நீங்கள் ஒவ்வொருவரும் என்றுடைய கரங்கள் (You Are Each My Hands)
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நீங்களும் தியான சிகிச்சையாளர் ஆகலாம்
தியான சிகிச்சை பற்றிய சுவாமிஜியின் சொற்பொழிவு
நீங்கள்
ஒவ்வொருவரும்
என்னுடைய
கரங்கள்
- சுவாமி நித்யானந்தா

Ebook ISBN: 979-8-88572-634-4
சுவாமிஜியின் அருளால் தொகுக்கப்பட்டது - நோபல்
All rights reserved.
No part of this book may be reproduced or transmitted in any form or by
any means electronic or by any information storage and retrieval system
without permission in writing from Dhyana Peetam.
பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த ஸ்வாமிகள்
அவதாரம்
உண்மையான தேடுதல் இருந்தால், நிச்சயம் ஞானம் கிடைக்கும் என்பதைத், தொடர்ந்து நிரூபிக்க பூமியில் அவ்வப்போது மகான்கள் ஆன்மீக மலர்களாக மலர்ந்து கொண்டிருக் கிறார்கள். அப்படி மலர்ந்த ஓர் அற்புத மலர்தான் நமது - பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்.
உண்மையான குருவிற்கு எந்தக் காலத்திலும் பஞ்சமிருந்ததில்லை. உண்மையான சீடர்களுக்குத் தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம்.
மனிதர்களின் இயல்பே தான் கெட்டுப்
போவதற்கான 99 வழிகளை தெரிந்து
வைத்திருப்பது உருப்படி ஆவதற்கான வழிகளை
அறிந்திருந்தும் ஒரு வழியையும் பயன்
படுத்தாமல் இருப்பதுதான் விந்தை!
நாம் மனித உருவெடுத்ததற்கான ஒரே ஒரு
காரணம் நிலையான, நித்தியமான ஆனந்தத்தை
அடைவதற்காகத்தான், இந்த நிலையான
நித்தியானந்தத்தை நாம் அடைவதற்காக
உன்னதமான ஒரு வழியைக் காட்டி, 99 தவறான வழிகளையும் ரத்தினச் சுருக்கமாக சுட்டிக்காட்டி, மாபெரும் ஆன்மீகச் சேவையைச் செய்து வருகிறார் நமது பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள். இவர் ஆன்மீக உலகின் ஓர் ஒப்பற்ற நக்ஷத்திரம்.
இவர்
அக ஒளியைக் கண்டு கொண்டவர்
இறை சக்தியை அனுபவமாக உணர்ந்தவர்
காலத்தையும் உடலையும் தாண்டும் தெய்வீக
அனுபவம் பெற்றவர்.
ஆனந்தம் என்னும் பெருங்கடலைத் தன்னகத்தே கண்டு கொண்டவர்.
நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருத்துவர் பிரச்சனைகளோடு வருவோர்க்குச் சிறந்த ஆலோசகர் வாழும் கலை கற்க விரும்புவோர்க்குச் சிறந்த வழிகாட்டி ஆன்மீகத் தேடுதலோடு வருவோர்க்கு அருமையான குரு
சிறு வயதில் இருந்து துவங்கிய சுவாமிகளின்
ஆன்மீகப் பயணம் அதன் பூரண தன்மையை
ஜனவரி 1, 2000 ஆம் ஆண்டில் அடைந்தது.
இந்த புனித நாளே சுவாமிகள் ஞானம் அடைந்த
நன்னாள்.
அதன் பிறகு இறை சக்தியின் வழிநடத்துதல்படி
ஆன்மீக சேவையை செய்து வந்தார் சுவாமிகள்.
ஜனவரி 1, 2000 ஆம் ஆண்டில் பெங்களூரில்
பிடதி என்னும் இடத்தில் தியான பீடம் என்ற
நிறுவனத்தை அமைத்து தொடர்ந்து ஆன்மீக
சேவை செய்து வருகிறார்.
தியான சிகிச்சை பற்றி புத்தா பௌர்ணமியன்று சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவு....