KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/சிவோஹ அனுபவம் அனுபூதியாகும்Sign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

சிவோஹ அனுபவம் அனுபூதியாகும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இப்போது பிரச்சினை என்னவென்றால், சிலருக்கு இந்த அளவிற்குப் புரிந்து விடும். 'ஆமாம் சாமி. உண்மையில் பார்த்தீர்களென்றால் எனக்குள் இருக்கின்ற ஆத்மா, சிவம் வடிவானது. அது, எல்லா சக்தியும், எல்லா ஞானமும், எல்லா அறிவும், எல்லா ஆற்றலும் உடையது. அது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்த அனுபூதியை அடைந்தால்தானே, அனுபவத்தை அடைந்தால்தானே சக்தியெல்லாம் வெளிப்படும். அதை அடையும்வரை நான் சாதாரண மனிதன், சவம் தானே. அதை அடைந்தால்தானே சிவம்?'

நீங்கள் என்ன சொல்கின்றீர்கள், 'எனக்கு அந்த அனுபூதி வரட்டும், அதன் பிறகு சிவன் மாதிரி அந்த சக்திகளை வெளிப்படுத்தி உயர்ந்த வாழ்க்கையை வாழ்கிறேன்.' அந்த அனுபூதி என்ன சொல்கிறது என்றால்... 'நீ சிவன்போன்று உயர்ந்த வாழ்க்கையை வாழ ஆரம்பி, அதன்பிறகு நானே உனக்குள்ளிருந்து வெளிப்பட்டு, சக்திகளை எல்லாம் பொங்கிப்பெருக வைக்கிறேன்.

இது எவ்வாறு இருக்கிறதென்றால், மாமியாரும் மருமகளும் சண்டைபோட்டு முடித்த பிறகு, அம்மா மகனிடம் என்ன சொல்கிறார், “ஆமாம், சண்டைப்போட்டோம்தான். என்னவாக இருந்தாலும் நான் வயதில் பெரியவள் தானே. உன் மனைவியை வந்து பேசச் சொல்...’ என்று. மனைவி என்ன சொல்கிறார். "என்னவாக இருந்தாலும் பெரிசுக்கு பொறுமை இருக்க வேண்டாமா? முதிர்ச்சி இருக்க வேண்டாமா? அவர்கள்தானே சத்தம் போட்டார்கள். அவர்களையே வந்து என்னிடம் பேசச் சொல்லுங்கள்.''

எல்லா மாமியார் மருமகள் சண்டையிலும், மாமியார் என்ன சொல்கிறார், 'என்ன இருந்தாலும் சின்னப்பொண்ணுக்கு பொறுமை இருக்கவேண்டாமா? பொறுப்பு இருக்கவேண்டாமா? மருமகளை வந்து முதலில் பேசச்சொல், நான்பேசுகிறேன்' என்கிறார். மருமகள் என்ன சொல்கிறார், 'மாமியாரை முதலில் வந்து பேசச் சொல்லுங்கள். பிறகு நான் பேசுகிறேன்' என்கிறார். இந்த இரண்டு பேருக்கும் நடுவில் நின்று மாட்டிக்கொள்ளும் இந்த மனுஷனின் நிலைதான் குருவின் நிலை.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஒருபக்கம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், 'சிவFlowஹம் என்று நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்சாமி, அந்த அநுபூதியை எனக்குள் வரச்சொல்லுங்கள் அதன்பிறகு சிவன்மாதிரி வாழவைக்கிறேன்' என்று. மறுபக்கம் அந்த அநுபூதி என்ன சொல்கிறது, 'பொறுப்பெடுத்து சிவன்போன்று வாழச்சொல், நான் அந்த அநுபூதியாக உள்ளிருந்து வெளிப்படுகிறேன்' என்று.

தெரிந்துகொள்ளுங்கள்... மாமியார்-மருமகள் சண்டையில் நடுவில் மாட்டிக்கொண்ட மனுஷன் விழிப்பதுபோன்று நான் இருக்கப்போவதில்லை.

நான் அவதார புருஷன்.

எனக்குள் இருக்கும் அநுபூதியைப் பொங்கச்செய்து , உங்களுக்குள் இருக்கும் குண்டலினீ சக்தியை விழிப்பிக்கச் செய்வேன். இந்த முதல் உத்வேகத்தினை அளித்து 'சிவFlowஹம்' எனும் அநுபூதியால் வருகின்ற உயர்ந்த தன்மையை உங்களுக்குள் உருவாக்கினேன் என்றால், இந்த உயர்ந்த தன்மையான சிவFlowஹத்தின் சக்தி வெளிப்பாடு உங்களுக்கு வரும். சக்திவெளிப்பாடு வந்ததும், மேலும் தன்மை பொங்கும், மேலும் தன்மை பொங்கியதும் மேலும் சக்தி வெளிப்படும், மேலும் தன்மை பொங்கும், மேலும் சக்தி வெளிப்படும். இது இவ்வாறாக நிகழ்ந்து சிவFlowஹத்தன்மை மலர்ந்துவிடும்.

இது மலர்வதற்காக நான் உங்களுக்குத் தரப்போகின்ற முதல் உத்வேகம்தான் குண்டலினீ விழிப்பு. குண்டலினீ விழிப்பு நிகழ்வுக்காக தரப்படுகின்ற தீக்ஷைதான் சிவ தீக்ஷை.

Nithyananda

சிவ தீக்ஷையின் தாத்பரியம்

சமய தீக்ஷை என்பதன் தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.. சமயம் = ச + மயம். சமயம் என்பது ‘நான், எனது’ என்கின்ற அகங்காரம். ‘மயம்’-இதை இறைமயமாக மாற்றுவதுதான் சமயம். ‘நான், எனது’ என்ற வலி வேதனைகளின் அடிச்சுவடான மமகாரத்தை இறைவடிவமாக மாற்றுவது, அகத்தை சீவோஹமாக மாற்றுவது சமயம்.

மனிதனை இறைவனாக மாற்றும் அறிவியல் சமயம். மனிதனை இறைவனாக மாற்றும் மெய்ஞான விஞ்ஞானி.

ஆழ்ந்து கேளுங்கள்... அப்பா-மகன் உறவில்... அப்பா என்ன சொல்கிறார், ‘நீ ஏதாவது வியாபாரத்தைச் செய்து உன் திறமையை நிரூபி. என் சொத்து முழுவதையும் உனக்கு எழுதி வைக்கின்றேன். என் வியாபாரத்தை உன் கையில் தருகிறேன்.’

மகன் என்னசொல்கிறார், ‘நீ எதையாவது கொஞ்சமாவது கொடு. அதைவைத்து த்தான் என் வியாபாரத்தை நடத்தி என் திறமையை நிரூபிப்பேன்.

இது முடிவிற்கு வராமல் தொடரும்போது, குருவாக இருப்பவர் நடுவில் வந்து, ‘சரிப்பா,

‘உன் அப்பா கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.. முதல் காசோலையை நான் என்னுடையதிலிருந்து தருகிறேன். இதை வைத்து நிரூபி. நீநிரூபிக்கும்பொழுது உன் அப்பா தரத் துவங்குவார். அப்பொழுது இன்னும் மேலும் நிரூபிப்பாய். இதுபோன்று வளர்ந்து வளர்ந்து இறுதியில் மொத்தமும் உனக்கே வந்து சேரும்.’

இதில், நீங்கள்தான் மகன். சிவன்தான் அப்பா. அவர், ‘நீ நிரூபி’ என்கிறார்... நீங்களோ, ‘தந்தால் நிரூபிக்கிறேன்’ என்கிறீர்கள்.

உங்கள் இருவருக்கும் நடுவில் இருக்கும் குரு, ‘சரிப்பா, அவர் தரும்போது தரட்டும், முதலில் நான் தருகிறேன். இந்தச் சக்தியை வைத்து உன்னை நிரூபி. நீ பொறுப்பெடுத்து எழுந்து நில். அதன்பின், தானாகவே அவர் அனைத்தையும் தந்துவிடுவார்’ என்று உங்களுக்குச் சொல்லி, சாத்தியங்கள் அளித்து உத்வேகம் அளிப்பார்.

குருவே, உங்களுக்கு இந்த முதல் உத்வேகத்தைத் தருகிறார். உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளிக்க வந்தவரே குருநாதர்.