தியானம் செய்வது எப்படி ?
தியானம் செய்வது எப்படி ?
இந்த தலைப்புக்கு பதில் தெரிந்து கொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
காரணம், இவர்கள் தியானத்தில் அமர்ந்தால் சாதாரண நேரங்களில் அதிகமான எண்ணங்கள் வருவது போலவே தோன்றுவதுதான்.
அப்படித் தோன்றக் காரணம், அப்போதுதான் தங்கள் வாழ்வில் முதல் முறையாகத் தன்னுள் தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கும் மனக்குதிரையை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.
'இயல்பாக இருக்கிறேன்' என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களின் (உள்ளே இருக்கும்) 'இயல்பற்ற தன்மைதான்' தியானத்தில் அமரும்போது தெரியவரும்.
ஒரு சுவராஸ்யமான சம்பவம்...
Bharat சுதந்திரம் பெற்ற இருப்பத்தைந்தாவது நாள், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் நோக்கி, ஆந்திராவில் இருந்து ஆன்ம சுதந்திரம் தேடி தியானம் கற்க வந்திருந்தான் ஒரு இளைஞன்.
என்றும் போல் அன்றும் காலார நடந்துவர ரமண மகரிஷி புறப்பட்டு விட்டிருந்தார்.
உள்ளே சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் நிமிட நேரத்தையும் வீணாக்க அந்த இளைஞன் தயாராக இல்லை.
ரமண மகரிஷியை வழிமறித்து, 'சாமி, நான் தியானம் செய்வதற்காக வெகுதூரத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிரேன்.
ஆஸ்ரமத்தில் தியானம் செய்ய உகந்த இடம் எது என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் எங்கே தியானம் செய்ய சொல்கிறீர்களோ அங்கேயே செய்கிறேன்' என்று கேட்டுக் கொண்டான் இளைஞன்.
கேட்டவனின் கேள்வியை ரமணர் கண்டுகொண்ட மாதிரியே காண்பிக்கவில்லை. அவரின் உடல் அசைவுகள் அப்படி இருந்தது.
ரமணா சிரித்துக் கொண்டே கால்களையும், கணுக்களையும் தேய்த்துக் கொண்டு நடப்பதற்குப் புறப்பட்டார்.
இளைஞனின் பொறுமை சோதிக்கப்பட்டது.
ரமணர் தமது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு கேள்வி கேட்ட இளைஞன் முன்னே நிற்க! பின்னால் இருந்தவர்களை நோக்கித் திரும்பி, எந்த இடத்தில் தியானம் செய்ய வேண்டுமென்று கேட்டால் என்ன சொல்வது ?! தான் இருக்கும்' இடத்திலேயே இருப்பது தான் நல்லது. மிகச்சரியானது. அந்த இடத்திலேயே இருந்து தியானம் செய்" என்ற வரிகளைச் சிரித்துக் கொண்டே உதிர்த்துவிட்டு நகர்ந்தார்.
கேள்விக்கு கிடைத்த பதில் புரியாததால் இளைஞன் எரிச்சலடைந்து விட்டான்.
பக்கத்திலிருந்தவர்களிடம், என்னங்க இவர்? நீ இருக்கும் இடத்திலேயே இரு என்கிறார். இதைக் கேட்கவா நான் ஆந்திராவிலிருந்து வந்தேன்.
இவர் பெரியவர், அதனால் எனக்கு தகுந்த இடம் பார்த்துச் சொல்வாரென்று கேட்டால்,
'தானிருக்கும் இடத்திலேயே இரு' என்கிறாரே! 'இந்த சோபாவின் அருகில் நான் இருக்கிறேன். அப்போ நான் இங்கேயே இருக்கட்டும் என்றா அர்த்தம் கொள்வது ?' இதென்ன வீண் விளையாட்டு! என்று நொந்து போய் பேசினான்.
ரமண மகரிஷி எவ்வளவு பெரிய ரகசியத்தை மிக எளிமைப்படுத்தி அவனிடம் சொன்னார் என்பது அப்போது அவனுக்குப் புரியவில்லை. பின் பக்தா் ஒருவர் அந்த இளைஞனை தனியே அழைத்துச் சென்று,
'நண்பா, பகவான் தமாஷாகச் சொன்னாலும் சரி, விளையாட்டாகச் சொன்னாலும் சரி, அவர் பேசுவது சத்தியத்தை மட்டுமே.
'நான்' என்கிற அகங்காரம் எங்கு இருந்து கொண்டிருக்கிறதோ அதுவே 'நீ' இருக்கும் இடம்.
இருக்கும் அகங்காரம் இடத்தை விழிப்புணர்வோடு சென்று, பார்வையாளனாக விலகி நின்று பார்த்துக் கொண்ருந்தலே தியானம்.
(அகங்காரம்) இருக்கும் இடத்தில் விழிப்புணா்வோடு இருப்பதுதான் தியானம்.
அதை விட்டுவிட்டு, இங்கே உட்கார்ந்தால் நன்றாக தியானம் செய்ய முடியுமா ? அங்கே உட்காரலாமா? என்று கேட்பது எல்லாம் நேர விரையம்' என்று விளக்கம் கூறி முடித்தார்.
'ஓவேறா! 'தியானம்' என்ற பெயரில் தியானத்தில் ஈடுபடாமல் வெளிவிஷயங்களில் நான்
விளையாட்டுத்தனமாக இருப்பதைத்தான் மகரிஷி விளையாட்டாய் குத்திக் காண்பித்திருக்கிறார்' என்பதை இளைஞன் உடனேயே புரிந்து கொண்டான்.
பிறகு, தியானத்தில் முழுமையாக ஈடுபட்டான்.
தியானத்தில் ஈடுபடுவது சுலபம்.
சில சூட்சுமங்களை சரியாகப் புரிந்து கொண்டால் தியானத்தில் வேகமாக முன்னேறலாம்.
'உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற அமைதியான உணர்வு நோக்கி ஊடுருவுங்கள்'
இதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தால் ...
ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள் -எண்ணங்களை, மனதைப் 'பார்க்க' முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
இதை இன்னும் எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம்.
சினிமாவைத் தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சினிமாவில் உங்களுக்குப் பிடித்த காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.
உங்களுக்குப் அதேபோல பிடிக்காத ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு காட்சி பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவின் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
இந்த படம் சரியில்லை, போர் அடிக்கிறது என்பதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா? முடியாது.
சினிமாவில் என்ன வெந்தாலும் வரட்டும் என்று மூன்று மணி நேரம் உட்கார்ந்து, வெறுமனே பார்த்துவிட்டுத் தானே வருவீர்கள்.
அதே காரியத்தைத் தியானத்திலும் செய்யுங்கள். சும்மா பாருங்கள்.
சாட்சியாகப் பாருங்கள்.
30 நிமிடம் உள்ளேயே ஒரு சினிமாவைப் பாருங்கள்.
ஒருவேளை வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணங்கள் என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளை நிறுத்த வேண்டாம்.
வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணங்கள் என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சி களைத் தொடர வேண்டாம்.
புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ, காட்சியையோ உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான்.
இந்த மூன்று விதிகளைக் கடைப்பிடித்தால் போதும், சாட்சியாகப் பார்ப்பது சுலபமாகி விடும்.
தியானத்தில் ஆழ்ந்து நன்றாக ஈடுபட முடியும்.
தியானித்து பாருங்கள்! பலன் புரியும்.
"இப்போது வாழ்வது போல் குறைந்தது ஆயிரம் மடங்கு ஆனந்தமாய் வாழ உரிமை உங்களுக்கும் உண்டு"
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM