Chapter 11

X. கியான சிகிச்சையில் ஆனந்த கந்தம்

1 sections

X. கியான சிகிச்சையில் ஆனந்த கந்தம்

  1. ஆனந்தகந்தம் - ஆனந்த வெளி!

இது வரை உங்களுக்கு தெரிந்த 7 சக்கரங்களும் தியானங்களால் திறக்கப்பட்டு விடும். அந்த கந்தம் என்ற இந்த 8வது சக்கரம் வெறும் தியானத்தால் திறக்காது. குருவின் கருணையால் மட்டுமே இது திறக்கப்படும். இந்த 8வது சக்கரத்தை திறந்து வைக்கும் புனித செயலுக்கு பேர்தான் "ஆனந்த கந்த தீட்சை".

இந்த சக்கரம் ஒர் சக்தி பிரவாகம், இந்த சக்கரம், உடலில் இந்த இடத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அவ்வளவு குட்சுமம் நிறைந்தது இந்த சக்கரம்,

இந்த சக்கரம் ஞான சக்தியின் நுழைவாயில். இந்த ஒரு சக்கரத்தை திறப்பதின் மூலமாக உங்களது ஆத்மாவின் அடி ஆழம் வரை ஞான சக்தி பொழியப்படும்.

ஆனந்த கந்த சக்கரம் திறக்கப்படும் போது, நீங்கள் ஞானம் அடைவதற்கு உதவும் நேர் வழியின் கதவு திறக்கப்படுகிறது.

  1. ஆனந்த கந்த தீட்சை!
  • ★ ஆனந்த கந்த தீட்சை என்று விடுபாட்டு வைது கிட்டி ஆனந்த தீட்சை ஞானமடைவதற்கான மந்தரசாவி
    • தீட்சை மிகச் சாதாரணமாக, இயல்பாக நடக்கப் போகும் ஓர் விஷயம்.
    • தீட்சை எடுத்துக் கொள்வதற்கு உங்களிடம் எதிர்பார்க்கப்படும் ஒரே ஒரு ஒரு தகுதி - "திறந்த மனம்".

ஆனந்த கந்த சக்கரத்தை இரண்டு முறையில் திறக்கலாம்.

  1. வெளியிலிருந்து உள்ளுக்குள் ஊடுருவுதல்.

  2. உள்ளிருந்து வெளியில் ஊடுருவுதல்.

இந்த இரண்டு முறையில் முதல் முறையை விட இரண்டாவது முறை மிக எளிமையானது. ஒரு சிறிய உதாரணம்.

ஒரு ஏரியின் மேற்பரப்பு முழுவதும் பனியாக உறைந்து போய் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய கம்பை வைத்துக் கொண்டு மேற்பரப்பில் இருந்து உள் நோக்கி ஒரு துளை செய்து ஏரியின் உள்பரப்பை அடைவது மிக கடினம்.

அப்படியில்லாமல், ஒரு சக்தி வாய்ந்த Drilling Machine-ஐக் கொண்டு ஏரியின் அடியில் இருந்து துளை செய்தால் - எவ்வளவு எளிதாக மேற்பரப்பை அடைந்து விடலாம். இந்த இரண்டாவது எளிமையான முறையில்தான் நான் உங்களின் ஆனந்த கந்த சக்கரத்தை திறக்கிறேன்.

ஏரி - உங்கள் உடல் ஏரியின் பனி உறைந்த மேற்பகுதி - உங்கள் சுட்சும உடல் ஏரியின் நீர் நிறைந்த அடிப்பகுதி - ஆனந்த கந்தம் (சக்தி வெளி)

உள்ளுக்குள் இருக்கும் ஆனந்த வெளியில் இருந்து - சக்தி மேற்பரப்பிற்கு எடுத்து வரப்பட வேண்டும். அதற்கு ஒரு சிறு துளை வேண்டும். அந்த சிறு துளையை உங்கள் சுட்சும உடலில் உண்டாக்கும் சுப நிகழ்வுக்கு பெயர்தான்- ஆனந்த கந்த தீட்சை.

    1. ஆனந்த கந்த தியானம் (தீட்சை பெற்ற பிறகு மாத்திரமே செய்யமுடியும்).
  • ★ தளர்வாக கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய விழிப்-புணர்வை ஆனந்த கந்தத்தில் வையுங்கள். ஆனந்த கந்தத்தில் இருந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கும் முகத்தை மனத்திரைக்கு கொண்டு வாருங்கள். இந்த தியானத்திற்கு இதுதான் "மந்திர சாவி".

★ ஒரு ஞானியின் சக்தி அவர் சிரிக்கும் போது உச்சத்தில் இருக்கும். ஒரு ஞானியின் திருஉருவத்திற்கு சக்தி உண்டு. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கும் திருஉருவத்தை மனத்திரைக்கு கொண்டு வாருங்கள். உங்களுக்குள் இருந்து ஆனந்த சக்தி பொங்குவதை உணர்வீர்கள்.

  • ★ பொங்கும் ஆனந்த சக்தியில் அப்படியே மூழ்கிவிடுகள்.
  • ★ ஆனந்த உணர்வு உங்களை அப்படி உள்ளுக்குள் இழுத்துச் செல்வதை நிதர்சனமாக உணர்வீர்கள்.
  • ★ உங்கள் சந்தேகம் இந்த சக்தியை தடுக்க முடியாது. ஆனந்த கந்த சக்தி மனதின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. சக்தி ஆனந்த கந்தத்தில் இருந்து பிரவாகம் எடுத்து உடல் முழுவதும் பாய்வதை தெளிவாக உணர்வீர்கள்.