4. நன்றியுரை
# நன்றியுரை
நன்றி! நன்றி!! நன்றி !!!
"பரமஹம்ஸரே நேரடியாக எங்களிடம், இந்தப் புத்தகத்தை சேவையாக மக்களுக்குத் தரவேண்டும். எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இந்தப் புத்தகத்தை 100 ரூபாய்க்கோ, 150 ரூபாய்க்கு அதிகமாகாமலோ மக்களுக்குத்தர முழு முயற்சி செய்யுங்கள் என்று எங்களுக்குத் தந்த அன்புக் கட்டளையை நிறைவேற்றியிருக்கிறோம், '' என்று சொல்லும் நித்யானந்தா பதிப்பகத்தாருக்கு நன்றிகள். நமஸ்காரங்கள்.
புத்தகம் எழுதும் நிபுணர்களிடம் ... 'ஜீவன் முக்தி எனும் இந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் ஆகும் ?'' என்று கேட்டோம். "ஒரு வருடத்திற்குக் குறைவாக இதை உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை, " என்று சொன்னார்கள்.
அச்சகத்தார்களிடம், 'இந்தப் புத்தகத்தை அச்சில் கோர்த்து புத்தகமாகக எவ்வளவு நாட்கள் வேண்டும் ?'' என்று கேட்டோம். ''நாட்களா! ? மூன்று மாதத்திற்குக் குறைவாக இதை அச்சில் கோர்க்க இயலாது'' என்றார்கள். (DTP, Layout, Designing, Printing, Binding உட்பட).
பதிப்பகத்தார்களிடம் 'இந்தப் புத்தகத்தை, குறைந்தது எவ்வளவு ரூபாய்க்கு அச்சிட முடியும் ?'' என்று கேட்டோம்.
எழுத்தாளருக்கான ஊதியம், உரிமைக்கான தொகை, இந்தப் புத்தகம் வெளிவருவதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த இருபத்தைந்து பேருக்கான ஊக்கத்தொகை என்ற எதையுமே கணக்கில் எடுக்காமல் பார்த்தால்கூட , புத்தகத்தை அச்சிடுவதற்கு மட்டுமே 150 ரூபாய் தேவைப்படும்.
மற்ற செலவுகளையெல்லாம் சேர்த்தால், இந்தப் புத்தகத்தை 200 ரூபாய்க்குக் குறைவாகத் தரமுடியாது.
"உங்களால் 100 ரூபாய்க்கு எப்படித தரமுடிகிறது?" என்று எங்களையே திருப்பிக் கேட்டுவிட்டார்கள்.
'' பலருடைய சேவையாலும், தியானபீடத்தின் நேரடி நன்கொடையாலும்,

பதிப்பகத்தார் முடிந்த அளவிற்கு எல்லா வகையிலும் செலவுகளைக் குறைத்ததாலும்தான், யாரையும் பிரமிக்க விலையில் இந்தப் புத்தகத்தை எங்களால் தர என்று நன்றிகளை தியானபீடத்திற்கு இதயத்தின் ஆழத்திலிருந்து காணிக்கையாக்குகிறோம்.
இவை வெயெல்லாவற்றையும் தாண்டி.... தமிழில் புலமையோ, உரைநடையில் அனுபவ உரமோ, புத்தகத் துறையில் முன் அதைபவமோ இல்லாத, முழுப்பது வயதுக்கும் குறைவான கைப்பிடி
பிரம்மச்சாரிகளை வைத்து பரமஹம்ஸரின் அமுதமுமாழிகளை நமக்களித்த சத்குருநாதருக்கு நன்றிகள் ஆயிரம். நமஸ்காரங்கள் கோடி.
புலவர்களே செய்யத் தடுமாறும் அரும் பணியை இரண்டே மாதத்தில் செய்துமுடித்த மட்டும் ரன்றிகள் சொல்ல மாட்டோம். ஏனென்றால் யாருக்கும் கிடைக்காத பெரும்பாக்கியத்தைத் தட்டிச்சென்ற அதிர்ஷ்டக்காரர்கள் இவர்கள். எங்களின் நன்றிகள் மட்டுமல்ல, ஜீவன் முக்தி புத்தகத்தைத் தொடும் ஒவ்வொருவரின் உணர்வுகளே போதும், இவர்களின் ஏழேழு ஜென்மத்திற்கும் புண்ணியங்களைத் தரும்.
