Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

110. 20 வருட ஆராய்ச்சியின் சாரம்

# 20 வருட ஆராய்ச்சியின் சாரம்

நித்ய தியானம்தான் என்னுடைய ஆன்மீக ஆராய்ச்சியினுடைய சாரம்.

சின்ன வயதில் இருந்தே ஆன்மீக விஷயங்களை ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தோம். பல ஆண்டுகளாக நான் ஆராய்ச்சி செய்ததின் சாரம், அதாவது பத்து வயதில் துவங்கிய அந்த ஆராய்ச்சி, இருபத்திரண்டு வயதில் ஞானமடையும்வரை பன்னிரெண்டு ஆண்டுகள் நடந்தது.

அதன் பிறகு, அடுத்த மூன்று ஆண்டுகள் அதை மற்றவர்களுக்குச் சொல்வதற்கான சூக்கிரத்தை வகுப்பதற்காக ஆராய்ச்சி செய்கேன்.

அதன்பிறகு ஐந்து வருடமாகப் பலரோடு இந்தச் சூத்திரத்தை நடைமுறை ஆராய்ச்சி செய்து பார்க்கிருக்கிறோம்.

முதலில் செய்த பன்னிரெண்டு வருடம், அதன்பிறகு செய்த மூன்று வருடம், அதன் பிறகு ஐந்து வருடம். மொத்தம் இருபது ஆண்டுகள் என்னுடைய ஆன்மீக ஆராய்ச்சியினுடைய பலன் இந்த 'நித்ய தியானம்'. அந்தச் சாரத்தை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். உடலும், மனமும் முழுமையாக உங்களுக்குள் மலரும்.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் அறுபது சதவிகித இந்தியர்கள், தங்களுடைய உடல், முழு வளர்ச்சி அடைவதற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள். தங்களுடைய உடல் முழு வளர்ச்சி அடைவகற்கே அவல்கள் அமைதிப்பதில்லை. நம்முடைய உடல் முழு வளர்ச்சி அடையாமல் இருப்பதற்குக் காரணம் மனத்தினுடைய தலையீட்டால்தான்.

மனம், உடலை வைத்து அழுத்தும் பொழுது, உடல் முழுமையாக இயங்கு வதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் போய்விடுகிறது. உங்கள் உடலும் மனமும் மலாவதற்கான ஒரு அருமையான தியான நுட்பம் நித்ய தியானம்.

முதல் படி: (கால அளவு: 7 நிமிடம்)

முதல் ஏழு நிமிடங்கள் : வஜ்ராசன நிலையில் அமர்ந்து கண்களை மூடியும், உங்கள் கைகளை இடுப்பின் மேல் வைத்தும், சீரற்ற முறையில் சுவாசிக்க வேண்டும்.

ஆழமாகவும், ஒழுங்கற்ற முறையிலும், மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட விட விட வேண்டும். உங்களுடைய முழுக்கவனமும் சுவாசத்திலேயே குவியச் செய்யுங்கள். உங்களுடைய இருப்பே சுவாசமாக மாற வேண்டும்.

இந்த ஆழமான சீரற்ற சுவாசமுறை உங்கள் தசைகளில் உள்ள இறுக்கத்தையும், சம்ஸ்காரங்களையும் விடுபடுத்தி, வெளியேற்ற ஆரம்பித்து விடும்.

வெளியேற்றி சுத்தப்படுத்த ஆரம்பித்துவிடும்.வலிகள், சந்தோஷங்கள், குற்ற உணர்ச்சி கள், நம்பிக்கைகள், மன உளைச்சல்கள், ஆகியவற்றினால் நம்முடைய சுவாசத்தின் தரம் முழுவதுமாக மாறிவிடுகிறது.

இப்பொழுது இந்த அமைப்பை நீங்கள் உலுக்க வேண்டுமானால்,ஏற்கெனவே பல சக்தியால் குழப்பங்களைப் பகுத்த வேண்டும்.

இந்த சீரற்ற சுவாசமுறை பழைய சம்ஸ்காரங்களை எரித்துவிடும்.

இது ஒரு மரத்தில் உள்ள இறந்த இலைகளை உலுக்குவது போன்றதாகும். எல்லா இறந்த இலைகளும் கீழே விழுந்துவிடும். இதேபோல் இந்தச் சுவாசமுறை உங்களின் அமுக்கப்பட்ட மன அமைப்பை மாற்றிவிடும்.

இரண்டாம் படி: (கால அளவு: 7 நிமிடம்)

இரண்டாவது ஏழு நிமிடங்கள் :

இந்த இரண்டாவது பகுதியில் வஜ்ராசன நிலையில் அமர்ந்து, கைகளில் சின் முத்திரை உருவாக்கி, உங்கள் முட்டிப் பகுதியில் வைக்க வேண்டும். பின் கண்களை மூடியவாறே உங்களால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக, எவ்வளவு ஆமமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, எவ்வளவு சப்கமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக.. 'ம்ம் ....ம் ... மஹாமந்திர நாதத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்.

