KAILASA Library/மனதைத் திற/காதல் புதிரா? புனிதமா?Sign in
மனதைத் திற

காதல் புதிரா? புனிதமா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ காதலர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

காதலில் விழக்கூடாது. காதலில் எழவேண்டும்!

❖ எழுவதா?

காதல், அலைபாயும் மனதிற்கு வடிகால் அல்ல; காதல், உங்களிலிருந்து எழும் தெய்வீக ஊற்றாக இருக்க வேண்டும்.

❖ தெய்வீகம் என்றால்...?

ஆம். அது தெய்வீகத் தன்மையை உங்களுக்குள் பாய்ச்சும் தொப்புள்கொடி. உண்மைக் காதல் நிகழும் நேரங்கள், நீங்கள் தெய்வத்தின் குழந்தை என உணரச் செய்யும் கணங்கள்!

> காதலில்
> விழக்கூடாது.
>
> காதலில்
> எழவேண்டும்!

❖ உண்மைக் காதலை உறுதிசெய்வது எப்படி?

காதல் உங்களைக் கனிய வைக்கின்றதா?
உங்களின் மனத்தைச் சாந்தமாக்குகின்றதா?
உடலை லேசாக்குகின்றதா? உயிரை, உற்சாகம்
குறையாமல் துள்ள வைக்கின்றதா? சுருக்கமாக,
நிம்மதி உங்களுக்குள் பெருகிகொண்டே
இருக்கின்றதா?

ஆம் என்றால், அதை உறுதி செய்துகொள்ளுங்கள், அது உண்மைக் காதலே!

❖ யார் காதல் புனிதமானது?

தேவதாசனின் காதல்.

❖ யார் அது?

"காதலில் விழுந்தவர் தேவதாஸ்! காதலால் எழுந்தவர் தேவதாசன்."

❖ தேவதாசன் என்றால்... .?

அன்பென்னும் தெய்வத்தின் இன்னொரு செல்லப் பெயர் காதல். அதில் எழுவதே அதற்கு செய்யும் வழிபாடு. எனவே, அவர் தேவதாசன்.

காமம், காதல், அன்பு பற்றி...
காமம் : இனக்கவர்ச்சி.
காதல் : குணக்கவர்ச்சி.
அன்பு : கவர்ச்சியற்ற கருணை.
உண்மைக்காதல் கருணை தாண்டிய பிணைப்பு.

❖ சரியான காதலியைத் தேர்வு செய்வது எப்படி?

உங்களின் உள்ளிருக்கும் பெண்ணைப் போன்றே இருக்கும் ஒரு பெண்ணைக் கண்டுபிடியுங்கள்.

portrait of a man with turban

காமம் : இனக்கவர்ச்சி.

காதல் : குணக்கவர்ச்சி.

அன்பு : கவர்ச்சியற்ற கருணை.

உண்மைக்காதல் கருணை தாண்டிய

❖ அதென்ன உள்ளிருக்கும் பெண்?

இன்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை அது. ஓர் ஆணுக்குள் 49 சதவீதம் பெண் தன்மையும், ஒரு பெண்ணுக்குள் 49 சதவீதம் ஆண் தன்மையும் இருக்கிறது.

❖ உள்ளிருக்கும் பெண்ணை எப்படி இனங்காணுவது?

அதற்கு நுண்ணுணர்வு மிக வேண்டும்.

❖ நுண்ணுணர்வு என்றால்... .?

உங்களினுள்ளே நிகழும் மாற்றங்களைத் துல்லியமாகக் கவனித்தறியும் அதி உணர்வு நிலை.

❖ நுண்ணுணர்வை அதிகரிக்க என்ன வழி?

நிச்சயம் தியானம்தான். அதற்கு அதைவிட எளிய வழி இல்லை.

❖ தியானத்திற்கும், காதலுக்கும் என்ன சம்மந்தம்?

காதல் காலம்கூட ஒரு தியான காலமே.

❖ எது காதல் காலம்?

நீங்கள் எதை அன்போடு தொட்டாலும், யாரை நீங்கள் நேசித்தாலும்... அப்போது அங்கே விழிப்புணர்வோடு இருந்தால், அது காதல் காலம். நல்ல தியான காலம்.

நீங்கள் எதை அன்போடு
தொட்டாலும், யாரை நீங்கள்
நேசித்தாலும்... அப்போது
அங்கே விழிப்புணர்வோடு
இருந்தால், அது காதல் காலம்.
நல்ல தியான காலம்.

❖ எந்தக் காதல் காலம் சிறந்தது?

எல்லாமே சிறந்ததுதான். குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டுமானால்... உங்களை நீங்கள்
நேசிக்கும் காலமே மிக மிகச் சிறந்தது.

❖ ஏன்?

காதலில் எழ அது நேர்வழி.

❖ அப்படியென்றால் மற்ற காதல்கள்?

அவை காதலில் எழ உதவும் கோல்கள்... . நீங்கள் விழிப்புணர்வோடிருந்தால்!

❖ இன்றைய காதல் புதிரா? புனிதமா?

புதிருமல்ல. புனிதமுமல்ல. அது புதியது. புரியாதது.

எனவே, அது பூத்தவருக்குள் நிகழும் மாற்றங்கள்,அவரை, "காதல்... அது புதிர் அல்லது புனிதம்," எனச் சொல்ல வைக்கிறது.

உங்களின் மற்ற உணர்வுகளைப் போன்றே அதுவும் ஒரு உணர்வு, அவ்வளவு.

பருவக் காதல் திருப்தியளிப்பதில்லை. ஏன்?

  • சுகவனம், அய்யம்பேட்டை.

உங்கள் பாதங்களைத் தேடி நீங்கள் ஓடினால் அது கிடைக்குமா?

நின்று பார்த்தால்தான் தெரியும். ஓட வேண்டிய அவசியமே இல்லை. காரணம் - நிற்க, அது அங்கே இருக்கிறது.

பருவக்காதலில் வெளியே எதையோ தேடி ஓட ஆரம்பிக்கிறீர்கள்... ஆனால், நிஜத்தில் உங்களைத் தேட வைப்பதும், அதைத் திருப்திப்படுத்துவதும் உங்களின் உள்ளேயேதான் உள்ளது.

அதனால்தான் பருவக் காதலில் திருப்தி கிடைப்பதில்லை.