Born to HealChapter 1 of 12
Chapter 1

ஆணந்த ஸ்புராணத் திட்டம்

1 sections

ஆணந்த ஸ்புராணத் திட்டம்

திறந்த மனதுடன் வாருங்கள். புத்துணர்வு பெற்றுத் திரும்புங்கள், அப்போ து சொல்லுங்கள் 'என் கோப்பை நிரம்பி வழிகிறது' - என்று. உங்கள் கோப்பையைக் கொட்டுங்கள்.

பேராசிரியர் ஒருவர் ஒரு ஜென்குருவைச் சந்தித்தார். ஜென்குரு அவரது கோப்பையில் தேநீர் ஊற்றினார். குவளை நிரம்பி வழிந்தது. இருப்பினும் ஊற்றிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்திற்குமேல் பேராசிரியரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "கோப்ப்பை நிறைந்து விட்டது. இனிமேலும் இதில் எதையும் ஊற்ற முடியாது, என்று பதறியபடியே சொன்னார்.

"நீயும் இந்தக் கோப்பையைப் போலத்தான். உனக்கு நான் ஜென்னைக் காட்டுவது எப்படி? நீ கோப்பையைக் காலி செய்ய வேண்டாமோ?" என்று கேட்டார் குருநாதர். கதையைக் கேட்ட மக்கள் அதை இவ்வாறு அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்: "ஏற்கெனவே தெரியும் என்ற நினைப்பு இருந்தால் நீங்கள் எதையும் கற்க மாட்டீர்கள்." "நாம் உண்மையை உணர்ந்து கொள்வதில் எதிர்ப்படும் தடைகள் ஏற்கெனவே நம் மனதில் படிந்துள்ள எண்ணங்களும் விருப்பு வெறுப்புகளுமே."