அத்தியாயம்- 2: அறிமுகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சரி, நாம் இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்.
நீங்கள் ஏன் இந்த சக்கரங்கள் பற்றிய தியான முகாமில் கலந்து கொள்ள வேண்டும்? அதில் உங்களுக்கு என்ன இருக்கிறது? இந்த அமர்வில், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்கிறேன். அதற்கு, நாம் முதலில் நம் மனம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆராய வேண்டும். உங்களுக்கும், உங்களுக்கும் இடையில் நிற்பது உங்கள் மனம் மட்டுமே. உங்களால் உங்கள் மனதை விட்டு விட முடியுமானால், நீங்கள் ஞான மடைந்துவிடுவீர்கள்.
மனம் எவ்வாறு வேலை செய்கிறது ? இந்த (எதிர்ப் பக்கத்தில் உள்ள) படத்தைப் பாருங்கள். கண் வழியாக உள்ளே செல்லும் ஒரு தகவல் எவ்வாறு பகுத்தாராயப் படுகிறது என்பதை இப்படம் காட்டுகிறது. உண்மையில், கண்கள் வழியாக மட்டுமல்லாமல், மூக்கு, செவி, நாக்கு, தொடுதல் மற்றும் கண் ஆகிய ஐம்புலன்கள் வழியாகவும் தகவல்கள் உள்ளே செல்கிறது. ஒரு உதாரணத்திற்காக நாம் கண்ணை எடுத்துக் கொள்கிறோம். இதை உங்களுக்கு விளக்குகிறேன்.
நீங்கள் எதையாவது காணும்பொழுது, முதலில் உங்கள் கண்கள் பார்க்கிறது. சமஸ்கிருதத்தில் சக்ஷூ என்று அழைக்கப் படும் ஒரு சக்தி, கண் வழியாகப் பெறப்படும் செய்திகளை, மின் துணுக்குகளாக மாற்றுகிறது. இது மின் துணுக்குக் குறிப்புப் பகுப்புமானியைப் (DSP) போன்றது. கண் வழியாக உள்ளே செல்லும் செய்தியானது, இந்த சக்ஷூவால் மின் துணுக்குத் தொகுப்பாக
உங்களுக்கும் உங்களுக்கும்
இடையில்
நிற்பது உங்கள் மனம் மட்டுமே!
மாற்றப்படுகிறது. கண்களால் மட்டுமன்றி, ஏனைய ஐம்புலன்கள் வாயிலாகவும் பெறப்படும் தகவல்கள் அனைத்தும் இவ்வாறே மாற்றப்படுகின்றன.
பிறகு இந்தச் செய்தித் தொகுப்பு நினைவகத்திற்குச்1 செல்கிறது. ஸமஸ்கிருதத்தில் இந்தப் பகுதியை சித்தம் என்று அழைக்கிறோம். நினைவகத்தில், இந்தத் தொகுப்பின் மீது இன்னும் சிறிது செயலாற்றப்படுகிறது. உதாரணத்திற்கு, இப்பொழுது நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள் என்றால், அந்தத் தொகுப்பு சக்ஷுவால் பகுத்தாராயப்பட்டு, சித்தத்திற்கும், பிறகு நினைவகத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நினைவகத்தால் ஆராயப்படுகிறது. தொகுப்பு பகுத்தாராயப்பட்டு, அல்லாத விஷயங்கள் தள்ளப்படுகின்றன. அதாவது, இது ஒரு விலங்கல்ல, இது ஒரு தாவரம் அல்ல, இது ஒரு பாறை அல்ல என்பது போல. அல்லாதவற்றைத் தள்ளும் இந்தச் செயல்முறை சித்தத்தால் செய்யப்படுகிறது.
பிறகு, இந்தத் தொகுப்பானது ஒரு பெரிய தாவலில் அஹங்காரத்தை4 அடைகிறது. அஹங்காரம், உங்கள் பழைய அனுபவங்களின் அடிப்படையில், உங்களின் அடுத்த செயல் அல்லது தீர்மானம் என்ன என்பதை முடிவு செய்கிறது. இது போன்ற, யோகா அல்லது தியான வகுப்புகளில், உங்களுக்கு முன்பே அனுபவம் இருந்தால், அவை உங்களுக்கு சரியென்றுபட்டால்,
Memory¹ File² Mind³ Ego⁴ மின் துணுக்குக் குறிப்பு பகுப்புமானி-Digital Signal Processor (DSP)
Memory¹
File²
Mind³
Ego⁴
அவை உங்களுக்கு உதவுவதாக நீங்கள் நினைத்தால், ‘சரி இங்கே அமரலாம்’ என்று தீர்மானிப்பீர்கள், அல்லது ‘இங்கிருந்து போய் விடுவது நல்லது’ என்று நினைப்பீர்கள்!
இந்த செயல்முறையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்: நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். கண் இந்தச் செய்தியை சக்ஷூவிற்கு அனுப்புகிறது. சக்ஷூ இதனை மின் துணுக் குக் குறிப்புகளாக மாற்றுகிறது. பின் நினைவகம், ‘இது அல்ல,’ ‘இது அல்ல’ என்று அல்லாதவற்றைத் தள்ளுகிறது. பின்னர், மனம் ‘இதுதான்’ என்று அந்தத் தொகுப்பை அடையாளம் காணுகிறது. பிறகு இந்த மொத்தத் தொகுப்பும் ஒரு பெரிய தாவலில் அஹங்காரத்தை அடைகிறது. இங்கு உங்கள் முன் அனுபவத்திலிருந்து, உட்காரலாமா அல்லது அறையை விட்டு வெளியேறி விடலாமா என்று தீர்மானிக்கிறீர்கள்.
நாம் இப்பொழுது, கண்ணிற்கும் மனதிற்கும் இடையே நடைபெறும் செயல்முறைக்கான நேரத்தை Tp என்று அழைப்போம். Tp என்பது கண்ணிற்கும் மனதிற்கும் இடையே நடைபெறும் செயல்முறைக்கு எடுத்துக் கொள்ளும் காலம். இந்த, கண்ணிற்கும் மனதிற்கும் இடையே நடைபெறும் செயல்முறையானது, தர்க்க ரீதியானது மற்றும் விழிப்புடன் நடைபெறுவது. இந்தச் செயல் முறையை நீங்கள் முழுவதுமாக அறிகிறீர்கள். இது உங்கள் விழிப்புணர்வுடன்¹ நிகழ்கிறது.
இப்பொழுது, மனதிலிருந்து அஹங்காரத்திற்குச் செல்லும் இந்தப் பெரிய தாவலானது, பெரும்பாலும் விழிப்பற்ற² நிலையில் நிகழ்கிறது. வாஸ்தவத்தில் இந்தச் சமயத்தில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் பெரும்பாலும் ஒரு விழிப்பற்ற செயல்பாடாகவே
| Awareness¹ | Unconscious² |
இருக்கிறது. இது உங்கள் விழிப்புணர்வில்லாமலேயே நிகழ்கிறது. இந்த நேரத்தை நாம் Tq என்றழைப்போம். இந்த சமயத்தில் நீங்கள் வெறுமனே தர்க்கரீதியற்றுத் தீர்மானிக்கிறீர்கள். உங்கள் தர்க்க ரீதியான சிந்தனைக்கு எதிராகத் தீர்மானிக்கிறீர்கள். அதன் விளைவாக நீங்கள் தர்க்கரீதியற்ற அவசரமான முடிவை எடுக்கிறீர்கள்.
ஏன் இவ்வாறு நிகழ்கிறது? நீங்கள் ஏன் விழிப்பின்றி தீர்மானித்துவிட்டு பின்னர் வருத்தப்படுகிறீர்கள்?
