Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

178. ியானத்தின் மகத்துவம் தியானக் கவிதை

# ியானத்தின் மகத்துவம் தியானக் கவிதை

நான்

கர்வப் படக் கூடாது ... எரிச்சல் படக் கூடாது ... துரோகம் செய்யக் கூடாது ... பகல் கனவு காணக் கூடாது ... பொறாமை படக் கூடாது ... சோம்பித் திரியக் கூடாது... துக்கப்படக் கூடாது ... என்றால் பின் நான் என்னதான் செய்வது ? ? ? ''தியானம் செய்.''

  • v¯õÚU PÂøu

நீங்கள் ஏற்கெனவே தியானத்தில்தான் இருக்கிறீர்கள்

Already, you are in meditation

6Tல்லோரும் தியானத்தைக் கற்றுக் கொள்ள முடியுமா ?

தியானத்தை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதே இல்லை.

நீங்கள் ஏற்கெனவே தியானத்தில்தான் இருக்கிறீர்கள்!

அளவுகடந்த அழகை நீங்கள் வாழ்வில் அனுபவித்த நேரத்தை நினைவுபடுத்திப் பாருங்கள்.

மலைக்குப் பின்னாலிருந்து கதிரவன் சட்டென மேலே எழுகிறான். அல்லது முதன் முறையாக ஓர் இனிய இசையைக் கேட்கிறீர்கள் ...

அந்தக் கணத்தில், சட்டென, நீங்கள் நின்று விடுகிறீர்கள். பேச்சற்றுப்போய் விடுகிறீர்கள். நாம் அனைவருமே அப்படிப்பட்ட தூரணங்களை அனுபவித்திருக்கிறோம், அல்லவா? அந்தக் கணங்களில், அந்த அழகின் முன், உங்களால் மேற்கொண்டு எதையுமே சிந்திக்க மடியாகு.

அந்தக் கணப்பொழுதே தியானம். இப்படிப் பலமுறை ஏற்கெனவே நீங்கள் தியானத்தில் இருந்து கொண்டே இருக்கிறீர்கள். அதன்பின் சில வினாடிகளுக்குப் பிறகு, உங்களது உள் அரட்டை மறுபடியும் ஆரம்பமாகி விடுகிறது. அந்த உதயம் அழகாக இருக்கிறது என்று மனம் சொல்கிறது.

உங்களின் மனம், நீங்கள் கேட்ட இசையை, முன்பு நீங்கள் கேட்டிருக்கும் மற்றொரு இசையோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.

அதன் அர்த்தம், நீங்கள் தியானத்திற்கு வெளியே விழுந்து விட்டீர்கள் என்பதுதான்!

மௌனமாக ஆனந்த நிலையிலேயே இருந்து கொண்டிருப்பதுதான் தியானம்.

அந்த நிலையை நீங்கள் கற்றுக் கொள்ள முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடியது அது.

தியானம் செய்வது எப்பழ

How to meditate?

(இந்தக் கலைப்புக்குப் பதில் தெரிந்து கொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். காரணம் இவர்கள் தியானத்தில் அமாந்தால் சாதாரண நேரங்களில் வரும் எண்ணங்களை விட அதிகமான எண்ணங்கள் வருவதுபோலவே தோன்றுவதுதான்.

அப்படித் தோன்றக் காரணம், அப்போதுதான் தங்கள் வாழ்வில் முதன் முறையாக ஒடிக் தன்னுள் தொடர்ந்து நேர் சந்திக்கிறார்கள்.

தியானத்திற்குள் மூழ்க, மூழ்க, ஒரு நாள் எண்ணங்களைக் கடந்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

தியானத்தில் ஈடுபடுவது சுலபம்.

சில குட்சுமங்களைச் சரியாகப் புரிந்து கொண்டால், வேகமாக முன்னேறலாம்.

'உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற, அமைதியான உணர்வு நோக்கி ஊடுருவுங்கள்.' இதைப் புரிந்துகொள்ள கடினமாக இருந்தால் ....

ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்களின் எண்ணங்களை. மனதைப் பார்க்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

இதை இன்னும் எல்லோரும் நன்றாகத் தெரிந்து கொள்ள ஒரு உதாரணம். சினிமாவைத் தியேட்டரில் பார்த்துக்கொண்டு

இருக்கிறீர்கள். சினிமாவில் உங்களுக்குப் பிடித்த காட்சி ஒடிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.

அதே போல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஒடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவின் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.

இந்தப் படம் சரியில்லை. போரடிக்கிறது என்பதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா? முடியாது.

சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று மூன்று மணிநேரம் உட்கார்ந்து வெறுமனே பார்த்துவிட்டுத்தானே வருவீர்கள்.

அதே காரியத்தை தியானத்திலும் செய்யுங்கள்.

சும்மா பாருங்கள்

சாட்சியாகப் பாருங்கள்

முப்பது நிமிடம் உள்ளேயே ஒரு சினிமாவைப் பாருங்கள்.

  1. ஒருவேளை, வந்த எண்ணங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அந்த எண்ணங்களை, காட்சிகளை நிறுத்த வேண்டாம்.

