KAILASA Library/பகவத்கீதை/பொருளடக்கம்Sign in
பகவத்கீதை

பொருளடக்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

I. ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை 12

II. பகவத்கீதை ஒரு பின்னணி 14

III. முன்னுரை 24

IV. உங்கள் தடுமாற்றங்களுக்கான தீர்வு

1. வினாக்களின் வாசலில் 28

2. தடுமாற்றங்களுக்குத் தீர்வு காணலாம் 31

❖ இலக்கிய உலகின் மூன்று கலங்கரை விளக்கங்கள் 34

❖ வாழ்விற்கு நம்பிக்கையூட்டும் அஸ்திவாரம் - சாஸ்திரங்கள் 36

❖ தர்க்கத்தின் உச்சியைத் தொடுவதே உன்னத நுட்பம் 37

❖ கடவுளோடு உறவாட உதவும் ஸ்தோத்திரம் 42

❖ கீதை கடவுளால் நேரடியாகக் கொடுக்கப்பட்டது 44

❖ மனிதர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்துபவரே ஜகத்குரு 46

❖ கிருஷ்ணர் எல்லாவித மக்களையும் ஞானமடையச் செய்பவர் 48

❖ கிருஷ்ணரின் வாழ்வே ஒரு தியானம்! 55

❖ எல்லோரையும் கரைசேர்க்கும் கிருஷ்ண சக்தி 58

  • 'பகவத்கீதை' எல்லோருக்குமான ஞானமடையும் வழி 60
  • அர்ஜுனனின் தடுமாற்றமே மனித குலத்தின் தடுமாற்றம் 61
  • குற்ற உணர்ச்சி, நம்மைக் கடவுளிடமிருந்தே பிரித்துவிடும் 64
  • பிறப்பின் ரகசியத்தை நாமும் அறியலாம் 67
  • 18 நாள் மஹாபாரதப் போரும் நம்முடைய மனப்போரும்... 70
  • மனச்சோர்வின் அறிவியல் 72
  • சுயத்தைக் குணமாக்கும் எண்ணங்கள் 73
  • சிரத்தை இருக்கும் இடத்தில் மனப்போராட்டம் இருக்காது 76
  • நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நபர்கள் 80
  • பிரபஞ்சத்தின் விஸ்வரூபம் ஞான ஸத்குரு 85
  • கட்டுறு மனப்பாங்கை வெல்லுவதே நம் முதல் வெற்றி 90
  • உங்களையும் மீறி உங்களை வளர்ப்பவரின் குணத்தையே உள்வாங்குவீர்கள் 92
  • அனுபவமாகாத ஆன்மீக அறிவே, ஞானத்திற்கான இரண்டாவது தடை 94
  • மீண்டும் ஒருமுறை கீதையின் சாரத்தைச் சொல்கிறேன் 95
  • அர்ஜுன விஷாத யோகம், தமஸின் வெளிப்பாடு 97
  • உதவி செய்ததினால் கட்டுப்படுவது நம் வளர்ச்சியையே கட்டுப்படுத்திவிடும் 98
  • தர்மமே என்றாலும் ஞானத்திற்குத் தடையானால், அது அதர்மமே! 99
  • நம்மிடமிருந்து பிரிக்க முடியாதது 100
  • ஞானிகள் எதைச் செய்தாலும் அது நீங்கள் ஞானமடைவதற்கே! 101

3. பூமியைப் புனிதமாக்கிய ஓர் போர்க்களம் 112

❖ இங்கிருந்துதான் தொடங்குகிறது 114
❖ யுத்தம் நின்றுவிடும் 116
❖ உங்களின் விதி உங்களால் பார்க்கக்கூடியதே! 118
❖ உங்களை உயர்த்திடும் ஒரே யுக்தி 120

4. அஹங்காரத்திற்குத் தேவை ஆதரவே! 137

❖ ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கதாபாத்திரங்கள் 138
❖ இறை நிலைக்கே உயர்த்திவிடும் தெய்விக குணம் 142
❖ உங்களின் மாற்றம், உலகையே உயர்த்திடும்! 145
❖ உங்களை இறைசக்தியே அணைத்துக்கொள்ளும்! 146

5. முடிவிற்கான தொடக்கம் 161

❖ மாயையின் அழிவிற்குத் தெய்விக முழக்கம் 162
❖ தெய்வம் இருக்கிறது! 164
❖ எவராலும் வெல்ல முடியாதவர்கள் 166

