KAILASA Library/புண்ணிய க்ஷேத்ரங்களில்/காசி க்ஷேத்திரத்தின்Sign in
புண்ணிய க்ஷேத்ரங்களில்

காசி க்ஷேத்திரத்தின்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இரகசியங்கள்

காசி க்ஷேத்திரத்தின் கங்கை படித்துறை மற்றும் படகுகள்

காசி க்ஷேத்ரம் - அவிமுக்த க்ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது. அவிமுக்த க்ஷேத்ரம் என்பது ஈசனால் ஒருபோதும் கைவிடப்படாது காப்பாற்றப்படும் நகரம். அதாவது காசியில் வசிக்கும் மக்களும், காசி மாநகரமும் ஒருபோதும் அழிவிற்குள்ளாவதில்லை. மஹாதேவர் பிரகடணப்படுத்துகிறார்: ‘மொத்த உலகமே பிரளயத்தில் அழிந்தாலும், திரிசூலத்தின் முனைகளில் தூக்கி நிறுத்தி இந்த காசிக்ஷேத்ரத்தை காப்பேன்!’ இத்தகைய பாதுகாப்பு சம்ஸ்கிருதத்தில் ‘ஊர்த்துவம்நயா’ என்று அழைக்கப்படுகிறது.

காசி மிகவும் ரம்யமான நகரமாகும். வாரணாசியின் தெருக்கள் மிகப்பிரசித்தமானவை. அவை இரண்டரை அல்லது மூன்றரை அடிகள் உள்ள சிறு சந்துகளாக இருக்கின்றன. இந்நகரம் மாட்டுவண்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே உருவாக்கி நிர்மாணிக்கப்பட்டது.

‘ஏன் இவ்வளவு குறுகலான தெருக்கள்’ என்று நீங்கள் அதிசயக்கலாம்.

இதற்கான பதிலை காலபைரவர் பரமஹம்ஸருக்கு வெளிப்படுத்தினார். ‘ காசியின் தெருக்கள் - நம்முடைய நடைமுறை தெருக்கள் போன்றதல்ல. அங்கிருக்கும் சந்துகள் எல்லாம் கழிவு நீர்க்கால்வாய்கள்’. காசியில் தெருக்களே கிடையாது. ஏனென்றால் பறக்கத் தெரிந்தவர்கள், அந்த அரிய சித்தியடைந்தவர்கள் மட்டுமே காசியில் வசிக்க முடியும். பறப்பதனால், அவர்களுக்கு நடக்கும் அவசியம் ஏற்படவில்லை. தெருக்களும் தேவைப்படவில்லை.

அந்த காலத்தில் பறப்பதற்கு மூன்று வழிகள் இருந்தன. அவை - மணி, மந்திரம், ஔஷதம்.

A view of the ghats in Varanasi

மணி: சொந்த உபயோகத்துக்கான சிறிய ரக பறக்கும் விமானங்கள் முதற்கொண்டு பெரிய ரக புஷ்பக விமானங்கள் வரை தயாரிக்கும் நுட்பங்களுக்கு பெயர் மணி.

மந்திரம் : பிராணாயாம விஞ்ஞானத்தை கற்றுத்தேறி, மூச்சுக்காற்றை ஒரே சீராக சமநிலைப்படுத்தி, நிறைய அளவில் சமான சக்தி கிரஹிக்கப்பட்டு, உடலை மேலெழுப்பி நகர்வதாகும்.

ஔஷதம்: இவைகள் எல்லாம் சில அரிய வகை மூலிகைகள். இந்த இலைகளை நாவிற்கு அடியில் வைத்துக்கொள்ளும்போது உடலுக்குள் பிராணசக்தி வியாபித்து உடலை எடையற்றதாக்கும். இவ்வாறு செய்து, உடலை இயக்கி, மேலே கிளம்பி நினைத்த இடத்திற்கு விரைய முடியும்.

நம்முடைய வைதீக பாரம்பரியத்தில் மணி என்னும் தொழில் நுட்பம் வைமாணிக சாத்திரத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மட்டுமே பறக்கும் தனி நபர் விமானத்திலிருந்து 5000 மக்கள் பறக்கும்படியான பிரம்மாண்ட விமானம் வரை பறக்கும்படியான விமானங்களை உருவாக்குதல் பற்றிய தொழில் நுட்பத்தை வைமாணிக சாஸ்திரம் விளக்குகிறது.

காலபைரவர், 'மக்களுள் எவருக்கு பறக்கத் தெரியுமோ, அவர்கள் மட்டுமே காசியில் வசித்தார்கள்' என்று பரமஹம்சருக்கு வெளிப்படுத்தினார். இதன்மூலம் உடலை இலேசாக்கி காற்றில் மிதக்க தெரிந்தவர்கள் காசி நகரம் முழுவதுமே இருந்தார்கள் என்பது தெளிவாகிறது.

பரமஹம்ஸர் ஆழ்ந்த சமாதியில், ஓய்வில் இருக்கும் பொழுது,' இது எப்படி சாத்தியம். நகரின் மொத்த மக்களுமே இந்த விஞ்ஞானத்தில் தேர்ந்தவர்களாக இருக்க முடியுமா. இருந்தாலும் இது மிக அதிகம்தான்' என்று சிந்தித்தவாறு இருந்தபொழுதுது இந்த விடை கிடைத்தது. 'காற்றோடு, உடலுக்குள் பாயும் சக்தியோடு அத்வைதத்தை உணரும்பொழுது (எல்லாப் பொருட்களுமே உங்களின் நீட்டிக்கப்பட்ட பாகம்தான்), நீங்கள் உங்களின் உடல் எடையை கனமாக்கவோ, இலேசாக்கவோ முடியும்.

தங்க நகரம்-காசி : காசி மாநகரம்-இன்றையகால வாரணாசி நகரத்தை மஹாதேவர் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே நிர்மாணித்தார். ஒரு காலத்தில் பூதகணங்களும், பிரேதங்களும் மஹாதேவரிடம் வேண்டுகோள் வைத்தனர். பூமி கிரகத்தில் ஒரு சமூகத்தை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் தனது சீடர்கள், ஆதரவாளர்கள், பூத-பிரேத கணங்களோடு பூமிக்கு வந்து இந்த காசி நகரை அமைத்தார். அதன் பிற்காலத்தில்தான் கங்கை நதி கூட தனது நீரோட்டத்தை துவக்கியது. எனவே காசி நகர் கங்கை நதிக்குக் கூட முந்தையதாகும். தற்கால காசி ஏழு அடுக்கு நகரங்களை தன்னுள்ளே ( பூமிக்கு அடியில்) கொண்டுள்ளது. இந்நகரம் அமைக்கப்பட்டது, மூழ்கடிக்கப்பட்டது. மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதுபோன்ற ஏழு தடவை மீண்டும்,மீண்டும் அமைக்கப்பட்டு, மூழ்கடிக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது. இப்போது நீங்கள் ஆழமாக தோண்டினாலும் இந்த ஏழு அடுக்குகளையும் காண முடியும். அத்வைத தத்துவத்தின் மொத்த அனுபவமாக இந்நகரம் திகழ்கிறது. ஆம், இலட்சக்கணக்கான ஞானிகளின் மொத்த அத்வைத் அனுபவமாக இருக்கிறது. இந்த நகரம் இதற்காகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்நகரம் ‘ஸ்வர்ணபூமி’ என்றழைக்கப்படுகிறது.

Ghat and boats at night in Varanasi