கேயும் நகராமல் நின்று விடுகிறது.
நமது உடல் அமைப்பைப் பொறுத்தமட்டில், இரத்த ஓட்டத்தையும் ஆக்ஸிஜன் எனப்படும் உயிர்ச் சக்தியான பிராண ஓட்டத்தையும் உடலின் வளர்ச்சி மையங்களுக்குப் பாயச் செய்வதன் மூலம், செல்களின் புத்திசாலித்தனமானது நம்முடைய உடல் அமைப்பு வளர்ச்சியில் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால் நம்முடைய உடல் - மன அமைப்பானது வெளியில் இருந்தோ அல்லது உள்ளிருந்தோ ஏதேனும் ஒரு அச்சுறுத்தலை உணர்ந்தால், அதிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்காகத் தன்னுடைய முழுக் கவனத்தையும், மொத்தச் சக்தி ஓட்டத்தையும் கை கால்களுக்குத் திருப்பிவிடுவதற்கான தொடர்ச் செயல்களைத் தூண்டிவிடும் பணியில் இறங்கிவிடுகிறது.
அச்சுறுத்தல் இருந்துகொண்டிருக்கும்வரை அவை வளர்ச்சிப் பணிகளைத் தியாகம் செய்து விட்டு, பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கும். ஒன்று, மனமும் உடலும் அச்சுறுத்தலை எதிர்த்துச் சண்டையிடும் அல்லது விட்டு விலகி ஓடும்.
பிரபஞ்ச இருப்புத் தன்மையை நம்முடைய எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நாம் தொடர்ந்து மற்றவர்களிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் முயற்சி செய்து கொண்டிருப்போம்.
உங்களை நீங்களே ஆழ்ந்து பாருங்கள். மற்றவர்களைப் பார்க்கும்போது நம்முடைய மனப்பான்மை என்னவாக இருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
"இவர் ஏன் வந்திருக்கிறார்? என்னிடம் இருந்து எதைத் திருடப் போகிறார்? என்னிடம் இருந்து எதை எடுத்துப் போகப் போகிறார்? என்னிடம் இருந்து என்ன பலனை எதிர்பார்த்து வந்திருக்கிறார்?" என்ற மனப்பான்மையோடுதான் நாம் மற்றவர்களைப் பார்ப்போம்.
தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு மன நிலையிலேயேதான் இருப்பீர்கள்; நீங்கள் தொடர்ந்து உங்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கவே முயற்சி செய்துகொண்டிருப்பீர்கள். ஒருவரைப் பார்த்த கணமே, நீங்கள் கணக்கிடத் தொடங்கி விடுவீர்கள்.
'இவர் ஏன் இங்கே இருக்கிறார்? இவர் எனக்கு ஏதாவது செய்வதற்கு முன்பே என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நான் என்ன செய்தாக வேண்டும்?' என்று உங்களைநீங்களே பாதுகாத்துக்கொண்டேஇருப்பீர்கள். நீங்கள் எப்போதும் கணக்கிட்டுக்கொண்டே இருப்பீர்கள். ஏனென்றால்
மற்றவர்களுடைய இருப்புத் தன்மை
உங்களைப் பயமுறுத்திக் கொண்டிருப்பதாக
உணர்கிறீர்கள்.
பிரபஞ்ச
இருப்புத் தன்மை
என்பது உங்கள்
எதிரி இல்லை.
உங்களை எப்போதும்
கவனித்துக்கொள்ளும்
பேரறிவாக
அது இருக்கிறது.
அதேபோன்று எந்தக் கணம் நீங்கள்
இருப்புத் தன்மையை அல்லது முழுமையை
உங்களுடைய எதிரியாக நினைக்கத்
தொடங்குகிறீர்களோ, அப்போதே நீங்கள்
‘தடுக்க’ ஆரம்பித்து விடுகிறீர்கள்.
‘எதிர்த்தல்’ என்று சொல்லுக்குப்
பதிலாகத்தான், ‘தடுத்தல்’ என்ற சொல்லை
நாகரிகமாக, பண்புள்ள சொல்லாகப்
பயன்படுத்துகிறோம். தடுப்பது என்பதே
எதிர்ப்பது என்பதன் ஒரு பண்பட்ட சொல்தான்.
இராணுவப் படைகளை ‘எதிரிகளைத் தடுக்கும் படை’ என்றுதான் உலகம் முழுக்க இருக்கும் மக்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால், யார் எதிர்க்கிறார்கள்? ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு இராணுவம் தங்களுடைய சொந்தப் பாதுகாப்புக்கான இராணுவம் என்றுதான் சொல்கிறது. அப்படி என்றால், யார்தான் உண்மையில் எதிர்க்கிறார்கள்?
தற்காப்பு என்ற கருத்தே, எதிர்ப்புணர்வின் நுண்ணிய வடிவம்தான்.
எப்போது முழுமையை எதிரியாக நினைக்கத் தொடங்குகிறீர்களோ, அப்போதே, உங்களைத் தவிர மற்றவர் எல்லோரையும் எதிரிகளாக நினைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
பிறகு நீங்கள் தொடர்ந்து துப்பறிந்துகொண்டும், தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டும்தான் இருப்பீர்கள்.
சண்டையிடும் எண்ணம் உங்களுக்குள் வன்முறை உணர்ச்சியைத்தான் உருவாக்குகிறது. இது அதிகமான பதற்றத்தையும் அமைதியற்ற தன்மையையும் உருவாக்குகிறது.
ராஜ வித்யா ராஜ குஹ்யம், இரகசியங்களின் இரகசியம் என்று கிருஷ்ணர் உபதேசிக்கும் முதல் இரகசியம், பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பது உங்கள் எதிரி இல்லை என்பதுதான்! அது உங்கள் எண்ணங்களுக்குச் செவி சாய்க்கிறது; அதுவே உங்களை எப்போதும் கவனித்துக்கொள்கிறது; அது பேரறிவாக இருக்கிறது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்குள் இந்த விரோத மன நிலையிலேயே இருந்து கொண்டிருந்தால், நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும்கூட, நீங்கள் இறந்துகொண்டுதான் இருப்பீர்கள். முழுமையுடனான உங்கள் உறவு, பிரபஞ்ச இருப்புத்தன்மையுடனான உறவு விரோத மனப்பான்மையுடையதாக இருந்தால், நீங்கள் துக்கப்பட ஆரம்பித்து விடுகிறீர்கள்.
நீங்கள் நட்புணர்வோடு வாழும்போது, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களுடைய நண்பன் என்ற மனோபாவத்தில் வாழும்போது, அந்த இருப்புத் தன்மையே உங்கள் சொந்தமாகிவிடும். நீங்கள் உங்களுக்குள் ஒரு ஆழமான தளர்வுத் தன்மையை உணர்வீர்கள்.
நீங்கள், முழுமைத் தன்மையின் வெளிப்பாடு
இந்தப் பிரபஞ்சமும் எந்தச் சக்தி அமைப்பின் பாகமாக இருக்கிறதோ, அதே சக்தி அமைப்பின் ஒரு பாகமாகத்தான் நாமும் இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
கடலைப்போல தானும் அதே சக்தி அமைப்பின் ஒரு பகுதிதான் என்பதை அலையானது புரிந்துகொள்ள வேண்டும். இந்து மதத்தின் புனித நூல்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் என்று இயற்கையில் உள்ளடங்கியுள்ள பஞ்ச பூதங்களைப் பற்றி விளக்குகின்றன.
சீன நாகரிகம் போன்ற பெரிய பாரம்பரிய
காலாச்சாரங்கள் எல்லாமே இந்த விஷயத்தை
ஒரே மாதிரியே புரிந்துகொண்டிருக்கின்றன.
இந்தப் பிரபஞ்சத்தைப்போலவே, நமது இந்த
உடல்-மன அமைப்பும்கூட பஞ்ச பூதங்களின்
சேர்க்கையால் ஆனதுதான். அது அசையும்
உயிரினமோ, அசையாத உயிரினமோ
அனைத்து உயிரினங்களுமே அப்படித்தான்
இருக்கின்றன.
விஞ்ஞானப்பூர்வமாகக்கூட, சக்தியை மிகவும்
> நீங்கள் நட்புணர்வோடு
> வாழும்போது,
> அந்த இருப்புத்
> தன்மையே
> உங்கள்
> சொந்தமாகிவிடும்.
அடிப்படை மட்டத்தில்தான் புரிந்துகொண்டிருக்கிறோம். பருப்பொருளும், சக்தியும் (matter and energy) வேறு வேறு என்ற குழப்பம் இனி இல்லை.
ஒருமைத் தத்துவம் (singularity concept), சக்தியையும் பொருளையும் ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், அவை இரண்டும் சேர்ந்து ஒன்றாகவும இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நாமே பிரபஞ்சம், இந்தப் பிரபஞ்சமே நாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் தளர்வான உணர்வோடு இருப்பதோடு மட்டுமல்லாமல், பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு ஆழமாக இணைந்திருப்பதாகவும் உணர்வோம்.
> பிரபஞ்சம்
எந்தச் சக்தி அமைப்பின்
பாகமாக
இருக்கிறதோ,
அதே சக்தி அமைப்பின்
ஒரு பாகமாகத்தான்
நாமும்
இருக்கிறோம்.
அலை, தன்னைக் கடலில் இருந்து
வேறுபட்டதாக நினைத்துக்கொண்டு
கடலில் இருந்து தன்னைப் பாதுகாத்து
க்கொள்ள அதனோடு சண்டையிடத்
தொடங்கினாலும்கூட, இறுதியில் அது
கடலில்தான் விழுகிறது. எவ்வளவு
வேகமாகப் போராடுகிறதோ அவ்வளவு
வேகமாகக் கடலுக்குள் விழுந்து விடுகிறது!
இயற்கையாகவே, அலை அதன் இயல்பாலேயே, கடலிலிருந்து எழுந்து, கடலிலேயே இருந்து, கடலிலேயே விழுந்து கலந்து விடுகிறது. தானும் கடலின் ஒரு பாகம்தான் என்று அலை புரிந்து கொண்டால் போதும், அது முழுமையாக நிம்மதி அடைந்துவிடும்; ஒரு ஆனந்தமான வாழ்க்கையை வாழத் தொடங்கும்.
ஆனால் உண்மைக்கு எதிராகப் போராட நினைத்தால், அது கடலுக்கு எதிராகப் போராடும். ஆனாலும் அது கடலில்தான் கலந்தாக வேண்டும். அதைத் தடுக்க முடியாது.
பிரபஞ்ச இருப்புத் தன்மை, பராசக்தி, ப்ரஹ்மன் என்று நாம் எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் சரி, அது உங்களுடைய எதிரி அல்ல; அது உங்களுடைய நண்பன்தான் என்பதையே கிருஷ்ணர் இறுதி இரகசியமாகச் சொல்கிறார். அது பேரறிவு. அது உங்கள் எண்ணங்களுக்குப் பதிலளிக்கும். இதைத்தான் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அத்தியாயத்தில் அடுத்ததாகக் கிருஷ்ணர், “நானே அதுவாக இருக்கிறேன், நானே மொத்தப் பிரபஞ்ச சக்தியாக இருக்கிறேன்,” என்று சொல்கிறார்.
அர்ஜுனனைப்போல் நாமும் வளர்ந்திடலாம்
அடுத்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தைக் கொடுக்கிறார். இந்த அத்தியாயங்கள் அர்ஜுனனைப் படிப்படியாக உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
பிரபஞ்சத்தைப்போலவே, நமது உடல்-மன அமைப்பும்கூட பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனதுதான்.
கிருஷ்ணர் முந்தைய அத்தியாயத்தில், “இருப்புத் தன்மையை எதிரியாக நினைக்காதீர்கள்,” என்று சொன்னார். இந்த அத்தியாயத்தில் அவர், “நானே அந்தச் சக்தி. என்னை நீங்கள் உங்கள் எதிரியாக நினைக்க வேண்டிய அவசியமே இல்லை, அது மட்டுமல்ல, நீங்கள் என்னை ஆழமாக நேசிக்கவும் முடியும்,” என்கிறார்.
முந்தைய அத்தியாயங்களில், பிரபஞ்ச சக்தியை - பிரஹ்மத்தை, ஆத்மாவை - எதிரியாக நினைக்க வேண்டாம் என்று சொன்ன கிருஷ்ணர், இப்போது அதனுடன் ஆழமாகத் தொடர்புகொள்வது எப்படி என்பதை விளக்குகிறார். அடுத்த அத்தியாயமான விஸ்வரூப தர்சன யோகத்தில், அவர்தான் இந்த முழுப் பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறார் என்கிற அனுபவத்தை அர்ஜுனனுக்குக் கொடுக்கிறார்.
முதலில் எதிரியாக நினைக்கும் விரோத மனப்பான்மையை நீக்குகிறார். பிறகு, பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒரு ஆழமான தொடர்பணர்வை உருவாக்குகிறார். இறுதியாக அத்வைத அனுபவத்தைக் கொடுக்கிறார். இந்த மூன்று அத்தியாயங்களிலும் அர்ஜுனனைப் படிப்படியாக வழிநடத்துகிறார். அது அர்ஜுனனைக் குறுகிய உணர்வு மட்டத்தில் இருந்து உயர்ந்த உணர்வு மட்டத்துக்கு உயர்த்துகிறது.
நாம் இந்தப் புனித நூலை, மறை நூலை ஆழ்ந்த பக்தியோடும் ஆழமான ச்ரத்தையோடும் உள்வாங்குவோம். அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் உயர்வோம். இதை நாம் விட்டுவிடக் கூடாது.
உள் உலக ஆனந்தமே நம்மை அரசராக்கும்
கிருஷ்ணர் சொல்கிறார், "உன் நன்மைக்காக, ஏனென்றால் நீ என்னுடைய ஆத்ம நண்பன் என்பதற்காக, நான் இதற்கு முன் விளக்கியதைவிட, உயர்ந்த, மேலான அறிவைத் தரக்கூடிய ஸத்யங்களை உனக்கு நான் சொல்கிறேன்."
கிருஷ்ணர் தம்முடைய நன்மைக்காக இல்லாமல், அர்ஜுனனுடைய நன்மைக்காக தம்முடைய பெருமைகளைச் சொல்கிறார். கிருஷ்ணர், தம்முடைய அஹங்காரத்தைக் காட்டுவதற்காக தம்முடைய பெருமையை விளக்கவில்லை.
ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் அவசியம் புரிந்து கொண்டாக வேண்டும்; ஒரு அரசனுடைய அஹங்காரம் எத்தனை பேர் அவரை அரசராக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கும். நிறைய பேர் ஒருவரை அரசராக ஏற்றுக்கொண்டிருந்தால், அவருடைய அஹங்காரமும் அந்தளவுக்கு அதிகமாகவே இருக்கும்.
திடீரென எல்லா அமைச்சர்களையும், எல்லாப் போர் வீரர்களையும், எல்லா மக்களையும் அவரிடமிருந்து பிரித்து விட்டால் அவருடைய அரசாட்சிக்கு என்ன நடக்கும்? அவருடைய அரசத் தன்மைக்கு என்ன நேரும்? அவருடைய அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும். அவர் தம்முடைய அரசத் தன்மையை இழந்து விடுவார். அவரால் ஒரு அரசராக இருக்க முடியாது. அவருடைய அஹங்காரம் மொத்தமும் உலுக்கப்பட்டுவிடும்.
ஓர் அருமையான கதை:
தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள், இவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய ஞானி. பரமஹம்ஸ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் உடை உடுத்துவதில்லை, ஆகாயமே அவருடைய உடையாக இருந்தது. ஒரு குழந்தையைப்போல எப்போதும் ஆனந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் ஸ்வாமி ஒரு பெரிய மரத்தடியில் ஆனந்தமாக த்யானத்தில் அமர்ந்திருந்தபோது,
> கிருஷ்ணர், தம்முடைய அஹங்காரத்தைக் காட்டுவதற்காகத் தம்முடைய பெருமையை விளக்கவில்லை. அர்ஜுனனுடைய நன்மைக்காகவே சொல்கிறார்.
அரசர் அவரைப் பார்க்க வந்தார். ஸ்வாமி
எழுந்து வந்து தம்மை மரியாதையோடு
வரவேற்பார் என்று அரசர் எதிர்பார்த்தார்.
ஆனால் ஸ்வாமியோ அவரைக்
கண்டுகொள்ளவே இல்லை. அந்த அரசரைக்
கொஞ்சம்கூட கவனிக்கவேயில்லை.
இதைப் பார்த்த அந்த அரசர்
அஹங்காரத்தோடு சொன்னார், "நீ ஒரு
சாதாரண பிச்சைக்காரன். நானோ ஓர் அரசன்.
அரசனை எப்படி மதிக்க வேண்டும் என்பது
உனக்குத் தெரியாதா?" என்றார்.
ஒரு ஞானி
எப்போதும்
ஒரு குழந்தையைப்போல
ஆனந்த நிலையில்
வாழ்கிறார்.
ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே சொன்னார், "உண்மையில் நீதான் பிச்சைக்காரன், நீதான் என்னிடம் மரியாதையைப் பிச்சையாகக் கேட்கிறாய். யாராவது உனக்கு மரியாதை கொடுத்தால் மட்டும்தான், நீ மதிக்கப்படுவதாக உணர்கிறாய். ஆனால் நானோ, எனக்கு யாராவது மரியாதை கொடுத்தால் மட்டும்தான் நான் மதிக்கப்படுவதாகவும் மரியாதை கொடுக்கவில்லை என்றால், நான் அவமதிக்கப்படுவதாகவும் நினைப்பதில்லை.
மற்றவர்களின் மரியாதையோ, அவமரியாதையோ அது என் உணர்வு நிலையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை. நீ ஏன் எனக்கு மரியாதை செய்யவில்லை என்று உன்னை நான் கேட்கவில்லை. நான் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. எந்தக் கணம் நீ கேட்டாயோ, அப்போதே நீ பிச்சைக்காரன் ஆகிவிட்டாய்," என்றார்.

அவர் தொடர்ந்து சொன்னார்,
"உன்னுடைய தனித் தன்மை
அல்லது அஹங்காரமானது,
உன்னுடைய படைகளும்,
அமைச்சர்களும் உன்னை
விட்டுப் போய்விட்டால்
ஆட்டம் கண்டுவிடும்.
அரசனே, உன்னுடைய
'இருப்பு' மற்றவர்களை நம்பி
இருக்கிறது."

அவர் நிலைக்கு நம்மை உயர்த்துவதற்காகவே நம் நிலைக்கு இறங்கி வருகிறார்
ஒரு அருமையான வாசகம்:
புத்தர் கையேந்தி, பிக்ஷை எடுக்கும் போதுகூட, அவர் ஒரு அரசரைப்போல இருப்பார். ஆனால் பிக்ஷை போடும் அரசர்களோ பிச்சைக்காரர்கள்போல இருப்பார்கள். வெளி உலகச் சொத்துகள் நம்மை அரசராக ஆக்குவதில்லை. நம்முள் இருந்து பரவுகிற உள் உலக ஆனந்தம்தான் நம்மை அரசன் ஆக்குகிறது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அதனால்தான் தலைவர்கள் எப்போதும் பிரச்சினைகளுடன் இருக்கிறார்கள். தலைவர்கள் நம்மை வழிநடத்துவதாக ஒருபோதும் நினைக்காதீர்கள். நாம்தான் தலைவர்களை வழிநடத்துகிறோம்.
நேர்மையான ஸத்யம் என்னவென்றால், நாம் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்கிறவரைதான், அவர்கள் நம்முடைய தலைவர்கள். நாம் அவர்களுடைய கருத்துகளை மதிக்கிறவரைதான் அவர்களும் நம்முடைய ஆலோசனைகளை அக்கறையோடு கேட்பார்கள். அதுவரைதான் நம்முடைய கருத்துகளையும் அவர்கள் பொருட்படுத்துவார்கள்.
தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் சொன்னார், "அரசனாக உன்னை மக்கள் ஏற்றுக்கொள்கிறவரைதான் நீ அரசனாக இருக்க முடியும். அதனால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீ உன்னை மன்னராக ஏற்றுக்கொள்ளும்படி மக்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாய். ஏனென்றால் உன்னுடைய உணர்வு அவர்களைத்தான் சார்ந்திருக்கிறது. என்னுடைய விஷயத்தில் அப்படியல்ல.
> பரமஹம்ஸர்களிடமிருந்து பரமஹம்ஸ தன்மையை யாராலும் பிரிக்க முடியாது.
யார் என்னை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நான் ஆனந்தமயமானவன். நான் ஒரு பரமஹம்ஸர். என்னுடைய பரமஹம்ஸ தன்மையை என்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது. ஆனால் உன்னுடைய அரசபதவியை உன்னிடமிருந்து எடுத்துவிட முடியும். அதனால் நீ எந்த நேரத்தில் என்னிடம் மரியாதையைக் கேட்டாயோ, அப்போதே பிச்சைக்காரனாக ஆகிவிட்டாய். நான் பிச்சைக்காரன் இல்லை,” என்றார்.
ஒரு தெளிவான ஸத்யம்: யாருடைய அஹங்காரம் அதிக மக்களால் மெருகூட்டப்படுகிறதோ, அவர் ஒரு அரசியல்வாதியாக வருகிறார். அவர்தான் அஹங்காரத்தோடு இருப்பார்.
ஆனால் ஒரு ஞானியோ, தம்முடைய பக்தர்கள் தம்மைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே தம்முடைய பெருமைகளைச் எடுத்துச் சொல்லுவார்.
இங்கே கிருஷ்ணர், அஹங்காரத்தினால்
தம்முடைய பெருமைகளைப் பேச
வில்லை. அர்ஜூனன் ஏற்றுக்கொண்டாலும்
ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், கிருஷ்ணர்
கிருஷ்ணர்தான்.
அர்ஜூனன், கிருஷ்ணரின் பக்தராக -
சீடராக - ஆவதற்கு முன்னாலேயே
கிருஷ்ணர் ஆனந்தமயமாகத்தான் இருந்தார்.
அர்ஜூனன் சீடராக ஆன பிறகும் கிருஷ்ணர்
ஆனந்தமயமாகத்தான் இருந்தார்.
அர்ஜூனன் தம்முடைய சீடராக இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதைப் பார்க்காமல், கிருஷ்ணர் எப்போதும் அதே ஆனந்தமயமான விழிப்பு உணர்விலேயேதான் இருக்கிறார்.
ஒரு முக்கியமான விஷயம்: அடுத்த அத்தியாயத்தில், அர்ஜூனன் சொல்கிறார், “ஓ கிருஷ்ணா! என்னை மன்னித்து விடுங்கள், நான் உங்களுடைய ஜாதியின் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன். ஹே க்ருஷ்ணா! ஹே யாதவ! ஹே ஸகே! என்றெல்லாம் அழைத்திருக்கிறேன். நான் உங்களுடைய பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன். அதோடு உங்களுடைய ஜாதியின் பெயரைச் சொல்லியும் அழைத்திருக்கிறேன்.
இந்தியாவில், நீங்கள் யாருக்காவது ரொம்பவும் நெருக்கமான நண்பராக இருந்தால் மட்டும்தான் அவருடைய ஜாதிப் பெயரைச் சொல்லி அழைக்கலாம்.
அர்ஜுனன் சொல்கிறார், "நான் உங்களுடைய ஜாதிப் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன். (யாதவ என்பது கிருஷ்ணர் பிறந்த குலம்.) நான் உங்களை யாதவா என்றும், கிருஷ்ணா என்றும், என்னுடைய நண்பனே என்றும் அழைத்திருக்கிறேன்.
நான் இந்தப் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடும்போது, நான் உங்களை என்னுடைய நண்பனாக நினைத்துக் கொண்டிருந்தேன். என்னைப்போலவே உங்களையும் சாதாரண மனிதனாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது புரிந்துகொண்டேன்.
நீங்கள், கடவுள்களுக்கு எல்லாம் மேலான கடவுள். நீங்களே மஹாதேவன் (மேலான கடவுள்). என்னை தயவுசெய்து மன்னித்து விடுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், என்னை நீங்கள் மன்னித்தே ஆக வேண்டும். என்னை உங்களுடைய சீடனாக ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
என் அறியாமையை மன்னித்து விடுங்கள்.
நான் உங்கள் சிறப்பை அறியாமல் இருந்து
விட்டேன், தயவு செய்து மன்னித்து
விடுங்கள்," என்கிறார்.
இந்த வாக்கியங்களைக் கேட்டதும், கிருஷ்ணருக்கு அஹங்காரம் வளர்ந்துவிடவில்லை. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர் அமைதியாகவே இருந்தார். அவர் ஆரம்பம் முதல் இறுதிவரை எப்போதுமே தம் பெருமைக்குரிய சிறப்புகளுடன்தான் இருந்தார்.
ஆனாலும் கூட, அர்ஜுனனைத் தம்முடைய பெயரையும் குலப்பெயரையும் சொல்லி அழைக்க அனுமதித்து இருந்தார்.
"நான் யாரென்று உனக்குத் தெரியுமா? நீ எப்படி என் பெயரைச் சொல்லி அழைக்கலாம்?" என்றெல்லாம் அவர் ஒருபோதும் சொன்னதே இல்லை. அவர் ஓர் அடையாள அட்டையோடு அலைந்து கொண்டிருக்கவும் இல்லை!
அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு அலைவது ஒரு மிகப்பெரிய பிரச்சினை. மனிதர்கள் எப்படி எல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்று
பாருங்கள். மனிதர்கள் எங்கே சென்றாலும்,
“நான் யார் தெரியுமா?” என்றுதான் முதலில்
கேட்கிறார்கள். நாம் எப்போதுமே அடையாள
அட்டைகளை வைத்திருக்கிறோம்.
யாரையெல்லாம் நாம் சந்திக்கிறோமோ,
அவர்களிடம் எல்லாம் இதைக் கொடுத்து
விடுகிறோம்.
அது மட்டுமல்லாமல், இன்னொரு விஷயத்தையும் இங்கே புரிந்துகொள்ளுங்கள்: உங்கள் அடையாள அட்டை ஏதோ ஒரு சின்ன பர்ஸுக்குள் வைக்கும் அளவிற்கு சிறியதுதான் என்று நினைக்காதீர்கள். அது பெரிய விளம்பரப் பலகை அளவுக்கு இருக்கிறது! ஆனால் வெளியே செல்லும் போது அதை உங்களால் தூக்கிக்கொண்டு போக முடியாது என்பதால் தான், அதனுடைய சிறிய பதிப்பை வைத்து இருக்கிறீர்கள்.
அந்த அட்டையைக் கொடுத்த பிறகும்கூட, “நான் அதுவாக இருக்கிறேன், நான் இதுவாக இருக்கிறேன்,” என்றும் சொல்லிக்கொண்டிருப்பீர்கள். கிருஷ்ணர் அந்தமாதிரி அடையாள அட்டை எல்லாம் வைத்திருக்கவில்லை; அவர் அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை.
உங்கள்
அடையாள அட்டைகள்,
ஒரு சின்ன பர்ஸுக்குள்
வைக்கும் அளவிற்கு
சிறியவை அல்ல;
அவை விளம்பரப் பலகை
அளவுக்கு பெரிதாக
இருக்கின்றன!
குரு உங்களிடம் கவனிப்பது
சமுதாய வளர்ச்சியை அல்ல...
ஒரு சின்ன ஜென் கதை:
ஜப்பானில், ஒரு மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் ஒரு பிரபல ஜென் ஞானியைப் பார்க்கப் போயிருந்தார். ஆளுநர் வழக்கம்போல, தம்முடைய அடையாள அட்டையை உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினார்.
ஞானி அடையாள அட்டையைப் படித்தார், “சுஜூகி, கோப் மாகாண ஆளுநர்.”
உடனே ஞானி, ஆளுநர் காதில் விழும் அளவிற்குச் சத்தமாகச் சொன்னார், “எனக்கு ஆளுநரைச் சந்திக்க நேரம் இல்லை என்று அந்த முட்டாளிடம் போய்ச் சொல்லுங்கள்.”
சீடர் அந்த அட்டையை ஆளுநரிடம் திரும்ப
எடுத்து வந்தார். அந்த ஆளுநர் மிகவும்
புத்திசாலி.
அவர் 'ஆளுநர்' என்ற வார்த்தையை அடித்து
விட்டுத் திரும்பவும் அந்த அடையாள
அட்டையைக் கொடுத்தனுப்பினார்.
மேலும் சுஜூகி ஞானியைப் பார்த்து
ஆலோசனை பெற விரும்புவதாகவும்
சொல்லச் சொன்னார்.
ஒரு ஞானிக்கு
உங்களுடைய
அடையாள
அட்டையிலிருந்து
தெரிந்துகொள்ள
வேண்டியது
ஒன்றுமே இல்லை.
பிறகு, ஜென் ஞானி சந்தோஷமாக அவரை வரவேற்றார்!
ஒரு ஞானிக்கு உங்களுடைய அடையாள அட்டையிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுமே இல்லை. நீங்கள் யார் என்பதைப்பற்றியோ அல்லது உங்கள் அந்தஸ்தைப் பற்றியோ அவர் கவலைப்படுவதே இல்லை. அவர், உங்கள் இருப்புத் தன்மையின் நிலையை மட்டுமே கவனிக்கிறார்.
அர்ஜுனன் கிருஷ்ணரிடம் நட்பு ரீதியாகப் பேசும்போதுகூட, அவர் பணிவாகவே இருந்தார். அவரும் அர்ஜுனனைப்போலவே அர்ஜுனனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
திடீரென இப்போது அர்ஜுனன் சொல்கிறார், “கிருஷ்ணா! நீங்கள் இப்படிப்பட்ட சிறப்புடையவர் என்று எனக்குத் தெரியாது. நீங்களே கடவுளாகவும் இருக்கிறீர்கள். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.”
இதனால் கிருஷ்ணருக்கு அஹங்காரம் ஏற்பட்டுவிடவில்லை! அவர், “கவலைப்படாதே, அதைப்பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்,” என்றுதான் சொல்கிறார். கிருஷ்ணர் எளிமையாகவும் அஹங்காரம் இல்லாமலும்தான் இருக்கிறார்.
அர்ஜுனனுடைய அனுபவத்திற்கு முன்பும், அனுபவத்தின் போதும், அனுபவம் ஏற்பட்ட பிறகும்கூட கிருஷ்ணர் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்.
Mிகப்பெரிய மாற்றம் அர்ஜுனனுக்குத்தான் நடந்தது. கீதையைச் சொல்வதற்கு முன்னாலும் சரி, சொல்லும்போதும் சரி, சொன்ன பிறகும் சரி, கிருஷ்ணர் ஒரே மாதிரிதான் இருக்கிறார். ஆனால் கீதையைக் கேட்பதற்கு முன் அர்ஜுனனின் நிலை வேறு. கீதையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அர்ஜுனனுள் உருமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கீதையைக் கேட்டு முடித்த பிறகு, அர்ஜுனன் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதராக மாறியிருந்தார்.
இங்கே கிருஷ்ணர், அஹங்காரத்தினால் அவருடைய பெருமைகளைச் சொல்லவில்லை, அர்ஜுனனுக்கு ஒரு புரிதலைக் கொடுப்பதற்காகவே அதைச் சொல்கிறார். அப்படியானால் மட்டுமே அர்ஜுனனால் கிருஷ்ணரை உணர்ந்துகொள்ள முடியும். எப்போதெல்லாம் கிருஷ்ணர் “நான்,” என்று சொல்கிறாரோ, அப்போதெல்லாம் அவர் அவருடைய பிரபஞ்ச விழிப்புணர்வை, அஹங்காரமில்லாத இருப்பை, முக்தியடைந்த சக்தியைத்தான் சொல்கிறார்.
ஞானியிடமிருந்து வெளிப்படுபவையெல்லாம் ஜீவன் முக்தியை அருளிடும் சக்தி பெற்றவை
மீண்டும் மீண்டும், அவர் ஜீவன்முக்தியின் பேராற்றலை, ஆத்ம ஞானத்தின் சிறப்பை மட்டுமே வெளிப்படுத்துகிறார். அதனால்தான் அவரால் மிகத் தீர்மானமாகவும் தெளிவாகவும் இருக்க முடிகிறது. அந்தத் தெளிவோடுதான் அவர், “நானே அனைத்துமாக இருக்கிறேன்,” என்று சொல்கிறார். மிகவும் மனவுறுதி இருந்தால் மட்டும்தான், இந்த வார்த்தைகளைச் சொல்ல முடியும்.
சாதாரண மனிதர்களால், “நானே கடவுள்,” என்று யாரிடமும் சொல்ல முடியாது. அப்படி அவர் சொன்னால் போதும், அடுத்த நாளே அவருக்குப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஓர் சிறப்பான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்!
இங்கே இதைத் தைரியமாகச் சொல்லும்
அளவுக்குக் கிருஷ்ணருக்கு மனவுறுதி
இருக்கிறது, அந்த வார்த்தைகளைக்
கேட்டவராலும் அதை உணர முடிந்தது.
பல நூறு ஞான குருமார்கள், இந்த ஸத்யத்தை
மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லி
இருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள்
சொல்வதைக் கவனித்துக் கேட்கும்
போதே, கேட்பவர்கள் அர்ஜுனனையும்
> சாதாரண
> மனிதர்களால்,
> “நானே கடவுள்,”
> என்று யாரிடமும்
> சொல்ல முடியாது.
விவேகானந்தரையும்போல ஜீவன்முக்தர்களாக மலர்ந்து விடுகிறார்கள். சில நேரங்களில், சில சீடர்கள் அவருடைய வாக்கியங்களினால் காயப்பட்டு, குழப்பம் அடைந்து குருவையே சிலுவையில் ஏற்றி விடுகிறார்கள்.
"எந்தச் சக்தி இராமராக வந்ததோ, கிருஷ்ணராக வந்ததோ, அதுவே இந்த உடலில் இராமகிருஷ்ணராக வாழ்ந்துகொண்டிருக்கிறது," என்று இராமகிருஷ்ணர் சொன்னார்.
ஆரோக்கியமாக இருக்கும்போது அவர் இதைச் சொல்லவில்லை, தொண்டை புற்றுநோயால் கஷ்டப்பட்டு கொண்டிருந்த போதே அவரால் இப்படிச் சொல்ல முடிந்தது.
> எப்போதெல்லாம்
> கிருஷ்ணர்
> 'நான்' என்று
> சொல்கிறாரோ,
> அப்போதெல்லாம்
> அவர் தம்முடைய
> அஹங்காரமில்லாத
> இருப்பைத்தான்
> சொல்கிறார்.
"யார் இராமராக வந்தாரோ, யார் கிருஷ்ணராக
வந்தாரோ அவரே இராமகிருஷ்ணராக
இந்த உடலில் வந்திருக்கிறார்," என்று
உறுதியாகச் சொன்னார். இந்த வார்த்தைகள்
விவேகானந்தருக்குள் ஏதோ மாற்றம்
செய்தது. இதன் பிறகுதான், நரேந்திரர்
விவேகானந்தராக மாறினார்.
எது விஞ்ஞானம்? ஒரு ஞானி தம்மைக்
கடவுளாகவும் ஜீவன் முக்தராகவும் அறிவிக்க
எது காரணமாக இருக்கிறது? ஸத்யத்தை
அனுபவமாக உணர, ஒரு சீடராக இருக்க
என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?
கிருஷ்ணர் "நானே கடவுள்," என்று சொன்ன உடனேயே, அர்ஜுனன் ஞானமடைகிறார். எப்படி? இந்த அனுபவத்தை நீங்களும் உங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள உங்களுக்கு எது தேவைப்படுகிறது?
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர், இயேசு, புத்தர், மஹாவீரர் எல்லோருமே ஒரே அனுபவத்தைத்தான் அடைந்தார்கள். அவர்களுடைய ஞான அனுபவம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த ஞான அனுபவங்களை அவர்கள் வெளிப்படுத்தியபோது, ஏன் வேறு வேறு விளைவுகள் ஏற்படுகின்றன?
அவர்கள் ஞான அனுபவத்தைச் சொன்னபோது, தங்களுடைய கடவுள் தன்மையைப் பிரகடனப்படுத்தியபோது, சிலர் ஞானமடைகிறார்கள், சிலர் ஓடி விடுகிறார்கள். கிருஷ்ணருடைய வார்த்தைகளைக் கேட்கும்போது, நாமும் எப்படி ஜீவன்முக்தர்களாக மலர்வது? அவரை நாம் எப்படி உள்வாங்குவது? எப்படிப் பயனடைவது? நமக்குள் அதுபோல நடக்குமா? நாம் இந்த வார்த்தைகளை உள்வாங்குவதற்கு எப்படிப்பட்ட மன நிலையில் இருக்க வேண்டும்?
இந்த ஸத்யத்தை-விபூதியை-மேலான சிறப்புக்குரிய பெருமைகளைக் கேட்கும் மக்கள், அஹங்காரத்தோடும் தாக்கும் வெறியோடும் இருந்தால், அவர்கள் குருவையே சிலுவையில் ஏற்றி விடுவார்கள். அவர்களுக்கு அஹங்காரம் மட்டும் இருந்து, தாக்கும் வெறி இல்லையென்றால், அங்கிருந்து அவர்கள் ஓடி விடுவார்கள்.
கடவுளிடம் சரணடைந்தால் பல அற்புதங்களை நிகழ்த்திடுவார்
அடுத்ததாக, அர்ஜூனன் கிருஷ்ணருடைய சீடர், அவரை முழுமையாக நேசிப்பவர். அவர் முழுமையாகக் கிருஷ்ணரிடம் சரணாகதி அடைந்திருந்தார். அவருக்குள் சந்தேகமே கிடையாது.
இப்போது அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அவர் மூளை வேலை செய்வதை நிறுத்தி இருந்தது; அவருடைய தர்க்கம் ஆராய்வதை நிறுத்தி விட்டிருந்தது.
எவர் ஒருவர் கடவுளோடு முழுமையாக உள்ளார்ந்த உணர்வுப்பூர்வமாக இணைகிறாரோ, அவருக்கு மட்டுமே இந்த ஸத்யம் சொல்லப்பட வேண்டும்.
கடவுளோடு
முழுமையாக
உள்ளார்ந்த
உணர்வுப்பூர்வமாக
இணைபவருக்கு மட்டுமே
ஸத்யங்கள்
சொல்லப்பட வேண்டும்.
அர்ஜூனன் கிருஷ்ணரை முழுமையாகச்
சரணடைகிறார். சரணாகதி என்றால் என்ன?
நாம் சரணாகதி என்ற வார்த்தையைக் கேட்ட
உடனேயே, இது மிகவும் சாதாரணமான
விஷயந்தானே என்று நினைக்கிறோம்.
ஏனென்றால் அங்கு நாம் எதுவுமே செய்யத்
தேவையில்லை என்று நினைக்கிறோம்.
உதாரணத்திற்கு, நாம் த்யானம் செய்ய
வேண்டும் என்றால், அங்கு நாம் ஏதாவது
செய்ய வேண்டியதிருக்கிறது. ஆனால்
சரணாகதி அடைந்துவிட்டால், நாம் எதையும்
செய்ய வேண்டியதே இல்லை என்று
நினைக்கிறோம். அதனாலேயே, அதை மிகவும் சாதாரணமானதாக நினைக்கிறோம்.
குரு குறிப்பிட்ட பொருளில் சொல்லும் சரணாகதி என்ற வார்த்தையை முற்றிலும் வேறு விதமாக நாம் புரிந்துகொண்டு நாம் சரணாகதி அடைந்துவிட்டதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மையில் நாம் சரணாகதி அடைவதில்லை.
ஒரு சின்ன கதை:
ஒரு மனிதர் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் எதிர்பாராமல் அவர் மலையுச்சியில் இருந்த ஒரு பாறை மேலிருந்து தவறி விழுந்து விட்டார்.
நம்பிக்கையும்
சரணாகதியும்
முழுமையாக
இருக்க வேண்டும்.
இருந்தாலும் விழும்போது, ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக் கொண்டார்.
மரண பயத்துடன் வேரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த அவருக்கு, ஆபத்தான வேளைகளில் கடவுளை நினை த்தால், கடவுள் வந்து காப்பாற்றுவார் என்று யாரோ சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
உடனே, "ஓ கடவுளே! இதுநாள்வரை நான் உன் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். நீ உண்மையில் இருக்கிறாயா? இப்போது உன்னால் என்னைக் காப்பாற்ற முடியுமா?" என்று கத்தத் தொடங்கினார்.
கடவுளும் பதில் சொன்னார்: "மகனே! கண்டிப்பாக என்னால் காப்பாற்ற முடியும்; நீ பிடித்து இருக்கும் அந்த வேரை விட்டு விடு. நான் உன்னைக் கீழே இருந்து பிடித்துக்கொள்கிறேன்," என்றார்.
அவ்வளவுதான் அந்த மனிதர் உடனே, "என்னைக் காப்பாற்ற இங்கே வேறு யாருமே இல்லையா?" என்று கத்தத் தொடங்கினார்.
நம்முடைய நம்பிக்கையும் சரணாகதியும் வெறும் வார்த்தைகள்தான். நாம் சரணடைந்து விட்டதாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிக் கிடையாது. நம்முடைய நம்பிக்கையும் நம்முடைய சரணாகதியும் முழுமையாக இருப்பதில்லை.
சரணாகதியில் மூன்று நிலைகள் உண்டு: 'நான்' என்பதை சரணாகதி செய்வது, மனத்தை சரணாகதி செய்வது, பிறகு கடைசியில் 'நான்', மனம் இரண்டையும் சரணாகதி செய்வது.
'நான்' என்பதைச் சரணடையச் செய்வது என்பது நம்முடைய அஹங்காரத்தை சரணாகதி செய்வதைக் குறிக்கிறது. 'மன'த்தைச் சரணடையச் செய்வது என்பது நம்முடைய மன அமைப்பை அதாவது கட்டுறு மனப்பாங்கை சரணாகதி செய்வதைக் குறிக்கிறது.
இராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி:
ஒரு பக்தர் இராமகிருஷ்ணரிடம் வந்து, தாம் மதுவுக்கு அடிமையாக இருப்பதாகவும் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை என்றும் சொன்னார்.
இராமகிருஷ்ணர், எளிமையான ஆச்சரியமான ஒரு நுட்பத்தைச் செய்யச் சொன்னார். குடிக்கும் பழக்கத்தை அன்னை காளியிடம் சரணாகதி செய்யச் சொன்னார்.
அந்த மனிதருக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது. ஆனாலும் அவர் குடிக்கும் முன்பு அதைக் காளிக்கும் அர்ப்பணித்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு இராமகிருஷ்ணரிடம் திரும்பி வந்த அவர், தாம் குடிப்பழக்கத்தையே விட்டுவிட்டதாகச் சொன்னார்.
குடிக்கும் பழக்கத்தை விட்டதோடு மட்டுமல்லாமல், அவரால் அதற்குப் பிறகு எப்போதும் குடிக்கவே போவதில்லை என்றும் சொன்னார். குடிப்பழக்கம் அவரை விட்டுவிட்டது.

நீங்கள் கடவுளிடம் உண்மையான சிரத்தை யுடன் சரணடைந்துவிடும்போது, அந்த சரணாகதியே உங்களுக்குள் பல அற்புதங்களை நிகழ்த்தத் தொடங்கிவிடும். நீங்கள் தர்க்க ரீதியாக யோசித்தாலும்கூட, அன்னை காளிக்கு மதுபானத்தை உங்களால் எப்படிச் சமர்ப்பிக்க முடியும்? தேவிக்குச் சமர்ப்பிக்க முடியவில்லையென்றால், உங்களால் மட்டும் எப்படிடிக்க முடிக்க முடியும்? ஏனென்றால் அந்தத் தேவியே உங்களுக்குள் குடிகொண்டிருக்கும்போது, உங்களால் எப்படிச் குடிக்க முடியும்?
எப்போது நீங்கள் உங்களையே குருவின் பாதத்தில் அர்ப்பணிக்கிறீர்களோ, அப்போதே உங்களுடைய அஹங்காரம் உடைந்துவிடும்.
உங்களுடைய மனம் என்பது நீங்களாகவே உருவாக்கிக்கொண்ட எண்ணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களின் தொகுப்புதான்.
உதாரணமாக நீங்கள் காலையில் எழுந்தவுடன் உங்கள் மனம் உங்களுக்குக் காபி வேண்டும் என்பதை உள்ளுணர்வாகச் சொல்லிவிடும்; ஏனென்றால் இதுவரை காலையில் எழுந்தவுடன், அதுதான் உங்களுடைய வழக்கமான செயலாக இருந்து வந்திருக்கிறது.
அதே போல்தான் நீங்கள் தொடர்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருந்தீர்களானால், அதுவே உங்களுடைய பழக்கமாக மாறிவிடும். பிறகு நீங்கள் எல்லாவற்றிற்கும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள். அதைப்பற்றி உணராமலேயே !
யாராவது உங்களைப் புகழ்ந்தால், உங்களுக்குள் வீணான நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறீர்கள்; யாராவது உங்களைக் குறை சொன்னால், அது உங்களுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஒன்று, வீணான நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் அல்லது மனக் கஷ்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்

ஒவ்வொரு செயலுக்குரிய எதிர்ச்செயலையும்
நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள் என்பதை
நீங்கள் உணராமல் இருக்கிறீர்கள்.
ஏனென்றால் அந்த அளவிற்கு மிக ஆழமாக
இந்த மன அமைப்பு உங்களுக்குள்
செதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால்
எப்போது சரணடைகிறீர்களோ, அப்போது
நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது.
மீண்டும் ஒருமுறை பிறந்திடலாம்
ஒரு சின்ன கதை:
ஒரு நாள் பகவான் விஷ்ணு, வைகுண்டத்தில் அன்னை லட்சுமியோடு பேசிக் கொண்டிருந்தார்.
திடீரென, விஷ்ணு தம் இருக்கையில் இருந்து வேகமாகக் குதித்து இறங்கி சில அடிகள் ஓடினார். பிறகு சட்டென்று திரும்பி வந்து தம் இருக்கையில் அமர்ந்தார்.
லக்ஷ்மி குழப்பமடைந்து கேட்டார், "ஸ்வாமி, முதலில் சிறிது தூரம் ஓடினீர்கள், பிறகு உடனே திரும்பி வந்து விட்டீர்களே, ஏன்?"
"என்னுடைய பக்தனை ஒருவன் கல்லால் அடிக்க முயற்சி செய்தான், அவனுக்கு உதவி செய்ய ஓடினேன். ஆனால் என்னுடைய பக்தனும் அவனைத் திருப்பி அடிக்க கற்களை எடுத்துக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த உடனே, அவனே தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கிவிட்டான், இனி என் உதவி அவனுக்குத் தேவையில்லை என்று திரும்பிவிட்டேன்," என்று விஷ்ணு சொன்னார்.
> எப்போது நீங்கள் சரணடைந்து விடுகிறீர்களோ, அப்போதே நீங்கள் எதிர்ச்செயலைச் செய்யத் தீர்மானிக்க முடியாது.
எப்போது நீங்கள் சரணடைந்து விடுகிறீர்களோ, அப்போதே நீங்கள் எதிர்ச்செயலைச் செய்யத் தீர்மானிக்க முடியாது. எப்போது நீங்கள் முழுமையாகச் சரணடைகிறீர்களோ, அப்போதே அஹங்காரத்தை மையமாகக்கொண்ட 'நான்' முழுவதுமாக அழிந்துவிடும்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அஹங்காரத்தை மையமாகக்கொண்ட 'நான்' என்பது இயற்கைக்கு மாறானது.
நீங்கள் முழுமையாகச் சரணடையும்போது, உங்களுக்குள் பேரானந்தமும், மகிழ்ச்சியும் பொங்கத் தொடங்கிவிடும்.
நீங்கள் ஒரு குழந்தையைப்போல ஆகி விடுவீர்கள். எங்கேயாவது அழகற்ற குழந்தையைப் பார்த்து இருக்கிறீர்களா? மிகவும் வறுமையான நாட்டில்கூட, குழந்தைகள் அழகாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அதே போன்று, அழகான ஒரு பெரியவரையாவது பார்க்க முடிகிறதா?!
ஆனந்த ஊற்று பொங்கிக்கொண்டிருக்கும் ஞானிகள் குழந்தைகளைப்போல இருப்பார்கள். அவர்களை த்விஜ (மறுபிறப்பு எடுத்தவர்கள்) என்று சொல்வார்கள்.

வாழ்வே இனிமையாக மாறிவிடும்
அஹங்காரம் அழிந்த பிறகு எடுக்கும் புது பிறவியாக இது இருக்கிறது! தாயும் தந்தையும் நமக்கு முதல் பிறவி கொடுக்கிறார்கள். இரண்டாவது பிறவி கடவுளாலும் குருவாலும் கொடுக்கப்படுகிறது.
மூன்று விதமான மகிழ்ச்சி உண்டு: முதலாவது, புலன்களின் மூலம் கிடைப்பது; அதைத்தான் 'இன்பம்' என்று சொல்கிறோம். சுவையான உணவை சாப்பிடும்போது கிடைக்கும் இன்பம், நம் அன்புக்குரியவர்களைப் பார்க்கும்போது கிடைக்கும் இன்பம், இது போன்ற புலனின்பங்களை முதல் விதமான மகிழ்ச்சி என்று சொல்லலாம்.
இரண்டாவது வகை, இயற்கையின் மூலம் அனுபவிப்பது. கம்பீரமான மலை, அழகான அமைதியான சூரியோதயம், வேகமாகப் பாய்ந்து வரும் நதி ஆகியவற்றைப் பார்க்கும்போது நமக்குள் இந்த வகையான மகிழ்ச்சியை உணரலாம். இயற்கை அழகைக் கண்டு உணரும் இந்தத் தருணங்களில், உங்கள் மனம் வேலை செய்வதை நிறுத்திவிடும்.
'நான்' என்பதைச் சரணடையச் செய்வது என்பது நம்முடைய அஹங்காரத்தை சரணாகதி செய்வதைக் குறிக்கிறது.
அந்த அழகான சூரியோதயத்தைக் கண்டு நீங்கள் மெய்மறந்து நின்று விடுவீர்கள். ஆனால் வெகு வேகமாக உங்கள் மனம் இயங்கி, "இது அழகான சூரியோதயம்," என்று சொல்லும்.
இந்த எண்ணம் எழுவதற்கு முன்பாக நீங்கள் அனுபவித்தது மட்டுமே தூய்மையான 'மகிழ்ச்சி'.
இந்தக் கடைசி வகையான மகிழ்ச்சி வருவதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை. அதுதான் ஆனந்தம்.
வெளிக்காரணம் எதுவும் தேவை இல்லாத,
நித்ய கொண்டாட்டமான பேரானந்தமான
இது, நம்முடைய இருப்புத் தன்மையில்
இருந்து தொடர்ந்து பொங்கிக்கொண்டே
இருக்கும்
உங்களுடைய ‘நான்’ என்ற அஹங்காரத்தை
சரணாகதி செய்யும்போது, நீங்கள் இந்த
ஆனந்தத்தை உணரலாம். பிறகு உங்கள்
மனம், இயல்பான தன்னிச்சையான
புத்திசாலித்தனத்தைப் பெற்றுவிடும்.
ஆனால் இப்போதோ, நீங்கள் எதிர்காலத்
தேவைகளுக்கு மட்டுமே தொடர்ந்து
ஆயத்தமாகிக்கொண்டே இருக்கிறீர்கள்.
'நான்' என்ற
அஹங்காரத்தை
சரணாகதி செய்யும்போது,
நீங்கள் ஆனந்தத்தை
உணரலாம்.
நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்க வேண்டும் என்றால்கூட, அவரிடம் எதைப்பற்றிப் பேசுவது, அவரைச் சந்திக்கும்போது நாம் செய்ய வேண்டியது என்ன என்பது போன்ற விஷயங்களை முதலிலேயே உங்கள் மனத்தளவில் தயார் செய்துகொண்ட பிறகுதான் அவரைச் சந்திக்கவே செல்கிறீர்கள்.
ஏனென்றால் உங்களுக்குச் சூழ்நிலைகளை எதிர்நோக்கும் சக்தி இல்லை. அதனால் முதலிலேயே கதை-வசனம் தயார் செய்துகொண்டு அங்கே சென்று, அதையே நடித்து விடுகிறீர்கள்.
நீங்கள் எழுதி வைத்திருந்தபடி சில விஷயங்கள் நடக்கவில்லையென்றால், அந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திணறி விடுகிறீர்கள்.
இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களுடைய நண்பர் என்பதையும், அதுவே உங்களை ஆழமாகக் கவனித்துக் கொள்ளும் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், நீங்கள் எழுதி வைத்துக்கொண்டுதான் வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டீர்கள்.
அதற்குப் பதிலாக, வாழ்க்கையை தன்னிச்சையாக, சூழ்நிலைக்கேற்ப இயற்கையாகவாழ்வதற்கான அளப்பரிய துணிச்சலையும் நம்பிக்கையையும் உங்களுக்குள் பெறுவீர்கள்.
இனியும், நடிப்பதற்கு அவசியமில்லை
பழைய நினைவுகளையும் அனுபவங்களையும் ஆதாரமாகக்கொண்டு மீண்டும் அதே வாழ்க்கையை வாழ்வதற்குப் பதிலாக, அதே போன்ற எதிர்ச்செயல்களைப் புரிவதற்குப் பதிலாக, சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி, தானே தன்னிச்சையாக இயங்கும் வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள். நீங்கள் எளிமையாக வாழும்போது, கதை-வசனம் எதுவும் தேவைப்படாது.
நீங்கள் உண்மையை ஆதாரமாக வைத்து வாழும்போது, பொய்களை ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நண்பரிடம் சென்ற முறை சொன்ன பொய்யைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டுமே என்ற அவசியம் எதுவும் ஏற்படாது.
ஒவ்வொரு கணமும் நாம் எப்படி இல்லையோ அப்படி வெளிக்காட்ட த்தான் முயற்சி செய்கிறோம். நாம் எதுவாக இல்லையோ அதுவாகக் காட்டத்தான் முயற்சி செய்கிறோம்.
ஒருமுறை நாம் இந்தப் பொய் உருவத்தை வெளிப்படுத்தி விட்டால், வெளிப்படுத்திய அந்தப் பொய் உருவத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு கதை-வசனம் தயார் செய்ய வேண்டி இருக்கிறது.
நாம் ஏற்கெனவே கதை-வசனம் தயார் செய்து வைத்துக்கொண்டு, அந்த ஒரே நாடகத்தை மீண்டும் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தவறைச் செய்துகொண்டிருக்கிறோம். அந்தத் தவறான நாடகத்தை, ஒரு சிறு தவறுகூட இல்லாமல் நடிக்க வேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம்!
உங்களுக்குள் இருக்கும்
புத்திசாலித்தனத்தை
நம்புங்கள்.
வாழ்க்கையை
அதன் போக்கில் வரவேற்று
ஏற்றுக்கொள்ளுங்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை எப்போதுமே உங்களைக் கவனித்துக்கொள்கிறது. உங்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனத்தை நம்புங்கள். வாழ்க்கையை அதன் போக்கில் வரவேற்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
கிருஷ்ணர் சொல்கிறார், “நீ - எப்போதும்
என்னstates
என்னுடைய
அத்தியாவசியத் தேவைகள் எல்லாவற்றையும்
நான் கவனித்துக்கொள்கிறேன். உன்னைக்
காப்பாற்றுவது என்னுடைய பொறுப்பாகி
விடுகிறது,” என்று சொல்கிறார்.
சாத்தியமாக்குகிற சக்தியை உங்களால் விழிப்படையச் செய்யமுடியும்

கடைசி அத்தியாயத்தில், யோக க்ஷேமம் வஹாம் யஹம்: என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளிக்கிறார். யோக, என்றால் உனக்குத் தேவையானவற்றைக் கொடுப்பது என் பொறுப்பு; க்ஷேமம்என்றால், நான் கொடுத்தவை உன்னிடமே தொடர்ந்து இருக்கவும் நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்; வஹாம் யஹம்: என்றால் இந்த உறுதிமொழியை அளிக்கிறேன் என்று பொருள்.
கிருஷ்ணர் சொல்கிறார்: "உன்னுடைய ஆன்மீகம் சார்ந்த, உலகியல் சார்ந்த அனைத்து தேவைகளையும் நான் கவனித்துக்கொள்கிறேன். நீ எந்தக் குறையும் இல்லாமல் நீ எப்போதும் பேரானந்தத்தில் இருக்கலாம்."
இது எப்படி நடக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
எப்போது நீங்கள் கடவுளிடம்
சரணடைகிறீர்களோ, அப்போதே
உங்கள் உயர் விழிப்புணர்வு செயல்பட
ஆரம்பித்துவிடும்.
எங்கும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும்
வாழ்வதற்கான புத்திசாலித்தனத்தையும்
தைரியத்தையும் பெறுவீர்கள்.
விவேகானந்தர் தம்முடைய பதஞ்ஜலி யோக ஸூத்ரவிளக்கத்தில் சொல்கிறார், கடவுளிடம் பிரார்த்தனை செய்வதால் ஒரேயொரு விஷயம்தான் நடக்கிறது: பிரார்த்தனை, எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிற நம்முடைய ‘உள் உலக சக்தி’யை விழிப்படையச் செய்கிறது. அது மட்டுமே நடக்கிறது.
நீங்கள் ஆழமாகப் பிரார்த்தனை செய்யும்போது, உங்கள் பிரார்த்தனைகளை எங்கோ இருந்து யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஆசீர்வதிப்பதாகவும் நினைப்பதை விட்டு விடுங்கள்.
உங்கள் பிரார்த்தனையினால், எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிற உங்கள் ‘உள் உலக சக்தி’ விழிப்படைகிறது. அதுவே கடவுள் என்ற வடிவத்தில், நீங்கள் எந்த வடிவத்தில் வணங்குகிறீர்களோ அந்த வடிவத்தில் உங்கள் மேல் ஆசீர்வாதங்களைப் பொழிகிறது.
முழுமையடைந்த புத்திசாலித்தனம் என்பது, பிரபஞ்ச இருப்புத் தன்மையே நம்மைக் கவனித்துக்கொள்ளும் என்று புரிந்துகொள்வதும், அதனிடம் சரணடைவதும்தான்!
பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பது ஒரு கொடூரமான சக்தி அல்ல என்பதையும், அது ஒரு புத்திசாலித்தனமான சக்தி என்பதையும் உணர்ந்து கொள்வதுதான் முழுமையடைந்த புத்திசாலித்தனம். அதுவே ஆனந்தமான வாழ்விற்கான திறவு கோல்.
மனத்தை விட்டால், சுதந்திரம் நம்மைப் பற்றிக்கொள்ளும்
எப்போது நாம் மனத்தை சரணாகதி செய்கிறோமோ அப்போதே நாம் ‘மனம்’ என்ற நிலையில் இருந்து ‘மனம் கடந்த நிலைக்குப்’ போய் விடுகிறோம்.
உண்மையில், மனம் என்பது நம்முடைய ‘எனது’ என்னும் பற்றிலிருந்தே எழுகிறது. அஹங்காரம் என்பது நம்முடைய உடைமைகளையே ஆதாரமாகக்கொண்டிருப்பதாக தந்த்ர சாஸ்த்ரம் சொல்கிறது.
ஆழமாகப் பார்த்தோமானால், நாம் நம்மைப் பற்றி என்னவெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறோமோ, அதுதான் நம்முடைய மனத்தின் தொடக்கமாக இருக்கிறது. ‘எனது’ என்ற எண்ணமே, ‘நான்’ என்ற உணர்வை உருவாக்குகிறது.
> எப்போது நீங்கள் கடவுளிடம் சரணடைகிறீர்களோ, அப்போதே உங்கள் உயர் விழிப்புணர்வு செயல்பட ஆரம்பித்துவிடும்.
ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் ‘நான்’ என்பதிலிருந்துதான் ‘எனது’ என்பது உருவாவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். இல்லை! ‘எனது’ என்ற உணர்வில் இருந்துதான் ‘நான்’ என்ற உணர்வு உருவாகிறது. ‘நான்’ என்ற மரத்தின் வேர் ‘எனது’ என்பதுதான்.
பல பொருட்களை நமது உடைமையாக்கிக்கொண்டால், நமக்கு நிறைய சுதந்திரம் கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆம், இந்தத் துன்பத்தைத் தேர்ந்தெடுப்பதா அல்லது வேறு ஒரு துன்பத்தைத் தேர்ந்தெடுப்பதா என்கிற துன்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான மிகப்பெரிய சுதந்திரம் மட்டுமே நமக்குக் கிடைக்கும்!
உடைமைகளின் மூலமாக நம்மால் ஒருபோதும் இன்பத்தையோ துன்பத்தையோ தேர்ந்தெடுக்க முடியாது. 'எனது' என்ற உணர்வில் இருந்துகொண்டு ஒரு பொருளை எப்படி நம்மால் அனுபவிக்க முடியும்? எங்கே நாம், அந்தப் பொருளை இழந்து விடுவோமோ என்ற பயம் மட்டுமே நமக்குள் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும். இந்த 'எனது' என்ற எண்ணம், எந்த ஒரு பொருளையுமே ஆனந்தமாக அனுபவிக்க, நம்மை அனுமதிப்பதில்லை.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்:
எங்கள் கிராமத்தில் ஒரு வயதான பாட்டி இருந்தார். அவர் தினமும் காலையில் என்னை புகையிலை வாங்கி வரச்சொல்வார்.
'எனது' என்ற உணர்வில் இருந்துதான் 'நான்' என்ற உணர்வு உருவாகிறது. 'நான்' என்ற மரத்தின் வேர் 'எனது' என்பதுதான்.
நான் புகையிலை வாங்க பணம் கேட்பேன். அவர், என்னை என் தந்தையிடம் போய் வாங்கிக்கொள்ளச் சொல்வார். அவர் ஒரு ஏழை போலும் என்று நினைத்துக்கொண்டு, நானும் என் தந்தையிடம் பணம் வாங்கிக்கொண்டுபோய் அவருக்குப் புகையிலை வாங்கிக் கொடுப்பேன்.
அந்த அம்மாவின் வீட்டில் பெரிய கிணறு ஒன்று இருந்தது. அதில் எப்போதும் தண்ணீர் நிறைந்தே இருக்கும், ஆனால் அந்தத் தண்ணீரைத் தொடக்கூட யாரையும் அவர் அனுமதித்தது இல்லை. ஒருமுறை அங்கிருந்த கிராமத்து டாக்டருக்கு, ஒரு சிகிச்சைக்காக அவசரமாகக் கிணற்றுநீர் தேவைப்பட்டது. அதற்காக அந்த டாக்டர் தண்ணீர் கேட்ட போதும்கூட, அவர் தர மறுத்து விட்டார். ஆனால் அவர் மரணப் படுக்கையில் இருந்தபோது, அதே டாக்டர்தான் அவரை வந்து பார்த்தார்.
அப்போது அந்த டாக்டர், "இந்தக் கிணற்று நீரால் இப்போது உங்களுக்கு என்ன உபயோகம்? நீங்கள் இந்தத் தண்ணீரை உங்களுடன் எடுத்துக் கொண்டு போக முடியுமா?" என்று கேட்டார். அப்போதுகூட அந்த அம்மையார் டாக்டர் தண்ணீர் கேட்டும் கொடுக்காதது தமது தவறுதான் என்பதை உணரவில்லை. எப்படியோ, கொஞ்ச நாளிலேயே அவர் இறந்து போனார்.
அவர் இறந்து போன பிறகு, அந்தக் கிராமத்து மக்கள் அந்த அம்மாவின் படுக்கைக்குக் கீழே ஒரு பெரிய பெட்டி நிறைய நகைகள் இருந்ததைக் கண்டுபிடித்தார்கள்!
அந்தப் பெண்மணி, அவர் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய அளவு பணத்தையும் செல்வத்தையும் தம்முடன் வைத்து இருந்தார். இருந்தும் அவர் அதை அனுபவிக்கவே இல்லை. அவர் அந்தப் பொருட்களை வைத்திருப்பதே போதும், அதுவே தமக்குப் பாதுகாப்பு என்று
நாம் சரணடைந்தால் போதும், நம்முடைய முழு நேரமும் சக்தியும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளில் திரும்பிவிடும்.
நினைத்துவிட்டார். அதை வெறுமனே தம்முடன் வைத்திருந்ததனாலேயே பாதுகாப்பாகவும் மனநிறைவாகவும் உணர்ந்திருக்கிறார்.
மனிதர்கள், வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டப்பட்டு செல்வத்தைச் சேர்க்கிறார்கள். ஆனால் கடைசியில் அதை அனுபவிக்கும் திறனை இழந்து விடுகிறார்கள்.
இப்போதிருக்கிற சூழ்நிலையில், நமது தொண்ணூாற்று ஒன்பது சதவிகித நேரமும், சக்தியும் கவலைப்படுவதிலேயே கழிந்து விடுகிறது. நாம் சரணடைந்தால் போதும், நம்முடைய முழு நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளில் திரும்பிவிடும்.
அதற்குப்பிறகு நமக்குக் கவலையும் துன்பமும் இருக்காது; நமக்கு வலி என்பதே இருக்காது; நாம் வாழ்க்கையில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.

