சிரத்தை என்றால் என்ன ?
சிரத்தை என்றால் என்ன ?
உங்களைப்பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (மமகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களிடம் உங்களை எப்படிக் காண்பித்துக்கொள்கிறீர்களோ (அகங்காரம்)அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களைப் பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (ஸ்வ-அன்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்களோ (அன்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும் செயல் புரிந்து, வாழ்க்கையை விரிவடையச் செய்து வாழ்தல் !
கேளுங்கள்! நீங்கள் கற்பனை செய்து வைத்திருப்பதுபோல், நீங்கள் ஒரே ஒரு அடையாளம் மட்டும் கொண்டவரல்ல: நீங்கள் 4 அடையாளங்களைக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாச் சமயங்களிலும், இந்த 4 அடையாளங்களையும், 4 பரிமாணங்களையும் ஒருசேரப் பெற்றிருக்கிறீர்கள். இந்த 4 அடையாளங்களும் ஒன்று சேர்ந்ததுதான் உங்கள் தனிமனித வாழ்வு; அதுதான் உங்கள் தனித்தன்மை! இந்த 4 அடையாளங்களுக்கும் நீங்களே பொறுப்பு !