''இதையெல்லாம் இந்தப் புத்தகம் நமக்குக் கிடைத்தது?"என்ற கதையை அவர்களிடம் கேட்டபோது, எங்களின் கண்கள் குளமாகிவிட்டன.
அதை அப்படியே சொல்லவேண்டுமானால் ஒரு தனி புத்தகம்தான் எழுத வேண்டும். இருந்தாலும், உங்களோடு நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய சில சம்பவங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
ஒரே மாதத்தில் முதல் புத்தகம் உருவாகிவிட்டது.
2009 ஜனவரி 1 அன்று, ஜீவன் முக்தி புத்தகத்தை வெளியிடுவதைப் பற்றிப் பரமஹம்ஸா் சொன்னதிலிருந்து, உற்சாகத்தோடு பெங்களூர் பிடதி ஆஸ்ரமத்தில் இருந்தபடியே வேலைகளைச் செய்ய ஆரம்பித்து
விட்டோம். பல ஆண்டுகள் செய்ய வேண்டிய வேலையை, இரண்டு மாதம் மற்றும் மூன்றே நாட்களில் செய்ய முடியுமா ? என்று முதலில் முணுமுணுத்தோம். உண்மைதான்.
அப்படி முணுமுணுத்த எங்களின் பக்தி ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து, ஒரே மாதத்தில் பரமஹம்ஸா், 5200 மணி நேரங்கள் பேசி வைத்திருந்த சொற்பொழிவுகளில் உள்ள எல்லா முக்கிய கருத்துகளையும் தேர்வு செய்து, அவற்றை முறையாக்கி எழுத்து வடிவில் கொண்டுவந்து, அப்புறம் அதைப் புத்தகமாக்குவது எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு எப்படிச் சாத்தியம் என்று நாங்கள் முணுமுணுத்து உண்மைதான். தொலைபேசியில் பேசி, இ-மெயிலில் கட்டுரைகளைச் சரிபார்த்து, படிப்படியாக ஒரே மாதத்தில் புத்தகத்தின் மொத்தப் பணியையும் முடித்துவிட வைத்து விட்டார்.
புத்தகம் இவ்வளவு சீக்கிரம் முடிந்ததால் எங்களுக்குக் குஷி தாளவில்லை.
"இதோ இன்று முடிந்துவிட்டது .... பரமஹம்ஸரிடம் காட்டிவிடலாம்," என்று ஆவலோடு அன்று இரவு நாங்கள் தயாராகி கொண்டிருக்க, எங்களின் இதயமே வெடிக்கும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
எதிர்பாராமல் சட்டென்று ஏற்பட்ட மின்சார விபத்தில், புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களும், பதிவுகளும் இருக்கக்கூடிய இரண்டு கம்ப்யூட்டர்களும் பாழாகிவிட்டன. நிபுணாகள் 'இந்தக் கம்ப்யூட்டரில் இருக்கும் எந்தச் செய்தியையும் இனி எடுக்க முடியாது. அந்த அளவிற்கு மெமரி பைல் பாழாகி விட்டது,"என்று
சொல்லிவிட்டார்கள்.
கண்கள் கலங்க, இந்தச் செய்தியை பரமஹம்ஸரிடம் சொன்னோம், அவர் சிறிதும் மாற்றமில்லாமல், 'இப்போது அந்தக் கம்ப்யூட்டரை இயக்கச் சொல்லுங்கள், '' என்றார்.
தொலைபேசியில் பரமஹம்ஸா் சொன்னதைக் கேட்டு கம்ப்யூட்டாின் மெயின் ஸ்விட்சை அழுத்தினோம்.
அந்த ஆச்சரியம், எங்களின் கலியுக விஞ்ஞான கண்களையே கலங்கடித்துவிட்டது! 'இதுவரை இந்தக் கம்ப்யூட்டருக்கு எந்தப் பிரச்சனையுமே நிகழவில்லை, '' என்பதுபோல அந்தக் கம்ப்யூட்டார் உயிர்பெற்று இயங்க ஆரம்பித்துவிட்டது.
புத்தகத்தைத் தொகுக்கும் சேவையில் ஈடுபட்டிருந்த பிரம்மச்சாரிகளில் இருவா இன்ஜினியா்கள்,
கண்ணெதிரேதான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. எங்களாலேயே நடந்ததை நம்ப முடியவில்லை என்று கண்கள் பணிக்க பகிர்ந்து கொண்டார்கள்.
