Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

149. உணர்ச்சிகள் என்பது சரியா, தவறா?

# உணர்ச்சிகள் என்பது சரியா, தவறா?

Emotions are right or wrong?

உணர்ச்சிகள் சரியா, தவறா? என்கின்ற கேள்விக்கு இடமே இல்லை.

ஏனென்றால் இந்த உணர்ச்சிகள், நமக்குள்ளே இருக்கின்ற சமநிலையை இழக்கும் போதுகான் அது பிரச்சினையாகிறது.

நமக்குள்ளே உணர்ச்சி மாற்றம் ஏற்படும்போது, நம் உணர்வே அதற்கேற்றாற்போல் உருகிப்போகிறது. நம் நிலையே மாறிப்போகிறது.

சொல்லப்போனால், சிலநேரத்தில் வாழ்க்கையின் போக்கையே ஒரு உணர்ச்சி மாற்றிவிடுகிறது.

ஒருவருடைய வாம்கையையே, மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு, ஒரு சின்ன உணர்வே போதுமானது. இல்லை மிக கீழ்நிலைக்கும் போய், அதாவது தூக்குபோட்டுக் கொள்கிற நிலைக்கும் கூட, இன்னொரு சின்ன உணர்ச்சியால் எடுத்துக் செல்ல முடியும். உணர்ச்சிகளுக்கு, அவ்வளவு பெரிய சக்தியிருக்கிறது.

ஒருவருடைய வாழ்கையையே, மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு, ஒரு சின்ன உணர்வே போதுமானது.

கோபம், காமம், எரிச்சல் போன்ற எந்தவிதமான உணர்ச்சியும் ஒருவருக்குள் புகுந்தாலும் சரி, அது இன்னொரு உயிரைக் கொலை செய்கின்ற அளவிற்கோ அல்லது ஓர் உயிரைத் துன்புறுத்துமளவிற்கோகூட போகமுடியும்.

அதேபோல் ஒரு நல்ல, உணர்வு பொங்கினால், நல்ல உணர்ச்சிகள் பெருகினால் ஒரு பெரிய நாட்டையே காப்பாற்றும் அளவிற்கோ அல்லது எரிகின்ற வீட்டிற்குள்கூட குதித்து ஒரு குடும்பத்தையே காப்பாற்றுவதற்கான சக்தியாகவோ அது பொங்க முடியும். அதனால் உணர்ச்சி சரியா, தவறா என்பதை நேரடியாக ஆராய முடியாது.

நம் உணர்ச்சியை நாம் சரியாகக் கையாளுகிறோமா, இல்லையா? என்பதுதான் நம்மை நாம் கேட்க வேண்டிய கேள்வி. நம்மை நோக்கி நாம் கேட்டு ஆராயவேண்டிய கேள்வி இது ஒன்றுதான். வேறொன்றுமில்லை.

இரத்த ஒட்டத்திற்கும், உடம்பிற்கும் நடுவில் பாலமாகயிருக்கக் கூடிய ஹார்மோன்கள் நமக்குள்ளே பொங்கும் போது, மனத்தில் ஏற்படக்கூடிய சில மாற்றங்கள், நம் உணர்விலே ஏற்படுகின்ற சில மாற்றங்கள், இவையெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பொங்கும்போது, உள்ளுக்குள் ஏற்படுகின்ற காய்ச்சலைத்தான் நாம் உணர்ச்சிகள் என்று சொல்கிறோம். ஒவ்வொருவருக்கும் 43 வகையான ஜுரங்கள் இருக்கின்றன.

கோபம்,எரிச்சல், கவலை, துக்கம்போல 43 வித ஜூரங்கள் இருக்கின்றன. இதில் எந்தக்

காயச்சலுமே தவறு கிடையாது. ஆனந்தம்கூட ஒரு ஜுரம்தான் என்று சொல்வார்கள்.

முதல் அனுபவத்தை அடையும்போது ஒரு மனிதனுக்கு ஆனந்த ஜுரம் ஏற்படுகிறது. உடல் முழுவதும் ஆனந்தம் பொங்கி உடல் முழுவதுமாக அது பற்றிக் கொள்ளும். தீப்பிடிக்கும் பொழுது எப்படி எல்லா பொருளும் அதில் எரியுமோ, அதைப் போன்று ஆனந்தத்திலே மொத்த உடலும் திகுதிகுவென்று எரியும்.

நம் உடம்பென்கிற வீணையில் ஒலிக்கின்ற உருவாக்குகின்ற இனிமையான இசைதான் உணர்ச்சிகள்.

அப்போது நம் உடம்பில் ஒரு இனிமையான, மிக அருமையான ரசவாத மாற்றம் ஏற்படுகிறது.

