Books / Unknown

1. Unknown

காபிக்கும், ஆசிட்க்கும் சம்பந்தம் இருக்கிறதா?

இருக்க முடியாது. ஆனால் நம்முடைய மனம் எதை வேண்டுமானாலும், எதனுடனும் இணைத்துக் காட்டும். பயம் என்று ஒன்று வந்துவிட்டால், எதை வேண்டுமானாலும் எதனுடனும் இணைத்துக் காட்டும். இந்தக் கதையைக் கேட்டவுடன் நாம் சிரிக்கிறோம். அனாவசியமாகப் பல விஷயங்களைச் சேர்த்து வைத்துவிட்டதால் அந்த எளிமையான, சாதாரணமான நிகழ்ச்சியை நேரடியாக் பார்க்கமுடியவில்லை. உங்களுடைய மனம் உங்களையே ஏமாற்றுகிறது. Page 17 image 1 ஒரு ஜென் கதை... இது ஜென் ஞானியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. பொதுவாக ஞானிகள் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர்கள், அச்சத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்து உண்டு. அந்த ஜென் ஞானி ஒரு நாள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று குறுக்கே வந்தது சீடர்கள் பயந்து போய் எப்படி ஓடினார்களோ அதைப் போலவே இவரும் ஓடினார். சற்று தூரத்தில் சென்று எல்லோரும் நின்றார்கள். சீடர்கள் கேட்டார்கள், “குருவே! உங்களை இத்தனை நாள் ஞானி என்று நினைத்திருந்தோமே? நீங்களும் எங்களைப் போல் ஓடி வந்தீர்களே?” அப்போது அந்த ஞானி சொல்கிறார்… “அப்பா… உனக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் ஓடுவதும், ஓடாது இருப்பதும் இல்லை. இங்கு வந்து நின்ற பிறகு உன்னுடைய இதயம் ‘பட் பட்’ என்று அடித்துக்கொண்டு இருக்கிறதா எனக்கு அப்படியில்லை” என்றார். “உடலிலான பயம். அதாவது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிற பயம் உனக்கும் உண்டு, எனக்கும் உண்டு. ஆனால் அந்த பயத்தினால் உருவான மனீதியான பாதிப்பு எனக்கு இல்லை. அது உனக்கு உண்டு” என்றார். அதாவது ஒரு பாம்பு வரும் போது நீங்கள் ஓடுவது போல் அவரும் ஓடினார் அவர் மிக அழகாகச் சொல்கிறார். “நீங்கள் ஓடியது போல் நானும் ஓடினேன். ஆனால் வருவதற்கு முன் பாம்பு வருமா? பாம்பு வருமா? என்ற பயம் எனக்கு இல்லை. வந்தபின் இப்படி ஆகிவிட்டதே? ஒருவேளை என்னைக் கடித்துவிட்டால்… என்ன ஆகியிருக்கும் என்ற பயமும் எனக்கு இல்லை” என்றார். “ஒருவேளை இப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கவலைப்படுவதும் என்னும் எனக்கு இல்லை” என்று சொல்கிறார். சாதாரண மனிதர்கள் கடந்த காலத்திலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். நிகழ்காலத்திலும் பயப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்திலும் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஞானிகள் அந்த வேளையில் எப்படி இயங்க வேண்டுமோ அவ்வாறு என்று இயங்குகிறார்களே தவிர எதிர்காலத்திலோ, கடந்த காலத்திலோ அவர்கள் தங்கள் சக்தியைச் செலவு செய்வதில்லை. அவர் மிக அழகாகச் சொன்னார். (real Fear) (நிஜமான பயம்), Pshycalogical Fear (மனீதியான பயம்) - என்ற இரண்டு இருக்கிறது. மூடனே! உன்னைக் காப்பாற்றத்தான் மூன்று முறை அழுப்பினேன். நீ அதைப் புரிந்துகொள்ளவில்லை... நான் என்ன செய்வேன்?" என்றார். ஆபத்து அவசர காலத்தில் ஏற்படுகிற தற்பாதுகாப்புக் கலை தவறு இல்லை. (பயம்) அது வேறு விஷயம். இந்த மனிதயான பயம், இது நின்றுவிடுமோ, அது நடந்துவிடுமோ, என்ன ஆகுமோ? இது எப்படிப் போகுமோ? அது எப்படி ஆகுமோ?" என்ற பயங்கள் தான் தவறு. வியாபாரத்திலே ஒரு நாள், ஒரு 10 ரூபாய் நஷ்டம் வந்துவிட்டது என்றால், உடனே, "இப்படியே போனால், 1 மாதத்தில் 3,000 ரூபாய் நஷ்டம் ஆகிவிடுமே. ஒரு வருஷத்தில் இவ்வளவு ரூபாய் நஷ்டம் வருமே. 