சுற்றுப்புறச் சூழலின்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பிரதிபலிப்பே நமது
தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் செருகப்பட்ட எலக்ட்ரோடுகளோடு, ஒரு கும்பல் பென்சல்வேனியா பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தது.
அந்தக் கும்பலை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மருத்துவக்குழு, அடுத்து அந்த கும்பலை, அவசர அவசரமாக பஸ்ஸில் ஏற்றி, அருகேயிருந்த செயற்கைப் பூங்காவிற்கு இட்டுச் சென்றது.
மருத்துவக்குழு அந்தக் கும்பலிடம்,“நீங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தால் போதும். இயற்கைச் சூழலும், செயற்கைச் சூழலும் மனிதருக்குள் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது? என்பதை ஆராய்வதற்கே உங்களை அழைத்திருந்தோம்,” என்று கூறி வேறுபல இடங்களுக்கு அழைத்துச் சென்றது.
நம் கண்ணில்படும்
காட்சிகள் நம்மையும் மீறி,
நம்முள் செயல்படுகின்றன.
மூளையின் அலைகளையே
மாற்றுகின்றன. நம் இரத்த
ஓட்ட மண்டலத்தில்,
இரசாயனங்களைப்
பொழியச் செய்கின்றன.
இயற்கைக் காட்சிகள் நிறைந்த பல சூழல்களிலும், மிக அழகான பல செயற்கைப் பூங்கா மற்றும் கேளிக்கை இடங்களிலும், அவர்களைப் பார்க்க வைத்து மருத்துவக்குழு பரிசோதித்துப் பார்த்தது. வெளிக்காட்சிகள், மூளையின் அலைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பட்டியலிட்டது.
ஆராய்ச்சியின் முடிவு ஆச்சரியம் நிறைந்தது. இயற்கைச் சூழல்களைப் பார்க்கும்போது மூளை அலைகள் படிப்படியாக அமைதி நிலைநோக்கி நகர்ந்தது.
எவ்வளவு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தாலும் சரி, செயற்கைச் சூழல்கள், இயற்கைச் சூழல்கள் அளவுக்கு அமைதியைத் தரவில்லை என்று மூளையின் அலைகள் படம் பிடித்துக் காட்டின.
நம்முடைய சூழ்நிலைகள், நம்மை எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது.
நம் கண்ணில்படும் காட்சிகள் , நம்மையும் மீறி நம்முள் செயல்படுகின்றன. மூளையின் அலைகளையே மாற்றுகின்றன. நம் இரத்த ஓட்ட மண்டலத்தில், இரசாயனங்களைப் பொழியச் செய்கின்றன.
நாமிருக்கும் இடம் சுத்தபத்தமாக இருப்பதும், சுத்தமில்லாது அழுக்குப் படிந்திருப்பதும் இதேபோன்ற மாற்றங்கள் இரத்த ஓட்ட மண்டலத்தில் ஏற்படுத்தும், உடலைப் பாதிப்பிற்குள்ளாகும்.
சுத்தபத்தமாக இல்லாதிருப்பது, நாம் சுய ஆரோக்கியத்தோடு இல்லை என்பதற்கான அடையாளங்கள்.
நாமிருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்திராவிட்டால், தெரிந்து கொள்ளுங்கள், நம்மைப் பார்க்க வருபவர்களின் உடலுக்குள், தேவையில்லாத இரசாயனங்களை நாம் சுரக்கச் செய்கிறோம்.
நாம் முகத்தைச் சுத்தமாக வைத்திராமல், உடல் துர்நாற்றம், உடையில் அழுக்குகள் ஆகியன நீங்கி, நாம் சுத்தபத்தமாக இல்லாவிட்டால் - தெரிந்து கொள்ளுங்கள், நம்மைப் பார்க்கும் அனைவரின் உடலுக்குள்ளும், அந்த நிமிடத்தில்

நாமிருக்கும் இடம் சுத்தபத்தமாக இருப்பதும், சுத்தமில்லாது அழுக்குப் படிந்திருப்பதும் அதே போன்ற மாற்றங்களை இரத்த ஓட்ட மண்டலத்தில் ஏற்படுத்தும், உடலைப் தேவையில்லாத இரசாயனங்கள் சுரக்க நாம் காரணமாக இருக்கி றோம்.
சுய ஆரோக்கியக் குறைவின் வெளிப்பாடே சுத்தமின்மை.
நமது சுத்தமின்மையால், நம்மை அசிங்கமாக்கிக் காண்பிப்பது கிட்டத்தட்ட ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதப்பட வேண்டியது. காரண காரணமேயில்லாமல், நம்மைப் பார்த்துவிட்ட ஒரே ஒரு காரணத்திற்காக, மற்றவர்களின் உடலுக்குள் ஆரோக்கியமற்ற இரசாயனங்கள் சுரக்க நாம் காரணமாயிருக்கிறோம்.