பிரபஞ்சமே நம்மைத் தோளில் சுமக்கிறது

ஒரு தத்துவ அறிஞரால் எழுதப்பட்ட கடவுளை அறிவது எப்படி? (How to know god) என்ற ஓர் அருமையான புத்தகம் இருக்கிறது. அந்த எழுத்தாளர் ஆழமாகக் கவனித்துப் பார்த்தது என்னவென்றால், இதுநாள்வரை, எந்த ஒரு நீதிமன்றமும் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவில்லை. ஆனாலும் இந்த உலகத்தில் உள்ள தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்கள் கடவுளை நம்புகிறார்கள்.
இதன் விளைவு: கவலைப்படுவதினால் விரயமாகும் நமது சக்தியும் ஆற்றலும் படைப்புத்திறனை நோக்கி முழுமையாகத் திருப்பி விடப்பட்டு விடுவதால் படைப்பாற்றல் வளருகிறது. வாழ்க்கையும் ஆனந்தமாக மாறுகிறது.
ஜெ.கிருஷ்ணமூர்த்தி அழகாகச் சொல்கிறார், “உங்களுடைய தொண்ணூற்று ஒன்பது சதவிகிதக் கவலைகள், ஒரு நாளும் உண்மையாக மாறப்போவதே இல்லை. மீதமிருக்கும் அந்த ஒரு சதவிகிதக் கவலையும் உங்களுக்கு நன்மையாகத்தான் முடியும்!”
இராமகிருஷ்ணர் ஓர் அழகான கதையைச் சொல்கிறார்.
ஒருவருக்கு ஒரு நாள் இரவு ஒரு கனவு வந்தது. அதில் அவர் கடவுளோடு கடற்கரையில் நடந்துபோய்க் கொண்டிருக்கிறார்.
அப்போது திடீரென்று அவர் வாழ்க்கையில் நடந்த சில காட்சிகள் வானத்தில் தெரிகின்றன.
ஒவ்வொரு காட்சியிலும் அவர் இரண்டு ஜோடி காலடித் தடங்களைப் பார்க்கிறார். ஒன்று அவருடையது. இன்னொன்று கடவுளுடையது.
அவர் கவனித்துப் பார்த்தபோது, சில காட்சிகளில் ஒரே ஒரு காலடித் தடம் மட்டும்தான் தெரிந்தது. அது அவருடைய துக்கமான நேரங்கள் என்பதையும் தெரிந்து கொண்டார்.

அவர் உண்மையாகவே மனக் கஷ்டத்தோடு, “கடவுளே, நான் எப்போது உங்களைப் பின்பற்ற ஆரம்பித்தேனோ அப்போதிருந்து என் கூடவே இருப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் என் வாழ்க்கையின் மிகவும் கஷ்டமான காலங்களில் எல்லாம் ஒரே ஒரு காலடித் தடத்தைத்தான் பார்க்கிறேன்.
எனக்கு மிகவும் அவசியமான நேரங்களில் என்னை விட்டு ஏன் பிரிந்தீர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்று கேட்டார்.
கடவுள் சொன்னார், “மகனே, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். உன்னை விட்டு நான் ஒருபோதும் பிரிந்ததில்லை. உன் கஷ்டமான நேரங்களில் எல்லாம் நீ ஒரே ஒரு காலடியைத்தான் பார்த்தாய், ஏனென்றால் அப்போது நான் உன்னைச் சுமந்துகொண்டிருந்தேன்.”
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எப்போது நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் சரண்ாகதி அடைகிறோமோ, அப்போதே அது நம்மைத் தன் தோளில் சுமக்கத் தொடங்கி விடுகிறது. நாம் இந்த வாழ்க்கையின் துன்பங்களை உணர மாட்டோம்.
சரணாகதி நிகழ்ந்ததின் அடையாளம்
நான் சரணடைந்து விட்டேன் என்று சொல்லிய பிறகு, நடக்கிற விஷயங்களைப் பற்றிக் கணக்கீடு செய்து கொண்டிருந்தோமானால், சரணடைந்த பிறகு என்ன நடக்கும் என்கிற கருத்திலேயேதான் நம்முடைய மொத்த மனத்தையும் செலுத்திக் கொண்டிருப்போம். “நான் சரணடைந்து விட்டேன் என்று,” நாம் சொல்கிறபட்சத்தில், “நான் சரணடைந்த பிறகும் எனக்கு எதுவும் நடக்கவில்லை,” என்று எப்படி நம்மால் சொல்ல முடியும்?
> எப்போது நாம்
> பிரபஞ்ச
> இருப்புத் தன்மையிடம்
> சரண்ாகதி அடைகிறோமோ,
> அப்போதே அது
> நம்மைத் தன் தோளில்
> சுமக்கத்
> தொடங்கி விடுகிறது.
நாம் நிஜமாகவே சரணடைந்து
விட்டோமானால், அதற்குப் பிறகு ‘எதுவும்
நடக்கவில்லை’ என்று சொல்லும் உரிமையே
நமக்கு இல்லை.
ஒரு சீடர் கேட்டார், “குருவே! நான்
உண்மையாகவே சரணடைந்துவிட்டேனா
என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?”
குரு சொன்னார், “நீ உண்மையில் சரணடைந்து
இருந்தால், இந்தக் கேள்விகூட காணாமல்
போயிருக்கும். அங்கு முழுமையான
பேரானந்தமும் தளர்வான மன நிலையும்
மட்டுமே இருக்கும்.''
எல்லாவற்றையுமே சர ணாகதி செய்து
விடுங்கள். உங்களுடைய வலி,
வேதனைகளை மட்டும் அல்ல, உங்களுடைய
பொறுப்புகளைக்கூடத்தான்!
இதற்கு உங்கள் வீட்டு வேலைகளையோ, அலுவலக வேலைகளையோ நிறுத்திவிட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. நீங்கள் செய்வதை செய்து கொண்டே இருங்கள். ஆனால் முழுவதும் தளர்வான மன நிலையுடன் செய்யுங்கள்.
சர ணாகதி அடைவது என்பது நீங்கள் தெளிவாக, முழு விழிப்புணர்வுடன் எடுக்கிற ஒரு முடிவு.
நம்முடைய வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் நாம் கடவுளுடன் இப்போது கொண்டிருக்கும் இந்தத் தொடர்பு நிலை, உண்மையான சர ணாகதியை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை நம்மால் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.
பெரும்பாலான நேரங்களில் நாம், நமக்குத் தேவையானவற்றை எல்லாம் கொடுக்கும்படி கடவுளிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருப்போம்.
அதற்கடுத்த நிலை: "நீ எனக்கு இதைக் கொடுத்தால் நான் உனக்கு அதைத் தருவேன்,'' என்று பேரம் பேசி கொண்டிருப்பது.
மூன்றாவது நிலை, கடவுளைக் குறை கூறிக் கொண்டிருப்பது: "நான் இந்தக் கோவிலுக்கு எத்தனையோ முறை போய் வந்தேனே! ஆனாலும் கடவுள் என்னைக் கவனிக்கவே இல்லை,'' என்று முணுமுணுத்துக் கொண்டிருப்போம்.
பெரும்பாலான நேரங்களில், நமக்கு என்ன தேவை என்பதைத் தெரிந்துகொள்வதற்குத் தேவையான புத்திசாலித்தனம்கூட நம்மிடம் இருப்பதில்லை. ஒருவேளை கடவுள் நம்முடைய வேண்டுதல்களையும் விருப்பங்களையும் கேட்டு செய்திருந்தார் என்றால், உலகம் எப்போதோ அழிந்து போய் இருக்கும்! பிரார்த்தனை என்ற பெயரால் நடக்கும் இந்தக் கெஞ்சுதல், பேரம் பேசுதல், குற்றம் சொல்லுதல் போன்ற விளையாட்டுகளுக்கும், உண்மையான பக்திக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
நமக்கு என்ன தேவை என்பதை அவர் மட்டுமே அறிவார்
மகாபாரதத்திலிருந்து ஓர் அழகான கதை:
போர் தொடங்குவதற்கு முன்பு, துரியோதனனும் அர்ஜுனனும் கிருஷ்ணருடைய உதவியைக் கேட்டு அவருடைய அரண்மனைக்குப் போனார்கள். இருவருமே கிருஷ்ணருக்கு உறவினர்கள்தான். இருவருமே கிருஷ்ணருடைய உதவியைக் கேட்கச் சென்றிருந்தார்கள்.
கிருஷ்ணர் உறங்கிக்கொண்டிருந்தார். முதலில் சென்ற கௌரவர்களின் பிரதிநிதியான துரியோதனன், கிருஷ்ணரின் தலைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்துச்சென்ற பாண்டவர்களின் பிரதிநிதியான அர்ஜுனன், கிருஷ்ணரின் காலடியில் உட்கார்ந்துகொண்டார்.
கிருஷ்ணர் கண்விழித்தபோது, அர்ஜுனன் காலடியில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். அவர் அர்ஜுனனைப் பார்த்து, "எப்படி இருக்கிறாய் அர்ஜுனா? எப்போது வந்தாய்?" என்று கேட்டார்.
அர்ஜுனன், "உங்களுடைய உதவிக்காகத்தான் வந்திருக்கிறேன்," என்றார். கிருஷ்ணர், "கண்டிப்பாக உனக்கு உதவுகிறேன், கவலைப்படாதே," என்றார்.
பெரும்பாலான
நேரங்களில்,
நமக்கு என்ன
தேவை என்பதைத்
தெரிந்துகொள்வதற்குத்
தேவையான
புத்திசாலித்தனம்கூட
நம்மிடம் இருப்பதில்லை.
உடனே, அதுவரை தலை அருகில்
அமைதியாக அமர்ந்திருந்த துரியோதனன்
கிருஷ்ணரிடம், "நான்தான் முதலில் வந்தேன்.
எனக்குத்தான் நீங்கள் முதலில் உதவி செய்ய
வேண்டும்," என்றார்.
கிருஷ்ணர் துரியோதனனைத் திரும்பிப்
பார்த்து, "கண்டிப்பாக உதவி செய்கிறேன்,
கவலைப்படாதே," என்றார்.
அவர் சொன்னார், "ஆயுதம் எதுவும் ஏந்தாமல்
நான் மட்டும் ஒருபக்கம் இருப்பேன்,
என்னுடைய படைகள் முழுவதும் இன்னொரு
பக்கம் இருக்கும். உனக்கு இந்த இரண்டில்
எது வேண்டும்?” என்று துரியோதனனிடம்
கேட்டார்.
கிருஷ்ணருடைய சக்தியை
எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்த
துரியோதனன், “எனக்கு உங்கள் படைகளும்,
ஆயுதங்களும் போதும்,” என்றார்.
> சுய
> வளர்ச்சிக்காக
> செய்யப்படும்
> எல்லா சமயச்
> சடங்குகளும்
> இலஞ்சம்தான்
புத்தியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்த அர்ஜூனன், கிருஷ்ணர் மட்டும் தங்களோடு இருந்தால் போதும் என்று சந்தோஷமாக நினைத்தார். கடைசியில் பாண்டவர்கள்தான் போரில் ஜெயித்தார்கள்.
எவர் புத்திசாலித்தனத்தைத் தேர்ந்தெடுத்தாரோ, எவர் கடவுள் மீது நம்பிக்கை வைத்தாரோ, அவரோடு புத்தி இருந்தது, அவரால்தான் யுத்தத்தில் வெற்றி பெற முடிந்தது. அவர்தான் அந்த விளையாட்டில் வெற்றிபெற்றார்.
நாம் கடவுளிடம் எந்த மாதிரியான உறவு வைத்திருக்கிறோம் என்று ஆழமாகக் கவனித்தோமானால், ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது, கடவுளுக்குக் கொடுக்கும் சக்தி இருக்கிறது; ஆனால் எதைக் கொடுக்க வேண்டும் என்ற புத்திசாலித்தனமோ, ஞானமோ அவருக்கு இல்லை என்று நினைக்கிறோம்.
அதனால்தான், நமக்குத் தேவையானவற்றை நாம் வற்புறுத்திக் கேட்டால் மட்டுமே, அவற்றை அவர் நமக்குக் கொடுப்பார் என்று நம்புகிறோம்.
கடவுளுக்கு வெறும் சக்தி மட்டுமே இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும்வரை, நாம் வாழ்க்கையில் வெற்றியடையப் போவதில்லை. எப்போது இறைவனுக்கு ஞானமும் உண்டு என்று நம்புகிறோமோ அப்போதுதான் நாம் சரணடைகிறோம்.
அதற்குப் பிறகுதான், நிகழ்வுகள் நிகழத் தொடங்குகின்றன. நாம் சரணடையும்போதுதான் கடவுளுக்கு சக்தியும் புத்திசாலித்தனமும் இருப்பதாக நம்புகிறோம்.
நாம், கடவுளுக்கு சக்தி மட்டும் இருக்கிறது என்று நம்புகிறபோது மதங்களை உருவாக்குகிறோம்; அவருக்கு ஞானமும் இருக்கிறது என்று நம்புகிறபோதுதான் ஆன்மீகம் தொடங்குகிறது.

பிரபஞ்சத்தையே இயக்குபவருக்கு நம்மை இயக்கத் தெரியாதா?
கடவுளுக்கு சக்தி மட்டும்தான் இருக்கிறது என்று நம்புகிறபோது நாம் மதச் சடங்குகளை செய்துகொண்டும், அவரைக் கெஞ்சிக் கொண்டும் இருப்போம்.
நாம் வேண்டியதை அடைய வேண்டுமென்பதற்காக, நாம் தொடர்ந்து நம்மால் முடிந்த எல்லா விஷயங்களையும் செய்து, அவற்றை இலஞ்சமாகக் கொடுக்கத் தொடங்குவோம். சுய வளர்ச்சிக்காகச் செய்யப்படும் எல்லாச் சமயச் சடங்குகளும் இலஞ்சம்தான்.
நாம் என்ன செய்கிறோம்? பிரார்த்தனை செய்வதற்கு முன்னால், நம்முடைய பெயரைப் பூசாரியிடம் சொல்லி கடவுளிடம் சொல்லச் சொல்கிறோம். இல்லையா?
நம்முடைய பெயர் கடவுளுக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா? கோவிலுக்குப் போய் அர்ச்சகரிடம் நம்முடைய பெயரை மட்டும் இல்லாமல், நம்முடைய தந்தையின் பெயர், நம்முடைய முன்னோர்களின் பெயர்கள் என நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்பதுவரை எல்லாவற்றையும் சொல்கிறோம். நாம் எங்கிருந்து வருகிறோம், நாம் யார் என்பதெல்லாம் கடவுளுக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம், இல்லையா? எல்லாவற்றையும் நாம் மிகவும் விளக்கமாக எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
நம்முடைய பெயர்
கடவுளுக்குத் தெரியாது
என்று நினைக்கிறீர்களா?
ஏன்?
ஏனென்றால் ஒருவேளை கடவுள்
ஆசீர்வாதங்களை அஞ்சல் வழியாக நமக்கு
அனுப்பி, அது வேறு யாருக்காவது போய்ச்
சேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று
நினைக்கிறோம். அஞ்சல் வழியாக வரும்
அந்தப் பெட்டி, நமக்காக அனுப்பப்பட்ட
வரம், வேறு யாருக்காவது போய்ச்
சேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று
பயப்படுகிறோம்.
நம்முடைய எல்லாப் பூஜைகளும், லஞ்சம்
கொடுக்கும் நுட்பங்களும் நம்முடைய
கர்வத்தைத்தான் தெளிவாக நிரூபிக்கின்றன.
அது கடவுளுக்கு, 'சக்தி இருக்கிறது;
ஆனால் புத்திசாலித்தனம் கிடையாது' என்ற
நம்முடைய நம்பிக்கையைத்தான் மீண்டும்
மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
> இந்தப் பிரபஞ்சம்
> முழுவதும்
> ஊடுருவி இருக்கும்
> சக்தியின்மேல்
> நம்பிக்கை வையுங்கள்.
> அது உங்கள்
> வாழ்க்கையையும்
> வழிநடத்தும்
> என்று நம்புங்கள்.
இந்த நிமிடமே முழு விழிப்புணர்வோடு தீர்மானித்துக் கொள்ளுங்கள், இந்த முழு உலகத்தையும் இயக்குகிற சக்தியான கடவுளின் காலடியில் எல்லாவற்றையும் சரணாகதி செய்து விடுங்கள். நாம், எந்த ஒரு உருவத்தையும், பெயரையும் நம்ப வேண்டிய தேவை இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி இருக்கும் சக்தியின் மேல் நம்பிக்கை வையுங்கள். அது உங்கள் வாழ்க்கையையும் வழிநடத்தும் என்று நம்புங்கள்.
சரணடைந்த பிறகும்கூட, சில நேரங்களில், நாம் உண்மையாக முழுமையாகச் சரணடைந்து இருக்கிறோமா என்ற சந்தேகம் இயற்கையாக நமக்குள் தோன்றும்.
புரிந்துகொள்ளுங்கள், அந்தத் தெய்வீக அறிவுதான் நமக்கு முதலில் சரணடைவதற்கான புத்திசாலித்தனத்தைக் கொடுத்தது.
இப்போது அதே தெய்வீக அறிவுதான் நம்முடைய சரணாகதியைச் சந்தேகிக்கும் சந்தேகத்தையும் கொடுத்திருக்கிறது. நம்முடைய சந்தேக த்தையும் அதே தெய்வீக சக்தியின் காலடியில் சரணாகதி செய்துவிட வேண்டும்.
நம்முடைய குறைகளை எல்லாம் சரி செய்த பின்பு, சரணாகதி செய்யலாம் என்று காத்திருக்காதீர்கள். அதற்காகக் காத்திருக்க வேண்டாம்! நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே சரணாகதி செய்யுங்கள்; முழு விழிப்புணர்வோடு, ஆழமாக முழுமையாக சரணாகதி செய்து விடுங்கள்; உங்கள் முழு விழிப்புணர்வும் ஒரு புது விதமான பேரானந்தத்தில் மிதக்கட்டும்.
இதயப்பூர்வமான உணர்வே நம் தெய்வீகத்தை உணர்த்தும்
கிருஷ்ணர் சொல்கிறார்,
பூய ஏவ மஹாபாஹோ ச்ரு'ணு மே பரமம் வச: |
யத்தே'ஹம் ப்ரீயமாணாய வஷ்யாமி ஹிதகாம்யயா || 10.1
"நீ என்னுடைய ஆத்ம நண்பன், நீ என்னிடம் ஆழமாகத் தொடர்பு கொண்டிருக்கிறாய். அதனால்தான் உன்னிடம் எல்லா ஸத்யங்களையும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.''
உங்களுக்கு சில அடிப்படை ஸத்யங்களை விளக்குகிறேன். நாம் யாரிடமாவது மிக ஆழமான தொடர்புகொண்டிருப்பதாக உணரும்போது, நாம் அவர்களைக் கடவுளைப்போலவே பார்ப்போம். அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக உணர்வோம்.
> நாம் யாரிடமாவது
> மிக ஆழமான
> தொடர்பு கொண்டிருப்பதாக
> உணர்ந்தால்,
> அவர் நமக்குக்
> கடவுளாகத் தெரிவார்.
நாம் யாரிடமாவது மிக ஆழமான தொடர்பு கொண்டிருப்பதாக உணர்ந்தால் - அது கணவராக, மனைவியாக, குழந்தையாக அல்லது நம்முடைய குருவாக - அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவர் நமக்குக் கடவுளாகத் தெரிவார். அவர் என்ன செய்தாலும் சரி, அவரைத் தெய்வீக தன்மை கொண்டவராக உணர்வோம்.
ஒருவரை ஒருவர் கடவுளாகவே உணர்ந்த தெய்வீகக் காதலர்களான அம்பிகாவதி-அமராவதி, தேவதாஸ்-பார்வதி, லைலா-மஜ்னு, ரோமியோ-ஜூலியட் இவர்களை இன்னமும் நாம் ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?
அவர்கள் ஒருவரை ஒருவர் தெய்வமாக உணர்ந்தார்கள். அவர்கள், தம்முடைய நேசத்திற்குரிய துணையைக் கிட்டத்தட்ட ஒரு தெய்வமாகவே நினைத்தார்கள். தங்களுடைய வாழ்க்கையையே அவர்களுக்காகக் கொடுத்தார்கள். ஏன்? நாம், மற்றொரு உயிரோடு அன்பு வயப்படும்போது, அவர்களுடனான தொடர்பை ஆழமாக உணரும்போது அவர்களுடன் ஆழமாக இணைந்திருப்பதாக உணரும்பொழுது, அவர்கள் நமக்குக் கிட்டத்தட்ட கடவுள்போலவே தெரிவார்கள்.
மஹா பக்தையான மீராபாயின் சிறப்பைப் பாருங்கள். கண்ணன், மீரா முன்னால் உடலோடு இல்லாத போதுகூட, அவர் கண்ணன் மேல் ஆழமான காதல்கொண்டிருந்தார். கண்ணன் உடலோடு இல்லாதபோதுகூட, மீரா அவரோடு ஆழமான தொடர்பை உணர்ந்தார்; அவரோடு பேசினார்; அவர் பெருமைகளைப் பாடினார்; அவருள் முழுவதுமாகக் கரைந்திருந்தார். மீராபாய்க்கு விஷம் கொடுக்கப்பட்டபோதுகூட, அவர் முழுமையாகத் தம்மைக் கிருஷ்ணரிடம் ஒப்படைத்துவிட்டு, அதைக் குடித்தார்.
நமக்கு இப்போது
தேவையானதெல்லாம்,
இதயத்தின் மூலம்
ஆழமான தொடர்பை
ஏற்படுத்திக்கொள்ளும்
மனப்பாங்குதான்.
உயிரையே குடிக்கும் விஷம்கூட அவருக்கு
எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத
அளவிற்கு அவருடைய பக்தி மற்றும்
காதலின் சக்தி ஆழமாக இருந்தது.
எல்லாவிதமான காட்டு விலங்குகளும் பாம்புகளும் வசிக்கும் காட்டுப்பகுதியில், ஒரு குகையில் வசித்துவந்த நாகா ஸந்யாசியைப் பற்றி விவேகானந்தர் விவரிக்கிறார்.
அவர் உடம்பில் பாம்பு கடித்ததின் அடையாளங்கள் நிறைய இருந்தனவாம். ஆனால் அவர் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கொண்டிருந்த ஆழமான தொடர்பால் பாம்புகளையும் வரவேற்றார்!
நமக்கு இப்போது தேவையானதெல்லாம், இதயத்தின் மூலம் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் மனப்பாங்குதான்.
இதயப்பூர்வமாகத் தொடர்புகொள்வது எப்படி என்பதை நாம் மறந்து போய் விட்டதுதான் நம்முடைய இப்போதைய பிரச்சினை. நம்முடைய எல்லா உறவு முறைகளும் மேம்போக்காக மாறி வருகின்றன. இப்போது, மனைவி மனைவியாக இல்லை; இந்த நவீன யுகத்தில் கணவர், கணவராக இல்லை; அவர் ஓர் ஆண் நண்பர் மட்டும்தான். அவருக்கு விருப்பம் இருக்கும்வரை அந்த ஆண் நண்பருடன் சேர்ந்து வாழலாம். எப்போது தேவையில்லையோ, அப்போது அவரை விட்டுப் பிரிந்து செல்லலாம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
ஸம்ஸ்க்ருதத்தில் 'விவாகரத்து' என்ற
வார்த்தையே கிடையாது. அப்படி ஒரு
கருத்தே இல்லை. இந்து திருமணங்களில்
விவாகரத்து அனுமதிக்கப்படுவது
இல்லை.
அக்னியின்முன்னால் இருந்து, "நான் உயிரோடு இருக்கும்வரை, உங்களுக்குத் துணையாக இருப்பேன்," என்றுதான் மணமக்கள் இருவரும் ஸத்யம் செய்கிறார்கள். அக்னி நம்முடைய உடலுக்குள்ளும் இருக்கிறது.
நம்முடைய உடலுக்குள் ஜீரண சக்தியாக இருக்கும் ஜடாரக்னிதான் வெளிப்புறத்தில் சமயச் சடங்குகளுக்காக நாம் உருவாக்கும் அக்னியின் பிரதிநிதியாக உள்ளது.
இந்த அக்னி நம்முடைய உடலில் இருக்கும்வரைதான் நாம் உயிரோடு இருப்போம். இந்த அக்னி நம்முடைய உடலை விட்டு நீங்கும்போது, நம்முடைய உடல் சுடுகாட்டு அக்னியின் மேல் இருக்கும்!
ஒன்று, நம்முடைய உடல் அதன் உள்ளிருக்கும் நெருப்போடு இருக்க வேண்டும்; அப்படி இல்லையென்றால், அதனை வெளி நெருப்பில் தூக்கிப் போட்டுவிடுவார்கள்.
நெருப்பை ஸாட்சியாகவைத்து, நாம் ஸத்யம்செய்கிறோம். "இன்றையிலிருந்து, இந்த உடல் உயிரோடு இருக்கும்வரை நான் உனக்குத் துணையாக இருப்பேன். இந்த உடல் உயிரோடு இருக்கும்வரை நான் உன்னைக் கவனித்துக்கொள்வேன்," என்று ஸத்யம் செய்கிறோம். இது வாழ்க்கை முழுவதற்குமான வாக்குறுதி.

ஸம்ஸ்க்ருதத்தில் 'விவாகரத்து'
என்ற வார்த்தையே கிடையாது.
ஏனென்றால் அப்படி ஒரு கருத்தே
அப்போது இல்லை.
முன்னேறிய நவீன
கலாச்சாரங்கள் என்று
சொல்லப்படுகிற மேலைநாட்டு
நாகரிகங்களின் படையெடுப்பால், மனைவி, வீடு, கார் என அனைத்தையும் நினைத்தபோது மாற்றிக்கொள்ளும் 'பொருள் சார்ந்த கலாச்சாரம்' இப்போது நாகரிகமாகிவிட்டது. மூன்றே மாதங்களில் வீடு, கார், மனைவி என்று எல்லாமே பழையதாகிப் போய் விடுகின்றன.
உள் உலகின் வெளிப்பாடே வெளி உலகம்
சில நாட்களுக்கு முன் ஒரு மனிதர் என்னிடம் வந்து, "என் மனைவியை விவாகரத்து செய்யப் போகிறேன், ஆசீர்வாதம் செய்யுங்கள் ஸ்வாமி," என்று சொன்னார். இந்தியாவில் குரு என்பவர் ஆன்மீகவாதியாக மட்டும் இருப்பதில்லை. அவர், கல்யாணத் தரகராகவும் பங்குதாரராகவும் நிதியாளராகவும் வாழ்க்கை ஆலோசகராகவும் மன நல ஆலோசகராகவும் மருத்துவராகவும் இருக்கிறார்! குரு, இவை எல்லாவற்றையும் செய்தாக வேண்டும்.
ஒரு ஞானியால் எந்த மாதிரியான முடிவு வழங்கப்பட்டாலும் சரி, அது உங்கள் நன்மைக்காகத்தான் இருக்கும். இந்த உலகத்தின் மேலிருக்கும் கருணையாலும் பொறுப்பாலும்தான் குரு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நான் எப்போதும் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களை ஒன்று சேர்க்கவே முயற்சி செய்வேன். ஒருவர் இதுபோல் தீர்க்கமான முடிவுக்கு வருகிறாரென்றால், அங்கு நிச்சயம் ஏதாவது வலிமையான காரணம் இருந்தாக வேண்டும்.
நான் அந்த மனிதரிடம், "நான் உங்களுக்கு
ஆசீர்வாதம் செய்வது இருக்கட்டும், அதற்கு
முன்னால் உங்களுடைய பிரச்சினையைச்
சொல்லுங்கள்," என்று கேட்டேன்.
அந்த மனிதர் பதில் சொன்னார், "ஒரு
நாள் என் மனைவி காலையில் சூடான
காப்பிகொண்டு வரும்போது, அது என்மேல்
கொட்டி விட்டது. சண்டை அங்கேதான்
தொடங்கியது," என்றார். பிறகு அவர்,
அந்த அம்மாற்கு எதிராக தம்முடைய
நினைவுப்பதிவில் இருந்த எல்லா
வாதங்களையும் சொல்லி முடித்தார்.
> ஒரு ஞானியால் எந்த மாதிரியான முடிவு வழங்கப்பட்டாலும் சரி, அது உங்கள் நன்மைக்காகத்தான் இருக்கும்.
இந்தியாவில், ஒரு பழக்கம் உண்டு.
திருமணத்தின்போது, ஒரு தண்ணீர்க்
குடத்திற்குள் போடப்பட்ட மோதிரத்தை
மாப்பிள்ளையும் பெண்ணும் போட்டி
போட்டுக்கொண்டு கண்டுபிடித்து எடுக்க
வேண்டும். இது விளையாட்டுக்காகச்
செய்யப்படும் நிகழ்ச்சி.
yar அந்த மோதிரத்தை முதலில்
எடுக்கிறார்களோ அவர்களே அதை
வைத்துக்கொள்ளலாம்.
“இந்த விளையாட்டின்போது என்னுடைய மனைவி, என்னுடைய கையைக் கீறி விட்டுவிட்டாள். இப்படித்தான் அப்போதிருந்தே அவள் எனக்குக் கஷ்டம் கொடுத்து வருகிறாள்,” என்று அவர் சொன்னார்.
அவருடைய மன அமைப்பைப் பாருங்கள்! அவர் கண் விழிக்கும் முன்னாலேயே, எத்தனை நாள் அவருடைய மனைவி காபி கொடுத்திருப்பார். அதை எல்லாம் அவர் மறந்து விட்டார். அதற்கான நன்றியுணர்வு அவரிடத்தில் கொஞ்சமும் இல்லை. ஆனால் கைத் தவறியதால் காபி கொட்டியதை அவர் குற்றமாகச் சொல்கிறார்.
நம்மளுடைய தீர்மானங்களுக்கு எதிராக இருக்கும் விஷயங்களை நாம் மறந்து விடுகிறோம். நம்மளுடைய தீர்மானங்களுக்கு ஆதரவாக இருக்கும் வாதங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து, இப்படி எத்தனை முறை செய்திருக்கிறீர்கள் என்பதைப் பார்த்தீர்களானால், நான் என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
வெளி உலகம் என்பது உள் உலகத்தின் வெளிப்பாடுதான். கண்கள்நான் அதை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன. என்னவெல்லாம் வெளி உலகில் பார்க்கிறோமோ, அவை எல்லாமே நம்முடைய உள் உலகின் வெளிப்பாடுகள்தான்.
மாற்ற வேண்டியது இடத்தைஅல்ல, மனத்தை!
உதாரணமாக, ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சி நமக்குப்பிடிக்கவில்லை என்றால், அந்தத் திரையை சுத்தம் செய்வதினால் மட்டுமே அந்தக் காட்சியை அகற்றிவிட முடியாது. அதற்குப் பதிலாக, படம் காட்டும் ப்ரொஜக்டரை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது ஃபிலிமை மாற்றி, காட்சியை மாற்ற வேண்டும்.
அதுபோலதான், நாம் வெளி உலகப் பொருட்களை மாற்றியமைக்க முயற்சிசெய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான், நமக்கு வெற்றி கிடைப்பதில்லை.
படம் காட்டும் ப்ரொஜக்டரை மாற்றாமல், திரையை மாற்ற நினைக்கும் நம்முடைய முயற்சிதான், நம்முடைய வெறுப்புக்கும் மன அழுத்தத்திற்கும் காரணமாக இருக்கிறது.
‘ஒரு விடுமுறைக்கு அழகான ஹவாய் கடற்கரைக்குச் சென்று, அதை ரசிக்க வேண்டும். அதுவே மிகப்பெரிய ஆனந்தம்’ என்று நாம் கற்பனை செய்து வைத்திருக்கலாம். ஆனால் அது நடக்கும்போது, நம்முடைய நினைவுகள் கடற்கரையில் இருக்காது. அது, நம்முடைய அலுவலகத்திற்கும், அங்கு செய்து முடிக்க வேண்டிய வேலைகளுக்கும் போய்விடும்!
நான் மக்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு, "நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கவலைப்பட்டால், அது 'வீட்டுப் பாடம்' . நீங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து கவலைப்பட்டால், அது 'அலுவலக வேலை', நீங்கள் கடற்கரையில் உட்கார்ந்து கவலைப்பட்டால் அதுதான் 'விடுமுறை'!
மனம் ஒரே மாதிரிதான் இருக்கிறது. இடம்தான் மாறுகிறது.
நம்முடைய மனத்தின் 'நிலை'யை இடத்தை மாற்றுவதால் எப்படி மாற்ற முடியும்? நாம் எப்போதும் நம்முடைய 'நிலைமை'யை மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோமே தவிர, நம்முடைய 'நிலை'யை மாற்ற முயற்சி செய்வதே இல்லை.
> நாம் வெளி உலகப் பொருட்களை மாற்றியமைக்கத்தான் முயற்சிசெய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான், நமக்கு வெற்றி கிடைப்பதில்லை.
நம்முடைய 'நிலை'யைத்தான் நாம் மாற்ற வேண்டுமே தவிர, 'நிலைமை'யை அல்ல.
நம்முடைய 'நிலை'யை மாற்றத்
தொடங்கும்போது, அதாவது படம் காட்டும்
புரொஜெக்ட்ரோடு வேலை செய்யும்போது,
நாம் வளர்ச்சி அடைகிறோம். ஆனால்
நம்முடைய 'நிலைமை'யை மாற்ற முயற்சி
செய்வது என்பது, திரையை மாற்றுவதுபோல.
மனைவி, வீடு, கார் இவற்றை மாற்றுவது
என்பது திரையை மாற்றுவதுபோல; இது
பலன் தராது. மனம் மாற வேண்டும்,
நம்முடைய கற்பனைகள் மாற வேண்டும்;
அதுதான் ஒரே வழி.
> நம்முடைய
> 'நிலை'யைத்தான்
> நாம்
> மாற்ற வேண்டுமே தவிர,
> 'நிலைமை'யை அல்ல.
நாம், மற்றவர்கள் மீது நம்முடைய முடிவுகளைத் திணிக்காமல் இருக்கும் போதுதான், 'ஏற்றுக்கொள்ளும்' தன்மையை, 'கருணை காட்டும்' நிலையை அடைகிறோம். புத்திசாலித்தனம் நிகழும்போது தானாகவே, ஏற்றுக்கொள்ளும் தன்மையை, அடைகிறோம். ஏற்றுக்கொள்ளுதல் என்பது முதல் படி, அதுவே முடிவான படி அல்ல. நாம் மனிதர்களையும் சூழ்நிலைகளையும் அப்படியே வரவேற்கும் போதுதான் கருணை மலரும்.
விஞ்ஞான மனோபாவமே தர்க்கத்திற்குத் தீர்வு தரும்
'அன்புக்குரியவர்' என்றால் இருப்புத் தன்மையை, உணர்வை நேசிப்பது (being level) என்று அர்த்தம்; உடலை நேசிப்பது அல்ல.
புத்திசாலித்தனத்திற்கும், பட்டறிவுக்கும் என்ன வித்தியாசம்? பட்டறிவு, எதையும் முன்கூட்டியே முடிவு செய்துவிடும். புத்திசாலித்தனம், எப்போதுமே புதிதாகவே இருக்கும்.
பட்டறிவு, எப்போதுமே முதலில் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடும். பிறகு அதற்கு ஆதரவான சாட்சிகளைக்கொண்டு வந்து அதை நியாயப்படுத்தும்.
ஆனால் புத்திசாலித்தனம் முதலில் சாட்சிகளைச் சேகரித்து, பிறகுதான் முடிவைச் சொல்லும். அந்தத் தீர்ப்பு, முன்கூட்டியே தீர்மானிக்கப் படாததாகவும் குழப்பம் இல்லாததாகவும் இருக்கும். உண்மையில், இதுதான் நிஜமான விஞ்ஞான மனோபாவம். நமக்கு ஸத்யத்தைத் தெரிந்துகொள்வதற்கான தேடுதலும், செய்திகளைச் சேகரிப்பதில் விடாமுயற்சியும், தீர்மானங்களைப் பின்பற்றுவதில் உறுதியும் தேவை. விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி அறிக்கை எப்படி இருக்க வேண்டுமென்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு பதஞ்ஜலி யோக ஸூத்ரங்களே.
இந்த விஞ்ஞான மனோபாவத்தை நடைமுறைப்படுத்த இந்த உயர் கருத்துகளுக்கு நாம் உருவம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
பெரும்பான்மையான மனிதர்களுக்கு, தங்களுடைய தீர்மானங்களைப் பின்பற்றும் அளவிற்குத் தைரியம் இருக்காது. பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கலிலியோ அறிவித்தார். ஆனால் பூமிதான் நடுவில் இருக்கிறது, பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்கிற கிறிஸ்துவர்களின் நம்பிக்கைக்கு இந்தக் கண்டுபிடிப்பு எதிராக இருந்தது. அதற்காகவே அவர் கொடுமைப்படுத்தப்பட்டார்.
அவர் தம்முடைய ஆராய்ச்சி அறிக்கையின் கீழ் ஒரு அடிக்குறிப்பை எழுதினார்: “கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நம்மால் வேண்டுமானால், இந்த உண்மையை ஒத்துக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் பூமியும் சூரியனும் கிறிஸ்துவர்கள் அல்ல. அவை வழக்கம்போல் தங்கள் பாதையில் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கப்போகின்றன.”
அதனால் விஞ்ஞான நோக்கில்கூட, ஒரு கருத்தைப் பற்றிய முடிவிற்கோ, தீர்மானத்திற்கோ வருவதற்கு முன் அதைப் பாராபட்சம் இல்லாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தொண்ணூற்று ஒன்பது சதவிகித நேரம் நாம்
தீர்ப்பை எழுதிவிட்டுத்தான், நம்முடைய
அந்தத் தீர்ப்பை நியாயப்படுத்துவதற்காக
வாதங்களைச் சேகரிக்கிறோம்.
உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்!
உங்களுடைய மனது எப்படி வேலை
செய்கிறது என்று பாருங்கள். உங்களுடைய
தினசரி வாழ்க்கையில் நீங்கள் எப்படி
நடந்துகொள்கிறீர்கள்? பெரும்பாலான
நேரங்களில், தீர்ப்பை முதலிலேயே முடிவு
செய்துவிட்டிருப்பீர்கள்.
> நாம்,
> தொண்ணூற்று ஒன்பது
> சதவிகித நேரம்
> தீர்ப்பை எழுதிவிட்டு
> நம்முடைய
> அந்தத் தீர்ப்பை
> நியாயப்படுத்துவதற்காக
> வாதங்களைச்
> சேகரிக்கிறோம்.
உதாரணமாக உங்கள் மகன் சில மணி நேரங்கள் தாமதமாக வருகிறார் என்றால், நீங்கள் முன்கூட்டியே அவரைப் பற்றி ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுவீர்கள். அவர்களால் உங்கள் தீர்மானத்தை அசைக்கக்கூட முடியாது.
தாமதத்திற்கான அவருடைய எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். அதற்குப் பதிலாக உங்களுடைய தீர்மானத்துக்கு ஆதரவான வாதங்களைச் சேகரிப்பீர்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் என்ன செய்தாலும் சரி, நீங்கள் முன்னால் எடுத்த முடிவின் அடிப்படையில்தான் ஒருதலைப் பட்சமாக யோசிப்பீர்கள்.
இதேபோலத்தான் உங்கள் மனைவியோடு சில மாதங்கள் வாழ்ந்த உடனேயே, அவரைப் பற்றிச் சில கருத்துகளை உருவாக்கி விடுவீர்கள். பிறகு அவர் என்ன செய்தாலும் சரி, முதலில் அவரைப்பற்றி நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கருத்துகளுக்குத் தேவையான வாதங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பீர்கள்.

நாம் நம்முடைய தீர்மானங்களுக்காகவும்,
நம்முடைய அஹங்காரத்திற்காகவும், நாம்
எடுத்த முடிவுகளுக்காகவும் வாழ முயற்சி
செய்யும்போது-நாம் வாழ்க்கையையே
துக்ககரமாக ஆக்கிக்கொள்கி
றோம். அதுமட்டுமல்லாமல்,
மற்றவர்களுடைய வாழ்க்கையிலும்கூட
நாம் துன்பத்தையே உருவாக்கத்
தொடங்குகிறோம்.
பெரும்பாலான நேரங்களில், நம்முடைய துக்கங்களுக்கு மற்றவர்கள் காரணமாக இருப்பதில்லை.
நம்முடைய அஹங்காரத்தை நிரூபிக்க வேண்டுமென்பதற்காக, நமக்கு நாமே துக்கங்களை உருவாக்கிக்கொள்கிறோம். ஆனால் இவற்றால் நமக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
நம்மைப் பற்றி மட்டுமே நாம் அதிகமாகச் சிந்திக்கிறபோதே நம்முடைய தீர்மானங்களை மட்டுமே நாம் நம்பத் தொடங்கி விடுகிறோம்; ஆனால் குறைகளை மற்றவர்கள் மீது சுமத்தி விடுகிறோம்.
நாம் சாதாரணமானவர்கள்தான் என்பதை நாம் உணரும்போது மட்டுமே, வாதங்களைத் தெளிவாகப் பார்த்து விட்டு, பிறகு தீர்ப்பைச் சொல்லத் தொடங்குவோம். நம்முடைய வாழ்க்கையில், நாம் சரியான முறையில், சரியான வழியில் முடிவுகளை எடுக்கத் தொடங்கி விடுவோம்; மற்றவர்களுடனான நம்முடைய உறவுகளும் மாறிவிடும்.
ஆத்மார்த்தமான உறவு இறைவனையே வரவேற்கும்
பெரும்பாலான நேரங்களில், நாம் ஆணாக இருந்தால் பெண்ணிடமும், பெண்ணாக இருந்தால் ஆணிடமும் நமக்கு ஏற்படும் ஈர்ப்பை, காதல் என்று சொல்லிக்கொள் வோம். ஆனால் வேறு ஒருவருக்கு இதே உணர்ச்சிகள் ஏற்பட்டால், நாம் அதைக் காமம் என்று சொல்கிறோம். அதேபோல் நாம் கோபப்பட்டோம் என்றால், அது அடுத்தவருடைய நலனுக்காக என்று சொல்கிறோம். ஆனால் அதேசமயம், அடுத்தவர் நம்மேல் கோபப்பட்டால், அது அவருடைய அஹங்காரம் என்று சொல்கிறோம்.
> அடுத்தவர்கள்
> பெருமை பேசினால்
> அது - அஹங்காரம்,
> நாம்
> பெருமை பேசினால்,
> அது - ‘சும்மா
> தெரியப்படுத்தினேன்’
> என்று சொல்லி, அதை
> நியாயப்படுத்துவோம்.
மனிதர்கள் தங்களுடைய செயல்களைப் பற்றி என்னிடம் தற்பெருமையோடு சொல்லி முடித்துவிட்டு, உடனே இந்த வாக்கியத்தையும் அதனோடு சேர்த்து விடுவார்கள், அதாவது அவர்கள் பெருமைக்காக அதைச் சொல்லவில்லை, எனக்குத் தெரியப்படுத்துவதற்காகச் சொன்னதாகவும் சொல்லி விடுவார்கள்.

அடுத்தவர்கள் பெருமை பேசினால் அதை
நாம் அஹங்காரம் என்று சொல்வோம்.
ஆனால் அதையே நாம் பேசினால், ‘சும்மா,
தெரியப்படுத்தினேன்’ என்று சொல்லி,
அதை நியாயப்படுத்துவோம். நாம் வேறு
விதமானவாதங்களையே மற்றவர்களுக்காக
உபயோகப்படுத்துகிறோம்.
நாம் வெளி உலகத்தைப் பார்க்க ஒரு
கண்ணாடியையும், நம் உள் உலகத்தைப்
பார்க்க, நம்மைப் பார்த்துக்கொள்ள வேறு
ஒரு கண்ணாடியையும் பயன்படுத்திக்
கொண்டிருக்கிறோம்.
நாம் இதயத்தின் மூலம் தொடர்புகொள்வது
எப்படி என்பதையே மறந்து விட்டோம்.
உண்மையில், இதயம்தான் ஆழமான
தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒரே
வழி.
நமக்குள்
ஆழமான அன்பு
மலரும்போது,
கல்லும்
கடவுளாக மாறி
நம்மை வழிநடத்தும்.
நம்முடைய உறவுகள் மேலோட்டமாக மாறிக்கொண்டு வருகின்றன. உண்மையில் நமக்கு ‘காதல்வயப்படுவது’ என்ற வார்த்தைக்கான பொருள் தெரியவில்லை.
இராமகிருஷ்ணர் பூஜைசெய்து வழிபாடு செய்கிற போதெல்லாம் தேவி அங்கே அருகில் இருப்பதாகவே உணர்ந்தார். அவர் எப்போதும் அந்தச் சிலையைக் கல்லாக நினைக்கவில்லை. அவர் தேவியின் ஸாந்நித்யத்தை உணர்ந்திருந்தார். நமக்குள் ஆழமான அன்பு மலரும்போது, கல்லும் கடவுளாக மாறி நம்மை வழிநடத்தும்.
உணர்வால் இணைய முடியாதபோது, கடவுளே கீழிறங்கி வந்தாலும், நாம் அவரிடம் அடையாள அட்டையைத்தான் காட்டச் சொல்வோம்! ஆழமாக உணர்வால் இணைந்திருந்தால், நம்மைத் திறந்து வைப்பது எப்படி என்று நமக்குத் தெரிந்திருந்தால், ஒரு கல்லும் கடவுளாய் மாறி வழிகாட்டும்.
அதுதான் இராமகிருஷ்ணருக்கு நடந்தது. அவர் காளிதேவியிடம் பேசி னார். அவர் தேவியிடம் நேரடியாகப் பேசினார்.
இராமகிருஷ்ணரின், வாழ்க்கையில் நடந்த ஓர் அழகான கதையைச் சொல்கிறேன்:
இராமகிருஷ்ணர், தேவியின் கோவிலில் பூசாரியாக இருந்தார். அவர் தேவிக்கு உணவைப் படைக்கும் முன் அதை ருசி பார்ப்பது வழக்கம்.
எல்லா அதிகாரிகளும், “நீங்கள் இப்படிச் செய்யக் கூடாது. இது புனிதமற்ற செயல்,” என்றார்கள். இராமகிருஷ்ணர் சொன்னார், “எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் காளிதேவியைத் தாயாக நினைக்கிறேன். அந்த உணவு ருசியாக இருக்கிறதா என்று தெரியாமல், அதை எப்படி அவளுக்குப் படைக்க முடியும்? அவ்வாறு நான் படைப்பதை நீங்கள் விரும்பவில்லையென்றால், நான் கோயிலைவிட்டு வெளியேறி வெளியே நின்று படைப்பேன். ஆனால் நான் இப்படித்தான் படைப்பேன்,” என்றார்.
பிறகு அவர்கள், “சரி, உங்கள் விருப்பம்போல செய்யுங்கள்,” என்று ஒத்துக் கொண்டார்கள்.
அது மட்டுமல்ல, அவர் தேவியின் சிலைக்கு அலங்காரம் செய்யும்பொழுது, தேவி மூச்சு விடுகிறாரா இல்லையா, அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று பார்ப்பதற்காக ஒரு சின்ன நூலை தேவியின் மூக்குக்கு அடியில் வைப்பார். தேவியின் மூச்சுக் காற்றால் அந்த நூல் அசையும். அவர், தேவியை எல்லா இடத்திலும் உணர்ந்திருந்தார்.

