Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

55. சம்ஸ்காரங்கள்

# சம்ஸ்காரங்கள்

உங்களுடைய தினசரி நடவடிக்கைகளில், நீங்கள் செய்கிற செயல்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களா ?

நிறைய டி.வி, சினிமா பார்க்கிறீர்கள். நிரைய பத்திரிக்கைகளையும் படிக்கிறீர்கள். அவற்றில் பெரும்பாலும் விபத்துக்கள் பற்றியச் செய்திகளாகத்தான் வருகிறது, அகையெல்லாம் சுவாாஸ்யமாககான் பார்க்கிறீர்கள்.

சுவாரஸ்யமாகப் படிக்கிறீர்கள். சுவாரஸ்யமாகக் கேட்கிறீர்கள்.

சங்கரா் மிக அழகாகச் சொல்கிறார், ''ஆஹார சுத்தையோ, ஸ்மிருதி சுத்தைஹி,'' உள்ளே எடுத்துக் கொள்ளும் ஆகாரம் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அதன் பொருள்.

இங்கு ஆகாரம் என்பது உள்ளே எடுத்துக் கொள்ளும் உணவைப் பற்றி மட்டும் சொல்லவில்லை.

ஐந்து புலன்கள் வழியாகச் செல்லும் ஒவ்வொன்றுமே ஆகாரம்தான். பார்ப்பது, கேட்பது, உணர்வது, நுகாவது, சுவைப்பது என எதன் வழியாகத் தகவல் சென்றாலும் அதுவும் ஆகாரமே.

உண்ணும் உணவு உடலின் பாகமாக மாறுவதுபோல் காலை முதல் மாலை வரை எத்தகைய உணர்வை ஆகாரமாக எடுத்துக் கொள்கிறோமோ அதுதான் நம்முடைய பாகமாகவும் மாறும்.

நீங்கள் தொலைகாட்சியில் வரும் துக்கமான அதிகம் பார்ப்பவராக இருந்தால் இது உங்களுக்கு அனுபவமாகப் புரியும்.

ஒரு அரை மணிநேரம் கணவர் வீட்டுக்கு வரவில்லை என்றாலும், என்ன செய்கிறீர்கள் ? வாசலுக்குச் சென்று சாலையை எட்டி எட்டி பார்ப்பீர்கள். வராந்தாவில் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள். தெரிந்தவாகளுக்குப் போன் செய்து பீதியில் பிதற்றவும் செய்வீர்கள்.

நிச்சயம் அடுத்த அரை மணிநேரத்திற்கெல்லாம் இரத்த அழுத்தம் எகிறிவிடும். ''என்ன ஆச்சோ ? ஏது ஆச்சோ ? ஆபீசுக்குப் போன் பண்ணினேன். எடுக்கவில்லையே ? கிளம்பிட்டாருன்னு சொன்னாங்களோ... இந்தச் செல்போன் வேற... இப்பத்தான் வேலை செய்யமாட்டேங்கிறதே, '' என்று புலம்ப ஆரம்பித்துவிடுவீர்கள். இல்லையா ?

ஒரு அரை மணிநேரம்தான் தாமதம் என்றாலும், மனம் இல்லாத கற்பனைகளையெல்லாம் செய்து, மனக்கண் முன் காட்சிபோல் காண்பித்துவிடும்.

சாத்தியம் இல்லாத காரணங்களையெல்லாம் புதிதுப்புதிதாக உருவாக்கும். இதற்கு

நாம் அளவுக்கு மீறி உள்வாங்கி வைத்திருக்கும் பய சம்ஸ்காரங்கள்தான் முக்கியமான காரணம்.

சொல்லப்போனால், நல்ல செய்திகளை உள்வாங்குபவர்கள் ஒருபோதும், உணர்ச்சி களால் பாதிக்கப்பட மாட்டார்கள். "அவருக்கு என்ன ஆகியிருக்குமோ?" என்ற சி று எண்ணத்தையே கலக்கமாக, பீதியாக மாற்றி, வயிற்றைப் பிசைய வைக்கும் உங்களுடைய மனத்தின் பகுதியைத்தான், சம்ஸ்காரங்கள் என்கிறோம்.

