34. வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா?
# வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா?
Struggling with life? or Is life itself a struggle?
6 ப்பேர்ப்பட்ட நிலையில் வாழ்ந்தால் என்ன ?
எவ்வளவு அதிகமான பணத்தோடும், புகழோடும், பொருளோடும் எங்கு வாழ்ந்தால் என்ன ?
காலையில் எழுந்த உடனே, இனிமையான, ஆனந்தமயமான, சுதந்திரமான ஒரு உணர்வு உங்களைப் படுக்கையை விட்டு எழுப்பவில்லை என்றால், வாழ்க்கை வீண். பூமிக்குப்பாரம் !
வாழ்க்கை ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.
ஜீவன் முக்தராக வாழ்வதற்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழாமல்
இருப்பது, பூமிக்கு மட்டும் பாரம் அல்ல ; அவருக்கே, அவர் ஒரு பாரம்தான்.
நன்றாகப் பரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு அருமையான பரிசை, யாரோ ஒருவர் கொடுக்கிறார். ஆனால், அதை நீங்கள் உபயோகப்படுத்தாமல் தூக்கி ஒரமாய்ப் போட்டுவிட்டீா்கள் என்றால், நீ ங்கள் அந்தப் பரிசை மட்டும் அவமரியாதை செய்யவில்லை. சேர்த்து அவமரியாதை செய்கிறீர்கள்.
தனியாக ஒரு அறைக்குள்ளேயே பூட்டிவிட்டு உட்கார்ந்திருந்தாலும் உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.
அதேபோல் இந்த வாழ்க்கை என்பது... ஜீவன்முக்தராக வாழ்வதற்காக இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை. கிடைத்த நன்கொடைக்கு நன்றி சொல்வது, அதைச் சரியான முறையில் உபயோகிப்பதே.
ஜீவன் முக்தராக வாழவில்லை என்றால், அதை அளித்த இறைவனையும் சேர்த்துத்தான் அவமரியாதை செய்கிறீர்கள்.
ஜீவன் முக்தராக வாழாமல் இருப்பதற்கு வெளியுலகம் காரணமில்லை.
உள்ளுலகில் நமக்குள்ளே இருக்கும் இடைவெளிதான் காரணம். வெளியில் நாம் காண்பிக்கிற அந்த புறத்தன்மைதான், அகங்காரம்தான் காரணம். இருப்பதைவிட அதிகமாகவே காண்பித்துக் கொள்ளத் தூண்டும் பா்ஸனாலிட்டிதான், நமக்குள்ளே இடைவெளியை உருவாக்கும் பெருச்சாளி. மற்றொரு பர்சனாலிட்டியும் இருக்கிறது.
உள்ளுக்குள்ளேயே நாம் நம்மை யாரென்று நம்புகிற பா்சனாலிட்டி, உள்தன்மை. இதைத்தான் 'மமகாரம்" என்று குறிப்பிடுவார்கள்.
நீங்கள் ஒரு அறையைப் பூட்டிக்கொண்டு அதற்குள் தனியாக உட்கார்ந்திருந்தாலும், உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.
உள்ளுக்குள்ளேயே இருக்கும் உலகத்தைப் பற்றியும், உங்களைப் பற்றியும் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற கருத்துகள்தான் மமகாரம்.
வெளியில் காட்டுகிற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதைவிட, உங்களின் தன்மைகளை அதிகமாகத்தான் காட்டுவீர்கள். ஆனால், உள்ளே நீங்கள் என்று நம்புகிற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதை விட உங்களை நீங்களே குறைவாகத்தான் நம்புவீர்கள். உங்களின் உள் தன்மை, மமகாரம் உங்களை எப்போதும் குறைவாகவே உங்களுக்குக் காட்டும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
வெளியில் காட்டுகிற பா்சனாலிட்டி,
ஆசையை அடிப்படையாகவும், உள்ளே உங்களுக்குள் இருக்கிற பர்சனாலிட்டி அச்ச

த்தை அடிப்படையாகவும் வைத்துத்தான் இருக்கும், இயங்கும்.