  2. வந்த எண்ணங்கள் உங்களுக்குப் பிடித்த எண்ணங்கள் என்பதற்காக அந்த எண்ணங்களை, காட்சிகளைக் கொடா வேண்டாம் .

  3. புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ காட்சியையோ உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான்.

இந்த மூன்று விதிகளைக் கடைபிடித்தால் போதும். சாட்சியாகப் பார்ப்பது சுலபமாகிவிடும்.

தியானத்தில் ஆழ்ந்து நன்றாக ஈடுபடமுடியும், தியானித்துப் பாருங்கள்! பலன் தெரியும்.

நிலையிலேயே இருந்து கொண்டிருப்பதுதான் தியானம்.

தியானத்தின் பலன்கள் Benefits of Meditation

தியானத்தின் பலன்களைப் பற்றி ஆராயும் முன்...

மனிதனின் மிக முக்கியமான எதிர்பார்ப்புகள் என்னென்னவென்று பார்ப்போம். எல்லா மனிதர்களின் தேவைகள், ஆசைகளை கீழ்க்கண்ட ஐந்து வகைகளுக்குக் அடக்கிவிடலாம்.

இந்த ஐந்து வகைகளுக்கு அப்பாற்பட்டு தேவைகள் இருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

    1. உடல் நலம் (Physical health)
  • 2.. மன நலம் (Mental health)
    1. அருமையான உறவுகள் (Good interpersonal relationship)
    1. கேவையான அளவு செல்வம் (Sufficient wealth)
    1. ஆனந்தம் (Bliss)

தியான ரகசியம் - 1

ூடல்பலம், மனோபலம், ஆன்மபலம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் அதிகரிக்க வழியிருக்கிறதா ?

இருக்கிறது.

• என்ன ?

தியானம்.

யார் தியானம் செய்யக் கூடாது ?

சிரிக்கும் குழந்தை, ஆனந்தமாயிருக்கும் ஞானி.

யார் தியானம் செய்ய வேண்டும் ?

மற்ற எல்லோரும்.

ீஎப்போது தியானம் செய்யக் கூடாது ?

ஆனந்தத்தையும் ஆரோக்கியத்தையும் அருளும் அருமருந்து தியானம். ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே முழு ஆரோக்கியமானவராகவும், ஆனந்தம் நிறைந்தவராகவும் இருந்தால் ... மருந்து தேவையில்லை.

சரியான தியானம் எது ?

வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் வேதம். வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் குரு. வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் தியானம்.

உடலும் மனமும் குணமாகும் - தியானத்தால்

Body and mind will heal - through Meditation

அரோக்கியம் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவா்கள் சொல்லும் பதில், நோய்களே இல்லாத நிலைதான் ஆரோக்கியம் என்பதாகும்.

இந்தக் கருத்து முழுக்க முழுக்க ஆரோக்கியத்திற்கு எதிரானது, தவறானது.

ஒரு சிறிய உதாரணம் சொன்னால் எளிதாக இதைப் புரிந்துகொள்ள முடியும்.

"பணக்காரர் யார்?'' என்று கேட்டால் "கடன்களே இல்லாதவர்,'' என்று பதில் சொன்னால், எவ்வளவு அபத்தமாயிருக்கும் ?

ஒரு கூலித் தொழிலாளி கடன்களே இல்லாமல் இருக்கலாம். உடனே அவரைப் பணக்காரர் என்று சொல்ல முடியுமா ?

ஒரு தொழிலதிபர் நிறைய வங்கிக் கடன்களை வைத்திருப்பார். கடன்கள் இருப்பதால் இவரை ஏழை என்று சொல்ல முடியுமா ?

பணக்காரர் என்பதற்கு எது அளவுகோல் ... ?

ஆரோக்கியம் என்பதற்கு எது அளவுகோல் ... ?

ஆரோக்கியத்தின் அளவீடாக நோய்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதை மட்டும் வைத்து முடிவு செய்யவே முடியாது.

ஆரோக்கியம் என்பது ரம்மியமான அகஉணர்வு சம்பந்தப்பட்டது. மனிதனை சதா உற்சாகமாக வைத்திருக்கும் உள்ளத்தின் உற்சாக உணர்வு சம்பந்தப்பட்டது.

குழந்தைகளைப் பாருங்கள்! எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்!

குழந்தை, ஞானி இருவரின் முகத்திலிருக்கும் மலர்ச்சியே அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களென்று சாட்சி சொல்லும்.

நம்மிடமிருந்த ரம்மியமான இந்த சுகஉணர்வு என்று குறைய ஆரம்பிக்கிறதோ அன்றே ஆரோக்கியம் மறைந்து விடுகிறது.

உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். மலர்ச்சி எவ்வளவு குறைந்து போயிருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆரோக்கியம் குறைந்து போய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் என்பது திடீரென வரக்கூடிய ஒன்றல்ல. பல நாள் ஆரோக்கியக் கேட்டின் விளைவே ஒருநாள் நோயாக வெளிப்படும்.