இதற்குக் காரணம், இந்த விழிப்பற்றபகுதியானது¹ எதிர்மறை நினைவுகளாலும்², அமைதியின்மையாலும் நிரப்பப் பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் ஸம்ஸ்காரங்கள் என்றழைக்கப் படும், உங்களின் அனைத்து இறந்தகால நினைவுகளும், எல்லா இறந்தகால எண்ண வடிவ அமைப்புகளும், இந்தப் பகுதியில் தான் தொகுப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. உளவியலில் இந்த நினைவுப் பதிவுகளைக் குறிக்க ான்கிராம்கள்³ என்ற வார்த்தையை உபயோகிக்கின்றனர். இந்தப் பகுதியில் இது போன்ற எக்கச் சக்கமான தொகுதிகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நினைவுகளும், நிகழ்ச்சிகளும் அவற்றிற்கிடையே எந்த விதமான தர்க்கரீதியான தொடர்பும் இல்லாமல் இங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
என்ன நிகழ்கிறது என்றால், ஒரு தொகுதி இந்தப் பகுதிக்கு ஒரு பெரிய தாவலில் வரும் பொழுது, ஏராளமான எண்ணப் பதிவுகளால் ஏற்கனவே அமைதியற்றிருப்பதால், ஒரு சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு ஏதுவாக, இந்தத் தொகுதியானது, அஹங்காரத்தைச் சரியாகச் சென்றடைவது கூட இல்லை. ஏற்கனவே இருக்கும் எண்ணப் பதிவுகள், உள்ளே வரும் தகவலின் மீது தன்
Unconscious Zone¹ Negative Memories² எண்ணப் பதிவுகள் / ஸம்ஸ்காரங்கள் - Engrams³ கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விடுகிறது. அவை உள்ளே வரும் செய்திகளின் மீது படர்ந்து, தீர்மானிக்கும் முறையில் ஒரு பெரிய சேதத்தை விளைவித்து விடுகிறது.
அதனால் அஹங்காரமானது, உள்ளுணர்வு¹ நிலையிலிருந்தே மிக வேகமாக ஒரு தீர்மானத்தை எடுத்து, அந்தத் தொகுதியை திருப்பியனுப்புகிறது. இந்தச் செயல்முறை விழிப்பற்ற நிலையில் மின்னல் வேகத்தில் நிகழ்ந்து விடுகிறது.
உதாரணத்திற்கு, நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தகவல் களின்படி, புகைபிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது, அது உடலுக்கும் மனதிற்கும் நல்லதல்ல என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் Tp நிலையிலிருக்கும் வரை இந்தத் தீர்மானத்தில் உறுதி யாக இருப்பீர்கள். ஆனால் மனதிலிருந்து அஹங்காரத்திற் குத்தாவும் பொழுது, ஏற்கனவே பதிந்திருக்கும் எண்ணப் பதிவுகள் உங்களைப் புகைபிடிக்கத் தூண்டுகின்றன; நீங்களும் புகைபிடிக்கத் தீர்மானிக்கிறீர்கள். விழிப்பில் நடக்கும் செயல் முறையானது, ‘வேண்டாம், அது உடல் நலத்திற்கு நல்லதல்ல’ என்று சொல்கிறது. ஆனால் விழிப்பற்ற நிலையில் நடைபெறும் செயல் முறையானது, வாஸ்தவத்தில்.... சொல்வது கூட இல்லை. தீர்மானமே எடுத்து விடுகிறது, நீங்கள் அதனை செயல்படுத்து கிறீர்கள்! இது உள்ளுணர்வு நிலையிலேயே எடுக்கப்படும் தீர்மானமாகும்.
இந்த விழிப்பற்ற பகுதியானது மிகவும் சக்தி வாய்ந்தது. அதை மூன்று வழிகளில் பயன்படுத்தலாம். உள்ளுணர்வு நிலையில், புத்திபூர்வமானநிலையில்மற்றும்நுண்ணறிவுநிலையில்.விழிப்பற்ற மனம் எதிர்மறை நினைவுகளாலும் அமைதியின்மையாலும்
Instinct¹ அதிக சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் வரையில், நாம் இப்பொழுது கண்ட உள்ளுணர்வு நிலையிலேயே வேலை செய்கிறது. நீங்கள் வெறுமனே விழிப்பற்ற நிலையில் உள்ளுணர்விலிருந்து தீர்மானிக்கிறீர்கள்.
நீங்கள் உள்ளுணர்வு நிலையில் எடுத்த முடிவு களுக்காக பெரும்பாலும் பின்னர் வருத்தப்பட நேரிடுகிறது. ‘நான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன்? அது நான் இல்லை! அதை எவ்வாறு நான் அனுமதித்தேன்? எப்படி நான் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை எடுத்தேன்?’ என்று உங்கள் செயல் குறித்து ஆச்சரியப்படுகிறீர்கள். விழிப்பற்ற மனம் உள்ளுணர்வு நிலையில் செயல்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது. இந்த நிலையில், நீங்கள் எந்தவிதமான தர்க்கரீதியாகவும் இல்லாமல், வெறுமனே விஷயங்களை இணைத்து விழிப்பற்ற நிலையில் ஒரு தீர்மானத்திற்குத் தாவி விடுகிறீர்கள்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு வெள்ளை உடை அணிந்த யாரேனும் ஏதேனும் இடையூறு ஏற்படுத்தி யிருந்தால், பிறகு வெள்ளை உடையணிந்த யாரைப் பார்த்தாலும், உங்கள் அறிவிற்கு எட்டாமலேயே பழைய நினைவுகள் மேலெழும்பி உங்களைக் கோபமடையச் செய்கிறது. இது உள்ளுணர்வு நிலை. உங்கள் விழிப்பான மனம் இன்றியே, உங்கள் புரிந்து கொள்ளுதல் கூட இன்றியே, வெறுமனே இது நிகழ்ந்து விடுகிறது.
சக்ஷூ9 படத்தில், Tp-ஐ விட Tq குறைவாக இருக்கும் பொழுது, அஹங்காரத்திற்குச்சென்றுதிரும்பும் நேரம், கண்ணிலிருந்து மனதிற்குச் செல்லும் நேரத்தை விட மிகவும் குறைவாக இருக்கும்
உங்களால் உங்கள் மனதை விட்டுவிட முடியுமானால் நீங்கள் ஞானடைந்து விடலாம்.
பொழுது, நீங்கள் உள்ளுணர்வு நிலையில் இருக்கிறீர்கள். பெரிய தாவலுக்கு நேரமே கொடுக்கப்படுவ தில்லை. தொகுதி, விழிப்பற்ற மனதையடைந்த உடனேயே தீர்மானம் எடுக்கப்பட்டு விடுகிறது. Tq-விற்கு நேரமே கொடுக்காமல், தொடர்ந்து எடை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் விழிப்பற்ற மனம், உங்கள் நினைவுத் தொகுதிகளால் அதிகமாக சுமையேற்றப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறையில் நீங்கள் செயலாற்றும் பொழுது களைப்படைந்து விடுகிறீர்கள்.
இது எவ்வாறு இருக்கிறதென்றால், கணிப்பொறியில் உள்ள சேமிப்புத் தகடு, அடர்த்தி மிகுந்த புகைப்படங்களால் நிரப்பப்படும் பொழுது, அதில் வேறு ஏதும் வேலை செய்ய இடமிருக்காது அல்லவா? அதேபோன்று, உங்கள் விழிப்பற்ற மனமும் பழைய நினைவுகளாலும் எண்ண வடிவ அமைப்புகளாலும் அதிக சுமையேற்றப்படும் பொழுது, அது தன் திறமையை இழந்து, மேலோட்டமான, தர்க்கரீதியற்ற முடிவுகளை எடுக்கிறது.
அடுத்தது புத்திபூர்வமான¹ நிலை. இந்த நிலையில் Tq, Tp-க்கு சமமாக இருக்கும். இங்கு நீங்கள் விழிப்புடன் இருக்கிறீர்கள்; தர்க்கரீதியாக முடிவுகளை எடுக்கிறீர்கள்; ஆயினும் அதில் அதிகப் படியான உற்சாகமோ சக்தியோ இல்லை. நீங்கள் வெறுமனே விழிப்பான மனதுடன் இருக்கிறீர்கள். அவ்வளவே; உங்களிடம் படைப்புத் திறனோ, புதிய கருத்துக்களோ இல்லை; நீங்கள் பெரிய அடிகள் எடுப்பதில்லை; வளர்வதுமில்லை. நீங்கள் ஒரு விசுவாசமான வேலைக்காரனைப் போல இருக்கிறீர்கள். ஐன்ஸ்டீன் சொல்கிறார், “புத்தி என்பது ஒரு விசுவாசமான வேலைக்காரன்” என்று. உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒரு வேலைக்காரனாக
Intellect¹ இருக்கலாம். நீங்கள் ஒரு வெறும் வேலைக்காரன் மட்டுமே; உங்களால் அதிகமாகவோ பெரிதாகவோ எதையும் சாதித்து விட முடியாது.
இந்த நிலையில், நீங்கள் வெறுமனே தகவலைச் சேகரித்து, பகுத்தாராய்ந்து கொடுக்கிறீர்கள்; நீங்கள் ஒரு கணிப்பொறியை விட மேலான நிலையில் இல்லை. உங்கள் விழிப்பற்ற பகுதி புத்திபூர்வமான நிலையில் இருக்கும் பொழுது, Tq-வானது ஏறக்குறைய Tp-க்குச் சமமாக இருக்கும். நீங்கள் அமைதியின்மையாலும், விழிப்பற்ற பகுதியின் அதிக சுமையேற்றத்தாலும் ஏற்படுகிற விரைவான தீர்மானங்களுக்கு வருவதில்லை; விழிப்புடன் தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்கிறீர்கள்.
