முன்னுரை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஞானமடைந்த சத்குரு பரமஹம்ச நித்யானந்தர் பகவத் கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.
பல வருடங்களாக, பகவத் கீதைக்கு நூற்றுக் கணக்கான விளக்கவுரைகள் எழுதப் பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் ஆன்மீக குருக்களான ஆதி சங்கராசாரியர், இராமானுஜன், மாத்வர் போன்றோர் விளக்கவுரை எழுதினர்.
அண்மைக் காலத்தில், முக்கியமான சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்சர், இரமண மகரிஷி போன்றோர் கீதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். பலரும் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்காமல் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள்.
பரமஹம்ஸரின் நித்தியானந்தரின் இந்த பகவத் கீதை விளக்கவுரை, கீதையின் மொழிபெயர்ப்போ, அதன் விளக்கவுரையோ, அல்ல அவர் ஒவ்வொரு பாடலையும் (செய்யுள்) விளக்கும் பொழுது நம்மை உலகச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு சுலோகத்திற்கு 7 அடுக்கு அர்த்தங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. பொதுவாக கொடுக்கப்படுவது முதல் நிலை விளக்கமாகும். இங்கே, ஞானமடைந்த சற்குரு நம்மை பொதுவான விளக்கவுரையைத் தாண்டிய நிலைகளுக்கு எளிதாகவும் தளர்வாகவும் அழைத்துச் செல்கிறார்.
மஹாபாரதம் இன்றும் வாழும் புராணக் கதை.
பரமஹம்ஸரின் நித்யானந்தரின் கீதையின் விளக்கவுரையைப் படிப்பது என்பது, மிகவும் அரிதான உள்முகப் பார்வையைப் பெறுதலாகும். இது வெறும் படிப்பது மட்டுமல்ல. இது ஒர அனுபவம். இது ஒரு தியானம்.
சிறந்த சத்குருவும் தத்துவஞானியுமான சங்கரர் கூறுகிறார்,
' சிறிதளவு கீதையைப் படிப்பது, குடிப்பதற்கு ஒரு துளி கங்கை நீர், அவ்வப் பொழுது கிருஷ்ணனைப் பற்றிய நினைவு - இவையனைத்தும், உங்களுக்கும், மரணத்தின் தேவனான யமனுக்கும் இமையே உள்ள பிரச்சனைகளை நிச்சயமாக இல்லாமல் செய்துவிடும்.
பரமஹம்ஸர் நித்யானந்தரின் விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், அவருடனான கருத்துப் பரிமாற்றங்களால் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் வாசிப்பாளர்களின் வச திக்காகவும், கல்வியாளர்களின் விருப்பத்திற்காகவும், புராதனமான சமஸ்கிருத செய்யுட்களையும், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரம் தினசரி வாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து இறுதி சத்தியத்தை உணர்வதற்கு பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் விளங்குகிறது. நித்யானந்தம், முடிவற்ற பேரின்ப நிலையை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது.
பகவத் கீதை
சாஸ்திரம், ஸ்தோத்திரம், சூத்திரம்

எல்லா உயிர்களும் இருவித (duality) பற்றுகளிலும், வெறுப்பிலும் மாட்டிக்கொள்கின்றன. இந்த கட்டு க்களில் இருந்து நாம் எவ்வாறு விலகுவது என்பதை ஞானகுரு கிருஷ்ணர் விளக்குகிறார்.
வாழ்க்கை என்பது நல்லதும், கெட்டதும், தெய்வமும், சாத்தானும் கலந்ததே, இதில் ஏதாவது ஒன்றைத் தாண்டி ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது நமக்கு உதவாது. இவ்விரண்டையும் தாண்டிச் செல்வது நமக்குத் தேவையாயிருக்கின்றது.
* சுவாமிஜி, மஹாபாரதம் போர் ஒரு உருவகம் என்று சொல்லியிருந்தீர்கள் தயவு செய்து அதை விளக்குங்கள்.
* ஜீவன் முக்தி அடைவதற்கும், தனித்தன்மை வளர்வதற்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன?
* துரோணர், கர்ணன், இறுதியாக துரியோதனன் இவர்களைத் தாண்டி செல்ல என்னத் தேவை?
* துரோணரையும், சகாதேவனையும் எப்படி நாம் வேறுபடுத்திப் பார்ப்பது?
* குந்தியும், திரௌபதியும் எப்படிக் காட்டப்படுகின்றார்கள்?
* விதுரர், பலராமர் இவர்களின் பங்கு என்ன?
* சுவாமிஜி, உடலளவில் கண்பார்வையற்றவர்களைப் பற்றியும், அறியாமையால் இன்னும் குருடராக இருப்பவர்களைப் பற்றியும் பேசியிருந்தீர்கள். பேரரசர் திருதராஷ்டிரர் தன் மகன் மேல் கொண்ட அன்பால் கண்பார்வையற்றவராக இருக்கும்போது சாதாரண அழியக் கூடிய மனிதர்கள் எப்படி சிறந்தவராக இருக்க முடியும்?
* மஹாபாரதப்போர் அகங்காரங்களுக்கிடையேயான போரா? அப்படியென்றால் நல்ல அகங்காரம், கெட்ட அகங்காரம் என்று இருக்கின்றதா?
* சுவாமிஜி, சங்குகள், மந்திரங்கள் மற்றும் அஸ்திரங்கள் இவையெல்லாம் இந்த நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப யுகத்தில் பொய்யாகத் தோன்றுகின்றது. உங்கள் உருவத்தோடக் கூடிய சந்தன மாலையை உங்களைப் பின்பற்றுபவர்கள் அணிந்திருப்பது புனிதச் சின்னத்தைத் தாங்கிய ஒரு சமயம் போன்ற சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது. இதை நம்ப வேண்டும் என்றுதான் நினைக்கின்றேன். ஆனால், நாள் கற்றது இதற்கு எதிராக இருக்கின்றது. தயவு செய்து புரிந்து கொள்ள எனக்கு உதவுங்கள்.
* 'பூரண அவதாரமான' கிருஷ்ணர் கீதையை உபதேசித்ததிலிருந்து, கீதை மறையின் உரிமையைப் பெற்றிருக்கின்றது என்று சொல்லியிருந்தீர்கள், வேதங்கள் போன்ற வேதமறைகள் துறவிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டன. கிருஷ்ணர் 'கடவுளின் அவதாரம்' என்பதற்கான சரித்திர ஆதாரம் ஏதாவது இருக்கின்றதா?