அதைத்தான் ஆனந்த ஜுரம் என்று சொல்கிரோம்.

உணர்ச்சிகள் என்றால் வேறொன்றுமில்லை. இயற்கை நம் உடம்பில், நம் உடலென்னும் வீணையில் ஒலிக்கின்ற, உருவாக்குகின்ற இனிமையான இசைதான் உணர்ச்சிகள்.

அதைச் சரியாக இசைத்தோமென்றால், நாம் உட்கார்ந்து கேட்குமளவிற்கு இனிமையான இன்னிசையாகயிருக்கும். சரியாக இசைக்கத் தெரியவில்லையென்றால் நமக்குள்ளே ஒரு இனிமைத்துவம் இருக்காது, அதுவே தொந்தரவாக மாறிவிடும்.

எந்த ஒரு உணர்ச்சிப் பொங்கும் போதும், எந்த ஒரு ஜுரம் நமக்குள்ளே வந்தாலும், 43 வகை ஜூரங்களில் எது எழும்பினாலும் நம்முடைய சமநிலை தடுமாறாத அளவிற்கு நம்முடைய உணர்வுகளைச் சமச்சீர்ச் செய்யும் பக்குவம் இருந்தால், எந்த ஒரு உணர்வும் உணர்ச்சி கொந்தளிப்பாக மாறாது.

அது உணர்வு தடுமாற்றமாக மாறாது. அந்த உணர்வு அப்படியே அனுபவமாகக் கரைந்துவிடும்.

அது உடம்பிற்குள்ளே குதூகலமாகவும், ஒரு இனிமையான அனுபவமாகவும் மாறி கரைந்துவிடும்.

இப்போது பயத்தையே எடுத்துக் கொண்டால், பயம் என்பது நாம் பொதுவாக மனிதர்களுடைய வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு தேவையில்லாத உணர்வு, தவறான உணர்வு என்றுதான் சொல்வார்கள்.

43 வகை ஹரங்களில் எது எழும்பினாலும் நம்முடைய சமநிலை தடுமாறாத அளவிற்கு நம்முடைய உணர்வுகளைச் சமச்சீர்ச் செய்யும் பக்குவம் இருந்தால், எந்த ஒரு உணர்வும் உணர்ச்சி கொந்தளிப்பாக மாறாது.

ஆனால் பயம் என்பதே

ஞானம்தான், தெளிவுகான்.

ஒருமுறை நெருப்பில் கைவைத்த பிறகு, இன்னொருமுறை அந்த நெருப்பு பக்கம் போகும்போது 'ஐயோ! நெருப்பு சுடும்,'' என்கின்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது.

போன்று உணர்வும், அதனால் இது

ஏற்படுகின்ற தெளிவும் ஞானம்தான்.

உண்மையில். நீங்கள் பக்கம் பொன்போது நிகழ்ந்த அந்த அனுபவத்தைத்தான் Updated intelligence என்று சொல்வது.

நம்முள் நிகழும் இந்த நிகழ்விற்குச் சரியான போ கொடுக்கக் கெரியவில்லை. நெருப்பின் அருகே அருகே செல்லும்போது நமக்குள்

ஒருமுறை நொடர்ப்பில் கைவைத்த பிறகு, இன்னொருமுறை அந்த நெருப்பு பக்கம் போகும்போது "ஜயோ! ெருப்பு சுடும், '' என்கின்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்று உணர்வும், அதனால் ஏற்படுகின்ற தெளிவும் ஞானம்தான்.

தெரியாததனாலேயே அதை பயம் என்று சொல்லி விடுகிறோம். நம் மொத்த உடலையும் சடன் பிரேக் போட்டு நிறுத்தக் கூடியது அது.

அந்த நிறுத்துகின்ற செயலை, அந்த அதிர்ச்சியை, அந்த உடனடியான செயலைப் பற்றி என்ன சொல்வதென்று நமக்குத் தெரியவில்லை. என்னவென்று சொல்லத் தெரியாகதனால்கான் அதை பயம் என்று சொல்கிறோமே தவிர, அந்த உணர்ச்சிக்குப் பெயர் பயம் அல்ல. அது கெடுதல் விளைவிக்கக் கூடிய உணர்வு கிடையாது.

நங்கள் நடந்து போய்க்கொண்டே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள் வோம். நீங்கள் நடந்து சென்ற இடத்தில் ஒரு முள் காலில் லேசாகக் குத்திய உடனே பளீரென்று உங்கள் கால்களை எடுத்துக் கொள்கிறீர்கள். இது உடம்பிற்கே உள்ள பத்திசாலித்தனம்தான், Updated intelligence.

