Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

183. னந்த அஷ்டாங்கம்

# னந்த அஷ்டாங்கம்

ஆனந்தமயமான வாழ்விற்கான எட்டு வழிகள் :

ஆனந்த அஷ்டாங்கம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா சம்பந்தப்பட்ட ஆனந்தமயமான வாழ்விற்கான எட்டு வழிகளைச் சொல்வது.

ஆராய்ச்சியின் முடிவுகள் - 1

ஹாஸ்யத் தியானம் – [சிரிக்கும் தியானம்]Hasya Meditation (laughing meditation)

காலையில் கண் விழித்தவுடன் படுக்கையிலிருந்து எழும் முன்னர், ஐந்து நிமிடங்களுக்குச் சிரிக்க வேண்டும்! உங்களைப் பார்த்தே சிரியுங்கள். ஒரு காரணமுமில்லாமல் சிரிக்கலாம் !

சிரிப்பு என்பது ஒரு அற்புதமான தியான நுட்பம் ஆகும். ஜென் குரு-சிஷ்ய பரம்பரையில், மனம் கடந்த நிலையை அடைய ஹாஸ்யத்தை உபாயமாகக் கொண்டு இருந்தனர். இந்தத் தியானத்திற்கு உடனடி பலன் உண்டு.

சிரிப்பு ஒரு நிரம்பி வழியும் சக்தி. மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது.

சிரிக்கும்போது, உங்கள் மனம் மறைந்து, நீங்கள் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றிவிடுகிறீர்கள்.

ஹாஸ்யம் நரம்பு சம்பந்தப்பட்டதும், தொண்டை சம்பந்தப்பட்டதுமான நோய்கள் இதனால் குணமடைகின்றன. திசுக்களின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைக்கூட சிரிப்பு அகற்றி விடுவதாகச் சொல்லப்படுகிறது. சிரிப்பு முழுமையாய் நிகழும்போது, அதுவே ஒரு ஆழமான தியானமாகி விடுகிறது.

ஆனந்த சங்கல்பம்

ஆனந்த சங்கல்பம் என்பது மகிழ்ச்சிக்கான உறுதி

சூஃபி ஞானி அப்துல்லாவிடமிருந்து இந்தத் தியானத்தின் ஒரு பகுதி பெறப்பட்டது.

தினமும் அதிகாலையில் எழுந்தவுடன், கண்களைத் திறக்கும் முன்பு, படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் அருகாமையில் மற்றவர்கள் இருப்பின், உங்களுக்கு உரக்க அழைக்கத் தயக்கமாக இருப்பின், உட்கார்ந்தபடி உங்களை உரக்க அழைப்பதாக உங்கள் மனத்தில் பாவனை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் பெயரைச் சொல்லி உங்களை அழையுங்கள். உங்களை நீங்களே அழைத்து, ''இன்று நீ எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய் ? மகிழ்ச்சியையா அல்லது துயரத்தையா ?'' என்று கேளுங்கள்.

சுபாவமாகவே, நீங்கள் காலையில் முதல் வேலையாகத் துயரத்தைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. எனவே உங்கள் மனம், ''நான் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கப் போகிலே றன் என்று சொல்லும்.' உடனே நீங்கள் உங்களைக் கூப்பிட்டு, ''சரி, மகிழ்ச்சியாய் இரு, '' என்று சொல்லிவிடுங்கள். அவ்வளவுதான்!

நாம் எப்போதுமே ஆனந்தமாய் இருக்கத் தேவையான சக்தி நம்மிடம் உள்ளது என்பதை உணருங்கள். இப்போது கண்களைத் திறந்து உங்களது உறுதிமொழியைக் கடைப்பிடியுங்கள்.

உங்கள் உறுதிப்பாட்டின் வலிமையினால் உங்களது மனத்தின் முழுப் போக்கையும் நீ ங்கள் மாற்றியமைத்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

ஆனந்தம் மலர்வதற்கான யுக்தி-3

தைலக்கிரியை

நாம் தைலக்கிரியை செய்யும்போது, எண்ணெய், எச்சில் மூலமாகவும் நாக்கின் மூலமாகவும் நமது உடலிருந்து கோழை, தொற்றுக்கள், நச்சுப்பொருட்கள் முதலியவற்றை வெளியேற்றுகிறது.

பல்தேய்க்கும் முன்பாகவும், சாப்பிடுவதற்கும் முன்பாகவும், ஒரு முழு மேஜைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி

எண்ணெய் ஆகிய இரண்டில் ஏதோ ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

தாடையைக் கடைவாய்ப் பற்களில் எண்ணெய்படும் வண்ணம்-அசையங்கள், வாய் முழுவதும் எண்ணெய்படும் வண்ணம் கொப்பளியுங்கள். பின்பு, லேசாகக் கடிக்கப்பட்ட பற்களிடையே இந்த எண்ணெயை 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். கடைசியில், இந்த எண்ணெயைக் கழிவறையில் துப்பிவிட்டுப் பற்களை நன்றாகத் தேயுங்கள். தாவரங்கள் இருக்கும் இடத்தில் துப்புவது, தாவரங்களின் வளர்ச்சியை அழித்துவிடும். எனவே, தரையில் துப்ப வேண்டாம்.

கொப்பளித்த எண்ணெயை விழுங்காதீர்கள். அது உடலுக்கு நல்லதல்ல. ஒரு சொட்டு விடாமல் மீண்டும், மீண்டும் மூன்று முறையாவது தண்ணீரைவிட்டு கொப்பளித்து துப்பிவிடுங்கள்.

ஆனந்தம் மலர்வதற்கான யுக்தி-4