சுக்உணர்வு என்றோ குன்றிப் போனதின் இன்றைய வெளிப்பாடுதான், நோய்.

தியானத்தின் மிக முக்கியமான செயல், நாம் இழந்து விட்ட சுகஉணர்வை மீட்டுத் தருவதே ..

தொடர்ந்து தியானத்தைச் செய்து வர உடலில் உள்ளத்தில் உற்சாக உணர்வு அதிகமாக ஆரம்பிக்கும்.

உடலில் இருக்கும் நச்சுக்களெல்லாம் சிரத்தையோடு செய்யப்படும் தியானத்தால் உடலை விட்டு வெளியேறிவிடும். நச்சுக்கள் அகன்றால், உள்ளுக்குள் இருக்கும் உற்சாகம் முழுமையாக வெளிப்படும். ஆரோக்கியம் கிடைத்துவிடும்.

தியானங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு என்ன செய்கின்றன என்ற மிகப் பெரிய ஆராய்ச்சி ஒன்று சென்ற வருடம் நடத்தப்பட்டது.

அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நம் அன்றாட வாழ்க்கைக்கு நேரடியாக உதவுபவை.

ஆராய்ச்சியின் முடிவுகள் - 1

சும்மா பாருங்கள்

சாட்சியாக பாருங்கள்

தியானத்தின் பங்கு - உடல் நலத்தில்

Role of Meditation in physical health

  1. தியானம் செய்வதால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தும், குறை இரத்த அழுத்தத்தை உயர்த்தியும் சராசரியான ஆரோக்கிய இரத்த அழுத்த நிலையை நோக்கி (Average B.P.Level) இரத்த ஓட்ட மண்டலமானது தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது.

  2. நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) தியானம் செய்யும் அளவுக்கேற்ப அதிகரிக்கிறது. மருத்துவ உலகம், தியானத்தையும் ஒரு மருந்தாக அங்கீகரித்திருப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம், தியானத்தினால் நோய் எதிர்ப்புச் சக்கி அதிகமாவதுதான்!

  3. உடலின் குட்டைத் தணித்து ஆரோக்கியமான சுத்த உஷ்ணத்தைத் தியானம் ஏற்படுத்தித் தருகிறது.

  4. சர்க்கரை நோயால் வரும் உடல் சோர்வு, அதிகப் பசி, அதிக தாகம் ஆகியவை தியானத்தைத் தொடர்ந்து செய்யும்போது குறைந்துவிடுகிறது, உற்சாகம் பிறக்கிறது.

  5. பலரின் இரத்தத்தின் சர்க்கரை அளவை சராசரி நிலைக்கு (Average blood sugar level)

கொண்டு வந்து விடுகிறது.

  1. நமது உடலில் செல்கள் உதிரும் காலத்தைக் கூட்டுகிறது. அதாவது செல்களின் வாழ்நாளை, மனிதனின் ஆயுட்காலத்தை தியானம் அதிகரிக்கிறது.

7.செல்களின் வாழ்நாள் அதிகமாவதால், முகத்தில் இளமையும் பொலிவும் கூடுகிறது. முதுமையடைதல், கிழடு தட்டுதல் தள்ளிப் போய் விடுகிறது.

Section 2

  1. உடலில் உள்ள எல்லாச் சுரப்பிகளும் உயிர்ச் சக்தியால் நிரப்பப்படுகின்றன. Hormonal balance என்று அழைக்கப்படும் சுரப்புநீர் சமநிலையை நம் உடல் அடைகிறது.

  2. உடலின் நச்சுப்பொருட்கள் Toxins நீக்கப்படும் வேகம் அதிகரிக்கிறது.

  3. தசைகளில் இருக்கும் பிடிப்புகள் (Muscle Cramps) தளாவடைகிறது. எலும்புகள் வலுவடைகின்றன. (Bone Strength)

  4. மனச்சோர்விலிருந்து (Depression) மனிதனைக் குணப்படுத்தும் antidepressive chemicals தியானத்தினால் உடலுக்குள் அதிகம் சுரக்கிறது.

  5. கியானம் தூரும் உற்சாகச் சக்தியால் முகம் மலர்ந்து பொலிவடைகிறது. மனிதனின் செயலாற்றல் திறன் (Working efficiency) அதிகரிக்கிறது.

  6. அதிகமாகப் படபடக்கும் இதயத் துடிப்பைத் தியானம் கட்டுக்குள் கொண்டு வருகிறது.

14.கியானத்தினால் ஏற்படும் மாற்றங்கள் மனிதனைகுள் சந்தோஷ் உணர்வைத் தரும் வேதிப் பொருட்களை (Happy chemicals) உடலுக்குள் சுரக்க வைக்கிறது.

  1. உடல், மன சமச்சீர்நிலையை (Mind body balance) தியானம் ஏற்படுத்துகிறது.

  2. தூக்கமின்மை (Insomnia) என்ற வியாதியைத் தியானம் சரி செய்கிறது. தூக்கத்தின் தரத்தைத் தியானம் அதிகப்படுத்துகிறது.