ஆழ்ந்த அன்பிற்குக் கல்லும் கட்டுப்படும்
– தேவ ரகசியம்
இன்னொரு அழகான கதை: இதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது உறுதியான ஸத்யம், தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இதுவொரு ஸத்யம்.
வங்காளத்தில், தக்ஷிணேஸ்வர காளி கோவிலில், பக்தர்கள் தேவிக்கு சங்கினால் செய்த வளையல்களைக் காணிக்கையாகச் சமர்ப்பிப்பார்கள்.
காளி தேவிக்கு நான்கு கைகள் உண்டு: ஒன்று அபயஹஸ்த, காப்பாற்றும் திருக்கரம், இன்னொன்று வரத ஹஸ்த, வரமளிக்கும் திருக்கரம்.
மூன்றாவது கையில், தேவி 'கட்க' வாள் – ஏந்தி இருப்பார். நான்காவது கையில், முண்டம், அரக்கனின் தலையை வைத்திருப்பார். அரக்கனின் தலை, மனித அஹங்காரத்தின் அடையாளமாக இருக்கிறது.
உண்மையில், இதில் ஒரு தத்துவ விளக்கம்
நாம், கோயிலில் இருக்கும் சிலையை ஒருபோதும் கல்லாக நினைக்கக் கூடாது.
இருக்கிறது. ஞானம் என்ற வாளால், நம்முடைய அஹங்காரத்தை வெட்டி, நமக்கு வரமளித்து, தேவி நம்மைப் பாதுகாக்கிறார் என்று இதற்கு அர்த்தம்.
தேவியின் சிலையில் உள்ள மூன்று கைகளில் வளையல்களைச் சுலபமாக மாட்டிவிடலாம். காப்பாற்றும் மற்றும் வரமளிக்கும் கைகளில் வளையலை அணிவித்துவிடலாம். வாளைப் பிடித்துக்கொண்டிருக்கும் கையில்கூட, கத்தியை எடுத்துவிட்டு வளையலைப் போட்டுவிடலாம்.
ஆனால் நான்காவது கையில் தேவி அரக்கனின் தலையைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அந்தத் தலையைப் எடுக்க முடியாது. அதே சமயம் வளையல்களை அரக்கனின் தலை வழியாக நுழைக்கவும் முடியாது.
நாம் நம்மைத்
திறந்து வைத்தால்,
இறைவனும்
நம்
பேச்சைக் கேட்பார்.
ஒரு நாள் பக்தர் ஒருவர் நான்கு
வளையல்களைத் தேவிக்குக் கொண்டு
வந்திருந்தார். ஒரு அரைமணி நேரத்தில்
இராமகிருஷ்ணர் தேவியின் நான்கு
கைகளிலும் அதை மாட்டி அலங்காரம் செய்து
முடித்துவிட்டார்.
நடைமுறையில் இதைச் செய்ய முடியாது
என்றாலும்கூட, தேவியின் நான்காவது கை
இப்போதும் வளையல் மாட்டியபடியேதான்
இருக்கிறது!
சிலையின் கையையும் உடைக்கவில்லை; வளையலையும் உடைக்கவில்லை! ஆனால், காளியின் நான்காவது கையில் வளையல் மாட்டப்பட்டிருக்கிறது. இது அந்தப் பக்தருக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
அவருடைய நெருங்கிய பக்தர்களாலும், அவரோடு தங்கியிருந்த சீடர்களாலும் வங்காளமொழியில் எழுதப்பட்ட இராமகிருஷ்ணரின் நினைவுக் குறிப்புகள் என்ற புத்தகத்தில் இந்த நிகழ்ச்சி எழுதப் பட்டிருக்கிறது.
அந்தப் பக்தர் கேட்டார், "ஸ்வாமி, அந்த வளையலை எப்படித் தேவியின் கையில் போட்டீர்கள்? வளையலை உடைத்து பின் ஒட்டவைத்தீர்களா?"
"இல்லை."
அந்தப் பக்தர் ரொம்பவும் ஆர்வத்தோடு, "அப்படியென்றால் சிலையை உடைத்தீர்களா?" "இல்லை."
அந்தச் சிலை கருமையான பளிங்குக் கல்லினால் செய்யப்பட்டது. சிலையையும் உடைக்கவில்லை, வளையலையும் உடைக்கவில்லை, ஆனால் தேவியின் கையில் வளையல் இருக்கிறது. இது அந்தப் பக்தருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் கேட்டார், "பின்னர் எப்படித்தான் போட்டீர்கள்?"
இராமகிருஷ்ணர் கேட்டார், "இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? 'அம்மா, தலையைச் சில நிமிடம் கீழே வையுங்கள்' என்று சொன்னேன், அவர் கீழே வைத்தார். நான் வளையலைப் போட்டுவிட்டு, தலையை எடுத்துக் கொடுத்தேன். அவர் திரும்பவும் பிடித்துக் கொண்டார், அவ்வளவுதான்," என்றார்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்
கொல்கத்தாவில் உள்ள தக்ஷிணேச்வர்
கோவிலுக்குச் சென்றால், அந்த
வளையலை மறக்காமல் பாருங்கள்.
> நாம், கோயிலில்
> இருக்கும்
> சிலையை
> ஒருபோதும் கல்லாக
> நினைக்கக் கூடாது.
அந்த வளையல் இன்னமும் இருக்கிறது. எப்படியோ, இறையருளால், எனக்கு அந்தப் புனிதமான இடத்திற்குள், கர்ப்பகிரஹத்திற்குள் சென்று அதை அருகில் பார்க்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இன்றுவரை, இராமகிருஷ்ணர் அந்த வளையலை எப்படி அணிவித்தார் என்பது புதிராகவே, தேவ ரகசியமாகவே இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம்: சிலையோ அல்லது வளையலோ எதுவும் உடைக்கப்படவில்லை.
அவருடைய அளப்பரிய சக்திக்கு முன் கல்லும் கட்டுப்பட்டது! நாம், கோயிலில் இருக்கும் சிலையை ஒருபோதும் கல்லாக நினை க் கக் கூடாது. தெய்வம், அர்ச்சாவதார ரூபத்தில், சிலை ரூபத்தில் நாம் வழிபடுவதற்காக இறங்கி வருகிறது. அதைக் கல்லாக நினைக்க வேண்டாம். அது நேரடியாகவேகூட நம்மிடம் பதில் சொல்லும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், முதன் முறையாக அந்த நினைவுக் குறிப்புகளைப் படிக்கும்போது, இதை நான் நம்பவில்லை. நான் ஞானமடைவதற்கு முன்பு, ஒரு பட்டறிவுவாதியாகவே இருந்தேன்.
நான் எதையும் அவ்வளவு சுலபத்தில்
நம்பவே மாட்டேன். எல்லாவற்றையும்
ஆராய்ந்து, மறுபரிசீலனை செய்யவே
விரும்புவேன். "இதுவும் ஒரு கதை, சரிதான்,
விட்டுவிடலாம்," என்றுதான் நினைத்தேன்.
வட இந்தியாவில் நம்மால் கர்ப்கிரஹத்திற்குள் போக முடியும். காசியில்கூட, விஸ்வநாதர் ஆலயத்தில் விஸ்வநாதரைத் தொட்டு வணங்க முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, குளித்துவிட்டுத்தான் கர்ப்கிரஹத்திற்குள் நுழைய வேண்டும்.
நான் காளி கோவிலுக்குப் போனபோது அந்தப் பூசாரி என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.
இப்போது நமக்குத்
தேவையெல்லாம்,
கடவுளோடு
ஆழமான தொடர்பு
வைக்கக்கூடிய
மனநிலை மட்டுமே.
நான் அந்த வளையலைத் தொட்டு உருட்டிப் பார்த்தேன். அந்தச் சங்கால் செய்யப்பட்ட வளையல் நன்றாக உருண்டது. அதில் எந்த விரிசலும் இல்லை, சிலையும் உடைபட்டு இருக்கவில்லை. இது இன்றைக்கும் ஒரு புதிராகவே இருக்கிறது!
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் உணர்வுப்பூர்வமாக இணைந்துவிட்டால், நம்மைத் திறந்து வைப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டால், எப்படிச் சரணடைவது என்பதைப் புரிந்து கொண்டால், கல்லும் கடவுளாக மாறி, உணர்வுப்பூர்வமாக வழிநடத்தும்.
நம்மைத் திறந்து வைப்பது எப்படி, சரணடைவது எப்படி என்று தெரியாதபோது, கடவுளே நேரில் வந்தாலும்கூட, அவரிடம் அடையாள அட்டையைத்தான் கேட்போம். நம்மால் அவரோடு உணர்வுப்பூர்வமாகத் தொடர்புகொள்ள முடியாது.
இப்போது நமக்குத் தேவையெல்லாம், கிருஷ்ணரோடு ஆழமான அன்பு ம், கிருஷ்ணரோடு ஆழமான இணைப்பும், கிருஷ்ணரோடு ஆழமான தொடர்பும் வைக்கக்கூடிய மனநிலை மட்டுமே.
நம்மை நாம் திறந்து வைத்தால், கிருஷ்ணர் தம்முடைய மகிமைகளை விவரிக்கும்போது, அவை வெறும் வார்த்தைகளாக மாத்திரமே இல்லாமல், நம்மால் அவற்றை அனுபவமாகவே உணரமுடியும்.
பக்தியே உண்மையான ஆயுள் காப்பீடு
முதலில் கிருஷ்ணர் ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள பகைமையை நீக்குகிறார். அர்ஜூனன் ஜீவாத்மா, கிருஷ்ணர் பரமாத்மா.
இந்த விழிப்புணர்வு இல்லாமலேயே, தொடர்ந்து நாம் பரமாத்மாவுடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் பகைமை கொண்டிருக்கிறோம். அதனால்தான், வாழ்க்கையைச் சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். அடுத்த நொடி என்ன நடக்கும் என்ற பயம் நமக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. நாம் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மேல் நம்பிக்கை வைப்பதில்லை.
நமக்கு இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மேல் நம்பிக்கை இல்லாமல் போனதால்தான், எல்லா வகையான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களையும் போடுகிறோம். எதற்காக என்றால் ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள் ஆயுள் காப்பீடு என்பது ஆயுள் காப்பீடு அல்ல, அது மரணக் காப்பீடு. பரம்பொருளிடம் ஏற்படும் பக்திதான் உண்மையான ஆயுள் காப்பீடு.
tதெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதே, உண்மையான ஆயுள் காப்பீடு. அதுதான் ஒரே ஆயுள் காப்பீடு.
மற்ற அனைத்தும் மரணக் காப்பீடுகளே, அவை அதற்காகக் காத்திருக்கும் நம்முடைய குடும்பத்திற்குத்தான் போய்ச் சேரும்! அதனால்தான் அது ஆயுள் காப்பீடு அல்ல, மரணக் காப்பீடு என்கிறேன்.
ஒரு சின்ன கதை:
கிருஷ்ணர்,
ஜீவாத்மாவிற்கும்
பரமாத்மாவிற்கும்
உள்ள பகைமையை
நீக்குகிறார்.
சிறு வயது பையன் ஒருவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் கடலுக்குள் இறங்க ஆசைப்பட்டான்.
அவனுடைய தாய் பின்னாலேயே ஓடி வந்து, “கடலுக்குள் போக வேண்டாம், மணலில் விளையாடு, தண்ணீருக்குள் போகாதே,” என்று சொன்னார். அதற்கு அந்தப் பையன் “ஏன் அப்பா மட்டும் தண்ணீருக்குள் போகிறார். அவரை நீங்கள் தடுக்கவில்லை; என்னை மட்டும் தடுக்கிறீர்களே,” என்று கேட்டான்.
உடனே அம்மா சொன்னார், “அவருக்கு ஆயுள் காப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது!”
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய அனைத்துக் காப்பீடுகளும் மரணக் காப்பீடுகள்தான். அது ஆயுள் காப்பீடு அல்ல. நமக்குத் தேவையான ஒரே ஆயுள் காப்பீடு, இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்மைக் காத்துக்கொண்டிருக்கிறது என்பதையும், அது நமக்குப் பகை கிடையாது என்பதையும் புரிந்து கொள்வதுதான்.
உணர்வுப்பூர்வமாய் இணைவதே அவசரத் தேவை
இன்னொரு விஷயம் : பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் நமக்கு ஆழமான அன்பும் தொடர்பும் இருக்கும்போது, நாம் இறந்தால் கூட, நம்மை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது அதற்குத் தெரியும் என்கிற புரிதல் நமக்குள் ஏற்பட்டு விடுவதால், நாம் முழுவதுமாகக் கவலையற்றும் தளர்வாகவும் இருப்போம்.
இறந்த பிறகும்கூட, அவர் நம்மைக் காப்பாற்றி வழிநடத்துவார் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். அதனால் இப்போதே அந்த சக்தியோடு இணைந்து செல்வதற்கு, அந்த மேலான சக்தியிடம் கீழ்ப்படிவதற்கு, சரணடைவதற்கு நம் மனத்தைத் தயார் செய்ய வேண்டும். இப்போதிலிருந்தே நம்முடைய மனத்தையும் உடலையும் தயார் செய்ய வேண்டும்.
அந்த மேலான சக்தியிடம் கீழ்ப்படிவதற்கு, சரணடைவதற்கு நம் மனத்தைத் தயார் செய்ய வேண்டும்.
நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் சண்டை போட்டுக்கொண்டே நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோமானால், நம்முடைய வாழ்க்கை நரகமாகிவிடும், எதுவுமே செய்ய முடியாது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அது நாம் அந்தப் பிரபஞ்ச
இருப்புத்தன்மையோடு நமக்கு இருக்கும்
ஆழமான இணக்கத்தை உணர்ந்துகொள்வது
எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதுதான்.
முதலில் கிருஷ்ணர், தனி மனித இருப்புத்
தன்மைக்கும் பிரபஞ்ச இருப்புத்
தன்மைக்கும் உள்ள விரோதத்தை நீக்குகிறார்.
இப்போது பிரபஞ்ச இருப்புத் தன்மையின்
மகிமைகளைச் சொல்கிறார்.
தனி மனித
இருப்புத் தன்மையும்
கடவுளும் ஒன்றே!
அடுத்தது, தனிமனித இருப்புத்
தன்மையும், எல்லாம்வல்ல பிரபஞ்ச
இருப்புத் தன்மையும் ஒன்றுதான் என்ற
அனுபவத்தைக் கொடுக்கிறார்.
படிப்படி-யாக, அவர் அர்ஜுனனை விசிஷ்டாத்வைதத்திலிருந்து துவைதத்திற்கு எடுத்து வருகிறார். (தனக்கென தனி தன்மைகளைக்கொண்ட தனி மனித இருப்புத் தன்மையானது அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான் என்று சொல்வது விசிஷ்டாத்வைதம். தனி மனித இருப்புத் தன்மை என்பது பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பதில் இருந்து வேறுபட்டது. இவை இரண்டும் தனித்தனியானவையே என்கிற கருத்தை வலியுறுத்துவது துவைதம்.)
பிறகு அத்வைத நிலைக்கு எடுத்து வந்து, பிறகு அத்வைதத்தைத் தாண்டிய அனுபூதியை, அனுபவத்தை அளிக்கிறார். (ஒருமைத் தன்மையை அதாவது
- பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதிதான் தனி மனித இருப்புத் தன்மையும் என்ற கருத்தை வலியுறுத்துவது அத்வைதம்.)
அவர் அர்ஜுனனை ஒரு ஆன்மீக அனுபவத்திற்குள் படிப்பிடியாக அழைத்துச் செல்கிறார்.
இதற்கு முன், நம்முடைய வாழ்க்கையின் இன்றியமையாத மூன்று அடையாளங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவை ஜீவன் - தனி இருப்புத் தன்மை; ஜகத் - இந்தத் தனி இருப்புத் தன்மைகள் வாழ்கிற உலகம், ஈச்வர - ஜீவனையும் ஜகத்தையும் அதாவது தனி இருப்புத் தன்மையையும் உலகத்தையும் உருவாக்குபவர், வேறு வார்த்தையில் சொன்னால் கடவுள்.
ஒரு நீர்த்துளி, கடலில் இருந்து தன்னைத் தனியாகப்பிரித்துப் பார்ப்பதுபோல, ஆரம்பத்தில் இந்த மூன்று பொருட்களையும்
தனித்தனியாகப் பார்க்கிறோம். இவை
மூன்றும் தனித்தனியானவைதான் என்று
நினைத்துக்கொள்கிறோம்.
இந்து தத்துவங்களில், ஒரு தனி இருப்புத்
தன்மையானது கடவுளை, படைத்தவரை,
தெய்வீக தன்மையை அடைவது எப்படி
என்பதற்கான பல்வேறு விதமான
வழிமுறைகள் உண்டு.
ஆழமான பக்திதான்
தனி மனித
இருப்புத் தன்மையையும்
கடவுளையும்
இணைத்து
வைத்திருக்கிறது!
-த்வைதம்
விசிஷ்டாத்வைத்தின் கருத்துகளும், த்வைதத் தின் கருத்துகளும் தனிமனித இருப்புத் தன்மையும் கடவுளும் தனித்தனியானவை, ஆழமான பக்திதான் இவை இரண்டையும் இணைத்து வைத்திருக்கிறது என்கிற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
பக்திதான் தனி மனித இருப்புத் தன்மையைக் கடவுளிடம் அழைத்து செல்லும், கடவுளைப் புரிந்துகொள்ள வைக்கும். ஆனாலும் கடவுளும் ஜீவனும் இரண்டும் தனித்தனியானவையே என்று சொல்கின்றன. இது எதைக் குறிக்கிறது என்றால், ஒரு நீர்த்துளி, தன்னைக் கடலின் ஒரு பாகம் என்று உணர்ந்தாலும், அது தனியானதுதான் என்பதைக் குறிக்கிறது.
அத்வைத தத்துவம், தனி மனித இருப்புத் தன்மையையும் கடவுளையும் இணைத்து ஒரே பொருளாகக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், அதனோடு இந்த ஜகத் - உலகத்தையும் ஒரே பகுதியாகக் காட்டுகிறது. இம்மூன்றும் பார்ப்பதற்குத் தனித்தனியாக தெரிந்தாலும், இவை வேறுவேறானவை கிடையாது என்று சொல்கிறது.
வேறுவேறானவை என்பது மாயை. தனி மனித இருப்புத் தன்மையும் கடவுளும் ஒன்றே என்ற ஒருமைக்கொள்கையை உண்மையாக உணர்ந்துகொண்டோமானால், அது விடுதலைக்கு, ஜீவன்முக்திக்கு வழிவ குக்கும்.

அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம்-இம்மூன்றும் ஒன்றையொன்று நிறைவு செய்பவையே!
விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் இந்த மூன்றுமே, ஒரே சூழ்நிலையை வெவ்வேறு வழிகளில் பார்ப்பதுதான்! இதில் எதையுமே தவறு என்று சொல்ல முடியாது.
‘இவை வெவ்வேறானவை’ என்கிற கருத்து நிலையில் இருந்து, ‘எல்லாம் ஒன்றே’ என்று புரிந்துகொள்ளும் நிலைக்கு அர்ஜூனனைக் கிருஷ்ணர் உயர்த்துகிறார்.
கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு ஒன்றைத் தெளிவாகப் புரிய வைக்கிறார். தமக்கும் அர்ஜூனனுக்கும் நடுவில், அர்ஜூனனுடைய புரிந்துகொள்ளும் தன்மையைத் தவிர எதுவுமே தடையாக நிற்கவில்லை என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறார்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இவையனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை கிடையாது.
பலபேர் என்னைக் கேட்பதுண்டு, ஸ்வாமிஜி, அத்வைதம், த்வைதம் எது சரி? விசிஷ்டாத்வைதம், த்வைதம் எது சரி?’’
அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை அல்ல. அவை ஒன்றையொன்று நிறைவு செய்பவையே. அவை நம்மைப் படிப்படியாக, மேலான புரிந்துகொள்ளுதலுக்கு அழைத்துச் செல்கின்றன. அவை படிப்படியாக நம்மை இறுதி ஆன்மீக அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
இந்தியாவில் அத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைத்திற்கும் இருக்கிற இந்தக் கருத்து வேறுபாடுதான் ஒரு பெரிய சண்டையாகவே இருக்கிறது.
‘‘சங்கரருடைய பாஷ்யம் (சங்கரரின் விளக்கம்) பெரிதா?’’ அல்லது ‘‘இராமானுஜரின் பாஷ்யம்
> அத்வைதம், த்வைதம்,
> விசிஷ்டாத்வைதம்-
> இந்த மூன்றுமே,
> ஒரே சூழ்நிலையை
> வெவ்வேறு வழிகளில்
> பார்ப்பதுதான்!
> இதில் எதையுமே
> தவறு என்று சொல்ல
> முடியாது.
பெரிதா?'' என்று சண்டை நடக்கிறது. சங்கரர் அத்வைதம் என்ற தத்துவத்தை ஏற்படுத்தினார். இராமானுஜர், த்வைதம் என்ற தத்துவத்தை ஏற்படுத்தினார். இதில் பிரச்சினை என்னவென்றால், இதன் ஆதரவாளர்கள் ஒருவர்கூட இந்தத் தத்துவங்களை முழுமையாகப் படிக்கவில்லை, ஆழமாகப் படிக்காமலேயே சண்டையிடுகிறார்கள்.
நாம் அதை ஆழமாகப் படித்தோமானால்,
அவையிரண்டும் ஒரே பொருளைத்தான் இரு
வேறு மொழிகளில் சொல்லி இருக்கின்றன
என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
எல்லா
ஜ்ஞாந குருமார்களும்
ஒரே விஷயத்தைத்தான்
வெவ்வேறு வழிகளில்
சொல்லி
இருக்கிறார்கள்.
எல்லா ஜ்ஞாந குருமார்களும் ஒரே விஷயத்தைத்தான் வெவ்வேறு வழிகளில் சொல்லி இருக்கிறார்கள்.
நாம் ச்ரணாகதி செய்தோமானால் அவர்கள் பெற்ற அதே அத்வைத அனுபவத்தை நாமும் பெறுவோம். நாம் அத்வைத தத்துவத்தின் அனுபவத்தை உணர்ந்தோமானால், நாம் ஆழமான ச்ரணாகதி உணர்வைப் பெற்று விடுவோம்.
அத்வைத அனுபவத்தை எந்த மனிதர் அடைகிறாரோ, அவர் அளப்பரிய பக்தி கொண்டவராக இருக்கிறார்.
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி துக்ரு’ஞ்கரணே
சங்கரர் சொல்கிறார், “ஓ மூடாளே! இப்போதே கோவிந்தனைத் தியானிக்கத் தொடங்கு. கோவிந்தனை நினைக்கத் தொடங்கு.
நஹி நஹி ரக்ஷதி துக்ரு’ஞ்கரணே என்பதன் பொருள்: எமதர்மன் வரும்போது, பட்டறிவுப் பூர்வமான அறிவு உனக்கு உதவாது. உன்னுடைய பட்டறிவுப்பூர்வமான அறிவு உனக்கு வழி காட்டாது. ஒரு சிறந்த அத்வைத ஞாநி (ஒருமைத்துவத்தை அனுபவமாக உணர்ந்த ஞாநி), ஒரு சிறந்த பக்தராகவும் இருப்பார். ஒரு சிறந்த பக்தர் அத்வைத ஞாநியாகவும் இருப்பார். இரண்டும் ஒன்றேதான். இந்த அனுபவத்தை உணராதவர்கள் மட்டும்தான் வாதிடுவார்கள்.
சேருமிடத்தை அறிந்தாலே, மதவெறிக்கு இடமில்லை
இராமகிருஷ்ணர் ஓர் அழகான கதை சொல்கிறார்:
ஒருமுறை நான்கு பேர் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு தண்ணீர்த் தொட்டிக்கு அருகே சென்றார்கள். ஒருவர், "நான் தண்ணீர் குடித்துவிட்டுவருகிறேன்," என்று சொன்னார்.
இன்னொருவர், "இல்லை, இந்தத் தொட்டியில் வாட்டர் மட்டும்தான் இருக்கிறது. 'தண்ணீர்' கிடையாது," என்றார்.
மூன்றாவது நபர், "இல்லை, நான்
பானி (ஹிந்தியில் தண்ணீரை இப்படிச்
சொல்வார்கள்) குடிக்கப் போகிறேன்," என்று
சொன்னார்.
நான்காவது மனிதர், "நான் நீரு
(கன்னடத்தில் தண்ணீருக்கான வார்த்தை)
குடிக்கப் போகிறேன்," என்றார்.
உடனே முதலாமவர் சொன்னார், "இந்தத்
தொட்டியைக் கட்டியதே என் தாத்தாதான்.
அவர் சொல்லி இருக்கிறார், இதில்
தண்ணீர்தான் இருக்கிறது."
அத்வைத
அனுபவத்தை
எந்த மனிதர்
அடைகிறாரோ,
அவர் அளப்பரிய
பக்தி கொண்டவராகவும்
இருப்பார்.
அடுத்தவர் சொன்னார், "இல்லை, அதில் 'வாட்டர்'தான் இருக்கிறது என்று என் தாத்தா சொல்லி இருக்கிறார்."
மற்றொருவர் சொன்னார், "என் தாத்தா பெரிய அறிவாளி. அவர் சொல்லி இருக்கிறார் இதில் இருப்பது 'நீரு'தான்."

நால்வரும் சண்டை போடத்
தொடங்கிவிட்டார்கள், அந்தத் தொ
ட்டிக்கு அருகில்க்கூட போகாமலேயே,
அதைப் பார்க்காமலேயே,
எப்போதும் பார்த்திராத அதன்
அருகில் சென்றுகூட பார்க்காமல் சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டு, இறந்து போனார்கள்.
அவர்களுக்கு அந்தத் தொட்டியின் அருகில் சென்று பார்க்கும் பொறுமை மட்டும் இருந்திருந்தால், நான்கு வார்த்தைகளும் ஒரே பொருளையே, ஒரே அர்த்தத்தையே கொடுக்கிறது என்பது புரிந்துபோய் இருக்கும். தண்ணீர், வாட்டர், பானி, நீரு என்று எல்லோருமே ஒரே பொருளைத்தான் சொன்னார்கள். ஆனால் அருகில் சென்று பார்க்கிற அளவிற்கு அவர்களுக்குப் பொறுமை இல்லை.
நாம் இதை அனுபவமாக உணர்ந்து கொண்டால், இராமானுஜர், சங்கரர், புத்தர், மத்வாச்சாரியர் ஆகிய அனைவரது அனுபவமும் ஒன்றே என்று நாம் புரிந்துகொள்ள முடியும்.
நீங்கள் தேவை என்பதால்தான் இங்கு இருக்கிறீர்கள்
ஒரு சின்ன கதை:
ஒரு புத்தகக் கண்காட்சியில் இருந்த வேதாந்த புத்தகக் கடையில், ப்றஹ்மஸூத்ரத்திற்கு சங்கரர் எழுதிய பாஷ்யமும், இராமானுஜர் எழுதிய பாஷ்யமும் இருந்தன. ஒரு வயதான பண்டிதர், மறை நூல்களை நன்கு படித்தவர், கடையில் நின்று கொண்டிருந்த விற்பனையாளரைப் பார்த்தார்.
அந்த விற்பனையாளருக்கு இந்தப் புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து எந்த அளவிற்குத் தெரியும் என்று நினைத்து அவர் வியந்தார். அவரைப் பார்த்துக் கேட்டார், "உங்களுக்கு சங்கர பாஷ்யத்திற்கும் இராமானுஜ பாஷ்யத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று தெரியுமா?" என்றார்.
அந்த விற்பனையாளர் சொன்னார்: "நாற்பத்து ஐந்து ரூபாய், ஐயா."
அவருக்குத் தெரிந்ததெல்லாம்
அவற்றினுடைய விலை மட்டும்தான்.
அந்தப் புத்தகத்திற்குள் என்ன இருக்கிறது
நாம் அத்வைத
தத்துவத்தின்
அனுபவத்தை
உணர்ந்தோமானால்,
நாம் ஆழமான
சரணாகதி உணர்வைப்
பெற்று விடுவோம்.
என்பது பற்றித் தெரியவில்லை, அவருக்கு வித்தியாசம் என்பது பணம் மட்டும்தான்.
கடவுள் தொடர்ந்து
குப்பைகளைச்
சுத்தப்படுத்திக்கொண்டே
இருக்கிறார்.
அவர்
தாமதிப்பதே இல்லை.
நீங்கள் ஆழமாக அத்வைத, த்வைத
தத்துவங்களைப் படித்தீர்கள் என்றால்,
இரண்டுமே ஒரே விதமான அறிவை,
ஞானத்தை, அனுபவத்தைத்தான் தருகின்றன
என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நமக்குத்
தெரிந்திருக்க வேண்டிய ஒரே ஒரு நுட்பம்
என்னவென்றால், திறந்த தன்மையுடன்
இருப்பதன் மூலம் இந்தப் பிரபஞ்ச
இருப்புத் தன்மையிடம் சரணடைவது எப்படி
என்பதுதான்.
அப்படிச் சரணடையும்போது, இந்தப் பிரபஞ்ச சக்தி நம்மைக் கவனித்துக்கொள்ளும் என்பதை நம்முடைய இருப்பு நிலையிலேயே உணரத்தொடங்கி விடுவோம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பிரபஞ்ச சக்திக்கு நாம் இங்கே இருப்பது பிடிக்கவில்லை என்றால் நம்மால் ஒரே ஒரு கணம்கூட இங்கே இருக்க முடியாது. இங்கே நம்மை உயிரோடு வைத்திருப்பதற்கு, பிரபஞ்ச சக்திக்கு எந்தக் காரணமும் இல்லை.
அது நம்மை உயிரோடு வைத்திருக்கிறது என்றால், அதற்கு நாம் தேவைப்படுகிறோம். இந்த உருவத்தில் இந்த வழியில், இந்த இடத்தில் நாம் தேவைப்படுகிறோம். அதனால்தான், நாம்ன்றும் உயிரோடு இருக்கிறோம்.
கடவுள் தொடர்ந்து குப்பைகளைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அவர் தாமதிப்பதே இல்லை. அவர் பழைய பொருட்களைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கிறார். தூய்மையைக் கடைப்பிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே!
அதனால்தான், தூய்மை என்பதைக் கடவுள் தன்மைக்கு அடுத்தபடியாகச் சொல்கிறார்கள், ஆனால் நான் சொல்கிறேன், 'தூய்மைதான் கடவுள்', அது கடவுளுக்கு அடுத்தபடியானதல்ல.
பிரபஞ்ச சக்திக்குத் தேவைப்படுபவராக நாம் இல்லாவிட்டால் நாம் உயிரோடு இருக்க முடியாது. நாம் உயிர் வாழ்வதாலேயே, நாம் தேவைப்படுகிறோம் என்பதை அவர் உறுதி செய்கிறார்.
நாம் தேவைப்படுபவர்களாக இருக்கிறோம். நாம் ஒரு விபத்து அல்ல; நாம் ஒரு சம்பவம், ஒரு நிகழ்வு. நாம், உயிரோடு இருப்பதை ஒரு விபத்தாக நினைக்காதீர்கள். நாம் உயிரோடு இருப்பது ஒரு நிகழ்வு. நாம் 'ஒரு நிகழ்வு' என்பதைப் புரிந்து கொண்டால், நமக்குப் பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு ஒரு ஆழமான தொடர்பு ஏற்படும். நாம் பிரபஞ்ச சக்திக்கு நம்மைத் திறந்து வைக்க முடியும்.
இரண்டு விதமான
வாழ்க்கை முறைகள்
இருக்கின்றன.
ஒன்று, முழுமையாக
நம்பிக்கை வைத்து
வாழ்வது;
மற்றொன்று,
முழுமையாகப்
பாதுகாப்பற்ற உணர்வில்
வாழ்வது.
நான் அன்பர்களிடம் சொல்வதுண்டு, "நம்புங்கள், உங்களை மற்றவர்கள் தங்களுடைய சுய நலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டாலும்கூட, நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள்."
"என்ன ஸ்வாமி? இப்படிச் சொல்கிறீர்கள். என்ன மாதிரியான அறிவுரையைக் கொடுக்கிறீர்கள்? எங்களை ஏமாற்றுபவர்களைக்கூட நம்பச் சொல்கிறீர்களா?" என்று நீங்கள் கேட்கலாம்.
thெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இங்கே இரண்டு விதமான வாழ்க்கை முறைகள் இருக்கின்றன. ஒன்று, முழுமையாக நம்பிக்கை வைத்து வாழ்வது; மற்றொன்று, முழுமையாகப் பாதுகாப்பற்ற உணர்வில் வாழ்வது.
பாதுகாப்பு இல்லாத உணர்வில் வாழ்பவர், நிறைய செல்வங்கள் வைத்திருக்கலாம். அவர்கள் இரண்டு மூன்று சோபாக்கள் அதிகம் வைத்திருக்கலாம். இரண்டு மூன்று படுக்கைகளையும், கொஞ்சம் பெரிய வீட்டையும் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அமைதியாக இருக்க முடியாது. பாதுகாப்பற்ற உணர்விலேயே வாழும் ஒருவர் எத்தனை செல்வங்கள் வைத்திருந்தாலும் ஆனந்தமாய் வாழ முடியாது.
ஆனால் இன்னொருபுறம், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மேல் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்பவர்கள், தங்களிடம் வசதிகள் குறைவாக இருந்தாலும், தாங்கள் வசதிகளை இழந்திருப்பதாக நினைப்பதே இல்லை. பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மேல் யார் நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் மீது ஆசீர்வாதம் பொழியப்படுகிறது. இந்தப் பூமியில் அவர்கள், கடவுளைப்போல வாழ்வார்கள். அவர்கள் இந்தப் பூமியில் ஒரு பூவைப்போல வாழ்வார்கள்.
அவர்கள், இந்த முழுப் பிரபஞ்சத்திற்குமே கிடைத்திருக்கும் ஒரு வரம். இந்த நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டும் தங்களிடமிருந்து பரவச் செய்து கொண்டும் இருக்கிற சில மனிதர்களால்தான், இந்தப் பூமி இன்னும் உயிரோடு இருக்கிறது. அவர்கள், தெய்வீக கருணையை வெளிப்படுத்தியபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆன்மீகத்திற்காக இந்தியாவை நோக்கித் திரும்பியே ஆகவேண்டும்
பைபிளின் ஆரம்பத்தில், கடவுள் ஆபிரஹாமிடம் சொல்கிறார், "ஒரு நாட்டில் பத்து நல்லவர்களையாவது பார்த்தேன் என்றால், அந்த நாட்டை அழிக்க மாட்டேன்.''
இந்தியாவின் மேல் பலமுறை படையெடுப்பு நடந்துள்ளது. ஆனால் இன்றளவும் இந்தக் கலாச்சாரம் உயிரோடு இருக்கிறது. பல படையெடுப்புகளுக்குப் பிறகும் பல தொல்லைகளுக்குப் பிறகும் இது நிலைத்திருக்கிறது. யாராலும் அசைக்க முடியவில்லை. ஏனென்றால் இது தொடர்ந்து ஞானிகளை உருவாக்கிக்கொண்டே இருப்பதால் யாராலும் இதைத் தொட முடியவில்லை!
இந்தியா, எவ்வளவு காலம் ஞானிகளை உருவாக்கி உலகிற்குத் தந்துகொண்டே இருக்கிறதோ, அவ்வளவு காலம்வரை அது அழியாது.
கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒரு
உண்மை புரியும்! ஒவ்வொரு நாடும் ஏதாவது
ஒரு விஷயத்தை மனித சமுதாயத்திற்குச்
கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
உதாரணமாக மேலை நாடுகள், சமுதாயக்
கட்டமைப்பை கொடுத்திருக்கின்றன.
அவர்கள் பல விதமான சமுதாய
அமைப்புகளைச் செயல்படுத்திப்
பார்க்கிறார்கள்.
ஜெர்மனி, மருத்துவ துறைக்கு அதன் பங்களிப்பை கொடுத்திருக்கிறது. அவர்கள்
> இந்தியா,
> எவ்வளவு காலம்
> ஞானிகளை உருவாக்கி
> உலகிற்குத்
> தந்துகொண்டே
> இருக்கிறதோ,
> அவ்வளவு காலம்வரை
> அது அழியாது.
மருத்துவத் துறையில் பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள்.
ஜப்பானியர்கள் தொழில்நுட்பத் துறைக்கு அவர்களுடைய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். சீனர்கள், உற்பத்தித் துறைக்குத் தங்கள் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஏதோ ஒரு வகையில், எல்லா நாடுகளுமே பங்களித்திருக்கின்றன.
இந்தியாவின் பங்களிப்பு ஜ்ஞான குருமார்களை உருவாக்கியதுதான். நாம் எதற்காக வேண்டுமானாலும் மற்ற நாடுகளுக்குப் போகலாம். ஆனால் ஆன்மீகத்திற்காக இந்தியாவை நோக்கித்தான் திரும்பி ஆகவேண்டும்.
எல்லாச் சிறந்த ஆன்மீகப் பாரம்பரியங்களும் இந்தியாவில்தான் பிறந்தன, சிறப்பான முறையில் வளர்க்கப்பட்டன. எல்லா ஆன்மீகப் பாரம்பரியங்களும் இந்தியாவில் இருந்துதான், அதற்குத் தேவையான அடிப்படையும், உத்வேகத்தையும் பெற்றிருக்கின்றன.
உங்கள் இருப்பே ஓர் ஆசீர்வாதம்
நாம் ஏமாற்றப்பட்டாலும்கூட, நம்புங்கள்! நாம் ஏமாற்றப்பட்டாலும்கூட
- நம்பிக்கையோடு வாழும்போது நாம் இந்தப் பூமியில் கடவுளைப்போல வாழ முடியும்.
இந்தப் பூமியில் அதிகபட்சமாக நாம் எழுபது அல்லது எண்பது ஆண்டு கள்தான் வாழப் போகிறோம். அந்த எழுபது, எண்பது ஆண்டுகளில் நாம் ஏன் தொடர்ந்து நம்மையும் துக்கப்படுத்திக்கொண்டு மற்றவர்களையும் துக்கப்படுத்த வேண்டும்?
> நம்பிக்கையோடு
> வாழும்போது
> நாம்
> இந்தப் பூமியில்
> கடவுளைப்போல
> வாழ முடியும்.
நாம் பாதுகாப்பற்ற உணர்வுடன் வாழும்
போதுதான், நம்மையும் துக்கப்படுத்திக்
கொள்கிறோம்; மற்றவர்களையும்
துக்கப்படுத்துகிறோம்.
நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய
இன்னொரு விஷயம், நாம் பாதுகாப்பற்ற
உணர்வுடன் இருக்கிற காரணத்தினால்,
நம்மைநாமே பாதுகாத்துக்கொள்ள
ஆரம்பிக்கும்போது, நாம் மற்றவர்களைத்
தாக்கத் தொடங்குகிறோம். அதோடு
மட்டுமல்லாமல் இந்தப் பூமியில் வாழ்வதால்
கிடைக்கும் ஆனந்தத்தையும் நாம் இழந்துவிடுகிறோம்.
நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று நம்பினால்கூட எவ்வளவு இழந்திருப்போம்? நாம் வைத்திருக்கும் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தால்கூட, அது ஒரு மணல் கோட்டையைவிட ஒன்றும் அதிகமானது அல்ல!
இந்து புராணங்களின் படி, வியாச முனிவர்தான் மற்ற எல்லாரையும்விட அதிக வயது வாழ்ந்தவர். அவரை ஒருவர் "ஏன் நீங்கள் வீடு கட்டிக்கொள்ளவில்லை?" என்று கேட்டார்.
அதற்கு வியாசர், "நான் சில ஆண்டுகள்தான் வாழப்போகிறேன். எதற்கு நான் வீடு கட்ட வேண்டும்? ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்?" என்றார்.
ஒரு ஜென் ஞானி சொல்கிறார், "குழந்தைகள் கடற்கரையில் காலைமுதல் மாலைவரை மணற் கோட்டைகளைக் கட்டுகிறார்கள், வீட்டிற்குப் போகும் முன் கொஞ்சம்கூட கவலைப்படாமல் அதை எல்லாம் இடித்து விட்டுப் போகிறார்கள்."
ஆனால் நாம் கொஞ்சம் விலையுயர்ந்த பொருட்களால் மாளிகைகளைக் கட்டுவதால் அவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம், இது தான், ஒரே வித்தியாசம்!
விஷயங்களை நாம் கடுமையாக எடுத்துக்கொள்கிறோம். குழந்தைகள் எதையும் கடுமையாக எடுத்துக்கொள்வதில்லை; ஏனென்றால் அவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்!
ஆழமான நம்பிக்கையோடு, முழு அமைதியான மன நிலையில் வாழும்போது நம்முடைய வாழ்க்கையே ஒரு பூவைப்போல மலர்ந்துவிடும். நாம் இருப்பதே ஒரு வரமாக இருக்கும். நம்முடைய 'இருப்பே' இந்தப் பூமையைக் காப்பாற்றும். நம்முடைய பாதையின் குறுக்கே எது வந்தாலும் சரி, நாம் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்போம். அது ஒரு வரம்.
அதிசயங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்துவிடும்
நாம் என்ன கொண்டு வந்தோம், இழப்பதற்கு? நம்முடைய பாதுகாப்பற்ற உணர்வு என்பது ஸத்யத்தைப் பற்றிய அறியாமையே தவிர, வேறெதுவும் இல்லை.
இறந்த பின் நம்மோடு நாம் எதை எடுத்துச் செல்லப் போகிறோம்? ஒன்றுமில்லை! ஓர் எளிமையான ஸத்யம் - நாம் எதையும் கொண்டு வரவும் இல்லை, அதேபோல எதையும் கொண்டு போகப் போவதும் இல்லை.
நாம் இங்கே இருக்கும்வரை பிரபஞ்ச சக்தி நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கையோடும் நிம்மதியோடும் நம்மால் இருக்க முடியும்.
நமக்குள் பாய்ந்து கொண்டிருக்கிற சக்தியால், நாம் உண்கிற உணவை இரத்தமாக மாற்ற முடியும்போது அந்தச் சக்தியால் நமக்கு உணவையும் கொடுக்க முடியாதா என்ன?
உணவை இரத்தமாக மாற்றும் இந்தச் செயல்முறையை இயந்திரங்களைக்கொண்டு செய்ய வேண்டும் என்றால், மூன்று மைல் நீளத்திற்கு அமைக்கப்பட்ட ஒரு பெரிய தொழிற்சாலையே தேவைப்படுகிறது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
ஆனாலும், இந்த மொத்தச் செயலும் நம்முடைய விழிப்புணர்வுடன்கூடிய முயற்சி இல்லாமலேயே, நம்முடைய உடலுக்குள் நடந்துகொண்டே இருக்கிறது.
> ஓர் எளிமையான
> ஸத்யம் -
> நாம் எதையும்
> கொண்டு
> வரவும் இல்லை,
> அதேபோல எதையும்
> கொண்டு போகப்
> போவதும்
> இல்லை.
நம்முடைய மூளை ஒரு செய்தியை உள்வாங்கி, அதை ஆராய்ந்து புரிந்துகொண்டு, அதற்கேற்ப திரும்பவும் இயங்குகிறது. நம்முடைய மூளைக்குள் நடக்கும் இந்த மொத்தச்செயல்முறையையும் ஒருகணினியில் செய்ய, மூன்று மாடியின் உயரத்திற்கு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதோடு மட்டுமல்லாமல், அது பத்து ஜெனரேட்டர்கள் ஓடும்போது ஏற்படும் சப்தத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கின்றன.
Anbar-gaḷ enniṭam "svāmi, ennūṭaiya manatu orē ārāvāramāka, orē sapthamāka irukkiratu. Ennāl amaithiyākavō, nimmathiyākavō irukku muṭiyavillai," enru solvārkaḷ.
அன்பர்கள் என்னிடம் “ஸ்வாமி, என்னுடைய மனது ஒரே ஆரவாரமாக, ஒரே சப்தமாக இருக்கிறது. என்னால் அமைதியாகவோ, நிம்மதியாகவோ இருக்க முடியவில்லை,” என்று சொல்வார்கள்.
“உன்னுடைய மனம் செய்யும் வேலையின் அளவைப் பார்க்கும் போது அது எழுப்பும் சப்தம், ஒரு சப்தமே அல்ல; அது மிகவும் அமைதியாகவே இருக்கிறது. அது சப்தம் செய்வதாக நினைக்காதீர்கள்,” என்று நான் சொல்லுவேன்.
பெரிய பிரச்சினையே, நம்முடைய சக்தியை நாம் நம்புவதில்லை; நாம் இந்தப் பிரபஞ்ச சக்தியையும் நம்புவதில்லை.
பிரபஞ்ச சக்தியினால், உணவை இரத்தமாக மாற்ற முடியும்போது, நம்முடைய சிறிய தேவைகளை அதனால் நிறைவேற்ற முடியாதா?
நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான உணவையும் மற்ற பொருட்களையும் சம்பாதிப்பதற்குத் தேவையான புத்திசாலித்தனத்தை அதனால் நமக்குக் கொடுக்க முடியாதா? பிரபஞ்ச சக்தியால் நம்மை வழிநடத்த முடியும்.
பிரபஞ்ச சக்திதான் இந்தக் கிரகங்களையும் முழுப் பிரபஞ்சத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. அதனால் நம்மைக் கவனித்துக்கொள்ள முடியாதா?
நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான உணவைத் தேடிக்கொள்வதற்குப் போதுமான புத்திசாலித்தனத்தை, அதனால் நமக்கு கொடுக்க முடியும். அந்தச் சக்திதான் இந்தக் கிரகங்களையும் முழுப் பிரபஞ்சத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. அதனால் நம்மைக் கவனித்துக்கொள்ள முடியாதா?
ஓர் உண்மைச் சம்பவம்:
இராமகிருஷ்ணரின் மனைவியான அன்னை சாரதா தேவி, ஒரு பொது நல மருத்துவமனையைத் திறந்து வைத்தார். அந்த மருத்துவமனையில் இரண்டு பிரிவுகள் இருந்தன.
ஏழை மக்கள் இலவசமாக மருந்து வாங்கிக்கொள்வதற்காக ஒன்றும், பணம் செலுத்தி மருந்து வாங்குவதற்காக இன்னொன்றும் இருந்தது.
மருத்துவமனையின் ஊழியர் ஒருவர்
அன்னை சாரதாதேவியிடம், "அம்மா,
பணக்காரர்கள்கூட ஏழைகளின் வரிசையில்
நின்று இலவசமாக மருந்துகளை வாங்கிப்
போகிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?"
என்று வருத்தத்துடன் கேட்டார்.
அதற்கு அன்னை சாரதாதேவி, "அதைப்
பற்றிக் கவலைப்படாதீர்கள். பணக்காரர்
ஏழைகளின் வரிசையில் நிற்கிறார் என்றால்
அவர் நிச்சயம் ஏழைதான். அவருக்கு
மருந்துகள் கொடுங்கள். அவரிடம்
பணம் இருந்தால்கூட, அவர் ஏழைதான்.
அவர் இங்கே பிச்சைக்காரராகத்தான்
வந்திருக்கிறார்," என்று பதில் அளித்தார்.
வெளி உலகச் செல்வம்,
ஒருவரை
ஏழையாகவோ,
பணக்காரராகவோ
ஆக்குவதில்லை.
'மனப்பாங்குதான்,
ஒருவரை
ஏழையாகவோ,பணக்காரராக
வா ஆக்குகிறது.
அவர் அழகாகச் சொல்கிறார், வெளி உலகச் செல்வம், ஒருவரை ஏழையாகவோ பணக்காரராகவோ ஆக்குவதில்லை. 'மனப்பாங்குதான், ஒருவரை ஏழையாகவோ பணக்காரராகவோ ஆக்குகிறது. இது 'மன நிலை'யைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது.
நீங்கள் நம்பிக்கையோடு வாழும்போது, நீங்கள் ஏமாற்றப்பட்டாலும்கூட, அதனால் உங்களுடைய வெளி உலகச் சுகங்களை எல்லாம் நீங்கள் இழந்தாலும்கூட, இந்தப் பூமியில் நீங்கள் கடவுளைப்போல வாழ முடியும்.
நீங்கள் வெறுமனே நடந்து கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் மிதந்துகொண்டிருப்பீர்கள். நீங்கள் தெய்வீக தன்மை கொண்டவராகவே மாறி விடுவீர்கள்.

ஜெ.கிருஷ்ணமூர்த்தி
சொல்கிறார், "நம்பிக்கை
எப்பொழுதும் நல்லதையே
செய்யும். துரதிர்ஷ்டவசமாக,
அது நம்முடைய வாழ்க்கையில்
வேலை செய்வதற்கு
அனுமதிக்கும் அளவிற்கு
நமக்குப் பொறுமைதான்
இருப்பதில்லை!"
நாம், விதை முளைக்கவும், மலர் மலரவும் அனுமதிக்க வேண்டும். ஒரு பாதுகாப்புப் படை வீரரைப் போல் கையில் ஆயுதத்தோடு, மலர் மலர்வதைக் கவனித்துக்கொண்டிருந்தால், அந்தப் பயமே மலரை மலரவிடாமல் செய்துவிடும்.
"இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் நம்பிக்கை வையுங்கள்," என்று நான் உங்களிடம் சொல்லும்போது, என்னுடைய பட்டறிவை அடிப்படையாக வைத்துச் சொல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.
நீங்கள் என்னை நம்பும்போது, என்னுடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கும்போது, பிரபஞ்ச சக்தியை நம்பும்போது, உங்களுடைய மன அழுத்தம், தலைவலி, கவலை, பிரச்சினைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபடும்போது, கண்டிப்பாக நீங்கள் கவனித்துக்கொள்ளப்படுவீர்கள். பிரபஞ்ச சக்தி உங்களைத் தன் பாதுகாப்பில் எடுத்துக் கொள்கிறது.
அதிசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும். உங்கள் சக்தி மொத்தத்தையும் நம்பிக்கையின்மேல் குவிக்கும்போது, ஏதோ ஒன்று உங்களுக்குள் நிகழும். ஓர் இரஸவாதம் உங்களுக்குள் நடக்கும்.
நிச்சயமாக நீங்கள்
## கவனித்துக்கொள்ளப்படுவீர்கள்
ஒரு சின்ன கதை:
ஜ்ஞான குரு ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவர் குளிக்கப் போகும்போது, தம்முடைய போர்வையை நதிக்கரையில் வைத்து விட்டுப் போனார்.
அந்த வழியாக வந்த அவருடைய சீடர் ஒருவர்
அந்தப் போர்வையைப் பார்த்தார். அந்தப்
போர்வையை யாராவது திருடிவிட்டால்
என்ன செய்வது என்று நினைத்து, குரு
வரும்வரை அதற்குக் காவலாக நின்று
கொண்டிருந்தார்.
குரு வந்ததும் அந்த மாணவர் கேட்டார்,
"ஸ்வாமி, யாரை நம்பி இந்த போர்வையை
இங்கு விட்டுவிட்டுப் போனீர்கள்? இதை
> உங்கள் சக்தி
> மொத்தத்தையும்
> நம்பிக்கையின்மேல்
> குவிக்கும்போது,
> உங்களுக்குள் ஓர்
> இரஸவாதம்
> நடக்கும்
யாராவது திருடி இருப்பார்களே!” என்றார்.
குரு சொன்னார், “யார் உன்னை இங்கே அனுப்பிக் காவல்காக்க வைத்தாரோ, அவரை (கடவுள்) நம்பித்தான் வைத்தேன்.”
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் சரணடையும்போது ஒரு முழுமையான அமைதி உங்களுக்குள் இருக்கும். உங்களுடைய பொறுப்புகள் எல்லாமே உங்களுக்கும் மேலான ஒருவரிடம் (கடவுளிடம்) கொடுக்கப்படும். இதுதான் சரணாகதி.
நீங்கள் கடமையைச் செய்யுங்கள், உங்களுடைய எல்லாப் பொறுப்புகளையும் அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் விட்டு விடுங்கள். அந்தச் சக்தியே பார்த்துக்கொள்ளும்.
ஆகவே நமக்கு இரண்டே இரண்டு வழிகள்தான் உண்டு, ஒன்று நாம் தொடர்ந்து எதிர்ப்புணர்வோடும் தடுப்புணர்வோடும் வாழலாம்.அந்த நிலையில் நமக்கு வசதிகள் இருந்தாலும்கூட, நம்முடைய இருப்புத் தன்மை ஒரு காயத்தைச் சுமந்துகொண்டேதான் இருக்கும்.
Mற்றொன்று, அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் பூரண நம்பிக்கை வைத்து, முழு நிம்மதியுடனும், முழுச் சுதந்திரத்துடனும் கூடிய ஒரு தளர்வான வாழ்க்கையை வாழலாம். இப்படி வாழும்போது, நமக்கு உடல் ரீதியான, மன ரீதியான, உணர்வு ரீதியான, உளவியல் ரீதியான சுதந்திரம் இருக்கும். நமக்கு இங்கேயே இப்பொழுதே சுதந்திரம் கிடைத்துவிடும்.
நாம் நம்பிக்கையோடு வாழ ஆரம்பிக்கிற அந்தக் கணமே நாம் சுதந்திரமடைந்து விடுகிறோம். அப்போது எதுவும் நம்மைக் காயப்படுத்தாது.
நாம் வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழ்ந்தால், நம்முடைய மரணத்தைக்கூட நாம் அழகாக வாழ முடியும்; ஏனென்றால் அப்போதும் பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்மைக் கவனித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.
நாம் நம்பிக்கையில்லாமல் வாழும்போது, மரண பயமே நம்மைக் கொன்றுவிடும். ஒவ்வொரு நிமிடமும் நாம் இறந்துகொண்டே இருப்போம். நம்பிக்கை இருந்தால் நம்முடைய மரணத்தின் போதுகூட வாழ்ந்து கொண்டிருப்போம், அதைக் கொண்டாடிக்கொண்டிருப்போம். கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை நம்மால் ஆழமாக உணர முடிந்தால், இங்கே தளர்வான நிலையில் நம்மால் இருக்க முடிந்தால், கிருஷ்ணர் தம்முடைய மகிமைகளை பற்றிச் சொல்லும்போது எதை விளக்கினாரோ அதே நிலையை நாம் இங்கேயே அனுபவமாக உணர முடியும்.
கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் சரணடைதல் பற்றிச் சொன்னீர்கள். எல்லாவற்றையும் துறப்பதும் இதுவும் ஒன்றா?
ஆமாம், அது அப்படித்தான்; ஆனால் அப்படி இல்லை! சரணாகதி என்பது துறவு நிலையையும் உள்ளடக்கியதுதான். ஆனால் துறவு நிலையைவிட உயர்ந்தது. உண்மையான துறவு நிலையோடு இணைந்து இதுவும் நிகழும்.
'துறவு' என்றால் ஒருவர் தம்முடைய எண்ணங்கள், சொல், மற்றும் செயல்களின் விளைவுகளை, பலன்களை விட்டுவிடுவது அல்லது அதனை பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் சமர்ப்பித்து விடுவது என்று பொருள்.
நீங்கள் செய்ய வேண்டிய செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருங்ங்கள். அப்போது மட்டுமே, நீங்கள் செயலற்ற தன்மையிலோ அல்லது சோம்பேறித்தனத்திலோ விழ மாட்டீர்கள். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், முடிவுகளில் பற்று வைக்காமல், எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பீர்கள்.
சரணடையும்போது
நீங்கள் வெற்றியோ
தோல்வியோ அடையப்
போவதில்லை.
ஏனென்றால் உங்கள்
வாழ்வில் இந்த இரண்டு
வார்த்தைகளுக்குமே
அர்த்தம் இல்லை.
இந்த நிலையில் வெற்றியும் தோல்வியும்
ஒரு விஷயமே இல்லை. ஏனென்றால்
இது இரண்டுமே உங்களை வரையறுக்கப்
போவதில்லை. நீங்கள் வெற்றியோ
தோல்வியோ அடையப் போவதில்லை.
ஏனென்றால் உங்கள் வாழ்வில் இந்த இரண்டு
வார்த்தைகளுக்குமே அர்த்தம் இல்லை.
நீங்கள் செயல்படுங்கள், என்ன நிகழ்ந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். கிருஷ்ணர், கீதை முழுவதும் இதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறார். உங்களுடைய செயல்களுக்கான விளைவுகளை, பலன்களைத் துறந்துவிடும் பயிற்சியைச் செய்யும்போது, அவை உலகியல் சார்ந்த பலன்களாக இருந்தாலும் சரி, உறவுகள் அல்லது நிகழ்ச்சிகள் சார்ந்த பலன்களாக இருந்தாலும் சரி அந்தச் செயல்களின் மேலிருக்கும் உங்களுடைய சொந்தப் பற்றுக்களை விட்டுவிடுவீர்கள்.
உங்களுடைய அஹங்காரத்தை விட்டு விடுங்கள். உங்களுடைய அஹங்காரத்தை விட்டுவிடும்போது, நீங்களும் மற்றவர்களும் வேறுவேறானவர்கள் இல்லை, நீங்கள் மற்றவர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்தான் என்ற உண்மையோடு உங்களால் தொடர்புகொள்ள முடியும்.
இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வில் நீங்கள் ஒரு பகுதியாக இருப்பதைப்போலவே மற்ற எல்லா உயிர்களும்கூட இதில் ஒரு பகுதியாக இருக்கின்றன. நீங்கள் பிரபஞ்சத்தோடு இணைந்திருப்பதுதான் சரணாகதி. இனிமேல் உங்களுக்கு 'நான்' என்கிற தனிப்பட்ட அடையாளம் இருக்காது. இதுதான் முழுமையான துறவு அல்லது சரணாகதி.
ஒரு சீடர், சரணாகதி மனப்பான்மையை ஒரு குருவிடம் வளர்த்துக்கொள்ளும்போது, அது அவரைத் துறவு நிலைக்கு எடுத்து செல்லும். அதனால்தான் என்னுடைய சீடர்களை சரணாகதி அடையச் சொல்லி உற்சாகப்படுத்துகிறேன்.
நீங்கள் சரணாகதி அடைவதால் எனக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. இந்தச் சங்கத்தைப் பொருளாதார ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் நடத்துவதற்குத் தேவையான எல்லாவற்றையும் பிரபஞ்சமே கொடுத்துவிடும். இது, பிரபஞ்ச சக்தியின் சங்கம், ஆறு அடி நித்யானந்தருடைய சங்கம் கிடையாது. நீங்கள் குருவிடம் சரணடையத் தொடங்கும்போது, உங்கள் அஹங்காரத்தைக் கீழே போடுவதற்கான முதல் அடியை எடுத்துவைக்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவை எடுக்கிறீர்கள்.
நீங்கள் ஜீவன் முக்தியை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். என்னுடைய கவனமெல்லாம், இந்த முதல் அடியால் உங்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மை என்ன என்பது பற்றியதுதான்.
குருவை நோக்கி நீங்கள் முதல் அடியை எடுத்து வைத்து விட்டால், குரு உங்களைக் கவனித்துக்கொள்கிறார். பிரபஞ்சமே உங்களைக் கவனித்துக்கொள்கிறது.
நானே பரபிரம்மம்

கடவுளை வணங்குபவர்களுக்கும், மிகப்பெரிய துறவிகளுக்கும்கூட என்னுடைய 'மூலம்', என்னுடைய பெருமை பற்றித் தெரியாது.
தெய்வங்களுக்கும் ஞானிகளுக்கும் நான் ஆதாரமாக இருக்கிறேன்.
யார் ஒருவர், என்னைப் பிறப்பும் தொடக்கமும் இல்லாதவன் என்றும், எல்லா உலகங்களுக்கும் கடவுள் என்றும் தெரிந்துகொள்கிறாரோ, அவருக்கு மட்டுமே அறிவில் தெளிவு கிடைக்கிறது. அவர் எல்லாப் பந்தங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், "தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும்கூட என்னைத் தெரியாது." அதாவது, சுகங்களுக்காகவும் ஆடம்பரங்களுக்காகவும் செயல்படுபவர்களாலும் அவரை அறிந்துகொள்ள முடியாது; சமய சடங்குகளையும் தவங்களையும் செய்பவர்களாலும்க்கூட அவரை உணர முடியாது என்று சொல்கிறார். "ஆனால் நானே அவர்களின் ஆதாரமாக, மூலமாக இருக்கிறேன்," என்கிறார்.
நாம் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி, பொருள் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி, நம்முடைய வேராக இருப்பது நம்முடைய விழிப்புணர்வுதான். ஒரு முக்கியமான விஷயம்: "என்னை, என்னை," என்று கிருஷ்ணர் சொல்லும் போதெல்லாம் அவர், தம் ஞானமடைந்த விழிப்புணர்வு நிலையைத்தான் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
கடவுளை உணர்ந்தவருக்கு எந்த வெறியும் இருக்க முடியாது
ஒரு நிஜமான சம்பவம்:
கிருஷ்ண பக்தர்களுடைய மாநாட்டிற்கு என்னை அழைத்திருந்தார்கள். பக்தர்கள் என்று சொல்லக் கூடாது, ஏனென்றால் அது ஓர் அழகான வார்த்தை. அவர்கள் மத ஆதரவாளர்கள்போல இருந்தார்கள். நான் மிகவும் பணிவாகவும் மரியாதையாகவும் நட்பුණர்வோடும் போனேன்.
திடீரென அவர்கள், நேருக்கு நேராக என்னோடு வாதாட ஆரம்பித்து விட்டார்கள்.
"உங்களுக்குக் கீதையில் நம்பிக்கை இருக்கிறதா?" என்றார்கள்.
> நாம் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி, பொருள் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி, நம்முடைய வேராக இருப்பது நம்முடைய விழிப்புணர்வுதான்.
நான், "ஆமாம்! கீதை, முழுமையான ஞானத்தை உணர்த்தும் ஓர் நூல். நான் அதை மதிக்கிறேன், அதைப் போற்றுகிறேன்," என்று சொன்னேன்.
உடனே அவர்கள், "அப்படி என்றால் எதற்காகச் சிவனை வழிபடுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவர்கள், "நீங்கள் கிருஷ்ணரை மட்டும் தானே வழிபட வேண்டும். ஏன் சிவனை வழிபடுகிறீர்கள்?
ஏன் நெற்றியில் விபூதி பூசுகிறீர்கள்? ஏன்
ருத்ராக்ஷம் அணிகிறீர்கள்?” என்று கேட்கத்
தொடங்கிவிட்டார்கள்.
நான் அவர்களைப் பார்த்துக் கேட்டேன்,
“சிவனை வழிபடுவதும், ருத்ராக்ஷம்
அணிவதும் கீதையைப் பின்பற்றுவதற்கு
எப்படி முரண்பாடாகும்?”
“கிருஷ்ணர் கீதையில், ‘நானே அனைத்துமாக
இருக்கிறேன்’ என்று சொல்கிறார், அதனால்
நீங்கள் எப்படிச் சிவனை வழிபடலாம்?”
எனக்கு ஒரே ஆச்சரியம்.
> கிருஷ்ணர்,
> “நான்” என்று
> சொல்லும்
> போதெல்லாம்
> அவர் தம்முடைய
> பரப்ரம்ம
> ஸ்வரூபத்தைத்தான்
> சொல்கிறார்.
நான் சொன்னேன், “கிருஷ்ணர், ‘நான்’ என்று சொல்லும் போதெல்லாம் அவர் தம்முடைய பரப்ரம்ம ஸ்வரூபத்தைத்தான் சொல்கிறார். அவர் தம்முடைய இருப்புத் தன்மையினுடைய உருவமற்ற விழிப்புணர்வைத்தான் அப்படிச் சொல்கிறார். அவர் பிரபஞ்ச சக்தியின் விளக்கமாக, பிரதிநிதியாக இருக்கிறார்.
கையில் புல்லாங்குழலோடும், தலையில் மயில் இறகோடும், ஆறடி உயரத்தில் இருக்கும் அவருடைய உருவத்தை அவர் சொல்லவில்லை. அவருடைய உருவம், நம்மை உருவமற்ற தன்மைக்கு எடுத்துச் சென்றால்தான், அது அழகுடையதாகிறது,” என்று சொன்னேன்.
அவர், தம்முடைய அந்த ஆறடி உருவத்தைக் குறிப்பிட்டிருந்தால், “விவஸ்வானுக்கு இந்த அறிவைக் கொடுத்தேன்,” என்று அவரால் எப்படிச் சொல்ல முடியும்?
“நான் இந்த ஞானத்தைக் சூரியனுக்குக் கொடுத்தேன், அவர் இந்த அறிவை மனுவுக்குக் கொடுத்தார், பிறகு அங்கிருந்து இக்ஷ்வாகுவுக்கு வந்தது,” என்கிறார். தாம் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த இந்த சிறந்த மனிதர்களுக்கு அவரே இந்த அறிவைக் கொடுத்ததாகக் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
கீதை பிறந்தபோது கிருஷ்ணருக்கு முப்பத்தியிரண்டு வயதுதான். அவர் தம் உருவத்தைப் பற்றி மட்டும் பேசியிருந்தால், அவரால் எப்படி இதைச் சொல்ல முடியும் “நான் இந்த ஞானத்தைக் சூரியனுக்குக் கொடுத்தேன்,” என்று கிருஷ்ணர் சொல்கிறார். கிருஷ்ணர் 'நான்' என்று சொல்கிற போதெல்லாம், பிரபஞ்ச விழிப்புணர்வைத்தான் குறிப்பிடுகிறார்.
உடனே என்னைச் சுற்றி வாதிட்டுக் கொண்டிருந்தவர்கள், "உருவமும் சஃக்தியும் வேறு வேறு என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? அவர் 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் அவர் உருவத்தையும் சேர்த்துத்தானே சொல்கிறார்," என்றார்கள்.
அதற்கு நான், "நான் கிருஷ்ணருடைய உருவத்தை அவமரியாதை செய்யவில்லை. உருவம், சஃக்தியைப் பிரதிபலிக்கும்போது, அந்த உருவம்கூட சஃக்திதான், அதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்காக இன்னொரு உருவத்தை வணங்கக் கூடாது என்று அர்த்தமில்லை. நீங்கள் மதவெறியர்களாக மாற முயற்சிக்க வேண்டியதில்லை," என்று விளக்கினேன்.

