KAILASA Library/மனதைத் திற/உலகமே உங்களைக்Sign in
மனதைத் திற

உலகமே உங்களைக்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ரோஹித் ஒரு பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனமொன்றில் பொறியாளராகப் பணியாற்றுபவர். மீகுக தியானமுகாமில் அவர் கலந்து கொண்டார். மீகுக தியான முகாமின் தொடக்க நாளன்று, அறிமுக உரையில், எப்போதும்போல், "நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்," என்று சொன்னோம்.

கிட்டத்தட்ட எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். சில வயதானவர்கள் அமர்ந்து தங்களுக்குள் பேசி க் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த இளைஞர் மட்டும் தனியே நின்று கொண்டிருந்தார். மற்றவர் வந்து அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டாலும், அவர்களோடு இவர் தன்னைத் தொடர்பு படுத்திக்கவே இல்லை.

தியான முகாமின் இரண்டாம் நாள் "உங்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் இருக்கிறதோ, அதை எழுதி இப்பெட்டியில் போடுங்கள். உங்கள் கேள்விகளுக்குத் தெரிந்தவரை பதிலளிக்கிறோம்," என்று சொன்னோம்.

உங்களுக்கு என்னென்ன
சந்தேகங்கள் இருக்கிறதோ,
அதை எழுதி இப்பெட்டியில்
போடுங்கள். உங்கள்
கேள்விகளுக்குத் தெரிந்தவரை
பதிலளிக்கிறோம்.

அடுத்த வகுப்பு இடைவேளையில் பல கடிதங்கள் இருந்தன. அதில் ஒரு கேள்வி, "என்னால் யாருடனும் உறவாட முடியவில்லை. அதற்கேற்றார்போல் என்னுடைய வேலையும் எப்போதும் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.

கம்ப்யூட்டர் ஜீனியஸாக இருக்கிறேன். ஆனால், வெளியுலகத்தைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒரு உருளைக்கிழங்கு போன்று இருக்கிறேன். எனக்குத் தயவு செய்து உதவுங்கள்.

  • இப்படிக்கு ரோஹித்,’’ என்று எழுதியிருந்தார்.

அந்த நபர் யார் என்று தெரிந்து கொள்ள, ‘ரோஹித்’ எனும் பெயரை வாசித்தோம்.

அறிமுக உரையன்று யாருடனும் பேசாமல் தனியாகவே இருந்த இளைஞர், தயங்கித் தயங்கி எழுந்து நின்றார்.

அப்போது அவரிடம் சொன்னோம், ‘‘அப்பா, இது உன்னுடைய பிரச்சினை மட்டுமல்ல. இது இங்குள்ள பலருக்கு இருக்கும் பிரச்சினை இது,’’ என்று சொன்னோம்.

அந்த இளைஞரின் முகம் மலர்ந்தது. ‘‘நீங்கள் மற்றவர்களுடன் பழக முயற்சி செய்வது போல், முதலில் உங்கள் வேலையோடு அழகாகத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலை என்ன? மென்பொருள் உருவாக்கம் செய்வது இல்லையா...

வேலைக்காக எப்போதும் கம்ப்யூட்டர் முன்பே அமர்ந்திருப்பீர்கள்தானே!

கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருக்கும்பொழுது, மிக அழகாக அந்த கம்ப்யூட்டருடனேயே பழகலாமே. நீங்கள் கம்ப்யூட்டரை பார்ப்பதைப் போல் உங்களையும் கம்ப்யூட்டர் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது.

உண்மையில், இது மிகப் பெரிய தியானம்.

portrait of a smiling woman

நீங்கள் மற்றவர்களுடன் பழக முயற்சி
செய்வது போல், உங்கள் வேலையோடு,
அழகாகத் தொடர்பு கொள்ள முயற்சி
செய்யுங்கள். உண்மையில், இது மிகப்
பெரிய தியானம்.

உங்களுக்குப் பிடித்தவருடன் அமர்ந்திருக்கும்போது எப்படி உணர்வீர்கள்?

