Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

3. பிரமிப்புரை

# பிரமிப்புரை

இந்தப் புத்தகத்தை நீங்கள் தொட்டதற்காக நன்றி!

" அண்ணாமலையானின் அடியார்தம், அடியார்தம், அடியார்க்கும் நான் அடியேன்' என்று சொல்லும் பண்பும், பணிவும் கொண்ட அவதார புருஷரின் திருப்பாதங்களுக்கு நன்றி. சத்குருவுக்கு நன்றி. பரமஹம்ஸ நித்யானந்தருக்கு நன்றி.

ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன் வாழ்ந்த நேரடி சீடா்களின் அனுபவ தொகுப்புகளை 'கடவுளோடு வாழ்ந்தவாகள்' எனும் புத்தகமாகத் தருவதற்கு அவர்களுக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டதாம். 'ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்' எனும் புத்தகத்தை உலகிற்குச் சோப்பதற்கு ஏகப்பட்ட ஆண்டுகள் எடுத்துக்கொள்ளபட்டதாம். இதையெல்லாம் கேட்ட பின்பும், சற்றும் தளராமல், இரண்டே மாதத்திற்குள் பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுதமொழிகளை புத்தகமாகத் தரும் தெய்வ சேவையைச் செய்வதற்குப் பல்வேறு வழிகளில், பாக்யசாலிகளுக்கும் நன்றி.

ஜனவரி 1, 2009 ஜீவன் முக்தி தீகைஷ்யை 10,000 பேருக்கு தந்து, அன்று இரவே ஜீவன் முக்தி எனும் புத்தகத்தை உடனடியாக உலகிற்குத் தரப்போவதைப் பரமஹம்ஸர் சொன்னார். மார்ச் 3ஆம் தேதி அது வெளியிடப்படவேண்டும் என்ற தேதியும் தந்து, அதேபோன்று இரண்டே மாதத்திற்குள் இந்தப் புத்தகத்தை உலகிற்குத் தந்து பிரமிப்பளித்த அவதார சக்திக்கு நன்றி. !

அடுத்து இங்குக் குறிப்பிட விரும்பும் அருமையான ஜென் வாக்கியம் ஒன்று ...

''நல்லதெல்லாம் நிகழ்வது இறைவனால் கெட்டதெல்லாம் நிகழ்வது மனித மனத்தால்''

சாப்பிடுவதற்காக நாங்கள் ஒன்றாய்க் கூடியபோது, விளையாட்டாய் ஜீவன் முக்தி புத்தக வெளியீடு பற்றிப் பேசிக்கொண்டோம்.

'ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளை உலகிற்குத் தருவதற்கு அவரின் சீடர்கள் அவ்வளவு வருடங்கள் எடுத்துக்கொண்டார்கள். இரண்டே மாதத்தில் ஜீவன் முக்தி புத்தகத்தைத் தரச்சொன்னால் ... எப்படி முடியும்?'' என்று சின்னதாய் ஒரு பெருமிதம்.

"56 பக்கங்களே கொண்ட 'நித்யானந்தம்' மாத இதழை, வெகு பிரயத்தனப்பட்டு பல வேலைகளுக்கு நடுவே பல அச்சுப்பிழைகளோடு தரும் கைப்பிடி துறவிகள் நாங்கள்! குறைந்தது 700 பக்கங்களுக்கு மேல் வரவேண்டிய இந்த ஜீவன் முக்தி புத்தகத்தை எப்படித் தரமுடியும் ? சாத்தியமேயில்லை!'' என்று எங்களுக்குள்ளே காரசாரமாகச் சத்தமிட்டுக் கொண்டிருக்கும் போது, யாரோ பின்னால் இருந்து கூப்பிடுவதுபோல் தோன்றவே திரும்பினோம். பிரமித்தோம்! ஆச்சரியத்தில் நெஞ்சுறைந்து எழுந்தோம் !

எங்களின் காரசாரமான விவாதத்தைச் சிரித்தபடி அங்கு கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தார் பரமஹம்ஸா். எங்களின் பிரமிப்பு உடல் (முழுவதும் பரவியது ! சிரித்தபடி எங்களைப் பார்க்கு ... ''எப்படித் தரமுடியும்? எப்படித் தர முடியும் ? என்று கேட்கிறீர்களே, நீங்களா தரப்போகிறீர்கள் ?

நீங்களா புத்தகத்தை எழுதப்போகிறீர்கள்! ? ஆனந்தத்தோடு துவங்க வேண்டியதுதானே!

நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் பத்து அடி நம்மை நோக்கி எடுத்து வைப்பார்.

நீங்கள் உங்களின் பங்கை முழுமையாய்ச் செய்யுங்கள். இறைவனின் பங்கை அவா் பார்த்துக் கொள்வார், '' என்று அவர் சொன்ன வரிகள் இதயத்திற்குள் தேனாய் பாய்ந்தது. உற்சாகமாய்ப் பொங்கியது.

இருந்தாலும், இரண்டே மாதத்தில் 700 பக்கங்கள், பெரிய ஆச்சரியக்குறியாகவே இருந்தது. பிரமிப்பாகவே இருந்தது.

ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து மார்ச் 3 ஆம் தேதி வரையிலும், ஒரு நாள்கூட பரமஹம்ஸருக்கு ஓய்வில்லை. ஏதாவதொரு ஒரு ஊரில் கல்பதரு தியானமுகாம் அல்லது கோடிக்கண் தரிசன ரத பாதயாத்திரை பரமஹம்ஸருக்கு இருந்தது. ஊர் விட்டு ஊர் மாறும் பயணத்திற்காக மட்டும் சில நாட்கள் நடுவில் இடைவெளி விடப்பட்டிருந்தது. அந்தச் சில நாட்களைத் தவிர்த்து எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு ஊரில் ஏதாவது ஒரு தியான முகாம் இருந்து கொண்டேயிருந்தது.

ஒய்வேயில்லாதபோது போது எப்படி இந்தப் புத்தகத்தை குருநாதா தரப்போகிறார்? எங்களுக்கே அப்போது சவாலாய்தான் தோன்றியது. இதற்கிடையில் இந்தப் புத்தகம் எப்படி வரும்? தடுமாறிப் போனோம்.

''உங்களின் பங்கை முழுமையாகச் செய்யுங்கள்,'' என்ற பரமஹம்ஸின் அமுதவாக்கியம் கொடுத்த ஒரு சக்தியில், எங்களின் வேலைகளை ஆரம்பித்தோம். 100 ரூபாயில் இந்தப் புத்தகத்தைத் தருவதற்கும், பரமஹம்ஸரின் வார்த்தைகளை அச்சில் கொண்டுவருவதற்குமான எல்லா அடிப்படை வேலைகளையும் துரிதமாக இரவுப்பகல் பாராமல் பிரம்மச்சாரிகள் செய்யத் துவங்கினார்கள்.

இப்புத்தகத்தில் உள்ள பல பக்கங்கள், பல இரவுகள் தியான முகாமை முடித்த பின்பு, பரமஹம்ஸரே நேரடியாகத் தொலைபேசியில் வந்து சொல்லச் சொல்ல அச்சுக்குச் சென்றவை.

''அவ்வளவு முடுவேலைகளுக்கு நடுவே… ஊர் ஊராக நடக்கும் பாதயாத்திரைகளுக்கு நடுவே எப்படித்தான் இவரால் இவ்வளவும் முடிகிறதோ ? என்னதான் அவதார சக்தியாக இருந்தாலும், தங்கியிருப்பது மனித உடலில்தானே! ஒய்வே தேவைப்படாதா இவருக்கு!'' என்று ஆச்சரியப்பட்டு ஆச்சரியப்பட்டுப் பூத்துப் போவோம்.

நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் பத்து அடி எடுத்து வைப்பார் என்ற சத்தியத்தை பல வழிகளில் புரியவைத்து, எங்களுக்கு அதை சாத்தியமாக்கிக் காண்பித்த சத்குருநாதருக்கு நன்றி!

அவரின் பேனாவில் ஊறும் மையாக இருக்கும் வாய்ப்பு, பொய்யான இந்த உடல்களுக்கும் கிடைத்ததற்கு மெய்யாய் நன்றி!

அவரின் சொற்களையெல்லாம் சூத்திரங்களாக அச்சிட்டு வடிவமைக்க இராப்பகல் பாராது பக்தி எனும் ஒரு எரிபொருளாலேயே உடலையும், மனத்தையும் இயக்கிய எல்லோருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

நல்லது நிகழ்வதெல்லாம் இறைவனால்... கெட்டது நிகழ்வதெல்லாம் மனித மனத்தால் என்பதை உணர்ந்து உற்சாகமாய் எழுந்த சேவைதான், புத்தகமாக உங்களின் கையில் அமர்ந்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் இருக்கும் உங்களின் புருவத்தை உயர்த்த வைக்கும் எல்லா நல்ல வார்த்தைகளுக்கும் அவரே பொறுப்பு.

