KAILASA Library/மனதைத் திற/முன்னுரைSign in
மனதைத் திற

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

யுகங்களைக் கடந்த ஜீவன் நீங்கள்

நாட்கள் லட்சக்கணக்கில் இங்கு ஓடியிருக்கும். ‘அங்கு!’ சில நொடிகள் மட்டுமே ஓடியிருக்கும்.

சில நொடிகள் வேதனை, இங்கு ‘ஒரு யுகமாய்த்’ தெரியும் ‘அங்கு!’ ஒரு யுகமே சில நொடிகளுக்குள் கரைந்திருக்கும்.

‘எத்தனை முறைகள் பிறந்து பிறந்து அவதிப்படுவேன்’ என இங்குக் கேட்பீர்கள்.

‘எத்தனை முறைகள் இந்தப் பிரபஞ்சம் பிறந்து பிறந்து இறந்திருக்கிறது’ என்றுகூட அங்குக் கவலைப்பட மாட்டீர்கள்.

இங்கு ‘நீங்கள்’, ‘நான்’, ‘நாம்’, ‘அவர்கள்’, ‘அவர்’, ‘அது’ என்ற எல்லா வேறுபாடுகளும் இருக்கும்.

‘அங்கு!’ எல்லாமே ஒன்றாகிப்போயிருக்கும்.

அந்த ஒன்றுக்குள் நீங்களும் இருப்பீர்கள், நானும் இருப்பேன், எல்லாமே இருக்கும். அங்கு! அங்கு! என்கிறீர்களே... எங்கிருக்கிறது அந்த ‘அங்கு?’ அங்கு என்பதுதான் சொர்க்கமா? அங்கு என்பதுதான் கடவுளா?" என்று நீங்கள் எப்படி கேட்டாலும், உங்களுக்கு என்னுடைய பணிவான பதில்... நீங்கள் நினைத்தபடியெல்லாம் பதில் சொல்லி, "உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை," என்பதுதான்.

நீங்கள் 'தயார்' என்று சொன்னால், உங்களின் இந்த உடலிலேயே ஒருமுறையாவது உங்களால் அங்கு சென்று விட முடியும். 'அங்கு?' சென்ற பின்புதான் தெரியும், "ஆஹா! இதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது போலிருக்கிறதே!" அப்புறம் அந்த விரிக்கமுடியாததைப்பற்றி விளக்க முயற்சிக்கும்போது, அதை விளக்குவதற்காக சொல்லப்படும் வார்த்தைகள்தான் 'ஜீவன் முக்தி' 'பரமசுகதம்' 'பிரம்மானந்தம்' 'நித்யானந்தம்' 'சிவம்' 'தாவோ' 'ஜென்' என்ற எல்லாமே.

வார்த்தைகளை கடந்த அந்த நிலையை அடைவதற்கு தியானமும், தியான சூத்திரங்களும் நேரடியாய் உதவும். அப்படிப்பட்ட தியான சூத்திரங்களின் தொகுப்பே இப்புத்தகம்.

கூட்டுக்குள் இருக்கும் பட்டுப்புழுவிற்கு, நாட்டுக்குள் இருக்கும் ஆச்சரியங்க ளா, காட்டுக்குள் இருக்கும் அதிசயங்களோ தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை.

அப்படித் தெரிந்தாலும் புரிய வாய்ப்பில்லை.

அதேபோல் மனத்துக்குள்ளேயே சிக்கியிருக்கும் மனித குழுவிற்கு, அவரவரின் மனித கூட்டுக்குள் இருக்கும் ஆச்சரியங்களோ, அவரவரின் ஆன்ம காட்டுக்குள் இருக்கும் அதிசயங்களோ தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை.

தப்பித் தவறி சில நேரங்களில் தெரிந்தாலும், அது புரிய வாய்ப்பேயில்லை.

காரணம், அது தனிமனித அனுபவத்தால் மட்டுமே உணரப்படக் கூடியது.

பட்டுபுழு, பட்டுப்பூச்சியாக பிறந்தால் போதுமானது.

அதேபோல்...

மனிதக் குழு, ஜீவன் முக்தர்களாக மலர்ந்தால் போதுமானது.

இது நடந்தால்...

என் பணியும் முடிந்துவிடும், உங்களின் பிணியும் ஓடிவிடும்.

ஜீவன் முக்தராக பிறந்த வினாடியே... ‘லட்சக்கணக்கான நாட்களின் வேதனைகள்’ தந்திரமிக்க சில நொடிகள்ாவதும், ‘ஆனந்தமயமான ஒரு நொடியே யுகம் யுகமாய் பெருகுவதும்’ அனுபவமாகும், மகிழ்ச்சி பொங்கும். ‘யுகங்களைக் கடந்த ஜீவன் நீங்கள்’ என்பது புரிய வரும்.

மனத்தைத் திறக்க, மகிழ்ச்சியைப் பொங்க வைக்க, மனக்கூட்டை உடைத்தால் போதும்.

‘‘புத்தகத்தின் மூலமாக இதெல்லாம் சாத்தியமேயில்லை,’’ என்பார்கள் சிலர். இருந்தாலும் அதையும் மீறி அதைச் சாத்தியமாக்கும் முயற்சியே மனத்தைத் திற... மகிழ்ச்சி பொங்கட்டும்.

முள்ளுக்கு, முள்வாங்கித் தீர்வு. மனத்தை வதைக்கும் வார்த்தைகளுக்கு, தியான வார்த்தைகள் தீர்வு.

இதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும், உங்களின் ஒவ்வொரு செல்லுக்கும் தொடர்புண்டு.

முழுத்தயார் நிலையோடு பக்கத்தைத் திருப்புங்கள். மனத்தைத் திறக்கும் மகிழ்ச்சி சூத்திரங்கள் உங்கள் செல்லுக்குள் பாயக்காத்திருக்கின்றன.

மனத்தைத் திறந்து வையுங்கள்.

மகிழ்ச்சி தன்னால் பொங்க ஆரம்பித்துவிடும்.

ஆனந்தமாக இருங்கள் பரமஹம்ஸ நித்யானந்தர்