Books / Born to Heal Tamil merged

3. அதிசயங்கள் நிகழ்கின்றன; நிகழ்த்தப் படுவதில்லை

# அதிசயங்கள் நிகழ்கின்றன; நிகழ்த்தப் படுவதில்லை

பாமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த ஸ்வாமிகள்

சக்கரங்களைப் பற்றிய அறிவுள்ள புத்திசாலி மணிதர்கள் சுயநலத்திற்காக சக மனிதர்களைப் பல காலமாகச் சுரண்டி வந்திருக்கிறார்கள்.

விழித்தெழ வேண்டிய தருணம் என்பது ஒன்றே ஒன்று. இதுதான் அந்தத் தருணம்.

புத்த மதம், ஸு-ஃபி மதம், வைணவம், வேதாந்தம், தாந்ரீகம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களின் சாரத்தைப் பிழிந்தெடுத்துத் தருகிறார் பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த ஸ்வாமிகள். ஏழு சக்கரங்களையும் இயக்கவல்ல செம்மையான வழியில் விலை மதிப்பில்லாத சுகானுபவத்தை நடக்கு அவர் ஒரு வரமாக அருளுகிறார். தியானம் தொடர்பான உத்திகளைக் கற்பிக்கிறார். அதன் மூலம் நாம் உடல் மற்றும் மனம் தொடர்பான நோய்களிலிருந்து விடுபடலாம்.

மக்களுக்கு தியானத்தைக் கற்பிப்பதும் ஒரு தியான மையத்தை நிறுவுவதுமே சுகானுபவ நோக்கம் கொண்டுள்ள அவரது தொலை நோக்குத் திட் டம்.

பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த ஸ்வாமிகள் இரண்டு நாட்கள் பயிற்சி தரும் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியை நடத்துகிறார். அதற்கு 'ஆனந்த ஸ்புராணம்' என்று பெயர். மனதையும் ஆன்மாவை விழித்தெழர் செய்யும் கல்வியைக் கற்பிக்க அவர் நெடுந்தொலைவு பயணம் செய்கிறார். விரைவில் சக்கர விஞ்ஞானம் பற்றிய ஒராண்டு காலக் கல்வித் திட்டத்தையும் தொடங்க இருக்கிறார்.

அவரது சுகப்படுத்தும் மையம் பெங்களூரில் மில்லர்ஸ் டேங்க் பண்ட் சாலையில் உள்ள சாமுண்டேஸ்வரி ஸ்டுடியோவில் உள்ள து. கவ்வுடப்படும் நோயாளிகளுக்கு பயிற்சி பெற்ற உதவியாளர்களை வைத்துக் கொண்டு ஸ்வாமிகள் அங்கே குணமளிக்கிறார். பிடாடியில் விரைவில் ஒரு பல துறை மருத்துவமனை உருவாக இருக்கிறது. தியானத்திற்காக ஒரு உலக இயக்கத்தைத் தொடங்குவதற்காகவே ஸ்வாமிகள் 2001-ஆம் வருடம் ஏப்ரல் 14-அம் தேதி தியான பீடம் என்ற அமைப்பினைத் தொடங்கினார்.

பெங்களூர் மாநகர எல்லையில் உள்ள ஆசிரமத்தில் 21 அடி உயரமுள்ள லிங்க சிற்பம் நிறுவப்படும். இந்த தியான மையத்தில் நான்காயிரம் நபர்கள் தங்க முடியும். தியானிப்பவர் ஒவ்வொருவருக்கும் இந்த லிங்கம் சுகமளித்து அருள்பாலிக்கும்.

ஆணந்த ஸ்புராணத் திட்டம்

திறந்த மனதுடன் வாருங்கள். புத்துணர்வு பெற்றுத் திரும்புங்கள், அப்போ து சொல்லுங்கள் 'என் கோப்பை நிரம்பி வழிகிறது' - என்று. உங்கள் கோப்பையைக் கொட்டுங்கள்.

