பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | : கடவுள் அவதாரம், கெளரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் சாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
| த்ருபதன் | : திரெளபதியின் தந்தை, சிறந்த போர்வீரர் |
| த்ரு'ஷ்டத்யும்னன் | : அரசர் துருபதனின் மகன் |
| சி'கண்டி | : சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர். |
| விராடன் | : அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர் |
| யுயுதானன் | : கிருஷ்ணரின் சாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி'ராஜன் | : அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | : சிறந்த போர்வீரர் |
| குந்தி போஜன் | : முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | : குந்தி போஜனின் சகோதரர் |
| சை'ப்யா | : சிபி பழங்குடியினரின் தலைவர் |
| த்ரு'ஷ்டகேது | : சேதி நாட்டின் அரசர் |
| உத்தமௌஜன் | : சிறந்த போர்வீரர் |
| பஞ்ச பாண்டவர் | : யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் |
| யுதிஷ்டிரர் | : தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பீமன் | : கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜுனன் | : வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | : குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
ஸஹதேவன் : ஜோதிடக் கலையில் வல்லவர்.
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | : அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
| பீஷ்மர் | : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜூனன். |
| விகர்ணன் | : கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | : பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்'வத்தாமன் | : துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்'ருபர் | : கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | : அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர்.) |
| ஸௌமாதத்தி | : பகிர்களின் அரசர் |
| துச்'சா'தனன் | : கௌரவ சகோதர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | : கௌரவ சகோதரர்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர். |
கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள்
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
| அரிஸூதனன் | : பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன் | : கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் |
| கோவிந்தன் | : எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர் |
| பகவான் | : ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ) |
| புருஷோத்தமன் | : மேலான புருஷன் |
| மதுஸூதனன் | : மது என்ற அரக்கனை அழித்தவர் |
| மாதவன் | : லக்ஷ்மிக்குத் தலைவர் |
| யாதவன் | : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் |
| யோகேச்'வரன் | : யோகத்திற்குத் தலைவர் |
| வாஸுதேவன் | : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
| வார்ஷ்ணேயன் | : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் |
விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன் : பாபம் அற்றவர்
அர்ஜூனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
அர்ஜூனன் : நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன் : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீடி : கிரீடம் தரித்தவர்
குடாகேஸன் : தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன் : 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன் : குந்தியின் மகன்
தனஞ்ஜயன் : செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன் : எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன் : பாண்டுவுக்கு மகன்
பார்தன் : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன் : பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின் : இடது கையால் அம்பு எய்பவர்