இவ்வளவு மருத்துவ குணங்களையும் தியானம் பெற்றிருப்பதால்தான், தியானத்தை ஒரு மருத்துவ முறையாகவே இன்று மருத்துவ உலகம் அங்கீகரித்திருக்கிறது.

பல இலட்ச ரூபாய்கள் செலவு செய்து தொடர்ந்து மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகள் பலவும் இந்தத் தியானங்களின் மீது செய்யப்படுவதற்கு தியானத்தின் இந்த மருத்துவ குணங்களே முக்கிய காரணம்.

தியானம் தரும் உற்சாகச் சக்தியால் முகம் மலர்ந்து பொலிவடைகிறது. மனிதனின் செயலாற்றல் திறன் அதிகரிக்கிறது.

தியானத்தின் பங்கு – மன நலத்தில்

Role of meditation in mental health

2-டல் நலத்திற்கு ஒரு தியானம், மனநலத்திற்கு ஒரு தியானம் என்றெல்லாம் தனித்தனிப் பாகுபாடுகள் தியானத்தில் கிடையாது.

உடல் நலத்தையும் மனநலத்தையும் தியானம் ஒரே நேரத்தில் சீராகச் சரிசெய்து கொண்டே வரும். உடல் நலமாக நலமாக, மனமும் வளமடைந்து கொண்டேயிருக்கும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் வெறும் தியானம் மாத்திரமே முழுப்பலனைத் தந்துவிடாது.

தியான முறையோடு ஞானக் கருத்துகளும் சேரும்போது மட்டுமே தியானம் முழுமையான பலனைத் தரும். கபடத்தனங்களையும் ஞானக் கருத்துகள் மூலமாகத்தான் சட்டென்று புரிந்து கொள்ள முடியும். நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமான அகங்காரத்தின் அணிவோ வரை சென்று அதை அழிக்க, ஞானக் கருத்துகளின் அணுகுமுறையும் தியானத்தின் சக்தியும் ஒருசேரத் தேவை.

ஏற்கெனவே தரப்பட்டுள்ள தியானம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளில் 11-ல் இருந்து 16-ஆவது வரையுள்ள முடிவுகள், தியானம் மனநலத்திற்குச் செய்யும் நன்மைகள் தரப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியின் முடிவுகள் - 3

தியானத்தின் பங்கு - உறவின் இனிமையில் Role of Role of meditation in sweet relationships

டுவிடம் துர்நாற்றம் வெளிப்பட வாய்ப்பே இல்லை.

அருமையான மனிதரிடம் துர்க் குணங்கள் வெளிப்பட வாய்ப்பே இல்லை. ஒரு மனிதரின் உடலும் மனமும் நிம்மதியாக இருக்கும்போது, அவர் மற்றவரின் நிம்மதியைக் குலைக்க வாய்ப்பேயில்லை. உடலும் மனமும் நலமாக இல்லாமல், நிம்மதி இழந்து தவிக்கும் மனிதர் இயல்பாகவே மற்றவரின் நிம்மதியை குலைக்கவே முயற்சிசெய்வார்.

நம்முடைய உறவுகள் சுமூகமாக இல்லாதிருப்பதற்குக் காரணம் உடலும் மனமும் சுமுகமான நிலையில் இல்லாது இருப்பதுதான், முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது.

உள்ளேயிருக்கும் உடல், மன வேதனைகள்தான் வெளியே சச்சரவாக வெடிக்கிறது; இன்னொருவரிடம் சண்டையிடத் தூண்டுகிறது.

உடலையும் மனத்தையும் ஸ்திரப் படுத்துவதினாலேயே இவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்குவிடலாம்.

ஆரோக்கியமான மனிதர் எப்போதும் சந்தோஷமாகச் சிரித்து, அவர் இருக்கும் இடத்தையே கொண்டாடிக் கொண்டே இருப்பார்.

சிரித்துப் பேசுபவரிடம் மற்றவர்களும் இயல்பாக சிரித்துப் பேசவே முயற்சி செய்வார்கள்.

அப்படியே சச்சரவுகள் ஏதேனும் ஆரோக்கியமான மனிதரைச் சுற்றி உருவானாலும், மனத்தெளிவு மூலமாக அவரே அதை சுலபமாகத் தீர்த்து விடுவார்.

தியானம் தொடர்ந்து செய்யும் ஒருவர், உஉடல் மனநலம் பெற்றிருப்பதோடு, ஆரோக்கியமான மனித உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் கலையையும் எளிதாகக் கற்றுவி(டுவார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் இனிமையான மன உணர்வில் வாழ்வதனாலேயே. இனிமையான மனிதர்களை உங்களை நோக்கி ஈர்ப்பீர்கள்.

ஆராய்ச்சியின் முடிவுகள் - 4

தியானத்தின் பங்கு – போதிய செல்வத்தில் Role of meditation in wealth

செல்வத்தைச் சேர்ப்பதற்கான முதல் அடிப்படை தேவை உடல் ஆரோக்கியம்.