உடனே அடுத்த மூன்று மணி நேரத்திற்குள், கோடிக்கண்தரிசன ரதபாதயாத்திரை முடித்து வந்திருந்த பரமஹம்ஸரிடம் இ-மெயில் மூலமாக ஜீவன் முக்தி புத்தகம் சேர்ந்தது.
இரண்டாவது புத்தகம் பத்தே நாட்களில் தயாரானது.
மொத்தப் புத்தகத்தையும் பார்த்து முடித்த பரமஹம்ஸர், 'இன்னும் ஆழமாக நம்மால் தரமுடியும், '' என்று சொன்னார்.
புத்தகத்திற்குள் இன்னும் ஆழமான பல கருத்துகளை சேர்ப்பது பற்றியும், எதை எப்படிச் செய்வது என்பது பற்றியும், நேரடியாக தொலைபேசியிலேயே சொல்லி முடித்தார்.
அப்போது கல்பதரு தியான முகாம்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடைபெற்றதால், மொத்தக் குழுவும் சேலம் தியானபீடத்திற்கு மாற்றப்பட்டது.
பலமுறை பல தவறுகளை, பக்கத்திற்குப் பக்கம் பொறுமையோடு பரமஹம்ஸா சுட்டிக் காட்டியதை, புலமையோடு எளிதாய்ச் செய்து முடிக்கும் புலவர்களாக இல்லாவிட்டாலும், தவப்புதல்வர்களாக இருந்ததால், தங்களின் மொத்தச் சக்தியையும் போட்டு எப்போபட்டாவது உடனுக்குடனே சரிசெய்து அனுப்பினார்கள்.
பரமஹம்ஸா், பிழைகள் பல பல இருப்பதை மீண்டும் மீண்டும் கருணையோடு சுட்டிக்காட்டியபடியே தம் பணிகளைத் தொடர்ந்தார்.
எல்லாத் திருத்தங்களையும் செய்து முடித்து புத்தகத்தை வெளியிட இப்போது ஒருமாதம் மட்டுமே மீதம் இருந்தது.
வந்தது. அப்போது சேலத்திலிருந்து கால அவகாசம் நம்மிடமில்லை. நேரடியாகப் பதிப்பகத்தார் இருக்குமிடத்திற்கே கிளம்பிவிடுங்கள். அதுதான் சரியாக இருக்கும். ''
உடனே மொத்தக் குழுவும் சென்னைக்குப் புறப்பட்டது.
ஹோட்டல் சாப்பாடு, சென்னை சூடு. இதற்கெல்லாம் தாக்குப்படிக்காமல் சிலருக்கு உடல் உபாதைகளும் ஏற்பட்டுவிட்டன. சின்ன அறைக்குள்
பதிப்பகத்தின் குடெளனிலேயே 10X20 அறைக்குள்ளும், இன்னொரு ஐந்து கம்ப்யூட்டர்களோடு வேலைகளைத் தொடர ஆரம்பித்துவிட்டோம்.
பிரம்மசாரிகளும், பக்தா்களும் வேலைகளை உற்சாகமாக 25 ஆரம்பித்தார்கள். கால்நீட்டி உட்காரக்கூட அங்கு இடமில்லாமல், ஜீவன் முக்தி புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கான அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.
தவம் செய்து, மரத்தடியில் படுத்துறங்கி, பிகைஷ் எடுத்து, தனி நபராக இருந்து தியானபீடத்தை உருவாக்கி, இன்று உலகை வலம் வரும் பரமஹம்ஸரை பார்த்துப் பார்த்து வளர்ந்த எங்களுக்கு மேற்சொன்ன எதுவுமே கஷ்டமாகத் தெரியவில்லை.
அவசர அவசரமாக அசுரவேகத்தில் அடுத்த பத்தே நாட்களில், இரண்டாவது புத்தகமும் தயாராகிவிட்டது.
ஆனால், இந்த இரண்டாவது புத்தகமும் அச்சுக்குச் செல்லவில்லை. அடுத்த சோதனை இன்னும் ஆழமாயிருந்தது.
மூன்றாவது புத்தகம் ஏழே நாளில் தயாரானது
உற்சாகத்தோடு ஜீவன் முக்தி முத்தி வெளியீட்டுவிழாவிற்கான பணிகளில் இறங்கியிருந்த மொத்தக் கூட்டத்திற்கும் வர்தது அடுத்த பக்கி சோதனை!
