KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள்

காமம், பயம், கவலை, கவனத்தேவை,
பொறாமை, அஹங்காரம், அதிருப்தி
முதலிய அனைத்திற்கும்...

பரமஹம்ஸ நித்யானந்தர்

(ஆனந்த ஸ்புரணா தியான நிகழ்ச்சிகளின் சொற்பொழிவுகளில் இருந்து தொகுக்கப்பட்டது)

தமிழில்

கிரிதர்

பொறுப்பு மறுப்பு (Disclaimer)

இந்தப் புத்தகம் தங்கள் உடலிலுள்ள பிரதான சக்தி மையங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளவும், அவை எவ்வாறு தினசரி வாழ்வில் எல்லாத் துறைகளிலும் தங்கள் செயல்திறனின் மீது ஆதிக்கம் செலுத்து கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளவும் விரும்பும் எவருக்குமானது. இந்தப் புத்தகத்தின் அடிப்படைக் கருத்து, சக்கரங்களுக்குச் சக்தியூட்டும் நித்யானந்தா பயிற்சி வகுப்புகளான Life Bliss Program (LBP) மற்றும் Ananda Spurna Program (ASP) ஆகியவற்றின் சொற் பொழிவுகளில் இருந்து திரட்டப்பட்டது. ஒரு முழுமைத்தன்மைக்காக, இந்தப் பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே கலந்து கொண்டவர்களுக்கு உதவும் வகையில், இந்தப் பயிற்சி வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட தியான முறைகளுக்கான விவரமான குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தியான முறைகள், மேற்கூறப்பட்ட ஏதாவதுஒரு பயிற்சி வகுப்பின் வாயிலாகத் தியான பீடத்தினால் தீட்சையளித்து நியமிக்கப்பட்ட ஆச்சார்யா ஒருவரின் தனிப்பட்ட ஆலோசனையைப் பெற்ற பிறகே உபயோகிக்கப் பட வேண்டும். இந்த வகுப்புகளில் ஏதாவதுஒன்றில் இதுவரை கலந்து கொள்ளாமல், முதன் முறையாக இதை வாசிப்பவர்கள், இந்தத் தியான முறைகளை முயற்சிப்பது உசிதமல்ல. அவ்வாறு யாராயினும் முன் கூட்டியே LBP அல்லது ASP வகுப்புகளில் கலந்து கொள்ளாமல், இந்த தியான முறைகளை முயற்சி செய்வார்களாயின், அவர்கள் முழுவதும் சொந்தப் பொறுப்பில் செய்கிறார்கள்; அவர்களது செயல்களுக்கான பின் விளைவுகளுக்கு ஆசிரியரோ அல்லது தியான பீடமோ பொறுப்பேற்காது.

பதிப்புரிமை © 2008

முதல் பதிப்பு : ஜனவரி 2008
Ebook ISBN: 979-8-88572-350-3
எல்லா உரிமையும் தியான பீடத்திற்கே.

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு பகுதியையும் எந்த முறையிலும் தியான பீடத்தின் எழுத்துப் பூர்வமான அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்துபவர்களின் செயல்களுக்கு ஆசிரியரோ அல்லது தியான பீடமோ எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

இந்தப் புத்தகத்தின் மூலமாக பெறப்படும் நன்கொடைகள் நேரடியாக நித்யானந்தா அறக்கட்டளை (Nithyananda Foundation) மூலமாக மக்களுக்குச் சேவையாகச் சென்று அடைகிறது.

பரமஹம்ஸ நித்யானந்தர்...

ஜனவரி 1, 1978 அன்று தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் பிறந்த நித்யானந்தர், நம்முடன் வாழும், தன்னை உணர்ந்த ஒரு ஞானி. சிறு வயது முதலே, இறுதி உண்மையை உணரும் நோக்கில் தீவிர முனைப்புடனும், விடாமுயற்சியுடனும் நீண்ட காலம் கடுமையான தவத்தை மேற்கொண்டார். இமயம் முதல் குமரி வரை பாரதத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று, இந்தியாவிலும் நேபாளத்திலும் பல தலைசிறந்த குருமார்களிடம் யோகம், தந்திரம் மற்றும் கிழக்கின் பல அதிநுட்ப ரசியங்களையும் பயின்றார். ஜனவரி 1, 2000 அன்று, தனது 22-வது வயதில் ஞானமடைந்தார்; இறுதி விழிப்புணர்வு நிலை மலர்ந்தது; இறுதி ஆனந்த நிலை அல்லது நித்ய ஆனந்த நிலையை அடைந்தார்.

பரமஹம்ஸரின் நோக்கம் ஒவ்வொரு தனிமனிதனுடைய உள்ளார்ந்த ஆற்றலையும் மெய்யாக்க உதவுவதே. அவருடைய அனுபவபூர்வமான மற்றும் பரிவுமிக்க அணுகுமுறையாலும், மனிதனின் அடிப்படை இயல்பு பற்றிய ஞானப் பார்வையினாலும், பரமஹம்ஸர், தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டு, மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பரமஹம்ஸரின் தெய்வீகமான குணப்படுத்தும் தொடுதல் ஆனந்தா ஹீலிங் (ஆனந்த தியான சிகிச்சை) என்ற பெயரில், ஒரு அறிவியல் பூர்வமான ஆன்மீகக் குணப்படுத்தும் முறையாக உருவெடுத்துள்ளது. அவர் உலகம் முழுவதும் உள்ள மக்களை தனது நேரடியான தொடுதலினாலும், தீட்சை பெற்ற தியான சிகிச்சையாளர்களின் மூலமாகவும், ஒற்றைத் தலைவலி முதல் புற்றுநோய் வரையிலான பல வியாதிகளையும் குணப்படுத்துகிறார். 4 ஆண்டுகளில் 15 லட்சம் மக்கள் தியான சிகிச்சை மூலம் குணம் பெற்று இருக்கிறார்கள்.

நித்யானந்தா அறக்கட்டளை (Nithyananda Foundation) பரமஹம்ஸர் நிறுவிய தியானத்திற்கான உலகளாவிய இயக்கமாகும். அதன் ஆன்மீக மையம், தியானபீடம் (Dhyanapeetam) இந்தியாவில் பெங்களூரிலுள்ள பிடதி என்னும்இடத்தில் இருக்கிறது. மேற்கத்திய பகுதிக்கான தலைமையகம் அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கிறது. தியானபீடம் உலகம் முழுவதிலும் உள்ள 33 நாடுகளில் 1200 மையங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிமனித மாற்றத்தின் மூலம் மனித இன மாற்றத்திற்காக ஸ்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நடைமுறைப் பிரச்சினைகள் குறித்த, பரமஹம்ஸரின் தெளிவான விளக்கங்களும், எளிமையான சக்தி வாய்ந்த தியான முறைகளும், உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக நிலைகளில் தனிமனித மலர்ச்சிக்கு உதவுகிறது. இந்நோக்கத்திற்கு உதவியாக, உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஆனந்த சேவகர்கள் என்னும் தன்னார்வத் தொண்டர்கள், செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நவீன மேற்கத்திய முறையான தர்க்கம் மற்றும் நிரூபணத்தையும், புராதனமான கிழக்கத்திய முறையான ஆன்மீகத்தையும் இணைப்பதற்காக, பரமஹம்ஸர் தன்னையே ஒரு உயிருள்ள சோதனைச் சாலையாக வழங்கி, உலகெங்கிலுமுள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டு, மனித குல நன்மைக்காக அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் பாலமாகவும் திகழ்கிறார்.