Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

159. ஒஷோவின் சாயல் உங்களிடம்...

# ஒஷோவின் சாயல் உங்களிடம்

Osho's Slant in you

7. உங்கள் சொற்பொழிவுகள் அனைத்திலும் ஒஷோவின் சாயல் இருக்கிறது ? உண்மையில் உங்களுக்குள் ஒஷோவின் சாயல் உள்ளதா?

  • பிரேமா மகிமா, டெல்லி

ஒஷோவின் சாயல் எனக்குள் இல்லை. உங்களுக்குள் இருக்கிறது.

இந்தக் கேள்வியை கேட்பவர்களுக்குள் இருக்கிறது.

நீங்கள் ஏற்கெனவே நிறைய ஒஷோவின் புத்தகங்களைப் படித்திருந்தீர்கள் என்றால், என் கருத்துகளைக் கேட்கும் போது அது ஓஷோவுடையது போல இருக்கும்.

நீங்கள் ஏற்கெனவே ராமகிருஷ்ணருடைய புத்தகங்களைப் படித்திருந்தீர்கள் என்றால், ராமகிருஷ்ணருடைய சாயல் இருக்கும். ராமகிருஷ்ணருடைய பதில்களையே திரும்பச் சொல்வதுபோல் இருக்கும்.

ஏற்கெனவே ரமண மகரிஷியின் கருத்துகளை உள்வாங்கியிருந்தீர்கள் என்றால், ரமண மகரிஷியின் கருத்துகள் மாதிரி இருக்கும். நீங்கள் ஏற்கெனவே கிருஷ்ணரை ஆழ்ந்து தியானம் செய்து பூஜை செய்திருந்தீா்கள் என்றால், கிருஷ்ணருடைய சாயலையே என்னிடமிருந்து பார்ப்பீர்கள்.

ஏற்கெனவே ஈஸ்வரனுடைய சாரத்தை உள்வாங்கியிருந்தீர்கள் என்றால், ஈஸ்வரனைப் பார்ப்பதுபோல் பார்ப்பீர்கள்.

ஏற்கெனவே ஏசுவின் கருத்துகளை ஆழ்ந்து உள்வாங்கி இருந்தால், ஏசுநாதா் கருத்தைபோல் தோன்றும்.

நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். யாருடைய சாயலை நீங்கள் உள்வாங்கினீர்களோ, அவா்களுடைய சாயல்போல் தோன்றும். ரொம்ப அழகாக கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். எந்தப் பாவத்தில் நோக்குக்குகிறீர்களோ, அதே பாவத்தில் உங்களுக்கு முன் நான் தோன்றுவேன். எந்தச் சாயலில் நீங்கள் பார்க்கிறீர்களோ, அதே சாயலில் நான் தோன்றுவேன்.

எனக்குள் ராமகிருஷ்ணரின் சாயலோ, ரமணரின் சாயலோ, ஓஷோவின் சாயலோ இல்லை.

அவர்களுடைய சாரம் இருக்கிறது. அவர்களுடைய சாரத்தை உணர்ந்திருக்கிறேன்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அவா்களுடைய சாயல் உங்களுக்குள் இருப்பதால், அந்தச் சாயலை எனக்குள் பார்ப்பீர்கள்.எனக்குள் அவா்களின் சாயல் இல்லை. சாரம் இருக்கிறது. அதனால் யாருடைய சாயலிலும் நான் இல்லை. அவா்களின் சாரமாக இருக்கிறேன்.