சென்னையில் ஆரம்பித்த இரண்டாவது நாள் இரவு ஒன்றரை மணிக்குப் பரமஹம்ஸா தொலைபேசியில் அழைத்தார்.
எங்களின் நலம் விசாரித்து, மிகவும் கனிவான குரலில் பரமஹம்ஸர் பேசி னார். கடைசியாக பேசி முடிக்கும் முன்பு, 'ஜீவன் முக்தி புத்தகத்தின் பாதிக்கும் மேற்பட்ட அத்யாயங்களை சுட்டிக்காட்டி, இவற்றை இன்னும் சுருக்கி, இந்த சில அத்யாயாங்களை எப்படியாவது சேர்த்துவிட முடியுமா? கொஞ்சம் முயற்சித்து பாருங்கப்பா ... , ' என்று கனிவான குரலில் எங்களிடம் பரமஹம்ஸரே கேட்டுவிட்டார்.
மொத்தக் குழுவும் இந்த ஒரு கேள்வியில் ஆடிப்போய்விட்டது.
"நாம் கடவுளிடம் வரம் கேட்போம். கடவுளே நம்மிடம் வரம்கேட்டால் என்ன ஆவது!'' என்று உருகிவிட்டோம்.
''எப்படிப் பார்த்தாலும், 10 நாட்களுக்குக் குறைவாக அச்சிட ஆரம்பிக்கும் பட்சத்தில், முன்பதிவு விற்பனையாகியிருக்கும் இரண்டரை இலட்சம் புத்தகங்களை பல அச்சகங்களின் உதவியோடு முயற்சித்தால்கூட அதில் பாதியை தருவதே எங்களுக்குச் சாத்தியமில்லை," என்று திட்டவட்டமாகப் பதிப்பகத்தார்கள் சொல்லிவிட்டார்கள்.
இப்போது என்ன செய்வது? மீதம் இருப்பது 13 நாட்கள்தான்.
''கரணம் தப்பினால் மரணம்!'' என்பார்களே அது இதுதான்.
Section 2
''பரமவறம்ஸர் கேட்டதைச் செய்யவேண்டுமானால்... 200 பக்கங்களை டைப் (DTP) செய்து அதற்கு பின் புது வரிசையில் 800 பக்கங்களையும் வடிவமைத்து கடைசி சில நாட்களில் மொத்தப் புத்தகத்தையும் முடித்தாக வேண்டுமல்லவா? முடியுமா நம்மால் ?'' என்று குழுவிலிருந்த ஒருவா் கேட்டார்.
பதிப்பக பிரம்மச்சாரி சொன்னார் "இது இன்னொரு புது புத்தகம் செய்கின்ற வேலை. கொஞ்சம் பிசகினால்கூட புத்தக வெளியீட்டு விழாவை, ஜீவன் முக்தி அட்டையை வைத்துத்தான் நடத்த வேண்டியிருக்கும். தேவையா இந்த விஷப்பரீட்சை?''
கடைசியில் எல்லோரும் சேர்ந்து முடிவுசெய்தோம்.
''சொன்னது பரமவறம்ஸர்.
அவர் சொன்னாலே நடந்துவிடும்.
இப்போது சொல்லவில்லை. கேட்கிறார்.
இல்லை என்று சொல்ல நாம் யார்? செய்வதைச் செய்வோம், மீதுமெல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார். "என்று மொத்தக் கூட்ட(மம் இலங்கையை நோக்கி பாலம் கட்ட உற்சாகமாய் எழுந்த ஹனுமார் கூட்டமாய் எழுந்தது.
முதல் மாதம் இரண்டு, மூன்று மணிநேரம் மட்டுமே தூங்கிய புத்தக குழுவிற்கு, சென்னைக்கு வந்த பிறகு இரண்டு நாளைக்கு ஒருமுறை மட்டுமே தூங்க நேரம் இருந்தது.
அப்போது ஏற்பட்ட பக்தி சோதனைகள் வா்ணிக்க இயலாது.
பரமஹம்ஸரிடம் வேண்டிக் கொண்ட மாத்திரத்தில் மக்கள் வரங்களைப் பெற்றுச் செல்கிறார்கள். எங்களுக்கோ அங்கு ஒவ்வொரு படியிலும் ஒரு சோதனை காத்திருந்தது.