10 வருஷத்தில் எவ்வளவு லட்சம் நஷ்டம் வரும்? அப்புறம் நான் என்ன ஆவேன்? நான் நடுத்தெருவில் நின்றுவிடுவேன! என்பது போன்ற பயங்கள்... ஒரு நொடிக்குள் உங்கள் எண்ணத்தினால் வாழ்க்கையயே ஓட்டிப் பார்த்துவீர்கள். ஒரு சிறு விஷயம் நடப்பதினால் வாழ்க்கை முழுவதும் அதைக் கணக்குப் போட்டு பார்த்து விடுகிறீர்கள். மொத்த வாழ்க்கை பற்றியும் ஒரு படம் பிடித்து விடுகிறீர்கள். அதனாலேயே சோர்ந்து போய், பயந்து போய் எதையும் செய்ய முடியாமல் திராணியில்லாமல் அமர்ந்துவிடுவீர்கள். எந்த இயக்கத்திலும் உங்களால் இயங்க முடியாது. அதேபோல் உங்கள் வாழ்க்கை முழுவதையும் மொத்தமாக உங்கள் மனதின் முன் வைத்துப் பார்த்தீர்கள் என்றால், "அய்யோ! எப்படி நான் இயங்குவேன்? எனக்கு சக்தியிருக்கா?" என்று பயந்துபோய் உட்கார்ந்து விடுவீர்கள். மனதை கட்டுவிடலாம் அழகான ஒரு ஜென் ஞானியின் கதை. ஒரு காட்டிலே ஜென் ஞானி ஒருவர் வசித்து வந்தார். அவரிடத்தில் ஒரு இளைஞன் ஒரு நாள் இரவு நேரத்தில் சென்றான். அந்த இளைஞன், "அய்யா! இந்தக் காட்டை நான் கடந்து செல்ல வேண்டும். தயவு செய்து இந்தக் காட்டைக் கடக்கும் வரை ஒளி கிடைக்க உதவி செய்யுங்கள்" "நீங்கள் தான் ஒளியை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் என்னால் காட்டைக் கடக்க முடியும்" என்றான். மனிதர்கள் ஒரு மகானைப் பார்த்துவிட்டால் அவரிடம் எதாவது அமானுஷ்யமாக கேட்பார்கள். அந்த இரண்டு விஷயங்களிலும் கூட நமக்குத் தேவையான விஷயத்தை மட்டும்தான் உள்வாங்குகிறோம். ஒருவரைப் பற்றித் தவறான முடிவு எடுத்துவிட்டீர்கள் என்றால்... அவர் என்ன நல்லது செய்தாலும், அவரைத் தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்போம். வாதத்தை (Argument) கேட்டபின் தீர்ப்பு (Judgement) கொடுப்பது ஒருவகை. தீர்ப்பை முடிவு செய்துவிட்டு வாதங்களை சேகரிப்பது இன்னொரு வகை. இரண்டு விஷயம் இருக்கிறது. எப்போது நீங்கள் ஒருவரைப் பற்றித் தவறான முடிவு எடுத்துவிட்டீர்களோ அவர் என்ன நல்லது செய்தாலும் நாம் அதில் குறைர்க்கம் மட்டும்தான் கண்டுபிடிக்க முயற்சிப்போம். அதனுடைய சத்தியம் நமக்குப் புரியாது. எதாவது ஒரு நோக்கத்தோடு தவறு கண்டுபிடிப்போமே தவிர, அவரிடம் இருக்கும் நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்ளமாட்டோம். அதே போல் ஒருவர் ‘நல்லவர்’ என்று முடிவு செய்துவிட்டோம் என்றால்... அவர் எவ்வளவு தவறு செய்தாலும் நமக்குத் தெரியாது. தீர்ப்பிடுதல் (Judgement) என்ற இதனைச் சொல்வதுண்டு. ஏற்கனவே முடிவு செய்து அதன்படி நடப்பது.இந்த முடிவு மனரீதியாக எடுப்பது. நன்முடைய மன அமைப்பு நடக்கிற விஷயத்தை ஏற்றுக் கொள்வதில்லை. நாம் பார்க்கின்ற கோணத்தில் நாம் விஷயத்தை எடுத்துக் கொள்கிறோம். வேதாந்தத்தில் சொல்வார்கள் “திருஷ்டி - ஸ்ருஷ்டி” என்று. பார்ப்பதை வைத்து நிகழ்ச்சியை உருவாக்குதல். நாம் பார்க்கின்ற கோணத்திலே பாராதது அதனால் நாம் உருவாக்கும் என்னங்கள். பச்சைக்கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் எல்லாமே பச்சையாகத்தான் தெரியும். மாயக்கண்ணாடி போட்டுப் பார்த்தால் இந்த சமுதாயமே நம்மை வஞ்சிப்பது போல் தான் தெரியும். உங்கள் மனம் நேர்மையாக இருந்தால் இந்த உலகமே நேர்மையாகத் தெரியும். உங்கள் மனம் எதிர்மறையாக இருந்தால், இந்த உலகமே எதிர்மறையாகத் தோன்றும். கிருஷ்ணர் ஒருமுறை தர்மராஜாவைப் பார்த்து, “தர்மராஜாவே! உலகத்தில் இருக்கும் யாராவது ஒரு கெட்டவரைப் பார்த்து அழைத்து வா” என்றார். துரியோதனனைப் பார்த்து, “நீ யாராவது ஒரு நல்லவரைக் கண்டுபிடித்து அழைத்து வா” என்றார். இரண்டு பேரும் வெறும் கையோடு திரும்ப வந்தார்கள். தர்மராஜா ஏற்கனவே அவர் மனதாலே நல்லவர் என்பதனால் பார்ப்பவர் எல்லாம் அவருக்கு நல்லவர்களாகவே தெரிந்தார்கள். "கிருஷ்ணா! நான் எப்பேர்ப்பட்ட கெட்டவர்களிடம் கூட ஒரு சில நல்ல குணத்தைப் பார்த்தேன். அதனால் யாரையும் கெட்டவர் என்று சொல்ல முடியவில்லை. அதனால் நான் வெறும் கையோடு வந்திருக்கிறேன்" என்று சொன்னார். துரியோதனன் சொன்னான், "கிருஷ்ணா! உலகம் எப்பேர்பட்ட நல்லவர் என்று சொல்கிறவர்களிடம் கூட ஒரு சில கெட்ட குணம் இருப்பதை நான் பார்த்தேன். அதனால்தான் நான் வெறும் கையோடு வந்திருக்கிறேன்" என்று சொன்னான். இரண்டு பேருமே வெறும் கையோடு வந்து சேர்ந்தார்கள். தர்மராஜாவால் ஒரு கெட்டவனைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. துரியோதனனால் எந்த ஒரு நல்லவனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களுடைய மனதை வைத்துத்தான் சமுதாயத்தை எடைபோடுகிறார்கள். ஏனென்றால் உங்கள் மனதே சமுதாயம். உங்கள் மனம்தான் சமுதாயத்தை உருவாக்குகிறது. உங்கள் மனதின் போக்கினால்தான் சமுதாயம் நீங்கள் நினைப்பது போல் தோற்றமளிக்கிறது. பரிசோதித்து பாருங்கள் எங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் ஆசையைத் திணிக்கிறதோ அங்கெல்லாம் விழிப்புணர்வோடு அந்த ஆசையை நிறுத்துங்கள். எங்கெங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் அச்சங்களை திணிக்கிறதோ, அங்கேயும் விழிப்புணர்வோடு அந்த அச்சங்கள் உள்ளே வராமல் தடுத்து நிறுத்துங்கள். மூன்றாவதாக இந்த சமுதாயமே உங்கள் மனக் கற்பனையால் நீங்கள் உருவாக்கிய மாயை என்று உணருங்கள். இந்த மூன்று கருத்துக்களை மட்டும் இன்றைய செய்தியாக உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பீர்களா? மற்றவர் உங்களைப் பார்த்து என்ன நினைக்கிறார் என்பதற்காக வாழாதீர்கள். ஏனென்றால் அவர் உங்களைப் பார்த்து 'நீங்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என்ற கவலையில்தான் மூழ்கியிருப்பார். மற்றவர்களுக்காக உங்கள் வாழ்க்கையில் ஆசைகளையும், அச்சங்களையும் பெருக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் மனம்தான் இந்தச் சமுதாயத்தை உருவாக்கி, மாயையை உருவாக்கி, அதில் உங்களைச் சிக்கவைத்து, மயக்கி, துன்பத்திற்கு ஆளாக்கிறது. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் பொறுப்பு. இதனால் இந்த மூன்று கருத்துக்கள். உங்களால் இந்த சமுதாயம் மீண்டும் மீண்டும் உங்களுக்குள் செலுத்தும் ஆசைகளை அனுமதிக்காதீர்கள். உங்களுக்குள் சமுதாயம் மீண்டும் மீண்டும் செலுத்தும் அச்சங்களை அனுமதிக்காதீர்கள். இன்னொன்று, நாமெல்லாம் கேட்பது உண்டு, இந்த சமுதாயத்தைப் பார்த்து நாமெல்லாம் கற்றுகொள்ளவில்லையென்றால் நாமெல்லாம் எப்படி வளர்வது?. நீங்கள் உங்களை உங்களோடு மட்டும் ஒப்பிட்டு வளருங்கள். இன்று 10 ரூபாய் அளவிற்கு சாதனை செய்திருந்தால் நாளை 11 ரூபாய் அளவிற்கு வளருங்கள். உங்களோடு உங்களை ஒப்பிட்டு உங்கள் வளர்ச்சியை உருவாக்குங்கள். இந்த மூன்றே மூன்று கருத்துக்களை மட்டும் உங்கள் வாழ்க்கையின் பாகமாக மாற்றிக்கொள்ளுங்கள். சமுதாயம் உங்கள் மீது திணிக்கும் ஆசைகளை அனுமதிக்காதீர்கள். உங்கள் மனம்... இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி காண்பிக்கும். உங்களை நீங்களே வருத்திக் கொள்வதிலிருந்து... இந்த மாயையின் பிடியினில் சிக்கிக் கொள்ளாமல் தடுத்து நிறுத்தி உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மனம் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிக் காட்டி நீங்கள் வாழ்க்கையை துக்கமாக்குவதை தடுத்து நிறுத்துங்கள். இந்த மூன்று கருத்துக்களையும் உள்வாங்கி நீங்கள் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துங்கள். நீங்கள் இந்த சமூகத்திற்கும், உங்கள் வாழ்க்கைக்கும் அப்பாற்பட்ட ஆன்ம சக்தி என்று உணருங்கள். இந்த ஞானக் கருத்துக்கள் உங்களுக்குள் சென்று உங்களுக்குள் தியானமாக மலர்ந்து, ஆனந்தம் உங்களுக்குள் நிறைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். இந்த ஞானக்கருத்துக்களோடு தியானத்தை உங்கள் வாழ்க்கையில் சேர்த்தீர்களானால் ஆனந்தம் உங்கள் வாழ்க்கைத் தன்மையாக மாறிவிடும். [Page 29: blank/decorative -- skipped] எங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் ஆசையைத் தினிக்கிறதோ அங்கெல்லாம், விழிப்புணர்வோடு அந்த ஆசையை நிறுத்துங்கள். எங்கெங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் அச்சங்களை தினிக்கிறதோ, அங்கேயும் விழிப்புணர்வோடு அந்த அச்சங்கள் உள்ளே வராமல் தடுத்து நிறுத்துங்கள். மூன்றாவதாக இந்த சமுதாயமே உங்கள் மனக்கற்பனையால் நீங்கள் உருவாக்கிய மாயை என்று உணருங்கள். இந்த மூன்று கருத்துக்களை மட்டும் இன்றைய செய்தியாக உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். ஒரு முறை உங்கள் வாழ்க்கையில் பரிசோதனை செய்து பாருங்கள். அது எந்த அளவுக்கு நடைமுறைக்கு சாத்தியமாக இருப்பதையும் உங்கள் வாழ்க்கையில் ஆனந்தத்தை உருவாக்குவதையும் நீங்களே நேரடியாக காண்பீர்கள்.

  • பரமஹம்ச னித்யானந்தர் Printed & Published by Nithyananda Dhyanapeetam (Dhyanaeeta Charitable Trust) Nithyanandapuri, Kallugopahalli, Off Mysore Road, Bidadi - 562 109, Bangalore District, Karnataka, INDIA. Ashram : +91-80-7202084, PRO/Secretary : 9448058598 [email protected] www.nithyananda.org Ebook ISBN 979-8-88572-339-8