திரும்பவும் ஒருவர் வாதிட ஆரம்பித்தார், "கிருஷ்ணர் 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் உருவத்தைச் சொல்லவில்லை, சஃக்தியைத்தான் சொல்கிறார் என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?" என்றார்.
பிறகு நான் மகாபாரதத்தில் இருக்கும் இன்னொரு வேத நூலான அனுகீதையில் இருந்து குறிப்புகளைச் சொன்னேன். இது பகவத்கீதைக்குப் பிறகு கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்னது.
போர் முடிந்த பிறகு, ஒரு நாள் அர்ஜுனன் கிருஷ்ணரிடம், "கிருஷ்ணா, தயவு செய்து நீங்கள் இதற்கு முன் சொன்னதை இப்போது மீண்டும் சொல்லுங்கள். நீங்கள் சொன்னதின் சாரம் மட்டும் நினைவில் இருக்கிறது.
ஆனால் அந்த வார்த்தைகள் நினைவில் இல்லை. ஏனென்றால் நீங்கள் அவற்றைப் போர்க்களத்தில் சொன்னதால் நான் மறந்துவிட்டேன். நான் அந்த வார்த்தைகளை மறந்துவிட்டேன். தயவுசெய்து மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள். அந்தச் சிறந்த போதனையை நான் மீண்டும் கேட்க ஆசைப்படுகிறேன்," என்றார்.
கிருஷ்ணர் சொன்ன பதிலைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படலாம், கிருஷ்ணர் சொல்கிறார், "அர்ஜுனா நீ மட்டும் அல்ல, நானும் அதை மறந்து விட்டேன்!" என்கிறார்.
ந சாத்யம் தந்மயா பூயஸ்தத:
பூக்தோம் அஶேஷத: பரம் ஹி
ப்ரஹ்ம ரதி யோக யுக்தேன தந்மய:
மஹாபாரதத்தில் அஶ்வமேதிக பர்வ என்ற பகுதியில் இது இருக்கிறது.
கிருஷ்ணர் சொல்கிறார், "அர்ஜுனா, அந்த நுட்பத்தைத் திரும்பவும் என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் அவை, உயர்ந்த ஆதியந்தமற்ற விழிப்புணர்வு நிலையில் இருந்து சொல்லப்பட்டவை.
அந்த நேரத்தில் நான் உயர்ந்த, எல்லையற்ற, நிலையான விழிப்புணர்வு நிலையில் இருந்தேன். நான் என் முக்தி நிலையை வெளிப்படுத்தினேன். அந்த முக்தி நிலையே, அந்த ஞானமே என்னுள் இருந்து பேசியது. பிரபஞ்ச விழிப்புணர்வு என் மூலமாகப் பேசியது. அந்தப் பிரபஞ்ச சக்தியே தன்னை என்னிடமிருந்து வெளிப்படுத்திக் கொண்டது. அதனால்தான் அந்த உபதேசங்கள் எல்லாம் வெளிப்பட்டன.
நான் அந்த நேரத்தில் அந்தப் பிரபஞ்ச சக்திக்கு, அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுக்குப் பிரதிநிதியாக இருந்து அதை வெளிப்படுத்தினேன். இப்போது என்னால், அதே உபதேசங்களை உனக்குக் கொடுக்க முடியாது," என்று சொன்னார்.
அவரே சொல்கிறார், "அந்த விஷயங்கள் அனைத்தும் உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தப்பட்டவை."
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர் 'நான்' என்று சொல்லும் போதெல்லாம், ஞானசக்தியை, பிரபஞ்ச விழிப்புணர்வைத்தான் சொல்கிறார். எப்படியோ சில விஷயங்களை ஞாபகப்படுத்தித் திரும்பவும் அர்ஜூனனுக்குச் சொல்கிறார். அப்படிச் சொல்லப்பட்டதுதான் 'அனு கீதை'.
நான் இந்த ஸ்லோகத்தைச் சொன்னபோது, என்னிடம் வாதிட்டுக் கொண்டிருந்த மூத்த மத பண்டிதர்கள், "நீங்கள் பார்க்க சின்ன பையனாக இருந்தாலும், நிறைய படித்திருப்பீர்கள் போலிருக்கிறது. எங்களால் உங்களோடு வாதிட முடியாது," என்று போய்விட்டார்கள். இந்த ஸநாதந தர்மத்தின் சிறப்பு என்னவென்றால், ஸநாதந என்றால் நிலையான என்று பொருள்; தர்மம் என்றால் நேர்மையான, நெறிமுறை தவறாத என்று பொருள்; ஸநாதன தர்மம் நிலையான நெறி தவறாத மதம்.
பிறகு இதுவே இந்து மதம் என்று அழைக்கப்பட்டது. இது, மதத்தைப் பரப்புவதும் இல்லை; மத வெறியை உருவாக்குவதும் இல்லை.
நீங்கள் கிருஷ்ணர், இயேசு, முகம்மது, புத்தர் என்று யாரை வழிபட்டாலும் சரி, ஒரு வித்தியாசமும் இல்லை. நீங்கள் யாரை நம்புகிறீர்களோ, உங்களால் யாரோடு தொடர்புகொள்ள முடிகிறதோ அவரை வணங்குங்கள். அது போதும்.
உங்கள் வழியில் நீங்கள் ஆழ்ந்து இருங்கள். வேறு எதையும் செய்யத் தேவையில்லை. இங்கே மதவெறி இருக்கவேண்டிய அவசியம் இல்லை; ஏனென்றால் எல்லா உருவங்களும் அந்த இறை சக்தியின் பிரதிபிம்பங்களே.
விடுதலையை நோக்கி அழைத்துச் செல்வதே ஆன்மீகத்தின் அடித்தளம்
இந்த இடத்தில், கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்கிறார், "நான் அரூபத்தை, உருவமற்ற சக்தியை வணங்குபவன். நான் உங்கள் சீடராகி தியான பாதையைப் பின்பற்ற முடியுமா?'
பதில்: அப்போது மட்டுமே நீங்கள் என்னுடைய சீடராகவே ஆக முடியும்!
அரூபத்தை வழிபட்டால்தான் என்னுடைய சீடராக முடியும். இங்கு ஒரு கண்டிப்பான கட்டளை இருக்கிறது. அது, அவர்கள் என்னுடைய உருவத்தை தியானம் செய்யக்கூடாது என்பதுதான்.
நீங்கள் ஏதாவது ஒரு தியான முகாமில் கலந்துகொண்டிருந்தால் உங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு கண்டிப்பான அறிவிப்பு இருக்கும்: என் உருவத்தின் மேல் தியானம் செய்யக் கூடாது என்பதுதான் அது.
அதுமட்டுமல்லாமல், விழிப்புளோடு இருங்கள், எந்த குருவாவது அவர் உருவத்தை த்யானம் செய்யச் சொன்னால், அவரிடம் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். நீங்கள் வலையில் விழுகிறீர்கள். நீங்கள் மறைமுகமாக அடிமையாக்கப்படுகிறீர்கள். அதைச் செய்யவே செய்யாதீர்கள். நீங்கள் மெதுவாக ஏமாற்றப்படுவீர்கள்.
ஆன்மீக அடிமைத்தனம் மிக மோசமான அடிமைத்தனம். அதற்குள் அகப்பட்டுக்கொள்ளாதீர்கள்.
குரு
தெய்வீக விழிப்புணர்வைப்
பிரதிபலிக்குகிறார்.
நீங்கள்
உருவத்தைப்
பிடித்துக் கொண்டால்
தெய்வீகத்தை
இழந்து விடுவீர்கள்.
ஆன்மீகத்தின் அடித்தளமே நம்மை விடுதலையை நோக்கி அழைத்துச் செல்வதுதான். ஆன்மீகத்தில், அடிமைத்தனத்திற்குள் சிக்கிக்கொண்டால், கடவுள்கூட உங்களைக் காப்பாற்ற முடியாது. அதனால் என் உருவத்தின் மீது த்யானம் செய்யாதீர்கள்.
த்யான சிகிச்சை தீக்ஷையின்போது, தெளிவாக அறிவுறுத்துவோம். நீங்கள் என் உருவத்தின் மீது த்யானம் செய்யக் கூடாது. இந்த உருவம் இன்று இருக்கும், நாளை இருக்காது. இது நாளை மறைந்துவிடலாம். உருவம் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்கும்?
உருவங்கள் இங்கே நிலையாக எப்போதும் இருக்க முடியாது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உருவம் என்பது பிரதி பிம்பம். இது, ஒரு விரல் சந்திரனையோ சூரியனையோ காட்டிக்கொண்டிருப்பது போல். நான் “சூரியன் அங்கே இருக்கிறது, சந்திரன் அங்கே இருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்

நீங்கள் சந்திரனையோ சூரியனையோ பிடித்துக் கொள்வதற்குப் பதிலாக, என் விரலைப் பிடித்துக் கொண்டீர்களானால், நான் என்ன காட்டுகிறேன் என்பதை விட்டுவிடுவீர்கள். நான் எதைப் பிரதிபலிக்கிறேன் என்பதை விட்டு விடுவீர்கள். விரல் சந்திரனைக் காட்டும்போது, நீங்கள் விரலைப் பிடித்துக் கொண்டீர்களானால், நீங்கள் சந்திரனை விட்டு விடுவீர்கள்.
அதேபோலத்தான், குரு தெய்வீக விழிப்புணர்வைப் பிரதிபலிக்கிறார். நீங்கள் உருவத்தைப் பிடித்துக் கொண்டால் தெய்வீகத்தை இழந்து விடுவீர்கள்.
உருவத்தில் ஒருபோதும் சிக்கிக்கொள்ள வேண்டாம். நான் பக்தர்களிடம் சொல்கிறேன், "என் உருவத்தின் மீது த்யாணம் செய்யாதீர்கள்."
Yாராவது தம்முடைய உருவத்தை நினைத்து த்யாணம் செய்யச் சொன்னால், அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், தப்பித்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
தேடுதல், உடனடித் தேவையாக வேண்டும்
நான் விரும்புவது இதுதான்; கிருஷ்ணர், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம், பிரபஞ்ச விழிப்புணர்வைத்தான் சொல்கிறார் என்கிற புரிதல் உங்களுக்குள் மலர வேண்டும் என்பதுதான்.
அடுத்த ஸ்லோகத்தில், அவர் மூட:- - முட்டாள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். மீண்டும் 'முட்டாள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். யார் ஒருவர் தம்முடைய பாவங்களில் இருந்து விடுபட்டவராய் இருக்கிறாரோ, அவரால்தான் அவரைப் புரிந்துகொள்ள முடியும் என்று சொல்கிறார்.
உருவத்தில்
ஒருபோதும்
சிக்கிக்கொள்ள
வேண்டாம்.
நான் பக்தர்களிடம்
சொல்கிறேன்,
"என் உருவத்தின் மீது
த்யானம் செய்யாதீர்கள்."
மீண்டும் மீண்டும் அவர் எதைச் சொல்ல
விரும்புகிறார்? அவரை அனுபவமாக
உணர வேண்டும் என்றால், என்ன தகுதியை
நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்?
இங்கே இன்னொரு கேள்வி: "ஸ்வாமி,
எங்களுக்குத் தேவையானதெல்லாம், ஒரு
சாதாரண 'புரிந்துகொள்ளும் தன்மை'யே
என்று நீங்கள் மீண்டும் மீண்டும்
சொல்கிறீர்கள்.
சரியாக நான் எதைத் தவற விடுகிறேன்
என்பதைச் சொல்லுங்கள். எனக்கு அந்தப்
புரிந்து கொள்ளும் தன்மை இருப்பதாக
நான் நினைக்கிறேன். ஏறத்தாழ அதன்
எல்லையில் நிற்பதாக நினைக்கிறேன்.
இருந்தும், கிருஷ்ணர் என்ன சொல்கிறார்
என்பதை அனுபவமாக என்னால் உணர
முடியவில்லை.
நான் எதைத் தவறவிட்டுக்
கொண்டிருக்கிறேன்? எங்கே தவற
விடுகிறேன்? தயவு செய்து சொல்லுங்கள்.''
பதில்: நாம், எங்கே எதைத் தவறவிடுகி றோம்? நான் இதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்தக் கேள்வியைக் கேட்டவர், முற்றிலும் ஏமாற்றமடைந்தவராக இருக்கிறார்.
"ஒவ்வொரு நாளும் உங்கள் உரையின் முடிவில், உள் உலகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிற ஒரே புள்ளியில்கொண்டு வந்து எல்லாவற்றையும் முடித்து விடுகிறீர்கள். குறிப்பாக என்னிடம் இருக்கிற குறைபாடு என்ன? தயவு செய்து சொல்லுங்கள்,'' என்று அவர் கேட்கிறார்.
ஒவ்வொரு நாளும் அந்த இடத்திலேயே நிறுத்தக் காரணம், நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான்.
உங்களுக்குள் எங்கே குறைபாடு இருக்கிறது என்பதை இப்போது என்னால் சொல்ல முடியும். முதலில் உங்களுக்குள் இந்தத் தாகம் உருவாக்கப்பட வேண்டும். இந்தத் தேடல் உருவாக்கப்பட வேண்டும், பிறகுதான் அந்தத் தேடலுக்கு விடை கொடுக்கப்பட வேண்டும்.
கேள்வி, தேடலாக மாறும்போதுதான் நீங்கள் இந்த மொழியில் பேசு வீர்கள். தேவை, உடனடித் தேவையாக மாறும்போதுதான், நீங்கள் இந்த மொழியில் பேசுவீர்கள்.

மற்ற குருமார்களிடம் சென்றும் கற்காமலிருப்பதே தவறு
ஒரு சின்ன கதை:
ஒரு கல்லூரி மாணவி கணக்குப்பாடத்தில் மிகவும் குறைவான மதிப்பெண்கள் பெறுபவராகவும் அதில் பலவீனமானவராகவும் இருந்தார். எப்படியாவது கணக்குப் பரீட்சையில் தேர்ச்சி பெற விரும்பினார். அதனால் அவருடைய கணக்குப் பேராசிரியரின் அறைக்குப் போனார்.
அந்த மாணவி கதவைச் சாத்திவிட்டு அவர் அருகில் போய், அவருடைய கண்களை உற்றுப் பார்த்து ஏதோவொரு அர்த்தத்தோடு சொன்னார், "நான் இந்தப் பரீட்சையில் தேர்ச்சி பெற என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்."
அந்தப் பேராசிரியரும் அந்தப் பெண்ணுடைய கண்களை ஆழமாகப் பார்த்துக் கேட்டார், "உண்மையாகவே நீ தேர்ச்சி பெற என்ன வேண்டுமானாலும் செய்வாயா?"
அந்தப் பெண் சொன்னார், "செய்கிறேன்."
"உன்னால்... படிக்க முடியுமா?" என்று கேட்டார் பேராசிரியர்!
ஆன்மீகத்தில் நம்முடைய ஆர்வமும் இப்படித்தான் இருக்கிறது. நம்முடைய தேடல் என்பது இந்த அளவுக்குத்தான் இருக்கிறது.
தேடல் உள்ள பல பேர், கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கும் window shoppers போலத்தான் இருக்கிறார்கள். பலபேர் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்ப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு குருவிடம் இருந்து இன்னொரு குருவிடம் சென்றுகொண்டே இருப்பார்கள்.
ஒரு குருவிடம் இருந்து மற்றொரு குருவிடம் செல்வது தவறல்ல. இது முழுமையாகச் சரியானதே. ஆனால் யாரிடமிருந்தும் எதையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் தவறு.

மீண்டும் மீண்டும், நான் மக்களிடம்
சொல்வது, “எல்லாத் தோட்டங்களுக்கும்
சென்று மலர்களைப் பறித்து ஒரு அழகான
பூங்கொத்தாக மாற்றிக்கொள்ளுங்கள்.”
ஆனால் நாம் என்ன செய்கிறோம். நாம் எந்தத்
தோட்டத்திலும் மலர்களைப் பறிப்பதில்லை.
அங்கேதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
பெரும்பான்மையான மனிதர்கள் வெறும்
பார்வையாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். எதையும் செய்யமாட்டார்கள். தேடல் உள்ளவர்களைப்போல நடிப் பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களுக்குத் தேடல் இருக்கிறது என்று தங்களைத் தாங்களே திருப்தி செய்து கொள்ளவும் விரும்புவார்கள். அது ஏமாற்று வேலை.
ஒன்று, உங்கள் முழு முயற்சியையும் தேடலில் போடுங்கள் அல்லது எல்லாவற்றையும் மறந்துவிட்டு உங்கள் வழக்கமான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருங்கள். "நான் ஒரு புத்தகத்தை படிக்க முயற்சி செய்கிறேன்,'' என்று சொல்கிறீர்கள், ஆனால் இன்னமும் புத்தகத்தை எடுக்காமல் இருக்கிறீர்கள், இது எதைக் காட்டுகிறது? இதன் பொருள் என்ன? இது வெறும் ஏமாற்று வேலைதானே.
இராமகிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார்: ஒருவர் தம் தலைமுடி பற்றி எரியும்போது. அமைதியாக இருப்பாரா? "இப்போது எனக்கு நேரமில்லை, இன்னும் எனக்கு எத்தனையோ வருடங்கள் இருக்கின்றன, இதைப் பிறகு பார்த்துக்கொள்கிறேன்,'' என்று அவர் சொல்வாரா?
எந்த நிமிடம் அவர் தலையில் நெருப்பு எரிகிறதோ, உடனே அதை அணைக்க முயற்சி செய்வார். தண்ணீரைத் தேடி ஓடுவார்.
சரியாக நாம் எங்கே மாட்டிக்கொண்டிருக்கிறோம்?
ஏனென்றால் நம்முடைய இருப்புத் தன்மையில் அதிகமான அஹங்காரத்தை உணர்கிறோம். கிருஷ்ணர் "நானே கடவுள்,'' என்று சொல்கிறபோது, அவர் அஹங்காரம் பிடித்தவர் என்று நினைக்கிறோம். உதாரணமாக, நான் திடீரென, "நான் கடவுள்,'' என்று சொன்னால், நீங்கள் இயல்பாக
என்ன நினைப்பீர்கள்? 'இந்த மனிதருக்குப்
பைத்தியம் பிடித்து விட்டது. இவருக்கு
ரொம்பவும் அஹங்காரம் அதிகமாக
இருக்கிறது' என்றுதானே நினைப்பீர்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், 'நான்'
என்று நீங்கள் சொல்வதற்கும் 'நான்' என்று
குரு சொல்வதற்கும் நிறைய வித்தியாசம்
இருக்கிறது.
'கடவுள்' என்று நீங்கள் சொல்லும் வார்த்தை, உங்களைப் பொறுத்தவரை வெறுமையான வார்த்தையாக இருக்கும். நீங்கள் 'கடவுள்' என்கிற வார்த்தையை உபயோகப்படுத்தும்போது, அது ஒரு மேம்போக்கான புரிதலாகவே உங்களுக்கு இருக்கும். அதற்குப் பின்னால் எந்த ஒரு ஆழமான உண்மையும் இருக்காது.
நீங்கள் 'கடவுள்' என்று சொல்லும் போதெல்லாம், அது நீங்கள் இதுவரை கடவுளைப் பற்றி படித்தது அல்லது கேட்டது அல்லது கடவுளைப் பற்றிய உங்களுடைய சிந்தனைகள் அடங்கிய ஓர் கருத்து தொகுப்பாகத்தான் இருக்குமே தவிர, அது ஒரு ஆழமான உண்மையாகவோ அல்லது அனுபவமாகவோ இருக்காது.
ஆனால் நீங்கள் உங்கள் பெயரையோ அல்லது 'நான்' என்ற வார்த்தையையோ சொல்லும்போது, அந்த வார்த்தையின் பின்னால் ஓர் ஆழமான அர்த்தமும் அனுபவமும் இருக்கும்.
ஒரு ஜ்ஞான குருவிடம் இருந்து 'நான்' என்ற வார்த்தை வந்தால், அந்த 'நான்' என்ற வார்த்தைக்கு ஆழமான அர்த்தம் எதுவுமே இருக்காது. அது வெறுமனே மேம்போக்காக இருக்கும்.
ஆனாலும், 'தெய்வீகம்' அல்லது 'ஜீவன் முக்தி' அல்லது 'கடவுள்' போன்ற வார்த்தைகளுக்குக் கனமான அர்த்தம் இருக்கும். ஏனென்றால் அது அவர்களுடைய நேரடியான அனுபவம்.
உங்களுக்கு அஹங்காரம் இருப்பதால், குருவுக்கும் அஹங்காரம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அவர்களுடைய உடல் அசைவுகளிலும், கருத்துகளிலும் இருக்கும் அர்த்தத்தை விட்டுவிடுகிறீர்கள். உங்களால்
முடிந்தால், உங்கள் அஹங்காரத்தைச் சற்றுத்
தள்ளி வைத்துவிட்டு குருவின் வார்த்தைகளை
ஆழமாகக் கேளுங்கள்.
எனக்குத் தெரியும், அர்ஜுனனுக்கும்
கிருஷ்ணருக்கும் இடையில் என்ன நடந்தது
என்ற கீதையின் முழுக் காட்சியையும்
என்னால் பார்க்க முடிகிறது.
கிருஷ்ணருடைய போதனைகளுக்குப்
பின்பு அர்ஜுனன் முழுமையாக,
மொத்தமாகக் கரைந்து கிருஷ்ணர் முன்னால்
அமர்ந்துவிட்டார்.
உங்களால் முடிந்தால்,
உங்கள்
அஹங்காரத்தைச்
sற்றுத் தள்ளி
வைத்துவிட்டு
குருவின் வார்த்தைகளை
ஆழமாகக் கேளுங்கள்.
கிருஷ்ணர் விளக்குகிறார், "என் அன்புக்குரியவனே! புரிந்துகொள், நானே அனைத்துமாக இருக்கிறேன். நான் இறங்கி வந்திருக்கிறேன். உன்னை விடுதலை செய்வதற்காகவே நான் இந்த உடலில் பிறந்திருக்கிறேன்."
பயத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒருவராக இருந்தால், உடனே அவர், "நீயே அனைத்துமாக இருந்தால், எல்லாவற்றையும் நீயே எனக்காகச் செய்துவிடு. உலகத்தையே மாற்று," என்றுதான் சொல்லுவார். அவர் பேராசையில் மாட்டி கொண்டிருந்தால், "நீயே அனைத்துமாக இருக்கிறாய் என்றால், எனக்கு இந்த வரங்களையெல்லாம் கொடு," என்று கேட்பார்.
"நான் கடவுள்," என்று குரு சொல்லும்போது, அதாவது "நான்தான் கடவுள்" என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நீங்கள் பேராசையில் மையம் கொண்டிருப்பவர்களாக இருந்தால், நீங்கள் அவரைப் பிடித்து உங்களுக்கு வேண்டிய எல்லா வரங்களையும் கேட்பீர்கள். "எனக்கு இதைக் கொடு, அத்தைக் கொடு," என்று கெஞ்சத் தொடங்குவீர்கள். பிச்சையெடுக்கத் தொடங்குவீர்கள்.
நீங்கள் பயத்தில் மாட்டிக் கொண்டிருந்தால், அவரைப் பிடித்துக்கொண்டு, "தயவுசெய்து என்னை இதிலிருந்து காப்பாற்றுங்கள், தயவுசெய்து என்னை அதிலிருந்து காப்பாற்றுங்கள்," என்று கெஞ்சுவீர்கள்.
எப்போது நம்முடைய தேவைகளைக் கேட்க ஆரம்பிக்கிறோமோ அப்போது தெய்வீகம் மறைந்துபோய் விடுகிறது. ஏனென்றால் நாம் அதை அப்போது வியாபாரம் என்ற உணர்வுக்குள் கொண்டு வந்து விடுகிறோம். அங்கு வியாபார மனம்தான் இருக்கும்.
தெய்வீகமே இந்த உடலைப் பயன்படுத்துகிறது
குருவுக்கும் நமக்கும் இடையே இருக்கும் மனப்பாங்குதான், குருவையே கடவுளாக உணர்வதிலும், அதை அனுபவபூர்வமாக அனுபவிப்பதிலும், நம்மை நாமே கடவுளாக உணர்வதிலும், அதை அனுபவமாக அனுபவிப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
பலபேர் என்னிடம் சொல்வதுண்டு, "ஸ்வாமி, என்னுடைய மகன் குணமடைந்து விட்டால், நான் உங்களுக்கு நிறைய பணம் தருகிறேன், என் மகள் குணமடைந்துவிட்டால், நான் இந்தச் சொத்தை உங்களுக்குத் தந்து விடுகிறேன்," என்பார்கள். எனக்குச் சிரிப்புதான் வரும்!
ஒன்று, நான் எப்போதுமே யாரிடமும் எதையுமே கேட்பது கிடையாது. இரண்டாவது, நாம் பேரம் பேசத் தொடங்கினால், அந்த உறவில் இருக்கும் மொத்த அழகுமே காணமல் போய்விடும். உங்கள் உடல்-மன அமைப்புக்குள் த்யான சிகிச்சை நடைபெற வேண்டுமானால், ஒரு நல்ல பாலம் இருக்க வேண்டும்; ஒரு ஆழமான ஒருங்கிணைந்த உணர்வு தேவைப்படுகிறது; இங்கே ஆழமான அன்பு தேவைப்படுகிறது.
நாம் இதை வியாபார எண்ணத்திற்குள் கொண்டு வரும்போதே, எல்லாம் முடிந்துவிட்டது. நாம் பேரம் பேசத் தொடங்கிய உடனேயே, என்னாலும் குணப்படுத்த முடியாது, அந்த நபராலும் சக்தியை உள்வாங்க முடியாது. அந்தப் பாலம் துண்டிக்கப்பட்டுவிடும். அதற்குப் பிறகு அங்கு அந்தப் பாலம் இருக்காது.

உங்கள்
உடல்-மன அமைப்புக்குள்
த்யான சிகிச்சை
நடைபெற வேண்டுமானால்,
ஒரு ஆழமான
ஒருங்கிணைந்த உணர்வு
தேவைப்படுகிறது.
அங்கு அந்தப் பாலம் இருக்குமேயானால்,
என்னைப் பார்க்காமலேகூட, நீங்கள்
குணமடைய முடியும். என்னைப்
பார்க்கக்கூடத் தேவையில்லை. நீங்கள்
என்னுடைய ஸாந்நித்தியத்தில் இருக்க
வேண்டிய அவசியம்கூட இல்லை.
தொடர்ந்து, மீண்டும் மீண்டும், எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து மின் அஞ்சல் வந்துகொண்டிருக்கிறது, "ஸ்வாமிஜி, நீங்கள் தர்சனம் கொடுத்து என் கஷ்டத்தைப் போக்கினீர்கள். ஸ்வாமிஜி, நீங்கள் தர்சனம் கொடுத்து என்னைக் குணமாக்கினீர்கள். ஸ்வாமிஜி, நீங்கள் என் முன்னால் தோன்றி என் கேள்விக்குப் பதில் சொன்னீர்கள் என்று எழுதுவார்கள். பிறகு அவர்கள் “ஸ்வாமிஜி, நீங்கள் எனக்கு தர்சனம் கொடுத்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா?” என்பார்கள்.
இப்போது, நான் நேர்மையோடும் உண்மையாகவும் சொல்கிறேன்.
தர்சனம் எப்போது நடந்தது என்று எனக்குத் தெரியாது. நான் என் வியாபார இரகசியத்தை உடைத்து விடுகிறேன். நான் எல்லா உண்மையையும் அப்படியே சொல்லி விடுகிறேன். ஸத்யத்தை உள்ளது உள்ளபடியே சொல்லி விடுகிறேன்.
உங்களுடைய நம்பிக்கையின், ஆழமான அன்பின், பக்தியின் காரணமாகத்தான், இந்தப் பிரபஞ்ச சக்தி என் உருவத்தைப் பயன்படுத்தி, தர்சனம் கொடுத்து உங்களுக்கு வழிகாட்டுகிறது, அவ்வளவுதான்.
கடவுளுக்கு இந்த உடலை நான் வாட
கைக்கு விட்டிருக்கிறேன். ஏனென்றால் என்
‘நான்’ மறைந்துவிட்டது; என் ‘அஹங்காரம்’
மறைந்துவிட்டது; கடவுள் இந்த உருவத்தைப்
பயன்படுத்தி உங்களை வழிநடத்துகிறார்,
அவ்வளவுதான். மற்றபடி, அது உங்களுக்கும்
பிரபஞ்ச சக்திக்கும் இடையே நடந்த
விஷயம்.
நான் நேரடியாக இதில் தலையிட முடியாது. நான் சொல்ல ஒன்றும் இல்லை. நான் எந்தக் குறிப்பிட்ட மனிதருக்காகவும் போய், “இவர் எனக்கு வேண்டியவர்,” என்று சொல்ல முடியாது. நான் யாருக்கும் சலுகை காட்ட முடியாது. இது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை.
அது உங்களுடைய மன நிலைக்கும், கடவுளுக்கும் இடையில் நடந்த விஷயம். உங்களுடைய உள்வாங்கும் திறமையையும், உங்களுடைய உள்வாங்கும் மன நிலையையும் பொறுத்தது அது. ஏனென்றால் உங்களுடைய உள்வாங்கும் திறமையும், மன நிலையும்தான் அந்தப் பாலத்தை உருவாக்குகின்றன.
நான் அன்பர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்வது, என்னால் செய்ய முடிந்ததெல்லாம், உங்களுடைய தர்ஸனத்தில் ஏற்பட்ட விஷயங்களை வேண்டுமானால் என்னால் திரும்பிப் பார்க்க முடியும். அதை வைத்து தர்ஸனத்தில் என்ன நடந்தது, அதன்மூலம் உங்களுக்கு என்ன வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டது என்பதை வேண்டுமானால் என்னால் சொல்ல முடியும், அவ்வளவுதான்.
என்னால் திரும்பிப் பார்த்து, அதை Down Load செய்து உங்களுக்கு என்ன தகவல் கொடுக்கப்பட்டது என்பதை வேண்டுமானால் என்னால் சொல்ல முடியும், அவ்வளவுதான்.
எல்லா ஞானிகளுக்கும் இதுதான் நடக்கிறது. எந்தக் கணம் நான்தான் தர்ஸனம் கொடுத்தேன் என்று சொல்கிறேனோ, அந்தப் கணமே எல்லாம் முடிந்துவிடும். எந்தக் கணம் நான்தான் உங்கள் முன்னால் தோன்றினேன் என்று நான் அறிவித்தாலும் எல்லாம் முடிந்துவிடும். பிறகு தெய்வீகம் இந்த உடலைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடும்.
'இது நான் அல்ல, இது பராசக்திதான்' என்ற தெளிவுடன் நான் இருக்கிறவரை, பராசக்தி இந்த உடலைப் பயன்படுத்திக் கொள்வாள். தன்னுடைய பாடல்களை இந்தப் புல்லாங்குழல் வழியாகத் தொடர்ந்து இசைத்துக்கொண்டிருப்பாள். அவளுடைய பணியைச் செயல்படுத்த இந்த உருவத்தை உபயோகப்படுத்திக்கொள்வாள்; தன் பக்தர்களை ஆசீர்வாதம் செய்வதற்கு இந்த உருவத்தை உபயோகப்படுத்திக்கொள்வாள்.

நான் உங்களுக்காய்க் காத்திருக்கிறேன்
நான் பராசக்தி என்று சொல்லும்போது, அந்தப் பிரபஞ்ச சக்தியைத்தான் சொல்கிறேன். அங்கே நான்கு கரங்களுடன் ஒரு பெண் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளாதீர்கள்! இது பிரபஞ்ச சக்தி.
> உங்கள்
> உடல்-மன அமைப்பை
> விட்டு நீங்கள்
> வெளியேறி விடுங்கள்.
> கடவுள்
> உள்ளே வந்து விடுவார்.
யார் தம்முடைய உருவத்தை அவளிடம்
சரணாகதிசெய்கிறார்களோ, அந்த உருவத்தைப்
பயன்படுத்தி அவள் தன் வேலைகளைச்
செய்துகொள்வாள். ஏனென்றால் 'நான்'
வெளியேறியதால், அவள் என்னுடைய
உடலில் வசித்துக்கொண்டிருக்கிறாள்.
இப்போது நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்
ஒன்றுதான், உங்கள் உடல்-மன அமைப்பை
விட்டு வெளியே வாருங்கள். தெய்வீகம்
உள்ளே வந்துவிடும்.
உங்கள் உடல்-மன அமைப்பை விட்டு நீங்கள்
வெளியேறி விடுங்கள். கடவுள் உள்ளே வந்து
விடுவார். மீண்டும் மீண்டும், மக்களிடம்
சொல்வது, தர்சனம் கொடுத்தது நான்
அல்ல. என்னால் காட்சிகளைக் கொடுக்க
முடியாது. அவற்றுடன் என்னைத் தொடர்பு
படுத்தாதீர்கள். சரியாக என்ன நடந்தது
என்றுகூட எனக்குத் தெரியாது.
என்னால் சொல்ல முடிந்ததெல்லாம், நீங்கள் என்னிடம் வந்து, என்ன நடந்தது, இடம், தேதி என்று எல்லாவற்றையும் சொன்னால், அந்த நிகழ்ச்சியை 'டவுன்லோட்' செய்து பார்க்க முடியும். அந்தக்க கோப்பைத் தேடி எடுத்து, சரியாக என்ன நடந்தது என்று விபரமாகச் சொல்ல முடியும். மற்றது எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை.
நீங்கள் குருவுடன் நெருங்கிய தொடர்புடையவராக உணரும்போது நீங்கள் திறந்து இருக்கிறீர்கள். நீங்கள் குருவைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அந்தப் பிரபஞ்ச சக்தி உங்களை வழிநடத்தும். அவர் அருகில் இருக்க வேண்டும் என்ற தேவை கிடையாது.
எப்போது அந்த உறவை அழிக்கிறீர்களோ, எப்போது ஒரு வியாபாரத்தை உள்ளே கொண்டுவருகிறீர்களோ, அப்போது எதுவுமே நடக்காது. அப்போது ஒன்றுமே நடக்கமுடியாது, ஏனென்றால் பாலம் உடைந்துவிட்டது.
நான் CNN தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இயற்கை சீற்றத்தால் நியூ ஆர்லியன்ஸ் பாலம் எப்படி அழிந்தது என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிஸ்கட் உடைவதுபோல அந்த
பாலம் உடைந்து போனது.
இப்போது அந்த பாலம் அங்கே
இல்லை!
அதேபோலதான், வியாபார
எண்ணம் உள்ளே வரும்போது,
குருவுக்கும் உங்களுக்கும் இடையில்
உருவாகவேண்டிய ஓர் அழகான
பாலம் உருவாகாமலேயே போய்விடும்.
பாலம் ஏற்படுவதற்கு முழுமையான சரணாகதியும் புரிதலும், ஆழமாகத் தொடர்பு கொண்டிருக்கிற உணர்வும் அவசியம். இங்கே இப்போது அர்ஜுனன், கிட்டத்தட்ட தாம் கிருஷ்ணருடன் ஆழமான இணைப்புடன் இருப்பதை உணர்ந்திருந்தார். அவர் கிருஷ்ணருடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்தார். அவர் தம் பயத்தையும் பேராசையையும் விட்டிருந்தார்.
ஆன்மீக சாதனையில் பெரிய பிரச்சினை என்னவென்றால், விரும்புவதை அடைய வேண்டும் என்ற கருத்தைக் கீழே போடும்போது மட்டுமே அதை அடைவீர்கள்! அங்கேதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
அடுத்து என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான பேரார்வம் இல்லாமல், ஓர் ஆழமான, எதிர்ப்பற்ற, நேர்மறையான காத்திருப்புடன் இருப்பதுதான் உண்மையான சரணாகதி. அதுதான் முழுமையான சரணாகதி. "நான் எப்போதும் காத்திருப்பேன்," என்று நீங்கள் முடிவு செய்கிற அந்தக் கணமே எல்லா நிகழ்வுகளும் நிகழத் தொடங்கிவிடும்.

நீங்கள் மலர அவகாசம் அளியுங்கள்
நீங்கள் அவசரப்படுபவர்களாகவும், மனக் கலக்கமும் குழப்பமும் உடையவர்களாகவும் இருக்கிறவரை, நீங்கள் உங்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளைத் தடுத்து விடுகிறீர்கள்; அது தாமரையை முயற்சி செய்து மலர வைப்பதுபோல! நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் மலரின் இதழ்களை கையால் திறக்கிறீர்கள். அப்படிச் செய்தால், அது பூவாக இருக்குமா?
ஓர் ஆழமான, எதிர்ப்பற்ற,
நேர்மறையான
காத்திருப்புடன்
இருப்பதுதான்
உண்மையான சரணாகதி.
சூரியக் கதிர்கள் ஊடுருவும்போது தாமரை தானாகவே மலரும். உங்கள் இருப்புத் தன்மை மலர, கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.
நீங்கள் காத்திருக்கத் தொடங்கிய உடனேயே,
விஷயங்கள் நடக்கத் தொடங்கிவிடும். நீங்கள்
அதற்கு மேல் காத்திருக்க வேண்டியதில்லை.
நீங்கள், 'காத்திருக்க' தீர்மானிக்கும்வரை,
நீங்கள் காத்திருக்க வேண்டும். 'நாம்
காத்திருக்கலாம்' என்ற முடிவுக்கு நீங்கள்
வரும்வரைதான் நீங்கள் நிகழ்வுகளுக்காகக்
காத்திருக்கவேண்டியுள்ளது. நீங்கள்,
'காத்திருக்க' முடிவு செய்துவிட்டால்
போதும், அதற்குப் பிறகு எப்போதும் நீங்கள்
காத்திருக்க வேண்டிய தேவையே இருக்காது.
நீங்கள் காத்திருக்கத்
தொடங்கிய உடனேயே,
விஷயங்கள்
நடக்கத் தொடங்கிவிடும்.
நீங்கள்
அதற்கு மேல்
காத்திருக்க
வேண்டியதில்லை.
ஓர் அழகான கதை:
பகவான் விஷ்ணுவின் பக்தரான நாரதர் வைகுண்டத்துக்குப் போய்க்கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு மரத்தடியில் குதித்து நடனமாடிக் கொண்டிருந்த ஒரு மனிதர் நாரதரைப் பிடித்துக் கொண்டார். அவர் நாரதரிடம் கேட்டார், "ஓ நாரதரே, பகவான் விஷ்ணுவின் தரிசனம் எனக்கு எப்போது கிடைக்கும் என்று தயவு செய்து கேட்டுச் சொல்லுங்கள்," என்றார்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அவர் ‘எப்போது ஞானமடைவேன்’ என்று கேட்கவில்லை. ‘அவருடைய தரிசனம் எப்போது கிடைக்கும்’ என்றுதான் கேட்டார்.
அவர் நாரதரிடம் சொன்னார்: "எனக்கு அருள் புரியச் சொல்லுங்கள். நான் இன்னும் எத்தனை நாள் அவருடைய கருணைக்காகக் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுச் சொல்லுங்கள்."
நாரதரும் "நான் நிச்சயமாகக் கேட்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று சொல்லிவிட்டுப் போனார்.
அடுத்து ஒரு யோகி அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்தார்.
அவர் நாரதரைப் பார்த்ததும் "ஓ நாரதரே, விஷ்ணுவிடம் நான் ஞானமடைய இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?" என்றார். நாரதரும், "நிச்சயமாகக் கேட்டு வருகிறேன்," என்று சொல்லிவிட்டுப் போனார்.
சொன்னபடியே நாரதர் வைகுண்டத்துக்குப் போய், விஷ்ணுவின் பதில்களோடு திரும்பினார்.
வருகிற வழியில் முதலில் யோகி, "விஷ்ணு
என்ன சொன்னார்," என்று நாரதரிடம்
கேட்டார்.
"நீங்கள் ஞானமடைய இன்னும் நான்கு ஜன்மங்கள் காத்திருக்க வேண்டுமாம்," என்று சொன்னார். யோகி மிகவும் வருத்தத்துடன், "ஓ, நான்கு ஜன்மங்கள்! நான் என்ன செய்வேன்?" என்று மனம் சோர்ந்துபோனார்.
அடுத்து குதித்து நடனமாடிக் கொண்டிருந்த
மனிதரிடமும் வந்தார் நாரதர். அந்த மனிதர்,
"விஷ்ணு என்ன சொன்னார்?" என்று
கேட்டார்.
நாரதர் சொன்னார், "இந்த மரத்தில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ அத்தனை ஜன்மங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அவருடைய தரிசனம் உனக்குக் கிடைக்கும்; அவருடைய கருணைப்பார்வை உன் மேல் விழும் என்று விஷ்ணு உன்னிடம் சொல்லச் சொன்னார்," என்று சொன்னார்.
இதைக்கேட்ட உடனே அந்த மனிதர் சொன்னார், "ஓ அவர் எனக் குக் கருணை புரிவேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டார், அது போதும்," என்று சொல்லிவிட்டு, அவர் திரும்பவும் குதித்து நடனமாடத் தொடங்கிவிட்டார்!
அவர் இதைச் சொன்ன அந்தக் கணமே, மின்னல் போன்ற ஒரு ஒளி வீசியது, தெய்வீகம் அவர் உள்ளே இறங்கியது. அந்த மனிதர் ஞானமடைந்தார்.
காத்திருத்தலும் ஒரு தியானமே
அதனால் புரிந்துகொள்ளுங்கள், ஆழமான பொறுமையும் காத்திருக்க முடிவு செய்தலும்தான் ச்ரணாகதி.
புத்தரின் வாழ்க்கையை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அவர் முழுமையான ச்ரத்தையுடனும் உறுதியுடனும் ஞானமடைய முயற்சி செய்தார். எல்லா த்யான நுட்பங்களையும் ஆன்மீக சாதனைகளையும் செய்தார். எதுவும் வேலை செய்யவில்லை. அவர் அமைதியடைந்து,
> ஆழமான பொறுமையும்
> காத்திருக்க
> முடிவு செய்தலும்தான்
> ச்ரணாகதி.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அந்தப் பிரபஞ்ச சக்தியின்மேல் நம்பிக்கையோடு இருந்தார். அந்த நிமிடமே ஞானமடைந்தார்.
என் வாழ்க்கையில் நான் தியானங்கள் செய்துகொண்டிருந்தவரை என்னால் ஞானமடைய முடியவில்லை. நான் என்னுடைய பயிற்சிகளையும் சாதனைகளையும் செய்துகொண்டிருந்தவரை மன அமைதி இல்லாமல் இருந்தேன். ஒன்றும் நடக்கவில்லை.
என்னுடைய ஞானமடைதலுக்குப் பிறகுதான், இந்தச் சாதனைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்ததால்தான் நானே என்னுடைய ஜீவன் முக்தியை, ஞானமடைதலைத் தள்ளிப் போட்டு இருக்கிறேன் என்ற உண்மை புரிந்தது.
நேர்மையோடு உங்களிடம்
பகிர்ந்துகொள்கிறேன்.
பன்னிரண்டு வயதிலேயே நான்
ஞானமடைந்துவிட்டேன். ஆனால் எனக்கு
‘நான் ஞானமடைந்துவிட்டேன்’ என்று
தெரியவில்லை.
நான் அந்த அனுபத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்தேன். நான் அந்த நித்ய ஆனந்தத்தை, தெய்வீக பேரானந்தத்தை சொந்தமாக்கிக்கொள்ள முயற்சி செய்தேன். எந்தக் கணம், அதை நான் சொந்தமாக்கிக்கொள்ள முயற்சி செய்தேனோ, அப்போதே அது ஒரு ஈரமான சோப்பைப்போல நழுவி ஓட ஆரம்பித்து விட்டது.
ஒரு ஈரமான சோப்பைப் பிடிக்க முயற்சி செய்தால் என்ன நடக்கும்? இயற்கையாகவே அது வழுக்கிகொண்டே போகும். அதுபோல நானும் அந்த அனுபவத்தைப் பிடிக்க முயற்சி செய்ய செய்ய, அது நழுவி ஓடிக்கொண்டே இருந்தது.
இறுதியில், நான் ஒரு தீர்மானமான முடிவிற்கு வந்தேன். அது இனி இதப் பிடிக்கப்போவதில்லை, இனி மீன்வேட்டை வேண்டாம், இனி வலை விரிப்பதும் இல்லை, இனித் தேடலும் இல்லை, இனிக் கண்டுபிடித்தலும் இல்லை, தளர்வான மன நிலையுடன் இருந்து, காத்திருக்க முடிவுசெய்தபோது, அது தானாக நடந்தது; மிக எளிமையாக நடந்தது.
நீங்கள் காத்திருக்க முடிவு செய்கிற அந்தக் கணமே அது நிகழும்.

குழந்தைகளைப்போல் நாமும் கொண்டாடி மகிழலாம்
பொதுவாக, நான் யாரையாவது ஆசீர்வதித்து, அவருடைய நோய் குணமாகியிருந்தால், உடனே அதை அவர் மற்றவர்களிடமும் சொல்கிறார். அதைக் கேட்டு வரும் அந்த இரண்டாவது நபர், தாமும் அதேபோல் குணமடைய வேண்டும் என்ற மன நிலையுடனேயே வந்தாரென்றால், அவர் இயல்பாகவே முழு விளையாட்டையும் நழுவ விட்டுவிடுகிறார்.

எல்லாவற்றையும் நம்பிக்கையில் வைத்துக் கட்டுவதற்கு நிறைய தைரியம் வேண்டும்.
அவர் புதிதாக மலர்ந்த மனத்தோடு வரும்போது, குணமடைதல் தானாகவே, ஒரு துணைப்பயனாக நிகழ்ந்து விடுகிறது. ஆனால் குணமடைதலை முதல் பயனாகக்கொண்டு வரும்போது, அந்தப் பாலத்தையே இழந்து விடுகிறோம்.
குரு-சிஷ்ய உறவுக்கு நடுவில், நாம், முக்கியமாக, வியாபார அணுகுமுறையைக் கொண்டுவரும்போது, நண்பர்களுக்கு இடையில் செய்துகொள்ளும் ஒப்பந்தம் போன்ற அணுகுமுறையைக் கொண்டுவரும்போது, அங்கே குரு-சிஷ்யருக்கு இடையிலான உறவுமுறை இருப்பதில்லை. வியாபார உறவுகளில் சக்தியைப் பரிமாற முடியாது.
இன்னொரு விஷயம்: எல்லாவற்றையும் நம்பிக்கையில் வைத்துக் கட்டுவதற்கு நிறைய தைரியம் வேண்டும். இது ஒரு விதை தன் பயன்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, உடைத்துக்கொண்டு வெளியே வந்து மரமாவதைப் போன்றது. அதனால்தான் நிர்வாணம் என்பதை, 'இறுதி பயங்கரக் கனவு' என்று சொல்கிறோம்.
ஒரு கனவு பயங்கரமாக இருந்தால், நாம் விழித்து எழுந்து விடுவோம்! அதேபோல, நாம் திடீரென உலுக்கப்படும்போது அல்லது வாழ்க்கையில் அதிர்ச்சி அடையும்போது, நாம் ஜீவன்முக்த நிலையில் விழித்துக்கொள்வோம்.
நம்முடைய கனவு நிலைக்குத் திடீரென ஒரு உலுக்கல் ஏற்படும்போது, நமக்குள் ஞானமடைதல் நிகழ்கிறது. நமக்குள் ஜீவன்முக்தி மலர்கிறது. ஜென் மடாலயங்களில், ஒருவரை ஞானமடையச் செய்வதற்கு ஆச்சரியமான நுட்பங்களைப் பயன்படுத்துவார்கள்.
அதைப்பற்றிய ஒரு கதை:
ஒரு குரு மடாலயத்தின் மூன்றாவது மாடியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அங்கே வந்த ஒரு சீடர் அவரிடம் மிகவும் ச்ரத்தையோடு தாம் ஞானம் அடைய வேண்டும் என்று கேட்டார்.
உடனே, அந்த குரு அவரை மூன்றாவது மாடியில்
இருந்து தள்ளி விட்டுவிட்டார். அந்தச்
சீடருக்கு குருவின் மேல் முழு நம்பிக்கை
இருந்தது. அவர் ஒரு பூவைப்போல கீழே
விழுந்து, எழுந்து நடனமாடத் தொடங்கி
விட்டார்!
‘நாம் நிலத்தில் விழும்போது ஏற்படும்
காயங்களுக்கு நம் உடல் எடை மட்டும்
காரணம் அல்ல’ என்று ஆராய்ச்சி
கள் சொல்கின்றன. குழந்தைகள் கீழே
விழும்போது அவர்கள் ரொம்பவும் அடிபட
மாட்டார்கள்.
நம்முடைய
கனவு நிலைக்குத்
திடீரென ஒரு உலுக்கல்
ஏற்படும்போது, நமக்குள்
ஞானமடைதல்
நிகழ்கிறது. நமக்குள்
ஜீவன்முக்தி மலர்கிறது.
ஒரு மனிதன் தண்ணீருக்குள் விழுந்து இறந்துவிட்டால், அந்த இறந்த உடல், தண்ணீரோல் நிரம்பி கனம் அதிகமாகி இருந்தாலும்கூட மிதக்கிறது. ஆனால் உயிரோடு இருக்கும் மனிதர், அவரின் உடல் எடை குறைவாக இருந்தாலும் தண்ணீரில் மூழ்கிப் போகிறார்.
அதனால் அஹங்காரமும், நம்முடைய கடினத் தன்மையும்தான் நமக்கு ஏற்படும் இழப்புகளுக்கு எல்லாம் காரணம் என்பதையே இவை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
ஒரு சுழன்று ஆடும் சூஃபி நடனக்காரர் சில நிமிடங்கள் காற்றில் மிதப்பார், ஆனாலும் அடிபடாமல் பூமியில் வந்து இறங்குவார். யோகிகள் செய்யும் காற்றில் மிதக்கும் செயல்முறைகூட, அவர்களது அஹங்காரமற்ற தன்மையால் அடையப்பட்ட ஒரு நிலையாகும்.
ஞானிகளின் அற்புதம் என்னவென்றால், அவர்களுக்குத் தோல்விகளே கிடையாது. தவறே ஏற்படாத ஒரு அமைப்புமுறை அவர்களுடையது!

ஒருபோதும் தோல்வி நம்மை அணுகாது
ஒரு சின்ன கதை:
ஒரு நாகா ஸந்யாஸிக்கு அவருடைய குருவின் மீது அதிகப் பிரியம். அவர் குருவின் பின்னால் நின்றுகொண்டு தொடர்ந்து அவருடைய செயல்களை, பாவனைகளை, உடல் அசைவுகளைத் தாமும் செய்து காட்டிக்கொண்டிருப்பார்.
அவருடைய உண்மையான பக்தியைக் கருத்தில்கொண்டு குருவும் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஒருமுறை ஒரு சொற்பொழிவின்போது, குரு கையை உயர்த்தியபோது இவரும் அதையே செய்தார்.
உடனே குரு, அந்தச் சீடரைத் திரும்பிப் பார்த்து, வாளால் சீடரின் கையை வெட்டி விட்டார்.
சீடருடைய பக்தி மிகப் பெரிது என்பதால், துண்டிக்கப்பட்ட கையோடு அவரது அஹங்காரமும் கீழே விழுந்தது, அவர் ஞானமடைந்தார்!
"ஞானத்திற்காகக் கொடுக்கிற இந்த விலை மிக அதிகம் அல்லவா," என்று மற்ற சீடர்கள் கேட்டார்கள்.
ஞானத்திற்கான விலையை
நீங்கள் கொடுத்தாக
வேண்டியுள்ளது!
அதற்கு குரு, "மனிதர்கள் இந்த நிலையை
அடைய பல ஜென்மங்கள் எடுக்க வேண்டும்.
அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது
விலை குறைவுதான்!" என்று சொன்னார்.
நாம், சக்தியை நமக்குள் பரவ அனுமதிக்க
வேண்டும். நமக்குள் உள் உலக மாற்றம்
நிகழ அனுமதிக்க வேண்டும். விதை
மரமாக வேண்டுமானால், அதனுடைய
பயம் போக வேண்டும். அதுபோல நமக்குள்
மாற்றம் நிகழ, நாமும் நமக்குள் சக்தியைப்
பரவ அனுமதிக்க வேண்டும்.
கிறிஸ்துவ மதக் கோட்பாட்டின்படி, கடைசி
நேரத்தை, 'ஆத்மாவின் இருண்ட இரவு'
என்று அழைக்கிறார்கள். புத்த மதம்,
'கடைசி பயங்கரக் கனவு' என்ற சொல்லை
உபயோகிக்கிறது. அந்த நேரத்தில், நம்
அஹங்காரம் இறந்து கொண்டிருக்கும்
சமயத்தில், நாம் இறந்தகாலத்தை விட்
டுவிடத் தயாராக இருக்கவேண்டியது மிகவும்
அவசியமாகிறது. நாம் இறந்தகாலத்தை
நம்மை விட்டுச்செல்ல மனப்பூர்வமாக
அனுமதிக்க வேண்டும்.
> ஜீவன்முக்தி என்பது
> ஏதோ ஒன்றின்
> தொடர் நிகழ்வு அல்ல!
> அது ‘பளிச்’ என ஒரு
> கணத்திற்குள்
> நிகழும் ஒரு நிகழ்வு,
> ஒரு புதிய
> பிறவியைப்போல!
ஜீவன்முக்தி என்பது ஏதோ ஒன்றின் தொடர் நிகழ்வு அல்ல! அது 'பளிச்' என ஒரு கணத்திற்குள் நிகழும் ஒரு நிகழ்வு, ஒரு புதிய பிறவியைப்போல!
குரு வழிகாட்டும்போது, அவர் சொல்கிற உள்ளார்ந்த, பூரணத் தன்மை மிக்க வழிகாட்டுதல்களை உங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அவற்றை முழுமையாகவும் மனப்பூர்வமாகவும் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும்.
கிருஷ்ணரை முழுமையாக நம்பவும், அவரைத் தமக்குள் அனுமதிக்கவும் அர்ஜுனனுக்குத் தைரியம் இருந்தது. அதனால்தான் அவருக்கு விச்வரூப தர்சனம் கிடைத்தது. கிருஷ்ணரின் பிரபஞ்ச விழிப்புணர்வைக் காட்சியாகக் காணும்பேறு கிடைத்தது.
நமக்குள்ளும் அப்படி நடக்க, நாமும் அந்தச் சக்தியை - அந்த இருண்ட இரவை நமக்குள் நடக்க அனுமதிக்க வேண்டும். குருவின் மீது வைக்கும் முழுமையான நம்பிக்கை மட்டுமே, அந்த இறுதிப் பலனை நாம் அடைவதற்கு உதவ முடியும்.
ஜார்ஜ் குர்த்ஜிஃப் தம்முடைய சீடர்களை ஞானமடையச் செய்வதற்குப் புதுமையான நுட்பங்களைப் பயன்படுத்துவார்.
அதாவது, யார் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அவர் 'நிறுத்து' என்று சொன்னவுடனேயே, அவர்கள் அந்த வேலைகளை நிறுத்திவிட்டு த்யானத்தில் உட்கார்ந்துவிட வேண்டும் என்ற ஒரு விதியை வைத்திருந்தார்.
ஆச்ரமத்திற்குள் ஒரு சிறிய ஓடை ஒன்று இருந்தது. ஒருநாள் மூன்று சீடர்கள், ஓடைக்குள் நின்றுகொண்டிருக்கும்போது, அவர் ‘நிறுத்து’ என்று சத்தம் போட்டார். அவர் சத்தம் போட்டு, கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தண்ணீர் மட்டம் உயரத் தொடங்கிவிட்டது.
இரண்டு சீடர்கள் தண்ணீரை விட்டு
வேகமாக வெளியே வந்து விட்டார்கள்.
மூன்றாவது சீடர் தொடர்ந்து த்யாணம்
செய்தார். அவருடைய உடம்போடு சேர்ந்து
அவருடைய அஹங்காரமும் நீருக்குள்
மூழ்கியது, ஆனால் அங்கே ஒரு புதிய ஜீவன்
மிதக்கத் தொடங்கியது!
தெரியாத வெற்றிடத்தை
அனுபவமாக உணர,
நமக்கு முதலில்
நம்பிக்கை தேவை.
அந்த நேரத்தில்
நாம் பிடித்துக்கொள்ள
குரு மட்டும்தான்
இருப்பார்.
தெரியாத வெற்றிடத்தை அனுபவமாக உணர, நமக்கு முதலில் நம்பிக்கை தேவை. அந்த நேரத்தில் நாம் பிடித்துக்கொள்ள குரு மட்டும்தான் இருப்பார். அப்போது, நமக்குள் நடக்கும் புதிய அனுபவத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
nமக்குள் நுழையும் அந்த சக்தியானது நம்முடைய பழைய அடையாளத்தை மாற்றி, வார்த்தையில் அடங்காத ஒரு ஆன்மீக அனுபவத்திற்குள் நம்மை எடுத்துச் செல்லும் என்ற ஆழமான நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
இந்த ஆழமான இணைப்பை உணர்வதற்குத்தான் கிருஷ்ணர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இந்த ஸத்யத்தைப் புரிந்துகொள்வதற்கு, குருவுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதுதான் அடிப்படை தேவையாக இருக்கிறது. அதனால்தான் கிழக்கு நாடுகளில் குருவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
எல்லாப் பக்கங்களிலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள்
இன்னொரு கேள்வி:
கேள்வி: ஸ்வாமி, நான் என் குருநாதரிடமிருந்து தீக்ஷை வாங்கி இருக்கிறேன். குரு-சிஷ்ய உறவு முறையையும் நான் அறிவேன்.
என்னுடைய குரு 1952-ல் சமாதி அடைந்துவிட்டார். அவருடைய போதனைகளை ஒன்று திரட்டி அவற்றைக் கடைப்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். நேரடியாக என் குருவைப் பார்த்ததில்லை. இப்போது உங்கள் சொற்பொழிவை தினமும் கேட்கிறேன். எனக்கு பகவான் கிருஷ்ணரே பகவத்கீதையில் இருந்து நேரடியாகப் பேசிக்கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன். இது ஓர் அழகான அனுபவமாக இருக்கிறது. இதை இப்படியே விட்டுவிட எனக்கு விருப்பமில்லை. நான் பேராசைக்காரனோ என்ற பயமும் வருகிறது, என் வாழ்க்கையில் இரண்டு குருமார்கள் இருக்கலாமா என்ற சந்தேகமும் வருகிறது.
இந்தக் கேள்விக்கு இராமகிருஷ்ணர் பதில் சொல்கிறார். உங்களுக்கு எத்தனை குருமார்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். நான் தீக்ஷை கொடுக்கும் என்னுடைய சீடர்களுக்குச் சொல்வதுண்டு, ''நான் உங்களை நீங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்குச் சென்று கற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கிறேன்; அது மட்டுமல்ல, அவ்வாறு சென்று வர உற்சாகப்படுத்துகிறேன். எல்லாத் தோட்டங்களுக்கும் சென்று மலர்களைப் பறித்து அழகான பூ மாலையாகத் தொடுத்துக்கொள்ளுங்கள்.''