நீங்கள் புத்திபூர்வமான நிலையில் இருக்கும் பொழுது, களைப்பாக இல்லாவிடினும், சக்தியுடனும் இல்லை. இரண்டுக்கும் இடையில் இருக்கிறீர்கள். இந்நிலையில், நீங்கள் உங்கள் ஆற்றலை முழுமையாக உபயோகப்படுத்துவதில்லை.
நீங்கள் உங்கள் முழு ஆற்றலையும் வெளிக் கொணரும் அடுத்த நிலையே நுண்ணறிவு1 நிலை. உங்களால் ஒரு ஆழ்ந்த அமைதியையும், விழிப்புணர்வையும் இந்த விழிப்பற்ற பகுதியில் செலுத்தி, நினைவுப் பதிவுகளை அல்லது தொகுதிகளை, உங்கள் அமைதியாலும் விழிப்புணர்வாலும் அகற்ற முடியுமானால், உங்களால் நுண்ணறிவு நிலையில் இருக்க முடியும்.
| Intuition¹ | Unconscious² | Empty³ | Bliss⁴ |
Intuition¹
Unconscious²
Empty³
Bliss⁴
இறந்த காலத்தின் சுமையில்லாமல் உயிரோட்டத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியுமானால், உங்கள் இருப்புத் தன்மையின் சக்தியானது தூய்மையான நிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இது நிகழுமானால் உங்கள் அறிவு அதன் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியும். ஏனெனில் ஆற்றலே அறிவாகும்1. இது நிகழுமானால், நீங்கள், தீர்மானங்களை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஆற்றலிலிருந்து எடுக்கிறீர்கள்; இங்கு உங்களுக்கு வெறுமனே மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
நீங்கள் இந்த நுண்ணறிவு நிலையில் இருக்கும் பொழுது Tp-ஐ விட Tq அதிகமாக இருக்கிறது. நீங்கள் தீர்மானங்களை உங்கள் நுண்ணறிவின் ஆற்றலிலிருந்து, ஆழ்ந்த விழிப்புணர்விலும் அமைதியிலும் ஆனந்தத்திலும் எடுக்கிறீர்கள்.
இந்தக் கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும். நான் நுண்ணறிவு என்று எதைச் சொல்கிறேன் என்று அறிவியல் பூர்வமாக ஆழ்ந்து சென்றால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நுண்ணறிவு என்பது புத்திக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வு.
நுண்ணறிவு என்றால் என்ன?
இதையும் உங்களுக்கு விளக்குகிறேன். திடீரென்று உங்களுக்கு ஏதோ ஒன்று சரியென்றுபடுகிறது. அதைச் செய்வதற்கான சக்தியும் இருக்கிறது. ஆனால் வழிமுறைகள் மட்டும் தெரியவில்லை. உங்களுக்கு நன்றாகத் தெரியும், உங்களுடைய முடிவு அல்லது தீர்மானம் மிகவும் சரியென்று. ஆனால் எவ்வாறு அந்த முடிவெடுத்தீர்கள் என்பது மட்டும் தெரியவில்லை. இதுவே நுண்ணறிவு.
Energy is Intelligence¹
Energy is Intelligence
இதற்குமுன் நிகழ்ந்திராத ஒரு சூழ்நிலையை எதிர் கொள்ள நுண்ணறிவின் ஆற்றல் தேவைப்படுகிறது. மிகக் குறைந்த அளவு தகவல்களுடன் ஒரு முடிவெடுக்க நேரும் பொழுதோ அல்லது பல வாய்ப்புகளிலிருந்து ஒரு முடிவெடுக்க முடியாமல் நீங்கள் திணறும் பொழுதோ நுண்ணறிவின் ஆற்றல் உங்களுக்கு உதவுகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் மட்டுமல்லாமல்... உங்களால் இருப்புத் தன்மையின் இந்த நிலையிலேயே தொடர்ந்து இருக்க முடியுமானால் உங்களால் ஒவ்வொரு கணத்திலும் முழுமையாக இருக்க முடியும். இனி வரும் கணங்களும் அது போன்றே அமையவும் அது ஒரு வித்தாகும்.
இப்பொழுது நான் சொல்வதை உங்களால் கிரஹித்துக் கொள்ள முடிந்தால், நீங்கள் உங்களுடனேயே சில நிமிடங்கள் அமர்ந்து உங்களுள் உள்ள பதிவுகள் எத்தகைய ஒரு பேரழிவை ஏற்படுத்தி உங்களுக்குப் பெரும் சுமையாக இருக்கிற தென்பதையும் உங்களால் பார்க்க முடியுமானால், இந்தச் சூழலைவிட்டு வெளியே வருவதற்கான சூட்சமத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொண்டு, உங்கள் இருப்புத் தன்மையின் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்.
நுண்ணறிவு பற்றிய இன்னொரு விஷயம்... அது தீர்மானிப்பதற்கு மட்டுமல்லாமல் அதைச் செய்து முடிப்பதற்கான ஆற்றலையும் வழங்குகிறது. இதை நான் மக்களிடம் சொல்லும்பொழுது அவர்கள் கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி என்னிடம் இருப்பது நுண்ணறிவா அல்லது வெறும் புத்திசாலித்தனமா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?". அவர்கள் கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி இது புத்திசாலித்தனமா அல்லது நுண்ணறிவா என்று குழப்பமாக இருக்கிறது" என்று. நான்
> நீங்கள் விழிப்பற்ற நிலையில் வெறுமனே உங்கள் > உள்ளுணர்விலிருந்து தீர்மானிக்கிறீர்கள். சொல்கிறேன், இவ்வாறு குழப்பமாக இருக்குமாயின் அது புத்திசாலித் தனம்தான்; அதில் தெளிவாக இருங்கள். குழப் பமே அது புத்திச வாலித்தனம் என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. உங்களிடம் நுண்ணறிவு இருந்தால் நீங்கள் சர்வ நிச்சயமாகவும் சக்தியால் தளும்பிக் கொண்டும் இருப்பீர்கள். அங்கு குழப்பத்திற்கு இடமேயிருக்காது.
நுண்ணறிவில் உங்கள் இருப்புத்தன்மையின் உள்ளிருக்கும் ஆற்றல்ாதாரணமாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் திறந்து மிகவும் சுலபமாக அதை வெளிப்படுத்துகிறீர்கள்; செயல்படுத்துகிறீர்கள். விஞ்ஞானிகள் மற்றும் பெரிய கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள், அவர்கள் துறையில் ஏதேனும் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தும் பொழுது, தங்கள் வெற்றிக்குக் காரணம் தங்கள் புத்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று - அதுவே அவர்களுக்குத் தேவையான ஆற்றலைத் தந்தது அல்லது அவ்வாறு ஒரு முடிவையெடுக்கும் துணிவைத் தந்தது என்று மீண்டும் மீண்டும் சொல்வதைப் படித்திருப்பீர்கள்.
ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் நுண்ணறிவுக்கான ஆற்றல் உள்ளது. நான் உங்களிடம் கேட்கிறேன், 'உங்களில் எத்தனை பேர் வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை அனுபவித்திருக்கிறீர்கள் - நீங்கள் ஒருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; தொலைபேசி மணி அடிக்கிறது; எடுத்தால் அவர்; அல்லது நீங்கள் ஏதோ ஓர் இடத்திற்குச் செல்கிறீர்கள்; அந்த இடத்திற்கு நீங்கள் ஏற்கனவே சென்றிருப்பது போல உணர்கிறீர்கள்; அல்லது இதுபோன்ற வேறு சம்பவங்கள்?'
(80%-க்கு மேல் மக்கள் கையை உயர்த்துகிறார்கள்)
| நீங்கள் உள்ளுணர்வு நிலையில் எடுத்த முடிவுகளுக்காக பெரும்பாலும் பின்னர் வருத்தப்பட நேரிடுகிறது. | | --- |
பாருங்கள்... இவை எதிர்பாராவிதமாக நுண்ணறிவை உங்கள் வாழ்க்கையில் சந்தித்த தருணங்கள். இந்தத் தருணங்களில் நீங்கள் எதிர்பாராதவிதமாக தியானநிலையில் இருந்திருக்கிறீர்கள். இவற்றின் மூலம் உங்கள் இருப்புத் தன்மை உங்களுடன் தொடர்பு கொள்ள முயல்கிறது. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இவற்றை காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதை என்று ஒதுக்கித் தள்ளி உங்கள் இருப்புத் தன்மையை புறக்கணித்து விடுகிறீர்கள். நாம் நமது இருப்புத் தன்மையின் உயர் பரிமாணங்களை முழுவதுமாக புறக்கணித்து விடுகிறோம். உங்களில் 80% பேருக்கு நிகழ்ந்த ஒன்று எவ்வாறு காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக இருக்க முடியும்?
