Chapter 14
இது சாத்தியம்!
இது சாத்தியம்!
ஏன் வாழ்க்கை இப்படி இருக்கிறது ? என்று கேட்காதீர்கள். அதற்குப் பகிலாக, இப்படிக் கேட்க முடிவு செய்யுங்கள்:
''இதுதான் வாழ்க்கை! இப்போது அடுத்து என்ன செய்வது?'' இதை ஏற்றுக்கொண்டு, அடுத்தடுத்து சென்று கொண்டிருப்பதா ? இதை நீராகர்த்து வீட்டு, அடுத்தடுத்து சென்று கொண்டிருப்பதா? இல்லையென்றால், நான் நினைத்தபடி, விரும்பியபடி அதை மாற்றியமைப்பதா?
இந்தப் புரிந்துணர்தலின் அடிப்படையில், நீங்கள் எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அது சரியே. நீங்கள் முழுமைத்தன்மையிலிருந்து, நிறைவுணாவிலிருந்து செயல்படும்பொழுது, நீங்கள், உங்கள் உள் உலகிலோ அல்லது வெளி உலகிலோ நிகழும் எந்தவிதமான குழப்பங்களையும், முரண்பாடுகளையும் தீர்ப்பதற்கான ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பீர்கள்.