இன்னொரு விஷயம், நம்முடைய அஹங்காரம் ஆயிரம் பக்கங்களில் இருந்து அடிவாங்குினாலும் சாகாது. அப்படிப்பட்ட உங்களுடைய அஹங்காரம் ஒரே மனிதரால் கொல்லப்பட வேண்டும் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்? எல்லாப் பக்கங்களில் இருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் அஹங்காரம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அடிவாங்கட்டும். உங்களுக்குத் தேவையானதெல்லாம், ஸத்யத்தை அனுபவமாக உணர்வதற்குத் தேவையான வளர்ச்சி அல்லது உருமாற்றம் மட்டுமே!
எங்கெல்லாம் உங்களுக்கு அனுபவம் கிடைக்கிறதோ, அதை இழந்துவிடாதீர்கள். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ''வேறு யாரிடமும் போகாதீர்கள்,'' என்று சொல்பவர்களிடம் மட்டும் போகாதீர்கள். உங்கள் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள். உங்கள் சுதந்திரத்தைத்
நம்முடைய அஹங்காரம் ஆயிரம் பக்கங்களில் இருந்து அடிவாங்குினாலும் சாகாது. தற்காத்துக்கொள்ளுங்கள். அதோடு, எங்கு வேண்டுமானாலும் சென்று கற்றுக்கொள்வதற்கு முழுச் சுதந்திரம் உடையவர்கள் நீங்கள்.
அதனால் நீங்கள் குற்ற உணர்வோடு இருக்கத் தேவையில்லை. அந்த குருவினுடைய போதனைகளைக் கேட்டுவிட்டு, என்னுடைய போதனைகளைப் பயிற்சி செய்வதை, ஏதோ குற்றம் செய்து கொண்டிருப்பதைப்போல நீங்கள் நினைக்கத் தேவையில்லை.
நிச்சயமாகச் சொல்கிறேன், எனக்கு உங்கள் குருவுடன் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதுமட்டுமல்லாமல், அவர் ஸமாதி அடைந்துவிட்டார்.
அவரோடு நான் இப்போது நேரடியாகவே பேசிக்கொள்கிறேன்! அதைப் பொருட்படுத்த வேண்டாம். அதைப்பற்றிக் கவலைப்பட தேவையில்லை. நிம்மதியாக ஆனந்தமாக இருங்கள்.
நாம் ஆழமான தொடர்பை எப்போது உணர்கிறோமோ, அந்தத் தொடர்பே போதுமானது. வேறொன்றும் தேவையில்லை. அதுவே உங்களை வழிகடத்தும்.
நமக்குத் தேவை சரணாகதி மனப்பாங்கு மட்டுமே!
இன்னொரு முக்கியமான விஷயம், ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், யாரோடு தொடர்பு ஏற்படுகிறது என்பது முக்கியம் அல்ல, யாரிடம் சரணாகதி செய்கிறோம் என்பதும் முக்கியம் இல்லை.
> எங்கு
> வேண்டுமானாலும்
> சென்று
> கற்றுக்கொள்வதற்கு
> முழுச் சுதந்திரம்
> உடையவர்கள்
> நீங்கள்.
இன்னொரு தொழில் ரகசியத்தையும்
சொல்கிறேன். கிருஷ்ணர் ராஜவித்யா ராஜ
குஹ்யம், இரகசியங்களின் இரகசியம்’
என்று சொல்வதைப்போல, ஒரு தொழில்
இரகசியத்தை நான் சொல்கிறேன். பொதுவாக
யாருமே தொழில் இரகசியத்தை வெளியே
சொல்லமாட்டார்கள்.
ஏனென்றால் மொத்தத் தொழிலிலும் இந்த
இரகசியத்தில்தான் இருக்கிறது. ஆனாலும்
உங்களுக்கு ‘எல்லா விஷயங்களையும்
சொல்லிவிடுவது’ என்பதில் நான்
தெளிவாக இருக்கிறேன்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது முக்கியம் கிடையாது. சரணடையும் மன நிலையும் ஆழமான தொடர்பை உணரும் தன்மையும்தான் முக்கியம். அதுதான் விடுதலையடையச் செய்கிறது. இதுவே போதுமானது. அதுவே நம்மை விடுவித்து விடும்! வேறு எதுவும் முக்கியம் இல்லை அந்தத் தீவிரத் தன்மைக்கு ஒரு சக்தி இருக்கிறது. சரணடையும் மன நிலைக்குதான் நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி இருக்கிறது. மற்ற எதுவும் தேவையில்லை.
நீங்கள் யாரிடம்
சரணடைகிறீர்கள்
என்பது
முக்கியம் அல்ல.
சரணடையும் மன நிலையும்
ஆழமான தொடர்பை
உணரும் தன்மையும்தான்
முக்கியம்.
ஒரு சின்ன கதை:
ஒரு மனிதர் போதும் போதும் என்ற அளவிற்கு அதிக கஷ்டங்களை அனுபவித்து விட்டார். தாம் 'முக்தியடைய வேண்டும்' என்று விரும்பிய அவர், தமக்கு உதவக்கூடிய ஒரு ஞானியைத் தேடி காட்டிற்குள் ஓடினார். அவர் இரவு பகலாகத் தேடியும் ஒருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்தார். "யாரை இந்தப் பாதையில் முதலில் சந்திக்கிறேனோ அவரையே என்னுடைய குருவாக ஏற்றுக்கொள்வேன். நான் அவருடைய அறிவுரைபடியே நடப்பேன். ஓ கடவுளே! நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கு வழிகாட்ட சரியான ஒருவரை அனுப்பி வையுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.
அவர் அங்கேயே பொறுமையாக அமர்ந்து, அந்தப் பாதையில் யார் வருகிறார்கள் என்று காத்துக்கொண்டிருந்தார்.
இரண்டு நாள் கழித்து ஒரு மாலை வேளையில் யாரோ ஒருவர் அந்த வழியாக வேகமாக ஓடி வந்தார். இந்த மனிதர் அந்த மனிதரின் காலைப் பிடித்துக்கொண்டு, "ஓ குருவே, என்னைக் காப்பாற்றுங்கள். நீங்கள்தான் என் கடவுள், நீங்கள்தான் என் குரு. தயவு செய்து ஞானமடைவது எப்படி என்று எனக்கு அறிவுரை சொல்லுங்கள்," என்று கேட்டார்.
அந்தத் மனிதருக்கு ஒரே அதிர்ச்சி, அவர் கத்த ஆரம்பித்துவிட்டார், "என்ன இது? என்ன நடக்கிறது இங்கே? என்னைப் போக விடு, என்னைப் போக விடு, நான் ஒரு திருடன். நான் இங்கிருந்து தப்பித்துப் போயே ஆக வேண்டும். காவல்காரர்கள் என்னைத் துரத்துகிறார்கள். என்னைப் போக விடு. நான் ஓடிப் போக வேண்டும்.''
இந்த மனிதர் சொன்னார், ''இல்லை, நீங்கள் என்னுடைய கடவுள். நீங்கள் என்னுடைய குரு. நீங்கள் கண்டிப்பாக எனக்கு ஞானப்பாதையைக் காட்ட வேண்டும்.''
அதற்கு அந்தத் திருடன், ''முட்டாளே! நான் இத்தனை நகைகளைத் திருடி வைத்திருப்பதை நீ பார்க்கவில்லையா? என்னைப் போக விடு, இல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன். இப்போதே என்னால் உன்னைக் கொல்ல முடியும்.

நான் உன்னைக் கொல்ல வேண்டும்
என்றாலும்கூட, இன்னும் பத்து நிமிடங்கள்
செலவு செய்ய வேண்டியதிருக்கும். அந்த
நேரத்தில் காவல்காரர்கள் வந்து என்னைப்
பிடித்து விடுவார்கள். எனக்கு இப்போது
பத்து நிமிடங்கள் செலவு செய்வதற்கான
அவகாசம்கூட இல்லை. இல்லாவிட்டால்
உன்னை இப்போதே கொன்று விடுவேன்,''
என்று சொன்னான்.
அந்த மனிதர் ''எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்கள் என் குரு, எனக்குக் கற்றுக் கொடுங்கள்,'' என்று அவன் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
இவரிடம் இருந்து தப்பிக்க நினைத்த திருடன் ''சரி, நான் உன்னுடைய குரு என்று நீ சொல்கிறாய். அப்படியென்றால் கவனமாகக் கேள். நான் என்ன சொன்னாலும் செய்வாயா?'' என்று கேட்டான்.
திருடனின் சீடராக மாறிய அந்த மனிதர் சொன்னார், ''ஆம் கண்டிப்பாக, நான் அதற்காகத்தானே இருக்கிறேன்!''
திருடன் சொன்னான், ''உட்கார்.''
அவரும் உட்கார்ந்தார்.
''கண்களை மூடு. நான் வந்து கண்களைத் திறக்கச் சொல்லும்வரை திறக்கக் கூடாது," என்று சொன்னான்.
அந்த மனிதரும் உண்மையான தேடலுடன் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். அந்தத் திருடன், 'விட்டால் போதுமடா சாமி' என்று ஓடிப்போய்விட்டான்.
அவர் பல மணி நேரங்கள் அமர்ந்திருந்தார். மெதுவாக நாட்கள் நகர்ந்தன. பிறகு வாரங்கள் நகர்ந்தன. ஒரு மாதமும் நகர்ந்து விட்டது. அந்த மனிதர் உணவு, தண்ணீர் இல்லாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார்.
சிவபெருமான், அவரின் ச்ரத்தையின் ஆழத்தை உணர்ந்து, உடனே அவர் முன்னால் தோன்றி ஞானமளித்தார்!

இது ஒரு கதைபோலத்தான் இருக்கும். ஆனால் இதற்குள் ஓர் அழகான அர்த்தமும், ஆழமான ஸத்யமும் இருக்கிறது. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அந்த ச்ரத்தை இருந்தால் அதுவே போதுமானது. வேறொன்றுமே வேண்டியதில்லை.
ஆழமான இணைப்பை உணரும் உணர்வே போதுமானது. "ஸ்வாமி, இணைந்திருப்பதை எப்படி உணர்ந்துகொள்வது?" என்று நீங்கள் கேட்கலாம்.
அதை உணர வேண்டும் என்று உங்களுக்குள் இருக்கும் அந்தக் கொதிப்பே போதுமானது. அந்தக் கொதிப்பு, உணர வேண்டும் என்கிற உங்களுடைய விருப்பம், அந்தத் தேடுதல், அந்தத் தாகம் - அந்தத் தீவிரத் தன்மையே போதுமானது. நீங்கள் உணரத் தொடங்கி விடுவீர்கள்.
அந்த ச்ரத்தையின் சக்தியே உங்களுக்குள் அதை உருவாக்கிவிடும். வேறொன்றும் தேவையில்லை. நான் இந்தக் கீதை சொற்பொழிவு மூலமாக முயற்சி செய்வதெல்லாம் ஒன்றுதான். அது, உங்களுக்குள் அந்தத் தீயை உருவாக்குவது அவ்வளவுதான்.
தானாகவே நீங்கள் தீர்வைத் தேடுவீர்கள். நான் இந்த நிகழ்ச்சி மூலம் அல்லது த்யான முகாம்கள் மூலம், அந்த ருசியை அல்லது அதன் ஒரு துளியைக் கொடுக்கிறேன். பிறகு நீங்கள் அதைத் தேடித் தொடர்ந்து ஓட ஆரம்பிப்பீர்கள். அதற்குப் பிறகு நான் எதுவும் செய்யத் தேவையில்லை.
என்னுடைய வேலை எல்லாம், உங்களுக்கு ஒரு தீவிர உத்வேகத்தைக் கொடுத்து, உங்கள் கேள்விகளைத் தேடலாக மாற்றி, உங்கள் கேள்விகளைத் தேடலாகப் பரிணமிக்கச் செய்து, உங்களுக்குள் ஓர் ஆழமான தாகத்தை உருவாக்குவதுதான்.
ஒவ்வொருவருக்குமே ஒரு பாதை
கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் சொல்கிறீர்கள், மற்ற குருமார்களையும் பின்பற்றலாம். அது அழகான மலர்களைப் பறித்து ஒரு மாலை தொடுப்பதுபோலத்தான் என்று சொல்கிறீர்கள். அதனால் என்ன பயன்? ஒருவரை மற்றொருவரோடு ஒப்பிடுவது தானே தொடரும்! இதனால் ஒருவர் எங்கும் நிறைவடைய மாட்டாரே!
ஸத்யத்தைத் தேடும் ஒவ்வொருவருக்குமே ஒரு பாதை இருக்கிறது. அது ஞானயோகமாக இருக்கலாம்; பக்தியோகமாக இருக்கலாம்; அல்லது கர்மயோகமாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தங்களுக்கான பொருத்தமான பாதையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
எந்தப் பாதை அவர்களை ஈர்க்கிறதோ, அந்தப் பாதையில் சென்று குருவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
தொடக்கத்தில், நீங்கள் சரியான குருவைத் தேடிக்கொண்டிருக்கும்போது தேடுவது, சோதனை செய்வது, சரி பார்த்துக்கொள்வது இவை எல்லாமே மிகவும் உபயோகமாக இருக்கும்.
> ஒவ்வொருவருக்குமே
> ஒரு பாதை
> இருக்கிறது.
> அது ஞானயோகமாகவோ,
> பக்தியோகமாகவோ
> அல்லது
> கர்ம யோகமாகவோ
> இருக்கலாம்.
அது ஒப்பிட்டுப் பார்த்தலாகவும் இருக்கலாம். இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம்கூட இல்லை.
ஒவ்வொரு குருமார்களும் தங்களை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக்கொள்வார்கள். அதனால் நீங்கள் பல்வேறு குருமார்களிடமிருந்து ஸத்யங்களைச் சேர்த்து ஒரு அழகான பூங்கொத்தை செய்து கொள்ளமுடியும்.
ஆயினும் ஏதேனும் ஒரு சமயத்தில் உங்களுடைய பாதையையும் அந்தப் பாதையில் உங்களைச் சரியான முறையில் வழிநடத்தக்கூடிய ஒரு குருவையும் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. நீங்கள் வெறுமனே அறிவை மட்டும் சேகரித்துக் கொண்டிருக்கும்வரை உங்களுக்கு குரு தேவையில்லை.
பல ஆன்மீக நூல்களைப் படிப்பது மட்டுமே போதுமானது.
நீங்கள் உங்களுக்குள் பட்டறிவாகச் சேர்த்துவைத்துக் கொண்டிருக்கிற அறிவை உள்வாங்கி, அதை உங்களுக்குள் ஒருமுகப்படுத்தத் திட்டமிடாதவரை உங்களுக்கு ஒரு வாழும் ஞானியினுடைய வழிகாட்டுதல் தேவையில்லை. அறிவு, மூளையோடு நின்றுவிடும், அது இதயத்தையும் இருப்புத் தன்மையையும் தொடாது.
‘தன்னை உணர்தல்’ என்ற பாதைக்குள் நீங்கள்
ஆழமாகச் செல்ல விரும்பினால், உங்கள்
இதயத்திலும் இருப்புத்தன்மையிலும் நீங்கள்
தொடப்பட வேண்டியது அவசியமாகிறது.
நீங்கள் குருவால் தொடப்பட வேண்டும்.
உங்களுக்கு குருவின் தேவை இருக்கிறது. ஒரு
ஜ்ஞான குருவால் மட்டும்தான், அவர் அடைந்த
ஞான அனுபவத்தை இறுதி அனுபவத்தை
உங்களுக்குள் செலுத்த முடியும்.
> சரியான குருதான்,
> உங்கள் உடலுக்குள்ளும்
> மனத்திற்குள்ளும்
> சரியான
> உருமாற்றங்களை,
> ரசவாதங்களை
> நடத்த முடியும்.
பிறகு நீங்கள் விரும்பிய அந்த அனுபவத்தைப் பெறலாம். ஆனால் இந்தப் பாதையின் முடிவுவரை செல்லத் தீர்மானித்துவிட்டால், உங்கள் கேள்விகள் கண்டிப்பாகத் தேடலாக மாற வேண்டும்; மேலும் உங்கள் தேவை, உடனடி தேவையாக மாற வேண்டும்.
எப்பொழுது நீங்கள் இந்த நிலையை அடைகிறீர்களோ அப்பொழுதே நீங்கள் தானாகவே ஒரு குருவுக்கு முன்னுரிமை கொடுத்து அவரையே உங்கள் குருவாகத் தேர்ந்தெடுத்து விடுவீர்கள்!
உண்மையில் இது ஒரு போட்டிதான். சரியான குருதான், உங்கள் உடலுக்குள்ளும் மனத்திற்குள்ளும் சரியான உருமாற்றங்களை, ரசவாதங்களை நடத்த முடியும்.
சரியான குரு மட்டுமே உங்களுடன் மூளை, இதயம் மற்றும் இருப்புத்தன்மை அளவிலான தொடர்பை உருவாக்க முடியும். அந்த நிலையில் இருந்து, நீங்கள் குருவை முடிவு செய்தால், உங்களை அவர் சீடராக ஏற்றுக்கொள்வார்.
நீங்கள், புறக்கணிக்க முடியாத ஒரு உறவு முறைக்குள் நுழைகிறீர்கள். அவரை நீங்கள் குருவாக ஏற்றுக் கொண்டதற்காகவே, அவர் உங்களுக்கு தீக்ஷை கொடுத்து உங்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்குப் பொறுப்பேற்கிறார்.
குருவைத் தேடிப் பிடிக்கும் சுழற்சி ஒரு முடிவுக்கு வரவேண்டும்

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நன்கு சிந்தித்த பின் எடுக்கப்பட்ட மனப்பூர்வமான தீர்மானம், இது, பொதுவாக மேம்போக்காக எடுக்கப்பட்டதீர்மானம் அல்ல. அதனால்தான், என்னுடைய சீடராகி ஆச்'ரமத்திலே தங்க விரும்புபவர்கள், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அக்கறையின்மையை, ஆர்வமின்மையை நீக்குகிற cooling off period பயிற்சியை முடிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
குரு உங்களுக்கு இங்கே ஆன்மீக ஆபரேஷன் செய்கிறார். இது, உடலில் ஆபரேஷன் செய்யும்போது ஏற்படும் உடல் வலியைவிட எந்த வகையிலும் குறைவானது அல்ல. அங்கேயாவது மயக்க மருந்து இருக்கும்; இங்கே உங்களுக்கு மயக்க மருந்தும் இருக்காது.
இது உங்களுடைய அஹங்காரத்திற்குச் செய்யப்படும் ஆபரேஷன். உதாரணமாக, நான் உங்களைச் சீடராக ஏற்றுக்கொண்டு, ஆச்'ரமத்தில் தங்க அனுமதித்திருக்கிறேன் என்பதற்காக நான் உங்களுக்கு என்னுடைய கவனிப்பைத் தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் நான் பல வாரங்களுக்கு உங்களைப் பார்க்கக்கூட மாட்டேன். உங்களோடு பேசவும் மாட்டேன். உங்களை வாரக்கணக்கில் 'மௌனத்தில்' இருக்க விட்டு விடுவேன். இந்தச் செயல்முறையில் இருந்தவர்களுக்கு, இது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். இது, சாதாரணமான ஒரு சின்ன விளையாட்டு கிடையாது. பலபேர் இந்த ஆபரேஷனில் இருந்து ஓடி விடுவார்கள்.
இந்த மாதிரி வழிமுறைகளை அவர்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதற்கு முன், தங்களுடைய அஹங்காரத்தை, தங்களுடைய அடையாளத்தை, தாங்கள் கவனித்துகொள்ளப்பட வேண்டும் என்ற விருப்பத்தை, எண்ணத்தை முதலில் கீழே போட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது.
சிலர் வேறு குருவைத் தேடி ஓடி விடுவார்கள். யாரை அவர்கள் மிகவும் அன்பானவர், கருணையானவர் என்று நினைக்கிறார்களோ அங்கே போய் விடுவார்கள்.
அவர் உண்மையான குரு என்றால், சரியான குரு என்றால் இதே சுழற்சி தான் அங்கேயும் திரும்ப நடக்கும். ஏனென்றால் அந்த மனிதருக்குள் உண்மையான உருமாற்றம் நிகழவேண்டுமானால், இந்த முறையில்தான் நடந்தாக வேண்டியுள்ளது. அவர் மீண்டும் அங்கிருந்து வேறு ஒரு குருவைத் தேடி ஓடுகிறார்.
அதற்குப் பிறகு, குருவைத் தேடிப் பிடிக்க ஓடிக்கொண்டே இருக்கும் ‘சுழற்சி’ நடந்துகொண்டே இருக்கும். இந்த இடத்தைக் காட்டிலும் அந்த இடத்தில் அதிக மகிழ்ச்சி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் ஒரு கிளப்பை விட்டு வேறு ஒரு கிளப்புக்கும், ஒரு மதுக்கடையை விட்டு வேறு ஒரு மதுக்கடைக்கும் இன்பத்தைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பதுபோல, குருவையும் தேடிப் போய்க்கொண்டே இருப்பார்கள். இப்படித் தாவிக் குதித்து ஓடுவதால் எதையும் பெற்றுவிட முடியாது.
நீங்கள் உங்களுடைய நேரத்தையும்,
குருவுடைய நேரத்தையும்
வீணடித்துக்கொண்டிருப்பீர்கள்,
அவ்வளவுதான்.
இப்படிப்பட்டவர்கள் ஒரு குருவுக்கு எதிராக
இன்னொரு குருவைப் பயன்படுத்துவார்கள்.
அவர்கள் ஒவ்வொரு குருவிடமிருந்தும்
தாங்கள் எதைப் புரிந்து கொண்டார்களோ,
அதைப் பெரிய பட்டியலாக்கி, இது நல்லது
ஒரு ஞான குருவால்
மட்டும்தான்,
அவர் அடைந்த
ஞான அனுபவத்தை
இறுதி அனுபவத்தை
உங்களுக்குள்
செலுத்த முடியும்.
- இது கெட்டது என்று புத்தகமாக எழுதுவார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு ஆச்ரமத்திலும் மூன்று வாரம் மட்டுமே தங்கியிருந்துவிட்டு, ஒரு புத்தகமே எழுதி விடுவார்கள். இவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.
அவர்களுடைய நோக்கம், பணத்தையும் பெயரையும் தேடுவதுதான். அவர்கள் உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தைத் தேடுவதில்லை. இந்த விளையாட்டில் பங்கெடுக்காதீர்கள். இந்த இயக்கம், உண்மையான நேர்மையான வழியில் இயங்குகிற செயல்பாட்டை உடையது.
நான் உங்களுடைய தேடுதலையும், அறிவைச் சேகரிக்கும் முயற்சி யையும் ஊக்குவிக்கிற அதே சமயத்தில், உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைப் பரிந்துரை செய்கிறேன். நீங்கள் ஆன்மீகப் பாதையில் ஆழமாகச் செல்வதற்கான பொறுப்பை எடுக்கத் தீர்மானித்த பிறகு, குருவைத் தேட ஆரம்பியுங்கள்; ஒரு குருவைத் தேர்ந்தெடுங்கள். அவரின் அனுமதி பெற்று அந்த குருவுடனேயே இருங்கள்.
வாழ்க்கையில் நீங்கள் போகவேண்டிய பாதை...
நூற்றுக்கணக்கான ஞானமடைந்த குருமார்கள் இந்தப் பூமியில் இருக்கின்றனர். உண்மையான குருமார்களுக்கு குறைவு இல்லை. சிரத்தையான சீடர்களுக்குத்தான் குறைவு இருக்கிறது.
நீங்கள் இன்னொரு குருவிடமோ அல்லது ஆச்ரமத்திற்கோ போகும்போது,
உண்மையான குருமார்களுக்கு குறைவு இல்லை. சிரத்தையான சீடர்களுக்குத்தான் குறைவு இருக்கிறது.
தயவுசெய்து என்னுடைய மாலையை அணியாதீர்கள். என்னுடைய அமைப்பைப் பற்றியோ, என்னைப் பற்றியோ பேச வேண்டாம். அது எனக்கும் அந்த குருவுக்கும் செய்யும் அவமரியாதை. நீங்கள் அவருடைய சீடர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவீர்கள். உங்களைப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன், இங்கே நீங்கள் வரும்போது அந்த குருவுடைய போதனைகளைப் பற்றிப் பேச வேண்டாம். ஏனென்றால் அது ஆரம்ப நிலைகளில் இருப்பவர்களைக் குழப்பிவிடும்.
இராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும்

இடையில் நடந்த ஒரு உண்மைச்
சம்பவம். விவேகானந்தர் அத்வைத
தத்துவ ஞானி. அவருக்கு பக்தி
வழியில் பெரிய விருப்பம்
இல்லை. இராமகிருஷ்ணர்
அதைப்புரிந்து கொண்டு அவரை
ஞானப் பாதையிலேயே உற்சாகப்
படுத்தினார்.
இராமகிருஷ்ணர், வேறு ஒரு சீடருக்குப் பக்தி வழியில் பயிற்சிகொடுத்துக் கொண்டிருந்தார்.
விவேகானந்தர் அந்தச் சீடரிடம் அத்வைத கருத்துகளை எடுத்துச் சொல்லி அவரைத் தம்முடைய அத்வைத கொள்கைக்கு மாற்றும் முயற்சியை மேற்கொண்டார்.
தம்முடைய அறிவின் சக்தியைப் பயன்படுத்தியும், ஆணித்தரமான தம்முடைய வாதங்களைக்கொண்டடும் அந்தச் சீடரைக் குழப்பி, விவேகானந்தர் வெற்றி பெற்றார்.
இதைக் தெரிந்துகொண்ட இராமகிருஷ்ணர் விவேகானந்தரையும் மற்ற முக்கிய மாணவர்களையும் அழைத்து, விவேகானந்தரிடம், "உன்னுடைய வழி, மற்ற மாணவர்களின் வழி அல்ல, அவர்களுடைய பயிற்சியில் குறுக்கிட வேண்டாம்," என்று சொல்லிவிட்டார். விவேகானந்தர், உடனே தம் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்.
அதனால்தான் நான் என்னுடைய சீடர்களிடம் அவர்கள், தங்களை எவ்வளவுதான் ஆன்மீகத்தில் முன்னேறியவர்களாக நினைத்துக் கொண்டாலும் சரி, அவர்கள் மற்றவர்களுக்கு ஆன்மீக ஆலோசனைகள் தர ே வண்டாம் என்று சொல்வதுண்டு. சீடர்களிடம் மற்றொருவருக்கு ஆன்மீக ஆலோசனை சொல்பவராகவோ அல்லது வழிகாட்டியாகவோ மாற வேண்டாம் என்று சொல்லுவேன்.
அவர்களால் உங்களைக் குழப்பி வேறு பாதைக்குத் திருப்பிவிட மட்டும்தான் முடியும். ஒரு சீடருக்கு என்ன தேவை என்பதையோ, அந்தச் சீடரை எப்படி வளர்ச்சிப் பாதையில் எடுத்து வர வேண்டும் என்பதை அறியும் திறமையோ அவர்களிடம் இருக்காது.
ஆன்மீகப் பாதைதான் மீதமிருக்கும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் போக வேண்டிய பாதை. வாழ்க்கை, இன்பம் துன்பம் என்ற பெயரில் எதைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்பதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணா வேண்டியுள்ளது.
ஆனால் ஏதோ ஒரு சமயத்தில், உங்களுக்கு நல்லது கொடுக்கக்கூடியது எது, கெட்டது கொடுக்கக்கூடியது எது, எது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, எது தற்காலிகமான இன்பத்தைத் தருகிறது என்று பிரித்து பார்க்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்கிறீர்கள். இதே பக்குவம்தான் உங்கள் ஆன்மீகத் தேடலிலும் ஏற்படும். நீங்கள் முடிவு எடுப்பதற்கு முன், அனுபவப்பூர்வமாக உணார வேண்டும்.

நானே உங்களைப் படைக்கிறேன்!

10.4,5 வாழும் உயிர்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனம், அறிவு, சந்தேகத்திலிருந்தும் மூடநம்பிக்கையிலிருந்தும் விடுதலை, மன்னிக்கும் மனோபாவம், ஸத்யத்தோடு வாழ்வது, புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, சந்தோஷம், மனக்கவலை, பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை, சாத்வீகம், துன்பம் வரும் போதும் மன அமைதியோடு இருத்தல், திருப்தி, துறவறம், ஈகை, பற்றின்மை என இந்த எல்லா தகுதிகளும் என்னால்தான் உருவாக்கப்பட்டன.
10.6 ஏழு மிகப்பெரிய ஞானிகளும், அவர்களுக்கு முன்னால் இருந்த நான்கு மிகப்பெரிய மனுக்களும் என்னுடைய இயல்புகளை உடையவர்களாய் என்னிடமிருந்து வந்தவர்கள்தான்.
அவர்கள் என்னுடைய மனத்தில் இருந்து வந்தவர்கள், பிறகு அவர்களிடம் இருந்து இந்தப் பூமிகரகத்தில் வசிக்கும் உயிர்கள் எல்லாம் வந்தன.
யார் ஒருவன் என்னுடைய இந்த எல்லா மகிமைகளையும் சக்திகளையும் அறிந்திருக்கிறானோ, நிஜமாகவே அவன் என்னுடன் இணைந்தே இருக்கிறான்.
அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
உங்கள் அனுமதியின்றி உங்களை எதுவும் பாதிப்பதில்லை
முதல் ஸ்லோகத்தைப் புரிந்து கொண்டால் போதும், நீங்கள் உடனடியாக அமைதியடைந்து விடுவீர்கள். "உன்னிடம் என்ன இருந்தாலும், உனக்கு நல்ல பெயரோ அல்லது கெட்ட பெயரோ என்ன இருந்தாலும், அது என்னால் உருவாக்கப்பட்டதுதான்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். பிறகு ஒன்றை உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள், உங்களோடு இருப்பவை எல்லாமே கடவுளின் பரிசுதான்.
ஒரு சின்ன கதை:
முன்னொரு காலத்தில் சுகர் என்றொரு மிகப்பெரிய ஞானி இருந்தார். சுக முனிவருக்கு அவருடைய தந்தையான வியாஸர், ஸத்யத்தைப் போதித்து, ஜனக மகாராஜனுடைய அரசவைக்கு அனுப்பி வைத்தார். ஜனகர், ஒரு அரசராக இருந்தாலும் அவர் ஒரு ஞானி. அவர் உடல், மனம் கடந்த ஆனந்த நிலையில் வாழ்ந்தவர். அவரை விதேஹ என்று சொல்வார்கள், அதாவது உடலைக் கடந்து வாழ்பவர் என்று பொருள்.
சுகர் ஞானத்தைக் கற்க வருவதைத் தெரிந்துகொண்ட ஜனகர், அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அந்தச் சிறுவன் அரண்மனையை அடைந்தபோது, காவலாளிகள் கடுமையாகப் பார்த்தார்கள்.
அவர், ஒரு மிகச் சிறந்த பிரபலமான ரிஷியின் மகன். இருந்தாலும், அவர் அங்கேயே மூன்று இரவும் பகலும் உட்கார்ந்து இருந்தார். ஒருவருமே அவரைக் கண்டுகொள்ளவும் இல்லை, கவனிக்கவும் இல்லை.
மூன்று நாட்களுக்குப் பிறகு அரசருடைய
மந்திரிகளுக்கு வியாஸருடைய மகன்
வந்திருப்பது தெரிந்தது. உடனே அவர்கள்
வேகமாக அரண்மனை வாயிலுக்கு
வெளியே ஓடிவந்து வரவேற்றார்கள்.
அவரை மிகவும் மரியாதையோடு
அரண்மனைக்குள் அழைத்துப் போனார்கள்.
மிகப்பெரிய அறையில் தங்க வைத்து நல்ல
உணவு கொடுத்து, எல்லா வசதிகளும் செய்து
கொடுத்தார்கள்.
அவர் மிக மரியாதையோடு நடத்தப்பட்ட போதும், அரண்மனைக்கு வெளியே காத்திருந்த போதும் சுகரின் முகத்தில் அமைதியே இருந்தது. பிறகு அரசர் ஜனகரிடம் அழைத்துக்கொண்டு போனார்கள்.
அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அங்கு இசை இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சில வேடிக்கைகளும் அரசவையில் நடந்து கொண்டிருந்தன. ஜனகர், சுகரிடம் ஒரு கோப்பை நிறைய, அதன் விளிம்புவரை பாலை நிரப்பிக் கொடுத்து, பாலில் இருந்து ஒரு துளிகூட சிந்தாமல் அந்த அறையை ஏழு முறை சுற்றி வரச் சொன்னார்.
அந்தச் சிறுவனும் எதுவும் பேசாமல் அந்தப் பால்கோப்பையை எடுத்துக்கொண்டு, அறையைச் சுற்றத் தொடங்கினார். அத்தனை களியாட்டங்களுக்கும் ஈர்ப்புகளுக்கும் நடுவிலும், சிறிதும் கவனம் சிதறாமல், பெரிய முயற்சி ஏதும் இல்லாமல் அந்த அரசவையை ஏழு முறை சுற்றி வந்தார். இந்த உலகத்தில் நடக்கும் எதுவும் அவருடைய அனுமதியில்லாமல் அவரைப் பாதிக்க முடியவில்லை.
அவன் கோப்பையைத் திருப்பிக் கொடுத்தபோது, ஜனகர் சொன்னார், "ஏற்கெனவே உனக்கு உன் தந்தை எதைக் கற்றுத் தந்தாரோ, மேலும் நீயாகவே எதைக் கற்றுக் கொண்டாயோ, அதையேதான் நான் இப்போது உனக்கு மீண்டும் சொல்லித்தர வேண்டியிருக்கும். உனக்குக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. உனக்கு ஸத்யம் நன்றாகத் தெரிந்திருக்கிறது, நீ வீட்டிற்குப் போகலாம்," என்றார்.
சுகர் தெய்வீகத்தில் நிலைத்திருந்தவர். எல்லா விஷயங்களும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் வெளிப்பாடுதான் என்பது அவருக்குத் தெரியும்.
அதனால் தான், அவர் எப்படி நடத்தப்பட்ட
போதும் அல்லது அவரிடம் என்ன
இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவருடைய
சமநிலை எதனாலும் பாதிக்கப்பட வில்லை.
கீதையின் முந்தைய அத்தியாயங்களில்
அர்ஜுனனுடைய அனுபவம், அந்த இளம்
சுகருடைய அனுபவத்தில் இருந்து வேறுபட்டு
இருந்ததைப் பார்க்கிறோம்.
> நம்மை நாமே
> அப்படியே
> ஏற்றுக்கொள்ளும்
> போதுதான்,
> நம்மால்
> மற்றவர்களையும்
> ஏற்றுக்கொள்ள
> முடியும்.
அந்தச் சிறுவனைப்போல இல்லாமல், அர்ஜுனன் திடீரென எந்தச் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டாரோ, அந்தச் சூழ்நிலையின் காரணமாகக் குழப்பமடைந்து விடுகிறார். ஆனால் உற்றார் உறவினர்களைக் கொல்வது தமக்குக் கவலை அளிக்கக்கூடிய செயலாக இருக்கிறது என்கிற பெரிய பெரிய வார்த்தைகளைக்கொண்டு தம்முடைய அந்தக் குழப்பத்தை மறைக்கிறார்.
இருந்தாலும், கிருஷ்ணரால் அர்ஜுனனுடைய மனத்திலுள்ள பிரச்சினைகளை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை முழுமையாகப் பார்க்க முடிந்ததால், அவர் அர்ஜுனனுடைய வாதங்களைப் புறக்கணித்து விடுகிறார்.
உணர்ச்சிகளைச் சமநிலைப்படுத்த இயலாமல் தம்மைத்தாமே சித்ரவதை செய்து கொண்டிருப்பது முட்டாள்தனம் என்றும், அர்ஜுனனுடைய இந்த முட்டாள்தனமான அனுபவம் ஆதாரமற்றது என்றும் கிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார்.
உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளுங்கள்
அர்ஜுனனிடம், அந்தச் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளுமாறும், நிஜமான பற்றற்ற, தளைகள் அற்ற, சுதந்திரத்தையே தன் இயல்பாகக்கொண்ட இருப்புத்தன்மையை உணருமாறும் அறிவுரை சொல்கிறார்.
கிருஷ்ணர், வாழ்க்கையை அது எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார். நம்மைநாமே அப்படியே ஏற்றுக்கொள்ளும் போதுதான், நம்மால் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். அப்போதுதான் மற்றவர்களுடன் ஒரு ஆழமான நட்பை நம்மால் உணர முடியும்.
மற்றவர்களோடு ஆழமான நட்போடு இருப்பதுதான் ஆன்மீகம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஆன்மீகம் என்பது மற்றவர்களோடு நேர்மையோடும், ஆழமான நட்புணர்வோடும் இருப்பதுதான்.
நம்முடைய விழிப்புணர்வின் மலர்ச்சிதான் அன்பு.
நம்முடைய விழிப்புணர்வு தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்கிற, போதெல்லாம் கருணை நிகழும்; காமம், காதலாகவும் அன்பாகவும் மாறிவிடும்.
அப்போது ஒரு தொடுதல்கூட, உயிரோட்டமான செயல்களைத் தூண்டுவதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாகவும் இருக்கும். அன்புதான் மிகப்பெரிய குணமாக்கும் சக்தியாக இந்தப் பூமியில் இருக்க முடியும் என்று நான் ஆழமாக நம்புகிறேன்.

நான் என் த்யான சிகிச்சையாளர்களிடம் சொல்வது, “உங்களால் அன்பை வெளிப்படுத்த முடியாவிட்டால், உங்கள் மூலம் த்யான சிகிச்சை நிகழாது.”
என்னை அன்பர்கள் பார்க்க வரும்போது, நான் அவர்களைப் பார்த்த உடனேயே கைகளை நீட்டுவேன். இதைப் பலர் வினோதமாக நினைப்பார்கள். அவர்கள் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொள்வதும், இறுக்கமாகவும் அமைதியாகவும் இருப்பதுதான் ஆன்மீகம் என்று நினைத்திருப்பார்கள்.
இங்கே நான் நீட்டிய கரங்களுடன் மக்களை அணுகுகிறேன். இந்தக் காட்சி, அவர்கள் ஆன்மீகம் என்று நினைத்து வைத்திருப்பதுடனோ அல்லது அவர்கள் தங்கள் தலையில் தாங்கி வைத்திருக்கும் ஆன்மீக நபருடனோ பொருந்துவதில்லை.
Mஅவர்களைப் பொறுத்தவரை பகிர்ந்துகொள்ளுதல், அன்பு காட்டுதல் ஆகிய விஷயங்களோடு ஆன்மீகத்தைப் பொருத்தி பார்க்க முடிவதில்லை.
பலதரப்பட்ட மனிதர்கள் ஆச்ரமத்திற்கு த்யான சிகிச்சை பெற வருகிறார்கள். இளைஞர்கள், முதியவர்கள், புற்றுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் இன்னும் எத்தனையோ தரப்பட்ட மனிதர்கள் இங்கே வருகிறார்கள்.
ஒரு மனிதருக்குக் காலில் வலி இருந்தால், இயல்பாக நான் என் இருக்கையில் இருந்து எழுந்து அவர்கள் காலைத்தொட்டு சிகிச்சை அளிப்பேன். காலும் நம்முடைய உடலின் ஒரு பாகம்தானே.
பழைய பாரம்பரியத்தில் வந்த, வயதில் மூத்த ஸ்வாமி ஒருவர் நட்போடு எனக்கு இதைப் பற்றி அறிவுரை சொன்னார். "நீங்கள் ஒரு ஸ்வாமி. ஒரு ஸ்வாமி தம் இருக்கையில் இருந்து எழுந்து மற்றவர் காலைத் தொடுவது என்பது வழக்கத்தில் இல்லாதது. இது பாரம்பரியத்துக்கும் எதிரானது," என்று சொன்னார்.
நான் பணிவாகச் சொன்னது இதுதான்: "இந்த ஆசனம், நான் அணிந்திருக்கும் இந்தக் காவி உடை - இந்த இரண்டுமே கருணையைக் குறிக்கும் அடையாளங்கள்தான். நான் என்னுடைய கருணையை வெளிப்படுத்தியதால் பெற்றதுதான் இந்த ஆசனம். நான் இங்கு, இந்த ஆசனத்திற்காகஇல்லை."
ஆன்மீகம் என்றால் பிரவாகமாக ஓடுதலைக்
குறிக்கிறது. ஆன்மீகம் என்பது அன்பையும்
கருணையையும் பரப்புவது.
கருணையினால் நாம் சேவை செய்தோம்
என்றால், நாம் சேவை செய்தோம் என்ற
எண்ணமே நமக்குள் எழாது. நாம் ஒருபோதும்
நாம் சேவை செய்ததாக நினைக்க மாட்டோம்.
சேவை செய்ய நமக்கு ஒரு வாய்ப்பு கிடை
த்ததாக எண்ணிக்கொள்வோம்.
விவேகானந்தர் சொல்கிறார், "கொடுப்பவரின் கைகள் தாழ்ந்தும் வாங்குபவரின் கைகள் மேலேயும் இருக்க வேண்டும்."
ஆனால் நம்முடைய விஷயத்தில் எல்லாமே எதிர்மறையாக நடக்கிறது. கொடுக்கும் கைகள் மேலேயும், வாங்கும் கைகள் கீழேயும் இருக்கின்றன. ஒருவருக்குச் சேவை செய்ய நமக்கு வாய்ப்பளித்ததற்கு நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அதனால்தான் விவேகானந்தர் ஸேவை என்ற வார்த்தைக்குப் பதிலாகப் பூஜை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஸேவையை, பூஜையாக மாற்றி அமைத்தார்.

சேவை என்ற கருத்து, நாம் யாருக்கு
சேவை செய்கிறோமோ, அவர்களை விட
உயர்ந்த இடத்தில் நாம் இருப்பதாக
நம்மை நினைக்கச் செய்யும்.
சேவை என்றால், நாம் அவர்களுக்குச்
சேவை செய்கிறோம். ஆனால் பூஜை
என்பதில் சமர்ப்பிக்கிறோம்; அதில்
சேவை செய்ய மாட்டோம். கருணை
பொங்கும்போது நாம் சமர்ப்பணம்
செய்கிறோம். அப்போது நாம் சேவை
செய்வதில்லை.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்,
மற்றவர்கள் மேல் நமக்கு ஓர் ஆழமான
பகையும் வெறுப்பும்தான் இருக்கிறது.
சேவை என்றால்,
நாம் அவர்களுக்குச்
சேவை செய்கிறோம்.
ஆனால் பூஜை என்பதில்
அவர்களுக்குச்
சமர்ப்பிக்கிறோம்
போட்டோ எடுக்கும்போது கேமராமுன்
சிரிப்பதுபோல், மற்றவர்களைப்
பார்க்கும்போது வேண்டுமானால் நாம்
சிரிக்கலாம். நாம் சிரிக்கிறோமே தவிர
ஒருபோதும் நட்ப உணர்வை உணர்வதே
இல்லை.
நாம் ஒரு பாதுகாப்பான தூரத்தில் இருந்து பாதுகாப்பான ஒரு விளையாட்டு விளையாடவே விரும்புகிறோம். ஏனென்றால் நாம் மற்றவர்களுடன் நிஜமான நட்ப உணர்வுடன் இருப்பது இல்லை.
இதெச் சரி செய்ய, நீங்கள் செய்யவேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், உங்களை நீங்களே, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். சிலர் என்னிடம் சொல்வதுண்டு, “ஸ்வாமி, என்னையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நான் என்ன செய்வேன்?” என்பார்கள்.
நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம், “குறைந்த பட்சம் உங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையாவது ஏற்றுக்கொள்ளுங்கள், அதுவே போதும்,” என்பேன்.
ஏற்புத்தன்மை, உருமாற்றத்திற்கு வழிவகுக்கும்
நம்மேயே நாம் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதை ஏற்று கொண்டாலே போதும். நம்முடைய மனத்தில் இருந்து நாம் விடுபட்டு விடுவோம்.
நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.
இல்லை, நம்மேயே நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், நம்மை நாமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட அந்த ஏற்புத் தன்மையே, ஒரு புதிய பிரபஞ்ச விழிப்புணர்வை நமக்குள் மலரச் செய்யும்.
உங்களை நீங்களே மன்னிப்பதும், மற்றவர்களை நீங்கள் மன்னிப்பதும் ஒன்றுதான்.
இயேசு சொல்கிறார், "நீங்கள் உங்களை நேசிப்பதைப்போலவே பக்கத்து வீட்டுக்காரரையும் நேசியுங்கள்." ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் நம்மேயே நேசிப்பது இல்லை. பிறகு எப்படி மற்றவர்களை நேசிப்போம்?
நம்முடைய தீர்மானங்களாலும் பாரபட்சமான கருத்துகளாலும் மற்றவர்களைத்துக்கப்படுத்துவதுபோல, நம்மைப்பற்றிநாம்வைத்திருக்கும் எண்ணங்களால் நம்மேயே நாம் துக்கப்படுத்திக் கொள்கிறோம்.
நம்மேயே நாம்
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை என்றால்,
நம்மை நாமே
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை
என்பதையாவது
ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
மற்றவர்களைக் கொல்வதற்கும் தற்கொலை
செய்துகொள்வதற்கும் ஒரே கத்தியைத்தான்
பயன்படுத்துகிறோம். மற்றவர்களோடும்
நம்மோடும் தொடர்புகொள்வதற்கு ஒரே மன
அமைப்பைத்தான் பயன்படுத்துகிறோம்.
நாம் மற்றவர்களுக்கு விஷம்
கொடுக்கும்போது, நமக்குள்ளும் மிக
ஆழமான குற்ற உணர்ச்சி இருந்தே தீரும்.
ஏனென்றால் அதே மனதுதான் நம்முடைய உள்
தளத்திலும் வேலை செய்துகொண்டிருக்கிறது.
கோபத்தோடு இருக்கும்போது நாம்
நறுக்கென்று கடின வார்த்தைகளைப்
பயன்படுத்துகிறோம். அந்தக் கோபம்
போனதும், வெளிமுகமாக வெளிப்படுத்திய
அந்தக் கூர்மை நமக்குள் ஆழமான
குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு
உள்முகமாகத் திரும்புகிறது.
கோபத்தின் உயரமும், குற்ற உணர்ச்சியின்
ஆழமும் சமமாக இருக்கும். எந்தளவுக்கு
உயரம் அதிகமாகிறதோ, அதே அளவுக்கு
ஆழமும் அதிகமாகும்.
கிருஷ்ணர் சொல்கிறார், “உயிர்களுக்குள் இருக்கும் சந்தோஷம், துக்கம், பிறப்பு, இறப்பு, பயம், தைரியம், சகிப்புத் தன்மை, சமத்துவம், திருப்தி, துறவு, ஈகை, பெயர்-புகழ், பாராட்டு, இழிவு என்ற எல்லா குணங்களும் என்னால்தான் உருவாக்கப்பட்டன.
இதன்மூலம் அவர் குறிப்பிடுகிற அந்த ஸத்யம் என்னவென்றால் உங்கள் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் .
நாம் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளுகிற அந்தக் கணமே எல்லா இடங்களிலும் கடவுளையே பார்ப்போம்; எதையும் ஒதுக்க மாட்டோம். ஏற்புத் தன்மை வந்த உடனேயே, நமக்குள் ஓர் உள்ளார்ந்த அறிவு மாற்றம் ஏற்படும்.
இப்போது நம் மனத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உணர்வுமாற்ற செயல்முறையானது விரோதத்தை மையமாக வைத்து நிகழ்கிறது. ஆனால் நம்மைநாமே அப்படியே ஏற்றுக்கொண்ட உடனேயே, இந்த உலகத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வோம்.
நம்முடைய உடல்-மன அமைப்பில் அப்போது நிகழ்கிற அந்த உள்ளார்ந்த அறிவு மாற்றம் ஆனந்தத்தை மையமாகக் கொண்டிருக்கும். பிறகு நாம் எல்லாவற்றையும் இறைத்தன்மையின் வடிவமாகவே உணர்வோம்.
கிருஷ்ணர் தம்முடைய பெருமையை விளக்குகிறார். அவர் சொல்கிறார், “நானே அனைத்துமாக இருக்கிறேன்.” மேலும் “நானே பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறேன்,” என்று சொல்கிறார். எவர் ஒருவர் நிஜமாகவே என் மஹிமைகளையும் சக்திகளையும் புரிந்துகொள்கிறாரோ, யோகத்தில் ஈடுபடுகிறாரோ, தம்முடைய தனி விழிப்புணர்வைப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் இணைத்துக் கொள்கிறாரோ அவர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் விடுதலை அடைவார்," என்று பிரகடனப்படுத்துகிறார்.
ஸப்த ரிஷிகளைப்பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார். கிருஷ்ணர் பேசுகிற ஸப்தரிஷிகள் என்றால் நீளமான தாடியோடு தியானத்தில் அமர்ந்துகொண்டு, ஏதோ ஒன்று நிகழ வேண்டும் என்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஏழு வயதான மனிதர்கள் அல்ல.
என்னுடைய அனுபவத்தில் இவை எல்லாம் சக்திகேந்திரங்கள். இவைதான் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன. இந்த சக்திக் கேந்திரங்களே ஸப்த ரிஷிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. பிரபஞ்ச இயக்கத்தை வரையறுக்கக்கூடிய தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான அறிவாற்றலை இந்த சக்திக் கேந்திரங்கள் பெற்றுள்ளன.

என் பரிவ்ராஜக வாழ்க்கையில் நான் பல
மாதங்கள் தபோவனத்தில் வசித்திருக்கிறேன்.
கங்கோத்ரி, கோமுக் எல்லாம் தாண்டி, அது
இமயமலையின் 17,000 அடி உயரத்தில்
இருக்கிறது. இப்போதுகூட தபோவனத்திற்குச்
செல்ல சரியான பாதைகளோ, அங்குத்
தங்குவதற்குச் சரியான நிலையான
இடங்களோ கிடையாது.
நான் மற்ற ஸந்யாசிகளைப்போல குகையில் தங்கிக்கொண்டு, என்னைச் சணல் துணிகளாலும் பத்திரிகைத்தாள்களாலும் போர்த்திக்கொண்டும்தான் குளிர் காலத்தில் வசித்தேன். சாப்பிடுவதற்கு என்ன பழங்கள் கிடைத்ததோ அவற்றைச் சாப்பிட்டேன்.
தபோவனத்தை ஷம்பாலா என்று சொல்வார்கள். அதாவது பூலோகச் சொர்க்கம் என்று அதற்கு அர்த்தம். ஒரு முக்கியமான பகுதி, இதன் சிறப்பு என்னவென்றால், இந்த இடத்திலிருந்து ஒருவரால் பொருள் சார்ந்த உலக தளத்திலிருந்து ஆன்மீக தளத்திற்குள் செல்ல முடியும்.
சக்திகேந்திரங்களாக இருக்கிற ஸப்த ரிஷிகளை இந்தத் தபோவனத்திலிருந்து அடைய முடியும். ஞானமடைந்த ஆன்மாக்கள் உயர்ந்த புனிதமான உடல் சாராத தளத்திற்கு உயர்ந்து போவதற்கு இந்தத் தபோவனம் ஒரு ஆன்மீக ஹெலிபேட் (ஹெலிகாப்டர்கள் நிறுத்துவதற்கான பிரத்யேக இடம்)போல இருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு சில சீடர்களைக் கோமுக்கிற்கு கூட்டிச் சென்று தபோவனத்தைக் காட்டினேன். அன்றிரவு கோமுக்கில் நான் ஆழமான ஸமாதிக்குச் சென்று விட்டேன். எல்லோரும் மிகவும் பயந்து விட்டார்கள்.
ஆனால் அடுத்த நாள் காலையில் நான் அவர்களுக்கு முன்னாலேயே எழுந்து விட்டேன். நான் அவர்களை எழுப்பி, "நான் ஸப்தரிஷிகளோடு அங்கேயே தங்கிவிட விரும்புவதாக அவர்களிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னைத் தூக்கி வெளியே போட்டு விட்டார்கள்," என்றேன்.
கிருஷ்ணரே அனைத்துமாக இருக்கிறார்.
கிருஷ்ணர், ஸப்தரிஷிகளை இந்தப் பிரபஞ்சத்தின் விழிப்புணர்வாகச் சொல்கிறார். தம்முடைய மனத்திலிருந்து, தம்மிடமிருந்து, மூல ஆதாரத்திலிருந்து, அந்த முதன்மை படைப்பாளியிடமிருந்துதான் இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வு உருவானதாக அவர் சொல்கிறார்.
அவரே ஸப்தரிஷிகளாகவும் இருக்கிறார். அவருடைய சக்தியே, ஞானமடைந்த ஆன்மாக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாகவும், அவர்களுடைய செயல்களை வழிநடத்துவதாகவும் இருக்கிறது. நான் எடுத்துவைக்கும் ஒரு அடியும், நான் செய்கிற ஒவ்வொரு அசைவும் இந்த சக்தியினால்தான் முடிவு செய்யப்படுகிறது.
இந்து மதப் புராணங்கள், மனுக்கள் பிரஹ்மாவின் குழந்தைகள் என்று சொல்கின்றன. அதில் மனுக்களின் பரம்பரை பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. பதினான்கு மனுக்கள் இருக்கிறார்கள்.
அவர்களே இந்தப் பூமியில் மக்கள்தொகையை உண்டாக்குபவர்கள். ஒவ்வொரு மனுவும் ஒரு குறிப்பிட்ட காலம் பூமியில் ஆட்சி செய்கிறார். இந்தப் பதினான்கு மனுக்களின் மொத்தக் காலம் ஒரு கல்பம் என்று சொல்லப்படுகிறது. இது பிரஹ்மாவின் ஒரு நாள் வாழ்க்கை. ஸம்ஸ்க்ருத்தில் எல்லா மனிதர்களும் மாநவ என்று அழைக்கப்படுவார்கள். மனுவில் இருந்து வந்தவர்கள் என்பது இதன் அர்த்தம்.
> பிரபஞ்ச விழிப்புணர்வாக
> இருப்பதால்,
> கிருஷ்ணரே
> அனைத்துமாக இருக்கிறார்.
> அவரே பிரம்மா,
> அவரே விஷ்ணு,
> அவரே சிவன்.
பிரபஞ்ச விழிப்புணர்வாக இருப்பதால், கிருஷ்ணரே அனைத்துமாக இருக்கிறார். அவரே படைப்பவர், அவரே காப்பவர், அவரே அழித்து புதுப்பிப்பவர். அவரே பிரம்மா, அவரே விஷ்ணு, அவரே சிவன்.
அவர் அதையெல்லாம் தாண்டியவராகவும் அதாவது இம்மூன்றையும் தாண்டிய பரப்ரம்மமாகவும், உயர்ந்த பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையாகவும் இருக்கிறார்.
கிருஷ்ணர் என்பது என்ன என்பதைப் புரிந்து ஏற்றுக் கொண்டாலே போதும், ஒருவர் வேறெதையும் செய்ய வேண்டியதே இல்லை. 'நம்பிக்கையும் புரிதலும் மட்டுமே விடுதலை அடையச் செய்துவிடும். வேறெதுவுமே தேவையே இல்லை' என்று குரு சொல்கிறார்.
கேள்வி : தாவோவின் கொள்கைப்படி, எல்லா விஷயங்களிலும் நன்மையும் தீமையும் இருக்கிறது. கிருஷ்ணரும் இந்த ஸ்லோகங்களில் இதைத்தான் சொல்கிறாரா?
தாவோ சொல்கிறார், எல்லாவற்றிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கிறது.
இது நல்லது, இது கெட்டது என்று பிரிப்பதுகூட நம்முடைய தீர்மானம். இது நம்முடைய மனத்தின் வேலைதான்.
ஆனால் கிருஷ்ணர் இந்த நல்லது கெட்டது என்ற கருத்துகளையும் தாண்டிப்போகிறார்.
உண்மையான ஆன்மீகம் எதையும் நல்லது கெட்டது என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; என்னவெல்லாம் இருக்கிறதோ, அது இருக்கிறது; அவ்வளவுதான். தாவோவின் அடிப்படைக் கருத்தும் இதுதான்.
தாவோ சொல்கிறார்: தீர்ப்பளித்துக்
கொண்டிருக்காமல், வித்தியாசப்படுத்திப்
பார்க்காமல் வாழ்க்கையை அப்படியே
ஏற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ‘இருமைத் தன்மை’ அற்றது. நம்முடைய கட்டுறு மனப்பாங்கும், புலன் உணர்ச்சிகளும்தான் பல வேறுபாடுகளை நமக்குள் உருவாக்குகின்றன. நல்லது கெட்டது, அவலட்சணம் அழகு, வெற்றி தோல்வி இவையனைத்தும் நாம் என்ன உணர்ந்தோமோ, அவற்றை விளக்கும் வெறும் வார்த்தைகள்தான்.
அதனால்தான், ஒருவருக்கு அவலட்சணமாகத் தெரிவது மற்றொருவருக்கு அழகாகத் தெரிகிறது. ஒருவரின் வெற்றி மற்றொருவருக்குத் தோல்வியாக இருக்கிறது. நாம்தான் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்; ஆனால் இயற்கை முழுமையாக, பூரண தன்மையுடன் இருக்கிறது.
நாம் ஒரு தீவில் தனியாக வளர்ந்தால், உயரம் என்றோ குள்ளம் என்றோ, அழகு என்றோ அவலட்சணம் என்றோ, நமக்கு வித்தியாசப்படுத்த தெரியுமா, முடியுமா? முடியாது! அங்கே அப்படி எந்த வித்தியாசமும் இல்லை.
நம்மீதும், மற்றவர்கள் மீதும் மற்றும் நிகழ்ச்சி கள் மீதும் நாம் கொண்டிருக்கும் கருத்துகளை நியாயப்படுத்துவதற்காகவே இந்த இரட்டைத் தன்மைகளை உருவாக்குகிறோம்.
நம்முடைய மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ
வெளிப்படுத்த இந்த வார்த்தைகளை
உருவாக்குகிறோம். அவ்வளவுதான்.
நம்முடைய
மகிழ்ச்சியையோ
துக்கத்தையோ
வெளிப்படுத்தவே
நாம்
வார்த்தைகளை
உருவாக்குகிறோம்.
நான், வலி என்றால் என்னவென்றே தெரியாத சில பழங்குடி மக்களோடு வசித்திருக்கிறேன். அங்கே வசிக்கும் பெண்கள் எந்தவொரு பரபரப்போ கவலையோ வலியோ இல்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.
குழந்தை பிறக்கும் நேரம் வரும்போது அந்தப் கர்ப்பிணிப்பெண் ஒரு குடிசைக்குள் போகிறார்; அரை மணி நேரம் கழித்து குடிசைக்குள் இருந்து வெளியே வரும்போது, குழந்தையோடு வருகிறார்!
அங்கே அலறலோ சத்தமோ எதுவுமே கிடையாது. உதவி செய்ய தாதிகள்கூட யாரும் இல்லை, யாருடைய கவனிப்பும் அங்கு இல்லை.
நான் அந்தக் கிராமத்தில் இருந்த வயதான ஒருவரைக் கேட்டேன், “எப்படி ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவ வலியைத் தாங்குகிறார்?”
அவர் ஆச்சரியத்துடன் என்னிடம்கேட்டார், “வலியா! என்ன வலி?”
நான் அதிகபட்ச குளிர் இருக்கும் தபோவனத்திலும், மற்ற இடங்களிலும் கூட, இந்த இரண்டு காவித் துணியோடுதான் இருந்தேன். அப்போது குளிரை உணர்ந்ததே இல்லை.
திபத்திய புத்த துறவிகள் பனியில் அமர்ந்து, ஈரத்துண்டை உடலில் சுற்றிக்கொண்டு த்யாணம் செய்யும் போது நடக்கும் நிகழ்வுகளைக் குறித்த ஒரு ஆராய்ச்சியை ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் (Harvard Medical School) செய்தது. அவர்களுடைய அதிக உடல் உஷ்ணமே அந்த ஈரத்துண்டை உலர்த்தி விடுமாம். ஒரு சாதாரண மனிதனுக்கு அந்தளவு உஷ்ணம் உடலில் ஏற்பட்டதென்றால், காய்ச்சலில் அவன் இறந்தே போய் விடுவான்.
நாம் இயற்கையை ஏற்றுக்கொள்ளும்போது, வலி சந்தோஷம், சூடு குளிர்போன்ற எல்லாவற்றையும் நன்மை தீமை என்று வேறுபடுத்தாமலும் எந்தவித கஷ்டமும் இல்லாமலும் ஏற்றுக்கொள்ள முடியும்.
அதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார், அதைத்தான் தாவோவும் (Tao) போதிக்கிறார்.

