புண்ணிய க்ஷேத்ரங்களில்
காசி - கட்டுக்கடங்காத பக்தியால் கட்டப்பட்டது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஈசனால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. காசியை இயக்கும் சக்திக்கு 'காசி தேவி' என்று பெயர். 'காசி தேவி' - சுதந்திரமான, புத்திசாலித்தனமான இயல்பினள். ஈசன் காசி தேவியை படைத்தபிறகு, காசிதேவி ஈசனிடம் ஒரு வரம் கேட்டாள். 'இந்த நகருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் முக்தி அடைய வேண்டும் என ஆசீர்வதியுங்கள்' என்று. மஹாதேவர் மூன்று வரங்களை கொடுத்தார்.
முதலாவது வரம்: இந்த நகருக்குள் வந்து, புனிதமான கங்கை நதியில் நீராடும் பக்தர்கள் தங்களுடைய பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்.
இரண்டாவது வரம்: காசியில் உடலை விடும் மனிதர்கள் முக்தி அடைவார்கள்.
