Chapter 14

Xiii. பதிலளிக்கப்பட்ட கேள்விகள்.

1 sections

Xiii. பதிலளிக்கப்பட்ட கேள்விகள்.

  • ஒரு வேளை நோய்க்கு சம்மபந்தமில்லாத 1. சக்கரத்தில் தியான சிகிச்சை அளித்தால் நோயாளிக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா? இல்லை, எந்த பாதிப்பும் ஏற்படாது. சம்பந்தம் இல்லாத சக்கரத்தில் தியான சிகிச்சை கொடுப்பதால் நோய் குணமடைதல் கொஞ்சம் காலதாமதமாகும் அவ்வளவே! நோய் கண்டிப்பாக குணம் அடையும். ஏதின்றால், எல்லா சக்கரங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு சக்கரத்திற்கு அளிக்கப்படும் தியான சக்தி நிச்சயம் மற்ற சக்கரங்கள் மூலம் தேவையான இடத்திற்கு சென்றடையும்.

  • தியான சிகிச்சை எத்தனை நாட்களில் 2. பயனளிக்கும்? பொதுவாக, 24 மணி நேரத்திற்குள் முதல் பலனை எதிர்பார்க்கலாம். (அதாவது Ist Change from illness)

    1. "Distance Healing" நாங்கள் செய்ய முடியுமா? முடியும். ஆனால் இப்போது வேண்டாம். தியான சிகிச்சையை தொடர்ந்து முழு சிரத்தையோடு செய்யுங்கள். அதற்கான பக்குவம் ஏற்படும்போது "Distance Healing" எப்படி செய்வதென்று உங்களுக்கு சொல்லித்தரப்படும்.
    1. எனக்கு நானே தியான சிகிச்சை செய்து கொள்ளலாமா? உங்களுக்கு நீங்களே சிகிச்சை அளித்துக் கொள்ளலாம். உங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது வேறொரு தியான சிகிச்சையாளரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.
    1. தியான சிகிச்சைக்கு Healing Stick-ஐ பயன்படுத்துகிறோம்? இரண்டு காரணங்களுக்காத Healing Stick-ஐ முக்கியமாகப் பயன்படுத்துகிறோம். ஒன்று -தொற்று நோய், தோல் வியாதி போன்றவற்றை குணப்படுத்தும்போது

நோயாளியைத் தொடுவதை தவிர்பதற்காக, 2 - அண் தியான சிகிச்சையாளர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அல்லது பெண் தியான சிகிச்சையாளர்கள் ஆண்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது Healing Stick-ஐ பயன்படுத்த வேண்டும்.

    1. மாலை அணிந்து கொள்வதின் முக்கியத் துவம் என்ன? மாலையை நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் போது என்னுடைய சக்தி உங்களுடன் இருக்கும். நீங்கள் அணியும் ஒவ்வொரு மாலையும் தனிப்பட்ட முறையில் சுவாமியால் Energize செய்யப்பட்டவை. மாலை உங்களுக்கும் எனக்கும் இடையில் சக்தி பாலமாக செயல்படும்.

மாலை ஒரு மந்திரச் சாவி. அது தொடர்ந்து உங்களுக்கு என் சக்தியைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். நோயாளிகளை தொடர்ந்து சந்திக்கும் போது நோயாளியின் எதிர்மறை சக்திகள் தொடர்ந்து உங்களைத்

தாக்கும். என்னுடைய மாலை சக்தி காப்பாக செயல்படும். மாலையை நீங்கள் அணிந்திருக்கும் போது எந்த ஒரு எதிர்மறை சக்தியும் உங்களை ஒன்றும் செய்யாது.

    1. ரெய்கி, பிரானிக் ஹீலிங் போன்ற சிகிச்சை முறைகளிலிருந்து ஆனந்தா தியான சிகிச்சை முறை எப்படி வேறுபடுகிறது? ரெய்கி, பிரானிக் ஹீலிங் போன்ற முறைகள் மனதின் சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றன. மேலும், சிகிச்சையை திறம்பட செய்வதற்காக பல குறியீடுகள், வர்ணங்களை பயன்படுத்த வேண்டும். சிகிச்சையாளருக்கு எந்த அளவுக்கு கற்பனா சக்தி இருக்கிறதோ அந்த அளவிற்குத்தான் சிகிச்சையின் தரமும் அமையும். சிகிச்சை கொடுப்பதற்கான மனோ சக்தி - தியானம் சரியாகச் செய்யாவிட்டால் சிகிச்சையாளரின் சக்தி முழுவதுமாக தீர்ந்து விடும் அபாயம் இருக்கிறது. சக்தியை சம்பாதித்து செலவு செய்யும் தத்துவத்தில் இந்த முறைகள் செயல்படுகின்றன.