இது போன்ற நுண்ணறிவின் கணங்கள் உங்களுள் மறைந்துள்ள ஆற்றலின் தெளிவான அறிகுறி என்பதில் தெளிவாக இருங்கள். நீங்கள் இதனைக் கண்டு கொண்டு ஊக்கப்படுத்தினால் உங்களால் இருப்புத்தன்மையின் உயர் பரிமாணங்களை வெளிப்படுத்த முடியும்.
லேஸர்¹ மற்றும் மேஸர்² துறையில் பெரும் மேதை டாக்டர் சார்லஸ் டவுன்ஸுடன் ஒரு நாள் உணவருந்தும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அவரிடம் கேட்டேன். “இது எவ்வாறு நிகழ்ந்தது? அதை எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது?” என்று. அவர் மிக அழகாக இவ்வாறு பதில் அளித்தார். “ஒருநாள் வாஷிங்டன் D.C-யில் உள்ள ஒரு பூங்காவில் அமர்ந்திருந்த பொழுது திடீரென்று எனக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்தது. அந்த முடிவு எனக்குள் தெரிந்தது. திடீரென்று அந்தத் தீர்மானம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. எனக்குக் கிடைத்ததை நான் உடனே எழுதி வைத்து விட்டேன். பிறகுதான் நான் அந்தக் கஷ்டத்தை உணர்ந்தேன். என்னிடம் முடிவு
| LASER¹ | MASER² |
இருந்தது. ஆனால் வழிமுறைகள் இல்லை. அதை எவரிடமும் சமர்ப்பிக்க முடியாது. ஏனெனில் எனக்கு முடிவு மட்டுமே தெரியும். வழிமுறைகள் தெரியாது. பிறகு நான் நிதானமாக அமர்ந்த பொழுது தர்க்கரீதியான வழி முறைகள் கிடைத்தன''.
சார்லஸ் டவுன்ஸ் மட்டுமல்ல ஜன்ஸ்டனும் இதையே தான் சொல்கிறார். 'எனக்குள் புதிதாக நிகழ்ந்த எதுவுமே நுண்ணறிவு மூலமாக வந்ததே அன்றி புத்தியின் மூலமாக அல்ல'. அவர் அழகாக சொல்கிறார் 'நுண்ணறிவு பெற்ற மனம் ஒரு புனிதப் பரிசு. பகுத்தறியும் மனமோ ஒரு விசுவாசமான வேலையாள்' என்று. நாம் பரிசை மறந்து வேலைக்காரனை கெளரவிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோம்.
நாம் நம்பினாலும் நம்பாவிடினும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிடினும், நுண்ணறிவு என்ற ஒன்று நம்மிடம் இருக்கிறது. அதை எப்பொழுதும் ஒரே சீராக அடைய முடியுமா என்பது தெரியாததனாலேயே ஜன்ஸ்டன் அதை பரிசு என்கிறார். அது எப்பொழுது நிகழும் அல்லது நிகழுமா அல்லது நிகழாதா என்பது அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் யோகிகளும் ஞானிகளும், அதை முயற்சி செய்து அடைய முடியும், அது உன்னிடம் எப்பொழுதும் இருக்கும் என்பதையும் உறுதியாகச் செ ால்ல முடியும் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வந்தி ருக்கிறார்கள். நீங்கள் நுண்ணறிவைப் பரிசு என்று எண்ண வேண்டாம். நீங்கள் அதற்காக முயற்சிக்க முடியும். முயன் றால் அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விடும்.
உங்கள் புத்திக்கு அப்பால் நுண்ணறிவு நிகழும் பொழுது உங்கள் முழு இருப்புத்தன்மையும் ஒருங்கிணைக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் உச்சத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உச்சத்தில் இருக்கும்பொழுது ஏதோ ஒன்று திறக்கிறது. நீங்கள் அதை
| உங்களிடம் நுண்ணறிவு இருந்தால் நீங்கள் | | :---: | | சர்வா நிச்சயமாகவும், சக்தியால் தளும்பிக் கொண்டும் | | இருப்பீர்கள். அங்கு குழப்பத்திற்கு இடமேயிருக்காது. |
வெளிப்பாடு என்றோ அல்லது நுண்ணறிவு என்றோ அல்லது ஏதோ ஒன்று என்றோ அழைக்கலாம். யோகிகள் இது ஒரு விஞ்ஞானம் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் இந்த நுண்ணறிவு அல்லது இந்த ஆற்றலுடன் உங்களால் இசைந்து இருக்க முடியுமானால் உங்களால் இதை தினசரி வாழ்க்கையில் உபயோகிக்க முடியும்.
நுண்ணறிவு உங்கள் இருப்புத் தன்மையின் ஆற்றல். இந்தத் தூய சக்தியானது விழிப்பற்ற பகுதியிலிருந்து வரத் தொடங்கும் பொழுது உங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் குணப்படுத்து கிறது. குணப்படுத்துதல் மட்டுமின்றி மன அழுத்தத்தைக் குறைத்து தன்னிச்சையாகத் தீர்மானங்களை எடுக்கவும் உதவுகிறது.
தன்னிச்சையாக இருப்பது நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் தகவல்களைப் பொறுத்ததல்ல. அது அவற்றைப் பகுத்தாராயும் விதத்தில் இருக்கிறது.
ஒரே விதமான தகவலை, ஒரே விதமான செய்தியைப் பல வழிகளில் பகுத்தாராயலாம். நுண்ணறிவு என்பது உங்கள் புத்திக்கு அப்பாற்பட்டு எவ்வாறு தகவல்களைப் பகுத்தாராய் கிறீர்கள், எவ்வாறு முடிவுக்கு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்த நுண்ணறிவின் ஆற்றலுடன் இசைந்து இருக்க சில உத்திகள் அல்லது வழிமுறைகளின் மூலம் நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ளலாம்.
இந்த உத்திகளையே நாம் தியானம் என்று அழைக் கிறோம். நம்மை அனுபவிப்பதற்காகத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் நமது இருப்புத் தன்மையிலுள்ள உயர் ஆற்றலுடன் நாம் இசைந்து இருப்பதற்கு தியானம் என்ற வார்த்தையை கீழைநாடுகளில் உபயோகப்படுத்துகிறோம்.
எப்பொழுதெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ, சற்று உங்களுடனேயே அமர்ந்து உற்று கவனியுங்கள்... நாம்
நம்மைத் தவிர மற்ற அனைவருக்கும் நேரம் ஒதுக்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் சற்று உங்களுடன் அமர்ந்து கவனித்தால் உங்கள் இருப்புத் தன்மையின் ஏதோ ஒரு பகுதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, இன்னும் சற்று அதிகமாகச் செய்ய விழைவதைக் காணலாம். ஆனால் நாம் நமது இருப்புத் தன்மையின் அந்தப் பகுதிக்கு என்றும் ஒரு வாய்ப்போ நேரமோ கொடுத்ததேயில்லை. நாம் நமது புத்திசாலித்தனத்தில் அதிக பிடிப்புடன் இருக்கிறோம். புத்திசாலித்தனமே இறுதியானது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் யோகிகளோ புத்திசாலித்தனத்தை விட மேலான ஒன்று சாத்தியம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இந்த தியான முகாம், மனம் எவ்வாறு வேலை செய்கிறது, விழிப்பற்ற நிலையில் ஆழமாகப் பதிந்துள்ள நினைவுகளை எவ்வாறு இறக்கி வைப்பது, இனிமேல் எவ்வாறு புதிய சுமைகளை ஏற்றிக் கொள்ளாமல் இருப்பது, நமது இருப்புத் தன்மையில் மறைந்துள்ள ஆற்றலை எவ்வாறு எழுப்பி உள்ளுணர்விலிருந்து புத்திக்கும், பிறகு நுண்ணறிவிற்கும் செல்வது (ஏனெனில் அப்பொழுதுதான் அடிமையாக இல்லாமல் ஒரு எஜமானனைப்போல வாழ முடியும்) என்பதைப் பற்றியது.