உங்கள் உடலுக்குள் ஓர் உற்சாகமான அதிர்வாற்றலை உணர்வீர்கள் இல்லையா? உங்களின் உற்சாகம் மற்றவரையும் குதூகலமாக்குகிறது.

அதேபோல்தான் ஒவ்வொரு நிகழ்வும்...

நீங்கள் செலுத்தும் அன்பு, மற்றவர்களுக்குச் சேர்வது போல், மற்றவர்களின் அன்பும் உங்களை வந்தடைகிறது. இது ஒரு சக்தி சுழற்சி.

குழந்தைகளைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் எப்போதும் குதூகலமாகவே இருப்பார்கள். தங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளுடனும் தொடர்பு கொள்வார்கள். மிகவும் இயல்பாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் கையில் எப்போதும் ஒரு பொம்மையை வைத்துக் கொள்வார்கள். அதை மட்டும் யாராவது வாங்க முயற்சித்தால் என்ன செய்கிறார்கள்?

கதறி அழுது, அடம்பிடிப்பார்கள்.

அதற்குக் காரணம், அவ்வளவு முழுமையாக அந்தப் பொம்மையுடன் ஒன்றி இருப்பதுதான். குழந்தைகள் அவர்களுடைய பொம்மைக்குச் சோறு ஊட்டுவார்கள், புதுப்புது உடைகள் போட்டுவிடுவார்கள். பேசுவார்கள். அந்தப் பொம்மையுடன் பேசும்பொழுது, அந்தப் பொம்மையும் பதில் சொல்வதாகச் சொல்லுவார்கள்.

ஆனால், நாம் என்ன செய்வோம், "குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்கள்?" என்று அவர்களின் குதூகலத்திற்கான காரணத்தைக் கண்டுகொள்ள மாட்டோம். நம்முடைய சொந்த துக்கத்திலேயே மூழ்கி இருப்போம்.

அது ஒரு குழந்தை செய்யும் ஒரு
சாதாரண செயல் என்ற அளவில்தான்
பார்ப்போம். குழந்தையாயிருக்கும்பொழுது,
நாமும்தானே குதூகலமாய் இருந்தோம். ஏன்
இப்பொழுது மட்டும் இப்படி இருக்கவேண்டும்

காதலிக்கும்போது, மணிக்
கணக்கில்
ஒருவருக்கொருவர்
கண்களை உற்றுப் பார்த்துக்
கொள்ளும் காதலர்கள்,
திருமணத்திற்குப் பிறகு,
ஒருவருக்கொருவர்
முகத்தைக்கூடப் பார்த்துக்

என்று யோசனை செய்வதே இல்லை.

நம்முடைய உறவுகளைப் பார்த்தோமென்றால், எப்படியேனும் விரிசல் இருந்துகொண்டே இருக்கிறது.

காதலிக்கும்போது, மணிக்கணக்கில் ஒருவருக்கொருவர் கண்களை உற்றுப் பார்த்துக் கொள்ளும் காதலர்கள், திருமணத்திற்குப்பிறகு, ஒருவருக்கொருவர் முகத்தைக்கூடப் பார்த்துக் கொள்வதில்லை.

ஆனால் ஒரு குழந்தை, ஒரு சாதாரண பொம்மை கிடைத்தாலும், அதனுடன் முழுமையாக பேசுகிறது. என் பொம்மை, எனக்குப் பதில் சொல்லவில்லை. என்னைக் கண்டுகொள்வதில்லை,” என்று புகார் செய்வதில்லை.

தன் அன்பை முழுமையாக பொம்மைக்குச் செலுத்தும் குழந்தை, அதேபோன்று, அந்தப் பொம்மையிடமிருந்து, அதே அன்பைப் பெற்றுக் கொள்வதை உணர்கிறது.

இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

உங்கள் அன்புக்குரியவர் கண்களை நீங்கள் பாசத்தோடு நோக்கும்போது, அந்த அன்பை அவர்கள் ஏற்றுக்கொள்வதனால்தானே மீண்டும் மீண்டும் அவருடைய கண்களைப் பார்க்கின்றீர்கள். அதனால்தான் அவர்கள் அன்பை வெளிப்படுத்தும்பொழுது, அவர்கள் அன்பை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.

