3. எனது அன்புக்கு உரியவர்களே ...
# எனது அன்புக்கு உரியவர்களே
எல்லோரும் என்னிடம்
்சுவாமிஜி,
எது என்னை பந்தப்படுத்தி பிடித்து நிறுத்துகிறது ? எது என்னை அடுத்து முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்துகிறது?' என்று தவறாமல் கேட்கிறார்கள்.
நான் ஒரே சொல்லில் அதற்கான பதிலை சொல்லவேண்டுமானால், அதுதான் 'கா்மா'. சமஸ்கிருத வார்த்தையான 'கா்மா' இன்று ஒரு நவீன பழக்கமான சொல்லாகவே ஆகிவிட்டது !
நன்கு புரிந்து கொள்ளுங்கள் ...
முழுமையடையாத கடந்த கால நினைவுகள் எல்லாம் உங்களுக்குள் ஒரு மனப்பாங்காக தொக்கி நிற்கும். அவை முழுமையடையும் வரை உங்களைவிட்டு நீங்காமல் உங்களுக்குள்ளேயே இருக்கும். அவ்வாறு உங்களுக்குள்ளேயே இருக்கும் அந்த மனப்பாங்குகள், உங்களை உங்களுடனே போராடச் செய்கின்ற வாழ்க்கை முறையாக மாறுகிறது. அதைதான்'கா்மா' என அழைக்கிறேன்.
கா்மாவைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை ...
அந்தக் கர்மாவை நீங்கள் தான் உருவாக்கினீர்கள். நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள்-உங்களுடைய கடந்தகால செயல்களின் மொத்த விளைவுதான் இப்போதுள்ள நிகழ்காலம். உங்களுடைய சாத்தியக் கூறின் உச்சபட்சத்தை அறியாததற்கும், உங்கள் எதிர்காலத்தை திருத்தி எழுத முடியாததற்கும் கா்மாவே காரணம். உங்களை பிடித்து நிறுத்துவது - கா்மாதான்.
நற்செய்தி என்னவென்றால், எப்படிப்பட்ட கா்மாவையும் நிறைவு செய்து, முழுமையடையச் செய்யமுடியும். நீங்களே உங்கள் நிகழ்காலத்தை மாற்றி, ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்! சிறப்பான செய்தி என்னவென்றால், நிகழ்காலத்தை நீங்கள்தான் எழுதினீர்கள் என்பதால், எதிர்காலத்தையும் நீங்களே விருப்பப்படி எழுதிவிட முடியும்.
அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ... உங்களைப் பார்க்கு, ... ்கர்மா என்பது என்ன? யார் அதை எழுதியது ? நான் ஏன் அதை எழுதினேன்? நான் எப்படி அதை எழுதினேன்? எப்பொழுது அதை எழுதினேன்?' என்று உங்களுக்கு நீங்களே கேட்பதுதான். எழும் பதிலை ஆழ்ந்து பகுத்தாய்வு செய்யுங்கள்.
நம்முடைய தியான முகாம்களில் கா்மங்களை கரைப்பதற்கான வழிமுறைகளையும், நுட்பங்களையும் கற்றுத் தருகிறேன்.
இன்னர் அவேக்கனிங் தியான முகாமில், அதற்கான விஞ்ஞானத்தை விரிவாக அளிக்கிறேன்.
நீங்கள் விரும்பும் நிஜத்தை ஈடேற்றும் அறிவியலை அனைபவமாக கற்பிக்கிரேன்.
அந்த ஆன்ம விஞ்ஞானத்தின் துணையோடு உங்கள் எதிர்காலத்தை நீங்களே திருத்தி எழுதுவீர்கள் ! அனுபவப்பூர்வமாக 21 நாட்களில் அதை உணர்வீர்கள்.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை ஏன் நீங்கள் அவ்வாறு எழுதினீர்கள் என்ற காரணத்தையும் அறிந்துக்கொள்வீர்கள். நீங்கள்தான் அதற்கு பொறுப்பு என்பதையும் புரிந்துகொள்வீர்கள். அதற்குபின்பு, எவ்வாறு திருத்தி எழுதுவது என்பதை எளிதாகத் தெரிந்து கொள்வீர்கள், அதில் நிபுணத்துவம் பெறுவீர்கள். இன்னர் அவேக்கனிங் (அகவிழிப்பு தியான முகாம்) என்பது உங்களையே உங்கள் சொந்த உள்ளுணர்வு தளத்தின் சக்கி நிலைக்கு விழிப்பிக்கச் செய்வதாகும்! அது உங்களுக்குள் உச்சமாக சாத்தியக்கூறுகளை விழிப்பிக்க செய்யும். அதற்காக வடிவமைக்கப்பட்ட 21 நாட்கள் நடைபெறும் தியான முகாம் - இன்னர் அவேக்கனிங். ஆனந்தமாக இருங்கள் !
- பரமஹம்ஸ நிக்யானந்தர் நித்யானர்த தியானபீடத்தின் நிறுவனர்

நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் ?
மிகச் சரியான
இன்னர் அவேக்கனிங்- உங்கள் வாழ்வில் ஒரு மாபெரும் திருப்புமுனையை தரும்.
இது மாற்றத்தைப்பற்றிய அறிவியலை உங்களுக்கு போதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டதல்ல. உங்கள் எதிர்காலத்தை தோல்விக்குள்ளாக்கும் பழைய பண்புகளை உங்களிடமிருந்து விடுவித்து, அதற்கு காரணமான மூலவேர் மனப்பாங்குகளை எரித்து, புதிய பண்புகளை திருத்தி எழுதுவதற்கான பரந்த உணர்வை உருவாக்கும் விஞ்ஞானத்தை போதிக்கிறது. -பரமஹம்ஸ நித்யானந்தர்
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்க வேண்டிய மிக முக்கியமான மனிதர் ஒருவர் உண்டு. அவர்- நீங்கள் தான்!
இன்னர் அவேக்கனிங்-அக விழிப்பு என்பது ... உங்களைப்பற்றி உங்களுக்குள் சரியான கருத்துக்களையும், சரியான புரிதல்களையும் உருவாக்குதே. உங்களைப்பற்றிய அடிப்படையான புரிந்துணர்வில், அது உங்கள் உடலைப்பற்றியோ, மனதைப்பற்றியோ அல்லது அறிவைப்பற்றியோ- அதன் அடிப்படையான புரிந்துணர்வில் சரியான புரிதலைக் கொண்டிருப்பதே அவேகனிங், விழித்துக் கொள்ளுதல்.
மனிதகுலம் 'அடையாள நெருக்கடி'யால் (Identity Crisis) கஷ்டப்படுகிறது. உங்களைப் பற்றிய சரியான புரிதல் உங்களுக்கே இல்லாதபோது எனக்கு எது நல்லது, எனக்கு எது கெட்டது, எது தவறு, எது சரி, எனக்கு யார் நல்லது செய்கிறார், யார் கெடுகல்களை செய்து கொண்டிருக்கிறார்' - என்பதைப்பற்றி பலவிதமான புதிர்களையும், சந்தேகங்களையும், குழப்பங்களையும் நீங்கள் சுமந்து கொண்டிருப்பீர்கள். உங்களைப்பற்றி நீங்களே உறுதியான தெளிவோடு இருக்கமாட்டீர்கள். மேலும் நீங்கள் எதை விரும்புகிறீர்கள், உங்களுக்கு என்ன தேவை என்பதைப்பற்றிகூட ஒரு அடிப்படை தெளிவு இருக்காது! ஒரு சின்ன தலைவலிக்கோ அல்லது ஒரு வயிற்று வலிக்கோ பதற்றமடைந்து ஏதோ ஒர் தீர்வை உடனே பெற விரும்புவீர்கள். ஆனால் அந்த வலிகளுக்கு எது காரணம் என்றுகூட யோசித்துப் பார்க்காமல், தெரிந்துகொள்ள விரும்பாமல் அருகில் கிடைக்கும் எளிய மருந்துகளை உடனே எடுத்துக்கொள்வீர்கள். இந்த சுமற்சியிலிருந்து வெளிவரவேண்டுமானால், நீங்களே உங்களுக்கு உதவத்தயாராக இருக்க வேண்டும். ஒரு முழுமையான உணர்வுமாற்றம் பெற்றாக வேண்டுமென நீங்கள் ஆழமாக விரும்பும்போது, அதற்கான தீர்வை தரும் மிகச்சரியான குருவை சந்திப்பீர்கள். ஒரு ஞானகுருவின் வழிகாட்டுதல் உணர்வுமாற்றத்திற்கு வழிவகுக்கும். ஞான மருத்துவராக இருக்கும் ஞானமடைந்த ஆன்மாவின், ஒரு குருவின் உதவியால் நீங்கள் விழிப்படைவீர்கள்.