இதேபோல உடம்பிலுள்ள ஒவ்வொரு உணர்ச்சியுமே, நமக்குள்ளேயும் வெளியேயும் நடக்கும் மாற்றத்தை நாம் அபைவிப்பதற்காக, நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, கொண்டாடுவதற்காக, நமக்குள்ளே பொங்குகின்ற இனிமையான இயற்கையின் சக்திகள்.

இந்த இயற்கையின் சக்திகளைச் சரியாகக் கையாளத் தெரிந்தால், அது தியானம்.

அதைச் சரியாகக் கையாளும் பொமுது உணர்வு சமச்சீரான நிலை உருவாகிறது. அதைச் சரியாகக் கையாளத் தெரிய வில்லை எனும்போதுதான், நமக்குள்ளே உணர்வுச் சமச்சீரற்ற நிலை Imbalance உருவாகிறது.

இதைத்தான் தடுமாற்றம், துக்கம் என்று சொல்கிறோம். அதனால் நமக்குள்ளே ஏற்படுவதெல்லாம் நாம் சொல்லும் எதிர்மறை கருத்துகள்தானே தவிர, அவை எதிர்மரை உணர்ச்சிகளல்ல.

ஆனால் நிஜமாக ஆராய்ந்து பார்த்தோமென்றால், எந்த உணர்ச்சியையும் கையாள்கின்ற அளவிற்கு, அது நம்முடைய உடலையும், மனத்தையும் தாக்காத அளவிற்கு வலுவான ஹார்ட்வேரும், சாப்ட்வேரும் நமக்கு இருந்தன்றால், அது உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாறவே முடியாது.

எந்த உணர்ச்சியும் தடுமாறாது. ஒரு ஞானிக்கும், ஒரு மனிதனுக்குரிய இந்த ஜூரங்கள்

உள்ளே வந்த உணர்ச்சி அது எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ, அந்த வேலையைச் செய்துவிட்டு உடனே வெளியில் போய்விடும். இருக்கும் .

'பிறகு மனிதனுக்கும் ஞானிக்கும் என்னதான் வித்தியாசம் ?' என்று உடனே கேட்கத் தோன்றும்.

ஒரு ஜீவன்முக்தருக்கும், ஒரு மனிதணுக்கும் என்ன வித்தியாச மிருக்கிறது ?

ஒரு மனிதனுக்கு இந்த 43 ஜுரத்தில், எந்த ஜுரம் வந்தாவும் அவர் அரண்டுபோய் விடுவார். அப்படியே அந்த ஜுரத்தில் மாட்டிக் கொள்வார். குரோதம் என்கிற ஜுரமோ, காமம் என்கின்ற ஜூரமோ, எரிச்சல் என்கின்ற ஜூமோ வந்ததென்றால் அதிலே அவர் தம்மை இழந்துவிடுவார்.

அந்த உணர்ச்சிக்கே அடிமையாகி விடுவார். அந்த உணர்ச்சியின் பிடியில் அவரின் நரம்பு மண்டலமும் மனதும் சிக்கிக் கொள்ளும்.

ஆனால் ஒரு ஜீவன்முக்தர் தமக்குள் எந்த உணர்ச்சி பொங்கினாலும் அவரால் அதைத் தனித்திருந்து பார்க்கமுடியும். இரண்டாவது அந்தப் பொங்குகின்ற உணர்வுகளை அவரால் ஒரு சிறு சிறு சலனமும் இல்லாமல் கையாளமுடியும்.

அந்த உணர்வுகள், அவா சுதந்திரத்தைப் பறிக்காத பொங்கும் உணர்ச்சிகளாய் இருக்கும். தேவைப்பட்டால் அந்த உணர்ச்சியினுள் அவரால் மிக ஆழமாக ஆழமாகச் செல்லவும் முடியும். எந்த நிமிடம் விடவேண்டுமோ அதை விட்டுவிட்டு, அடுத்த நொடி அதன் பாதிப்போ, சலனமோ சிறிதும் இல்லாமல் வேறு வேலையைப் பார்ப்பார்.

அந்த உணர்ச்சியினால் பாதிப்போ, அந்த உணர்ச்சியின் சுவடோ, அந்த உணர்ச்சியின் வாசமோ அவரின் உள்ளே இருக்காது.

வந்த உணர்ச்சி, உள்ளே எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ, அந்த வேலையைச் செய்து விட்டு, உடனே வெளியே போய்விடும்.

இப்போது 4 பேரை சமாளித்தாக வேண்டும் என்றால், ஒரு புதுப்பிரச்சினையை கையாளவேண்டும் என்றால், அந்த இடத்தில் கோபம் என்கின்ற உணர்ச்சி பொங்க வேண்டியிருக்கிறது. நாம் அந்த இடத்தில் இதைக் கோபம் என்று சொல்ல முடியாது.

