Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

36. ீவன் முக்தியை வெளிப்படுத்தும் Leadership consciousness itself will radiate Ieevan mukti

# ீவன் முக்தியை வெளிப்படுத்தும் Leadership consciousness itself will radiate Ieevan mukti

ரும்முடைய வாழ்க்கையை, நம்முடைய வாழ்க்கை வரலாற்றை ஒரே ஒரு ஒரு வரியில் எழுதி முடிக்க வேண்டும் என்றால், ஒரு வரியில் எழுதி முடித்துவிடலாம்.

அகிலம் கல்லறைகளில் பார்த்தோம் என்றால் பல போ் தங்கள் சாதனைகளை எழுதியிருப்பார்கள். சிலர் தாங்கள் இறந்தபிறகு. கல்லறையில் செதுக்குவதற்காக வாசகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலபேர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை இரண்டு, மூன்று வரியில் எழுதி வைப்பார்கள்.

அந்த ஒரிரு வார்த்தைகளிலேயே தங்கள் வாழ்க்கை பற்றிச் சொல்லி விடுவார்கள். அவர்கள் எதை தங்கள் வாழ்க்கையில் பெரிதாக நினைத்து வாழ்ந்தார்களோ, அதையே சொல்ல விரும்புகிறார்கள்.

ஒரு பெரிய அறிஞன், தம்மை அறிஞன் என்று சொல்வதைவிட, ஞானி என்று சொல்வதையே விரும்புவான். அறிஞன் என்ற வார்த்தை, குறையான வார்த்தை. ஞானி என்பது முழுமையான வார்த்தை.

அன்னை சாரதாதேவி சொல்கிறார், "என்னுடைய வாழ்க்கையைப் பற்றி, ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், 'என்னுடைய வாழ்க்கையே ஒரு நீளமான பிரார்த்தனை',அதைத் தவிர வேறில்லை, 'என்கிறார்.

அதுபோல் நம்முடைய வாழ்க்கையை எல்லாம், நம்முடைய வரலாற்றை எல்லாம், ஒரு வரியிலே எழுதி வைக்க வேண்டும் ஆனால், பிறப்பு: இறப்பு என்று இரண்டே வார்த்தையில் மிகத் தெளிவாக எழுதி வைத்துவிடலாம். பெரும்பாலானவாகளின் கல்லறையில் பிறப்பு, இறப்பு என்று எழுதி, தேதியையும், வருடத்தையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

தலைமைப் பண்பை மலர்க்குவகே, ஜீவன் முக்தியை வெளிப்படுத்தும்.

ஒருமுறை பிரம்மச்சாரி ஒருவர் என்னிடம் கேட்டார், ''அது ஏன் எல்லாக் கல்லறைகளிலும் பிறப்பு, இறப்பு என்ற இரண்டை மட்டும் எழுதியிருக்கிறார்கள்?' "காரணம் பிறப்பு, இறப்பு தவிர இந்த இரண்டிற்கும் இடையில் குறிப்பிடுவதுபோன்று வேறு எந்த சாதனையையும் செய்திருக்கமாட்டார்கள்,'' என்று பதிலளித்தோம்.

நாம் வெளி உலகத்திற்குக் காட்டுகிற பா்சனாலிட்டிக்கும், உள்ளுலகத்தில் வைத்திருக்கிற பர்சனாலிட்டிக்கும் நடுவில் நடக்கிற சண்டைதான், நம்முடைய வாழ்க்கையாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்ற நிஜ நிலவரம், பலருக்கு கல்லறைக்குச் செல்லும்வரை புரிபடுவதில்லை.

பிறந்ததிலிருந்து இறக்கும்வரை, இந்த இரண்டிற்கும் நடுவில் நடக்கிற சண்டையின் காரணத்தை ஆராய்ந்தோமானால், உள்ளே இருக்கிற பர்சனாலிட்டி, தொடர்ந்து வெளியில் இருக்கிற பர்சனாலிட்டியாக மாற முயற்சி செய்வதால் நிகழ்கிறது. உள்ளே ஏற்படும் இந்த நரநரப்புத் தன்மைதான், வெளியே, தாம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தும் விருப்பப்படி மாற்ற முயற்சிக்கும் குணமாக வெளிப்படுகிறது. ஆனால், கடைசிவரை அது வெற்றி பெறுவதில்லை. எப்போதும் ஒரு பர்ச னாலிட்டியால், இன்னொரு பர்சனாலிட்டியை

குமக்குள் தலைவனாக மலர்ந்தால், ஏதாவதொரு தலைமைப் பதவியிலும் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. சாதாரண எளிமையான செயல்களைச் செய்துகொண்டு, சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டே தலைவர்களாக வாழ முடியும்.