அதற்கடுத்த முக்கியமான தேவைகள் மனத் தெளிவும்; புத்திசாலித்தனமும்.

தியானத்தினால் ஒருவரின் முடிவெடுக்கும் திறன் (decission making capacity) மற்றும் புத்திசாலித்தனம் (Intelligence) நேரடியாக அதிகமாகிறது.

அதுமட்டுமல்லாமல், ஆனந்தத்திற்கே செல்வத்தை ஈர்க்கும் குணம் உண்டு.

தியானம், மேற்சொன்ன எல்லாக் தன்மைகளையும் ஒன்றாய் அதிகரிக்கும்.

நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு உண்மை, எந்த ஒரு புத்திசாலியும் தேவைக்கதிகமாகச் சொத்துகளைக் குவிப்பதில் நேரத்தை வீணடிக்க மாட்டார்.

எந்த ஒரு புத்திசாலியும் தேவைக்கதிகமாகச் சொத்துகளை குவிப்பதில் நேரத்தை வீணடிக்கமாட்டார்.

தியானத்தைத் தொடர்ந்து செய்யும் தியானியால், தமக்குத் தேவையான அளவு சொத்துகளைச் சா்வசாதாரணமாக ஒரு விளையாட்டைப் போல் சேர்த்துவிட முடியும்.

தேவைக்கதிகமாகச் சொத்துக் குவிப்பில் வாழ்வையே வீண்டிக்கும் அவலத்திலிருந்து தியானம் ஒருவரை மீட்டும்.

சுருங்கச் சொன்னால், வெளியுலக வாழ்வை, வளமாய் வாழத் தேவையான வளங்களை நேரடியாய் அதிகரிக்கும் குணங்களை தியானம் அதிகரிக்கும்.

ஆராய்ச்சியின் முடிவுகள் - 5

ஆனந்தம் தியானத்தால் சாத்தியமே Power of meditation in achieving bliss

ர் ருப்தி, நிம்மதி, சுகம் போன்ற பல தலைப்புகளில் தமக்குக் கிடைத்த வழிகளிலெல்லாம் மனிதர்கள் முட்டி மோதி ஆனந்தத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

தியான மார்க்கத்தின் ஒரே நோக்கம் ஆனந்தத்தை மனிதருக்குள் அளவின்றி பொங்க வைப்பதே

  • � உடல் நலம்
  • � மனநலம்
  • � ஆரோக்கியமான உறவுகள்
  • � செல்வம்
  • � ஆனந்தம்

ஆகிய அனைத்தும் தியான மார்க்கத்தைத் கடைப்பிடிப்பதனாலேயே கொடர்ந்து ஒருவருக்குக் கிடைக்கும் அருமையான பலன்கள்.

தியான மார்க்கத்தின் ஒரே நோக்கம் ஆனந்தத்தை மனிதருக்குள் அளவின்றி தருவது மாத்திரமே.

மனிதனின் ஒட்டு மொத்த தேவைகளுக்கும் ஒரேயொரு தீர்வு தியானம்.

தொடர்ந்து தியானம் செய்யும் தியானியாக மாறினால் மேற்கண்ட அனைத்தும் உண்மையென நிச்சயம் பரிந்து கொள்வீர்கள்.

வாழ்வில் அவ்வப்போது தியானம் வந்து போகாமல், வாழ்வே தியானமாக மாறும்போது, ஜீவன் முக்தராக வாழ ஆரம்பித்து இருப்பீர்கள்.

பஞ்சபூத தியானங்கள்
ஆகாசம்சிதாகாச தியானம்
வாயுஸ்பூர்த்தி பானா தியானம்
நெருப்புஜோதி ஸ்தம்ப தியானம்
நீர்ஆத்ம ஸ்புரண தியானம்
நிலம்யந்திரத் தியானம்
ஐம்புலன்களுக்கான தியானங்கள்
பார்த்தல்பிரத்யாகார தியானம்
கேட்டல்மௌனபிந்து தியானம்
நுகர்தல்செயலை நிறுத்து தியானம்
சுவைத்தல்உண்ணுதல் தியானம்
தொடுவுணர்வுகாமஹரண தியானம்
ஐந்து கோஷங்களுக்கான தியானங்கள்
அன்னமய கோசம்நித்ய யோகா
பிராணமய கோசம்சக்தி தாரணா
மனோமய கோசம்நித்ய தியானம்
விஞ்ஞானமய கோசம்புரஸ் சரணம்
ஆனந்தமய கோசம்தியான சிகிச்சை

சிதாகாச தியானம்

Chitakasa Dhyanam

பலன்கள்:

1: அகாச தத்துவ சக்தியை நமக்குள் உருவாக்கும் சக்திவாய்ந்த தியானம் சிதாகாஷ தியானம்.

2: இந்தப் பயிற்சியை மேற்கொள்ள, தெளிந்த ஆகாச சக்தி உங்களுக்குள்ளேயே இருப்பதை பார்ப்பீர்கள். நீங்கள் மனமற்ற நிலையை எளிதாய் உணர உதவும் கியானம் இது.