இந்த நிகழ்ச்சி உங்கள் எல்லா உணர்ச்சிகளையும் வெளிச்சமிட்டுக் காட்டி, உங்கள் மனதின் விளையாட்டுக் களைக் காண உதவும். நீங்கள் எவ்வாறு உங்கள் உணர்ச்சி களை உருவாக்கிப் பின்னர் அதன் அடிமையாகி விடுகிறீர்கள் என்பதைக் காட்டும். உங்கள் உணர்ச்சிகள் எவ்வாறு உடல் நிலையிலும், மனநிலையிலும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பதைக் காட்டும்.
(பரமஹம்ஸர் ஒரு வரைபடத்தைச் சுட்டிக் காட்டுகிறார்)
(படத்தை நோக்கி) இந்தப் படத்தைப் பாருங்கள். ஏழு இடங்களில் குறிக்கப்பட்டுள்ள ஒரு மனித ரூபத்தைப் பார்க்கிறீர்கள். உங்கள் எல்லாருக்கும் தெரிகிறதா? மனித ரூபத்தி லுள்ள இந்த ஏழு குறிகளே ‘சக்கரங்கள்’ எனப்படுகின்றன. இந்த 'சக்கரங்கள்' நமது உடலிலுள்ள நுட்பமான ஆற்றல் மையங்கள்1. அவை நமது உடலின் ஏழு சக்திச் சக்கரங்கள் அல்லது மையங்கள்.
நாம் எண்ணுவதுபோல், நாம் ஒரே உடலை மட்டும் பெற்றிருக்கவில்லை. ஏழு உடல்களை - ஆற்றல் உடல்களைப் - பெற்றிருக்கிறோம். இப்பொழுது முதல் மூன்று உடல்களைப் பற்றி விளக்குகிறேன்.
முதல் உடல்-எதில் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்களோ, எதனால் நீங்கள் இங்குமங்கும் செல்கிறீர்களோ, எதனால் நடப்பது மற்றும் எழுதுவது போன்ற செயல்களைச் செய்கிறீர்களோ - அது 'ஜாக்ரத் சரீரம்' எனப்படுகிறது. அது பருவுடல் அல்லது விழிப்பில் இருக்கும் சரீரம்.
அடுத்த உடல் 'சூஷ்ம சரீரம்'-கனவுடல், நீங்கள் கனவில் உபயோகிப்பது. இது கனவு நிலையில் நீங்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல உபயோகிப்பது. உங்கள் கனவுகளில் நீங்கள் உங்களைப் பல இடங்களில் காண்கிறீர்கள் இல்லையா? சில சமயங்களில் நீங்கள் விழிப்பு நிலையில் கூட இதுவரை കണ്ടிராத பல இடங்களில் உங்களைக் காண்கிறீர்கள்.
மூன்றாவது உடல் 'காரண சரீரம்'-காரண உடம்பு, உங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உபயோகிப்பது. இந்த உடல் அசைவற்றது.
பின் கண்ட இரண்டு உடல்களும், பருவுடலை, ஏழு புள்ளிகளில், பருவுடலின் நீளவாக்கில் சந்திக்கின்றன. இந்த ஏழு புள்ளிகளே 'சக்கரங்கள்' எனப்படுகின்றன. நமது உடலில் ஏழு பிரதான சக்கரங்கள் இருக்கின்றன. எண்ணற்ற பல சிறிய சக்கரங்களும் உள்ளன. ஆயினும் இந்த ஏழு சக்கரங்களே
Energy Centers
நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
வெகுகாலத்திற்கு முன்னால் வேத காலத்திலேயே இந்த சக்கரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. உண்மையில் பல வேத கோஷங்களில் இந்த சக்கரங்களைப் பற்றிய குறிப்புகள் அடிக்கடி வருவதைக் காணலாம். ஒவ்வொரு சக்கரத்திற்குருகிலும் ஒரு சுரப்பி¹ இருப்பதையும், அதற்கு அந்தக் குறிப்பிட்ட சக்கரத்துடன் ஒரு தொடர்பு இருப்பதையும் இன்று அறிவியல் நிரூபித்திருக்கிறது. இந்த ஏழு சக்கரங்களும் சுரப்பிகளுக்கு ஆற்றலைக் கொடுக்கின்றன
இந்த ஏழு பிரதான சக்கரங்களும் நமது உடல், உணர்ச்சி மற்றும் மனம் சார்ந்த செயல்பாடுகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை மிகுந்த சக்தி வாய்ந்தவை. சக்தி மையங்களான இவற்றை தூய்மைப்படுத்தி, சக்தியேற்றி வைத்திருந்தால், நாம் ஒரு ஆனந்தமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழி வகுக்கும்.
நமது எல்லா நோய்களுக்கும்² காரணம், அவற்றில் ஏதோ ஒரு சக்கரம் சமச்சீர் நிலையில் இல்லாமையே³. ஏனெனில் நமது உடலும் மனமும் நமது உள்-உணர்வு நிலையில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இந்தச் சக்கரங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் நமது உடல் மற்றும் மன நிலையில் உருமாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். முதல் உலகப் போருக்குப் பிறகு, ஆசியாவில் பழங்குடி மக்கள் வசிக்கும் கண்காணாத ஒரு பகுதிக்கருகில் ஒரு சிறு விமானம் கைவிடப்பட்ட
Gland¹ Dis-ease² Imbalance³ நிலையில் இருந்தது. பழங்குடி மக்கள், அவர்கள் வாழ்க்கையில் ஒரு முறை கூட ஒரு விமானத்தைப் பார்த்ததில்லை. ஆச்சரியத்திலும் திகைப்பிலும் அதைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது. அது என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு ஒரு யோசனை கூறிக் கொண்டிருந்தனர். இறுதியாக, அதற்குச் சக்கரங்கள் இருந்ததனால் அது ஒரு மாட்டு வண்டி என்ற முடிவுக்கு வந்தனர். புது மாட்டு வண்டியைப் பற்றிய செய்தி அந்த கிராமம் முழுவதும் பரவியது. அந்தக் கிராமம் முழுவதும் ஒரே கொண்டாட்டம். மாடுகள் பூட்டப்பட்டு அந்த விமானம் கிராமம் முழுவதும் இழுத்துச் செல்லப்பட்டது. அது ஒரு மாட்டு வண்டியாக உபயோகப்பட்டது.
சில வாரங்கள் கழித்து, நகரத்திற்குப் படிக்கச் சென்ற அந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், ஊருக்குத் திரும்ப வந்து அந்த விமானத்தைக் கண்டான். அதன் உள்ளே செ ன்று சுற்றும் முற்றும் பார்த்தான். அதன் கியர்கள் மற்றும் இயந்திர அமைப்புகளைக் கண்டான். அதன் சுவிட்சுகளையும், லீவர்களையும் ஒவ்வொன்றாக நோண்டி னான். திடீரென்று என்ஜின் உயிர் பெற்றது. ஒருவாறு சமாளித்து அதை ஒரு டாக்ஸி போல தரையில் சிறிது தூரம் அங்குமிங்கும் ஓட்டினான். அதைக் கண்ட கிராமவாசிகளுக்கு அதிர்ச்சி. இதற்கு முன் டிராக்டர்களைக் கண்டிருக்கிற அந்த சிறுவன், அந்த விமானம் ஒரு மாட்டு வண்டியல்ல, ஒரு வகையான டிராக்டர் என்று அந்த மக்களிடம் அறிவித்தான். மீண்டும் கொண்டாட்டம். அந்த விமானம் டிராக்டராக உபயோகப்படுத்த ஆரம்பிக்கப் பட்டது.
ஆறு மாதங்கள் கழித்து, ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரி அந்தக் கிராமத்திற்கு வந்தார். ஒரு விமானம் டிராக்டராக
| நாம் நமது புத்திசாலித்தனத்தில் | | :-: | | ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறோம். | | புத்திசாலித்தனமே இறுதியானது என்று எண்ணுகிறோம். |
உபயோகப்படுத்தப் படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்! அவர் கிராமவாசிகளிடம், அது ஒரு டிராக்டரல்ல, பறக்கக்கூடிய ஒரு விமானம் என்று கூறினார். அவர்கள் அவரை நம்ப மறுத்தனர். அவர்கள் பறவைகள் பறப்பதை மட்டுமே கண்டிருக்கின்றனர். அந்த இராணுவ அதிகாரி விமானத்திற்குள் சென்றார். அவர்கள் கண்முன்னே விமானத்தில் சிறிது தூரம் பறந்து விட்டு வந்து தரையிறங்கினார். கிராமவாசிகள் ஆச்சரியத்தில் உறைந்தனர். அதன் உண்மையான ஆற்றலை உணர்ந்தனர்.
