ஆனந்தமாக இருங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
T.T. தனசேகர், தொழிலதிபர் மேனேஜிங் டைரக்டர், குட்டி குரூப் கம்பெனிகள், திருச்செங்கோடு.
எனக்குச் சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட காமாலை நோயினால் ஈரல் பாதிக்கப்பட்டு சிறுகச் சிறுக செரிமானம் குறைந்து கொண்டே வந்தது. சரியான பசி இல்லாமை, செரிமானம் இல்லாமை ஆகியவற்றால் மிகவும் கஷ்டப்பட்டேன்.
இதற்காகச் சென்னையிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனை, உலகளவில் புகழ்பெற்ற செரிமான மண்டல சிறந்த மருத்துவ நிபுணர் மற்றும் டில்லியில் உள்ள புகழ்பெற்ற ஆயுர்வேத, மேலும் ஹோமியோபதி மருத்துவ நிபுணர்களிடம் பல லட்ச ரூபாய்களுக்கு வைத்தியம் நீண்ட நாட்களுக்குப் பார்த்துக் கொண்டும் சரிவரவில்லை. 68 கிலோ எடை இருந்தேன். 38 கிலோவாகக் குறைந்து பலமிழந்து போனேன்.
மேலும் நெடுநாள் பலவிதமான மருந்துகள் சாப்பிட்டதால் கடுமையான குடல்புண் வந்தும் ஈரல் புற்றுநோய் (Liver Cancer) ஏற்பட்ட்டும் மிக மிக உடல் துன்பமும் மன உளைச்சலும் பெற்றேன். ஒரே ஒருவேளை சாதாரணமாக உணவு சாப்பிடமாட்டோமா, ஒரே ஒரு மணி நேரமாவது முழு அமைதியிலும், ஆரோக்கியத்திலும் இருக்க மாட்டோமா, என்று மிகவும் ஆதங்கப் பட்டிருந்தேன்.
எல்லா மருத்துவர்களும் என்னை முழுமையாகக் கைவிட்டு விட்டார்கள். அப்போது, இரண்டு வருடம் நான்கு மாதங்களுக்கு பிறகு, அதாவது 2001 ஜனவரி மாதம் பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளைச் சந்திக்கும் மறுவாழ்வான வாய்ப்பு கிடைத்தது. முதல் சந்திப்பில் அவர் என் தலையின் மீது கை வைத்து ஆசிர்வாதம் செய்து உனது குறைகளை நான் நிவர்த்தி செய்து விட்டேன். நீ இனி சாதாரணமாகச் சாப்பிட்டு ஆரோக்கியமாக இரு என்று கூறினார்.
அன்று எனது உடலிலும், மனதிலும் ஒரு சுகமான உணர்வும், தெளிவும் ஏற்பட்டது. வயிற்றில் ஒரு புதிய சந்தோஷமான ஆரோக்கியமான நிலையை உணர்ந்தேன். மனதில் சொல்ல முடியாதளவு ஒரு ஆனந்தத்தை உணர்ந்தேன். இது ஒரு மறு பிறப்பைப்போல எனக்குப்பட்டது. அன்றிலிருந்து நான் முன்னையையும் விட அதிகம் சாப்பிட முடிந்தது. நல்ல சத்தான உணவையும் செரிக்க முடிந்தது. இருபது நாட்களுக்குள் உடலிலும் முழு ஆரோக்கியத்தைப் பெற்றேன். அப்போதே உள்ளத்தில் முழு ஆரோக்கிய உணர்வை உணர்ந்தேன்.
இந்த வெளிப்புற ஆரோக்கியம் தவிர உள்ளம் ரீதியாக நான் அடைந்தது மிகவும் பெரிய சொத்தாகும். சுவாமிகள் கொடுத்த தியான முறையைச் செய்து முழுமையான அமைதி, அளவிடமுடியாத அன்பு உணர்வு மேலும் எப்போதுமான ஆனந்த உணர்வு ஆகியவற்றையும் பெற்றேன்.
சாதாரணமாக விதிவிலக்கே இல்லாதபடி, எல்லா மனிதர்களிடமும் இருக்கும் குறைபாடுகளான பயம், வெறுப்பு, பொறாமை, கோபம் ஆகிய துன்பப்படுத்தும் குணங்களே மறைந்து போய் என்னுள் எப்போதும் ஆனந்த உணர்வே இருக்கிறது.
இந்த நிலைக்காக எவ்வளவோ முயலும் சாதகர்களுக்கே சீக்கிரம் அமையாத இந்த ஆனந்த உணர்வு, எனக்கு சுவாமிகளின் கருணையால் வாய்த்து நிற்பது ஒரு தெய்வக் கொடை ஆகும். அவருக்கு எனது நன்றி முடிவில்லாதது.
இப்படிக்கு,
சுவாமியின் பக்தன்
டி.டி. தனசேகர்
டாக்டர் K.K. ராஜகோபால் எம்.பி.பி.எஸ்., டி.சி.எச் மேலாண்மை இயக்குநர், கமலா மருத்துவமனை கே.எஸ்.பி. மருத்துவமனை, சேலம் - 636 001.
