Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

20. ியாகும்

# ியாகும்

ர்க்கிய ப மண்ணில் பிறந்ததினாலேயே பாக்கியசாலிகள் நீங்கள்.

பல பிறவிகளில், ஜீவன் முக்தியின் வாசலைத் தொட்டுவிட்டு வந்தவர்கள் நீங்கள்.

உங்களின் இரத்தத்தில் ஆன்மீகம் இழையோடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஞானத்தாயின் கர்ப்பத்தில் பூத்த அற்புத மின்மினிகள் நீங்கள் ஒவ்வொருவரும். உங்கள் ஜீவன் பூத்ததே இந்த ஞானத்தடாகத்தில்தான் !

உங்களின் வயது வேண்டுமானால் இருபதாகவோ, அறுபதாகவோ இருக்கலாம். ஆனால், உங்களின் ஆன்மா, பல நூறு ஆண்டுகள் இந்திய பிரதேசத்தில் வாழ்ந்த ஒன்று.

பல பிறவிகளில், ஜீவன் முக்தியின் வாசலைத் தொட்டுவிட்டு வந்தவா்கள் நீங்கள்.

சென்ற பிறவியில் ஜமீன்தாராக இருந்து இறந்த ஒருவர், இந்தப் பிறவியில் ஒருவேளை அதே வீட்டில் வேலைக்காரராகப் பிறந்தால் எப்படித் திண்டாடுவாரோ, அப்படித்தான் பலர் இன்று பூமியில் பிறந்து திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

  • இனம் புரியாத துக்கம்,
  • காரணமில்லாத கவலை,
  • அர்த்தமில்லாத சோர்வு.

இதில் ஏதாவது ஒன்று உங்களிடம் எப்பொழுதாவது எட்டிப் பார்த்தாலோ...

  • ★ அடிக்கடி சலிப்பு,
  • ★ அடக்க முடியாத எரிச்சல்,
  • என்ன நடந்தாலும் தானாய் வரும் அதிருப்தி, வெறுமைத்தன்மை.

இதில் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் பல பிறவிகளில், ஏற்கெனவே ஜீவன் முக்தியைத் தொட முயற்சித்தவர்கள்.

தொட்டுவிட்டு, விட்டுவிட்டவர்கள்தான் முறிகுறிகளோடு, வாழ்வை நகர்த்துவார்கள். இப்போதுதான், முதன்முறையாக நீங்கள் மெனிதப்பிறவி எடுத்திருந்தீர்கள் என்றால், வாழ்க்கை சலிக்காது.

அதேப்போல் முழு ஜீவன் முக்தருக்கும் வாழ்வு சலிக்காது.

ஒருவேளை, நீங்கள் இப்போதுதான் முதல் முறையாக, இப்பூமியில் மனிதப்பிறவி எடுத்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் புதிது புதிதாய் கற்றுக்கொள்ளவும், அனுபவிக்கவுமே ஆயிரம் விஷயம் உங்களைச் சுற்றி இருக்கும்.

ஏற்கெனவே, எல்லாவற்றையும் அனுபவித்து, எல்லாவற்றையும் ஜீவன் முக்த காண்டிய ஜீவன் முக்கியின் வாசல்வரை சென்றவர்களுக்குத்தான். அனுபவம் இந்த உலகம் சலிப்பு தட்டும். இனிப்பு சாப்பிட்டுவிட்டு டீ உங்களுக்குள் குடிப்பவர்களுக்குத்தான், டீ சப்பென்று இருக்கும். ஏதோ ஏற்கனவே ஒன்று சப்பென்று இருந்தாலே, அதைவிட உயர்ந்த அனுபவம் இருக்கிறது. உங்களுக்குள் ஏற்கெனவே இருக்கிறது என்று அர்த்தம்.

மன அழுத்தமோ, மன உளைச்சலோ அல்லது மனச்சோர்வோ, உங்களுக்கு வந்தால்... தெரிந்து கொள்ளுங்கள், அவை உங்களின் ஏக்கங்கள்.

'கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்கவில்லையே!' என ஏங்கும் குழந்தைபோல உங்களின் ஜீவனானது, முக்தியை வெளிப்படுத்துவதற்காக ஏங்கும் ஏக்கங்கள்தான் அவை.

'கைக்கு வந்தது வாய்க்குக் கிடைக்கவில்லையே!' என்று ஜீவன் படும் துடிப்புகான். மனக்குறைபாடுகளாக, வாழ்வியல் குறைபாடுகளாக வாழ்வில் வெடிக்கும்.

இன்றைய உங்களின் குறைகள்தான், நீங்கள் எவ்வளவு ஆழமாக, ஜீவன் முக்தியைத் தேடினீர்கள், வாழ்ந்தீர்கள் என்பதற்கான ஆதாரங்கள்.

முதல் முறையாக வேலைக்காரராகப் பிறப்பவருக்கு, வேலைக்காரத் தொழில் சலிப்பு தட்டாது.

முன்பு ஜமீன்தாரராய்ப் பிறந்து, இப்போது வேலைக்காரராய்ப் பிறந்தவருக்குத்தான் வாழ்க்கை இப்பொழுதாவது புரிகிறதா ? ...

உள்ளுலக ஜமீன்தாரராய், ஜீவன் முக்தராய் வாழ வேண்டியவா, சாதாரண மனிதராக வாழும் வரை, விடிவில்லை; முடிவில்லை.

ஜீவன் முக்தராவது மட்டுமே ஒரே தீர்வு.

ஜீவன் முக்தராகுங்கள்.

வாழ்க்கைக்கான ஒரே தீர்வு ... ஜீவன் முக்தராவதுதான்!