பாருங்கள்... மனிதனும் விமானத்தைப் போன்றே பறக்கக் கூடிய அற்புதமான ஒரு இயந்திர அமைப்புதான். ஆனால் நமக்கு நமது உண்மையான ஆற்றல் தெரியவில்லை. நம்மைப் பற்றிய நமது பார்வை மிகவும் குறுகிய தாக இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர், உள்ளுணர்வு நிலையில், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி ஒரு மாட்டு வண்டியைப் போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நம்மில் யார் அதிகமாக வீடு, கார், வேலை மற்ற அடிப்படை வசதி வாய்ப்புகள் ஆகியவற்றுடன் மட்டுமே தம்மை இணைத்து, அதைத் தாண்டி பார்வையைச் செலுத்து வதில்லையோ அவர் உடலை ஒரு மாட்டு வண்டியைப் போலத்தான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சாதாரணமாக நாம் உள்ளுணர்வு நிலையிலேயே செயல் பட்டுக்கொண்டு, விழிப்பற்ற மனதில் அளவுக்கதிகமான சுமைகளுடனேயே இருந்து கொண்டிருக்கிறோம்.
நம்மில் யார், இதைத்தவிர, கலை, படைப்பு, தத்துவம் போன்ற மனதை மட்டுமே சார்ந்திராமல் இதயத்தையும் ஈடுபடுத்தும்
| இந்த ஏழு பிரதான சக்கரங்களும், நமது உடல், உணர்ச்சி மற்றும் மனம் சார்ந்த செயல்பாடுகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. |
விஷயங்களை நோக்கி நகர்கிறோமோ, அவர்கள் உடலை டிராக்டரைப் போல உபயோகிக்கிறார்கள். அப்போது நாம் நம்மிடத்திலேயே ஒருவிதமான நிறைவை அடைகிறோம். ஒரு கவிதையைப் பிரசவிக்கும் கவிஞன், ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணை விட மிகுந்த சந்தோஷமாக இருப்பான். பின்னதில் கருப்பை வயிற்றில் மையம் கொண்டிருக்கிறது. முன்னதிலோ இதயத்தில் மையம் கொண்டு இருக்கிறது. அதனால்தான் இந்த மனநிறைவு. இவர்கள் புத்திசாலித் தனத்திலிருந்து செயல்படுகிறார்கள்.
இறுதியாக, எவனொருவன் ஆன்மீகத்தில் நுழைந்து, உண்மையான அறிவிற்கான தாகத்தை வளர்த்துக் கொண்டு, தானே மனித ரூபத்திலுள்ள இறுதியான பிரபஞ்ச சக்தி என்பதை உணர்கிறானோ, அவனே உடலை ஆகாய விமானம் போல உபயோகிக்கிறான். ஞானமடைந்த குருமார்கள் அவர்களது உடலை ஒரு விமானம் போல உபயோகிக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் பரவச நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் மாட்டுவண்டி மற்றும் டிராக்டர் ஆகிய நிலைகளின் அனைத்துத் துயரங்களையும் கடந்து மேலெழும்பிப் பறக்கிறார்கள்! அவர்கள் நுண்ணறிவு நிலையில் செயல்படுகிறார்கள்.
நாம் ஆகாய விமானமாக என்ன செய்ய வேண்டும்? கிராம மக்களுக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையே இருந்த வித்தியாசம் என்ன? ஆகாய விமானம் மாறவில்லை. அதிலிருந்து எதையும் எடுக்கவோ சேர்க்கவோ இல்லை. அதில் எந்தவிதமான உருவமாற்றமும் செய்யவில்லை, சரிதானே? பிறகு என்னதான் வித்தியாசம்? சொல்லுங்கள் பார்க்கலாம்...
(ஒரு பெண்மணி பதிலளிக்கிறார்)
நமது எல்லா நோய்களுக்கும் காரணம்,
இந்த சக்கரங்களில் ஏதோ ஒன்று
சமச்சீர் நிலையில் இல்லாமையே.
அறிவு ஸ்வாமிஜி...?
சரிதான்... அறிவு. ஆகாய விமானத்தின் இயந்திர அமைப்பைப் பற்றிய அறிவு. கிராமவாசிகளுக்கு அந்தக் கருவி பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியாது. ஆனால், இராணுவ அதிகாரிக்குத் தெரியும், அவ்வளவுதான். அந்த விமானத்தை அவர்கள் புரிந்து கொண்டு கையாண்ட விதம்தான் அதை முதலில் மாண்டு வண்டியாகவும், பிறகு டிராக்டராகவும், இறுதியில் ஆகாய விமானமாகவும் ஆக்கியது.
இதைப்போன்றே, நமக்குள்ளும் இயந்திர அமைப்பு அல்லது கியர்கள் உள்ளன. அவை ‘சக்கரங்கள்’ என்று அழைக்கப் படுகின்றன. எல்லையற்ற ஆற்றல் மையங்களான இவைகள் சரியாகக் கையாளப்பட்டால், நம்மை விமானமாக ஆக்கிக் கொள்ள முடியும். இந்தச் சக்கரங்களைப் பற்றிய அறிவில்லாதவன் தரையில் நடந்து கொண்டிருக்க, இதனை இயக்கத் தெரிந்த குருவோ சுலபமாகப் பறக்கிறார்!
நாம் இந்த சக்கரங்களைப் பற்றிய அறிவியலைப் புரிந்து கொள்வோமானால், தற்சமயம் நாம் எத்தகைய ஆழ்ந்த விழிப்பற்ற தன்மையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதைப் புரிந்து கொண்டவுடன், இந்த விழிப்பற்ற சுமையிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, நமது இருப்புத்தன்மையின் உயர் பரிமாணங்களை நோக்கி நகர ஆரம்பிப்போம்.
Physical Entity¹ Metaphysical Representation²
Physical Entity
Metaphysical Representation
படத்தில் இந்தச் சக்கரங்கள் படம் பிடிக்கப்பட்டு, தத்துவார்த்தத் தளத்தில் அவற்றின் இருப்பு நிரூபிக்கப் பட்டுள்ளது.
எப்பொழுது ஒருவன் எதிர்மறை எண்ணங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறானோ அப்பொழுது அந்த உணர்ச்சிக்கு தொடர்புடைய சக்கரமானது ஒரு மேலங்கியின் பொத்தான் அளவிற்குச் சுருங்கிவிடுகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக் கிறது. அந்த அளவிற்குச் சிறியதாகி விடுகிறது. அதே மனிதன் அதன் தொடர்புடைய நேர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கும் பொழுது, அந்தச் சக்கரமானது ஒரு வண்டிச் சக்கரத்தின் அளவிற்கு விரிவடைகிறது. இது நமது உணர்ச்சிகள், ஆற்றல் மையங்களான, சக்கரங்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்பாகும்.
எதிர்மறை எண்ணங்களால் இந்தச் சக்கரங்களில் நமது சக்தி ஓட்டமானது தடைபடுகிறது. இதை நாம் முழுமையாக அறிவதேயில்லை.
புரிந்து கொள்ளுங்கள்: மனிதன் புழுவைப் போன்று தரையில் ஊர்ந்து செல்வதற்காக வடிவமைக்கப்படவில்லை. அவன் காற்றில் பறப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறான். பறப்பதைப் பற்றிய அறிவியலானது, நமது சக்கரங்களை எவ்வாறு கையாள்வது, நமது உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது, என்பதைப் பற்றிய அறிவியலைக் கற்பதைத் தவிர வேறில்லை. இந்த ஏழு சக்கரங்களையும் எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதைக் கற்றாலே போதுமானது.
அந்தக் கிராமவாசிகளுக்கு, அந்தக் கருவி பறக்கும் என்பதைப் பற்றிய சிந்தனை எவ்வாறு கிடையாதோ, அவ்வாறே
இந்தச் சக்கரங்கள் நமது உடலில் பருப்பொருளாக இல்லை. இவை பருவுடலைச் சார்ந்ததில்லை. ஒளியுடலைச் சார்ந்தது.
மனிதனுக்கும் தன்னால் பறக்க முடியும் என்ற எண்ணம் கிடையாது. 'ஞானிகள் அதிர்ஷ்டசாலிகள், அவர்களிடமிருந்து சற்று விலகியே நின்று அவர்களை அச்சத்துடனும் மரியாதை யுடனுமே நோக்க வேண்டும்' என்றே மனிதன் எப்பொழுதும் நினைக்கிறான். அவன், தானும் அவர்களைப் போல ஆகவேண்டும் என்று விரும்புவதேயில்லை. நான் சொல்கிறேன்... உங்களுக்கு உண்மையிலேயே உள் உலகில் சாதனை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருப்பின், எதுவரினும் நீங்கள் சாதிப்பீர்கள். உங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லாதது தான் பிரச்சினை. எவ்வாறு கிராமவாசிகள் அந்தக் கருவியால் பறக்க முடியும் என்பதை நம்ப மறுத்தனரோ அவ்வாறே நீங்களும், உண்மையிலேயே நீங்கள் மிக உயர்ந்த விஷயங்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள்.