ஒளியை அனுபவியுங்கள்

10.8 பொருள் சார்ந்த இந்த உலகத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் நானே ‘மூல’மாக இருக்கிறேன். எல்லாமே என்னில் இருந்தே தோன்றுகின்றன. இதை அறிந்த அறிவாளிகள், என்னிடம் பக்தி செலுத்துவார்கள்; அவர்கள் தங்கள் இதயங்களை என்னிடம் சரணாகதி செய்கிறார்கள்.
10.9 மனத்தையும் வாழ்வையும் என்மேல் செலுத்தி ஒருவரையொருவர் ஞானமடையச் செய்து கொண்டும், எனது பெருமைகளைப் பேசிக்கொண்டும் இருக்கிற புத்திசாலிகள், மன நிறைவோடும் பேரானந்தத்தோடும் இருக்கிறார்கள்.
10.10 யார் என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஞானத்தை அளிக்கிறேன். அதன்மூலம் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள்.
அவர்களிடம் நான் வைத்திருக்கும் கருணையினால்,
அவர்களுடைய அறியாமையிலிருந்து தோன்றிய இருளை,
மெய்யுணர்வு என்ற ஞான ஒளியால் அழித்து விடுவேன்.
தெய்வீகத்தை உணர்ந்திட்டால் நீங்கள் விரிவடைவீர்கள்
இப்போது, கிருஷ்ணருடைய வார்த்தைகளை அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள நினைப்பதைவிட, அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
ஆழ்ந்த த்யான உணர்வில், அந்த பரப்ரம்ம கிருஷ்ணனோடு, நம்முடைய உயிரின் மூலத்தோடு, நம்முடைய வாழ்வின் ஆதார சக்தியோடு நமக்கு இருக்கும் தொடர்பை உணர்வோமாக!
நாம் த்யானத்திற்குள் நுழையலாம். ஏனென்றால் இந்த அத்தியாயத்தில் இனி வரும் ஸ்லோகங்கள் எல்லாம் அனுபவப்பூர்வமாக உணரப்பட வேண்டியவை. அவை புரிந்துகொள்ள முடியாதவை; அங்குப் புரிந்துகொள்ள வேண்டியது என்று அதிகமாக ஒன்றும் இல்லை.
பின்னர் கிருஷ்ணர் சொல்கிறார், "ரிஷிகளில் நான் நாரதராக இருக்கிறேன். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன். நதிகளில் நான் கங்கையாக இருக்கிறேன். மீன்களில் நான் மகரமாக இருக்கிறேன்." இப்படி அவருடைய மஹிமைகளை சொல்லிக்கொண்டே போகிறார்.
‘நம்மை நாமே
ஏற்றுக்கொள்ளுதல்’
போன்ற
அடிப்படைக் ஸத்யங்களை
ஆழமாகப்
புரிந்து கொள்ளும்போது,
அதை அனுபவப்பூர்வமாக
உணரலாம்.
‘ஏன் இவர் இத்தனை விரிவாக, நீளமாக இதை விவரிக்கிறார்?’ என்று நாம் நினைக்கலாம். எங்கெல்லாம் மஹிமைகளை காண்கிறோமோ, எங்கெல்லாம் தெய்வீகம் ஒளி வீசுகிறதோ, அங்கெல்லாம் சிறப்புத் தன்மை இருக்கிறது என்பதை அவர் நமக்குப்பிரிய வைக்கிறார்.
‘நம்மை நாமே ஏற்றுக்கொள்ளுதல்’
மற்றும் பிரபஞ்சத்துடன் தொடர்பை
ஏற்படுத்திக்கொள்ளுதல் போன்ற
அடிப்படைக் ஸத்யங்களை ஆழமாகப் புரிந்து
கொள்ளும்போது, அதை அனுபவப்பூர்வமாக
அனுபவிக்கத் தொடங்கும்போது மட்டுமே நாம் இதை உண்மை என்று உணர்ந்துகொள்கிறோம்.
நாம் இதைப் புரிந்துகொள்ளும்போதுதான், வாழ்க்கை தெய்வீகமானது; வாழ்க்கை ஒரு வரம் என்பதை அனுபவமாக உணர்ந்துகொள்கிறோம்.
நாம் கடவுளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது, நாம் திடமாக நம்பும்போது, நாம் முழுவதும் திறந்திருக்கும்போது, நமக்கு வேறு சொந்த ஆர்வம் எதுவும் இல்லாதபோது, வாழ்க்கையிடம் எதையும் பிச்சை கேட்காமல் இருக்கும்போது இது நிகழும்.
"அது இருந்தால் ஆனந்தமாக இருப்பேன், இது கிடைத்துவிட்டால் ஆனந்தமாக இருப்பேன்," என்று நம்பி, அவற்றுக்காகப் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறவரை, நாம் 'இது' அல்லது 'அது' என்று எதையாவது கேட்டுக்கொண்டிருப்போம்.
வாழ்க்கை
தெய்வீகமானது;
வாழ்க்கை ஒரு வரம்
இதை
அனுபவப் பூர்வமாக
உணருங்கள்.
"நான் அவரை மட்டுமே விரும்புகிறேன்,
வேறெதையும் இல்லை; எனக்கு அந்தச்
சுத்தமான தெய்வீக அனுபவம் மட்டும்தான்
வேண்டும்," என்ற புரிதல் ஏற்படும்போது,
இந்த முழுப் பிரபஞ்ச இருப்புத்
தன்மையையும் முற்றிலும் ஒரு
வித்தியாசமான முறையில் உணரத்
தொடங்கி விடுவோம். அப்போது
நம்முடைய உணர்வில் மாற்றம் ஏற்படத்
தொடங்கிவிடும்.
கிருஷ்ணர், இந்த உண்மைகளை முதல்முறையாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னபோது, அர்ஜூனன் அவற்றை எப்படிப் புரிந்து கொண்டிருப்பார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
"ஓ, அர்ஜூனா! நானே அதுவாக இருக்கிறேன். நானே இதுவாக இருக்கிறேன். நான் அனைத்துதுவாக இருக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்லும்போது அர்ஜூனன் இடையில் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர் கண்டிப்பாகத் தாம் விரிவடைந்து கொண்டிருப்பதை உணர்ந்திருப்பார்.
இந்த உதாரணத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்குத்
திருமணமாகும்போது நீங்களும் உங்களுடைய கணவரும் சாதாரணமானவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் மெதுவாக உங்கள் கணவர் அரசியலில் நுழைந்து மேயராகி விடுகிறார். அதற்குப் பிறகு ஐந்து வருடங்களில் ஆளுநர் ஆகி விடுகிறார், அவர் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பெரிய மனிதராகி விடுகிறார்.
அவர் உங்கள் கணவர் என்ற முறையில், முதலிலேயே அவரோடு நீங்கள் நெருக்கமான தொடர்பு கொண்டவராக உணர்ந்து இருக்கிறீர்கள். இப்போது அவர் எல்லோரும் அறிந்த பிரபலமாகி விட்டார் அல்லது நீங்கள் அவரை ஒரு பெரிய மனிதராகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்த நிலையில் நீங்கள் அவரிடம் ஓர் ஆழமான நன்றியுணர்வை அல்லது நல்லுணர்வை உணர்வீர்கள்; ஏனென்றால் அவருடைய விரிவடைதல், உங்களையும் விரிவடையச் செய்திருக்கும்.
அதேபோல அர்ஜூனனுக்கு முதலிலேயே
நண்பர் என்ற முறையில் கிருஷ்ணரோடு,
மிக ஆழமான தொடர்பு இருந்தது. இப்போது
கிருஷ்ணருடைய மகிமைகளையும் புரிந்து
கொண்டார்.
கிருஷ்ணர் தம்முடைய மகிமைகளை அர்ஜூனனுக்கு வெளிப்படுத்திக் காட்டினார்.
பாருங்கள், உங்கள் கணவர் ஆளுநரானபோது, நீங்களும் விரிவடைகிறீர்கள். ஏனென்றால் நீங்களும் அவரோடு தொடர்புடைய ஒருவராக இருப்பதால் நீங்களும் மகிழ்ச்சி அடைகிறீர்கள்.
கணவரின் செல்வாக்கு, மனைவியின் மகிழ்ச்சிக்கு ஒரு மூலகாரணமாக இருக்கிறது. பணம், ஆண்களின் மகிழ்ச்சிக்கு மூலகாரணமாக இருக்கிறது.
நீங்கள் யாரோடு தொடர்புகொண்டு இருக்கிறீர்களோ, அவர்கள் விரிவடையும்போது நீங்களும் விரிவடைகிறீர்கள். எப்போது அவர் மேன்மை அடைந்து சிறப்பு பெறுகிறாரோ, அப்போது நீங்களும் சிறப்படைகிறீர்கள்.
இங்கேயும் அதேதான் நடந்திருக்கிறது. ஏனென்றால் அர்ஜூனன் முதலிலேயே கிருஷ்ணரோடு ஆழமான தொடர்புகொண்டு உள்ளார்.
கிிருஷ்ணர் தம்மை, தம்முடைய மகிமைகளை
வெளிப்படுத்தி விரிவடையும்போது
அர்ஜுனனும் விரிவடைகிறார். அவர்
சொல்கிறார், "ஓ கடவுளே! நான் இப்படிப்பட்ட
மஹோன்னதமான மனிதருடைய நண்பனா?
நான் இப்படிப்பட்ட மஹோன்னதமான
மனிதருடனா வாழ்ந்துகொண்டிருக்கிறேன்?
ஓ கிருஷ்ணா! நீங்கள் மிகவும் உயர்ந்தவர்.
நான் உங்களுடைய நண்பன். உங்களோடு
ஆழமாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன்."
நாம் குருவுடன்
ஆழமாகத் தொடர்பு
கொண்டிருப்பதாக
உணரும்போதும்,
அவர் தம்முடைய
மகிமைகளை
வெளிப்படுத்தும்போது,
நாமும்
விரிவடைகிறோம்.
நாம் குருவுடன் ஆழமாகத் தொடர்பு கொண்டிருப்பதாக உணரும்போது, அவர் தம்முடைய மகிமைகளை வெளிப்படுத்தும்போது, நாமும் விரிவடைகிறோம்.
குரு, தம்முடைய சிறப்புகளை வெளிப்படுத்தும்போது, நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்களும் விரிவடைந்து, அதே சிறப்புகளை உணர்வீர்கள்.
இங்கே, கிருஷ்ணர் அனுபவிக்கும் அதே மன நிலையை அர்ஜுனனும் அனுபவிக்கிறார். துளித் துளியாய் அர்ஜுனன் அந்த ஆனந்தத்தை ரசிக்க ஆரம்பிக்கிறார். "ஓ பிரபு! இது அழகாக இருக்கிறது.

எனக்குச் சலிப்பே இல்லை.
தயவு செய்து மீண்டும் மீண்டும்
உங்களுடைய எல்லா மகிமைகளைப்
பற்றியும் சொல்லுங்கள்," என்று
அர்ஜுனன் கேட்கிறார்.
கிருஷ்ணர், துளித்துளியாய்
விவரிக்கிறார். அவர் யார்
என்பதையும் அவர் எப்படிப்
பிரகாசிக்கிறார் என்பதையும்
வெளிப்படுத்துகிறார்.
கடவுளோடு விளையாடும் லீலா தியானம்
கிருஷ்ணர் லீலா தியானத்தைப் பற்றிப் பேசுகிறார் கடவுளின் திருவிளையாடல்கள் மீது தியானம் செய்வது பற்றிப் பேசுகிறார். நம்முடைய கண்கள் ஆழ்ந்து பார்க்கும் எதுவுமே நம் மனத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.
மனத்தைத் தெய்வீகத்திலேயே லயிக்கச் செய்தால், நம்முடைய மனம் தெய்வீகத்தால் பிடித்து வைக்கப்பட்டு இருந்தால், நாம் இயற்கையாகவே, ஒவ்வொரு நிமிடமும் கடவுளையே நினைத்திருப்போம்.
நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் கடவுள் நினைவிலேயே மூழ்கச் செய்தால், தெய்வீகத் தன்மையோடு நமக்கு நிகழ்ந்த பழைய அனுபவங்களை நினைவுக்குக் கொண்டுவந்து அவற்றில் நம் மனத்தை லயிக்கச் செய்தால், பிறகு நம்முடைய மனமும் செயல்களும் இயற்கையாகவே, இந்தத் தொடர்பை, இந்தத் தெய்வீகத்தைப் பிரதிபலிக்கத் தொடங்கும்.
நாம் ஒருவருக்கொருவர் தெய்வீகத்தின் மகிமைகளைப் பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்றால் நாம் எல்லோருமே நம்மைச் சுற்றி அந்தப் பேரொளியைப் பார்க்கிறோம். நாம் தெய்வீக இன்பத்திலும், ஆனந்தத்திலும் மெய்மறந்து மிகத் திருப்தியான மன நிலையில், வேறு எதுவும் தேவையில்லாமல் இருக்கிறோம்.
> நம்முடைய கண்கள் ஆழ்ந்து பார்க்கும் எதுவுமே நம் மனத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.
ஏனென்றால் நாம் நம்முடைய வாழ்க்கையில் தெய்வீக இன்பமும் மகிமையும் நிரம்பியிருப்பதைப் பார்க்கிறோம். கிருஷ்ணருடைய பிறந்த ஊரான பிருந்தாவனத்தில் பசுக் கூட்டங்களைப் பராமரித்துக் கொண்டிருந்த அந்த வரலாற்று சிறப்புமிக்க பெண்களான கோபிகைகளின் நிலையும் இதுதான். அவர்கள் கிருஷ்ணர் குழந்தையாக இருந்த போதிலிருந்தே, அவரோடு விளையாடி இருக்கிறார்கள்.
அவர்களது முழு உலகமும் அவரைச் சுற்றியே இருந்தது. அவர்களுடைய மனமும்
இதயமும் கிருஷ்ணரால் நிரம்பியிருந்தது.
கோபிகையர்கள் தங்களுடைய உணர்வுகளை
எந்த விதமான பட்டறிவைக்கொண்டும்
வடிகட்டவில்லை.
விஷ்ணுவின் அவதாரம்தான் கிருஷ்ணர்.
விஷ்ணுவின் சீடரான நாரதர், தம்மைவிட
உயர்ந்த விஷ்ணு பக்தர் இல்லை என்ற
நினைப்பில் இருந்தார். விஷ்ணு தம்முடைய
சீடர் நாரதருக்கு ஒரு பாடம் கற்பிக்க
விரும்பினார்.
விஷ்ணு தமக்குத் தலைவலி வந்தது போன்று நடிக்கத் தொடங்கினார். அவருடைய பக்தர்கள் எல்லா வகையான மருந்துகளையும் கொண்டு வந்தார்கள். ஆனால் எந்த முயற்சியும் பலன் தரவில்லை. விஷ்ணு சொன்னார். "உண்மையான ஒரு பக்தருடைய காலில் ஒட்டியிருக்கும் தூசுதான் என்னுடைய தலைவலியைக் குணமாக்கக்கூடிய ஒரே மருந்து," என்றார்.
நாரதரும், அங்குக் கூடியிருந்த தலைசிறந்த முனிவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். தங்கள் பாதத்தில் ஒட்டியிருக்கும் தூசை எப்படித் தங்கள் இறைவனின் தலையில் போடுவது, அது அவமரியாதை ஆயிற்றே என்று வாதிட்டுக் கொண்டார்கள்.
வலியால் துடிப்பதுபோல் நடித்துக் கொண்டிருந்த விஷ்ணு இப்போது கோபமும் வந்ததுபோல் நடித்தார். அவர் நாரதரிடம் "என் கண் முன் நிற்காதே. பிருந்தாவனத்தில் இருக்கும் கோபிகைகளிடம் போய் நான் சொன்னதைச் சொல்லி, ஒரு முடிவு தேடிக்கொண்டு வா," என்றார்.
நாரதர் பிருந்தாவனத்தை அடைந்தபோது, கோபிகைகள் மிகவும் மும்முரமாக அவர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். யாரும் நாரதரோடு பேசவில்லை.
நாரதர் சொன்னார், "நான் வைகுண்டத்திலிருந்து வருகிறேன்." அவர் சொல்வதை யாரும் பெரிதாக மதிக்கவில்லை.
அவர் சொன்னார், "விஷ்ணு இருக்கும் இடம்தான் வைகுண்டம்."
events, "யார் விஷ்ணு?" என்று கேட்டார்கள்.
நாரதர், "விஷ்ணுதான் கிருஷ்ணர்," என்று சொன்னார்.
கிருஷ்ணர் என்ற வார்த்தையைக் கேட்ட உடனேயே எல்லோரும் நாரதரைச் சுற்றி நின்று கொண்டார்கள். பிறகு ஒரே குரலில், "எங்களுக்கு அன்பானவர் எப்படி இருக்கிறார்?" என்று கேட்கத் தொடங்கினார்கள்.
நாரதர் சொன்னார், "அவர் தலைவலியால் அவதிப்படுகிறார்."
"நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கள் கிருஷ்ணன் கஷ்டப்படுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்றார்கள்.
உடனே நாரதரும், உண்மையான பக்தருடைய பாதத்தில் ஒட்டியிருக்கும் தூசியைக்கொண்டு வரும்படி விஷ்ணு சொன்னதாகச் சொன்னார்.
உண்மையான பக்தி
உபயோகமில்லாத
வாதங்களையும்,
உபயோகமில்லாத
காரணங்களையும்
சொல்லிக்
கொண்டிருப்பதில்லை!
உடனே ஒரு கோபிகை தம் மேல்தூணியைக் கழற்றி தரையில் விரித்தாள். எல்லா கோபிகைகளும் அந்தத் துணியின் மேல் நடனமாடினார்கள். பிறகு தங்கள் கால் தூசுகளையெல்லாம் ஒன்று சேர்த்தார்கள். அந்தத் துணியை மடித்து, தம்முடைய மேல்உடம்பை மறைக்க ஒரு துணி இல்லையே என்ற கவலைகூட இல்லாது, அந்த கோபிகை "இதைக் எங்கள் கிருஷ்ணரிடம் எடுத்துச் செல்லுங்கள். எங்களுக்குள் யார் உண்மையான பக்தை என்று எங்களுக்குத் தெரியாது. அதனால் எங்கள் எல்லோருடைய பாதத் தூசுகளும் இதில் இருக்கிறது. இப்போதே போய் அவரிடம் கொடுங்கள்," என்று சொல்லி நாரதரிடம் கொடுத்தார்.
நாரதர் "உங்கள் பாதத் தூசுகளைக் கிருஷ்ணரின் தலைமேல் போட கொடுக்கிறீர்களே, இதைக் கொடுக்க உங்களுக்குக் கஷ்டமாக இல்லையா?" என்று கேட்டார்.
உடனே கோபிகைகள் ஒரே குரலில் கேட்டார்கள், "உனக்குப் பைத்தியமா? அவர், எங்கள் கடவுள், எங்கள் காதலர் கஷ்டப்படுகிறார். எங்கள் பாதத் தூசு வேண்டும் என்று கேட்கிறார்.
நாங்கள் அவர் தலைமேல் நடனமாடினால்தான், அவர் தலைவலி சரியாகும் என்று சொன்னால், நாங்கள் அதைக்கூட செய்யத் தயாராக இருக்கிறோம்.''
இதைக் கேட்ட நாரதர் வாயடைத்துப் போனார். செருக்கடங்கிய நாரதர் அமைதியாக வைகுண்டம் திரும்பிப் போனார். கோபிகையின் மேல்துணியில் நிரம்பிய அவர்களுடைய பாதத் தூசுகளை விஷ்ணு தம்முடைய கைகளில் எடுத்து முகர்ந்துவிட்டு, தம்முடைய தலைவலி முழுவதும் குணமாகி விட்டதாகச் சொன்னார்.
ஞானிகள், தேவர்கள், நாரதர் எல்லோரும் இதை அதிசயமாகப் பார்த்தார்கள்.
“அவர்கள் என்ன சொன்னார்கள் நாரதா?
கடவுளின் தலையில், குருவின் தலையில்
தங்களுடைய பாதத் தூசை எப்படி வைக்க
முடியும் என்று நீங்கள் எல்லோரும்
செய்ததுபோல உபயோகமில்லாத
வாாதங்களையும், உபயோகமில்லாத
காரணங்களையும் அவர்கள் சொல்லிக்
கொண்டிருந்தார்களா?'' என்று விஷ்ணு
கேட்டார்.
நாரதர் வெட்கத்தால் தலை குனிந்தார். இன்னும்கூட விஷ்ணு கோவில்களில் எல்லா முக்கிய தலைவாசல்களிலும் பாதத்தின் அடையாளம் செதுக்கப்பட்டிருக்கும். இந்த அடையாளம், பக்தர்களுடைய பாதத்தின் பிரதிபலிப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
பக்தர்களுடைய பாதத் தூசு, அவர் அணியும் மற்ற எல்லா க்ரீடங்களையும்விட அவருக்கு ரொம்பவும் பிரியமானதாக இருக்கிறது!


கடவுளோடு மனிதன் இணையும ் இடம்
மனத்தாலும் உயிராலும் யார் என்னையே சிந்திக்கிறார்களோ, யார் ஒருவரையொருவர் ஞானமடையச் செய்துகொள்கிறார்க ளோ, யார் எனது பெருமைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்களோ அந்த அறிவாளிகளே மன நிறைவோடும், பேரானந்தத்தோடும் இருக்கிறார்கள்.
யார் என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை ஜீவன்முக்தர்களாக மலரச் செய்கிறேன். அதனால் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள்.

கிருஷ்ணர் இங்கே ஸத்ஸங்கத்தைப் பற்றிப்
பேசுகிறார். இதயமும் மனமும் உடலும்
கடவுளோடு கரைந்து விட்டவர்கள் ஒன்று
கூடும் இடம்தான் ஸத்ஸங்கம். அவர்களால்
கிருஷ்ணரைத் தவிர வேறு எதைப் பற்றியும்
பேச முடியாது. அவர்கள் தங்கள் கடவுள்
மீதும், குரு மீதும் கொண்ட அன்பாலும்
ஆனந்தத்தாலும் நிரம்பியிருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு
ஞானமடைவதற்கான புத்திசாலித்தனத்தைக்
கொடுத்து, அவர்களைத் தன்னோடு
இணைத்துகொள்வதாக அவர் உறுதிமொழி
அளிக்கிறார்.
நான் என்னுடைய பக்தர்களுக்கு இந்த ஸத்ஸங்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருப்பேன். இதுபோல் தினசரி அன்பர்கள் ஒன்று கூடி குருவின் வார்த்தைகளைக் கேட்டும், கீர்த்தனைகளைக் கேட்டு நடனமாடி விட்டும் வீட்டுக்குத் திரும்பும்போது புத்துணர்வோடும், குருவின் நினைவோடும் போவார்கள்.
ஸத்ஸங்கத்தில் தொடர்ந்து கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் "நாங்கள் எங்கே இருந்தாலும், குரு எங்களோடு எப்போதும் இருக்கிறார். ஒரே நேரத்தில் எத்தனை ஸத்ஸங்கங்கள் நடந்தாலும், அவர் எங்களோடு இருக்கிறார்," என்று சொல்வதை நீங்கள் கேட்கலாம்.
கோபிகைகள் வாழுமிடமே ஆச்ரமம்
ஆச்ரமத்தில் ஓர் ஆழமான ஸத்சங்கம் எப்போதும், இருபத்து நான்கு மணி நேரமும் இருக்கிறது.
அதனால்தான், ஆச்ரமங்கள் அமைப்பதை நான் உற்சாகப்படுத்துகிறேன். இங்கே ஒரே மனநிலையில் இருப்பவர்கள் ஒன்று கூடி ஆன்மீக தேடல்களை ஆழமாகத் தொடர முடியும்.
ஆச்ரமங்கள் என்பவை, மேற்கத்திய மக்கள் பயப்படுவதுபோல, சமயச் சடங்குகளை மையமாகக் கொண்டவை அல்ல.
ஆச்ரமத்தில்
வாழ்வதற்கான
உந்துதல் என்பது,
பயத்தாலோ
ஆசையாலோ
ஏற்பட்டதாக இருக்கக்
கூடாது.
சமய சடங்குகளை, வழிபாட்டு முறையை உருவாக்க ஒரு சமுதாயமாக இருக்க வேண்டு மென்கிற அவசியம் இல்லை. சமுதாயமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சமயச் சடங்குகளை உருவாக்கிவிட முடியும்.
குற்றம் புரியும் நோக்கத்துடன் இருப்பவர்கள்தான் கொள்கைகளை வகுப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் ஆச்ரமத்தில் வாழ்வார்களா?
யார் ஒருவர் ஏற்கனவே தம்மை அந்தப் பிரபஞ்ச சக்தியிடம் சரணடையச் செய்திருக்கிறாரோ அவரிடம் நாம் நம்முடைய அத்தனை அஹங்காரத்தையும் உதறிவிட்டு சரணாகதி அடைய வேண்டும். அப்போதுதான் வேலை நடக்கும். இல்லாவிட்டால் ஒரு குருடர் மற்றொரு குருடருக்கு வழிகாட்டுவதுபோல ஆகிவிடும். இதைத்தான் சடங்குகள் செய்து கொண்டிருக்கின்றன.
குருவின் மீது ஆழமான அன்பு இருப்பது மட்டும்தான், ஆச்ரமத்தில் வசிக்கும் ஆச்ரமவாஸிகளின் ஒரு பாகமாக ஆவதற்கான ஒரே தகுதி.
ஆச்ரமத்தில் வாழ்வதற்கான உந்துதல் என்பது, பயத்தாலோ ஆசையாலோ ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. ஆச்'ரமத்தை விட்டுச் சென்றுவிட்டால் குரு நம்மைத் தண்டித்துவிடுவார் என்ற பயமோ, அல்லது ஆச்'ரமத்திலேயே இருந்தால் நம்மைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார் என்ற ஆசையோ நீங்கள் ஆச்'ரமத்தில் வாழ்வதற்கான நோக்கமாக இருக்கக்கூடாது.
அது நிகழ்கால கணத்தில் பிறந்த அன்பினால் மட்டுமே நிகழ்வது.
இங்கே கிருஷ்ணர் அதுபோன்ற ஒரு சூழ்நிலையைப் பற்றி, ஆச்'ரமத்தைப் பற்றிப் பேசுகிறார். ஒரு ஆச்'ரமம் என்பது ஏதோ வயதானவர்கள், அவர்கள் செய்த தவற்றுக்குத் தண்டனையாக, அவர்களால் செய்ய முடியாத வஜ்ராஸனம், பத்மாஸனம் போன்ற ஆஸனங்களில் அமர்ந்து, வலியுடன் கடுமையாக த்யானம் செய்யும் இடம் இல்லை.
நம்முடைய ஏதாவது ஒரு ஆச்'ரமத்துக்கு வந்து நீங்கள் பார்க்கலாம். யாரும் அங்கே கவலையோடு சோகமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் யாரும் நாரதரையும் மற்ற முனிவர்களைப்போலவும் புத்திசாலித்தனமான கர்வத்தில் இருக்க மாட்டார்கள்.
அவர்கள் கோபிகைகளைப்போல குருவிடம் அன்பு கொண்டிருப்பார்கள். அன்பால் நிரப்பப்பட்ட தங்களுடைய முழு உணர்வுடன் இருப்பார்கள்-அவருக்காகவே!
ஆச்'ரமத்தில் ஒவ்வொருவரும் அவர்களால் என்ன முடியுமோ அதைச் செய்வார்கள். யாரும் அவர்களை ஏதும் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டார்கள். அவர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் கண்களை மூடி த்யானத்தில் உட்காரலாம். அவர்களைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். "ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்," என்று யாரும் அவர்களைக் கேள்வி கேட்க மாட்டார்கள். "அவர்கள் ஒன்றுமே செய்யவில்லையே," என்று யாரும் குற்றஞ்சாட்டமாட்டார்கள்.
ஆனால் குருவின் ச'க்தி அவர்களுக்குப்
புத்திசாலித்தனத்தை வழங்கிவிடும். அந்தச்
சக்தி அவர்களை முக்கியமற்ற விஷயங்களில்
ஈடுபட்டு, தங்களைத் தாங்களே
உபயோகமற்றவர்களாக்கிக் கொள்ள
அவர்களை அனுமதிக்காது.
ஒரு மடாலயம் ஆச்ரமம் ஆகாது.
ஒரு மடாலயம் என்பது கீழ்நிலையில் இருந்து மேல்நிலைவரை பலதரப்பட்ட பதவிகள் இருக்கும். அங்கே கட்டுப்பாடுகள் இருக்கும். அங்கே ஒவ்வொருவரும் வேலை செய்ய சட்டதிட்டங்கள், வழிமுறைகள் எல்லாம் உண்டு.
ஆச்ரமங்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்கள் இருப்பதில்லை!
ஆச்ரமத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்கள் இல்லை. யார் யார் எவ்வளவு வேலை செய்திருக்கிறார்கள் என்று எவரும் அளந்து பார்ப்பதில்லை. வெளியே இருந்து பார்க்க இது பெரும் குழப்பமாகத் தெரியும். கடமைகளிலும் பொறுப்புகளிலும் சமநிலை இருக்காது. ஆனால் அதில் ஒரு தனித் தன்மை இருக்கும். ஒவ்வொருவரும் தங்களுக்கு எது சரியானது என்பதைத் தீர்மானித்து, அதைச் செய்வார்கள்.
ஆச்ரமத்தில், யாரும் பயத்தாலோ, ஆசையாலோ, பிறர் சொல்வதாலோ அல்லது தேவைக்காவோ வேலை செய்வதில்லை. ஓர் நன்றியுணர்வால் மட்டுமே வேலை செய்கிறார்கள்.
ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பார்த்து அளந்து கொண்டிருந்தால், நாம் ஓர் அரசியல் நிறுவனத்தைத்தான் உருவாக்க முடியும். ஓர் ஆன்மீக நிறுவனத்தை அல்ல.
குருவின் போதனைகளை வாழ்பவரே பிராஹ்மணர்
பயத்தாலும் ஆசையாலும் வேலை செய்கிறவர், சூத்ரர். புகழுக்காகவும் பாராட்டுக்காகவும் வேலை செய்கிறவர்கள், வைச்யர்கள்.
பொறாமை அல்லது ஒப்பீட்டில் மாட்டிக்கொண்டு, தாங்களே மற்ற எல்லோரையும்விட பெரியவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமென்பதற்காகச்செயல்படுபவர்கள், க்ஷத்ரியர்கள்.நன்றியுணர்வோடு வேலை செய்கிறவர், பிராஹ்மணர்.
இந்த வித்தியாசங்கள் பிறப்பினால் வருவது இல்லை. இது நம்முடைய இயல்பான குணத்தின், மன அமைப்பின், மன நிலையின், மனப்பாங்கின் காரணமாக வருவது. நாம் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதும், அதை மேலும் மேலும் வளர்க்க ஆரம்பிக்கும் போதும், இந்த குணங்கள்நம் ‘இருப்பு’க்குள் நுழைந்துவிடுகின்றன. இவை பிறப்பினால் வருவது கிடையாது.
ஒரு மனிதர் முப்பது வருஷங்களாக ஒரு மடாலயத்தில் சமைத்துக் கொண்டிருந்தார். அவன் குருவின் பக்கத்தில் இருப்பதையோ அல்லது அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்பதைப் பற்றியோ கவலைப்பட மாட்டார்.
குரு இந்த உலகை விட்டு நீங்கப் போகும் நாள் வந்தபோது, மடாலயத்தின் அடுத்த சமய குரு யார் என்று அறிவிப்பதற்காக எல்லோரையும் அழைத்தார். குருவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர்தான் அந்த இடத்திற்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் குருசொன்னார், "நீங்கள் அனைவரும்
என் சொற்பொழிவுகளை வருடக்கணக்காக
கேட்டுக்கொண்டிருந்தீர்கள். ஆனாலும், இந்த
சமையற்காரர்தான் என் போதனைகளின்படி
வாழ்ந்து கொண்டிருந்தார். அவரே எனக்கு
அடுத்து சமயகுருவாக வர வேண்டும்,"
என்றார்.
இதைச் சொல்லிவிட்டு, அந்தச்
சமையல்காரருக்குத் தம்முடைய ஞான
அனுபவத்தைக் கொடுத்தார்.

நம் அறியாமையை நீக்க குருவால்தான் முடியும்
எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. ஒவ்வொருவரும் அவர்களுடைய கர்மாவை (நிறைவேறாத செயல்கள்) எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு குறிப்பிட்ட மன அமைப்பில் வந்திருக்கிறோம்.
குரு இருக்கும்வரை அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். குரு இல்லாதபோது, அந்த முழு அமைப்பும் தர்மாக, முறை தவறாததாக, குழப்பம் இல்லாததாக மாறிவிடும். குரு இருக்கும்போது எல்லாமே மோக்ஷமாக, சுதந்திரமாக இருக்கும். அதுதான் தர்மத்துக்கும் மோக்ஷத்திற்கும் உள்ள வித்தியாசம். மோக்ஷத்துக்கு வேலை செய்யுங்கள். அதுதான் ஆச்ரமத்துக்கும் மடாலயங்களுக்கும் இருக்கும் வேறுபாடு.
ஆன்மீக மலர்ச்சியில் மட்டுமே விருப்பம் கொண்டவர்களாக இருக்கும் மக்கள் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி, தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டதுதான் என்னுடைய ஸங்கம். என்னுடைய நோக்கமெல்லாம், அவர்களைச் சுயநிதி ஆதாரங்களுடனும், சுயமாகக் கையாளும் திறனுடனும், சுயமாகப் பாதுகாத்துக்கொள்ளும் திறனுடனும், குறிப்பிட்ட குறிக்கோளுக்காக அதாவது த்யானத்தின் மூலம் உணர்வு மாற்றம் ஏற்படுவதற்காகச் செயல்பட வைப்பதுதான்.
வெகு விரைவில் மக்கள் மற்ற வாழ்க்கை
முறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து
இந்த அமைப்பு எவ்வளவு நல்ல
முறையில் செயல்படுகிறது என்பதைப்
புரிந்துகொள்வார்கள்.
நான், கிருஷ்ணர் சொல்வதைப்போலவே
எல்லோருக்கும் சொல்வதுண்டு: "யார்
எப்போதும் என்னோடு அன்பால்
இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை
ஜீவன்முக்தர்களாக மலரச் செய்கிறேன்."
கடைசி ஸ்லோகத்தில் குரு தம்மையே
விவரிக்கிறார்:
அவர்களிடம் நான் வைத்திருக்கும் கருணையினால், அவர்களுடைய அறியாமையிலிருந்து தோன்றிய இருளை, மெய்யுணர்வு என்ற ஞான ஒளியால் அழித்து விடுவேன்.
குரு என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தை இரண்டு எழுத்துக்களைக் கொண்டது. கு என்ற எழுத்து இருளையும் ரு என்ற எழுத்து ஒளியையும் குறிக்கும். குரு, தம்முடைய கருணையால், சீடனை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்கிறார்
'அறியாமை இருள்' என்பது, ஒருவர் தம்முடைய சுயத்தோடு ஒட்டிவைத்திருக்கும் அடையாளங்களையும், பொருள் சார்ந்த
பற்றுதல்களையும், பொருள் சார்ந்த
உடைமைகளையும் குறிக்கும். இந்த
அடையாளங்கள் நிச்சயமாக நம்மைத்
துக்கத்திற்குத்தான் அழைத்துச் செல்லும்
ஏனென்றால் நாம் வைத்திருக்கும்
இந்தப் பற்றானது, நிலையற்ற
பொருட்களுக்காக வைக்கப்பட்ட
பற்றுதானே தவிர ஏதோ ஒரு நிலையான
பொருளுக்காக வைக்கப்பட்டது அல்ல.
பொருள் சார்ந்த
உடைமைகளும்,
பந்தங்களும்
நிலையானவைதான்
என்று நாம்
நினைக்கிறோம்.
இந்த அறியாமையை
குருவால் மட்டும்தான்
நீக்க முடியும்.
செல்வம் ஒரே இரவில் வந்து, அதேபோல வேகமாக மறைந்தும் போய்விடும். அதேபோல உறவுகள் எவ்வளவு பலமாக இருந்தாலும், இந்த உடல் இருக்கும்வரைதான் இருக்கும்; பெரும்பாலும், அவ்வளவு நாள்கள்கூட நீடிப்பதில்லை; ஏனென்றால் நம் மனம் உறவுகளைத் தக்க வைத்துக் கொள்வதில்லை. அது, உறவுகளின் பிடியில் சிக்காமல் நழுவிச் சென்றுவிடுகிறது. பொருள் சார்ந்த படைப்புக்கள் எதுவும் நிலையானதல்ல.
பொருள் சார்ந்த உடைமைகளும் பந்தங்களும் நிலையானவைதான் என்று நாம் நினைக்கிறோம். இந்த எண்ணம் நம்முடைய அறியாமையிலிருந்து பிறக்கிறது. இந்த அறியாமை, நம்முடைய சுய அடையாளமாக இருக்கும் அஹங்காரத்திலிருந்து பிறக்கிறது.
இந்த அறியாமையை குருவால் மட்டும்தான் நீக்க முடியும். நீங்கள் எப்போதுமே இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பாகம்தான் என்பதையும், அதனால் இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில் இருந்து நீங்கள் பெறப்போவது ஒன்றும் இல்லை என்பதையும் உங்களை உணரச் செய்யும் ஞான விளக்கினைச் சரியான முறையில் ஒரு ஜ்ஞான குருவால் மட்டுமே, உங்களுக்குள் ஏற்ற முடியும்.

உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதால்
உங்கள் குரு பெறுவது ஒன்றும்
இல்லை. உங்களை ஞானமடையச்
செய்வதால் அவர் பெறுவது ஒன்றும்
இல்லை. அவர் நிலையாக அனுபவித்துக்
கொண்டிருக்கும் பேரானந்தத்தை
மற்றவர்களும் அனுபவிக்கட்டும் என்ற
மிகப்பெரிய கருணையால் மட்டுமே
அவர் இதைச் செய்கிறார்.
ஆச்ரமம் என்பது வேறு; மடாலயம் என்பது வேறு
கேள்வி: ஸ்வாமி, ஆச்ரமத்தில் வசிக்க முடியாதவர்களின் நிலை என்ன? அவர்கள் ஆன்மீக சாதனைகளில் வெற்றி அடைய முடியாதா?
நாம் முதலிலேயே சொன்னதுபோல ஆச்ரமம் என்பது ஒரு மடாலயம் கிடையாது. இது ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பற்றியது அல்ல; இது விடுதலையைப் பற்றியது. அதனால் ஆச்ரமத்தில் இருந்தால்தான் ஒருவர் ஆன்மீகத்தில் மலர முடியும் முன்னேற முடியும் என்ற கட்டாயம் இல்லை.
ஆன்மீகம் என்பது மனம் சார்ந்தது. இது புலன்களைக் கடந்து செல்வதைப் பற்றியது; மனம் உங்கள் புலன்கள் வழியில் சென்றுகொண்டிருக்கும்.
மனத்தைக் கீழே போட்டால்தான் நீங்கள் உள்நோக்கிக் கவனத்தைச் செலுத்த முடியும். இதை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒரே பாதையில் செல்லும் ஒரே ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ளும் மக்களோடு சேர்ந்து பயிற்சி செய்யும்போது இந்தச் செயல்முறை சுலபமாக இருக்கும்.
விருப்பம், விருப்பத்தை ஈர்க்கும். தங்கள் மனத்தை உள் உலகை நோக்கியும், குருவின் போதனைகளின் மீதும் ஒருமுகப்படுத்தியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக வாழும்போது, அங்கு ஒரு மிகப்பெரிய அளவில் நேர்மறை சக்தி உருவாக்கப்படுகிறது.
உங்கள் எண்ணங்களே உங்களுடைய செயல்களை உருவாக்குகின்றன. உங்கள் எண்ணங்கள் மற்றவர்களுடைய எண்ணங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மற்றவர்களுடைய எண்ணங்களும் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆன்மீகம் என்பது மனம் சார்ந்தது. இது புலன்களைக் கடந்து செல்வதைப் பற்றியது.
அதனால் பல பேர் ஒன்று கூடி ஒரே மாதிரியாக நினைக்கும்போது, அங்கு அந்த எண்ணங்களின் எண்ணிக்கை, அடுக்குக்குறி விகிதத்தில் பெருகுவதால் அதாவது பல மடங்கு பெருகுவதால் அந்தச் சக்தியே எல்லாவற்றையும் நிகழச் செய்து விடுகிறது.
இதுதான் ஸத்ஸங்கத்தின் அல்லது ஆச்ரமத்தின் சக்தி. சங்கரர் பஜ கோவிந்தம் பாடலில் இதை அழகாகச் சொல்லி இருக்கிறார். “ஒரே எண்ணமுடைய ஆன்மீக மக்களின் கூட்டம் நம்மைப் பற்றற்ற தன்மைக்கு அழைத்துச் செல்லும்,” என்கிறார்.
பற்றற்ற தன்மை, நம்மை விருப்பங்களில் இருந்தும் மாயையில் இருந்தும் விடுவிக்கிறது. இது ஒரு அசைவற்ற, தொந்தரவற்ற மன நிலைக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. அந்த அசைவற்ற மனமே நம்மை விடுதலைக்கு வழிநடத்திச்செல்கிறது. இந்தச் செயல்முறை தர்க்கத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் உட்பட்டு இருக்கிறது.
ஒரே எண்ணமுடைய
ஆன்மீக
மக்களின் கூட்டம்
நம்மைப்
பற்றற்ற தன்மைக்கு
அழைத்துச் செல்லும்.
ஆச்ரமத்தில் வசிப்பது என்பது, எந்த
நேரமும் த்யானம் செய்துகொண்டு, வேறு
வேலை எதுவும் செய்யாமல் இருப்பது என்று
அர்த்தமல்ல.
நம்முடைய ஆச்ரமத்தைச் சேர்ந்த மனிதர்கள்
நிறைய பேர் தங்கள் வழக்கமான
அன்றாட வேலையிலோ, தொழிலிலோ
ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்
இந்தப் பொருள் சார்ந்த உலகத்தை விட்டு
விட்டு வரவில்லை. அவர்கள் பற்றற்று
இருக்கிறார்கள், அவ்வளவுதான்.
நாம் இங்கே, இந்த உலகைத் துறந்துவிட்டு வாழும், ஒரு சாத்தியப்படாத மனித சமூகத்தைப் பற்றி பேசவில்லை. நான் சொல்லும் இந்த ஆச்ரம சமூக அமைப்புமுறை எல்லோருக்குமானது!
இது, ஒரே மன அமைப்புடைய மனிதர்கள் குடும்பமாக ஓரிடத்தில் கூடி வேலைசெய்து, ஒருவருக்கொருவர் தங்கள் உள்ளாற்றலை, செயல்திறனைப் பரிமாறிக்கொண்டு, ஒரு பொதுவான நோக்கத்திற்காகச் செயல்படுவதற்கான வாய்ப்புடையதாக இருக்கிறது.
நீங்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்கும்போது சுற்றுச்சூழலைக் கவனிப்பீர்கள்தானே? உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றித் தெரிந்துகொள்வீர்கள்தானே? பள்ளிக்கூடம் மற்றும் மற்ற வசதிகள் அருகில் உள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்வீர்கள்தானே? ஏன் இதெல்லாம் செய்கிறீர்கள்? பொதுவான விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய மக்கள் இருக்கும் இடத்தையே விரும்புகிறீர்கள். மனிதன் இயற்கையாக ஒரு சமுதாயப் பிராணி.
அதனால்தான், நாம் இந்த ஆச்ரம சூழ்நிலையை உருவாக்கினோம். என் மீது நம்பிக்கை வைத்துள்ள, ஆன்மீகத்தில் முன்னேற நினைக்கும் பொதுவான விருப்பம் உள்ள மனிதர்கள் வசிக்க இது போன்ற சூழ்நிலையை உருவாக்கித் தருகிறோம்.
சமுதாயத்தில் எப்படி மனிதர்கள் ஒரு குழுவாக வாழ்கிறார்களோ, அதுபோலவே இவர்களும் ஒரு சமுதாயமாகச் சேர்ந்து வாழ்வார்கள்.
அவர்கள் தங்கள் முன்னர் செய்த தொழில்களையே வழக்கம்போல் செய்துகொண்டிருப்பார்கள். அவர்கள் சமையல் போன்ற பொதுவேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். இது, அவர்கள் ஆன்மீக விஷயங்களில் அதிக நேரம் செலவழிக்க உதவும்.
எப்படி இருந்தாலும் ஆச்ரம சூழலில்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. இந்த ஆச்ரம பாரம்பரியமும் சூழ்நிலையும் தங்கள் பொருள் சார்ந்த, ஆன்மீகம் சார்ந்த உலகத்தின் மீது நன்றாக வேலை செய்கிறது என்ற நம்பிக்கை ஏற்படும்போது, மக்கள் குடும்பத்துடன் வந்து இருந்து, இந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றத் தொடங்குவார்கள், அவ்வளவுதான்.

அறிந்துகொள்ளுங்கள்
உங்களை.... நீங்களே!

அர்ஜுனன் சொன்னார் :
நீரே மேலான ஸத்யம், மேலான புகலிடம், மேலான புனிதம்,
ஆதியானவர், நிலையானவர், மேலான மஹிமைகள் கொண்ட
கடவுள்.
நாரதர், அஸித, தேவல, வியாஸர் போன்ற எல்லா ஞானிகளும்
இதை விளக்கி இருக்கிறார்கள். இப்போது நீங்கள் எனக்கு
அதை நேரடியாக விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஓ கேசவா, நீங்கள் சொன்ன எல்லா ஸத்யங்களையும் நான்
ஏற்றுக்கொள்கிறேன்.
ஓ பிரபு, தேவர்களும் அசுரர்களும் உங்களை அறிய
மாட்டார்கள்.
ஓ முழுமையானவரே, உயிர்களின் ஆரம்பமே, உயிர்களின் இறைவனே, கடவுள்களுக்கெல்லாம் கடவுளே! ஓ இவ்வுலகின் நாயகரே, நிச்சயமாக, உங்களை உங்களால் மட்டும்தான் அறிய முடியும்.
நீங்கள் எந்த முறையில் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறீர்கள் என்கிற உங்கள் பெருமைகளை உங்களால் மட்டும் விவரிக்க முடியும்.
ஆழ்ந்து சிந்தனை செய்வதன் மூலம் நான் உங்களை எப்படி அறிய முடியும்?
ஓ பிரபு, எந்த மாதிரியான உருவத்தை நான் உம் மேல் சிந்தனை செய்து பார்க்க வேண்டும்?
ஓ ஜனார்தனா! உங்கள் சக்திகளையும் மஹிமைகளையும் விரிவாகச்சொல்லுங்கள்.
தயவுசெய்து என் திருப்திக்காகச் மீண்டும் சொல்லுங்கள், உங்கள் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு நான் சோர்வடையவில்லை.

சொல்வதற்கு இனி ஒன்றுமே இல்லை
அர்ஜுனன் மிகச் சிறந்த சீடராக ஆகிறார்.
இதுவரை கிருஷ்ணர் சொன்னது குறித்து அவருக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஏனென்றால் சிறந்த ஞானிகள், இதற்கு முன் எதைச் சொன்னார்களோ அதை ஊர்ஜிதப்படுத்துவனவாகவே அவை இருந்தன.
இப்போது அர்ஜுனன் விரும்புவதெல்லாம் என்னவென்றால், அவருடைய கடவுளான, அவருடைய குருவான கிருஷ்ணரே தம்முடைய மஹிமைகளைப்பற்றி மேலும் மேலும் சொல்ல வேண்டும் என்பதுதான்.
"நான் உங்களை அடைவது எப்படி என்பதைப் பற்றியும், உங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதைப் பற்றி அதிகம் சொல்லுங்கள். எனக்கு உங்களுடைய வார்த்தைகளைக் கேட்பதில் சோர்வே இல்லை."
அர்ஜுனன் அவருடைய குருவிடம் மிகவும் அன்பு வைத்திருந்தார். அர்ஜுனனுக்கு இப்போது இருப்பது போன்ற ஆழமான அன்பு இருக்கும்போது, பிருந்தாவனத்தில் கோபிகைகள்கிருஷ்ணர் மீது வைத்திருந்த அன்பைப் போன்ற ஒரு ஆழமான அன்பு உங்களிடம் இருக்கும்போது, அங்கே சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது. அங்கே கேட்பதற்குக்கூட ஒன்றுமிருக்காது!
அர்ஜுனன் என்ன பேசினாலும், அது உரையாடலை முடிவுக்குத்தான் கொண்டு வருகிறது. கிருஷ்ணர் இனிமேல் ஏதும் சொல்லத் தேவையில்லை என்று அர்ஜுனனுக்குத் தெரிகிறது. ஆனாலும் கிருஷ்ணர் தம்முடைய பெருமைகளை, லீலைகளை சொல்லக் கேட்பது அர்ஜுனனுக்கு ஆனந்தமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அர்ஜுனன் மிக உயர்ந்த தியான நிலையில், தமது இறுதி அனுபூதியை அடைவதற்குத் தயார் நிலையில்தான் இருந்தார். அவருடைய குரு இனி என்ன சொன்னாலும் சரி, எதைச் செய்தாலும் சரி, அது அவரைப் பொறுத்தமட்டில் எந்தவித வேறுபாட்டினையும் ஏற்படுத்தப் போவதில்லை.
அர்ஜுனன், கடவுளிடம் அவருடைய பெருமைகளைச் சொல்லும்படி ஏன் கேட்கிறார் என்பதைப்பற்றி ஒருவருமே புரிந்துகொள்ளவில்லை. அப்போதைய நிலையில், கிருஷ்ணரை நினைத்து தியானம் செய்துகொண்டு மௌனமாக உட்கார்ந்திருப்பதுதான் அர்ஜுனனுக்கு முழுமையான சந்தோஷம் கொடுக்கக்கூடியதாக இருந்திருக்கும் ஆனால் அர்ஜுனன், தமக்காகக்கூட வேண்டிக்கொண்டிருக்கவில்லை; ஒட்டுமொத்த மனிதகுலத்தின் சார்பாக வேண்டிக்கொண்டிருக்கிறார்
> தம்முடைய
> குருவைப் பற்றி
> என்ன கேட்டாலும்,
> அர்ஜுனனின் காதுகளுக்கு
> அது அமிர்தமாக
> இருக்கிறது.
இறுதியில், கிருஷ்ணரும் தம்முடைய
கருணையினால், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தச்
சீடருக்கு மட்டும் தம்மை வெளிப்படுத்திக்
காட்டுகிறார். ஆனால் அர்ஜுனனுக்கு மட்டும்
கிடைத்த அந்தத் தெய்வீக வெளிப்பாட்டினால்,
விஸ்வரூபக் காட்சியினால் மனித குலத்திற்கு
எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
அதனால்தான் அர்ஜுனன், கிருஷ்ணரிடம்
அவருடைய பெருமைகளைப் பற்றிச்
சொல்லும்படி வேண்டிக்கொள்கிறார்.
அர்ஜுனன், உயர்ந்த பிரபஞ்ச விழிப்புணர்வின் இருப்புத்தன்மையான பரப்ரம்ஹ கிருஷ்ணரைத் தெரிந்துகொள்ள நினைக்கிறார்.
அர்ஜுனன் இங்கே தம்முடைய நண்பரும் வஸுதேவரின் மகனும் தேரோட்டியுமான வாஸுதேவ கிருஷ்ணரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.
அவர், ஒரு சிறந்த பக்தரின் மன நிலையில், ஒரு சிறந்த சீடரின் மன நிலையில் இருக்கிறார்.
தம்முடைய குருவைப் பற்றி என்ன கேட்டாலும், அவர் காதுகளுக்கு அது அமிர்தமாக இருக்கிறது. அவர் சந்தோஷத்தில் முழுவதுமாக மூழ்கிப் போய் இருந்தார்.
இராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம் கேட்கிறார், "நீ ஈயாக இருந்து, ஓர் பாத்திரத்தின் விளிம்புவரை அம்ருதம் இருப்பதைப் பார்த்தால் என்ன செய்வாய்?"
விவேகானந்தர் சொன்னார், "அந்தப் பாத்திரத்தின் விளிம்பில் அமர்ந்துகொண்டு அந்த அம்ருதத்தைக்டிப்பேன். வேறு என்ன?" என்றார்.
குரு சொன்னார், "நீ ஒரு முட்டாள். நீ அந்த அமுதத்திற்குள் விழுந்து அதிலேயே மூழ்கிவிட வேண்டும்! பிறகு, உனக்கு மீண்டும் அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும்?"
அர்ஜுனன் அதைப்போலத்தான் மூழ்கி இருந்தார். அவருடைய புத்தி
நீங்களும்,
பரப்ரம்ஹ கிருஷ்ணரிடம்
முறையிட்டால்,
அந்த ஜகத்குரு
உங்களிடமும்
தம்முடைய
மஹிமைகளைப் பற்றிப்
பேசுவார்.
முழுமையாக மறைந்து போய் விட்டது. அவர் பேசுவதற்கு இறுதியில் ஒரு உந்துதல் தேவைப்பட்டது.
இதப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும், பரப்ரம்ஹ கிருஷ்ணரிடம் முறையிட்டால், அந்த ஜகத்குரு உங்களிடமும் தம்முடைய பெருமைகளைப் பற்றி, மஹிமைகளைப் பற்றிப் பேசுவார். அதன்பிறகு ஒருமுகப்பட்ட மனத்தோடு அவரின் மஹிமைகளின் மீது உங்களால் த்யானம் செய்ய முடியும். அவர் வாக்குறுதி கொடுத்தபடி, உங்களுக்கும் ஞான ஒளியைக் காட்டி ஜீவன் முக்தனாக்குவார்.
கேள்வி : ஸ்வாமி, குருவை அணுகுவதற்கு எது சிறந்த வழி?
குருவை அணுகுவதற்கு மிகச் சிறந்த வழி, உங்கள் மனத்தை விட்டு விடுவதுதான்!
நாம் வாழ்க்கையில் செய்வதெல்லாமே, ஒரு வியாபார பேச்சுவார்த்தையாக மாறிவிட்டது. நம்முடைய மனம் சம்பந்தப்பட்டிருக்கும் எல்லா விஷயங்களும் ஒரு செயலாக மாறுகின்றன. அவற்றினால் விளையும் இறுதிப் பலனை முதன்மையாகக் கொண்டே அவை செய்யப்படுகின்றன. அதன் பலன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

நாம் எந்த ஒரு செயலையுமே எதிர்பார்ப்போடுதான் செய்கிறோம். நாம் நினைத்தது கிடைத்து விட்டால் அந்த நிமிடம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் எப்படி இருந்தாலும் அது நிலைத்திருப்பதில்லை.
ஒருமுறை நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டால் போதும், உடனே இன்னொரு எதிர்பார்ப்பு முளைத்துவிடும். எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்றால், கோபமும் அவமரியாதையும்தான் நம்முடைய பதில் செயல்களாக இருக்கின்றன.
நாம் கடவுளிடமும் அப்படித்தான் நடந்துகொள்கிறோம் உடுப்பியில் இருக்கும் கிருஷ்ணராக இருந்தாலும் சரி, திருவண்ணாமலையில் இருக்கும் சிவனாக இருந்தாலும் சரி, திருப்பதி மலையில் இருக்கும் பாலாஜியாக இருந்தாலும் சரி, நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்கும்வரைதான் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இல்லாவிட்டால் அவர்களுக்கும் தொந்தரவுதான். நம்முடைய இந்தப் பிச்சையெடுக்கும் மன நிலை, கடவுளையும் அதே யாசிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து பார்க்கிறது.
நான் கேட்டதைக் கொடுத்தால், கிடைக்கும் இலாபத்தில்வ்வளவு சதவீதம் கொடுக்கிறேன், இல்லைவ்வளவு பங்கு கொடுக்கிறேன் என்றுதான் வேண்டிக்கொள்கிறோம்.
உங்களுடைய எதிர்பார்ப்புகளையும் மனத்தையும் குருவின் முன்னால், கடவுளின் முன்னால் விட்டுவிடுங்கள். உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் சக்தியும் புத்தியும் அவர்களுக்கு இருக்கின்றன.
கடவுளுக்கோ அல்லது குருவுக்கோ நாம் கேட்பதைக் கொடுக்கும் சக்தி மட்டும்தான் இருப்பதாக ஏன் நினைக்கிறீர்கள்? உங்களுடைய தேவைகளைப் 'புரிந்துகொள்ளும்' புத்தி அவருக்கு இல்லை என்று நினைத்து, ஒரு பெரிய பட்டியலையே அவரிடம் கொடுக்கிறீர்கள்.
கடவுளைப்போலவே, குருவுக்கும் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கும் சக்தியும், உங்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்ளும் புத்தியும் உண்டு.
குருவின் ஸாந்நித்யத்தில் இருக்கும்போது திறந்த மனத்தோடு அல்லது மனமற்ற நிலையில் இருங்கள். எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இல்லாமல், உங்கள் தேவைகளை எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என்று முழுமையான நம்பிக்கையோடு இருங்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்குத் தேவையானது கிடைக்கவில்லை என்றால், தேவை என்று நீங்கள் நினைப்பது நிச்சயமாக உங்களுக்கு நன்மை கொடுக்கக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம்.
என்னுடைய சீடர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்களுக்கு நான் அருகில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்கூட எதையும் கேட்பதற்காக ஆசைகள் எதுவும் இருக்காது. அங்கே எதிர்பார்ப்புகளே இல்லை. எது நடந்தாலும் அது நன்மைக்கே நடக்கிறது என்று அவர்கள் முழுமையாகத் திருப்தியடைந்து இருக்கிறார்கள்.
சிவத்வம் அல்லது காரணமில்லாத மங்களத்துவம் குருவிடம் இருந்து பொங்கிக்கொண்டே இருக்கும். அங்கே எதுவுமே கேட்கத்தேவை இல்லை, பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்தத்தை நீங்கள் சரணாகதி நிலையில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.
முழுமையாகச் சரணடைந்து விடுவதுதான், குருவை அடைவதற்கான ஒரே சிறந்த வழி. உங்களுக்குள் அந்த சரணாகதி நடந்தால், நீங்கள் விடுதலை அடைவீர்கள். உங்களுடைய கட்டுறுமனப்பாங்குகளை எல்லாம் குரு பார்த்துக்கொள்வார்.
சரணாகதி, நன்றியுணர்வு என்ற நிலையில்தான் உண்மையான சீடர் இருப்பார். இதுதான், திருப்தி மற்றும் விடுதலையின் அறிகுறி.

நானே முதலாகவும், மையமாகவும், முடிவாகவும் இருக்கிறேன்
கிருஷ்ணர் சொல்கிறார், "ஓ குருசிரேஷ்ட, நிச்சயமாக
நான் எனது தெய்வீக மஹிமைகளைப் பற்றி உன்னிடம்
சொல்வேன். ஆனால் முக்கியமானவற்றைப் பற்றி மட்டுமே
சொல்கிறேன். ஏனென்றால் என் மஹிமைகளைப் பற்றிய
விளக்கத்திற்கு எல்லை இல்லை.
ஓ குடாகேச, வாழும் உயிர்கள் அனைத்துள்ளும் நானே ஆத்மாவாக
இருக்கிறேன். எல்லாவற்றின் தொடக்கத்திலும் மத்தியிலும்
முடிவிலும் நானே இருக்கிறேன்.
ஆதித்யர்களில் நான் விஷ்ணு. கோள்களில் நான் சூரியன்.
மருத்துக்களில் நான் மரீசி, நட்சத்திரங்களில் நான் சந்திரன்.
வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன். கடவுள்களில் நான்
இந்திரன். புலன்களில் மனமாகவும், வாழும் உயிர்களில்
உயர்ந்த பிரபஞ்ச உணர்வாகவும் இருக்கிறேன்.
உருத்திரர்களில் நான் சங்கரனாக இருக்கிறேன். யக்ஷ, ராக்ஷஸர்களில் நான் செல்வத்தின் அதிபதியான குபேரனாக இருக்கிறேன். வசுக்களில் நான் நெருப்பாகவும், சிகரங்களில் நான் மேருவாகவும் இருக்கிறேன்.
புரிந்துகொள், ஓ பார்த்தனே! பண்டிதர்களில் நானே தலைமை பண்டிதரான பிரகஸ்பதி. போர் வீரர்களில் நான் ஸ்கந்தன், நீர்நிலைகளில் நான் கடல்.
சிறந்த ஞானிகளுள் நான் ப்ருகு. அதிர்வுகளில் நான் ஓம். யாகங்களில், நான் புனிதப் பெயர்களின் உச்சரிப்பான ஜபமாகவும், அசையாத பொருட்களில் நான் இமயமாகவும் இருக்கிறேன்.

