Chapter 26
நீ வேறு
நீ வேறு
மனம் வேறு, மாயை!
சீடன்: மனதை என்ன செய்ய ? குரு: உன் மனதைத் தாலாட்டினால்தான் மனம் உன்னைத் தாலாட்டும் பாவம் ! அப்பாவி மணதை நீதான் தாலாட்ட வேண்டும். நீ என்பது மனதுதானே உன்னைத் தாலாட்டும் ! உன்னைத் தாலாட்டத் தாலாட்ட உனக்கும் மனதுக்கும் உள்ள இடைவெளி பள்ளத்தாக்கு பாலமாகும் பாலம் பாதையாகும் பாதை அடியாகும் அடி ஜானகி... உனக்கும் மனதுக்கும் இடையில் 'வெளி' இல்லாது போகும். அப்போது உன்னால் மனமும் மனதால் நீயும் சுகமாயிருப்பீர்கள். வித்தியாசமில்லாததால் சுகித்திருப்பீர்கள். பின்குறிப்பு : மனதை உடலும் உடலை மனதும் கண்டுகொள்ளாதே - உன் கஷ்டங்களில் கரு. முதலில் உங்களைச் சீராட்ட, பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.