சிகிச்சையாளர் எவ்வளவு சக்தியை கிரகித்துக் கொள்ளுகிறாரோ அந்த அளவிற்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். இந்த முறைகள் சிகிச்சையாளரின் மனதில் எப்போதும் ஒர் அபாய உணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஏனென்றால் விதிமுறைகளை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் நோயாளியின் கர்மங்கள் தங்களை எப்போது வேண்டுமானாலும், பற்றிக் கொள்ளும் என்ற அபாயத்தின் எச்சரிக்கை உணர்வு மனதில் இருந்து கொண்டேயிருக்கும். இவை எல்லாவற்றையும் விட இந்த சிகிச்சை முறைகள் சிகிச்சையாளரின் ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கும் தன்மை கொண்டவை. ஞானம் நோக்கி தொடங்கும் ஆன்மீகப் பயணத்தில் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு கடைசியில் முழுமையாக மொற்றப்படுவதுதான் "ஞானமடைதல்" என்னும் உச்சக்கட்ட அனுபூதி. இந்த சிகிச்சை முறைகள் மனம் ஞானம் நோக்கி மாற்றப்படுவதை

தடுக்கின்றன. மனதில் இலகுவான தன்மையை ஏற்படுத்தாமல் மனதை இந்த முறைகள் மலும் மேலும் மேலும் கடினப்படுத்துகின்றன.

அனந்தா தியான முறை முற்றிலும் மாறுபட்டது. சிகிச்சைக்கும், சிகிச்சை-யாளரின் மனதிற்கும் சம்பந்தமே இல்லை. இந்த சிகிச்சை முறையில் சிகிச்சையாளர் சக்தி கட்லோடு நேரடித் தொடர்பு கொள்கிறார். ஒரு சிறு வாய்க்காலாக மாத்திரமே செயல்படுகிறார். சக்தி நோயாளியைச் சென்று சேர்வதற்கு முன்பே, சிகிச்சையாளரை சுத்தகரிக்கிறது. இந்த சிகிச்சை முறையே ஒரு தியானம்தான். அதற்கென்று தனிப்பட்ட தியானமோ குறியீடுகளோ கற்பனைகளோ தேவையில்லை. இந்த சிகிச்சை முறையில் சிகிச்சையாளருக்கு நோயாளியின் கர்மங்கள் வந்து சேர்வதில்லை. ஒவ்வொரு முறை சிகிச்சை அளித்த பின் சிகிச்சையாளர் புதுப் பொலிவை பெறுவார். மேலும் சிகிச்சை

அளிக்கும்போது சிகிச்சையாளரின் உள்ளுக்குள் பொங்கும் ஆனந்த உணர்வால் அவரை அறியாமலே புன்னகை பூத்த முகத்தோடு சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பார்கள். ஞானம் அடைவதற்கு மிக எளிமையான வழி, நேர்வழி எதுவென்றால், அது நிச்சயம் ஆனந்த கந்த தியானம்தான்.

தியான சிகிச்சை, தியான சிகிச்சை மையத்தில் 8. மட்டும்தான் செய்ய வேண்டுமா? மேலும் குழ்நிலை கருதி எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை செய்யலாமா?

எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், சிகிச்சை செய்யலாம். என்னுடைய "Energy Field" தியான சிகிச்சை மையத்தில் அதிக அளவில் இருக்கும். அதனால் தொடக்கத்தில் தியான சிகிச்சை மையத்தில் மட்டும் சிகிச்சை கொடுப்பது நல்லது. சிகிச்சை கொடுப்பதில் நல்ல தேர்ச்சி பெற்றபின் எங்கு வேண்டுமானாலும்

சிகிச்சை அளிக்கலாம். உங்களுடைய வீட்டிலேயே தியான சிகிச்சை மையம் துவங்கினால் அது உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் மிகப்பெரிய பயனைக் கொடுக்கும்.

    1. நோயாளியின் கா்மங்கள் சிகிச்சையாளரை பாதிக்குமா? இல்லை. பாதிக்காது. குருவின் அருள் உங்களோடு இருக்கும்வரை எந்த ஒரு சிறிய பாதிப்பும், தியான சிகிச்சை மூலம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. உங்களுடைய நலனை முழுப் பொறுப்பெடுத்துக் கொள்ளுகிறேன்.

தியான சிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட 10. தீட்சை திரும்ப எடுத்துக் கொள்ளப்படுமா? இல்லை. எடுத்துக் கொள்ளப்படாது. தெரிந்தே விதிகளை மீறி நடந்தால் திறக்கப்பட்ட ஆனந்த கந்த சக்கரம் திரும்ப மூடிக் கொள்ளும். உங்களுடைய சிகிச்சை கொடுக்கும் திறன் தடுக்கப்பட்டு விடும்.