6. அர்ஜுனனது தயக்கம் 177

❖ மாயை எனும் கோட்டையைத் தகர்த்திடும் பதிலொலி 178

❖ ஸம்ஸ்காரங்களையே அழித்திடும் சக்திவாய்ந்த அஸ்திரம் 179

❖ யுத்தத்திற்கான ஆயத்தம்! 180

❖ தர்ம யுத்தத்திற்குத் தொடர்ந்து உதவும் இறைசக்தி 182

❖ மனித குலத்தின் மொத்த நாயகர் 184

7. புத்திசாலித்தனமான கேள்விகள் 201

❖ விதியையே வெல்லும் நாயகனாக்கிவிடும் உங்களின் சரணாகதி 202

❖ உங்களுக்குத் தேவையென்பதால் எழுகிறது 204

❖ உங்கள் சொந்த வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவீர்கள் 205

❖ ஸம்ஸ்காரத்தை அழித்திடும் ஒரே சக்தி 208

❖ சரணாகதி அடைவதைப் பொறுத்ததே உங்களின் வெற்றி! 209

8. குழப்பத்திற்கான தீர்வு 219

❖ குழப்பத்திலிருந்து விடுதலை அளித்திடும் கீதை 220

❖ குடும்பமும், குழப்பமும் 221

❖ கருணை நிறைந்தவருக்கு இவ்வுலகமே அவருடைய அங்கம் 222

❖ உங்கள் தர்க்கம்தான் உங்களை பயமுறுத்தும் கயவன் 224

❖ 'உரிமைப் பாராட்டுதல்' - வன்முறைக்கு வழிவகுக்கும்
தவறான உணர்வு 226

❖ நமக்குப் பிடித்திருப்பதே நம்மைப் பிடித்திருக்கிறது 227

❖ தெளிவான குழப்பமே தெளிவைத் தரும் 229

❖ மொத்த மனித சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட சத்தியம் 231

9. கட்டுறு மனப்பாங்கின் கட்டுப்பாடுகள் 241

❖ சந்தேகத்தில் தெளிவிருந்தால் தீர்வு நிச்சயம் 242

❖ முதல் லக்ஷியம் நம் லக்ஷியத்தைக் கண்டுபிடிப்பதே 243

❖ துணிச்சலின் உச்சமே துறவறம் 245

❖ குழப்பத்திற்கான தீர்வு, நம் குருவைக் கண்டுபிடிப்பதே 246

❖ மனம் போடும் நாடகத்திலிருந்து தப்பி விடுங்கள் 248

❖ தம் மனத்தையே ஏமாற்றத் தெரிந்தவரை யாராலும் ஏமாற்ற முடியாது 250

❖ இறைவன் பேசுவது கேட்கும்... மனத்தை நிறுத்தினால்! 253

10. வாழ்வில் குழப்பமில்லை, செயலின் பலனை எதிர்பார்க்காதவரை! 263

❖ அறியாமை விலகிட, வன்முறையும் விலகிடும் 266

❖ இணைந்து வாழ்வதே உங்களின் உண்மை சுபாவம் 267

❖ தெளிவு மலரும்வரை குழப்பத்தின் வாதங்கள் ஓயாது 270

11. அதிசய முடிச்சுகள் | 279

❖ தீர்வுகள் அன்றே வழங்கப்பட்டுவிட்டன | 280
❖ பிரிவினைகள் பிறப்பால் அல்ல; குணத்தின் பிரிவால் வருவது | 282
❖ உங்களின் உள்ளுலகம் விழித்தெழுவதற்கான நுட்பம் | 284
❖ நம்முள்ளிருக்கும் தெய்வீகத்தை உணராதிருப்பதே
நாம் செய்யும் ஒரே பாவம் | 286

12. எது நன்மை | 299

❖ மனித வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் உண்மையான உதாரணம் | 300
❖ மாயை விரிக்கும் வலையிலிருந்து நம்மைக் காப்பாற்ற வந்தவர் | 302
❖ எங்கே தேடுகிறீர்கள்? | 304
5, இழந்த ஆனந்தத்தை மீட்டுத் தருபவர் | 306

V. பிற்சேர்க்கை

❖ பகவத்‌கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி 314

❖ கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள் 316

❖ குரு வம்சம் 318

❖ பகவத்‌கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள் 319

❖ அருஞ்சொற்பொருள் 321

❖ ஸ்லோகங்கள் 334

❖ ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் 352

❖ தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு 353

ஸம்ஸ்க்ருʼத உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ருʼதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால்
அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி
விடுகிறோம்.