உங்களுக்குக் அன்புக்குரியவர் என்றால், குழந்தைக்கு ஒரு பொம்மை. மற்றவர்களுக்கு அது மலராக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம், தாயாக இருக்கலாம் . இப்படி யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்கள் மற்றவரோடு அன்போடு தொடர்பு கொள்ளும்போதுதான்,

Nithyananda

நீங்கள் செலுத்தும் அன்பு
மற்றவர்களுக்குச் சேர்வது போல்,
மற்றவர்களின் அன்பும் உங்களை
வந்தடைகிறது. இது ஒரு சக்தி,”ழற்சி.

உங்களுடைய சக்தி, ஒரு முழுமையான வட்டமாக மீண்டும் உங்களுக்கே திரும்ப வருகிறது.

நீங்களும் அன்பைப் பொழிந்து, மற்றவர் செலுத்தும் அன்பையும் பெறுகிறீர்கள்.

இது முழுமையாக நடப்பதால்தான், குழந்தைகள் சோர்வடைவதில்லை. ஆனால், நாம் சோர்வடைகிறோம். காரணம், நாம் இந்தக் கலையை மறந்து விட்டோம்.

இந்தக் கலையை மீண்டும் வளர்த்துக் கொண்டால், குழந்தைகள் போல் ச கஜமாக விளையாடுவீர்கள்.

மனிதர்களிடம் மட்டும்தான் தொடர்பு கொள்ள முடியும் என்றில்லை. உங்களைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு பொருளிலும் சக்தியிருக்கிறது. அது கல்லாக இருக்கட்டும், மரமாக இருக்கட்டும். உங்களைப் போல் அதுவும் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அதைப் புரிந்து க்கொள்வதில்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை. நம்மால் உணர முடிவதில்லை.

இந்தத் தியானத்தை செய்து வாருங்கள். "நீங்கள் எப்போதும் குதூகலத்துடன் இருப்பீர்கள் ஙிஉடிணூட்ணீணிணீடு ணினூ டூணிதிநு அன்பின் சுழலாக மாறுவீர்கள்," என்று அவருக்குப் பதிலளித்தோம்.

நீங்கள் மற்றவரோடு
அன்போடு தொடர்பு
கொள்ளும்போதுதான்,
உங்களுடைய சக்தி ஒரு
முழுமையான வட்டமாக
மீண்டும் உங்களுக்கே திரும்ப
வருகிறது.
நீங்களும் அன்பைப்

விளக்கப்படம்

கண்ணாடி முன் நின்று முகம் பார்க்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

கண்ணாடி முன் நின்று உங்கள் முகம் கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.

இப்போது, அதை அப்படியே மாற்றிச் செய்யுங்கள்.

மிக மிக சுலபமானது. இரசித்து இரசித்து உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து உங்களுக்கு நீங்களே அன்பைப் பொழியும் நீங்கள், கண்ணாடியில் இருக்கும் முகமும், உங்களை அதே அன்போடு காண்பதைச் சாட்சியாகப் பாருங்கள்.

எப்படிக் கண்களை விரித்து உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். உங்களுக்குள் அதே அன்பு பொழியப்படுவதை உணர்வீர்கள்.

சில நாட்களுக்கு இந்தத் தியானத்தை செய்து வாருங்கள். கண்ணாடி முன் மட்டும் அல்ல, எந்தப் பொருள் முன் நின்றாலும், நீங்கள் அன்பால் நிறைக்கப்படுவதை உணர்வீர்கள்.

நீங்கள் அன்பை வீசும் தென்றல் காற்றாக மாறுவீர்கள்.

ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பீர்கள்.

நீங்கள் ஆனந்தமாய் இருப்பதோடு, மற்றவர்களையும் ஆனந்தமாய் வைத்திருப்பீர்கள்.