இரவு பகல் அயராது வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததால்,ஏற்கெனவே அங்கு வேலை செய்தவர்கள் பலர்
ஒடிப்போய்விட்டார்கள். இன்னும் சிலா் வந்து சில மணி நேரங்கள் மட்டுமே இருந்தார்கள்.
கடைசியில் அஸ்ரமவாசிகள் மட்டுமே புத்தகத்தை வடிவமைக்கும் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம்.
புதிதாய் இந்தப் புத்தக அச்சு நுட்பங்களை கற்றுக்கொண்டிருந்ததால், அவர்களாலும் ஓரளவு வேகத்திற்கு மேல் துரிதமாகச் செய்ய முடியவில்லை. இது ஒரு பக்கம்.
பதிப்பகத்தார் இன்னொருபக்கம் எங்களை அவசரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ''எங்களின் எல்லை தாண்டிவிட்டது. இன்றைய தேதி பிப்ரவரி 22. இதற்கு மேல் அதிகரிக்கும் ஒவ்வொரு நாளுக்கும், நாம் தரவேண்டிய இரண்டரை இலட்சம் புத்தகங்களில் இருந்து, ஒவ்வொருநாள் தாமதத்திற்கும் 10,000 புத்தகங்கள் குறையும்,'' என்று சொல்லிவிட்டார்கள்.
''புத்தகத்தில் ஒப்புதல் வாங்கப்பட்ட பக்கங்களை மட்டும் முதலில் அச்சுக்கு அனுப்புவோம்," என்று முடிவுசெய்து, 194 ஆவது பக்கத்திலிருந்து அடுத்த 300 பக்கங்களை அச்சுக்கு அனுப்பினோம். அதற்கு முன்னும், பின்னும் இருந்த அத்யாயங்களில்தான் நிறைய புது அத்யாயங்கள் சேர்க்க வேண்டியிருந்தது.
ஒருபுறம் புத்தகம் அச்சாகிக்கொண்டே இருந்தது.
இன்னொருபுறம் அடுத்தடுத்த பக்கங்களை எடுத்து வைத்து, புத்தகமாக்கி பக்தி சிரத்தையோடு எங்களின் அச்சுக்கோர்ப்புப் பணி தொடர்ந்து கொண்டேயிருந்தது. புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் தயாராகத் தயாராக, உடனுக்குடன் தொடர்ந்து அச்சுக்குச் சென்று கொண்டிருந்தது.
லீலை உச்சத்தை எட்டியது! அன்று பிப்ரவரி 26, சாயங்காலம்.
26 இரவு அன்று பல பிரச்சனைகள் ஒன்றாய் முளைத்துக்கொண்டது. அன்று அச்சுக்கு அனுப்ப வேண்டிய புத்தகத்தின் முதல் நூறு பக்கங்கள் மற்றும் புத்தகத்தின் கடைசி பக்கங்கள், அதாவது இருநூறு பக்கங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பைல்கள் மொத்தமாகச் செயல் இழந்துவிட்டது. corrupt ஆகிவிட்டது.
மீதமுள்ள இருநூறு பக்கங்களை அச்சுக்கு அனுப்ப அதுதான் கடைசி நாள். அப்படி அனுப்பாவிட்டால்... அடுத்த தாளே ஆரம்பித்தாகவேண்டிய புத்தக பைண்டிங் வேலை நடக்காது,. என்பது எங்கள் எல்லோருக்குமே தெரியும்.
இப்போது, கடைசி இருநூறு பக்கங்களின் சேமிப்பு உட்பட எல்லாமே அழிந்துவிட்டது. இனி ஒரே இரவில் இருநூறு பக்கங்களை வேலை செய்து முடிக்க வேலையாட்கள்கூட இல்லை.ஏற்கெனவே பல பேரை அழைத்துவிட்டோம். யாரும் வருவதாக தெரியவில்லை. அப்படியே வந்தாலும் வேலை முடிய இரண்டு நாட்களாகும்.
"என்ன செய்வது? புரியவில்லையே... புத்தக வெளியீட்டுக்கு ஒரு புத்தகம்கூட தர முடியாதா? உலகம் முழுவதும் 123 இடங்களில் புத்தகவெளியீடு. மகேசா! குருநாதா! நாங்கள் கெடுத்துவிட்டோமே," என்று யோசிக்க யோசிக்க இதயமே வெடித்தது. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.
