155. சக்தி குறைவிற்கு, வழி என்ன ?
# சக்தி குறைவிற்கு, வழி என்ன ?
what is the way for reduced energy?
3. எனக்குச் சக்தி குறை இருப்பதாய்க் கருதுகிறேன். உடல் அடிக்கடி சோர்வு அடைந்து விடுகிறது. நான் என்ன செய்ய ?
-பாலகேசவ், கன்னியாகுமரி
கரண்ட் கட்டாகி படிக்கட்டில் இறங்கும் போது, கடைசிப் படி தாண்டிய பின்கூட இன்னோர் படி இருப்பதாக எண்ணி, காலை தரையில் வேகமாக வைத்து துடுமாறிய அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறதா ?
இந்தத் தடுமாற்றம் படிக்கட்டால் வந்ததல்ல.
இது சாதாரண மனத்தடுமாற்றம்தான்.

நீங்கள் சுட்டிக் காட்டும் சக்திகுறைவு கூட நிஜமானதல்ல. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுகூட ''எனக்குச் சக்திகுறை இருப்பதாகக் கருதுகிறேன்' என்றே குறிப்பிட்டிருக்கிறீா்கள். உடல் சோர்வு உங்களை விட்டு ஒடிப்போகும் அளவிற்கு, சுறுசுறுப்பை உங்களின் உள்ளே நுழைய அனுமதியுங்கள்.
மனத்தின் விருப்பப்படி நமக்கு வரும் மந்தத்தன்மையின்படி உடலை மந்தமாய்ச் சோம்பி உட்கார்ந்து இருக்கவிடாமல், ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.
அப்போதெல்லாம் விழிப்புணர்வை முழுமையாக எடுத்து வாருங்கள். ''எனக்குச் சக்தி குறை இருப்பதாகக் கருதுகிறேன் என்று பேச இனி நேரமில்லை," என்னுமளவுக்குச் ச க்தி பொங்க ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.