பேராசிரியர் ஒருவர் ஒரு ஜென்குருவைச் சந்தித்தார். ஜென்குரு அவரது கோப்பையில் தேநீர் ஊற்றினார். குவளை நிரம்பி வழிந்தது. இருப்பினும் ஊற்றிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்திற்குமேல் பேராசிரியரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "கோப்ப்பை நிறைந்து விட்டது. இனிமேலும் இதில் எதையும் ஊற்ற முடியாது, என்று பதறியபடியே சொன்னார்.

"நீயும் இந்தக் கோப்பையைப் போலத்தான். உனக்கு நான் ஜென்னைக் காட்டுவது எப்படி? நீ கோப்பையைக் காலி செய்ய வேண்டாமோ?" என்று கேட்டார் குருநாதர். கதையைக் கேட்ட மக்கள் அதை இவ்வாறு அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்: "ஏற்கெனவே தெரியும் என்ற நினைப்பு இருந்தால் நீங்கள் எதையும் கற்க மாட்டீர்கள்." "நாம் உண்மையை உணர்ந்து கொள்வதில் எதிர்ப்படும் தடைகள் ஏற்கெனவே நம் மனதில் படிந்துள்ள எண்ணங்களும் விருப்பு வெறுப்புகளுமே."

நாட்டியத்தின் சக்தி

"நாட்டியத்தின் சக்தியை அறிந்தவர்கள் இறைவனோடு ஒன்றிப் போய்விடுகிறார்கள்," என்று உணர்ச்சி ததும்பச் சொல்கிறார் பாரசீகக் கவிஞர் ரூமி.

நடன இன்ப போதையில் திளைக்கும் பக்தர்கள் தம்மை மறந்து பரசக்தியுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள்.

ஞானத் தேடலும் இப்படியே.

நடனமாடும் பொழுது நான் எதையும் அவதானிப்பதில்லை.

எவரையும் நான் வெறுப்பதில்லை. ஏனென்றால் வாழ்விலிருந்து என்னை நான் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

ஆழ்ந்த பொருள்படச் சொல்வதென்றால் நடனம் என்பது உயர்நிலை வாழ்வு.

தியானம் தரும் பரிசு மேலும் தியானம்!

பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த ஸ்வாமிகள்

5

தியானம்

உங்களுக்கு உள்ளே உள்ள ஆற்றல் என்ன என்பதை அவதானியுங்கள். அது ஒரு செல்வம். உலகின் அனைத்துச் செல்வங்களையும்விட உயர்ந்தது அது.

உங்கள் மூச்சிலே கவனத்தைப் பதியுங்கள். அப்பொழுது அது நிதானமாக இருக்கும். அமைதியாகவும் இருக்கும். நீங்கள் ஒரு புதிய உலகில் நுழைவீர்கள். முற்றிலும் புதியதான அந்த உலகத்தில் உடல் நலம் உண்டு. மகிழ்ச்சி உண்டு. அது உங்கள் வாழ்க்கையின் தன்மையை அது உயர்த்தும், செறிவூட்டும்.

தியானம் மனதைத் தெளிவுபடுத்தும். உங்கள் ஆத்மாவை வெளிப்படுத்தும். சாதாரண மன நிம்மதியைத் தருவது மட்டுமல்லாமல், அது நிரந்தர மகிழ்ச்சியையும் தரும். நிலையான பேரானந்தம் அடைய உங்கள் ஆன்மீக குரு வழிகாட்டுவார். அவர் உங்களை அலை கடலி லிருந்து பாதுகாப்பாகக் கரை சேர்ப்பார். உங்களைச் சுகமான வாழ்வுக்கு இட்டுச் செல்வார்.

அருள் நிறைந்த அமுதக் கடலே உன் அருள்வுளி அண்டத்தையே குழ்ந்திருக்கிறது