யாராலும் யாரோடும் பேச முடியவில்லை. யாராலும், யாரையும் பார்க்கவும் முடியவில்லை. "அங்கோ, பரமஹம்ஸா குதூகலத்தோடு இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பார்ப்பவர்களிடமெல்லாம் பேசி க்கொண்டிருக்கின்றார். இங்கோ, அந்த கலைந்துவிடும் போலிருக்கிறதே, ' என்றெல்லாம் யோசித்து யோசி த்துக் கலங்கினோம். கதறினோம்.
நேரத்தில் பரமஹம்ஸர் அந்த வந்தார். தொலைபேசியின் இந்த முனையில் பதில் பேச வேண்டிய பிரம்மச்சாரியால், பேசவே முடியவில்லை. விசும்பல்கள் மட்டுமே அடுத்தடுத்து பரமஹம்ஸருக்குப் பதிலாய்க் கேட்டது.
பரமஹம்ஸர் மட்டும் தொடர்ந்து பேசினார் ...
''என்னப்பா...''
"அழறியா? நீயா?"
''அப்பனே சொல்லப்பா ... ''
"ஏ! பேசப்பா.."
''நீ என் பிரம்மச்சாரி. எதற்குமே கலங்காத நீயா அழுகிறாய்?''
ஐந்து நிமிடம் கழித்துதான், பேசுமளவிற்கு சக்தி பெற்ற அந்தப் பிரம்மச்சாரி, விஷயம் தங்களுடைய மீறி போய்விட்டதை விவரித்தார். பரமஹம்ஸா் நடந்ததைக் கேட்டு ஆறுதல் படுத்தினார்.
பரமஹம்ஸா் அடுத்த முனையில் கடைசியாக பேசி முடிக்கும்போது, "கவலையேப்படாமல் போய் நிம்மதியாக வேலையை தொடருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்.'' என்று சொல்லி தொலைபேசியை வைத்தார்.
பரமஹம்ஸா் பேசி முடிக்க முடிக்க, எதிர்பாராத ஆச்சரியமாக, இரண்டு அச்சுபதிப்பு நிபுணர்கள் அங்கு வந்தார்கள்.
"இரண்டு போ வந்திருந்தாலும் அடுத்தநாள் காலைக்குள் இருநூறு பக்கங்களையும் தந்துவிடமுடியுமா?'' என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகத்தான் இருந்தது.
எப்படிப் பார்த்தாலும் சாத்தியமேயில்லை என்ற எல்லையை தொட்டதால் குழுவில் பாதிபோ் துவண்டுபோய் விட்டார்கள்.
மீதிபோ கடைசி துளி சக்தியைக் கொண்டு, குருபக்தியோடு, உற்சாகத்தோடு வேலையைத் தொடர ஆரம்பித்தார்கள். அன்று இரவு முழுவதும் அசுர கதியில் வேலை நடந்தது.
அப்போது பரமஹம்ஸர் மீகுகளனும் 4 நாள் தியான முகாம் எடுத்துக் கொண்டிருந்தார். அன்றைய காலை வகுப்பினுடைய தியான பகுதி நடந்துகொண்டிருந்தது.
அப்போது கிடைத்த இடைவேளையில், "பாவம் நம்ம பசங்க தடுமாறிப்போயிட்டாங்க, '' என்று அங்கிருந்த பிரம்மச்சாரிகளிடம் சொல்லிவிட்டு, பரமஹம்ஸா் தொலைபேசியில் எங்களிடம் வந்தார். ஆறுதலான குரலில், "என்னப்பா ஆச்சு?" என்று பரமஹம்ஸா் கேட்க, ''சாமீமீமீ முடிஞ்சிடுச்சு!'' என்று தொலைபேசியில் அனந்த கூச்சலிட்டோம் ...
பரமஹம்ஸரின் தொலைபேசிக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் எப்படி ஒரே இரவுக்குள் முடித்தோம் என்பது இப்போதும் அதிசயமாகவே இருக்கிறது!
பரமஹம்ஸரும், பிரம்மச்சாரிகளும் இரண்டு புறமும் குதித்துச் சிரித்து நடனமாடி அந்த ஆனந்தத்தைக் கொண்டாடினர். "அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட ஆனந்தப் பெருக்கை வார்த்தைகளால் சொல்லி மாளாது." என்று பிரம்மச்சாரிகள் பகிர்ந்துகொண்டார்கள்.
