உயிரோவியம் கண்ட நாளில் ...
உயிரோவியம் கண்ட நாளில் ...
நான் குடித்த சாதாரண நீரைக் குடித்த நீ 'அமுதம் !' என்றாய்
நான் உண்ட சாதாரண உணவை உண்ட நீ 'அமிர்தம் !' என்றாய்
கட்டாந்தரையில் வெறுமனேதான் நீ படுத்தாய் ! ஆனால்... பார்ப்பதற்கு வெண் பஞ்சால் தடித்த சொகுசுக் கட்டிலில் படுத்துக் கொண்டாற்போல் சுகமாய்ப் படுத்துக் கொண்டாய் நீ
என்ன ஆயிற்று உனக்கு !
காரணமேயில்லாது முகம் மலர்ந்திருக்கிறாய் !
என்னைப் போல்தான்
இரண்டு காலால்
நடக்கிறாய்
ஆனால்…
என்னவோ ஒரு நயம்
நுழைந்திருக்கிறதே !
உன் நடையில்
எப்படி உனக்குச் சாத்தியமானது இதெல்லாம் ?
உன்
குரலைக்
குழலாக்கியது
எது ?
உன்
கண்ணைக்
காந்தமாக்கியது
எது ?
எல்லாம் சேர்ந்து
என்னை
என்னவோ செய்கிறதே! ஏன்?
மன்னித்துவிடு ...
கேள்விகளைத் தொடர்கிறேன்
உன் பதிலுக்கு இடைவெளியில்லாமல்,
என்றார்.
புத்தரிடம் புத்தரின் அண்ணன் ஆனந்தன் முதன் முதலாக புத்தரைப் பார்த்த நாளில் ஐயம் கேட்டவரிடம் புத்தர் "ஞானமடைந்து விட்டல் அமிர்தம் அழகு சொர்க்கம் ஆதி முதல் தெய்வம் ஆகிய அணைத்தையும் காண்பாய் அனுபவிப்பாய் நீயும் ! என்னிடம் நீ கண்டதெல்லாம் முக்தியின் சக்தி ! என்னில் படைத்த அழகுக் கோலங்கள் உயிர்நிலை தொட்ட தியானசக்தி உயிரோவியமாக்கும் முக்தியடைந்த ஒருவணை ஏன் நீயும்கூட உயிரோவியமாகலாம்'' எனக் கூறி முடித்தவரின் காலில் விழுந்த ஆனந்தன் 'ஏற்றுக் கொள்ளுங்கள் என்னைச் சீடனாக' என்றார். பின்னாளில் அவரும் ஓர்
உயிரோவியமானார்.