ஆனால் ஸம்ஸ்க்ருʼத மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம்
சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில்
இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ருʼத உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப்
படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ருʼதத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துக்களும் நான்குவிதமான
உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும்
என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில
எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை எழுத்து1234
ககடவுள் (ka)அக்கா (kka)கங்கை (ga)கடம் (gha)
சசரம் (cha)சச்சரவு (chcha)ஜாடி (ja)மஜ்ஜை (jha)
டபட்டம் (ta)பட்டம் (tta)படம் (da)டம்டம் (dha)
ததங்கை (tha)தாத்தா (ththa)தானம் (da)தர்மம் (dha)
பபசு (pa)அப்பா (pha)பம்பரம் (ba)பந்தம் (bha)
சʼசʼரணாகதி

ஸம்ஸ்க்ருʼத வார்த்தைகளில் வரும் எழுத்து சாதாரணமாக
அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ருʼதத்தின் முதல் வகை
எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால்,
அதை ஸம்ஸ்க்ருʼதத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக
இருந்தால், அதை ஸம்ஸ்க்ருʼதத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும்,
தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை
ஸம்ஸ்க்ருʼதத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ருதத்தில் மூன்று வகை 'ஸ' க்கள் உண்டு.

1. ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து
தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது
'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே
உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ்
எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது.
ச'ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில் ச' மேல்
மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள்
அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும்
எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில்
வரும் ssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த
எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு' வைப்போல
உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ருதத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா'
என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும்
இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் S என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ'
என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத்
தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால்
ஸம்ஸ்க்ருதத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.

அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில்
எல்லாம்கூட, ஸம்ஸ்க்ருதத்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட
வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா
என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின்
வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே
பயன்படுத்தப்பட்டுள்ளது.

பகவத்கீதை ஒரு பின்னணி

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

நமது உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று
பகவத்கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத்கீதையிலும்
அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது.
இதை ஸம்ஸ்க்ருதத்தில் ச்'ருதி (Sruti) என்பார்கள். ச்'ருதி என்றால் 'காதால்
கேட்பது' என்று பொருள்.

பகவத்கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால்
ஸம்ஸ்க்ருதத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபநிஷதங்களும்
தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளோகவே இருக்கின்றன.
ஆனால் கீதை, ஹிந்து மத இதிஹாஸ கதையான மஹாபாரதத்தின் ஒரு
பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு
பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ
ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான
ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான ச்'ருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும்
உபநிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச்
சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில்
இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு
பழமையானது. ஸத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில்
வெளிப்பட்ட முதன்மையான ஸத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
பிரபஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப்

போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட
உபநிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான
வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின்
ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி
வெளிப்பட்டதோ அப்படியே, தெய்வகத்தின் நேரடி வெளிப்பாடாகவே
விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த
இதிஹாஸமோ அல்லது இதிஹாஸத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை.
கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக்
கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின்
விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது
எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின்

கதைச் சுருக்கம்

India Map with flag

‘மஹாபாரதம்’ என்றால் மிகச்சிறந்த பாரதம்
என்று பொருள். தற்பொழுது ‘இந்தியா’
என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத
நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த
மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம்
விவரிக்கிறது. _பரதன்_ என்கிற மன்னராலும் அவரது
வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம்
_பாரதம்_. இந்த இதிஹாஸம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு
நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை
சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக்
கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு.
அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள்.
தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல்,
ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.

திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு,
அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால்
இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக்
குழந்தை இல்லை.

பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும்
தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரரிடம்
ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,

குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம்
பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மந்த்ரத்தை உச்சரித்து
எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சக்தியின் அருளால்
குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச்
சோதித்துப் பார்க்க விரும்பினார் குந்தி. சூரிய தேவனை
வேண்டி, அந்த மந்த்ரத்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து
பார்த்தபொழுது சூரிய தேவன் தோன்றினார். அவருடைய
அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கர்ணன். ஆனால் சமுதாயக்
குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு
பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார்
குந்தி.

திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின்
அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப்
பிறந்தார்கள். அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது
மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸஹதேவனும்
பிறந்தார்கள்.

யுதிஷ்டிரர், தர்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின்
ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால்
பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும்
பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும்
ஸஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள்
(கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர்
துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான
பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.

தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை
முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை.
நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத்
தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின்
வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.

பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான
யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை
அடைந்ததும் திருதராஷ்டிரர் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார்.
யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான
பீமன், அர்ஜுனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.

அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில்
வென்று மணம் புரிந்தார். (ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத்
திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே
நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம்
செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது,
தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, “அம்மா
நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்” என்று
சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், “நீ எந்தப்
பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப்
பங்கிட்டுக்கொள்ளுங்கள்,” என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று
பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப்
பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள்
நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை
ஆண்டு வந்தார்கள்.

அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க
வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத்
தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி
என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச்
சூதாட்டத்தில் இழந்தார்.

துரியோதனனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும்
திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு
துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு
களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார்.
அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல்
மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

பதinterface
பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள்
இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில்
யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய்
வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார்.
இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத
யுத்தம்'.

இப்பொழுது 'இந்தியா' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின்
அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ
அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவருடன் சேர
ஒப்புக் கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல்
'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த்
தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம்
இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம்," என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய
ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம்
சேர்த்துக் கொண்டார்.

அர்ஜுனன் மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும்
அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப்
பெற்றுக் கொண்டார்.

இரு சேனைகளும் குருக்ஷேத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில் கூquot;
இரு சேனைகளும் குருக்ஷேத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில் கூடியது.
குருக்ஷேத்ரம், இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது.
அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு
முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில்
இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும்
ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன
உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச்
செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத்கீதை.

கிருஷ்ணர், "நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு.எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.

ஸம்ஸ்க்ருதத்தில் அதை ‘நர-நாராயண’ உரையாடல் என்று சொல்வார்கள்.
அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர்
மனத்திலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன.
கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு ஸத்யத்தை
ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான
ஸத்யமாக உள்ளது.

பகவத்கீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம்!

வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் மஹாபாரதத்தின் உருவகமான
உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. ஸம்ஸ்காரங்கள்
எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை
எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை ‘பாண்டவர்கள்’ என்று சொல்லலாம்; எதிர்மறை
எண்ணங்களை ‘கெளரவ இளவரசர்கள்’ என்று சொல்லலாம்.

குருக்ஷேத்ரப்போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித
உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில்
சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை
நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.
பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர்,
குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும்
கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர்,
நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள்
உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.
கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம்,
இரக்கம் போன்ற நமது ‘நல்ல செய்கை’களால் நமக்குள் ஏற்படும்
கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும்
துரியோதனன், நமது ‘தனிமனித அஹங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.’

நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும்
சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக்
கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் ஞானப் பாதையைத்
தேர்ந்தெடுப்பவர்கள் ஸந்யாஸிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது
வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம்
உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால்
நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம்
குறைந்து விடும்.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து
அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது.
அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள்
நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை
வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக
உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஞானமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார்.
அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர்
ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை
விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின்
பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள
வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல
செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர்
வழி காட்டுகிறார்.

ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும்
நிலையான சேவை என்பதையும் ஜ்ஞானகுரு தெள்ளத் தெளிவாகக் உணரச்
செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும்
கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம்.
இங்கேதான் ஜ்ஞான ஸத்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது.
இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞான ஸத்குருவின் உதவியும் இங்கு
வெளிப்படையாகத் தெரிவதில்லை.

அதனால் சில சமயங்களில் நம் அஹங்காரம், நாம் ஜ்ஞான ஸத்குருவிடம்
கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர்.இதில்,
நூற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை
ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள் என்பது
நமது நேர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன்
எதிர்மறை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும்
இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு
நீடித்தது.

பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம்வாய்ந்தது.
அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித
எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது. அவற்றுள் ஞானேந்திரியங்கள்
என்பவை புலனுணர்வுகளான சுவைத்தல், பார்த்தல், முகர்தல்,
கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து
கர்மேந்திரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும்
உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம்,
பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியம்
(பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ்
ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. ‘தன்னை உணர்தல்’ எனப்படும்
ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட
வேண்டும். ‘

மஹாபாரதம் ஒரு இதிஹாஸ கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும்
இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற
அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப்
பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.
இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.

மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்கீதை, ஞானமடைதலுக்கான
கையேடு!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல்
நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக ஜ்ஞான ஸத்குருவுடன்
உரையாடுகிறீர்கள்.

இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஸத்குருநாதரின் ஸத்ய வார்த்தைகளிலிருந்து
உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான
தெளிவையும் பெற்று மலருங்கள்.