அங்கு தன் சிம்மாசனத்திலிருந்தபடியே இந்தப் புத்தகம் தயாராகிவிட்டதை சொல்லி, பரமஹம்ஸா் கொண்டாடிய விதத்தை எங்களால் வார்த்தைகளால் விளக்க முடியாது. ஜீவன்முக்தி புத்தகத்தை இப்போது சென்று சேர்க்க வேண்டும். வெளியிடப்பட்ட ஒவ்வொரு மண்டபத்திற்கும், சில ஆயிரம் புத்தகங்களையாவது
சேர்த்து விட வேண்டும் என்று இரண்டாம் தேதி வேண்டிய பணியில் இரவுக்குள், தியானபீடத்தின் பிரம்மச்சாரிகளும், ஆனந்த சேவகா்களும் சேர்த்து விட்டார்கள்.
இந்தக் கட்டுரையைப் படிக்கும்வரை ஜீவன்முக்தி புத்தக வெளியீட்டுக்கு முன் நடந்து முடிந்த இந்த லீலைகள் பலருக்கும் தெரியாது.
புத்தக வெளியீடு முடிந்த பின், ஒரு நாள் பரமஹம்ஸரிடமே நாங்கள் கேட்டோம், ''தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏன் இவ்வளவு பெரிய லீலை ? இவ்வளவு ஆழமான சோதனைகளை, ஒரே ஒரு ஆசீர்வாதத்தால் உங்களால் மாற்றியிருக்க முடியும்.
இவ்வளவு தூரம் இந்தக் குழு ஆட்டுவிக்கப்பட நீங்கள் அனுமதித்தது ஏன்? பாவம், கலங்கிப் போய் விட்டார்கள்," என்று கேட்டதற்கு, பரமஹம்ஸர் மிக அழகாகச் சொன்னார்,..
''குளத்திலிருந்து மீன் எழுந்தாலே குளம் கலங்கும். குளத்திலிருந்து திமிங்கலம் எழுந்தால் என்ன ஆகும் ? இங்கு நடந்தது அதுதான்.
பிரம்மச்சாரிகளை பிரசவிக்க விரும்பவில்லை. ஜீவன் முக்தி புத்தகத்தை வைத்து, பிரம்மச்சாரிகளுக்குள் ஜீவன் முக்தியை பிரசவிக்க விரும்பனோம். அது நடந்துவிட்டது,'' என்றார் மிக எளிமையான குரலில்.
உலகத்திற்கே ஜீவன் முக்தியை தந்த இந்தப் புத்தகம், உருவாகும் போதே சில ஜீவன் முக்தர்களை உருவாக்கிவிட்டுத்தான் பிறந்திருக்கிறது.
அந்தப் புத்தகம்தான் நம் கையில் இப்போது இருக்கிறது என்பதை நினைக்கும்போது உடல் முழுவதும் பரவசம் பாய்கிறது.
சேவையின் மூலமாகவே ஜீவன் முக்தியை அடைந்துவிட முடியும்.
பக்தியின் மூலமாகவே ஜீவன் முக்தியை அடைந்துவிட முடியும் ... என்று கேள்விபட்டிருக்கிறோம்.
ஆனால் இப்போது அதை நாங்கள் நேரடியாகவே பார்த்துவிட்டோம். எல்லா லீலைகளையும் இனிமையாய்ச் செய்து அருமையாய் முடிப்பது இறைச க்தியின் குணம். சில லீலைகள், முதலில் பார்ப்பதற்குக் கடுமையாகத் தோன்றினாலும், அவற்றின் மூலமாக ஜீவன் முகதியை நோக்கியே நம்
வாழ்வை ஒவ்வொரு படியாக நகர்த்திக் கொண்டிருக்கும் இறைச க்திக்கு நன்றி என்று சொல்ல நமக்குத் தகுதியில்லை.
இறைசக்தியின் ஆழ்ந்த விருப்பமான ஜீவன் முக்தியை நம்முள்ளும் பிரசிவிப்பதுதான். நம்மால் அந்த இறைசக்திக்கு தரமுடிந்ததற்கு நிஜமான நன்றி.
நன்றி! நன்றி!! நன்றி!!!
இப்படிக்கு நித்யானந்தத்தில் ... நித்யானந்தா மிஷன் ஆர்டர்