மாற்ற முடியாது. இது உள்ளுலகுக்கும் பொருந்தும்; வெளி உலகுக்கும் பொருந்தும்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த இரண்டு பா்சனாலிட்டிக்கும் நடுவில் முரண்பாடு இல்லாமல், இந்த இரண்டு பாசனாலிட்டிக்கும் நடுவில் நடக்கிற சண்டையிலிருந்து தம்மை விடுபடுத்திக் கொள்வதைத்தான் ஜீவன் முக்தி என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி என்றால் இவ்வளவுதான். வேறு ஒன்றுமேயில்லை. உள்ளுலகிலும், வெளியுலகிலும் முரண்பாடு இல்லாது இருப்பது ஜீவன் முக்தி.

இரண்டு பர்சனாலிட்டிக்கும் இடையே நடக்கிற சண்டையிலிருந்து தம்மை விடுபடுத்திக் கொள்வது, தலைவனாக வாழ்வது, அதுதான் ஜீவன்முக்தி. இரண்டு விஷயம் இருக்கிறது. நிலை (State), அந்தஸ்து (Status) என்று. அந்தஸ்தை யார் வேண்டுமானாலும் அடைந்துவிடலாம். ஆனால், அந்த நிலையை நமக்குள் நாம் உள் முகமாகத் திரும்பி உழைத்தால் மட்டும்தான் அடைய முடியும். அதுதான் அந்தஸ்தை உயர்த்தும்.

Leadership is state. not a status. தலைமைப் பண்பு என்பது அந்தஸ்து அது ஒரு நிலை. அந்தஸ்து என்பது வெளியுலக வாழ்க்கை சம்மந்தப்பட்டது. தலைவன் என்பது வாழும் தன்மையால் வெளிப்படுவது.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு ஜீவன்முக்தன் மட்டும்தான் தலைவனாக வாழமுடியும்.

காரணம், தலைவனாக வாழும் தன்மை என்பது, உள்ளுலகம் சம்மந்தப் பட்டது. தமக்குள் தலைவனாக மலருதல், தமக்குள் ஜீவன்முக்தனாக மலருதல் நிகழும் போதுதான், தலைமைத்துவத்தை ஒருவரால் அடைய முடியும்.

தமக்குள் தலைவனாக மலாந்தால், ஏதாவதொரு தலைமைப் பதவியில் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. சாதாரண, எளிமையான செயல்களைச் செய்துகொண்டு, சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டே தலைவா்களாக வாழ முடியும்.

அப்போது பதவி தேவைப்படாது. அந்தஸ்து தேவைப்படாது. உங்கள் வாழ்க்கையே தலைமைப் பண்பை வெளிப்படுத்தும்; ஜீவன்முக்தியை வெளிப்படுத்தும்; ஜீவன்

முக்தியை பரவச் செய்யும். அப்படியில்லாமல் அந்தஸ்தையே அடைந்தாலும்கூட, அதைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆசைக்கும், அது நம்மை விட்டுப்போய் விடுமோ என்ற பயத்திற்கும், இவையிரண்டும் சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கும் அடிமைகளாக வாழ்ந்துகொண்டு இருப்போம்.

தமக்குள் நடக்கிற சண்டையிலிருந்து விடுபடுவகே ஜீவன் முக்கி.

தலைவனாகவே இருந்தாலும், அப்போது அடிமையாகவே வாழ்வார்.உள்ளுலகில் தலைமைப் பண்பை

உணர்ந்த ஒருவரால்தான், வெளியுலகில் தலைமைப் பண்பை வெளிப்படுத்த முடியும்.

உள்ளுலகில் தலைமைப் பண்பை வெளிப்படுத்தாததலைமைக்கூட அடிமைத்தனமாகவே இருக்கும்.

தலைமைப்பண்பை அடைவது உள்ளுலகம், வெளியுலகம் என்ற இரண்டிலுமே முக்கியம். இந்த நிலை, நாட்டுக்கே பேரரசராய் திகழும் அந்தஸ்தை விட உயர்ந்தது. தலைமைப் பண்பு அடையப்பட வேண்டிய அந்தஸ்து அல்ல, அது ஒரு உன்னத நிலை. ஜீவன் முக்தனாகாமல், தலைவனாகாமல் வாழும் ஒவ்வொரு நொடியும், நீங்கள் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே சென்று கொண்டிருப்பீர்கள். தலைமைப் பண்பை மலர்த்துவதே, ஜீவன் முக்தியை வெளிப்படுத்தும்.

முக்தி யுக்தி - 6