உங்களுடைய முழு விழிப்புணர்வையும் உச்சாடனத்தில்

குவியுங்கள். உச்சாடனமாகவே மாறுங்கள். இது உங்களின் உள் எண்ண ஓட்டத்தைக் (Inner Chatting) குறைக்கும்.

ுமன்றாவது படி: (கால அளவு: 7 நிமிடம்)

இந்த மூன்றாவது படியில் நீங்கள் வஜ்ராசன நிலையில் அல்லது விரும்பினால் பத்மாச னத்தில் அமரலாம்.

இப்பொழுது உங்களது விழிப்புணர்வை ஒவ்வொரு சக்கரத்திற்கும், மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம்வரை செலுத்த வேண்டும்.

நோய்களின் வேர்களே, நமது மனம்தான். நோய்கள் உருவாகுவதற்குக் காரணமாக இருக்கும் நம் உடலுக்கும், மனத்துக்கும் இடையே உள்ள இணைப்பு பற்றி நமக்குப் புரிவதில்லை. ஒரு சக்தி மையம் அடைபடும்போது, அந்த மையத்திற்கு அருகில் உள்ள உடலின் பகுதிகளும் பாதிப்படைகின்றன.

ஒளியால் இருள் மறைவது போன்று எதிர்மறை உணர்ச்சிகள் விழிப்புணர்வு என்னும்

ஒளியை ஏற்றியதும் தானாகவே மறைந்து விடும்.

விழிப்புணர்வை வெள்ளம்போல் ரீங்கள் செலுத்தும்போது, எதிர்மறைகள் அழிந்து விடும்.

நீங்கள் விழிப்புணர்வை ஒவ்வொரு சக்தி மையத்திலும் செலுத்தும்போது அந்தச் சக்திமையமாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள்.

ஜீவ சக்தி மையமாக மாறும்வரை, அதை முழுவதுமாக உணருங்கள். இந்தப் படியின் இறுதியில் நீங்கள் சக்தியடைந்தவராகவும், இலேசானவராகவும் மாறிவிடுவீர்கள்.

நான்காம் படி: (கால அளவு: 7 நிமிடம்)

இந்த நான்காவது படியில், உங்களுடைய எண்ணங்கள் ஒன்றுக் கொன்று இணைக்கப்படாதவை என்ற புரிந்துகொள்ளுகலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இயல்பாகவே சாட்சியாகப் பார்க்கும் விமிப்பணர்வ உங்களுக்குள் நிகழகத்துவங்கும். இந்தப் புரிதலோடு அமைதியாக அமர்ந்து அடுத்த ஏழு நிமிடங்களில் எண்ணங்களை இணைக்காத நிலையை அனுபவித்து சுத்தமான ஜீவனின் நிலையையும், ஆனந்தத்தையும் பெறுங்கள்.

ஐந்தாம் படி: (கால அளவு: 7 நிமிடம்)

அமைதியாக அமர்ந்து, ஆனந்தமயமான உணர்வில் ஒலிக்கப்படும் மந்திரங்களைக் கவனியுங்கள்.

பிரபஞ்சத்துடன் இணைக்கப் பட்ட தாக உணருங்கள். உங்கள் ஜீவனுள் மந்திரங்களின் அதிர்வுகளை உணருங்கள்.

மந்திரங்கள் நேர்மறை அதிர்வுகளைப் பெற்றிருப்பதால், அது உங்கள் ஜீவனில் ஊடுருவி ஆனந்தத்தைக் கொடுக்கும்.

இந்தத் தியானத்தைத் தினமும் ஒருமுறையாவது செய்தால், உங்கள் ஜீவனின் புதிய பரிமாணத்தை அனுபவிக்கத் தொடங்குவீர்கள்.

இந்த நுட்பம் உங்கள் உடலையும், மனத்தையும், முழு விழிப்புணர்வு நிலையையும், ஆனந்தத்தையும் அனுபவிக்கத் தயார் செய்யும்.

  • ஆழமாகச் சுவாசித்தல் .
  • மகாமந்திர உச்சாடனம் செய்தல்
  • சக்காங்களின் மீகு விழிப்புணர்வைச் செலுத்துதல் ●
  • எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்காமை
  • பிரபஞ்சத்தோடு கரைதல் ஆழ்ந்த பிரார்த்தனை உணர்வோடு, ஜீவன் முக்தன் நிலையில் வாழவேண்டும் என்று இந்தப் பிரபஞ்ச சக்தியை, இறை சக்தியை ஆழ்ந்து தியானியுங்கள்.

இந்த ஐந்து படிகளும் சேர்ந்ததுதான் நித்ய தியானம்.

மொத்த ஆன்மீகத்தின் சாரத்தையும், இந்த நித்ய தியானத்தில் வகுத்து கொடுத்து விட்டோம்.