எங்களையும் மீறி எங்களின் கவனக்குறைவால் உங்களின் புருவத்தை சுழிக்க வைக்கும் அச்சுப்பிழைகள் இருந்தால் அதற்கு நாங்கள்தான் பொறுப்பு. எங்களை மன்னியுங்கள்.

அவசரகதியில் பிரசவமான 'ஜீவன் முக்தி' குழந்தையில் இருக்கும் சின்னச் சின்ன புள்ளிகளுக்காக எங்களை மன்னிக்கும்படி உங்களை வேண்டுகிறோம்.

இந்தப் புத்தகம் உருவாகும்போது நாங்கள் சந்தித்த தடைகளையும்

அவைகளைத் தகர்த்த விதத்தையும் தொகுத்தாலே சூடுபறக்கும் விறுவிறுப்பான ஒரு நாவலையே தொகுத்துவிடலாம். அவ்வளவு பிரமிப்புடைய பரவசங்களை இறை சக்தி நடத்தக் கண்டோம்.

ஜீவன் முக்தி என்ற இந்த பொக்கிஷம் பார்ப்பதற்குக் கண்களுக்கு புத்தகமாகத் தெரியலாம். ஆனால், எங்களுக்கு அது புத்தகமல்ல. அது அவரின் உழைப்பு! அவரின் இரத்தம்! அவரின் வியா்வை! அவரின் கருணை !

எங்களுக்கு, இந்தப் புத்தகமே ... எங்களின் சத்குருநாதாதான்!

எங்களின் சத்குருநாதரையே கரங்களில் நீங்கள் இய்போது இவைத்திருப்பதால், எங்களின் சத்குருவையே ஏந்தியிருக்கும் சொல்கிறோம்.

இந்தப் புத்தகத்தை நீங்கள் தொட்டதற்காகவே நன்றி!

நித்யானந்தத்தில் ... நித்யானந்தா பதிப்பகம் ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியிலிருந்து இன்றுவரை உலகிற்குப் பல்வேறு வகையில் உதவிக் கொண்டிருக்கும் எல்லாக் குருமார்களுக்கும் நன்றி.

சிவகுத்திரத்தைத் தந்த சிவபெருமான் ... பகவத்தீதையைத் தந்த கிருஷ்ண பரமாத்மா ...

உபநிடதங்களைத் தந்த ரிஷிமார்கள் ...

தம்ம பதத்தைத் தந்த புத்த பெருமான் ...

இவர்கள் எல்லோரின் சாரத்தைப் பிழிந்து தியான முறையாக்கி, ஞானக் கருத்துகளாக்கி, பக்தி ரசமாக்கி, வாழ்வியல் தீர்வுகளாகவும், தியானங்களாகவும் தந்த எல்லாக் குருமார்களுக்கும் நன்றி.

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியிலிருந்து, ரமண மகரிஷி வரை தியானம், ஞானம், ஆனந்தம் பற்றிப் பேசிய எல்லாக் குருமார்களுக்கும் நன்றி ... அவர்களின் வார்த்தைகளால் நிரம்பிய வேதங்களுக்கும், குத்திரங்களுக்கும், எல்லா ஆன்மீக புத்தகங்களுக்கும் நன்றி.

நித்யானந்தத்தில் நித்யானந்த தியானபீடம்.

பின் குறிப்பு:

முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு 794 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ரூ.100க்குத் தந்தோம். இப்போது 884 பக்கங்கள் மற்றும் 16 பல வண்ண ஆர்ட் பேப்பர் பக்கங்களோடு ரூ.150க்குத் தந்திருக்கிறோம். மேலும் இதே புத்தகத்தை உயர்தர பேப்பர் பதிப்பதில், ஹார்ட் பைண்டிங்கில் ரூ.300க்கும், அதைவிட, உயர்ந்த உலகதரத்திற்கு இணையான அச்சுபதிப்பில் ரூ.500க்கும் கடைகளில் கிடைக்கும்படி செய்திருக்கிறோம்.

ஜீவன் முக்தி புத்தகத்தின் முக்கிய சாராம்சங்களை கொண்ட சிறிய புத்தகங்கள் மக்களுக்குக் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஆனந்தத்தோடு கொள்கிறோம்.