ஒரு சின்ன கதை...
ஒரு சிறுமி பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். அவள் ஆசிரியர் கொடுத்த பாடங்களுடன் போராடிக் கொண்டிருந்தாள். அவளருகில் அமர்ந்திருந்தவனோ பியானோ வாசிப்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவன். அவனாகவே ஒரு பாடலை வாசித்துக் கொண்டு இருந்தான். அந்தச் சிறுமி அவனிடம் சென்று, சிறிதுநேரம் அவன் வாசிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இறுதியில் அவனிடம் கேட்டாள், "ஐயா, ஒருவேளை உங்களுக்கு என்னைவிட அதிகமான விரல்கள் இருக்கிறதோ?".
(சிரிப்பு)
நாம் எப்பொழுதும் வேண்டிய அளவு அதிர்ஷ்ட சாலிகளாக இருப்பதில்லை என்று எண்ணுகிறோம். உண்மை என்னவெனில்,
| எதிர்மறை எண்ணங்களால் இந்தச் சக்கரங்களில் நமது சக்தி ஓட்டமானது தடைபடுகிறது. இதை நாம் முழுவதுமாக அறிவதேயில்லை. |
நமக்குத் தேவையானதெல்லாம் ஏற்கனவே நம்மிடம் இருக்கிறது. அதை எவ்வாறு சரியாக உபயோகப் படுத்துவது என்பது மட்டுமே நமக்குத் தெரியவில்லை. நம்மில் பலர் நமது வாழ்க்கை, நமது திறமை ஆகியவற்றை ஒரு மாட்டு வண்டியைப் போலவோ அல்லது ஒரு டிராக்டரைப் போலவோதான் உபயோகிக்கிறோம். அதை ஒரு ஆகாய விமானமாக மாற்றிவிட முடியும் என்பது நமக்குத் தெரிவதில்லை. பறப்பதற்கான ஆற்றல் உங்களுள் இருக்கிறது. ஆனால் அது நீங்கள் இந்த சக்கரங்களின் பின்னாலுள்ள அறிவியலைக் கற்கும் வரை மறைந்தேதான் இருக்கும்.
இந்தச் சில நாட்களில், இந்தச் சக்கரங்களின் பின்னால் உள்ள உணர்ச்சிகள், இந்த சக்கரங்களையும் அதன் சக்தியையும் பூட்டி கட்டுப்படுத்துவது எது, அதை எவ்வாறு திறந்து சக்தியூட்டிய நிலையில் வைத்திருப்பது போன்றவற்றைப் பற்றிய ஒரு தெளிவான உள்நோக்கிய பார்வையைப் பெறுவீர்கள்.
ஒரு குருவானவர், இறுதியான உண்மையைப் பற்றி தன் அனுபவத்திலிருந்து பேசுகிறார். தனது இறுதியான அனுபவத்தால் அவர் உறுதியுடன் பேசுகிறார். ஆனால் நாமோ, வயதினாலும் அனுபவத்தினாலும் மட்டுமே பக்குவ அடைந்து மலரமுடியும் என்ற பொதுவான எண்ணத்திலி ருக்கிறோம்.
பக்குவமடைவதற்கும், மலர்வதற்கும் காலம் தேவை யில்லை என்பதைக் காட்டுவதற்கு குருமார்கள் ஒரு வாழும் உதாரணம். இதைப் பற்றி நான் மேலும் விளக்குகிறேன்.
நீங்கள் குழந்தையாக இருந்தபொழுது, பொம்மைகளின் மீது மிகுந்த பற்று வைத்திருந்தீர்கள் அல்லவா? யாரேனும் ஒரு
| மனிதன் பறக்கக் கூடிய அற்புதமான ஒரு இயந்திர அமைப்பு. ஆனால் நமக்கு நமது உண்மையான ஆற்றல் தெரியவில்லை. |
பொம்மையை உங்களிடமிருந்து பறித்துச் சென்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏதோ உங்கள் முழு வாழ்க்கையுமே அதையே சார்ந்திருப்பது போல் கதறியழுது ஆர்ப்பாட்டம் செய்வீர்களல்லவா? ஆனால் நீங்கள் வளர்ந்த பிறகு, யாரேனும் ஒரு பொம்மையை எடுத்துச் சென்றால், அது உங்களுக்கு ஒரு பொருட்டாயிருக்குமா? நீங்கள் நொந்து போய் விடுவீர்களா? இல்லை. இப்பொழுது உங்களுக்கு பொம்மையின் மீது எந்தவித பற்றும் இல்லை. உங்களுள் அறிவு இறங்கும் பொழுது, பக்வுவம் இயல்பாகவே வருகிறது.
இதுபோன்ற அறிவும் பக்குவமும் வயதுடன் வருவதாக நாம் எண்ணினாலும் அதற்கும் உடலின் வயதிற்கும் சம்பந்தமில்லை; அது மனிதனின் மனதின் வயதைப் பொறுத்தது. ஆராய்ச்சிகள் ஒரு மனிதனின் மனதின் வயதைக் கணிக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு சராசரி மனிதனின் மனதின் வயது 14-ஐத் தாண்டவில்லை என்பதைக் கண்டு பிடித்திருக்கிறது.
மனித உடலின் வயதுடன், அவன் எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்து, எல்லாவிதமான தவறுகளையும் செய்து, அனுபவத்தையும் பக்குவத்தையும் அடைய வேண்டும்.
அதூ இதைப் போன்றது...
நாம் ஒரு மெழுகுவர்த்தியின் சுடரைத் தொட்டால், காயமேற்பட்டு, மெழுகுவர்த்தியின் சுடர் சுடும் என்று தெரிந்து கொள்கிறோம். பிறகு ஒரு அடுப்பில் உள்ள நெருப்பைத் தொட்டு,
உங்களால் உங்கள் மனதை தேவையானபொழுது மட்டும் உபயோகப்படுத்த முடியுமானால் நீங்கள் அதை விடுவதற்குக் கற்றுக்கொண்டு விட்டீர்கள்! அதன் எஜமானர் ஆகிவிட்டீர்கள்! அதுவும் சுடும் என்று கற்றுக் கொள்கிறோம். பின்னர் ஒரு சிகரெட்டின் முனையைத் தொட்டு அதுவும் சுடும் என்று தெரிந்து கொள்கிறோம். பின்னர் எரியும் கரியைத் தொட்டு அதுவும் சுடும் என்று கற்றுக் கொள்கிறோம்.
இது போன்று, வெவ்வேறு வடிவங்களிலுள்ள நெருப்பைத் தொட்டு, எல்லா வடிவங்களிலும் நெருப்பு சுடுகிறது என்று கற்றுக் கொள்கிறோம்.
இதை நாம் கற்கும் பொழுது, நாமே சுடுகாட்டிற்குச் செ ல்லும் காலம் வந்து விடுகிறது! வாழ்க்கையில் இதைத் தான் நாம் அனுபவம் என்கிறோம். இதைத்தான் நாம் அனுபவ வாயிலாகக் கற்பது என்கிறோம். உடலின் வயதுடன் அறிவைத் திரட்டுவது. பாடங்களைக் கற்பதற்கு நாம் வாழ்க்கை முழுவதையும் எடுத்துக் கொள்கிறோம். வயது ஏற ஏற, நாம் நமது இனிய சொந்த நடையில் கற்றுக் கொள்கிறோம்.
இன்னொரு பக்கம், முதல் தடவை நெருப்பைத் தொடுவதிலேயே, எல்லா விதமான உருவத்திலும் நெருப்பு சுடும் என்பதைப் புரிந்து கொண்டால், நீங்கள் அறிவுள்ளவர். இதைக் கற்பதற்கு வயது தேவையில்லை. அறிவு மட்டுமே போதுமானது. இது உங்களுடைய மனதின் வயதைக் குறிக்கிறது. அதனால்தான் நாம் அறிவிற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை என்கிறோம். இங்கு நீங்கள் எத்தனை அறிவுள்ளவர், விஷயங்களைப் புரிந்து கொள்ள நீங்கள் உங்கள் உள்-அறிவை எவ்வளவு தூரம் போஷித்து வளர்த் துள்ளீர்கள் என்பதே கேள்வி?
