IV. தியான சிகிச்சையாளராவதின் முக்கியத்துவம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
1. தியான சிகிச்சையாளருக்கு.....
ஞானியின் சக்தி உங்களுக்குள் பாய்ந்தோடு வதற்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தியான சிகிச்சை கொடுக்கும் ஒவ்வொரு முறையும் உங்களின் உடலும், மனமும் சக்தியால் சுத்திகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நோயாளிக்கு தியான சிகிச்சை கொடுக்கும் போது "ஆனந்த கந்த தியானம்" என்ற தியானத்தை மட்டுமே நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் தியானம் செய்யும் போது நடக்கும் பக்கவிளைவே நோய் குணமாகுதல். எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் சிகிச்சை அளிக்கும் போது உங்களுக்குள் மூழ்கும் தியானத்தில் ஈடுபடுகிறீர்கள்.
ஒவ்வொரு முறை சிகிச்சை அளிக்கும் போது குருவின் ஞானசக்தி உங்களுக்குள் பாய்கிறது. ஒவ்வொரு சிகிச்சையும் நீங்கள் ஆன்மீக பாதையில் எடுத்து வைக்கும் அடிகள். நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்.
2. பொது மக்களுக்கு
‘சேவா’ - பொதுமக்களுக்கு தியான சிகிச்சை ஒரு மிகப் பெரிய சேவை. எவ்வளவோ பணம் செலவு செய்தும், மந்திரம், மருந்து, அந்தக் கல், இந்தக் கல் என்று எவ்வளவோ செலவு செய்தும் சரி செய்ய முடியாத வியாதிகளையும், துக்கங்களையும் சரி செய்வது என்பது ஒரு மகத்தான சேவை ஒரு குருவோடு இணைந்து மனித குலத்தை இன்னல்களில் இருந்து மீட்கும் ஒரு அருமையான சேவையில் நீங்கள் பங்கு பெறுவது - நிச்சயம் ஆனந்தப்பட வேண்டிய ஒரு விஷயம். இதை விட ஒரு பெரிய சேவையை யாரும் செய்ய முடியாது.
3. குருவிற்கு
மனித குலம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற கருணை நோக்கோடு - தங்கள் வாழ்வை அற்பணித்த குருவின் ஆன்மீக சேவையில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறீர்கள். சுவாமியின் ஆசியும், அன்பும் எப்போதும் உங்களோடு இருக்கும்.