KAILASA Library/யந்திர தியானம்/முன்னுரைSign in
யந்திர தியானம்

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸரின் “யந்திர ரகசியம்” என்னும் சொற்பொழிவைச் சுருங்கத் தொகுத்து யந்திர தியானம் என்னும் சிறு புத்தகமாக வெளியிடுகிறோம்.

“தியானம் செய்ய ஆசை.

தியானத்திற்கென ஒதுக்க என்னிடம் ஒரு மணி நேரம் இல்லையே”! – என்று வருந்தும் மனிதர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் “யந்திரதியானம்”.

அலுவலகத்தில், பிரயாணத்தில், வியாபாரத்தில் கிடைக்கும் 10 நிமிட ஓய்வில் – என்று எல்லாச் சூழ்நிலைகளிலும் செய்வதற்கேற்ற தியானம் “யந்திரதியானம்”.

ஆன்மீகத்தில் கொஞ்சம் ஈடுபாடும், குருவின் மீது நம்பிக்கையும் இருந்தால் போதும். யந்திர தியானத்தில் ஈடுபடுவது எளிது.

கண்களை மூடி 11 நிமிடம் ஓய்வாக இருக்க நேரமும், இடமும் கிடைக்கும்போதெல்லாம் இந்த தியானத்தில் ஈடுபட முடியும்.

நம்முடைய கற்பனா சக்தியை சரியான முறையில் உபயோகிக்க இந்த தியானம் மிகவும் உதவும்.

யந்திர தியானத்தைச் செய்து ஞானப் பாதையில் காலடி எடுத்து வையுங்கள்.

– இப்படிக்கு

நித்யானந்த தியானபீடம்