அதன் பின் உங்களுக்கு ஏற்படும் சிறிய வியாதிகளை நீங்களே குணப்படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு சிகிச்சை கொடுக்க முடியாது.

உங்களால் சிகிச்சை செய்ய முடியாது என்று தெரிந்த பின்னரும் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை செய்தால், உங்களுக்கு அது மீறிய செயல்கள். உங்களுக்கு கா்மங்களைச் சேர்க்கும்.

தொடர்ந்து சிகிச்சையாளர் விதிகளை மீறி தான் தியான சிகிச்சையின் வாய்கால் மட்டுமே என்பதை மறந்து அகங்காரத்தோடு செயல்பட்டால் தான் ஆனந்த கந்த சக்கரம் நிரந்தரமாக மூடப்படும்.

    1. சிகிச்சையின் போது பிரத்தியேகமாக கடைபிடிக்க வேண்டிய அல்லது செய்ய வேண்டிய விஷயங்கள் ஏதும் இருக்கிறதா? இல்லை. சாதாரண விதிமுறைகளை கடை பிடிப்பதே போதும்.

குளித்துவிட்டு, உற்சாகத்தோடு வெள்ளை உடையும், மாலையும் அணிந்து கொண்டு இனிமையான உணர்வோடு சிகிச்சை அளிக்க ஆரம்பியுங்கள்.

    1. நான் மற்றவர்களுக்கு காலை தீட்சை கொடுக்கலாமா? இல்லை, கூடாது, அது குருவால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
    1. என்னுடைய இஷ்ட தெய்வத்தை அனந்த கந்த தியானத்திற்கு முன் மனத்திரையில் பார்க்கலாமா? கூடாதா?

ஏன் அப்படிச் செய்ய வேண்டாமென்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று-உங்களுடைய இஷ்ட தெய்வம் கிருஷ்ணன், தேவி இல்லை இயேசுவாக இருக்கலாம். இவர்களுடன் உங்களுக்கு எந்தவிதமான " நேரடி "Concious Experience"- ம் இல்லை. அவர்களுடைய சக்தியோடு எந்த வித நேரடி தொடர்பும் உங்களுக்கு இல்லை. உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் கொண்டுதான் உங்கள் இஷ்ட தெய்வங்களை மனதில் வரைந்து வைத்திருப்பீர்கள். இது நிஜத்திற்கு புறம்பானது. அதனால் உங்களால் அவர்களுடைய சக்தியைப் பெற முடியாது.

இரண்டாவது - தியான சிகிச்சை முறை என்னுடைய சக்திக்கு திறம்பட செயல்படும் முறையில் வடிவமைத்திருக்கிறேன். அதனால் என்னுடை சிரிக்கும் முகத்தை மனத்திரைக்குள் கொண்டு வருவது சிறந்த சிகிச்சை பலன்களைக் கொடுக்கும்.

  1. ஆனந்த கந்த தியானத்தை எனக்குத் தெரிந்துவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாமா?

கூடாது. ஆனந்த கந்த சக்கரம் திறக்கப் படாதவரை அனந்த கந்த தியானம் செய்ய முடியாது. துக்கஹரணா, மஹா மந்திரம் போன்ற தியான முறைகளை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஏனென்றால் இவை மனம் சம்பந்தப்பட்ட தியான முறைகள். ஆனந்த கந்த தியானம் சக்தி சம்பந்தப்

பட்டது. இதை ஞான குருவால் மாத்திரமே கற்றுத் தர முடியும்.

    1. முறையாக தியான சிசிக்சை கொடுத்தும் நோயாளி குணம் பெறவில்லை என்றால் என்ன செய்வது? நோயாளியின் கா்மங்கள் தியான சிகிச்சை பலனில் பெரும் பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலருக்கு கேன்சராக வெளிப்பட வேண்டிய கர்ம வினைகள் தலை வலியாக வெளிப்படும். (இதற்குக் காரணங்கள் நிறைய இருக்கிறது). இப்படிப்பட்ட குழ்நிலைகளில் சாதரணமாக மாதோறும் தலைவலி கூட தியான சிகிச்சையால் குணமாகாது.

இது போன்ற நிகழ்வுகள் எப்போதாவது மட்டுமே சந்திக்க நேரிடும். இந்த மாதிரி குழ்நிலைகளுக்கு தியான சிசிச்சையாளர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.

Part 2: You too can become a healer_Tamil_part_2.md