எனது அன்புக்கு உரியவர்களே...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எல்லோரும் என்னிடம் 'சுவாமிஜி, எது என்னை பந்தப்படுத்தி பிடித்து நிறுத்துகிறது? எது என்னை அடுத்து முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்துகிறது?' என்று தவறாமல் கேட்கிறார்கள்.
நான் ஒரே சொல்லில் அதற்கான பதிலை சொல்லவேண்டுமானால், அதுதான் 'கர்மா'. சமஸ்கிருத வார்த்தையான 'கர்மா' இன்று ஒரு நவீன பழக்கமான சொல்லாகவே ஆகிவிட்டது!
நன்கு புரிந்து கொள்ளுங்கள்... முழுமையடையாத கடந்த கால நினைவுகள் எல்லாம் உங்களுக்குள் ஒரு மனப்பாங்காக தொக்கி நிற்கும். அவை முழுமையடையும் வரை உங்களைவிட்டு நீங்காமல் உங்களுக்குள்ளேயே இருக்கும். அவ்வாறு உங்களுக்குள்ளேயே இருக்கும் அந்த மனப்பாங்குகள், உங்களை உங்களுடனே போராடச் செய்கின்ற வாழ்க்கை முறையாக மாறுகிறது. அதைதான் 'கர்மா' என அழைக்கிறேன்.
கர்மாவைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை... அந்தக் கர்மாவை நீங்கள் தான் உருவாக்கினீர்கள். நன்றாக புரிந்துகொள்ளுங்கள்- உங்களுடைய கடந்தகால செயல்களின் மொத்த விளைவுதான் இப்போதுள்ள நிகழ்காலம். உங்களுடைய சாத்தியக் கூறின் உச்சபட்சத்தை அறியாததற்கும், உங்கள் எதிர்காலத்தை திருத்தி எழுத முடியாததற்கும் கர்மாவே காரணம். உங்களை பிடித்து நிறுத்துவது - கர்மாதான்.
நற்செய்தி என்னவென்றால், எப்படிப்பட்ட கர்மாவையும் நிறைவு செய்து, முழுமையடையச் செய்யமுடியும். நீங்களே உங்கள் நிகழ்காலத்தை மாற்றி, ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்! சிறப்பான செய்தி என்னவென்றால், நிகழ்காலத்தை நீங்கள்தான் எழுதினீர்கள் என்பதால், எதிர்காலத்தையும் நீங்களே விருப்பப்படி எழுதிவிட முடியும்.
அதற்கு நீங்கள் செய்யவேண்டியது... உங்களைப் பார்த்து, ... 'கர்மா என்பது என்ன? யார் அதை எழுதியது? நான் ஏன் அதை எழுதினேன்? நான் எப்படி அதை எழுதினேன்? எப்பொழுது அதை எழுதினேன்?' என்று உங்களுக்கு நீங்களே கேட்பதுதான். எழும் பதிலை ஆழ்ந்து பகுத்தாய்வு செய்யுங்கள்.
நம்முடைய தியான முகாம்களில் கர்மங்களை கரைப்பதற்கான வழிமுறைகளையும், நுட்பங்களையும் கற்றுத் தருகிறேன்.
இன்னர் அவேக்கனிங் தியான முகாமில், அதற்கான விஞ்ஞானத்தை விரிவாக அளிக்கிறேன்.
நீங்கள் விரும்பும் நிஜத்தை ஈடேற்றும் அறிவியலை அனுபவமாக கற்பிக்கிறேன்.
அந்த ஆன்ம விஞ்ஞானத்தின் துணையோடு உங்கள் எதிர்காலத்தை நீங்களே திருத்தி எழுதுவீர்கள் ! அனுபவப்பூர்வமாக 21 நாட்களில் அதை உணர்வீர்கள்.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை ஏன் நீங்கள் அவ்வாறு எழுதினீர்கள் என்ற காரணத்தையும் அறிந்துக்கொள்வீர்கள். நீங்கள்தான் அதற்கு பொறுப்பு என்பதையும் புரிந்துகொள்வீர்கள். அதற்குபின்பு, எவ்வாறு திருத்தி எழுதுவது என்பதை எளிதாகத் தெரிந்து க்கொள்வீர்கள், அதில் நிபுணத்துவம் பெறுவீர்கள். இன்னர் அவேக்கனிங் (அகவிழிப்பு தியான முகாம்) என்பது உங்களையே உங்கள் சொந்த உள்ளுணர்வு தளத்தின் சக்தி நிலைக்கு விழிப்பிக்கச் செய்வதாகும்! அது உங்களுக்குள் உச்சமாக சாத்தியக்கூறுகளை விழிப்பிக்க செய்யும். அதற்காக வடிவமைக்கப்பட்ட 21 நாட்கள் நடைபெறும் தியான முகாம்- இன்னர் அவேக்கனிங். ஆனந்தமாக இருங்கள் !
- பரமஹம்ஸ நித்யானந்தர் நித்யானந்த தியானபீடத்தின் நிறுவனர்

நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்?