இங்குக் கோபம் என்பது தேவையான ஒரு கருவி. இங்கு இந்த இடத்திலே இதைத் தப்பு என்று சொல்லமுடியாது.

கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டுத்தான் தீர வேண்டும் என்ற அத்யாவசிய சூழலில் அதை அருமையாய்ப் பயன்படுத்தும் சமநிலை இருக்க வேண்டும்.

எப்படி ஒரு காரை ரிப்போ செய்யும்போது, வேலை முடிந்தவுடன் ஸ்பேனரை அப்படியே கீழே வைத்து விடுகிறோமா, அதைப் போலவே கோபம் என்கின்ற உணர்ச்சி பொங்கிய உடன், அதைக் கழற்றி வைத்துவிட்டு நம்மால் போக முடியும். இதுதான் ஒரு ஜீவன் முக்தரிடம் இருக்கும் அளவில்லாச் சுதந்திரம். உணர்ச்சிகள்கூட அவர்களைப் பந்தப்படுத்துவதில்லை.

உணர்ச்சியால் அவர் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. அவர் ஒருபோதும் தாக்கப்படுவதில்லை. உணர்ச்சியால் அவருடைய வாழ்க்கையானது தடுமாற்றம் அடைவதேயில்லை. உணர்ச்சி என்பது அவருடைய ஒரு சிறுபாகமாக, ஒரு சின்ன கருவியாய் இருக்கிறது.

Section 2

ஒரு ஜீவன்முக்தன் அந்த உணர்ச்சியென்கின்ற 43 கருவிகளை, 43 ஜூங்களை, எப்போதெல்லாம், என்னென்ன குழ்நிலைகளில் எல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் பயன்படுத்தி விட்டு அவசியுமில்லாதபோது உடனே கீமே வைக்குவிடுவார்.

அது அவரை துளியும் பாதிக்காது. ஆனால் ஒரு சாதாரன மனிதரை துளி உணர்ச்சிகூட நிச்சயமாகப் பாதிக்கும். பஞ்சில் பட்ட நெருப்புபோல சிறு உணர்ச்சிகூட அவருக்குள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குக் கொழுந்துவிட்டு எரிய வாய்ப்பிருக்கிறது.

ஜீவன்முக்த வாழ்கையை வாழு, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான். 43 ஜுரங்களில் எந்தவொரு ஜுரத்திலும் மாட்டிக் கொள்ளாதீர்கள். அனுபவிக்கும்போது அனுபவியுங்கள். அதற்குமேல் இது துவையில்லை என்று தெரிந்த உடனே விட்டுவிடுங்கள். அப்படி எளிதில் விடுபடுகிற அளவிற்கு உங்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள். அதுவே போதுமானது.

உணர்வுத் தெளிவு உங்களுக்குள்ளே பொங்க ஆரம்பித்தால் போதும். நம்முள் உணர்வுத் தெளிவு பொங்குவதற்கு நேரடியாக உதவும் தியானம் அல்லது தியான நுட்பம் என்றுகூட இதைச் சொல்லலாம்.

இன்னும் மொத்தமாக எளிமையாகச் சொல்லி முடிக்கவேண்டுமென்றால், எந்த உணர்ச்சியாய் இருந்தாலும் அதை வாழும் பொழுது, அதை முழுமையாக வாழுங்கள். அந்த உணர்ச்சியை வாழ்ந்து முடித்த வினாடி. அது அவசியப்படாத வினாடி அதிலிருந்து உங்களை அன்கிளட்ச் செய்துவிடுங்கள். விடுவித்துக் கொள்ளுங்கள். மேலுள்ளதை ஒருவர் கடைபிடிக்க ஆரம்பித்தாலே தியானம், ஆனந்தம், அனுபவம், இவை எல்லாமே அவருடைய வாழ்க்கையின் பாகமாக மாறிவிடும்.

தொடர்ந்து விழிப்புணர்வோடு உங்களின் உணர்ச்சிகளைக் கையாளக் கையாள தியானமும் செய்வீர்கள். அனுபவமும் நடக்கும். அனந்தமும் அனுபூதியாகும். உணர்ச்சிகளில் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள்.

உணர்ச்சிகளை அனுபவிப்பது தவறில்லை, ஆனால், அந்த உணர்ச்சியிலேயே சி க்கிக் கொள்வதுதான் தவறு. உணர்ச்சிகளிலிருந்து Unclutch செய்யுங்கள். ஆனந்தமாக இருப்பீர்கள்.