வெளியில், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி இருப்பதைவிட அதிகமாகத்தான் காட்ட முயற்சி செய்வீர்கள். ஆனால் உள்ளே, உங்களுக்குள், உங்கள் திறமையைப் பற்றிக் குறைவாகவேதான் போட்டுக்கொண்டிருப்பீர்கள். எடை இருப்பதைவிடக் குறைவாகவே மதிப்பிடுவீர்கள். தம்மைத் தாழ்த்தியும், உயர்த்தியும் பார்க்காத தன்மையே ஜீவன் முக்த தன்மை.
அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இருக்கும் இடைவெளியால்தான் உங்களை இருப்பீர்கள்.
உங்களைப் பற்றி நீங்களே ஏதேனும் ஒரு முடிவெடுத்துக்கொண்டே இருப்பீர்கள். உங்களை நீங்களே ஒரு குற்றஉணர்ச்சிக்குள் வைத்துக்கொண்டே இருப்பீர்கள்; அச்சத்தில் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

ஆழ்த்திக்கொண்டே இருப்பீர்கள்.
இப்படி, உங்களைத் தாழ்வாக எண்ணுவதற்குக் காரணம், இந்த மமகாரம்தான். நீங்கள் உங்களைத் தாழ்வாக எண்ண வேண்டிய அவசியமே இல்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் .... நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கிற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கியே றாம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கிற சண்டைதான் வாழ்க்கை.
உள்ளே இருக்கிற பர்சனாலிட்டியை, வெளியில் இருக்கிற பர்சனாலிட்டியாக மாற்றுவதற்கான முயற்சிதான் வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையே மிக நீளமான ஒரு சண்டையாக இருக்கிறது.
'வாழ்க்கை' என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கிற ஒரு நீளமான சண்டை. நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது அது பொருளாதாரமாகக்கூட இருக்கலாம். பொருளாதாரத்துறை என்பது என்ன வென்றால், வாணிபம் செய்வது, சமூகசேவை செய்கிற துறையாக இருக்கலாம், அல்லது அரசியலாக இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் வேறு எந்த வேலை செய்கிற துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் சரி, மனித வாழ்க்கை என்பது
ஜீவன் முக்கி
இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும், இடையிலே நடக்கிற மிக நீளமான ஒரு ச ண்டை மட்டுமே. அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடைவெளி இல்லாத நிலையில் வாழ்ப்படும் வாழ்க்கை வெறும் வாழ்க்கை அல்ல. அது லீலை
வாம்க்கையில் சண்டை என்றால் சரி செய்து விடலாம். வாம்க்கையே சண்டை என்றால், எதுவும் செய்ய முடியாது. காப்பாற்ற முடியாது. உங்களை நீங்கள் மட்டும்தான், இந்நிலையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.
சண்டையின் ாகசியம்
இங்கு ஒரே குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் சண்டைகள் வருகிறது. அப்படிப்பட்ட உறவுகள் இருந்துரன் என்ன பிரயோஜனம்?
இந்திய கலாச்சாரத்தில் சண்டையிடவாவது உறவினர்கள் இருக்கிறார்கள்.மற்ற இடங்களில் அதுவும் இல்லாமல் சாகிறார்கள்.
· சிறு சண்டைகள் சகஜமானது என்கிறீர்களா ?
இல்லை, அவசியமானகı.
சண்டைகள் அவசியமானவையா?
எல்லோரும் பிறக்கும்போதே ஞானியாகப் பிறக்கிறார்களா என்ன.... ? சாதாரண மனிதர்கள் அவ்வப்போது மனமுடைவதும், மனம் தளர்வதும் இயல்புதான். ஒருவர் மனம் தளரும்போது, இன்னொருவர் தாங்கிப் பிடிப்பதும், இன்னொருவர் மனமுடைந்து சிறுசிறு கோபங்கள், தடுமாற்றங்கள் வடியும் வடிகாலாக இவர் இருப்பதும், உளவியல் ரீதியாக மருத்துவ குணம் வாய்ந்தவை.
மனிதனின் வளர்ச்சியில் அவன் குணமுதிர்ச்சி பெறும்வரை குடும்பம், உறவுகள் என்ற உளவியல் shock absorbers மிக மிக அவசியமானவை.