மற்றவர்களுக்குள் இதுபோன்ற அத்துமீறி மாற்றங்களை உண்டு பண்ணுவது மகா தவறு.
அமெரிக்காவில், உங்களின் பார்க்கும் விதம் மாறினால்கூட, சட்டப்படி தண்டனை உண்டு. என்ன! ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம்... ஒரு பெண், ஓர் ஆணைச் சுட்டிக்காட்டி, "இவர் என்னுள் தகாத உணர்வு மாற்றங்கள் ஏற்படும் விதத்தில் என்னைப் பார்த்தார்," என்று சொன்னால், அது சட்டப்படி ஆராயப்படும்.
பார்வையின் போக்கால் மாற்றம் ஏற்படுத்தியதற்காக,சட்டப்படி தண்டனை பல நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும். மற்றவர்களுக்குள் தேவையில்லாத இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவது ஒரு சமுதாயக் குற்றம்.
நாமிருக்கும் இடத்தையும், நம்மையும் சுத்தபத்தமாக வைத்துக்கொள்ளாவிட் டால், நம்மை நெருங்குபவர்களையெல்லாம் நாம் பாதிப்புக்குள்ளாக்குவோம்.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது
சாதாரண பழமொழியல்ல. நம் மூதாதையரின்
அன்றைய மனோதத்துவ முதிர்ச்சியை இன்று
நமக்கு விளக்கும் மகா மொழிகள்.
வெளிச் சுத்தமின்மை, உள் சுகமின்மையின் வெளிப்பாடு.
நம்மைப்பார்க்க வருபவர்களுக்கும், நம்மோடு பழகுபவர்களுக்கும் நல்ல
> வெளிச் சுத்தமின்மை,
> உள் சுகமின்மையின்
> வெளிப்பாடு.
உணர்வுகளைப் பரிசாக வழங்க வேண்டும். நம்மோடு நமக்கு நெருங்கியவர்கள் இருக்கும்போது, அவர்களுக்குள் இரம்யமான இரசாயன மாற்றங்கள் மட்டுமே உருவாக வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி சுத்தபத்தமாக இருக்க முயற்சிப்பது, ஆரோக்கியமடைவதற்கான ஒரு டெக்னிக்.
உள் சுகமின்மையால்தான், வெளிச்சுத்தமின்மை நம்மைத் தொற்றிக்கொள்கிறது. வெளியே சுத்தத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், உள்ளுக்குள், சுகத்தன்மை உருவாக ஆரம்பிக்கும். நல்ல ரசாயன மாற்றங்கள் நம்முள் ஏற்பட ஆரம்பிக்கும்.
ஆயிரம் ரூபாய்க்கு உடையணிய வேண்டியதில்லை. இருக்கும் உடைகளை சுத்தபத்தமாக பயன்படுத்தினாலே போதும்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஒரு நாளின் பல மணிநேரங்களில் பரவச நிலையிலேயேதான் மூழ்கியிருப்பார். அந்த நேரங்களில், உடல் எங்கேயிருக்கிறது என்பது கூட, அவரை போன்ற மகான்களுக்குத் தெரியாது.
இராமகிருஷ்ணரே, "நான் உடல் உணர்வுக்குத் திரும்புவதே எப்போதாவதுதான். ஆனால், அந்த நேரங்களில்கூட என் உடைகளை சுத்தப்படுத்தி ஒழுங்காக உடுத்த நான் தவறுவதேயில்லை," என்று தம் சீடர்களுக்குக் சொல்வார்.
உடையிலும் உடலிலும், முதலில் கவனம் தேவை.
அழகாக இருந்தாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனால், கட்டாயமாக அசுத்தம், ஒழுங்கின்மை நம்மிடமோ, நாமிருக்கும் இடத்திலோ இருக்கக் கூடாது - சிறிதளவு கூட!

> உள் சுகமின்மையால்தான், வெளிச்சு
> த்தமின்மை நம்மைத் தொற்றிக்கொள்கிறது.
> வெளியே சுத்தத்தைக் கடைப்பிடிக்க
> ஆரம்பித்தால், உள்ளுக்குள், சுகத்தன்மை
> உருவாக ஆரம்பிக்கும்.
மற்றவர்களுக்கும், நம் உடலுக்கும் நல்ல இரசாயன மாற்றங்களையே பரிசாக அளியுங்கள். சுத்தபத்தத்தைக் கடைப்பிடியுங்கள் (சிறிதளவுகூட அசுத்தமோ, ஒழுங்கின்மையோ வெளிப்படுத்துவதுகூட சமுதாயக் குற்றமாகக் கருதப்பட வேண்டிய ஒன்றுதான்!)
“எனக்குத் தெரியாததா இது,” என்று விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சுத்தபத்தத்தை ஒரு டெக்னிக்காகக் கடைப்பிடியுங்கள் சுகத்தன்மையைப் பெறுங்கள். மற்றவரும் நாமும் நலம் பெற வழிசெய்வோம்.