இந்தத் தியான முறையைப் பற்றி :

வானத்தை முன்னிலைப்படுத்தி தியானம் செய்வதுதான். வெறுமையைத் தியானம் செய்வது.

தெளிந்த நீலவான்மே பூரண வெறுமை.

அதன் மீது தியானம் செய்வது என்பது தெளிவுக்குள் பிரவேசிப்பது.

செயல்முறைக்கான விளக்கம் :

மேகமில்லாத தெளிந்த நீலவானம் புலப்படும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அமைதியான இடமொன்றில், மல்லாக்கப் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்க்கத் தொடங்குங்கள்.

கண்களை இமைக்கக் கூடாது. கண்களில் நீர் வழிந்தால் கூட, இனிமையான உணர்வோடு நீலவானத்தை பார்த்துக் கொண்டே இருங்கள்.

ஒருவேளை வலியைப் புறக்கணித்து விடுங்கள்.

கண்ணீர் கண்களை கழுவிய பிறகு, உற்றுப் பார்ப்பது எளிதாகி விடும்.

வானத்தைப் பற்றி நி நினைக்காதீர்கள்! அந்த வானம் எவ்வளவு அழகாக நீலமாக இருக்கிறது என்றெல்லாம் நினைக்காதீர்கள். எந்த வினாடி அதைப்

பற்றி நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ, அந்தக் கணமே நீங்கள் வானத்தை விட்டு விலகி விடுவீர்கள்.

உங்கள் பணி, வானத்தைப் பற்றி நினைப்பதல்ல.

அப்படியே அதற்குள் பகுந்துவிடுவது.

சங்கமம் உண்மையில் ஏற்பட்டிருந்தால் வானம் உங்களுக்குள் இருப்பதை உணர்வீர்கள்!

சும்மா பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம், வானத்தின் துல்லியத்தை உணருங்கள். அதற்குள் பிரவேசித்து விடுங்கள். வானத்திற்குள் ஆழமாகச் சென்று விடுங்கள்.

மேலும், மேலும் ஆழமாகப் பார்க்க இன்னும் இன்னும் ஆழத்தினுள்ளே செல்ல முடியும்

அதனோடு ஒன்றிவிடும்வரை பார்த்துக்கொண்டிருங்கள்.

அதனோடு ஒன்றிவிட்டதாக நீங்கள் நினைப்பது வேறு. ஒன்றிவிடுவது வேறு. அதனோடு ஒன்றி விட்டால், அது உங்களுக்குத் தெரிந்து விடும். ஒரு மணி நேர மோ, அதற்கு மேலுமோ ஆகலாம். நிறுத்தாதீர்கள்.

உங்களது சிந்தனையை அலைபாய விட வேண்டாம்.

உங்களது பார்வையை வானத்தை விட்டு அகற்ற வேண்டாம்.

இனி, கண்களை மூடுங்கள்.

அந்தச் சங்கமம் உண்மையில் ஏற்பட்டிருந்தால், வானம் உங்களுக்குள் இருப்பதை உணர்வீர்கள் !

உங்களது மனம் கழன்று காணாமல் போகும். உங்களின் எண்ணங்களும் மறைந்து போகும். அந்த வானத்திற்குள் இருங்கள்.

ஆரம்ப கட்டத்தில், அது, ஒரு சில கணமாகவே அமையும்.

பயிற்சி மேற்கொள்ள மேற்கொள்ள, அந்த நிலையை மேலும் அதிக நேரம் அனுபவிக்க நேரும். தெளிந்த வானம் உங்களுக்குள் இருக்க, நீங்கள் மனமற்ற நிலையை உணர்வீர்கள்.

ஸ்பூர்த்தி பானா

Spoorthi bana

பலன்கள்:

1: வாயு தத்துவ சக்தியை நமக்குள் உருவாக்கும் ஸ்பூர்த்தி பானா தியானம்.

2: ரீங்கள் ஒரும்போது, மனம் அசைவது இல்லை. மன அசைவு நின்றால், ஜூவன் முக்தத் தன்மையில் மலர்வீர்கள்.

அதுதான், 'டைனமிக் தியானம்', 'ஒடும் தியானம்'.

ஏன் ஓட வேண்டும் ?

நங்கள் ஒடும்போது, தயார்நிலையிலும், விழிப்புணர்வு கொண்டும் இருப்பீர்கள்.

நீங்கள் ஒடும்போது,

மனம் அசைவது இல்லை.

செயல் முறைக்கான விளக்கம் :

ஒடுவதற்கான நேரத்தை முடிவு செய்து கொள்ளுளுங்கள்.

அதிகாலை நேரம் சிறந்தது.

அடுத்தபடியாக மாலை நேரம்.

எளிய, நேரான பாதையைத் தேர்தெடுத்துக் கொள்ளுங்கள். பாகை சரிப்பட்டு வராது. நிசப்தமும் தனிமையும் உள்ள இடம்.

ஒடும்போது ...

எண்ணம் உங்களின் தொண்டைக் குழியில் இருக்கும் விசுத்தி சக்கரத்தில் ஒன்றாக்கி ஓடுங்கள்.