குருவின் வழிகாட்டுதலால் நீங்கள் உணர்வு மாற்றம் பெறுவது உறுதி. ஏனெனில் குருவால் மட்டும்தான் உங்களுக்குள் ஞானத்தீயை தூண்டிவிட்டு, உங்களுடைய தெய்வீகப் பரிமாணங்களை திறக்கச் செய்யமுடியும். உங்களுடைய எதிர்காலத்தைத் திருத்தி எழுதும்
விஞ்ஞானத்தை போதித்து, உங்களுடைய உள்ளார்ந்த சக்தியாகிய குண்டலினியையும் விழிப்பிக்கச் செய்ய முடியும்.
குண்டலினி சக்தி, உங்களுடைய உயிர் சக்தியை எழுப்பி, நீங்கள் கடந்த காலத்தில் எழுதிய எதிர்மறையான உணர்வுகளை அழிப்பதற்கு சக்தியை அளிக்கிறது. அதோடு, உங்களுடைய புதிய எதிர்காலத்தை எழுதுவதற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது.
இந்த 21 நாள் அகவிழிப்பு தியான முகாமில், உங்களுக்குள் சக்தியின்மையை கொண்டுவரும் மனப்பாங்குகளை கண்டுப்பிடிப்பீர்கள். உங்கள் மனம், உடல் மற்றும் ஜீவனை சிக்கலில் மாட்டிவிடுகின்ற மூல மனப்பாங்குகளை கடந்துச் செல்ல கற்றுக் கொள்வீர்கள். உங்கள் எதிர்காலத்தைத் திருத்தி எழுதும் விஞ்ஞானத்தை கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய மூலமனப்பாங்குகளை பூரணத்துவம் செய்வதாலும், அம்மனப்பாங்குகளினால் உருவான எல்லா நெருக்கடியிலிருந்து உங்களை விடுவிப்பதாலும், உங்கள் புத்திசாலித்தனத்தில் ஒரு மாபெரும் உயர்வினை அனுபவிப்பீர்கள். மேலும், உங்களுள் உணர்வுமாற்றமடைந்து, ஒரு பெரும் வெற்றிகரமான திருப்புமுனையை பெறுவீர்கள்.
எல்லாவற்றிக்கும் இறுதியாக, 'நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்' என்பதே இந்த அகவிழிப்பு தியான முகாமின் பலனை முடிவுசெய்கிறது.
தியான முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என்று முதலில் நீங்கள் திடமாக தீர்மானிக்க வேண்டும். பூரணத்துவத்தை ஞான அனுபவமாக்கிக் கொள்ளவேண்டும் என உறுதி செய்யுங்கள். அப்பொழுது, இந்த முகாம் ஒரு திருப்புமுனையாக அல்ல, உங்கள் வாழ்க்கையில், நீங்கள் உயரே பறப்பதற்கான ஒரு தளமாக இருக்கும். நீங்கள் பிரபஞ்ச த்தில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரமாக இருப்பீர்கள். ஒரு விமானத்தில் எங்கோ மேலெழும்பி, எங்கோ போய்த் தேடுவதல்ல, அப்படியல்ல ! நீங்கள் பிரபஞ்சத்தினுள் ஏவப்பட்ட ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பீர்கள்.
எப்படி வாழ வேண்டும் என்பது உங்கள் விருப்பத்தில் உள்ளது. உங்களுக்காக, நீங்கள் தான் வாழவேண்டும். அதை வேறு யாரும் செய்ய முடியாது. நீங்கள்தான் செய்ய வேண்டும்.
