Chapter 38

எடையை மனம் தாங்காது

1 sections

எடையை மனம் தாங்காது

'இறுதி உண்மை... எது ? என்ன ? எங்கே ? எப்படியிருக்கும் ? எப்படியடைவது ? ' ஏராளமாய்க் கேட்டவனுக்கு 'கண்ணை மூடு' என்ற கட்டளை வந்தது குருவிடமிருந்து ... 'உண்மையாம். உண்மை... ஹா ஹா ஹா...' வெடித்துச் சிரித்த குரு... உண்மையென்ற வார்த்தையே பொய். 'இது உண்மை' என்று காட்ட அது பொருளல்ல. பொருள்! உண்மையின் பொருள் உறைந்து போயிருக்கிறது உள்ளுக்குள் வெகு காலமாய் ! உணரத்தான் முடியும் உரைக்க முடியாது. என்ற குரு, தொடர்ந்து 'சீடா!... உரைக்க முடியா உண்மைக்கு உவமை சொல்வேன், கேளடா!'

ஒளியின்
உண்மையான நிறம்
இருள்
tஒலியின்
உண்மையான சப்தம்
நிசப்தம்
tபேச்சின்
உண்மையான உணர்வடிவம்
மௌனம்.
tஉண்மையின்
பிரயாண தூரம்
இங்கேயே இதற்குள்ளேயே
நீண்டிருக்கிறது.
tஉண்மையை
அடைய ஆகுங்காலம்
இப்பொழுதில் அக்கணத்தில்
ஒளிந்து கொண்டிருக்கிறது.
உண்மையான
உயரம்
மிக மிக ஆழமானது.
tஉலகிற்கே அதிபதி,
அடுத்த வேளை உணவு
எங்கிருந்து வருமென்று
தெரியாதவனே!
அதைப் பற்றிக் கவலைப்படாதவனே!
இது உண்மை
0பணக்காரனைப் போன்ற
பிச்சைக்காரன் இல்லை
பிச்சைக்காரனைப் போன்ற
பணக்காரன் இல்லை (பிரபஞ்சத்தில் )
இதுவும் உண்மையே !
Cஉண்மையைச் சொன்னால்
உண்மை என்பதே
உண்மையல்ல.
இதுதானடா இறுதி உண்மை
புரிந்ததா? என்றார் செல்லமாய்.
'புரிந்தது!' என்றான் சீடன்.

'என்ன புரிந்தது ! ? ! ? ? ? ? ' ஆச்சரியமானார் குரு. உண்மை புரியவில்லை என்பது மட்டும் புரிந்தது. 'உண்மை உண்மையிலேயே உயர்ந்தது, என்பது மட்டும் உணர்ந்தது' என்றான் சீடன் நம்பிக்கையோடு.

பின் குறிப்பு:

உண்மையாய் உண்மை இவ்வளவு கடினமானதல்ல. இவ்வளவு எளிமைமிகு உண்மையை ; உண்மையாய் விளக்க முயற்சித்தால் ... வரும் விளக்கமே கடினமாய்த் தெரிகிறது. கடினமாய்த் தெரிந்தாலும், உண்மை உண்மையில் மிக எளிமையானதே !