சம்ஸ்காரங்கள் எண்ணப்பதிவுகளும், எண்ணங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவை.

சம்ஸ்காரங்கள் பலவகைப்பட்டவை. சில சம்ஸ்காரங்கள் மனக்குழப்பங்களையும், சில சம்ஸ்காரங்கள் நோய்களையும். இன்மை சில சம்ஸ்காரங்கள் பகை. மது போன்ற அடிமைத்தனங்களையும் உருவாக்குகின்றன.

புற்றுநோயும், மன அமைப்பும்

Cancer and Mental Setup

சமீபத்தில் ஒரு பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது மார்பகப் புற்றுநோய் பற்றிய முக்கியமான ஆராய்ச்சி அறிக்கை.

அந்த அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள், 'மாா்பகப் புற்றுநோய் வந்த அத்தனை பெண்களினுடைய வாழ்க்கை முறை பற்றியும், அவர்களின் எண்ண ஓட்டம் பற்றியும் ஆராய்ச்சி செய்தோம். அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்குச் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அந்தப் புற்றுநோய் வந்த அத்தனைபேரின் எண்ண ஒட்டமும், எதிர்மறையான எண்ண ஒட்டமாகவே இருந்திருக்கிறது.''

இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டவர்களில்...

100 பேருக்கு மார்பகப்புற்று நோய் வந்தது என்றால், அந்த 100 பேரையும் அவா்கள் ஆராய்ச்சி செய்தபோது, கண்டுபிடித்த உண்மை இது. 98 பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே புற்றுநோயை வரவழைத்துக்கொள்ளும் எதிர்மறை மன அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். எதிர்மறையான எண்ணங்களாக மாறியிருந்தது,''என்று சொல்கிறார்கள்.

வாழ்க்கையில் தங்களுக்கென பிடிப்பு இல்லாமல் போனதனாலோ, ஏதோ ஒரு காரணத்தினால் கணவர் இறந்ததினாலோ, வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததினாலோ அல்லது தமக்குள்ளே அடுக்கி அடுக்கி வைத்திருந்த துக்க எண்ணங்களினாலோ அல்லதுதான் விரும்பிய சுதந்திரத்தை அடைந்து வாழ முடியாததினாலோ, வாழ்க்கைமுறை மாறியிருக்கிறது. மேலும் இவர்கள் ஏதாவது சில காரணத்தினால், தங்களுக்குள் தாங்களே எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

ஜீவன் முக்த வாழ்வு

எதிர்மறையாகவே வாழத் துவங்கி விடுகிறார்கள். வாழ்வை எதிர்க்கும் மன அமைப்புடனும், எதிர்மறை எண்ண ஓட்டங்களையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மொத்தப் பிரச்சினைகளுக்கும் சுலபமான தீர்வு, மனஅமைப்பை மாற்றுவகே.

ஒருவர் அல்ல, இருவா் அல்ல, 10,000த்திற்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளைச் சந்தித்து, அவர்களின் மன அமைப்பை ஆராய்ச்சி செய்த பிறகு வெளியிடப்பட்டிருக்கும் முடிவு இது.

விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் செய்தியில், நாம் கெரிந்துகொள்ள வேண்டியுற ....

10 ஆண்டுகளுக்காவது. உங்களை நீங்களே வருத்திக் கொண்டு. வாழ்க்கையில் துக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு. வேதனையிலேயே வாடினால் மட்டும்கான் பற்றுநோய் (Cancer) வருகிறது.

அப்படியென்றால் அந்த அளவிற்கு நீங்கள் உங்கள் உடலை அழித்துக் கொள்கிறீா்கள். அதனால்தான் அந்த மருத்துவ ஆராய்ச்சியில் மிக அழகாகச் சொல்கிறார்கள். "குறைந்த பட்சம் 10,000 முறையாவது, உங்களை நீங்களே துக்கத்தில் ஆழ்த்திக் கொண்டால்தான் உங்களுக்குக் கேன்சர் வாடும். அப்பொமுது பற்றுநோய் என்று பகிதாக ஒரு பகுதியையே உருவாக்கும் நச்சுப் பொருட்கள் உங்கள் உடலில் சுரக்கிறது," என்று சொல்கிறார்கள். இந்தக் கருத்துகளை எல்லாம் பார்க்கும்போது தெளிவான ஒரு உண்மை புலப்படுகிறது.