பதினைந்து படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவும் பத்து வெண்டிலேட்டர்கள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும் நூறு படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நடத்தி வருகிறேன். மயக்க நிலை மற்றும் சிக்கலான நோய் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.
எனது மகன் திரு. மதன்குமார்: வயது 27; திருமணம் ஆகி ஒரு வருடம் ஆனவர். துரதிர்ஷ்டவசமாக மூளைபடர் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பிரிவில் 105 நாட்கள் சிகிச்சை பெற்றார்.
நாள் ஒன்றுக்கு மருத்துவச் செலவு ரூ. 30,000/- செலவிடப்பட்டது. மேற்கண்ட மருத்துவத்தில் என் மகனின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இந்த சிகிச்சை பெற்று மருத்துவமனையை விட்டு வரும்போது எவ்வித உணர்வும் இல்லாமல் படுக்கையில் இருந்தபடி, கண்களை மட்டும் திறந்து பார்க்கக் கூடிய அளவிலேயே இருந்தார்.
ரூ. 50 இலட்சத்திற்கான மருந்துகளைச் சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்து கொடுக்கப் பட்டதால் குறிப்பிட்ட அளவு உடல் நிலை முன்னேற்றம் சீராக இருந்தது. இம்மாத்திரைகள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டன. மேற்கண்ட நிலையில் நான் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டதால்
என்னுடைய டாக்டர் தொழிலை நன்கு செய்ய இயலாத நிலையில் இருந்தேன். இந்நிலையில் நான் பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளைச் சந்தித்தேன்.
அவர் பெங்களூரில் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கச் சொன்னார்கள். பெங்களூர் மகாவீர் ஜெயின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல்வேறு அலுவல்களிடையே சுவாமிஜி அவர்கள் தினமும் தியான சிகிச்சை அளித்தார்கள். பிறகு ஒரு மாத காலமாக எனது மகன் சுவாமிஜியின் ஆசிரமத்தில் தங்கி தியான சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்சமயம் எனது மகன் நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார். தன்னுடைய உணவைத் தானே எடுத்துக் கொள்ளுதல், சதுரங்கம் விளையாடுதல், 45 நிமிடம் பேசுதல் என்று முன்னேற்றம் அடைந்துள்ளார்.
இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் முழுமையான குணம் அடைவார்.
என்னுடைய குடும்பம் முழுவதும் சுவாமிஜிக்கு மிகவும் கடமைப்பட்டவர்கள் என நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
சுவாமியின் பக்தன்
கே.கே. ராஜகோபால்
T. புனிதவதி தங்கவேல்,
உரிமையாளர் : நேஷனல் ஹோட்டல்,
94, கிரின் வேஸ் ரோடு, செந்தில் இல்லம்,
பேர்லண்ட்ஸ், சேலம் - 636 016.
நான் சேலத்தில் வசிக்கிறேன். எனக்கு வயது 67. எனக்கு ஏற்கெனவே மூன்று முறை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மறுபடியும் ஹெர்னியா நோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டத்துக்குள்ளானேன். என்னுடைய டாக்டர் நான்காவது முறையாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று கூறிவிட்டார். ஏனெனில் எனக்கு சோரியாசிஸ் நோயு இருந்ததால் அறுவை சிகிச்சையில் தையல் ஒட்டுவது சிரமம் என்று கூறிவிட்டார்கள்.
நமது ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளிடம் எனது நிலையைக் கூறினேன். சுவாமிகள் என்னைப் பார்த்துக் கொள்வதாக தைரியம் கூறினார். 2002 செப்டம்பர் மாதம் பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் நான்காவது முறையாக ஹெர்னியா அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டேன். அறுவை சிகிச்சை முடிந்து வரும்போது மிக அதிக வலியால் துடித்தேன். சுவாமிஜி எனக்கு உடனே Healing செய்தார். உடனே எனக்கு வலி நின்று நார்மல் ஆகிவிட்டேன்.
நான்கு நாட்கள் கழித்து நான் வீடு திரும்பும் போது எனக்கு வலியோ, சோர்வோ இல்லை. எனக்கு வைத்தியம் செய்த டாக்டரே ஆச்சர்யப்பட்டுப் போனார். "உங்களை சுவாமிகள்தான் காப்பாற்றினார்" என்று டாக்டரே தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டுக் கூறினார். தன் சொந்தத் தாய்க்குச் சமமாக என்னை நினைத்து இந்த அன்பையும், Healingஐயும் எனக்கு வழங்கிய சுவாமிகளை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டேன்.
எனக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ஏழு தையல், சரியாக ஒட்டவில்லை. இது முழுமையாக குணமடைய ஆறு மாதங்கள் வரையாகும் என டாக்டர் கூறினார். ஆனால் சுவாமிகளின் கருணையால் அவரிடம் சில நாட்கள் Healing செய்து கொண்டதால் ஒரு மாதத்திலேயே தையல் சரியாகக் கூடிவிட்டது.