எங்கிருந்து அழைத்தாலும் அங்கு வந்துடுவேன் !
இங்குக் கடவுளை எந்த வழியிலும் முழுமையாக விவரிக்க முடியாது. ஏனென்றால் அது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவிப் பரவியிருக்கிறது. அது ஒவ்வொரு அணுவிலும் வெளிப்படும்போது, ஊடுருவியிருக்கும்போது, அனைத்து உயிர்களின் சாரமாகவே இருக்கும்போது நம்மால் அதன் முழுமையை எப்படி விவரித்து விளக்கிச் சொல்ல முடியும்?
அதனால் கிருஷ்ணர் முக்கியமான விளக்கத்தை மட்டும் விவரித்து, ஆழம் காண முடியாத தெய்வீக தன்மையின் ஒரு துளியை மட்டும் காட்டுகிறார்.
கிருஷ்ணர் அர்ஜுனனை குடாகேச என்று சொல்கிறார். தூக்கத்தை வென்றவர் என்பது இதன் அர்த்தம். அர்ஜுனன் தூக்கத்தை வென்றவர் என்பதன் மூலம் இருளை அல்லது அறியாமையை வென்றவர் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
ஆகவே அர்ஜுனன், கிருஷ்ணர் கொடுப்பதை வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார். கீதை முழுவதும் கிருஷ்ணர் அர்ஜுனனைப் பல பெயர்களைச் சொல்லி அழைக்கிறார். அந்தந்த சூழ்நிலைக்கேற்ற பொருத்தமான சரியான பெயர்களைச் சொல்லி அழைக்கிறார்.
சில நேரங்களில் அவர் ‘அர்ஜுனனை - கெளந்தேய அல்லது பார்தா என்று அழைக்கிறார். இவ்வார்த்தைகளின் பொருள் 'குந்தியின் மகனே,' 'ப்ரிதாவின் மகனே' என்பதாகும்.
குந்தி, மஹாபாரதத்தில் பொறுமையின் சகிப்புத்தன்மையின் உருவகமாக இருக்கிறார். அவரைப்போல யாரும் துக்கங்களை எதிர்கொண்டிருக்க முடியாது. கிருஷ்ணர், அர்ஜூனனைக் 'குந்தியின் மகனே' என்று அழைக்கும்போதெல்லாம் இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தி, அவரைப் பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் கவனிக்கச் சொல்கிறார்.
அர்ஜூனனைக் கிருஷ்ணர் குடாகேச ' என்று அழைக்கும்போது, தூக்கத்தை வென்று, ஒளியில் நிலைத்திருக்கும் (விழிப்புணர்வில் நிலைத்திருக்கும்) அர்ஜூனனை 'விடுதலை'க்காக, 'முக்தி'க்காகத் தயார்படுத்துகிறார்.
கிருஷ்ணர், நான் அனைத்துமாக
இருக்கிறேன் என்று சொல்வதுதான்
உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்த
ஒரு கருத்தாக இருக்கிறது. தாமே எல்லா
உயிர்களுக்குள்ளும் இறுதி விழிப்புணர்வாக
இருப்பதாகவும் தாமே தொடக்கத்திலும்
மத்தியிலும் முடிவிலும் இருப்பதாகவும்
சொல்கிறார். அவர் தாமே இந்த முழு
ஆகாயமாக, காலமாக, அதையும் தாண்டி
இருப்பதாகச் சொல்கிறார்.
கிருஷ்ணர், எல்லா அண்டங்களையும் அடக்கிய ப்ரம்மாண்டமாகவும், அண்டங்களின் எல்லாப் பதிவுகளையும் உள்ளடக்கிய பிண்டாண்டமாகவும், (சிறிய பதிவாகவும்) இருக்கிறார்.
> கடவுளை
> எந்த வழியிலும்
> முழுமையாக
> விவரிக்க முடியாது.
ப்ரம்மாண்டம் என்பது பிரபஞ்சம். பிண்டாண்டம் என்பது தனியான ஓர் உயிர். எல்லா உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் உள்ளும் அவருடைய சக்தியே ஊடுருவி பரவியிருக்கிறது. அவரே அவற்றினுடைய இயற்கையை நிர்ணயம் செய்கிறார்.
அரக்கர் குலத் தலைவனாகிய ஹிரண்யகசிபு தன் மகன் பிரஹ்லாதனிடம் நீதி விசாரணை நடத்துகிறான். அப்போது, "நீ நாராயணனைப் பற்றித்தான் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறாய். 'இனி அவ்வாறு நீ சொல்லக்கூடாது' என்று நான் கட்டளையிட்டாலும், நீ கேட்பதில்லை. நாராயணன் எங்கே இருக்கிறார்? இப்போது எங்கே இருக்கிறார்?" என்று கேட்கிறான்.
அதற்குப் பிரஹ்லாதன் "அவர் இதோ
தரையில் கிடக்கும் இந்தத் துரும்பிலும்
இருப்பார். உங்கள் அருகில் இருக்கும்
தூணிலும் இருப்பார். அவர் எங்கும்
இருப்பார்," என்று சொல்கிறான்.
உடனே ஹிரண்யகசிபு அந்தத் தூணைக்
கோபத்தோடு எட்டி உதைக்க, அதிலிருந்து
கோபவேசத்துடன் பயமுறுத்தும்
உருவத்துடன் நாராயணர் நரஸிம்ஹராக, பாதி
மனிதராகவும் பாதி சிங்கமாகவும் வெளியே
வந்தார்.
பிரஹ்லாதன், நாராயணர் எங்கும் இருப்பதாக முழுமையாக நம்பினார். அவருக்கு அதில் ஒரு துளி அளவுகூட சந்தேகம் இல்லை.
"உன் நாராயணன் எல்லா இடத்திலும் இருக்கிறானா? எங்கே அவனை எனக்கு நீ காட்டு பார்க்கலாம்," என்று ஹிரண்யகசிபு சவால் விட்ட அந்தக் கணமே பகவான் விஷ்ணு, வைகுண்டத்தை விட்டுப் புறப்பட தயாராகிவிட்டாராம். அப்போது அவர் மனைவி லக்ஷ்மி "பிரபு, எங்கே கிளம்பி விட்டீர்கள்?" என்று கேட்க, விஷ்ணு சிரித்துக்கொண்டே சொல்கிறார், "எனக்குத் தெரியாது! என் பக்தனான சிறுவன் பிரஹ்லாதன் என்னை எங்கிருந்து வரச் சொல்கிறானோ, அங்கே போக வேண்டியதுதான்," என்றார்.
கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பதோடு மட்டுமல்லாமல் பக்தருடைய வார்த்தைகள் பொய்யாகாமல் இருக்க, அவர் எந்தளவுக்கு இறங்கி வர முடியுமோ, அந்தளவுக்கு இறங்கி வருகிறார்.
அவரைத் தெரிந்துகொள்ள அவருக்குள்ளேயே மூழ்க வேண்டும்

இந்தப் பிரபஞ்சத்தில், மொத்தம் பன்னிரண்டு தளங்கள் இருக்கின்றன. இவை நீளம், அகலம், ஆழம், நேரம், வெளி மற்றும் பிரபஞ்ச உணர்வுநிலை ஆகிய காரணிகளின் கூட்டுக் கலவையாக இருக்கின்றன.
நாம் பெரும்பாலும் முதல் ஐந்து தளத்தை மட்டுமே உணர்ந்திருக்கிறோம். அதிலும் ஒரு பகுதியை மட்டுமே உணர்ந்திருக்கிறோம். மனித தளத்தில் இருக்கும் ஒருவருக்கு அதை முழுமையாகப் புரிந்துகொள்வது கூட மிகவும் சிரமமாக இருக்கும்.
நீளம், அகலம், ஆழம் முப்பரிமாணங்களோடு இருக்கும் காலத்தையும் இடத்தையும் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதில் ஏதாவதொரு பரிணாமத்தில்தான் நாம் வாழமுடிகிறது.
அடிப்படை துகள்களால் SUB ATOMIC PARTICLES ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும் என்பதை இன்று குவாண்டம் இயற்பியல் கண்டறிந்திருக்கிறது. பருப்பொருளால் காலத்தையும் இடத்தையும் கடந்து செல்ல முடியும். பருப்பொருளும் சக்தியும், இடத்தையும் காலத்தையும் கடந்து இருக்க முடியும்.
ஒரு ஞானி என்பவர் இடத்தையும் காலத்தையும் கடந்து, பிரபஞ்ச விழிப்புணர்வை அடைந்தவராக இருக்கிறார்.
ஜகத்குரு கிருஷ்ணர், சுத்தமான பிரபஞ்ச விழிப்புணர்வு நிலை என்ற அந்தப் பன்னிரண்டாவது தளத்தில் இருக்கிறார். அவர் எல்லாப் பரிமாணத்திற்கும் அாப்பாற்பட்டு, இடம், காலத்திற்கும் அப்பாற்பட்டவராக இருக்கிறார். அவரே எல்லாவற்றிற்கும் தொடக்கமாக இருக்கிறார், ஆனால் அவருக்கு ஒரு தொடக்கம் என்பது இல்லை. அவரே முடிவாக இருக்கிறார்; ஆனால் அவருக்கு ஒரு முடிவு என்பது இல்லை.
படைப்பவரும் அவரே; படைப்பும் அவரே; படைக்கப்பட்டனவும் அவரே.

இந்தப் பிரபஞ்சம் என்ற மிகப்பெரிய
ஓவியத்திரையில், அவரே ஓவியத்திரையாக
இருக்கிறார். அவரே வர்ணமாக இருக்கிறார்.
அவரே கோடுகளாகவும் சித்திரமாகவும்
இருக்கிறார். அவர் இல்லை என்றால் இங்கே
எதுவும் இல்லை.
நாம் அவருடைய ஒரு பகுதியாகவே
இருந்தாலும் கூட, அவரைத் தெரிந்துகொள்ள
வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி,
அவருக்குள் மூழ்கி அவரோடு கலந்துவிட
வேண்டும்.
மிகப்பெரிய சூஃபி குருமார்கள், மெய்மறந்த பரவச நிலைக்குள் செல்லும்போது, எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவிப் பரவி இருக்கும் அந்தப் பிரபஞ்ச உணர்வு நிலைக்குள் மூழ்கிவிடுவார்கள். இராமகிருஷ்ணர் காளியின் பெயரைக் கேட்டால்கூட மெய்மறந்த பரவச நிலைக்குப் போய் விடுவார்.

என்ன வேண்டுமோ, என்னிடம் கேள்
சாந்தோக்ய உபநிஷத்தில், ஆதித்யன் என்பது விஷ்ணுவின் வாமன அவதாரப் பெயர். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தில், சிறு ப்ராஹ்மணப் பையனாக விஷ்ணு வருகிறார்.
அரக்கர் குலத் தோன்றலான பலி சக்கரவர்த்தி, பிரபஞ்சத்தில் தாமே உயர்ந்த இடத்தை, தலைமைப் பதவியை அடைய வேண்டுமென நினைத்தார். அதற்காகப் பல விதமான யாகங்களைச் செய்யத் தொடங்கினார். உடனே தேவர்கள் பகவான் விஷ்ணுவிடம் சென்று தங்களைக் காப்பாற்றும்படியும் பலி சக்கரவர்த்தி பிரபஞ்சத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்குமாறும் முறையிடுகிறார்கள்.
யாகத்தின் கடைசி நாளன்று விஷ்ணு ப்ராஹ்மணச் சிறுவனாகத் தோன்றுகிறார். யாக சடங்குகளைச் செய்யும்போது, விருந்தினர்களாக வருபவர்களை வரவேற்று, அவர்கள் யாசிப்பதைக் கொடுக்க வேண்டுமென்பது விதி. அதன்படி பலி சக்கரவர்த்தி ப்ராஹ்மண சிறுவனை மரியாதையோடு வரவேற்று, அச்சிறுவன் விரும்பியதைக் கொடுப்பதாகச் சொல்கிறார்.
> இராமகிருஷ்ணர்,
> காளியின் பெயரைக்
> கேட்டால்கூட
> மெய்மறந்த
> பரவச நிலைக்குப்
> போய்விடுவார்.
அரக்கர்களைத் தலைமைப் பதவி அடையவிடாமல் தடுப்பதற்காகவே, விஷ்ணு வாமன ரூபத்தில் வந்திருப்பதை, அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் தெரிந்துகொள்கிறார்.
அவர் பலியை எச்சரிக்கை செய்கிறார். ஆனால் அந்த அரசர் தாம் செய்துகொடுத்த ஸத்யத்தைக் காப்பாற்ற நினைக்கிறார். முழு மரியாதையோடு அந்த ப்ராஹ்மணசிறுவனிடம், "என்ன வேண்டுமோ கேளுங்கள்," என்கிறார்.
தம்முடைய எச்சரிக்கையை ஏற்காமல்,
பலி சக்ரவர்த்தி ப்ராஹ்மண சிறுவனுக்கு
மரியாதை செய்வதால் குருவுக்குக்
கோபம் வந்து விடுகிறது.

வாமனன், பலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்கிறார். பலி ஒத்துக் கொண்டவுடன் வாமனராக இருந்தவர் விச்வரூபம் எடுக்கிறார். அவர் தம்முடைய ஓர் அடியால் பூமி முழுவதையும் அளந்து விடுகிறார். இரண்டாவது அடியில் ஆகாயத்தை அளந்து விடுகிறார்.
எல்லா உலகையும் தமதாக்கிக் கொண்டதும்,
வாமனன் மூன்றாவது அடிக்கு எங்கே கால்
வைப்பது என்று கேட்கிறார். கொடுக்க ஏதும்
இல்லாததால் பலி தம்முடைய தலையையே
கொடுக்கிறார். வாமனனான வந்த விஷ்ணு,
மூன்றாவது அடியை அவர் தலையில்
வைக்கிறார்.
> பிரபஞ்ச
> விழிப்புணர்விடம்
> சரணடைவது
> ஒன்றுதான்,
> நம்மை
> விடுதலையை நோக்கி
> அழைத்துச் செல்லும்.
கர்வமும் பெருமையும் எப்படி ஒருவரது வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதையும், எல்லாப் பற்றுக்களும் தற்காலிகமானவையே, அதற்கு இயல்பான மதிப்பு ஏதும் இல்லை என்பதையுமே இந்தக் கதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தெய்வத்திடம் சரணாகதி அடைவது ஒன்றுதான், இறுதி பிரபஞ்ச விழிப்புணர்விடம் சரணடைவது ஒன்றுதான் நம்மை விடுதலையை நோக்கி அழைத்துச் செல்லும்.
மருட்களில் அவர் மரீசியாக இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
அறிவும் சக்தியும் நிறைந்த ‘எண்ணக் கடவுளர்கள்’ மருட்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
பல ரிக் வேத பாடல்கள் மருட்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மனத்தின் பிரதிநிதியான இந்திரனுக்கு மருட்கள் உதவி செய்வார்கள். இது, மனத்தில் தோன்றும் எண்ணங்களின் சக்தியைக் குறிப்பிடும் ஒரு மனோதத்துவம் பற்றிய உருவகக் கோட்பாடு.
எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறிடுவோம்
ஒரு ஜப்பானிய விஞ்ஞானி, டாக்டர் மசரு எமோடோ (Masaru Emoto) என்பவர் எண்ணங்களின் சக்தி பற்றி ஓர் ஆய்வு செய்தார். அவர், பொருள் சார்ந்த விஷயங்களின் மீது குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி எண்ணங்களுக்கு உண்டு என்று நிரூபித்துள்ளார்.
டாக்டர் எமோடோ ஒரே விதமான தண்ணீரை எடுத்துக் கொண்டார். அதை வெவ்வேறு பாத்திரங்களில் ஊற்றி, வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளுக்கு உட்படுத்தினர்.
வார்த்தைகளும்
எண்ணங்களும்
நீரின் மேல் ஆதிக்கம்
செலுத்தக்கூடியனவாக
இருக்கின்றன.
அவர், ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரிடம் புத்த மதப் பாடல்களை அன்போடும் நன்றியுணர்வோடும் உச்சரித்தார். இன்னொன்றிடம் எதிர்மறையான கோபம், வெறுப்பு, போர் பற்றியே பேசினார்.
பிறகு, அந்த இரண்டு வகை தண்ணீரையும் உறைய வைத்து, அதனுடைய உறைந்த வடிவத்தை போட்டோ எடுத்தார்.
நேர்மறை எண்ணங்களைச் சொன்ன பாத்திரத்தில் இருந்த உறைந்த வடிவப் படம், மிகவும் அழகாக ஸ்படிகம்போல் தெளிவாக வைரம்போல் ஜொலித்தது. எதிர்மறை எண்ணங்களைச் சொன்ன பாத்திரத்தில் இருந்த உறைந்த வடிவப் படம், மிகவும் கறுத்து, தெளிவில்லாமல், பேய்போல இருந்தது.
முந்நூறு முறைக்கு மேல் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் நீரின் மேல் இருக்கும் ஆதிக்கத்தையே ஒவ்வொரு முறையும் நிரூபித்தன. இவற்றை அவர், நீரில் மறைந்திருக்கும் உண்மைகள் (The hidden messages of water) என்ற தம்முடைய புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்.
நம்முடைய உடல் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் தண்ணீறால் நிறைந்துள்ளது என்றால், நம்முடைய எண்ணங்கள் எந்த அளவிற்கு நம்
மீதும் மற்றவர்கள் மீதும் மற்றும் இந்தச்
சுற்றுப்புற சூழல்கள் மீதும் நேரடியான
தாக்கத்தை உண்டாக்கும் என்பதைக்
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
ரிக் வேதத்தில் மருத்களின் அடையாளச்
சின்னமாகப் 'பறவைகளின் கூட்டம்'
குறிப்பிடப்படுகிறது. எண்ணங்களின்
சக்தி, கேட்பவர்களின் மேல் எப்படிப்பட்ட
தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை இது
குறிப்பிடுகிறது.
ஒருவர் நேர்மறை எண்ணங்களை
பிரதிபலிப்பவராக இருந்தால் அதே
நினைவுகளையும் நிகழ்ச்சிகளையும்
உள்வாங்குபவராக இருக்கிறார்.
ஒருவர் நேர்மறை எண்ணங்களை பிரதிபலிப்பவராக இருந்தால் அதே நினைவுகளையும் நிகழ்ச்சிகளையும் உள்வாங்குபவராக இருக்கிறார். நாம் ஆனந்தம் நிறைந்தவராக ஆசீர்வதிக்கப்பட்டவராக இருந்தால், அதே போன்ற மக்களை நம் பக்கம் ஈர்ப்பவர்களாக இருக்கிறோம்.
நாம் சோர்வாக, சோம்பேறியாக, மன அழுத்தத்துடன் இருந்தால் அதே போன்ற மக்களைத்தான் நம் பக்கம் ஈர்ப்பவர்களாக இருக்கிறோம்.
நினைவுகளும் ஆசைகளும்தான் சக்தி. அவை நம்முடைய செயல்களையும் வாழ்க்கையையும் உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய உடல், மனம், செயல்கள், இயல்புகள் ஆகியவற்றை நம்முடைய எண்ணங்களால் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய எண்ணங்கள்தான் நாம்!
இந்த ஸத்யத்தைப் பற்றி நாம் அறியவில்லை என்றாலும்கூட, அதாவது நம்முடைய எண்ணங்களின் விளைவுகளைப் பற்றி நாம் அறியவில்லை என்றாலும்கூட, நம்மைச் சுற்றி நடப்பவற்றுக்கு நாமே பொறுப்பாகிறோம். அதனால்தான் நம்மைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியமானதாக இருக்கிறது. நம்முடைய நினைவுகளும் செயல்களும் நம்மை மட்டும் அல்ல, இந்த உலகத்தையே பாதிக்கக்கூடியவையாக இருக்கின்றன.
இதனை அறிவுப்பூர்வமாக நம்புவதற்கு உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்புக்கூட உலகின் இன்னொரு பகுதியில் ஒரு சுனாமி வரக் காரணமாகலாம்! புத்தர் சொல்கிறார், "இப்போது நாம் இருக்கும் இந்த நிலையானது நாம் முன்பு எதை நினைத்தோமோ அதன் விளைவுதான். இப்போது நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுவோம்."
நம்முடைய எதிர்மறை எண்ணங்கள்தான் உலகின் வன்முறைகளுக்குக் காரணமாகிறது. இன்று உருவாகி இருக்கும் தீவிரவாதத்துக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாகிறோம்.
நம்முடைய நினைவுகள் இந்த உலகத்தையே பாதிக்கிறது என்ற உண்மை புரிந்தால், நாம் செய்யும் செயல்களிலும் நினைவுகளிலும் இன்னும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருப்போம். நாம் எல்லோரும் இந்தக் கூட்டு விழிப்புணர்வின் ஒரு அங்கமாக இருப்பதால், அதன் நிலையை மேம்படுத்த உதவி செய்யலாம்.
நீங்கள் தனித்தீவு அல்ல
குவாண்டம் இயற்பியல் இந்தக் கருத்தை 'ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தது' என்று குறிப்பிடுகிறது. யாரும் தனியானவர்கள் கிடையாது. இந்தப்பிரபஞ்ச துணியில் நாம் ஒவ்வொருவரும் ஓர் இழை. எந்த உணர்ச்சிப் பதிவை இந்தப் பிரபஞ்ச ஆடையில் உருவாக்கினாலும், அது எல்லோருக்குள்ளும் ஊடுருவி விடும். இந்தப் பிரபஞ்ச ஆடையோடு தொடர்புகொண்ட அனைத்துப் பொருட்களும் இந்தப் பாதிப்பை அடைகின்றன.
அடுத்து கிருஷ்ணர், "நான் ஒளிரும் பொருட்களில் சூரியனாய் இருக்கிறேன், நட்சத்திரங்களில் நான் நிலவாக இருக்கிறேன்," என்கிறார்.
> இப்போது நாம் இருக்கும்
இந்த நிலையானது
நாம் முன்பு
எதை நினைத்தோமோ
அதன் விளைவுதான்!
நிலவு என்பது நட்சத்திரம் கிடையாது
என்று நாம் சொல்லலாம்; அது,
கருத்துப்படி வேண்டுமானால் சரியாக
இருக்கலாம். ஆனால் இங்கே கிருஷ்ணர்,
நிலவானது பூமியின் மீதும் அதிலுள்ள
மக்களின் மீதும் தன் ஆதிக்கத்தைச்
செலுத்துவதைப் பற்றியே குறிப்பிடுகிறார்.
பூமியைச் சுற்றியுள்ள விண்வெளிக்
கோள்களிலேயே சூரியனும் சந்திரனும்தான்
பூமியின் மேல் அதிகம் ஆதிக்கம்
செலுத்துகிற முக்கியமான இரண்டு கோள்கள்
என்று உண்மையையை இன்றைய அறிவியல்
நிரூபித்துள்ளது.
சூரியன் என்பது ஒரு நட்சத்திரம்தான்
என்பதிலும், அதுவே நாம் காணக்கூடிய
எல்லாவற்றிலும் மிக ஒளிமிகுந்தது
என்பதிலும் யாருக்கும் எந்தச் சந்தேகமும்
கிடையாது.
கடல் அலைகளில் ஏற்படும்
வேறுபாடுகளுக்கும், மனிதனின் மனத்தில்
ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கும் சந்திரனே
காரணமாகிறது.
> சந்திரனின்
> வளர்ச்சி, தேய்வு
> நிலைகளில் இருக்கும்
> வேறுபாடு,
> மக்களின் மனங்களில்
> ஏற்படும்
> ஏற்ற இறக்கங்களுக்குக்
> காரணமாகிறது.
நம்மைச் சுற்றி கோள்கள், கோள்கள் அல்லாதவை மற்றும் சூரிய கோள்கள் ஆகியவை இருக்கின்றன. இவற்றில், சூரியனைத் தவிர சந்திரன் மட்டும்தான், 'கோள்' என்று பார்த்தாலும் சரி, தனிப்பட்ட முறையில் பார்த்தாலும் சரி மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.
சந்திரனின் வளர்ச்சி, தேய்வு நிலைகளில் இருக்கும் வேறுபாடு, மக்களின் மனங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்குக் காரணமாகிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள், நம்முடைய உணர்வு நிலைகளில், நல்லதாகவோ கெட்டதாகவோ குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்குகிறது.
நிலவு பூமிக்கு மிக அருகில் இருப்பதால் இதனுடைய ஈர்ப்பு விசை நம்மேல் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. சந்திரனின் தாக்கம், பூமியின் மீது மிகப்பெரிய அளவில் இருப்பதாலும், அதனை ஒரு உபகிரகமாக வகைப்படுத்தி இருப்பதாலும், நாம் நம்புவதுபோல் சந்திரன் ஒரு கிரகமே!
அதனால்தான், நம்முடைய இந்து ஜோதிடக் கலையும், நம்முடைய விண்கோள் ஆய்வகங்களும் இதை ஒரு கிரகமாகவே பார்க்கின்றன.
சந்திரன், ஒரு துணைக்கோளாக பூமியைச் சுற்றுகிறதா அல்லது ஒரு கிரகமாக சூரியனைச் சுற்றுகிறதா என்பதை வைத்து இந்த நம்பிக்கை இல்லை. இது எவ்வளவு தூரம் பூமியையும் மனித குலத்தையும் பாதிக்கிறது என்பதை வைத்தே இது கிரகம் என்று நம்பப்படுகிறது.
வேத கால ஜோதிடக் கலையில், வானத்தில் நட்சத்திரங்கள் பல்வேறு நிலைகளில் இருக்கின்றன என்றும், அவற்றை ஒருமுறை சுற்றி வர, சந்திரனுக்கு 27-ல் இருந்து 28 நாட்கள் ஆகின்றன என்று சொல்லப்படுகிறது.
இந்த நட்சத்திரங்கள் சந்திரனின் மனைவிகளாக குறிப்பிடப்படுகின்றன. அதனால்தான், கிருஷ்ணர் தாம், 'நட்சத்திரங்களில் நிலவாக இருப்பதாகவும், நட்சத்திரங்களின் பெருமையாக தாமே இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்'
வேதங்கள் என்பவை ரிஷிகளால் சொல்லப்பட்ட, காலத்தினால் அழியாத ஸத்யங்கள்!
சிறிது நாட்களுக்கு முன் ஒரு கட்டுரையை நான் படித்தேன். அதில் முன்பு சந்திரனும் நம்முடைய சூரிய குடும்பத்தின் ஒரு கிரகமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்தக் கட்டுரை சொல்கிறது, சந்திரனும் பூமியும் ஒரே அளவில் இருந்திருக்க வேண்டும். இவை இரண்டும் பலமாக ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
அதன் விளைவாகச் சந்திரனின் அளவு குறைந்து, பூமியின் புவியீர்ப்பு விசையால் அது ஒரு துணைக்கோளாக மாறிவிட்டது என்று சொல்கிறது. கிருஷ்ணருக்குக் நிச்சயமாக நமக்குத் தெரிவதைவிட அதிகம் தெரியும்!
அசையும் பொருள், அசையாபொருள் அனைத்தும் நானே
கிருஷ்ணர், வேதங்களில் தாம் ஸாம வேதமாக இருப்பதாகப் பிரகடனப்படுத்துகிறார்.
வேதங்கள் என்பவை ரிஷிகளால் சொல்லப்பட்ட, காலத்தினால் அழியாத ஸத்யங்கள். அந்த ஸத்யங்கள் அனைத்தும் அவர்களால் அனுபவமாக உணரப்பட்டதின் வெளிப்பாடுகளே! இவை அனைத்தும் தீர்க்கதரிசிகளால் தங்கள் நுண்ணுணர்வினால் அனுபவமாக உணரப்பட்ட ஸத்யங்களின் வெளிப்பாடுகளே! அவை நான்கு வேதங்களாக இருக்கின்றன: ரிக்வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம் மற்றும் அதர்வண வேதம்.
ஒவ்வொரு வேதத்திலும் நான்கு பகுதிகள் உள்ளன. மந்த்ர ஸம்ஹிதா- கடவுள்களைப் பற்றிய துதிப் பாடல்கள்; ப்ராஹ்மண மந்த்ரங்களின் விளக்கங்கள்; ஆரண்ய - சமயச் சடங்குகளின் தத்துவ விளக்கங்கள்; உபநிஷத்கள்-வேதத்தின் சாரம்.
ஸாம வேதம் என்பது அக்னி, இந்த்ரன், ஸோம இவர்களைப் பற்றிய துதிப்பாடல்களின் தொகுப்பு. ரிக் வேதமே, காலத்தால் பழமையான வேதம் என்றாலும் ஸாம வேதம்தான் நம்முடைய இந்திய இசை நுட்பங்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது.
இந்திய இசை மட்டுமல்ல, எல்லா இசையின் அடிப்படை ஸ்ருதிகளும், ஸ்வரங்களும் ஸாம வேதத்தில் இருந்துதான் தோன்றின. உலகில் உள்ள எல்லா இசைக்கும் அடிப்படையாக விளங்குகிற ஏழு ஸ்வரங்களும் ஸாம வேதத்தில் இருந்து பெறப்பட்டதுதான். இன்றும் அது பாடப்படுகிறது, ஒப்பிக்கப்படுவதில்லை.
இன்று, ரிக் வேதமும் மற்ற வேதங்களும் சில பண்டிதர்களால்தான் மனப்பாடமாக ஓதப்பட்டு வருகின்றன. ஆனால் ஸாம வேதம் இன்றும் எல்லா இடங்களிலும் காதுகளினால் கேட்கப்படுவதின் மூலமாக மட்டுமே நினைவுகளில் பதிக்கப்பட்டு, ஓதப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு இசை வடிவங்களான கர்நாடக இசையும் ஹிந்துஸ்தானி இசையும் இதன் சாரமாக விளங்குகின்றன.
ஸாம வேதம் என்பது நாட்டிய இசைக்கும் சாரமாக விளங்குகிறது.
இசையையும் நடனத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அதனோடு கலந்து அனுபவித்தாலே போதும். அதனால்தான் அது கிருஷ்ணரோடு இருக்கிறது. நாம் செய்யவேண்டியதெல்லாம் அவரை அனுபவிப்பது மட்டும்தான்.
கடவுள்களில், தான் வாசவராக (இந்திரன்) இருப்பதாகச் சொல்கிறார்.
பஞ்சேந்த்ரியங்கள், ஞானேந்த்ரியங்கள், அதாவது பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் தொடுதல் ஆகிய அனைத்தும் மனத்திலிருந்து வெளிப்படுகின்றன; அவை

மனத்தின் வேலைகளாகவே இருக்கின்றன.
மனம் இல்லாமல் புலன்கள் வேலை
செய்யாது.
மிகவும் சக்திவாய்ந்த ஸூக்ஷ்மமான மனமாக
தாமே இருப்பதாக அவர் சொல்கிறார்.
வாழும் உயிர்களில் வெறும் உடல்-மனமாக
மட்டும் அல்ல, (கிருஷ்ணரே) ஜீவ சக்தியாக,
பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறார்.
ருத்ரர்கள் என்ற இயற்கை சக்திகளை ரிக்வேதம் வழிபடுகிறது. ருத்ர என்ற சொல் 'அழுதல்' என்று பொருள்படும். ருத்ரனை வணங்கினால் பல நல்ல பலன்களைப் பெறலாம் என்று உருவகமாகக் குறிப்பிடப்படுகிறது.
ஒருவர் ஆழமான துயரத்தில், துக்கத்தில் இருக்கும்போது, பதினொரு ருத்ரர்களில் ஒரு ருத்ரனை விழிப்புணர்வோடு வணங்கினால், அது நல்ல பலன்களைத் தருவதாக நம்பப்படுகிறது. பதினொரு ருத்ரர்கள் : அஜியகபத், அஹிர்புத்ந்ய, வீரபத்ர, கிரிஸ, சங்கர, அபராஜித, ஹர, அசகாரக, பினா கி, பக மற்றும் சம்பு.
சங்கரர் என்பவர் நல்லது செய்யும் கடவுள். இந்தக் கடவுளர்களின் தெய்வீக தன்மையின் பரிணாம வளர்ச்சியில் சங்கரர் என்பவர் சிவத்தின் முன்னோடியாகத் திகழ்கிறார். சிவம் என்றால் மங்களத் தன்மை; காரணமே இல்லாமல் பிறக்கும் மங்களத் தன்மையைக் குறிக்கிறது.
சிவம் எங்கு இருந்தாலும் சரி, அங்கு எந்தக் காரணமும் இல்லாமல் நல்லதே நடக்கும். கிருஷ்ணர் சொல்கிறார், "ருத்ரர்களில் நான் சங்கரனாக இருக்கிறேன்.''
யக்ஷர்கள் என்பவர்கள் செல்வத்தை உருவாக்குபவர்களாகக் கருதப்படுகிறார்கள். யக்ஷர்களின் அரசன் குபேரன், அவரே செல்வத்தின் கடவுள்.
ராக்ஷஸர்களும் விண்ணுலகவாசிகள்தான். ஆனால் அவர்கள் எதிர்மறையான சக்திகளும் செல்வமும் கொண்டவர்கள்.
யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் செல்வத்தை வைத்திருந்தாலும், அதை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். தாம் செல்வத்தின் கடவுளான குபேரனாக இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். வஸுக்கள் விஷ்ணுவின் உதவியாளர்கள். அவர்கள் இயற்கையின் வெவ்வேறு பண்புகளைப் பிரதிபலிக்கிறார்கள். ப்ருஹதாரண்யக உபநிஷதம் எட்டு வஸுக்கள் பற்றிப் பேசுகிறது.
வஸுக்கள் : அக்னி, ப்ருத்வி (பூமி), வாயு, அந்தரிக்ஷ (வெளி), ஆதித்ய (ஒளி), த்யேயு (ஆகாயம்), சந்த்ரமஸ் (நிலா) மற்றும் நக்ஷத்ரானி.
வஸுக்களில், தாம் வடிவமற்ற நெருப்பாக இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
மேரு என்பது தங்க சிகரம், இது கடவுளர்களின் வசிப்பிடமாக உருவகப்படுத்தப்படுகிறது. அதனுடைய அடிவாரம்தான் இமயமலை. இது மனிதனின் முதுகெலும்பிற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது. சிகரங்களில், பெருமை வாய்ந்த மேருவாக தாம் இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் ஆச்சார்யார். அவர் அறியாமையையும் இருளையும் அகற்றி, தேவர்களின் எதிரிகளை அழிக்கிறார். போர் வீரர்களில், உச்ச சக்தியாக விளங்கும் ஸ்கந்தனாகத் தாமே இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். சிவன் பார்வதியின் மகனான ஸ்கந்தன், தேவர்களைத் துன்புறுத்திய தாரகாசுரன் என்ற அரக்கனை, அவனது அரக்கக் கூட்டத்தோடு அழித்தவர்.
அந்த உச்ச சக்தியான இருப்புத் தன்மை, நம்முடைய புலன்களையும் ஆசைகளையும் அஹங்காரத்தையும் அழிப்பதைத்தான், இவ்விதம் உலகியல் ரீதியாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.
நீர் நிலைகளில், முடிவற்ற விரிவை
உடையதாய் எல்லா உயிர்களுக்கும்
தேவையாய் இருக்கிற, சக்தி வாய்ந்த
கடலாகத் தாமே இருப்பதாகக் கிருஷ்ணர்
சொல்கிறார். உண்மையில், இது எல்லா
உயிர்களின் தொடக்கமாக இருக்கிறது.
‘ரிஷிகளுள், ஸப்தரிஷிகளில் ஒருவரான ப்ருகுவாக இருக்கிறேன்’ என்கிறார். (ஏழு ரிஷிகள் - பிரபஞ்ச சக்தியின் வடிவங்கள்). படைக்கும் கடவுளான பிரம்மா இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்குவதில் தமக்கு உதவி செய்வதற்காக ப்ருகுவை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.

சிவம் என்றால்
மங்களத் தன்மை;
காரணமே இல்லாமல்
பிறக்கும்.
மங்களத் தன்மையைக்
குறிக்கிறது.

"அதிர்வுகளில், நான் இயற்கை ஆற்றல்களுக்கு அப்பாற்பட்ட, தெய்வீகமான ஓம் என்ற சப்தமாக இருக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஓம் என்ற முதன்மையான சப்தத்திலிருந்துதான், பிரபஞ்சம் தம்மைத்தானே உருவாக்கிக்கொள்கிறது. ஆன்ம சக்தியின் அடையாளமாக விளங்கும் ப்ரணவம் என்பதும் இதுதான்.
ஓம் - ௐ என்ற வடிவத்தில், மூன்று வளைவுகளும், ஒரு அரை வட்டமும், ஒரு புள்ளியும் இருக்கின்றன. ( ௐ) மூன்று வளைவுகளில் மேல் வளைவு நனவு அல்லது விழிப்புணர்வு நிலையையும், கீழ் வளைவு ஆழ்ந்த தூக்கத்தையும், வலது பக்க வளைவு கனவு நிலையையும் குறிக்கின்றன, இது தனிப்பட்ட மனித விழிப்புணர்வின் மூன்று நிலைகளைக் குறிக்கிறது. அந்தப் புள்ளி, நான்காவது நிலையான பிரபஞ்ச விழிப்புணர்வு, துரிய நிலை, முழுமையான விழிப்புணர்வு நிலையைக் குறிக்கிறது.
அந்த அரை வட்டம், மாயையைக் குறிக்கிறது. இந்த மாயைதான், இந்த அரைவட்டம்தான், புள்ளியை மூன்று வளைவுகளிடமிருந்தும் பிரிக்கிறது.
ஆனால் திறந்த நிலையில் இருக்கும் அரைவட்டம், முழுமைத்தன்மையை, பூரண தன்மையை எவ்வகையிலும் பாதிக்கமுடியாது என்பதைக் குறிக்கிறது. நான்காவது நிலையான துரியநிலை, மாயையால் பாதிக்கப்பட முடியாததாக இருக்கிறது என்பதையே இது குறிக்கிறது.
"பல வகையான யஜ்ஞங்களில், புனிதப் பெயர்களைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கும். ஜப யஜ்ஞமாக நான் இருக்கிறேன்," என்கிறார்.
ஓம் என்ற முதன்மையான
சப்தத்திலிருந்துதான்,
பிரபஞ்சம் தன்னைத்தானே
உருவாக்கிக்கொள்கிறது.
உலகில் உள்ள அசையாத பொருட்களில்
அவர் மிக உயர்ந்த பெருமை வாய்ந்த
இமயமலையாக இருக்கிறார். இமயமலை
என்பதற்கு நேரடியான பொருள், 'பனியின்
இருப்பிடம்' என்பதாகும்.
இது பல சிகரங்களுக்கும் வீடாக இருக்கிறது.
உலகின் மிக உயர்ந்த சிகரத்தைத் தன்னகத்தே
கொண்டதாக இருக்கிறது. கங்கா, யமுனா,
பிரஹ்மபுத்ரா மற்றும் இண்டஸ் போன்ற
புண்ணிய நதிகளின் பிறப்பிடமாக
இருக்கிறது.
இமயத்திற்கு சிறந்த, தனித் தன்மை
வாய்ந்த, ஆன்மீக முக்கியத்துவமும்
உண்டு. விண்ணுலகில் சிவபெருமானின்
இருப்பிடமாகக் கைலாசம் கருதப்படுகிறது.
அந்தக் கைலாச மலையின் உருவகமாக
பூமியில் இமயமலையில் உள்ள மேரு
மலை குறிப்பிடப்படுகிறது. இமயம் உலகின்
ஆன்மீக இன்குபேட்டராக இருக்கிறது.
ஹிமாலயம் என்பது உண்மையாகவே ஒரு
சக்தி ஸ்தலம்.
இமயம்,
உலகின் ஆன்மீக
இன்குபேட்டராக
இருக்கிறது.
ஹிமாலயம்,
உண்மையாகவே
ஒரு சக்தி
ஸ்தலம்.
ஆயிரக்கணக்கான வருடங்களாக, லட்சக்கணக்கான ஸாதுக்கள் இங்கேயே வாழ்ந்து, இங்கேயே அவர்கள் உடலை விட்டு இருக்கிறார்கள். ஞானமடைந்த குருமார்கள் தங்கள் உடலை விடும்போது தங்களுடைய தவத்தின் பயனாகக் கிடைத்த ஆன்மீக சக்தியைத் தங்களுடன் எடுத்துச் செல்லவில்லை; அவர்கள் ஆன்மா அதை எடுத்துச் செல்வதில்லை. அவர்கள் தங்கள் சக்தியை உடலிலேயே விட்டுச் செல்கிறார்கள்.
எத்தனையோ எண்ணிலடங்கா ஞானிகள் தங்கள் உடலை விட்டுச் சென்றிருக்கும் ஹிமாலயத்தில் எத்தனை சக்தி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! நாம் இமயத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் நாம் மொத்தமாகச் சேர்ந்து வைத்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை இந்த நேர்மறை சக்திதான் ஈடு செய்து கொண்டிருக்கிறது.
பாபாஜியின் தரிசனம்
இமயமலைத் தொடர்தான் எனக்கு வீடு. நான் வீட்டை விட்டு பரிவ்ராஜக வாழ்க்கைக்குக் கிளம்பும்போது, இமயமலையை விட்டு மீண்டும் தென்னிந்தியாவிற்கு வருவேன் என்று நினைக்கவே இல்லை.
நான் என் மீதி வாழ்க்கை முழுவதும் அங்குதான் இருக்கப்போகிறேன் என்று நினைத்திருந்தேன். பல ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் மஹா அவதார் பாபாஜியை நான்ங்கேதான் சந்தித்தேன். நீங்கள் நம்பினால் நம்புங்கள் ஆனால் அதுதான் உண்மை.
இப்போது நான் அழைக்கப்படும் பெயரால்தான் மஹா அவதார் பாபாஜி என்னை அழைத்தார். கேதார்நாத் செல்லும் வழியில் ஒரு நாள் அவர் பரமஹம்ஸ நித்யானந்த என்ற சொல்லை உதிர்த்தபடி என்னுள் ஊடுருவி, என்னைக் கடந்து போனார். நான் திரும்பிப் பார்த்தபோது அவர் மறைந்து விட்டார். அது அவர் என்னுள் கலந்து விட்டது போல் இருந்தது.
அவர் என்னை, நித்யானந்தர் என்ற பெயரில் உள்ள குருவைத் தேடிச் செல்லச் சொல்வதாக நான் நினைத்தேன். நானும் அந்த குருவைத் தேடினேன்.
ஒரு வருடத்திற்குப் பிறகு, கல்கத்தாவில், கங்கையோடு கலக்கும் சிறு நதியான ஹூக்ளி நதிக்கரையில் ஒரு வயதான ஸந்யாஸி ஒருவர் அவர் இறப்பதற்கு முன் எனக்கு ஸந்யாஸ தீக்ஷை அளித்தார்.
> இப்போது, நான்
> அழைக்கப்படும்
> பெயரால்தான்
> மஹா அவதார்
> பாபாஜி என்னை
> அழைத்தார்.
எனக்கு ஸந்யாஸம்பெறுவதில் ஆர்வம் இல்லை. நான் ஞானமடைவதற்கான முயற்சியில் இருந்தேன். ஆனால் அவர் என்னை மிகவும் வற்புறுத்தவே, நான் தீக்ஷைக்குச் சம்மதித்தேன். அவர் எனக்கு பரமஹம்ஸ நித்யானந்த என்ற ஸந்யாஸப் பெயரைக் கொடுத்தது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.
நான் அந்த ஸந்யாஸியிடம், "இந்தப் பெயரை
எனக்கு ஏன் கொடுத்திருக்கிறீர்கள்," என்று
கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்,
"எனக்குத் தெரியாது, நான் இப்படித்தான்
செய்ய வேண்டும் என்று எனக்குச்
சொல்லப்பட்டது," என்று சொன்னார்.
எனக்கு இந்தப் பெயரையும் தீக்ஷையையும் யார் கொடுக்கச் சொன்னார்கள் என்று அவர் சொல்லவில்லை.
அதனால்தான் என்னுடைய சீடர்களிடம் மஹா அவதார் பாபாஜிதான் நம்முடைய குலகுரு, நம்முடைய ஸந்யாஸ பாரம்பரியத்தின் குரு என்றும், கேதார்தான் நம்முடைய ஆன்மீக க்ஷேத்ரம் என்றும் நான் சொல்வதுண்டு. நான் ஒவ்வொரு வருடமும் கோடைக் காலத்தில் பக்தர்களை ஒரு குழுவாக அழைத்துக்கொண்டு ஹிமாலய மலைப்பகுதிக்குச் செல்வதுண்டு; அங்கு என்னுடைய பரிவ்ராஜக நாட்களில், நான் காலணி இல்லாமல் பாதயாத்திரையாகச் சுற்றித் திரிந்த இடங்களைக் காண்பிப்பேன். அந்தக் குழுவில் ஒருவருக்கு மஹா அவதார் பாபாவின் தரிசனம் கிடைத்தது. அதற்குப் பிறகு ஆறு மாதங்கள் அவருடைய உடல் மிகவும் சிரமப்பட்டது. பாபாவின் சக்தி அலை அப்படிப்பட்டது.
அந்தப் பெருமை வாய்ந்த மலைகள், மனிதர்களைத் தங்களுடைய சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற நிலையை உணர்ந்துகொள்ளுமாறு செய்கின்றன என்பதை அந்தப் பயணத்தின்போது அவர்களுக்குக் காட்டினேன்.
அவை பெருமையும் சக்தியும் உடையவை. அவை இயற்கையாகத் தோன்றியவை. நீங்கள் இந்த முறை பார்த்ததைப் போன்றே அடுத்த முறையும் இருக்கும் என்று சொல்ல முடியாது. மலைகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆறுகள் தங்கள் வழியை மாற்றிக்கொண்டே இருக்கும்.
நமக்குள் பயபக்தியை ஏற்படுத்துகிற
அந்தக் கம்பீரமான பேராற்றல் மிக்க
மலைகளின் அழகில் உள்ளே மூழ்கி,
அதை வெளிப்படுத்தாமல், வார்த்தையற்று
அதன் அழகை அனுபவிக்கும்போது, அந்த
இயற்கையின் சாரத்தை நம்மால் பருக
முடியும்.
> நமக்குள் பயபக்தியை
> ஏற்படுத்துகிற
> அந்தக் கம்பீரமான
> பேராற்றல் மிக்க
> மலைகளின் அழகை
> அனுபவிக்கும்போது,
> அந்த இயற்கையின்
> சாரத்தை நம்மால்
> பருக முடியும்.
"அசையாத பொருட்களில், நான் இமயமலையாக இருக்கிறேன்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார். நான் அந்தக் கிருஷ்ண சக்தியை இந்த மலையினிடத்தில் உணர்ந்து இருக்கிறேன். என்னோடு பயணம் செய்த அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் அதை உணர்ந்தார்கள். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் கிருஷ்ணரின் பிரபஞ்ச உணர்வு நிலையில் இருந்தார்கள்!

நீங்கள் கடவுள் என்று உணரும் கணம்...
கேள்வி : ஒருவர் தன்னைத்தானே அறிந்து ஜீவன்முக்தி அடைய வேண்டுமானால், அஹங்காரத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறீர்கள். நம்முடைய அடையாளமாக நாம் அஹங்காரத்தை தூக்கிக்கொண்டு திரிகிறோம் என்றும் சொல்கிறீர்கள். ஆனால் பொருள் சார்ந்த இந்த உலகத்தில் வாழ்வதற்கு அடையாளம் தேவைப்படுகிறதே.
இல்லாவிட்டால் நாம் எப்படிச் செயல்படுவது?
நான் முன்னரே இதைப் பற்றி விளக்கியிருக்கிறேன். இப்போது மீண்டும் விளக்குகிறேன்.
நம்முடைய அஹங்காரம் தம்மை இரண்டு வழியில் வெளிப்படுத்திக்கொள்ளும்; ஒன்று அஹங்காரம், வெளி அஹங்காரம் மற்றொன்று மமகாரம், உள் அஹங்காரம்.
வெளி அஹங்காரம் என்பது, நாம் நம்மை வெளியில் எப்படி காட்டிக்கொள்கிறோம்; நம்முடைய அடையாளத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதைக் குறிக்கிறது. இது எப்போதுமே, நாம் எப்படியிருக்கிறோமோ அதைவிடப் பெரிதாகத்தான் வெளியில் காட்டிக் கொள்ளும். ஏனென்றால் நாம் நல்ல நிலையில் இருப்பதாக மக்கள் நினைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாம் இப்போது இருப்பதைவிட நம்மைப் பெரியவர்களாகவும், செல்வவளம் உள்ளவர்களாகவும், சந்தோஷமானவர்களாகவும், வலிமையானவர்களாகவும் மற்றவர்கள் உணர வேண்டும் என்றும் நினைக்கிறோம்.
உள் அஹங்காரம், மமகாரம் என்பது நாம் நம்மைப் பற்றி உள்ளே எப்படி அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறோமோ அது. இங்கேதான் நம்முடைய எல்லாக் குறைகளும் மிகத் தீவிரமான நிலையில் வடுக்களாக (Warts) இருக்கின்றன.
நம்முடைய இயலாமை, தாழ்வு மனப்பான்மை மற்றும் எல்லா எதிர்மறையான பதிவுகளையும் நாம் நினைவில் வைத்திருக்கிறோம்.
உள் அஹங்காரத்தில்தான் நம்முடைய எல்லாக் குறைகளும் மிகத் தீவிரமான நிலையில் வடுக்களாக இருக்கின்றன.
நம்முடைய உள்வெளிப்பாடு என்பது நாம் உண்மையில் நம்மைப் பற்றி உள்ளே என்ன நினைக்கிறோம் என்பதை நமக்குக் காட்டுகிறது.
"நாங்கள் எங்களைப் பற்றி எப்போதும் உயர்வாகத்தானே நினைக்கிறோம். தாழ்வாக எப்போதும் உணர்ந்ததில்லை," என்று சிலர் சொல்லலாம்.
அது சரி, அப்படியானால் நீங்கள் உங்களைக் கடவுள் என்று ஒப்புக்கொள்வீர்களா? நீங்கள் தெய்வீகமானவர்கள் என்பதை
ஏற்றுக்கொள்வீர்களா? இல்லை. அப்படி
ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இல்லை.
அப்படியானால் நீங்கள் உங்களை
உண்மையாக வெளிப்படுத்தவில்லை.
ஏனென்றால் நீங்கள் தெய்வீகமானவர்கள்;
நாம் ஒவ்வொருவரும் கடவுளே. நம்மிடையே
பாவம் செய்தவர்கள் என்று யாரும் இல்லை.
உங்கள் அஹங்காரத்திற்கும் மமகாரத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம்தான் உங்களுக்குள் துக்கத்தை உண்டாக்குகிறது.
உங்கள்
அஹங்காரத்திற்கும்
மமகாரத்திற்கும்
இடையேயான
வித்தியாசம்தான்
உங்களுக்குள் துக்கத்தை
உண்டாக்குகிறது.
நீங்கள் கடவுள்தான் என்று உணரும் கணமே, உங்கள் உள் ஆற்றலை உணர்ந்துகொள்ளும் அந்தக் கணமே, உள்ளேயும் வெளியேயும் உங்களை எப்படி எண்ணுகிறீர்கள் என்பதில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. அதனால் உங்களுக்குத் துக்கம் இருப்பதில்லை.
நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரைப்போல் உங்கள் அஹங்காரத்தை அகற்றிக்கொண்டிருக்கிறேன். இதன் அர்த்தம் என்னவென்றால், உங்கள் உள் விழிப்பு நிலையை அதன் இயல்பான ஆற்றல் நிலைக்கு உயர்த்தி, மமகாரத்திற்கும் அஹங்காரத்திற்கும் உள்ள வேற்றுமைகளைக் களைவதற்கு வேலை செய்கிறேன்.
நீங்கள் ஞானமடைந்தால் இந்த வேறுபாடுகள் மறைந்து போகும். உங்கள் உள் ஆற்றலை உணர்ந்துகொண்டதால் உங்களுள் விழிப்படைந்த உங்கள் உள் வலிமையை, உள் திறனை வளர்த்துக் கொள்கிறீர்கள். உங்களுக்குத் தேவையானதைச் செய்துகொள்ளும் ஆற்றல் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
எது எப்படி இருந்தாலும், நீங்கள் இப்போது பிடித்து வைத்திருக்கும் இந்த உடல் மனத்தோடு நீங்கள் நீண்ட நாள் தொடர்ந்து இருக்க முடியாது. நீங்கள் இப்போது இந்த மிகச்சிறிய உடல் மன அமைப்பைவிட பெரிய மிகச் சிறந்த தனிப்பொருளுடன் தொடர்புகொண்டு விட்டீர்கள். நீங்கள் இப்போது பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதி. லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான உயிர்களின் ஒரு கூட்டு அடையாளம்.
ஞானமடைந்த உயிருக்கென்று தனியான ஒரு அடையாளம் இருப்பதில்லை. ஞானி, தம்மை அந்த உச்சத்துடன், தெய்வீகத்துடன், பிரபஞ்ச விழிப்புணர்வுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார். அப்படிப்பட்ட ஒரு மனிதர் இந்த நிலையிலிருந்துநிகொண்டு எளிதாகவும் தன்னிச்சையாகவும் செயல்படுகிறார்.


நான் சிங்கம்
10.26 மரங்களில் நான் ஆல மரமாக இருக்கிறேன். முனிவர்களில் நான் நாரதனாக இருக்கிறேன். கந்தர்வர்களில் நான் சித்ரரதன். தன்னையுணர்ந்த ஞானிகளில் நான் கபிலன்.
10.27 குதிரைகளில், பாற்கடலில் அமுதம் கடையும்போது வெளிப்பட்ட உச்சைச்ரவஸ் நான் என்று தெரிந்துகொள். யானைகளில் ஐராவதம், மனிதர்களில் நான் அரசன்.
10.28 ஆயுதங்களில் நான் வஜ்ராயுதமாக இருக்கிறேன். பசுக்களில் நான் காமதேனு. இனவிருத்தியாளர்களில் காதல் கடவுளான மன்மதனாக இருக்கிறேன். நாகங்களில் நான் வாசுகி.
10.29 மிகப்பெரிய சர்ப்பங்களில் நான் அனந்தா. நீர்க்கடவுளில் நான் வருணன். மூதாதையர்களில் நான் ஆர்யமா. ஒழுக்கத்தை உறுதி செய்வதில் நான் யமன்.
10.30 தைத்யர்களில் (அரக்கர்களில்) நான் பிரஹலாதன். கணக்கீடுகளில் (மதிப்பீடு) நான் காலம். விலங்குகளில், நான் விலங்குகளுக்கெல்லாம் அரசனாகவும், (சிங்கம்) பறவைகளில் நான் கருடனாகவும் இருக்கிறேன்.

கிருஷ்ணரே சிறந்த பக்தர்தான்
கிருஷ்ணர், மரங்களில் நான் ஆலமரமாக இருக்கிறேன் என்கிறார். ஆலமரம் அதனுடைய கிளைகளிலிருந்து வேர் போன்ற விழுதுகளை உண்டாக்குகிறது. அதுவே மண்ணுக்குள் இரண்டாவது வேராக வளர்கிறது.
ஆலமரத்தின் வேர்கள் மற்ற மரங்களின் வேர்களைப்போல் அல்லாமல் மேலிருந்து கீழாக வளர்கின்றன. அதுபோல, ஆன்மீகத்தில் இருக்கும் ஒருவர், வெளி உலகை நோக்கி ஓடும் மற்ற மனிதர்களைப்போல் அல்லாமல், அந்த மாயையிலிருந்து விலகி, முழுமையை நோக்கி தம் உள் உலகை நோக்கிச் செல்ல வேண்டுமென்பதையே குறிக்கிறது.
அடுத்த அத்தியாயம் ஒன்றில், ஆலமரத்தின் இலைகளை வேதங்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இந்த மரத்தைப் பற்றி அறிந்தவர் எவரோ அவர் வேதத்தை அறிந்தவராகிறார்.
எல்லா ஆன்மீக குருமார்களுக்குள்ளும் ரிஷிகளுக்குள்ளும், தாம் நாரதராக இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார், அவர் மனம் எப்போதும் விஷ்ணுவின் நினைவிலேயே மூழ்கியிருக்கும். அவர் எப்போதும் “நாராயணா நாராயணா,” என்று உச்சரித்த வண்ணம் இருப்பார்.
கிருஷ்ணர் தம்மை ஒரு சிறந்த பக்தராகத்தான் அடையாளப்படுத்திக்கொள்கிறார்.
“கந்தர்வர்களில், விண்ணுலக வாசிகளில், அவர் சித்ரரதனாக இருப்பதாகச் சொல்கிறார். கந்தர்வர்கள் என்ற விண்ணுலக வாசிகள் இசையில் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் சோமபானம் என்ற தேவாமிர்தத்தைக் காப்பவர்கள். சித்ரரதன், அந்த கந்தர்வர்களின் அரசர்.
“தன்னையுணர்ந்த ஞானிகளுக்குள் கபிலராக இருக்கிறேன்,” என்று கிருஷ்ணர் சொல்கிறார். இவர் ஸாங்த்ய அமைப்புக்கான தத்துவங்களை எழுதியவர். இந்நூல், பொருள் சார்ந்த இந்த உலகத்தைப் பற்றியும், ஆன்மீக உலகத்தைப் பற்றியும், அதன் முக்கியமான பகுதிகளைப் பற்றியும் விளக்குகிறது. கபிலர் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
பாற்கடலைக் கடைதல், ஸம்ஸ்காரங்களைக் கடைதல்
புராணச் சிறப்புப் பெற்ற பனிவெண்மை நிறக் குதிரையான உச்சைச்ஶ்ரவஸ் என்ற குதிரை பாற்கடலைக் கடையும்போது வெளிப்பட்டதாகப் பாகவதம் விளக்குகிறது.
இந்தக் கதையின்படி, தேவர்கள் அஸுரர்களால் ஒடுக்கப்படுகிறார்கள். தேவர்கள், பகவான் விஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்கள். விஷ்ணு தேவர்களைப் பாற்கடலைக் கடையச் சொல்கிறார். மேரு மலையை மத்தாகவும் வாசுகி என்ற சர்ப்பத்தை கயிறாகவும் பயன்படுத்தி பாற்கடலைக் கடைய ஆரம்பிக்கிறார்கள்.
தேவர்களுக்குத் தனியாக அந்த வேலையைச்செய்ய வலிமை இல்லை என்பதால், என்ன கிடைத்தாலும் அதில் பங்கு தருவதாகக் கூறி அஸுரர்களையும் உதவிக்கு அழைக்கிறார்கள். அப்போது மேருமலை கடலுக்குள் மூழ்க ஆரம்பிக்கிறது. உடனே விஷ்ணு மேருமலை கீழே இறங்காமல் இருக்க, ஆமையாக (கூர்மாவதாரம்) வடிவம் தாங்கி மேருமலையைத் தாங்கி நிற்கிறார்.
பாற்கடல் கடையப்படும்போது பலவிதமான தெய்வீக பொருட்கள் வெளிப்படுகின்றன. அவற்றுள் உச்சைச்ஶ்ரவஸ் என்ற இந்தத் தெய்வீக குதிரையும், நான்கு தந்தங்களை உடைய ஐராவதம் என்ற யானையையும் இந்திரன் தம்முடைய வாகனங்களாக்கிக் கொண்டார்.
கடைதலின் ஒரு பகுதியாக ஆலஹாலம் என்ற கொடிய விஷமும் வெளிப்பட்டது. அது தேவ, அஸுரர்களின் உயிரையே குடிக்கும் அளவிற்குக்க் கொடிய விஷம் கொண்டதாக இருந்தது. அப்போது சிவன், அவர்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற அந்த விஷத்தைத் தாமே குடித்தார்.
இறுதியாக, இறப்பற்ற தன்மையைக் கொடுக்கும் அமுதம் வெளிப்பட்டது. அப்போது விஷ்ணு மோகினியாக அழகாக நடனமாடி அஸுரர்களைத் தம் வயப்படுத்தி, தேவர்களுக்கு இறப்பற்ற தன்மையைக் கொடுக்கும் அந்த அம்ருதத்தை வழங்கி மறைந்து போனார்.
> சிவன், தேவர்களைக் காப்பாற்ற ஆலஹால விஷத்தைத் தாமே குடித்தார்.
இது, நாம் நம்முடைய ஆசைகளினால், நம் வாழ்வில் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறோம், கடையப்படுகிறோம் என்பதற்கு நேரடியான உவமையாக இருக்கிறது. அவ்வாறு நாம் கடையப்படும்போது நம் வாழ்விலிருந்து பல பொருட்கள் வெளிப்படும்.
நாம் நம்முடைய ஆசைகளின் அலைகழிப்பைக் கடந்து, பிறப்பு இறப்பு என்ற சுழற்சியைக் கடந்து, நாம் நம்முடைய ஆசைகளின் முழு இருப்புத் தன்மையையும் தெய்வீகத்திடம் அர்ப்பணிக்கும்போது மட்டுமே இறப்பற்ற தன்மை என்ற அமுதம் வெளிப்படும், பிறகு நாம் தெய்வீக ஆனந்தத்தில் வாழலாம்.
கடைதல் நடைபெறும்போ து, அந்தச் செயல்முறைப் பாதையில் தடைகள் வரலாம். ஆனால் அப்போது குருவானவர் நம்மை ஆதரித்து, பாதுகாக்கிறார்.
நாம் கடுமையாக முயற்சி செய்து இறுதி நிலையை உணரும்வரை பாதுகாக்கிறார். பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட விஷத்தைச் சிவன் அருந்தியதுபோல, சீடருக்குள் ஆன்மீக முதிர்ச்சி நிகழும்போது, அவருக்குள்ளிருந்து எழும் விழிப்புணர்வற் ற ஸம்ஸ்காரங்களினால் அவர் தடுமாறிவிடாமல், குருவானவர் சீடரை உறுதியாகப் பற்றிக்கொள்கிறார்.
எல்லாவற்றின் உன்னதமே கிருஷ்ணர்
கிருஷ்ணர் சொல்கிறார், "ஆயுதங்களுக்குள் நான் இடிமின்னலுடன்கூடிய வஜ்ராயுதமாக, இருக்கிறேன்."இது, தேவர்களின் தலைவனான இந்திரனின் ஆயுதம். இந்த வஜ்ராயுதத்தில் விஷ்ணுவே இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த ஆயுதம் குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகவே இந்திரனுக்கு வழங்கப்பட்டது.
நாம் நம்முடைய
ஆசைகளின்
முழு இருப்புத்
தன்மையையும்
தெய்வீகத்திடம்
அர்ப்பணிக்கும்போது
மட்டுமே
இறப்பற்ற தன்மை என்ற
அமுதம் வெளிப்படும்.
இங்குக் கிருஷ்ணர் தம்முடைய ஆயுதமான சக்தி வாய்ந்த சக்ராயுதத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் வஜ்ராயுதத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம்: இந்த வஜ்ராயுதம், விருத்தாசுரன் என்ற தீமையை அழிக்க வேண்டுமென்பதற்காகத் தம்முடைய உயிரையே கொடுத்த மிகச் சிறந்த ஞானியான ததீசி மகரிஷியின் எலும்பினால் செய்யப்பட்டது.
பசுக்களில், "நான் புனிதப் பசுவான காமதுகா
அல்லது காமதேனுவாக இருக்கிறேன்,"
என்கிறார். இதுவும் பாற்கடல் கடைந்தபோது
வெளிப்பட்ட ஒன்றுதான். இந்து வாழ்க்கை
முறையில், பசு அதனுடைய 'பயன் தரும்
தன்மை'யினால் வழிபடப்படுகிறது.
காமதேனு, நம்முடைய எல்லா
ஆசைகளையும் பூர்த்தி செய்வதாகவும்,
எல்லாப் பசுக்களுக்கும் தாயாகவும்
கருதப்படுகிறது.
சீடருக்குள்
ஆன்மீக முதிர்ச்சி
நிகழும்போது,
விழிப்புணர்வற்
ஸம்ஸ்காரங்களினால்
அவர் தடுமாறிவிடாமல்,
குருவானவர் அவரை
உறுதியாகப்
பற்றிக்கொள்கிறார்.
அடுத்து, "இனவிருத்தி நடைபெறுவதற்கு அடிப்படையாக விளங்கும் குழந்தைப் பேறு உருவாவதற்கு உதவும் காதல் கடவுளாக நான் இருக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
"சர்ப்பங்களில் வாஸுகியாக இருக்கிறேன்," என்கிறார். வாஸுகி, பாம்புகளின் அரசர். பாற்கடலைக் கடையும்போது வாஸுகியாக இருக்கும் தம்மையே கயிறாக்கி, மேருவாகிய மத்தைச் சுற்றிக்கொண்டார்.
பாதாள லோகத்தில் வசிக்கும் ஜந்துக்களான விஷமற்ற நாகங்களில் தாம் அனந்தனாக இருப்பதாகச் சொல்கிறார். இந்தப் பல தலைகளையுடைய நாகம்தான் பகவான் விஷ்ணுவின் படுக்கையாக இருக்கிறது. பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களையும் இது தம்முடைய பல தலைகளால் தாங்குவதாகச் சொல்லப்படுகிறது.