உங்கள் கவனம் ஓட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

ஒடும்போது விசுத்தி சக்கரத்தில் கவனத்தை ஒன்றாக்கும்போது நமக்குள் வாயு தத்துவத்தின் பிராண சக்தி மிக அதிக அளவில் பொங்க

வைக்கும்.

ஒடிப் பழக்கமில்லை என்றால், கொஞ்ச தூரம் ஒரு அரை மைல் ஓடினால் போதும். காலணி அணிந்து கொண்டும் செல்லலாம்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.

அதற்குப் பிறகு, ஒடுங்கள்!

வயிற்றிலிருந்து மூச்சை விட்டு நன்றாக இழுங்கள். கைகள் எல்லாம் செயல்படும்படி ஒடுங்கள்.

களைப்புத் தோன்றினால், உடலுக்குச் சிரமம் கொடுக்காமல், சற்று ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

காலணிகளைக் கழற்றி விட்டு, கால் பூமி மண்ணைத் தொட்டு உணரும்படி நில்லுங்கள்.

பூமியைத் தொடுவதால் கிடைக்கும், ஒரு சக்தி ஆதாரத்தை நாம் இழந்து விட்டோம். காரணம், எங்கும் செயற்கையான தளங்கள் இருப்பதால், நாம் வெறுங்காலில் நடந்து மகிழ்வதையே விட்டு விட்டோம்.

இந்தியாவில், வெறங்காலில் நடப்பது பனிதமான உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது.

அதனால்தான் பல வழிபாட்டுத் தலங்களிலும் மிதியடிகளை வெளியே விட்டு வரும்படிச் செய்கிறார்கள். அந்த இடங்களில் சக்தி மட்டம் உயா்ந்திருக்கும். அந்தச் ச க்தியைப் பெற உங்கள் புலன்கள் அனைத்தும் தயாராகத் திறந்து இருக்கும்படி செய்ய வேண்டும்.

பாதை நன்றாக இருந்தால், வெறுங்காலில் ஒடுவது மாபெரும் அனுபவமாக அமையும்.

புல்வெளியிலோ,

ஆற்றோரத்திலோ,

கடற்கரையிலோ முயற்சி செய்து பாருங்கள்.

பூமியோடு தொடர்பு கொள்வது, வாழ்வின் ஆதாரமூலத்தோடு தொடர்பு கொள்வதாகும்.

அதிகப்படியாக ஒடும் உற்சாகத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். காலத்தை வரையறுக்க வேண்டாம்.

உங்கள் பயிற்சியைச் செழுமைப் படுத்தவும் வேண்டாம். எடை குறைப்பதற் காகவும் ஒட வேண்டாம்!

ஒருவேளை உங்கள் எடை குறைந்தால், அதுவும் நல்லதுதான் ஆனால், அதற்காக என்று ஒடக் கூடாது. சும்மா ஒடுங்கள்!

பல நாள் ஓடிய பிறகு, அந்தக் காரியம் மலைபோல் தோன்றினால், அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு தியான முறைக்குப் போய் விடுங்கள்!

நீந்தலாம், நடனமாடலாம்.

தோன்றினால் ஒடுவதற்குத் மறுபடியும் செய்யலாம் என்று திரும்ப வந்து விடுங்கள்.

நீங்கள் கடைப்பிடித்தாக வேண்டிய, இந்தச் சில குறிப்புகள் தவிர, வேறு எந்த விதிகளையும் வகுத்துக் கொள்ளாதீர்கள்.

இந்தியாவில் வெறங்காலில் நடப்பது புனிதமான உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது.

ஜோதி ஸ்தம்ப தியானம்

Jothi stamba dhyanam

பலன்கள்

1: அக்னி தத்துவ சக்தியை நமக்குள் உருவாக்கும் ஜோதி ஸ்தம்ப தியானம்

2: உங்களது மூலாதார சக்தியை, ஆனந்தமாக்குவதற்கு இந்தத் தியான முறை மிகவும் அழகான முறைாகும்.

செயல் முறைக்கான விளக்கம் ;

முதுகுத் தண்டுவடம் நேராக நிற்க, கண்களை மூடியபடி நேராக,சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒளியாக இருப்பதுபோல் கற்பனை செய்தபடி இருங்கள்.

நீங்கள் ஒளி.

எல்லாமே ஒளிமயம்.

உங்களை நீங்கள் ஒரு சக்தியாக என்றும் உணர்வதே இல்லை. உங்களை ஒரு
பொருளாகத்தான் நீங்கள் உணர்வது வழக்கம். உங்களை ஓர்
இதயத் துடிப்புஒளித் தூணாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மிகவும் அமைதியாகஇனி, முதுகெலும்பின் நுனியிலிருக்கும் மூலாதார மையத்தின்
அடிப்பதைமீது கவனத்தைத் திருப்புங்கள். அது ஒளிப் பெற்துபோல
உணருங்கள்.ஒளிமயமாகவும் உயிர்த்துடிப்பாகவும் இருப்பதாக உணருங்கள்.

