2. மற்றவர்கள் சொல்வதை மடத்தனமாக நம்பாதீர்கள்
# மற்றவர்கள் சொல்வதை மடத்தனமாக நம்பாதீர்கள்
உங்களுக்கு மன நிறைவையும் தெளிவையும் உடல் நலத்தையும் அமைதியையும் எந்தப் பாதை தருகிறதோ அதை உணர்ந்து கொண்டு அதிலேயே பயணம் செய்யுங்கள்.
எது ஆனந்தம்? திருவருளே அனந்தம். நித்யானந்தம் என்பது நிலைத்த திருவருள்.
எல்லாச் சமயங்களுமே அனந்தம் பற்றி ஆய்வு செய்துள்ளன. இணக்கம் காணப் பல பாதைகளை அடையாளம் காட்டியிருக்கின்றன. காலம் காலமாக இதற்குப் பல்வேறு பரிமாணங்கள் சேர்ந்துள்ளன. எனினும் அது ஆனந்தம் என்ற தத்துவத்தின் எளிமையை முற்றிலுமாகக் குழப்பிவிட்ட து.
பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த ஸ்வாமிகள் பழம்பெரும் சாஸ்திர சாகரங்களில் மூழ்கி யிருக்கிறார். அவ்வாறு கண்டெடுத்த ஞர்ன முத்துக்களை நமக்குத் தரும் மாமுனி அவர். அவரது எல்லையற்ற அறிவும் பரந்த அனுபவமும் நம்மைப் பாரம்பர்ய ஞான உலகத்துடன் இணைக் கின்றன. சுகமளிக்கும் அவருடைய உத்திகள் நம் எதிர்காலத்தின் திறவுகோல்கள்.