இதை நான் உங்கள் சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களிலிருந்தே விளக்குகிறேன்.
நாம் ஆகாய விமானமாக என்ன செய்ய வேண்டும்?
மாணவப் பருவத்தில், கல்லூரியில் இருக்கும்பொழுது, ஒரு வேலை கிடைத்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
வேலை கிடைத்தவுடன், நீங்கள் நினைத்த, எதிர்பார்த்த அளவு சந்தோஷமாக இல்லை, ஒரு கல்யாணமாகி விட்டால் சந்தோஷமாக இருக்கலாம் என்று தேற்றிக் கொள்கிறீர்கள்.
கல்யாணமான பிறகு, குழந்தைகளைப் பெற்றால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
ஒவ்வொரு ஆசையின் பின்னாலும் ஓடி, அது நிறை வேறினால் சந்தோஷமடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். இது போன்றே, வாழ்க்கையின் இறுதிக் கட்டம் வரை ஓடி ஓடி, பின்னர் எந்த ஆசையுமே உண்மையான சந்தோஷத்தைத் தருவதில்லை என்பதை உணர்ந்து, ஆன்மீகம் மற்றும் தியானத்தை நோக்கித் திரும்புகிறீர்கள்! இதுதான் வயதினாலும் அனுபவத் தினாலும் கற்றுக் கொள்ளும் ஒரு மனிதனின் வாழ்க்கை.
அறிவின் மூலமாகக் கற்பவன் எவனோ, அவனே முன்னேறிய மன வயதையுடையவன். அவன் தன் முதல் ஆசையிலிருந்தே தெளிவாக உணர்ந்து கொள்கிறான் எந்த ஆசையுமே நிறைவேறியவுடன் உண்மையான சந்தோஷத்தைத் தருவதில்லை என்று; அங்கேதான் வித்தியாசமிருக்கிறது. அவன் முழுவதையும் பார்த்து, அனைத்தையும் ஆராய்கிறான். உண்மையான நிறைவு உள்ளேயிருந்து வருகிறது, வெளியுலக விஷயங்களில் இருந்து அல்ல என்பதைத் தெரிந்து கொள்கிறான்.
இந்த அறிவை அடைவதற்கு, நீங்கள் வயதானவராக இருக்க வேண்டியதில்லை; நிகழ்காலத்தில் இருந்தாலே
| எப்பொழுதும் நாம் ஒரு வெறும் கவனிப்பவராக மட்டுமே ஆகிறோமோ, அப்பொழுது நம் மனம் நம் கைகளில் ஒரு கருவியாகிறது. | போதுமானது. நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் பொழுது, இருப்புத் தன்மையே உங்களுக்குப் போதிக்கிறது. இருப்புத்தன்மை ஒரு சிறந்த குருவாகும். நாம் நிகழ்காலத்தில் இல்லாத பொழுது, எப்பொழுதும் இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, கற்றுக் கொள்வதற்கு நமது இனிய நேரத்தை எடுத்துக் கொள்கிறோம், அவ்வளவே.
கடந்த காலங்களில், புத்தர், சங்கரர், ரமண மஹரிஷி, விவேகானந்தர் முதலிய குருமார்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டோமானால், இந்தியாவின் சரித்திரத்தை உருவாக்கிய ஞானமடைந்த மனிதர்கள் அனைவருமே, மிகச் சிறிய வயதிலேயே ஞானமடைந்திருக்கிறார்கள். எனவே, ஆன்மீகத்திற் கும், கற்பதற்கும், வயதிற்கும் எந்தவொரு தொடர்புமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அதனால்தான் "உங்கள் வயது உங்களைப் பொறுத்தது1" என்கிறார்கள். அதன் பொருள், உங்கள் வயது உங்கள் மனதின் வயதைப் பொறுத்தது என்பதாகும். எனவே உங்கள் வயது, உங்கள் பக்குவத்தைப் பொறுத்தது. உடலின் வயதையல்ல. உங்கள் வயது 70-ஆக இருக்கலாம்; ஆனால் 20-வயதின் புரிந்து கொள்ளும் தன்மையே இருக்கலாம். அல்லது, உங்கள் வயது 18-ஆக இருக்கலாம்; ஆனால் 80-வயது ஆனவரின் பக்குவமும் புரிந்து கொள்ளும் தன்மையும் இருக்கலாம். ஆகவே, உங்களின் வயது முதுமை காரணமாக நீங்கள் மேன்மை யானவர் என்று உரிமை கொண்டாடாதீர்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான ஸ்வாமி பிரம்மானந்தரைப் பற்றி ஒரு அழகான கதை இருக்கிறது...
You are as old as you are
ஒருநாள் ஸ்வாமி பிரம்மானந்தர், பிருந்தாவனத்தில் தியானத்தில் இருந்தார். அப்பொழுது ஒரு பக்தர் அங்கே வந்து, ஒரு விலையுயர்ந்த கம்பளத்தை அவர் முன் காணிக்கையாக வைத்தார். ஸ்வாமி பிரம்மானந்தர் ஒன்றும் கூறவில்லை. அவர் அமைதியாக நடந்தவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தார். இரண்டு மணி நேரம் கழித்து, அங்கு வந்த ஒரு திருடன், அவரருகில் வந்து அந்தக்கம்பளத்தை எடுத்துச் சென்றான். ஆனால் ஸ்வாமி, அதே அமைதியுடன், எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் கவனித்துக் கொண்டேயிருந்தார். அந்தக் கம்பளத்தைப் பெற்றதோ, இழந்ததோ அவரிடம் எந்தவிதமான வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.
அதேபோன்று, ரமண மகரிஷியைப் பற்றியும் ஒரு கதை உண்டு: ஒருநாள் ஆசிரமத்திற்குச் சில திருடர்கள் வந்தனர். அவர்கள் ஒரு துரும்பையும் விடாமல் எடுத்துச் சென்ற தோடல்லாமல், செ ல்வதற்கு முன், அவருக்கு ஒரு உதையும் கொடுத்து விட்டுச் செ ன்றனர். பகவான் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை என்பதுடன், இந்த நிகழ்ச்சியின்போது அவரது சுவாசத்தின் வேகத்தில் கூட ஒரு சிறு மாற்றமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவர் இந்நிகழ்ச்சியினால் இம்மியளவு கூட பாதிக்கப் படவில்லை.
எப்பொழுது நாம் ஒரு வெறும் கவனிப்பவராக மட்டுமே ஆகிறோமோ, அப்பொழுது நம் மனம் நம் கைகளில் ஒரு கருவியாகிறது. பிறகு நாம் அதை விரும்பியபடி உபயோகித்துக் கொள்ள முடியும். இல்லாவிடில், நமது மனமானது, நம்மை அதன் அடிமையாக்கி விடும். உங்களால் உங்கள் மனதை தேவையான பொழுது மட்டும் உபயோகப்படுத்த முடியுமானால், நீங்கள்
| ஒவ்வொரு ஆசையின் பின்னாலும் ஓடி,
அது நிறைவேறினால்தான் சந்தோஷமாக
இருக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள். |
அதனை விடுவதற்குக் கற்றுக் கொண்டு விட்டீர்கள்! நீங்கள் எஜமானராகி விட்டீர்கள்!
எனவே இந்த சில நாட்களில், எவ்வாறு நம் உணர்ச்சி களைக் கையாண்டு நமது வாழ்க்கையை கவனிப்பவராக மாறுவது என்பதைக் காண்போம்; எவ்வாறு, நாம் நம்மை நமக்குள்ளாக மையப்படுத்திக் கொண்டு, வெளி விளிம்பில் இருந்து பாதிக்கப்படாத வகையில் செயலாற்றுவது என்பதைக் காண்போம்; நமது விழிப்பற்ற தீர்மானங்களுக்குக் காரணமான, மனப்பதிவுகளற்ற, ஒரு மனநிலையை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காண்போம். எவ்வாறு நுண்ணறிவின் சக்தியை வெளிக்கொணர்வது என்பதையும், எவ்வாறு விழிப்பற்ற நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கும், உயர் விழிப்பு நிலைக்கும் செல்வது என்பதையும், எவ்வாறு உள்ளுணர்விலிருந்து புத்திக்கும், நுண்ணறிவு நிலைக்கும் செல்வது என்பதையும், எவ்வாறு நமக்குள்ளிருக்கும் ஆனந்த ஊற்றை வெளிக்கொணர்வது என்பதையும் காண்போம். நாம் அடுத்த அமர்வில் சந்திப்போம். நன்றி.
आनந்தமாக இருங்கள்!