நாம்தான் நம்முடைய உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சினைகளுக்கும், துக்கங்களுக்கும் உள்வாங்குகிறோம், கொண்டோமானால், புற்று நோயே வராமல் செய்துவிட முடியும். மன அமைப்பை புரிந்து கொண்டால் நோய்களையே தடுத்துவிடலாம்.

சாரைப் பாம்புகளை விட மோசமானவை சம்ஸ்காரங்கள்

Samskaras are more dangerous than poisonoUSU Snakes

ஒரு அருமையான ஆராய்ச்சி. விஸ்கான்சன் யூனிவர்சிட்டியில் இந்த ஆராய்ச்சியைச் செய்தார்கள். நம்முடைய உலக சமுதாயத்தில், ஒருசில பிரிவினர், சாதாரண நடைமுறை மொழியை உபயோகிக்காமல் மிகவும் கலாச்சாரமான மொழியைப் பேசுவார்கள்.

கலாச்சாரமான வார்த்தைகளை உபயோகிக்கிற இந்தப் பிரிவினா்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அவாக்குடைய ஆராய்ச்சியில் ... இந்தக் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மன அழுத்தத்தில் விழும் தன்மை, மிக மிகக் குறைவாக இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள்.

அந்த ஆராய்ச்சியின் முடிவில், நல்ல கலாச்சாரமான, நல்ல மொழியை, நல்ல வார்த்தைகளை உபயோகிக்கும் மனிதர்கள் மன அழுத்தத்தில் விழுவதில்லை. என்று கண்டுபிடித்தார்கள். ஒருவேளை மன உளைச்சலில் வீழ்ந்தாலும், சில நிமிடங்களிலேயே மிக எளிதாக, வேகமாக அதிலிருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும் நிரூபித்திருக்கிறார்கள்.

ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். மன்உளைச்சல் என்பது வேறு ஒன்றும் இல்லை, நாம் மீண்டும் மீண்டும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளே.!

"நம்முடைய எண்ணங்களுக்கு நாம் எந்த அளவிற்குப் பொறுப்பு?'' என்று ஒருவா் நம்மிடம் கேட்டபோது, இப்படிப் பதிலளித்தோம்.

"நம்முடைய எண்ணங்கள் தாங்களாகவேகானே நமக்குள் வாண்டு இருக்கின்றன. இல்லை, வேறு யாராவது இடையில் நுழைக்கிறார்களா? வேறு யாராவது இடையில் நுழைக்கத்தான் முடியுமா?... நிச்சயம் இன்னொருவரால் முடியாதல்லவா? அப்படியென்றால்... நம்முடைய எண்ணங்களுக்கு நாம்தான் முழுப்பொறுப்பு. எந்த ஒரு நிகழ்ச்சி நிகழ்வதற்கு முன்பும் அல்லது ஏதேனும் நபரைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பும் நாம் எந்த வகையான எண்ண ஓட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு செல்கி றாமோ, அதே வகை பதில்தான் நமக்குக் கிடைக்கும். வரவேற்பும் அதே போன்றுதான் கிடைக்கும்.

உண்மையில் நம்முடைய எண்ண ஒட்டத்திற்கு, மற்றவாகளுடைய மனத்தையும், மன ஒட்டத்தையும் வழி நடத்தும் சக்தியுண்டு. நம்முடைய எண்ண ஓட்டத்தில் பதிந்திருக்கும் நினைவுப் பகுதிகள்தான் நம்மை மன அபத்ததத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துகிறது. அந்த எண்ணப் பதிவுகளையே சம்ஸ்காரங்கள் என்று அழைக்கிறோம். சம்ஸ்காரங்கள் என்பவை, நம்முள் இருக்கும் எண்ணப் பதிவுகள் அல்லது உணர்வுப் பதிவுகள். அவை எப்போது வேண்டுமானாலும் நம்மைச் சீண்டும் தன்மை கொண்டவை. சம்ஸ்காரங்கள் சாரைப் பாம்பைவிட மோசமானவை.