KAILASA Library/பகவத் கீதை/முன்னுரைSign in
பகவத் கீதை

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் பகவத்கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துக்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

பரமஹம்ஸ நித்யானந்தர் அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் சத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.