அதிலிருந்து நான் ஆரோக்கியமாகவும், சந்தோஷ மாகவும் சுவாமிகளின் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சுவாமிகளோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பு மிகப் பெரிய பாக்கியம். ஒரு பெரும் நன்மை. நான் சுவாமிகளிடம் பக்திப்பூர்வமாகச் சரணடைந் திருக்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் உள்ள பேரன், பேத்தி உட்பட அனைவருமே இம்மாதிரிச் சரணடைந்து அவரது கருணையால் ஆரோக்கியமும், சந்தோஷமுமாக இருக்கிறோம்.
இப்படிக்கு,
சுவாமியின் பக்தை அல்ல அடிமை
டி. புனிதவதி தங்கவேல், சேலம்
K. அன்பழகன் S.P.L. Grade Pharmacy (V.R.S) Ph : 0427-2400840 471 - TNHB (TB) Ayyanthirumangalam (Po.) Mo : 98427-91962 Salem- 636 008.
நான் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பொருட்களை விநியோகம் செய்யும் ஒரு ஏஜெண்ட். எனக்கு 2002 நவம்பர் மாதம் ஒரு நாள் காலையில் மயக்கம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் சேலம் கோகுலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். டாக்டர்கள் மூளையில் இரத்தக்குழாய் வெடிப்பு ஏற்பட்டு இரத்தக் கசிவு ஏற்பட்டதால் உயிருக்கு மிகவும் ஆபத்தாக இருப்பதாக என் மனைவியிடம் கூறினார்கள். என் மனைவி உடனே நாங்கள் மிகவும் அன்பு செலுத்தும் "சுவாமி நித்யானந்தா" அவர்களுக்கு எனது நிலை பற்றித் தகவல் சொன்னார்கள். பெங்களூரிலிருந்து வரும் சுவாமி அவர்கள் அந்த போனிலேயே என் மனைவிக்கு ஆறுதலும், உறுதியுமாக "நான் அன்பழகனை கவனித்துக் கொள்கிறேன்; கவலை வேண்டாம்" என்றும் மருத்துவ முறைப்படி முயற்சிக்க வேண்டியதைச் செய்யும்படியும் கூறினார்கள். என்னை அன்றே சேலத்திலிருந்து சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மல்டிஸ்பெஷாலிடி மருத்துவ மனைக்கு மாற்றினார்கள். அங்கும் டாக்டர்கள் நான் ஐந்தாம்நிலை கோமாவில் தொடர்ந்து இருப்பதால் பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டார்கள்.
விமானம் மூலம் பெங்களூரிலிருந்து மேற்படி ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு உடனே வந்த சுவாமிகள் எனக்குத் தன்னுடைய ஆசியையும் Healingஐயும் கொடுத்தார்கள். அதற்கடுத்த 12 மணி நேரத்தில் டாக்டர்களே மிக ஆச்சரியப்படும் அளவிற்கு என்னுடைய உடல் நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட்டது.
பிறகு டாக்டர்கள் எனது மூளையில் Open Surgery மூலம் இரத்தக் கசிவை அகற்றினார்கள். இந்த மாதிரி ஆபரேஷன் மூலம் பிழைப்பது கூட மிக அரிது என்று கூறினார்கள். சுவாமிகள் பத்து நாட்கள் தினமும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து எனக்கு Healing செய்தார்கள். பிறகு நான் குணமடைந்து Discharge ஆகி பெங்களூருக்குச் சென்று சுவாமிகளுடன் மேலும் பத்து நாட்கள் தங்கியிருந்து Healing எடுத்துக்கொண்டு முற்றிலும் குணமடைந்து ஆரோக்கிய மாக உள்ளேன்.
இது எனக்கு மறு பிறப்பு தான். நவீன ஆங்கில மருத்துவத்தின்படி பிழைக்க சாத்தியமே இல்லாத நிலையிலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்த சுவாமிகளின் பாதங்களை நான் வணங்குகிறேன். அவர் குடியிருக்கும் என் இதயத்தில் என்றும் நன்றி சுரந்து கொண்டே இருக்கிறது. நான் தற்சமயம் இருக்கும் ஆரோக்கியத்திற்கும், ஆனந்தத்திற்கும் அவரது கருணையே முழுக் காரணம்.
இப்படிக்கு சுவாமியின் பக்தன்,
அன்பழகன், சேலம். V
ஞானம் அடைதல்
- மஹா அவதார் ஸ்ரீ பாபாஜியோடு
- ஓம்காரீஸ்வரர் மலையில்
- பஞ்ச தபஸ்
- எலும்பு முறிவும் அதிசய குணமும்
- மரண பயத்தை வெல்லுதல்
- ஞானம் அடைதல்
VI
உலக மக்களுக்காக ஆன்மீகப் பணியில்
- சுவாமிகளின் தரிசனம்
- ஆசிரமத்தில் நிகழ்ந்த முதல் அதிசயம்
- ஆசிரமம்
VII
ஆனந்த தியான சிகிச்சை
அன்பர்களின் அனுபவங்கள்
- டி.டி. தனசேகர்
- டாக்டர் கே.கே. ராஜகோபால்
- டி.புனிதவதி தங்கவேல்
- கே. அன்பழகன்