வாழ்க்கை மிக அழகானது - அதைக் கொண்டாடுங்கள்! ஏன் ? எதற்கு ? என்று யோசித்துக் கொண்டிருக்காதீர்கள். 'மாற்றமடையவேண்டும்' என்று வெறுமனே நீங்கள் முடிவு மட்டும் செய்யுங்கள், உங்கள் செயல்கள் தானாகவே மாறத்துவங்கும் - நீங்கள் விழித்துகொள்வதை, இந்த அகவிழிப்பு தியான முகாமில் நீங்களே காணலாம்.
வாருங்கள் ! வாருங்கள் ! வாருங்கள் ! 'வாழ்வது' தான் இந்த அகவிழிப்பு தியான முகாமை உங்களுடைய அனுபவமாக்குகிறது !
ஈசனைக
ஈசன்
- பழையனவற்றை அழித்து, புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை தந்து, புதுப்பிக்கும் சக்தியின் உருவகம் ஈசன்.
சிவம்
- உங்களுள் இருக்கும் பழைய மனப்பண்புகளை ஒழித்துவிட்டு உங்களை நீங்களே புதியவராக கண்டுபிடித்துக் கொள்வது சிவம். நீங்கள் சிவத்தன்மையை பெற, ஈசனால் உங்களை எதிலிருந்தும் விடுவிக்க முடியும். அதற்காக உங்கள் கா்மங்கள், எதிர்மறை மனப்பதிவுகள், உடல் நோய், மன வியாகி என அனைத்து எதிர்மறைகளையும் அழிப்பார்.
ஈசனின் ...
திரிசூலம் - அனைத்து இயலாமைகளையும் அழித்து உங்களை ஆற்றல்மிக்கவராக்கும் அடையாளம். டமரு - எல்லா சாத்தியக்கூறுகளையும் நினைவுப்படுத்தி வலிமைப்படுத்துகிற அடையாளம். டமரு, படைப்பாற்றலை குறிப்பிடுகின்ற முக்கியமானதொரு அடையாளமுமாகும். அதேபோன்று, திரிசூலம் புதுப்பித்தலை உணர்த்தும் ஆயுதம் ஆகும். அதனால்தான். எப்பொழுதும் ஈசனின் டமருவையும் திரிசூலத்தையும் ஒன்றாகவே வணங்குகிறோம். திரிசூலத்தின் மூலமாக ஈசன் நம்முடைய அனைத்து இயலாமைகளையும் நீ க்கிவிடுகிறார். டமருவின் மூலமாக, அவர் எல்லா சாத்தியக்கூறுகளையும் உருவாக்குகிறார்!
-பரமஹம்ஸ நிக்யானந்தர்
ஈசனைப் பற்றி பரமஹம்ஸர் பகிர்ந்து கொண்ட சத்தியங்களுள் சில:
ஈசனை வழிபடுவதா ? ஈசனை கொண்டாடுவதா ?
முதலில் புரிந்துகொள்ளவேண்டியது
உங்கள் மனதால் மஹாதேவனைப்பற்றி புரிந்து கொள்ள முடியாது. பின் எவ்வாறு நீங்கள் அவரை வணங்குவீர்கள் ? உங்களுடைய இருப்பினால், ஈசனின் சாநித்யத்தை, இருப்பினைக் கொண்டாட த்தான் முடியும். அவர் உங்கள் வாழ்க்கையில் காட்சியளித்ததற்காகவும், உங்கள் வாழ்வில் நிகழ்வாக வந்ததற்காகவும், அவரது இருப்பின் பிரம்மாண்டத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டதற்காகவும் - அவரோடு சேர்ந்து நீங்கள் கொண்டாடுவீர்கள்.
ஈசன், தன்மை வெளிப்படுத்திக்கொண்டு
அறிமுகப்படுத்திக்கொள்ள முடிவெடுத்ததால்தான், நீங்கள் அவரது இருப்பினை உணர முடியும், கொண்டாட முடியும்.