நீர் ஆதாரங்களில் மிகச் சக்திவாய்ந்த
கடலாக, வருணனாக இருப்பதாகக்
கிருஷ்ணர் சொல்கிறார்.
நம்முடைய முன்னோர்களில்,
ஆதித்யர்களில் ஒருவரான
ஆர்யமாவாக இருக்கிறார். இவர்
நம்முடைய முன்னோர்களின் சக்தி
உடல்களால் சூழப்பட்ட உலகின்
தலைவராவார்.
ஒழுக்கத்தையும் நியமங்களையும் உறுதி செய்பவர்களில் தாம் மரணக் கடவுளான யமனாக இருப்பதாகச் சொல்கிறார்.
எல்லா உயிரினங்களுடைய வாழ்க்கையிலும் நிச்சயக்கப்பட்ட ஒரே ஒரு விஷயம் மரணம் ஒன்றே! மரணம் மட்டுமே, ஏழை பணக்காரன், பெரியவன் சிறியவன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துகிறது.
அதனால் மரணக் கடவுளாகிய யமன், ஒழுக்கத்தை உறுதி செய்பவராக இருக்கிறார். யம என்ற ஸம்ஸ்க்ரு'த வார்த்தைக்கு ஒழுக்கம், மரணம் என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டு. பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுப் படிகளில் முதல்படி யம.
சரணாகதி, துன்பக் காலத்தில் பாதுகாத்திடும்
தைத்யர்களில் பிரஹ்லாதனாக இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். தைத்யர்கள் எப்போதும் தேவர்களுடன் போர் புரியும் இனத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். பிரஹ்லாதன் மிகச் சக்திவாய்ந்த அரசனான ஹிரண்யகசிபுவின் மகன்.
Hிரண்யகசிபு கடுமையாகத் தவம் செய்து சாகாவரம் பெற்றவன். அவன் மனிதனாலோ, மிருகத்தாலோ, இரவிலோ, பகலிலோ தம்முடைய வீட்டின் உள்ளேயோ, வெளியேயோ, பூமியிலோ, ஆகாசத்திலோ, உயிருள்ளவைகளாலோ அல்லது உயிரற்ற ஆயுதங்களாலோ தனக்கு மரணம் நேரக் கூடாது என்று வரம் பெற்றவன்.
வரம் பெற்ற பிறகு, ஹிரண்யகசிபு தன்னை இறப்பற்றவன் என்று நம்பினான். ஏனென்றால் இந்த எல்லா நிபந்தனைகளையும் ஒரு சேர யாராலும் நிச்சயமாக நிறைவேற்ற முடியாது என்றும், அதனால் இறப்பு அவனைத் தொடாது என்றும் திடமாக நம்பினான். அதனால் கர்வம் மிகுந்து அவன் தேவர்களைத் தாக்க ஆரம்பித்தான்.
எப்படியிருந்தாலும், பிரஹ்லாதன், இறை நம்பிக்கையுள்ள குழந்தையாக இருந்தான்.
தான் யாரை மிகவும் வெறுக்கிறானோ அந்த பகவான் விஷ்ணுவையே தன் மகன் உறுதியாகப் பற்றிக்கொண்டு ஒரு பக்தனாக இருப்பதை ஹிரண்யகசிபுவால் பொறுக்க முடியவில்லை.
எல்லா
உயிரினங்களுடைய
வாழ்க்கையிலும்
நிச்சயக்கப்பட்ட
ஒரே ஒரு விஷயம்
மரணம்
ஒன்றே!
பிரஹ்லாதன் இரவும் பகலும் விஷ்ணுவின் நாமம் சொல்வதைக் கேட்டு அவன் கடும் கோபம் கொண்டான். கோபத்தால் அவன் தன் மகனையே கொல்ல பலமுறை முயற்சி செய்தான்.
பிரஹ்லாதனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளியும், யானையைக்கொண்டு மிதிக்கச் செய்தும், எரியும் தீயில் உட்காரச் செய்தும் அவனைக் கொல்ல முயற்சி செய்தான்.
ஹிரண்யகசிபுவின் அத்தனை முயற்சிகளும் தோல்வியுற்றன. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பிரஹ்லாதன் விஷ்ணுவிடம் பூரண சரணாகதி செய்ததால், தன் தந்தையால் விதிக்கப்பட்ட தண்டனைகளிலிருந்து தப்பித்தான். அந்தத் தண்டனைகளால் பிரஹ்லாதனைத் தொடக்கூட முடியவில்லை.
இந்தக் கதையை நான் முன்பே
சொல்லியிருக்கிறேன். ஆனால் இங்கே
கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன்.
ஒருமுறை விஷ்ணுவின் பெருமைகளைப்
பிரஹ்லாதன் வெளியிடும்போது, ஹிரண்ய
கசிபு பிரஹ்லாதனை நோக்கி கோபத்துடன்
கேட்கிறான், "விஷ்ணு எல்லா இடங்களிலும்
இருப்பதாகச் சொன்னாயல்லவா? இந்தத்
தூணிலும் அவன் இருக்கிறானா?"
பிரஹ்லாதன் விஷ்ணுவிடம்
பூரண சரணாகதி
செய்ததால், தன்
தந்தையால் விதிக்கப்பட்ட
தண்டனைகளிலிருந்து
தப்பித்தான்.
பிரஹ்லாதன் அமைதியாகவும் உறுதியாகவும் பதிலளித்தான். "ஆம் அவர் இந்தத் தூணிலும் இருக்கிறார்."
இது ஹிரண்யகசிபுவிற்கு மிக அதிகமாகத் தோன்றியது. அவன் அந்தத் தூணை உடைக்கிறான்.
மிகப்பெரிய ஆச்சரியமாக, பாதி மனிதனும் பாதி சிங்க முகமும் கொண்ட உருவம் அதிலிருந்து வெளிப்பட்டது.
அது மனிதனும் அல்ல. மிருகமும் அல்ல. அது பகலும், இரவும் சந்திக்கும் ஸந்த்யா நேரம். அதனால் அது இரவும் அல்ல பகலும் அல்ல. அந்தத் தூண் ஹிரண்யகசிபுவின் அரண்மனை நுழைவாயிலில் இருந்தது. அதனால் அது வீட்டின் உள்ளேயும் அல்ல வெளியேயும் அல்ல. அந்த நரசிம்மம் ஹிரண்யகசிபுவைக் கைகளில் தூக்கிக்கொண்டு சென்று, தன் தொடைகளின் மேல் போட்டுக்கொண்டது. அதனால் அது பூமியும் அல்ல ஆகாசமும் அல்ல.
இந்த நிலையில் நரசிம்மர், ஹிரண்யகசிபுவின் வயிற்றைக் கிழித்துக் கொன்றார். அவர் கொல்லப் பயன்படுத்திய ஆயுதம் நகங்கள். அவை உயிருள்ளவையோ உயிரற்றவையோ அல்ல.
அவனுக்கு வரமாகக் கொடுக்கப்பட்ட அத்தனை நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டன; ஆனாலும் மரணம் அவனைத் தழுவியது! விஷ்ணு, நரசிம்ம அவதாரத்தின் மூலம் ஹிரண்ய கசிபுவைக் கொன்றதன் மூலம், எப்போதும் அவர் தம் பக்தர்களைக் காப்பதற்குக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை நிரூபித்துள்ளார்.
> முழுமையான சரணாகதி,
அந்தத் தெய்வீக சக்தியை
எல்லாச் சூழ்நிலைகளிலும்
தன் பக்தரைக்
கவனித்துக்கொள்ள
வைக்கிறது.
சிறுவன் பிரஹ்லாதன் பக்திக்கும் சரணாகதிக்கும் ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறான். தெய்வீகத்திடம் முழுமையான சரணாகதி என்பது நடக்கிற ஒன்றுதான் என்பதற்கும், அப்படிப்பட்ட முழுமையான சரணாகதி அந்தத் தெய்வீக சக்தியை எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் தன் பக்தரைக் கவனித்துக்கொள்ள வைக்கிறது என்பதற்கும் பிரஹ்லாதன் வாழ்க்கையே ஒரு உதாரணம்.
“கணக்கீட்டாளர்களில், மதிப்பீட்டாளர்களில் நான் காலமாக இருக்கிறேன்,” என்று கிருஷ்ணர் சொல்கிறார். காலமே முடிவான கணக்கு. வாழும் உயிர்கள் எதுவும் காலத்தை வென்றதில்லை. யாராக இருந்தாலும் காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.
எதனாலும் நிறுத்த முடியாதது காலம்.
மிருகங்களில் தாம் காட்டு அரசனான சிங்கமாக இருப்பதாகச் சொல்கிறார்.
“பறவைகளில் பறவைகளின் அரசனான கருடனாக நான் இருக்கிறேன்,” என்கிறார். கருட பகவான் விஷ்ணுவின் வாகனம்.
கேள்வி : பாற்கடலைக் கடைந்ததையும் அதிலிருந்து பல ஜீவன்கள் வெளிப்பட்டதையும் பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்கும் பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட ஜீவன்களுக்கும் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?
தேவர்கள், விஷ்ணு பகவான் பள்ளிகொள்ளும் பாற்கடலைக் கடைந்து தேவ அம்ரு'தத்தை எடுக்க விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் இறவாமல் இருக்கவும், அவர்களைப் பழிவாங்கும் அவர்களது எதிரிகளான அரக்கர்களை வெல்லவும் அவர்களுக்கு அமிர்தம் வேண்டியிருந்தது.
ஆனால் தாங்கள் மட்டுமே தனியாக இருந்து பாற்கடலைக் கடையும் அளவுக்கு தேவர்களுக்கு வலிமை இல்லாததால், அவர்கள் அரக்கர்களின் உதவியை நாடினார்கள். அதே நேரத்தில் அவர்கள் விஷ்ணுவிடம் அம்ரு'தம் தங்களுக்கு மட்டுமே கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
உங்களுடைய நேர்மறை எண்ணங்களான தேவர்களுக்கும், உங்களுடைய எதிர்மறையான மனச்சோர்வடையச் செய்யும் எண்ணங்களான அரக்கர்களுக்கும் நடக்கும் சண்டையையே இந்தக் கதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
உயர் எண்ணங்களுக்கும் மனச்சோர்வைத்
தரக்கூடிய கீழான எண்ணங்களுக்கும்
இடையே நடக்கும் சண்டையே கடைதலாக
நமக்குள் நடந்துகொண்டிருக்கிறது.
அதனால்தான், நீங்கள் ஒரு ராட்சத
சுழல் ராட்டினத்தில் சுற்றும்போது
உணர்வதைப்போல, சில நேரங்களில்
மகிழ்ச்சியாகவும் பல நேரங்களில்
துக்கமாகவும் உணர்கிறீர்கள்.
> உயர்
> எண்ணங்களுக்கும்
> மனச்சோர்வைத்
> தரக்கூடிய கீழான
> எண்ணங்களுக்கும்
> இடையே
> நடக்கும் சண்டையே
> கடைதலாக நமக்குள்
> நடந்துகொண்டிருக்கிறது.
கடைதலில் இருந்து நாம் விடுபடவேண்டுமானால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் ‘பற்றற்று’ இருப்பது அல்லது அன்கிளச் செய்துகொள்வது.
ஒரு எண்ணத்திற்கும் மறு எண்ணத்திற்கும் தொடர்பில்லை என்று ஆழ்ந்து உள்ளுக்குள் அறியும்போது நீங்கள் அதிலிருந்து விடுபடுகிறீர்கள். நீங்கள் ஒரு எண்ணத்தையும் வேறொரு எண்ணத்தையும் எடுத்துக் கோர்த்துக் கோர்த்துப் பார்த்து, அதை ஒரு துக்கத் தண்டாகவோ இன்பத் தண்டாகவோ உருவாக்கி விடுகிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்கிறீர்கள்.
இரண்டாலும் நீங்கள் துக்கமே படுகிறீர்கள். இன்பத் தண்டும் தொடர்ந்து நிலைப்பதில்லை. அவ்வாறு நிலைக்காது மறைந்து போகும்போது நீங்கள் துக்கத்தில் ஆழ்ந்து போகிறீர்கள்.
நான் நேரடியாக நடத்தும் நித்யானந்தம் த்யான முகாமில் நீங்கள் முதலில் அன்க்ளட்சிங் (unclutching) செயல்முறையை செய்யத் தொடங்கும்போது, உங்களுடைய நேர்மறை எண்ணங்களும் எதிர்மறை எண்ணங்களும் சேர்ந்துகொண்டு, அவற்றைக் கீழே போடவிடாமல் உங்களைத் தடுக்கும்.
கடைதல் என்பது மோசமாக இருக்கும். நீங்கள் கடுமையான மனச் சோர்விற்கு ஆளாவீர்கள். மிகச்சிறிய எதிர்மறை எண்ணம்கூட, இதற்குமுன் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சிறு எண்ணம்கூட, இப்போது பூதாகாரமாகி உங்களை வேட்டையாடும்.
இந்தச் செயல்முறையில் குரு என்பவர் ஆமையாக இருக்கிறார். அன்க்ளட்சிங் என்பது கடையும் மத்தாக இருக்கிறது. இந்தச் செயல்முறையின்போது குரு உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
பாற்கடலைக் கடையும்போது தெய்வப் பொருட்கள் தோன்றியதுபோல், இந்தச் செயல்முறையின்போது உங்களுடைய உள்ளுணர்வின் சக்தி சிறிது மேம்படலாம். மனச்சோர்வின்போது வெளிப்படும் நமது கற்பனைகளையே, அப்சரஸ்கள் வெளிப்பட்டார்கள் என்ற உருவகம் குறிக்கிறது.
கடைசியில், அறிவு எனும் அமுதம் வெளிப்படும். அதாவது நீங்கள் பொதுவாக நேர்மறை எண்ணங்களே அதிகமாக இருக்கும் நிலையில் நிலைபெற்று விடுவீர்கள்.
நீங்கள் மேலும் முன்னேற, முன்னேற எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்பதைப் புரிந்துகொண்டு, எண்ணங்களை ஒரு ஸாக்ஷியாக இருந்து மட்டுமே பார்ப்பீர்கள். ஒன்றையொன்று இணைத்துப் பார்ப்பது துக்கத்திற்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
நீங்கள் மேலும் முன்னேறும்போது, எண்ணமற்ற நிலையை நீங்கள் அடைகிறீர்கள். இந்த நிலையை நீங்கள் அடைய வேண்டுமானால், உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம், உங்கள் குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் பொறுமையும் மட்டும்தான்.

நான் இராமன்
தூய்மைப்படுத்துபவற்றில் நான் காற்றாக இருக்கிறேன்.
ஆயுதம் ஏந்துபவர்களில் நான் இராமனாக இருக்கிறேன்.
நீர்வாழ் உயிரினங்களில் நான் திமிங்கலமாக இருக்கிறேன்.
பாயும் நதிகளில் நான் ஜாஹ்னவி (கங்கை).
ஓ அர்ஜுனா, எல்லாப் படைப்புகளிலும் உறுதியாக நான்,
தொடக்கமாகவும் மையமாகவும் முடிவாகவும் இருக்கிறேன்.
அறிவுகளில், நான் ‘தன்னை அறிதல்’ என்னும் ஆன்மீக அறிவாக
இருக்கிறேன். வாதப் பிரதிவாதங்களில், நான் பகுத்தறிவாக
இருக்கிறேன்.
எழுத்துக்களில், நான் ‘அ’ வாக இருக்கிறேன். கூட்டுச்
சொற்களில் இருசொற்கூட்டாக நான் இருக்கிறேன். உறுதியாக,
நானே முடிவற்ற காலமாக இருக்கிறேன். அனைத்தையும்
ஸாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருப்பவனாகவும், எங்கும்
நீக்கமற நிறைந்திருப்பவனாகவும் இருக்கிறேன்.
நானே எல்லாவற்றையும் விழுங்குகிற மரணமாகவும், எதிர்காலத்திற்கான பொருட்கள் அனைத்தையும் படைக்கும் படைப்பாளியாகவும் இருக்கிறேன்.
பெண்மையில் நான் புகழாக, அதிர்ஷ்டமாக, அழகிய பேச்சாக, நினைவாற்றலாக, நம்பகத் தன்மையாக, பொறுமையாக இருக்கிறேன்.
ஸாம வேத பாடல்களில் நான் ப்ருஹத்ஸாம-வாக இருக்கிறேன். நானே காயத்ரி. மாதங்களில் நான் மார்கழி. பருவ காலங்களில் நான் வசந்த காலம் (இளவேனிற்காலம்).
ஏமாற்றும் வேலைகளிலேயே நான் சூதாட்டமாக இருக்கிறேன். ஒளிரும் பொருட்களில் நான் சுடராக இருக்கிறேன். நானே வெற்றி, நானே முயற்சி, நானே நல்லவற்றில் எல்லாம் நன்மையாக இருக்கிறேன்.
வ்ருஷ்ணியாக இறங்கியவர்களில் நான் வாஸுதேவ கிருஷ்ணனாக இருக்கிறேன். பாண்டவர்களில் நான் அர்ஜுனன். ஞானிகளுக்குள் நான் வியாஸராகவும் சிந்தனையாளர்களில் நான் உசானா-வாகவும் இருக்கிறேன்.
ஆட்சியாளர்களுக்கு நான் செங்கோலாக இருக்கிறேன். வெற்றியாளர்களில் நான் மேதைத்தன்மையாக இருக்கிறேன். எல்லா ரகசியங்களிலும் நான் மௌனமாக இருக்கிறேன். அறிவாளிகளிடத்தில் அறிவாக இருக்கிறேன்.

படைப்புகளின் தொடக்கமும், மையமும், முடிவுமாக இருக்கிறார்
தூய்மைப்படுத்தும் பொருட்களில் தாம் உருவமற்ற தூய்மையான காற்றாக இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
பூமி, நீர், நெருப்பு எல்லாவற்றிலும் ஊடுருவிப் பரவியிருக்கும் காற்றானது அவற்றைச் சுத்தம் செய்கிறது. ஆயுதம் ஏந்தியவர்களில் இராமனாக இருப்பதாகச் சொல்கிறார். இராமன் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படுபவர். தம் மனைவியைக் கவர்ந்து சென்ற அரக்கர் குல அரசனான இராவணனை இராமர் வெற்றிகொள்கிறார்.
இராமர் நேர்மையான அரசராக இருந்தார். அவர் தந்தையின் மணிமுடிக்கு அவரே வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருந்தும் தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற அவர் நாட்டை விட்டே வெளியேறினார். இராமர் ஒரு மிகச் சிறந்த வில்லாளியாகக் கருதப்படுகிறார். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில், கிருஷ்ணாவதாரத்திற்கு முந்தைய அவதாரம்தான் இராமாவதாரம்.
"நீர்வாழ் உயிரினங்களில் அஞ்சக்கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்த சுறா மீனாக இருக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நதிகளில் தாம் கங்கையாக இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். கங்கை நதி இந்தியாவில் கங்கா மாதாவாக, பெண் தெய்வமாக வழிபடப்படுகிறது. கங்கைக் கரையில் லட்சக்கணக்கான மனிதர்கள் தினமும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
கங்கைக் கரைகளில் லட்சக்கணக்கான
மனிதர்கள் தினமும் கங்கைக்குப் பூஜை
செய்துவிட்டு, அந்தப் புனித நீரில் மூழ்கி
எழுகிறார்கள்.
ஜாஹ்னு என்ற ஞானி, இமயத்திலிருந்து
கங்கை மிக வேகமாகத் தம் ஆச்ரமத்தை
நோக்கி வருவது கண்டு அதை அப்படியே
விழுங்கி விடுகிறார்.
லட்சக்கணக்கான
மனிதர்கள்
கங்கை நீரில் நின்று
பிரார்த்தனை
செய்வதால்,
முழு நதியுமே
சக்தியூட்டப்படுகிறது.
பின்னர் பகீரதன், ஜாஹ்னு ரிஷியை மிகவும் பிரார்த்தித்து, அவரிடமிருந்து கங்கையை விடுவிக்கிறார். அதனால்தான், கங்கை ஜாஹ்னுவின் மகளாக 'ஜாஹ்னவி' என்றும் அழைக்கப்படுகிறாள்.
கங்கை இமயத்தில் இருந்து இறங்கி சமவெளியில் பாயத்தொடங்குகிறது. கங்கையின் வழிநெடுகிலும் கணக்கற்ற ஆன்மீகத் திருத்தலங்கள் இருக்கின்றன. இங்கே மனிதர்கள் பயபக்தியோடு தினமும் கங்கையை வழிபடுகிறார்கள்.
கங்கை, சொர்க்கத்திலிருந்து இறங்கிய நதியாகக் கருதப்படுகிறது. லட்சக்கணக்கான மனிதர்கள் கங்கை நீரில் நின்று பிரார்த்தனை செய்வதால், முழு நதியுமே சக்தியூட்டப்படுகிறது. தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் அந்த விவரிக்கமுடியாத சக்தியை அவள் எங்கிருந்து பெறுகிறாள் என்பதை இதன் மூலம் நாம் விளங்கி்க்கொள்ளலாம்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, பதிவு செய்து வைத்திருக்கும் வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து நான் கவனித்த உண்மையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும்போது, அவர்கள் தங்களோடு கொண்டுவரும் தண்ணீர், நீண்ட கடற் பயணத்தில் கெட்டு விடுமாம்.
ஆனால் அவர்கள் திரும்பிச் செல்லும்போது, இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்குக் கங்கை நீரைக்கொண்டு செல்வார்களாம். அது இங்கிலாந்தை அடையும்வரை கெடாமல் சுத்தமாகவே இருக்குமாம்.
இந்த ஆராய்ச்சிப் பதிவு, தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ளும் கங்கையின் வியக்கத் தக்க சக்தியை நமக்குக் காட்டுகிறது.
படைப்புக்கள் எல்லாவற்றிலும், அவரே தொடக்கமாகவும் மையமாகவும் முடிவாகவும் இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். தோன்றிய, தோன்றி இருக்கும், இனித் தோன்றப் போகும் அனைத்துமாகவும் அவரே இருக்கிறார் என்பதை இது விளக்குகிறது.
அறிவின் பல்வேறு கிளைகளில், இறுதி ஆன்மீக அறிவாக, அதாவது ‘தன்னை உணர்தலாக’ அவர் இருக்கிறார்.
மற்ற எல்லா வகையான அறிவும் புத்திசாலித்தனத்தின் விளைவாகவே பெறப்படுகிறது. ஆனால் ‘தன்னை உணர்தலுக்கு’ மட்டும்தான் உள்ளுணர்வும், அதைத் தாண்டிய ஒன்றும் தேவைப்படுகிறது.
எல்லா வகையான வாதப் பிரதிவாதங்களுக்குள்ளும், எல்லாவற்றையும் சேர்க்கக்கூடிய தர்க்க அறிவாகத் தாமே இருப்பதாகச் சொல்கிறார்.
‘தன்னை உணர்தலுக்கு’ மட்டும்தான் உள்ளுணர்வும், அதைத் தாண்டிய ஒன்றும் தேவைப்படுகிறது.
எழுத்துக்களில் முதல் எழுத்தாக, அதாவது
பேசவும் எழுதவும் தொடக்கமாக இருக்கும்
‘அ’ என்ற எழுத்தாக இருப்பதாகவும்
கிருஷ்ணர் சொல்கிறார்.
இரட்டை வார்த்தைகளில், ஸம்ஸ்க்ருத
வார்த்தைகளின் ஒரு பிரிவான, கூட்டு
வார்த்தையாக அவர் இருக்கிறார்.
அவர் முடிவற்ற காலமாகவும், இந்தப்
பிரபஞ்ச படைப்பாளியான ப்ராஹ்மனாக
இருப்பதாக உறுதிபடச் சொல்கிறார்.
படைப்பவரும் அழிப்பவரும் தானே என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
பெண்மையின் குணங்களில், புகழ், அதிர்ஷ்டம், இனிமையான பேச்சு, நினைவாற்றல், அறிவு, நம்பிக்கை, பொறுமை என்று ஏழு தேவிகளாக, பெண் தெய்வங்களாக இருப்பதாகச் சொல்கிறார். இந்த எல்லாப் பண்புகளும் பெண்பாலாகத்தான் குறிக்கப்படுகின்றன. இந்த இயல்புகள் தம்மிடம் இருந்துதான் பெண்மைக்கு வந்ததாகவும், இவை ஸம்ஸ்க்ருதத்திலும் இருப்பதாகவும சொல்கிறார்.
கிருஷ்ணர் முந்தைய ஸ்லோகத்தில், வேதங்களிலேயே அழகான பாடல்களும் ஸ்தோத்ரங்களும் நிறைந்த ஸாம வேதமாக தாம் இருப்பதாகச் சொன்னார். ஆனால் இப்போது அந்தப் பாடல்களிலும், ப்ருஹத்ஸாமவாக அதாவது ஒப்புவமையற்ற மெல்லிசையாக இருப்பதாகச் சொல்கிறார்.
sந்தங்களில், அவர் காயத்ரியாக இருப்பதாகச் சொல்கிறார். வேதங்களில் அமைந்துள்ள ஸ்லோகங்களும் ப்ரார்த்தனைகளும், காயத்ரி உட்பட, சந்தங்களில்தான் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அளவை 24 அசைகளைக் (ஒலிகளைக்) கொண்டதாகவும், பொதுவாக மூன்று அல்லது நான்கு வரிகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. இதில் தேவி காயத்ரி, ருத்ர காயத்ரி ஆகியவையும் அடங்கும்.
ஸம்ஸ்காரங்களிலிருந்தே விடுவிக்கும் 'காயத்ரி மந்திரம்'
'மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என்று கிருஷ்ணர் சொல்வதாகவும் இதை மொழி பெயர்த்துக்கொள்ளலாம். மந்திரங்கள் என்பது புனிதமான ஒலியமைப்பை (அசை) (Syllables) உடையனவாக இருக்கின்றன. இவை ஒரு மேலான தெய்வீக விழிப்புணர்வை நம் உள் உலகில் ஏற்படுத்துகின்றன.
ஸம்ஸ்க்ருத மந்திரத்தின் அதிர்வலைகள் நம்முடைய உடல் - மன அமைப்பைச் சுத்தம் செய்து, நம்மை உயர்ந்த சக்தி தளத்தின் அலைவரிசைக்கு உயர்த்தும். “காயத்ரியே மந்திரங்களில் மிகச் சிறந்தது,” என்று இங்கே கிருஷ்ணர் சொல்கிறார். வேத காலம் முதற்கொண்டு இன்றுவரை அதன் புகழ் பரவியிருப்பதே இதற்குச் சான்று. ஞானிகளால் நடத்தப்படும் குருகுலங்களில் (வேத காலக் கல்விமுறைப்படி கல்வி கற்றுத்தரப்படும் பள்ளிகள்) ஒரு குழந்தை நுழைந்தவுடன், இதுவே முதல் மந்திரமாகக் கற்றுத் தரப்படுகிறது.
காயத்ரி என்ற வார்த்தைக்கு 'தளையில் இருந்து விடுதலையளிக்கும் பாடல்' என்று பொருள் கொள்ளலாம்.
இறுதியான புத்திசாலித்தனத்தைப் பெறவேண்டி செய்யும் பிரார்த்தனை ஸ்லோகமாக, மந்திரமாக காயத்ரி இருக்கிறது. இந்தப் பிரார்த்தனை சுய விழிப்புணர்வை உருவாக்கும்.
ஓம் பூர் புவ ஸ்வ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோ யோந: ப்ரசோதயாத்
காயத்ரி என்ற நுட்பம்
அளவிட முடியாத
விழிப்புணர்வையும்
புத்திசாலித்தனத்தையும்
நம்முடைய
இருப்புத் தன்மைக்குள்
உருவாக்கக்கூடியது.
அதன் நேரடியான பொருள் :
உடல், மனம், ஆன்ம நிலைகளை
ஆட்சி செய்பவரே, நாங்கள் உங்களை
வணங்குகிறோம், எல்லாவற்றையும் கடந்தது
எதுவோ, அந்த உச்சமான பிரகாசமான
அறிவே, நீங்கள் என்னுடைய உள்
விழிப்புணர்வு நிலையைத் தூண்டுவீர்களாக!
இது, நம்முடைய புத்திசாலித்தனத்தைத் தூண்டும்படி அந்த மஹோன்னதமான புத்திசாலித்தனத்தைப் பிரார்த்தனை செய்யும் ஸ்லோகமாகும்.
காயத்ரி என்பது ஒரு பிரார்த்தனையோ அல்லது மந்திரமோ மட்டும் அல்ல. அது அதைவிட மிக அதிகமானது. இது ஒரு தந்த்ரம். இந்த நுட்பம் அளவிட முடியாத விழிப்புணர்வையும் புத்திசாலித்தனத்தையும் நம்முடைய இருப்புத் தன்மைக்குள் உருவாக்கக்கூடியது.
மந்த்ரா என்றால் உலகின் இன்ப துன்பங்களைக் கடந்து செல்லும் வழியைக் காட்டக்கூடிய ஓசை, ஒலி என்று பொருள். மந்திரங்கள் நம்மை நம்முடைய மையத்திலேயே இருக்க வைக்கும். தந்த்ரம் என்பது அதைவிட அதிகமானது. இது உடனடியாக நம்மை விடுவிக்கும், நம்மை விடுதலை அடையச் செய்யும் ஒரு அமைப்பு முறை.

பொதுவாக நம்முடைய மதம், நம்முடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே நம்மைக் கட்டுப்படுத்தி நம்முள் சில மதிப்பு மிக்க செயல்முறைகளையும் நம்பிக்கைகளையும் நம்முடைய ஸம்ஸ்காரங்களாக விதைத்து பதிய வைக்கிறது.
காயத்ரி என்ற இந்த நுட்பம், நம்முடைய ஸம்ஸ்காரங்களிலிருந்து நம்மை முழுவதுமாக விடுவித்து விடுகிறது.
காயத்ரி, நமக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுப்பதால், நமக்குப்புதிய சிந்தனை முறைகளையும் கொடுக்கிறது. இது ஒருவருக்கு, அவருடைய பாதையைக் காட்டும் ஒளிப்பந்தமாக இருக்கிறது.
வேத காலத்தில், மிகச்சிறிய குழந்தைப் பருவத்திலேயே இந்த மந்த்ரம் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் அவர்கள் ஸம்ஸ்காரத்திலிருந்து விடுதலைபெற முடிந்தது.
ஒரு மனிதர் காட்டில் இருந்து வெளியே செல்ல உங்களிடம் வழி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
உடனே நீங்கள், "நேராக ஒரு மைல் தூரம் சென்றால் ஒரு சிங்கத்தைப் பார்க்கலாம். பிறகு இடது பக்கம் திரும்பி ஒரு மைல் நடந்தால் ஒரு பாம்பைப் பார்க்கலாம். அங்கிருந்து மறுபடி இடதுபுறமாகத் தொடர்ந்தால் ஒரு சிறுத்தையைப் பார்க்கலாம். அந்த இடத்திலிருந்து வலது புறம் திரும்பி நேராக நடந்தால் காட்டை விட்டு வெளியே வரலாம்," என்று விளக்குகிறீர்கள்.
நீங்கள் அவருக்கு இப்படி வழிகாட்டினால், அந்த மனிதர் காட்டை விட்டு வெளியே வர முடியாது. நீங்கள் காட்டிற்குள் வரும்போது, இந்த விலங்குகளை அங்கே பார்த்து இருக்கலாம். ஆனால் இந்த முறை இந்த வழிகாட்டுதலுடன் அவர் காட்டிற்குள் நடந்தால் காட்சிகள் வெவ்வேறாக
> காயத்ரி,
நமக்கு முழுமையான
சுதந்திரத்தைக்
கொடுப்பதால்,
நமக்குப் புதிய சிந்தனை
முறைகளையும்
கொடுக்கிறது.
இருக்கும். அதே மிருகங்கள் அவருக்கு
வழிகாட்ட அங்கு இருக்கப் போவதில்லை.
அவர் பாதையைத் தவறவிட்டுவிடுவார்.
இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள
வேண்டியது என்னவென்றால், நீங்கள்
பயணித்த பாதை, அந்த மனிதருக்குக்
சரியானதாக இல்லாமலும் இருக்கலாம்.
அதனால் இது போன்ற உபயோகமற்ற
தகவல்களைக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்
கையில் ஒரு ஒளியையோ விளக்கையோ
கொடுப்பது சிறந்த வழி. அந்த விளக்குப்
பயன்படுத்தி, அவரே தன்னுடைய வழியைக்
கண்டுபிடித்து காட்டிற்கு வெளியே வந்து
விடுவார்.
இது நமக்குத்
தேவையானதைக்
கொடுக்கக்கூடியது.
அது மட்டுமல்ல
எதையும் விரும்பாத
உள் வெளியையும்
கொடுக்கக்கூடியது.
காயத்ரி மந்திரம் ஏதேனும் உருவக் கடவுளைப் பற்றிய நம்பிக்கையையோ அல்லது வழிபாட்டு முறையைப் பற்றிய நம்பிக்கையையோ ஒருவருக்குக் கொடுப்பதில்லை. தூய்மையான புத்திசாலித்தனத்தை நோக்கி செலுத்தக்கூடிய தூய்மையான நுட்பம் இது.
இந்த மந்திரத்தின் மீது தொடர்ந்து செய்யப்படும் தியானம் அல்லது தொடர்ந்து இந்த மந்திரத்தை விழிப்புணர்வோடு சொல்வது நம்மை இறுதி புத்திசாலித்தனத்திற்கு நேரடியாக அழைத்துப்போகும்.
"நம்முடைய இருப்புத்தன்மையின் புத்திசாலித்தனத்தை விழிப்படையச் செய்யும் சக்தியை தியானம் செய்யலாம். அந்தப் புத்திசாலித்தனமே அதன்மீது மீது தியானம் செய்ய நமக்கு உதவி செய்யட்டும்!" என்று காயத்ரி மந்திரம் சொல்கிறது.
காயத்ரி மந்திரத்தைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். நம்முடைய உள் இருப்புத்தன்மையில் இந்த மந்திரம் அழகான அதிர்வுகளை உருவாக்கும். இந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் மனத்திற்குள் சொல்வதும், இந்த மந்திரத்தை நம்முடைய இருப்புத் தன்மையில் ஆழ்ந்து மூழ்கச் செய்வதும், ஒரு விதையை நம்முடைய இருப்புத்தன்மைக்குள் வைப்பதற்குச் சமம்.
இது நம்முடைய உள் உலகத்திலும் வெளி உலகத்திலும் ஆயிரக்கணக்கான நற்பயன்களைப் பெறும் நிலைக்கு அழைத்துச் செல்லும். இது நமக்குத் தேவையானத்தைக் கொடுக்கக்கூடியது. அது மட்டுமல்ல எதையும் விரும்பாத உள் வெளிலையும் கொடுக்கக்கூடியது!
நன்மை தீமை பாராது, எல்லா இடத்திலும் அவரே இருக்கிறார்
மாதங்களில் அவர் மார்கசீர்ஷா, மார்கழி மாதமாக இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். கிரிகோரியன் நாள்காட்டியின்படி அது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வருகிறது.
இந்தியாவில் இந்த மாதம் மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் மாதமாக இருக்கிறது. ஏனென்றால் இந்த மாதத்தில்தான் உழவர்கள் உணவுதான்யங்களை அறுவடை செய்கிறார்கள். மேலும் இந்த மாதத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. என்னவென்றால் வைகுண்ட ஏகாதசி என்னும் புனிதமான நாள் இந்த மாதத்தில்தான் வருகிறது.
தெய்வக் கணக்குப்படி இந்த மாதம் தேவர்களின் விடியற்காலை நேரமாக, அதாவது ப்ரஹ்ம முகூர்த்தமாக கருதப்படுகிறது; ஒரு நாளின் மிக விசேஷமான பகுதி இது. இந்த நேரம்தான் வழிபாட்டிற்கு சிறந்த நேரமாகப் போற்றப்படுகிறது.
பருவ காலங்களில், அவர் வசந்த காலமாக (இளவேனிற் காலம்) இருப்பதாகச் சொல்கிறார்.
வசந்த காலம் என்பது அதிகக் குளிரும் இல்லாமல், அதிக உஷ்ணமும் இல்லாமல் இனிமையான கால நிலையில், மரங்களெங்கும் புத்தம் புது இலைகள் நிறைந்திருக்க, இயற்கை அவளுடைய படைப்பின் உச்சத்தில் இருக்கும் நேரம். வசந்தகாலம் என்பது வாழ்க்கைச் சக்கரத்தின் தொடக்கத்தையும், வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியையும் குறிக்கிறது.
வசந்தகாலம் என்பது
வாழ்க்கை சக்கரத்தின்
தொடக்கத்தையும்,
வாழ்வின்
முக்கியத்துவம் வாய்ந்த
வளர்ச்சியையும்
குறிக்கிறது.
"தீயவொழுக்கங்களில் நான்
சூதாட்டமாக இருக்கிறேன்," என்று
கிருஷ்ணர் அறிவிக்கிறார். அவர்,
தீயவொழுக்கங்களில்கூட தாம் இருப்பதாகச்
சொல்கிறார்!
கடவுள் நேர்மையற்ற செயல்களில் இருக்க மாட்டார் என்று ஒருவர் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. தெய்வத்தன்மை எல்லா இடங்களிலும் இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இதிலிருந்து, கிருஷ்ணர் நமக்குக் குறிப்பிட்டுக் காட்டும் உண்மையை நாம் உணர வேண்டும். யுதிஷ்டிரருடைய சூதாட்ட ஆசைதான் மிகப்பெரிய போருக்குக் காரணமானது. மிகச் சிறந்த நீதிமான் என்றும், நேர்மையாளன் என்றும் அறியப்பட்ட பாண்டவ இளவரசர் யுதிஷ்டிரருடைய தவறான ஆசையானது அவரைக் கீழேகொண்டு வந்தது.
"ஒளிவிடும் பொருட்களில் ஒளிரும் தன்மையாக இருக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
வெற்றிபெறத் தேவைப்படும் முயற்சியாகவும், வெற்றிபெறுபவர்களின் வெற்றியாகவும் தாமே இருப்பதாக அவர் அறிவிக்கிறார். இயல்பான குணங்களில், நன்மையாக, ஸத்வ குணமாக இருக்கிறார்.
கிருஷ்ணருடைய தந்தை வஸுதேவர் விருஷ்ணி எனப்படும் யாதவ வம்சத்தை சேர்ந்தவர். அந்த விருஷ்ணிகளிடையே தாம் வஸுதேவ கிருஷ்ணராக இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
பாண்டவர்களுக்கு இடையே சிறந்த வில்லாளியான அர்ஜுனனாக இருப்பதாகச் சொல்கிறார்.
அவர் ஸாதுக்களில், பகவத்கீதையை உள்ளடக்கிய மஹாபாரதம் என்ற சிறந்த காவியத்தை எழுதிய வியாஸராக இருப்பதாகச் சொல்கிறார். உலகிற்கு வேதங்களைத் தொகுத்துக் கொடுத்தமையால் இவர் வேத வியாஸர் என்றே குறிப்பிடப்படுகிறார்.
வெற்றிபெறத் தேவைப்படும்
முயற்சியாகவும்,
வெற்றிபெறுபவர்களின்
வெற்றியாகவும்
கிருஷ்ணரே இருக்கிறார்.
இவர், ஒன்றாக இருந்த வேதத்தை நான்கு
பிரிவுகளாகப் பிரித்துக் கொடுத்ததால்தான்
சாதாரண மனிதர்களும் வேதத்தின் அறிவைப்
புரிந்துகொள்ள முடிகிறது.
சிந்தனையாளர்களில் உசானாவாக இருப்பதாகச் சொல்கிறார். உசானா, எதிர்மறை மனப்பாங்கு கொண்டவர்களான அஸுரர்களின் குருவான சுக்ராசாரியார் என்றும் அறியப்படுவார். “நான் செங்கோலாக இருக்கிறேன்,” என்று கிருஷ்ணர் சொல்கிறார். அதாவது கிருஷ்ணர் ஒரு குருவாக யோக தண்டத்தை, தெய்வீக ஞானத்திற்கான கோலை வைத்திருக்கிறார். ஒரு ஆட்சியாளர் என்பவர் தம்முடைய நாட்டுக் குடிமக்களுக்குப் புகலிடம் தருபவர் மட்டுமல்ல, அவர்களுக்கு நல்ல சட்டங்களை வகுத்துக் கொடுப்பவராகவும், ஒரு ஒழுக்கச் சீலராகவும் இருக்கிறார். அப்படிப்பட்டவரே ஒரு சரியான குரு.
குருவின் தண்டனை என்பது கருணைதான்
கேள்வி : நீங்கள் ஞானியைப் பற்றியும் ஜென் குச்சியைப் (stick) பற்றியும் பேசினீர்கள். குரு கருணையின் அவதாரமாக இருக்கும்போது, ஜென் குச்சி ஏன் தேவைப்படுகிறது?
குருவின்கருணையே யோகதண்டமாக, ஜென் குச்சி அல்லது ஆன்மீக அறுவை சிகிச்சை செய்யும் கத்தியாகச் சொல்லப்படுகிறது. சீடருடைய அஹங்காரத்தைக் கரைப்பதிலேயே குரு ஆர்வம்மாக இருக்கிறார்.
குரு என்பவர் சீடரை அறியாமையிலிருந்து
ஞானத்தை நோக்கி அழைத்துச்
செல்லும்போது, சீடருடைய அஹங்காரத்தை
அழிக்க இரக்கமற்ற முறையில் தான்
செயல்பட வேண்டி இருக்கிறது.
> குருவின் கருணையே
> யோக தண்டமாக,
> ஜென் குச்சி அல்லது
> ஆன்மீக அறுவை
> சிகிச்சை
> செய்யும் கத்தியாகச்
> சொல்லப்படுகிறது.
அஹங்காரம் என்பது இருள், அதுவே எல்லா இருளுக்கும் காரணமாக இருக்கிறது. குரு என்பவர், அஹங்காரத்தை அகற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.
ஒரு சீடராக என்னிடம் வருபவர் இந்த அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருக்க வேண்டும். அவர் இந்த நடைமுறையின்போது நடுவில் ஓடிப்போக முடியாது.
ஒருவர், குருவின் உருவத்தைத் தூரத்தில் இருந்தே உற்றுப் பார்த்துவிட்டு, தம்முடைய சொந்த அறியாமை என்கிற படிவத்திற்கேற்ப அவரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறைப்படுத்தலாம். அப்படிப்பட்டவர் ஒருவர் வெறும் ஒரு பக்தராக மட்டுமே இருக்க முடியும். அது போன்ற மனிதர்கள் குருவின்படத்தைச் சுவற்றில் ஆணி அடித்து மாட்டி விடுவார்கள். அவர்கள், குருவின்வார்த்தைகளைப் பயிற்சி செய்வதற்குப் பதிலாக, வெறும் வழிபாடு மட்டுமே செய்வதன்மூலம் குருவைக் கொன்று விடுகிறார்கள்.
எந்த மனிதர்கள் என்னைப் பார்க்க மட்டும் வருகிறார்களோ அவர்களுக்கு நான் அறிவென்ற மிட்டாயை மட்டும் கொடுத்து விடுகிறேன். ஏனென்றால் அவர்கள் அதை வாங்க மட்டுமே இங்கே வருகிறார்கள்.
நீங்கள் உண்மையான தேடுதல் உள்ளவராக இருந்தீர்களானால், எரிந்து போகவும், அறுவை சிகிச்சைக்கும், யோக தண்டத்துக்கு இலக்காகவும் தயாராக இருப்பீர்கள். அதுவே ஜீவன் முக்திக்கான பாதை.
> ஒரு ஞானியின்
> இருப்புத்தன்மை
> என்ன சொன்னாலும்,
> அது உண்மையான
> வார்த்தை, ஸத்யம்,
> அது நடந்தே தீரும்.
"உங்களை விட்டுப் போனால் எங்களைச்
சபித்து விடுவீர்களா?" என்று மக்கள்
என்னிடம் கேட்பதுண்டு.
தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஒரு ஞானியின் இருப்புத்தன்மை யாரையும் சபிப்பதற்குச் சக்தியற்றதாகவே இருக்கிறது.
மற்றவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்று அவரால் நினைக்க முடியாது.
ஒரு ஞானியின் இருப்புத்தன்மை என்ன சொன்னாலும், அது உண்மையான வார்த்தை, ஸத்யம், அது நடந்தே தீரும்.
ஆனால் அது கருணையாக மட்டுமே இருக்க முடியும். ஏனென்றால் ஞானியின் இருப்புத் தன்மையானது கட்டுப்பாடு அற்றது. அவர் பிரபஞ்சத்துடன் ஒன்றானவர். நீங்கள் அவரின் ஒரு பாகம். தம்மைத்தாமே ஒருவர் இப்படிக் கஷ்டப்படுத்திக்கொள்ள முடியும்? எனக்கு நானே எப்படிக் கெடுதலை நினைக்க முடியும்?
ஒரு முக்கியமான விஷயத்தைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். அப்படி ஒரு குரு உங்களைச் சாபமிடுவதாக மிரட்டினால் அவர் குருவே கிடையாது. அவர் ஞானமடையாதவர்.
ஒரு குருவின் தண்டனை என்பது கருணைதான். அது ஆன்மாவிலிருந்து

எழும் அன்பாக மட்டுமே இருக்கும்.
அது கடினமான அன்பாக இருக்கலாம்.
ஆனால் அது எல்லையற்ற
நிபந்தனையற்ற அன்பு.
நீங்கள் குருவுக்கு என்ன கொடுக்க
முடியும்? அவருக்கு உங்களிடமிருந்து
என்ன தேவை இருக்கிறது?
என் ஆன்மா ஒரு கட்டுறுதி இல்லாத நிலையில்தான் உடலுடன் இணைந்துள்ளது. இது பிரிந்து சென்றால் திரும்பாது. அதனால்தான் நான் த்யானங்களுக்கு எதிரான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறேன்.
இராமகிருஷ்ணர் இனிப்புகளை, குறிப்பாக ஜிலேபியை விரும்பிச் சாப்பிடுவார். அதன் காரணத்தை அறியாத மனிதர்கள் அவரைப் பார்த்துச் சிரிப்பார்கள். "மற்றவர்களால் கடவுளாகப் பார்க்கப்படும் ஒரு மனிதருக்கு இப்படிப்பட்ட பலவீனம் எப்படி இருக்க முடியும்?" என்று அவர்கள் கேட்பார்கள். அந்தப் பலவீனம்கூட அவருடைய கருணையால் வெளிப்பட்டதுதான். அப்போதுதான் அவர் அந்த உடலில் தங்கி நம்மையெல்லாம் கரை சேர்க்க முடியும்.
தினமும் காலையில் என்னை மீண்டும் இந்த உடலுக்குள் அழைத்துவரும் சக்தி எது என்று என்னுடைய சீடர்கள் என்னைக் கேட்பதுண்டு.
அதற்கு நான், "என்னுடைய தேவையை ஆழமாக விரும்புபவர்களின் முகங்கள்தான் என்னை எழ வைக்கிறது. எவ்வளவு நாள் அந்தத் தேவை உள்ளதோ அதுவரை இந்த ஆன்மா திரும்பி வரும்," என்று சொல்வேன்.
also, அதனால்தான், குருமார்களில் சிறந்தவரான கிருஷ்ணர் சொல்கிறார், "நல்லவற்றைக் காப்பாற்றவும், தீமைகளை அழிக்கவும் நான் மீண்டும் மீண்டும் வருவேன்."
அவர் தீயவற்றை அழிக்க வேண்டிய தேவையே இல்லை. அவருடைய சக்தியின் முன் தீயவை தாமாகவே காணாமல் போய்விடும்.


பெருமைகளுக்கு முடிவே இல்லை
10.39 ஓ அர்ஜூனா! அதுமட்டுமல்ல, இருக்கும் எல்லா ஜீவன்களுக்கும்
நானே விதையாக இருக்கிறேன். அசையும் மற்றும் அசையாப்
படைப்புக்கள் அனைத்தும் நான் இன்றி நிலைத்திருப்பதில்லை.
10.40 ஓ பரந்தப! என்னுடைய தெய்வீக மஹிமைகளுக்கு ஒரு
முடிவே கிடையாது. என்னால் சொல்லப்பட்ட எல்லாமே,
என்னுடைய எல்லையில்லா மஹிமைகளின் எடுத்துக்காட்டுகள்
மட்டும்தான்.
10.41 என்னவெல்லாம் பெருமையாக வெளிப்படுகிறதோ,
அல்லது அழகாக, ஒளி மிகுந்ததாக வெளிப்படுகிறதோ
அவையனைத்தும் என் பேரழகின் ஒரு பகுதிதான் என்பதை நீ
உறுதியாக அறிந்துகொள்வாயாக.
10.42 ஓ அர்ஜூனா, பல வகையான தோற்றங்களை அறிந்து
கொள்வதால் என்ன பயன்? என்னுடைய ஒரே ஒரு
அம்சத்தினாலேயே, நான் இந்த உலகம் முழுவதிலும் ஊடுருவி
பரவி இருக்கிறேன்.
ஒவ்வொருவரும் தெய்வீகத்தின் பிரதிநிதிகள்
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், "நான் உனக்குப் போதுமான அளவிற்குச் சொல்லிவிட்டேன். இனி நீ கேட்பதற்கு எதுவும் இல்லை. நான் என்னவெல்லாம் சொன்னேனோ, இன்னும் என்னவெல்லாம் என்னால் சொல்ல முடியுமோ, அது கடலின் ஒரு துளியைப்போல, அது என்னில் ஒரு சிறு பகுதி மட்டும்தான். நானில்லாமல் எதுவும் இல்லை. என்னை விட்டு எதுவும் வெளியில் இருக்க முடியாது. என்னால் அல்லாமல், என்னிடம் இருந்து அல்லாமல் எதையும் உருவாக்க முடியாது," என்று சொல்கிறார்.
கிருஷ்ணருடைய வடிவமற்ற வடிவத்தைப் பார்ப்பதற்காக, அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் ஓர் அஸ்திவாரத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்.
அர்ஜுனன் இப்போது முழு சரணாகதியிலும் ஆழமான நன்றியுணர்விலும் நிறைந்து இருக்கிறார்.
நாமும் இப்போது முழு நன்றியுணர்விலும் முழுமையான சரணாகதியிலும் இருந்து கிருஷ்ணருடைய அந்த வார்த்தைகளை அனுபவமாகப் பெறுவோம்.
கண்களை மூடி கிருஷ்ணருடைய தெய்வீக மகிமைகளைத் தியானியுங்கள்.
உங்களுடைய வாழ்க்கை எந்த வகையில் மேம்பட்டிருந்தாலும், அதற்காக ஆழமான நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.

உங்களுக்குக் கிடைத்திருக்கும் உடல்
நலம், செல்வம், கல்வி எல்லாம் யாரால்
கிடைத்திருக்கிறதோ, அவர்களை ஆழமான
நன்றியுணர்வோடு நினைத்துப் பாருங்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் கடவுளின்
வெளிப்பாடுகளே!
ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக
உங்கள் வாழ்க்கையில் இருக்கிறார்கள்
என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கை மலர உதவிய
எல்லோரையும் நினைவுக்குக் கொண்டு
வாருங்கள். அனைவரையும் அன்போடும்
நன்றியோடும் மரியாதையோடும்
நினைவுப்படுத்திப் பாருங்கள்.
உங்களுக்கு உடல் கொடுத்த அன்னையை நினைவில் கொண்டுவாருங்கள். அவரும் தெய்வீகத்தின், பரப்ரம்ம கிருஷ்ணரின் ஒரு பகுதிதான். அவருக்கு உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.
உங்களுக்கு உயிர் கொடுத்த தந்தையை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அவரையும் நினைத்து உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.
உங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவரையும் நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அவர்களும் தெய்வீகத்தின் ஒரு பகுதியே!
உங்கள் வாழ்க்கைக்கு உங்கள் இருப்புத்தன்மைக்கு யாரெல்லாம் தங்கள் பங்களிப்பைக் கொடுத்தார்களோ அவர்கள் அனைவரையும் ஆழமான நன்றியுணர்வோடு நினைத்துப் பாருங்கள்.
யாரெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பைக் கொடுத்தார்களோ, அவர்களை நன்றியோடு நினைத்துப் பாருங்கள். அவர்களோடு ஆழமாகத் தொடர்புகொள்ளுங்கள்.
நீங்கள் மனச்சோர்வில் இருக்கும்போது யாரெல்லாம் மன உறுதியையும் வாழ்வைப் பற்றிய புரிதலையும் உங்களுக்குக் கொடுத்தார்களோ, நீங்கள் மனவுறுதியற்று இருந்தபோது யாரெல்லாம் உங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்தார்களோ அவர்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டுவாருங்கள்.
அவர்களும் தெய்வீகத்தின் ஒரு பகுதிதான்; அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதிதான். அவர்கள் அனைவரையும் நினைவுக்குகொண்டு வந்து நன்றி செலுத்துங்கள்.
யாரெல்லாம் நீங்கள் ஆன்மீகத்தில் வளர உதவி செய்தார்களோ, யாரெல்லாம் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஒரு புரிதல் நடக்க உதவி செய்தார்களோ, அவர்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். உங்கள் நன்றியைச் செலுத்துங்கள்.
அவர்கள் தெய்வீகத்தின் பிரதிநிதிகள்.
உங்கள் வாழ்க்கையில் ஆன்மீக
புரிதலைக் கொடுத்து, சிலவற்றை
உங்கள் வாழ்க்கையில் சேர்த்ததற்காக
அவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்.
யாரெல்லாம் இந்தப் பூவுலக செல்வத்தைப் பற்றிய, பொருள் சார்ந்த உலகைப் பற்றிய, ஆன்மீகத்தைப் பற்றிய புரிதலைக் கொடுத்தார்களோ அவர்கள் எல்லோரையும் நினைத்து உங்கள் நன்றியைச் சொல்லுங்கள்.
இறுதியாக, நம்முடைய வாழ்க்கைக்கு யார் இந்த அறிவையும் புரிதலையும் கொடுத்தாரோ, அந்தத் தெய்வீக சக்திக்கு, பரப்ரம்ம கிருஷ்ணருக்கு உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.
நீங்கள் அப்படியே உங்களைக் கீழே போட்டுவிட்டு, அந்தப் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றாகுங்கள். இந்த முழுப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக, எது சூரிய சந்திரனையும் பூமியையும் இயக்கிக்கொண்டிருக்கிறதோ அந்த சக்தியின் ஒரு பகுதியாக மாறி விடுங்கள்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
மெதுவாகக் கண்களைத் திறக்கலாம். அடுத்த சில மணி நேரத்திற்கு இதே உணர்விலேயே இருங்கள். உங்களை விட்டு விடுங்கள். இந்த அனுபவம் உங்கள் இருப்புத்தன்மைக்குள் அதிசயங்களை நிகழ்த்துவதைப் பார்ப்பீர்கள். இது, உங்களை மாற்றும் சக்தியுடையது.
உங்களை மறந்து விடுங்கள். உங்களை விட்டுவிட்டு, அந்தத் தெய்வீகமாகவே இருங்கள், பிரபஞ்ச சக்தியையும் மட்டும் இருக்க விடுங்கள்.
அவரை மட்டும் இருக்க விடுங்கள், தெய்வீகத்தை மட்டும் இருக்க விடுங்கள். இந்த சரணாகதி உணர்வால், உங்களுடைய முழு விழிப்புணர்வையும் மாற்றமுடியும். ‘அவருடைய பெருமைகள், - அவருடைய விபூதி - அவருடைய தெய்வீகப் பேரொளி, உங்களுக்குள் இறுதியான ஸத்யத்தை அனுபூதியாக மலர வைக்கும் என்று கிருஷ்ணர் இங்கே அழகாகச் சொல்கிறார்.
நீங்கள் ஆனந்தத்தில் நிறைந்திருக்கும்போது, நீங்கள் எதை எல்லாம் பார்க்கிறீர்களோ, அவை எல்லாமே தெய்வீகமாகவும் உன்னதமாகவும் தெரியும்.
நீங்கள் எல்லோரும் அந்த ஆனந்த அனுபவத்தை அடையுங்கள்.
அந்த நித்யானந்தத்தை அளிக்கவும் நம்மை வழிநடத்திச் செல்லவும் பிரபஞ்ச சக்தியான பரப்ரம்ம கிருஷ்ணரிடம் பிரார்த்திப்போம்.
நன்றி!
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு
ப்ரம்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு 'ஷ்ணார்ஜுநஸம்வாதே
விபூதியோகோ நாம தச'மோऽத்யாய: ||
இது ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ‘விபூதி யோகம்’ எனப் பெயர் படைத்த பத்தாவது அத்தியாயம்.