್ರದ್ಧಿಗಾ

இனி, அந்த ஒளி, மேல் நோக்கி, உங்கள் தொப்புள் வரை நகர்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஒருவிதமான வெதுவெதுப்பு உள்ளே மேலெழுவதை உணரலாம். அது உண்மையான வெதுவெதுப்பு! தொப்புளும் இடைப் பகுதியும் ஒளிப் பந்தாக மாறும். ஒளியின் ஒரு பகுதி மேல் நோக்கி உயரத் தொடங்கும்.

அடுத்து, இதய மையத்தை நோக்கி நகர்வதாக உணருங்கள்.

இதயத்தில், ஒளியையும் வெது வெதுப்பையும் உணருங்கள். மூச்சு ஆழப்படுவதை உணருங்கள். இதயக் குடிப்பு மிகவும் அமைதியாக அடிப்பதை உணருங்கள்.

இதயத்தில், ஒளியையும் வெது வெதுப்பையும் உணருங்கள்.

மூச்சு ஆழப்படுவதை உணருங்கள்; இதயத் துடிப்பு மிகவும் அமைதியாக அடிப்பதை உணருங்கள்.

அந்தச் சக்தி, அதன் பிறகு புருவ நடுச் சக்கரம் நோக்கி நகர்வதைக் காணுங்கள். அந்தப் பகுதி முழுவதும் ஒளியால் சூழப்பட்டிருப்பதை உணருங்கள்.

மெதுவாக ஒளிச் சக்தியைத் தலைப்பகுதிக்கு உயர்த்தவும்.

தலைப்பகுதியை அடையும்போது, பல பல புதுமையான தொற்றங்களை சக்கி அனுபவிப்பீர்கள். தலைச்சுற்றலும் மயக்கமும் கூட ஏற்படலாம். அதிக சக்தி தலைக்கு ஏறும்போது, பெரிய வெடிப்புப் போன்ற உணர்வும் ஏற்படலாம். அதற்கு அஞ்சாதீர்கள்.

தலை சுற்றுவதுபோலத் தோன்றினால், விழுவதுபோல உணர்ந்தால், விழுந்து விடுங்கள். மயக்கம் வந்தாலும் சரி, கவலை வேண்டாம். அது, ''யோக நித்திரை என்னும் மிகுந்த ஆழ்நிலை உறக்கம்.

தியானிப்பவர் பலர் இந்த நிலை அனுபவம் பெறக்கூடும். அதற்காக அஞ்ச வேண்டியதில்லை. அரைமணி நேரத்தில் நீங்கள் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவீர்கள்.

சக்தி, தலைப்பகுதியை அடையும்போது, தலை முழுவதும் மெதுவாகச் சூடேறும்.

தலையே ஒர் ஒளிப்பந்தாக மாறிவிடும்.

தத்துவ சக்தி அக்னி உங்களுக்குள் பொங்குவதற்கான அடையாளங்களில் இதுவும் ஒன்று.

இப்போது, அந்த ஆற்றலைப் பிரபஞ்ச த்திற்குள் செலுத்துங்கள். உங்கள் தலையே அழகிய தாமரை மலரின் மடல்களாக மெல்லத் திறந்து, அதன் ஆற்றலைப் பிரபஞ்சத்திற்குள்

செல்லும்படி விடவும்.

வர் எச்சரிக்கை

எந்தக் காரணம் கொண்டும், இந்தத் தியான பயிற்சியைப் பாதியில் நிறுத்தக் கூடாது.

அரம்பிப்பதற்கு முன்பே, இரண்டு மணி நேரம் எந்த இடையூறும் ஏற்படாதவாறு செய்து கொள்ள வேண்டும்.

எந்தத் தடங்கலையும் நடுவில் அனுமதிக்க வேண்டாம். பாதி வழியில் நிறுத்திவிட்டு எழுந்தால், சக்தி, ஒரு குறிப்பிட்ட மையத்தில் கட்டியாகத் தேங்கிவிடும். அது, உடல் மனச் சீர்கேடுகளுக்குக் காரணமாகி விடும்.

உங்களது மூலாதார சக்தியை, ஆனந்த சக்தியாக மாற்றுவதற்கு இந்தத் தியானமுறை மிகவும் அழகான முறை.

தொடர்ந்து இந்த முறையில் பயிற்சி செய்து வர, உங்களின் அமைதியையும். மனகையும் பாதிக்கும் அளவுக்கதிகமான காம உணர்வுகள், மெல்ல அப்படியே நின்று விடும்.

நாள் முழுவதும் அதிகமான வழிபாட்டுணர்வை நீங்கள் உணர்வீர்கள். சக்தி உங்கள் தலையை நோக்கி அதிக அளவில் பாய்வதால், நீங்கள் மிகுந்த உயிர்த் துடிப்பு உள்ளவராக உணர்வதோடு, உங்களது செயல்பாடுகளும் மிகுந்த திறமையுடன் அமையும். மிக முக்கியமான அம்சம், நீங்கள் தொடர்ச்சியான ஆனந்த நிலையைப் பெற்றுவிடுவதுகான்.