நம்முடைய பாரம்பரியம், இறைவனை உங்களிடமிருந்து தனித்துப்பிரித்துப்பார்த்து வழிபடுங்கள் என்று கற்றுத் தரவில்லை. இறைவனை பிரித்து வணங்க முடியாது என்றும், இறைவனுடைய குழுவில் சேர்ந்து அவரோடு கொண்டாடுங்கள் என்றும் வழிகாட்டுகிறது.
இதுபோல் ஒவ்வொன்றைப்பற்றியும் நம்முடைய வேத பாரம்பரியம், வாழ்வைப்பற்றி மிகச் சரியான புரிந்துணர்வை கற்றுத் தருகிறது. உங்களுக்கு, உங்களைப் பற்றிய சரியான கருத்தினைக் கொடுப்பதிலிருந்து அதனை துவக்குகிறது.
உதாரணத்திற்கு ... சைவ பாரம்பரியத்தில், உங்களைப்பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்தும்பொழுது, 'நீங்கள் மஹாதேவன், சிவன்' என்று அறிமுகம் செய்கிறது. உங்களை ஒரு பாவியாகவோ, அடிமையாகவோ, உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில்லை.
நீங்கள் எல்லோருமே-நீங்கள் விரும்பியதை நிஜமாக்கும் சக்தியையும், திறனையும் பெற்றவர்கள்.
கடவுள் மனிதர்களை இந்த பூமிக்கு பிச்சைக்காரர்களாக அனுப்பவில்லை. உங்களை வெறும் கைகளுடன் அனுப்ப கடவுள் ஒன்றும் கொடுமைக்காரர் இல்லை. கடவுள் கொடுமைகாரருமல்ல, கஞ்சனுமல்ல. அவர் ஒரு அழகான படைப்பாளி. காரணங்களற்ற மங்களத்துவ சக்தி - சத்சித்தானந்தம் - சிவம்
சைவ பாரம்பரியத்தில் தரப்படும் முதல் தீட்சை -'நீ மஹாதேவன்'எனும் சத்தியம். இந்த சிவோஹம் தீட்சையில் இருந்தே வாழ்க்கை ஆரம்பமாகிறது. அனைவரையும் சிவமாக மாற்றுகிறது. அதை நிகழ்த்துவதே மஹாதேவரின் நோக்கம்.
மஹாதேவரால்தான் மேலும், மேலும் பல மஹாதேவர்களை உருவாக்கி கொண்டாட முடியம். அதேபோன்று மஹாதேவரின் பக்தர்களால்தான் தன்னைப்பற்றி 'ஆம், சிவோஹம் - நான் சிவன்' என்று உறுதியாக சொல்ல முடியும். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், மொத்த பிரபஞ்சத்திலும், நமது வேத பாரம்பரியம் மட்டும்தான், 'கடவுளைப் பற்றிய கருத்துகூட, நாம் ஞானமடைவதற்கான ஒரு படிக்கல்' என்று சொல்கிறது. இந்த துணிவு வேத பாரம்பரியத்திற்குதான் உள்ளது.
வேத பாரம்பரியம் ஈசனைப்பற்றி சொல்லும்பொழுது, ' அவரைப்போல 'ஒருமைத்துவத்தில் வாழ்வது' என்பதை வலியுறுத்துகிறது. நம்முடைய பாரம்பரியத்தில் ஈசனும், 'சிவோஹத்திற்கான' ஒரு படிக்கல்லே. இதை அறிந்தவர் ஈசன். ஏனென்றால் அவர்தான் அதை மகிழ்ச்சியோடு செய்விக்கிறார்.
புரிந்து கொள்ளுங்கள் !
மஹாதேவருடன் இருப்பதற்கு தேவையான ஒரே தகுதி, வாழ்வை கொண்டாடுவதே. ஈசனின் இருப்பினையும், சாந்தித்தியத்தையும் கொண்டாடவேண்டுமா ? குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.
வாழும் நூலி பரமவறம்ஸ் நீத்யானந்தின் குழுவோடு சேர்ந்து, உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் சக்தியிக்க அகவிழிப்பு தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள். ஈசனின் இருப்பினை, அவருடைய வீடான வரணாசியில் அனுபவிக்க தயாராகுங்கள். வரும் 2015, மே மாதம் 7 முதல் 27வரை டுடைபெறுகிறது.
