ஸ்ரீமத் பகவத்கீதை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.


ஸ்ரீமத் பகவத்கீதை
THE SPH NITHYANANDA PARAMASHIVAM

ஸ்ரீமத் பகவத்கீதை
(ஜீவன்முக்த விஞ்ஞானம்)
பரமஹம்ஸ
விளக்கவுரை
நித்யானந்த பல்கலைக்கழகம்
உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த பீடத்தின் ஸந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.


உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த பீடத்தின் ஸந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.
இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும்
நுட்பங்களை பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட
தகுந்த ஆசிரியர்களின் நேரடியான மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும்.
மேலும், இந்தக் நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள்
மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள்,
உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ
சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி
செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால்
பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு
மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது,
நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் நித்யானந்த
பீடம் பொறுப்பாகாது.
புத்தக வெளியீடு: நித்யானந்தா பல்கலைகழகம்
பக்கங்கள்: 758
காப்புரிமை: ஞிணீணீதூ ணூடிள்டண 2016. அ டூ டூ ஞிணீணீதூ ணூடிள்டண ணூஞ
ண்துணூதிளுஞீ.
ஐசூடீமீ: 9781606071915
முதல் பதிப்பு: மார்ச் 2016 ஜீவன்முக்த வருடம்
பிரதிகள்: 10,000
அச்சுப்பதிப்பு: பி.எஸ் மங்கலா பிரிண்டர்ஸ், சென்னை
Ebook ISBN: 979-8-88572-973-4
இந்தப் புத்தகத்தின் எந்தவொரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ,
படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும்
வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு
கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு
உபயோகப்படுத்தவோ கூடாது. நித்யானந்த பீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான
அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல்
கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தவொரு தகவலையும்
நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின்
வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை
மூலமாகப் பெறப்படும் நன்கொடை, நிதி முழுவதும் நித்யானந்த பீடத்தின் கருணை
நோக்கச் செயல்களுக்குச் சேவையாகச் சென்றடைகிறது.
ஸ்ரீமத் பகவத்கீதை
(ஜீவன்முக்த விஞ்ஞானம்)
| ஐ. பகவத்கீதை ஒரு பின்னணி | ஐ௹ |
| ஐஐ. முன்னுரை | |
| ஐஐஐ. என்றென்றும் வாழும் மஹாபாரதம் | |
| ஐங. ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை | |
| ங. பூர்ணத்வம் | |
| ஙஐ. அத்தியாயம் | |
| 1. அர்ஜுந விஷாத யோகம் .................................... | |
| .......... | |
| (உங்கள் தடுமாற்றங்களுக்கான தீர்வு) | |
| 2. ஸாங்க்ய யோகம் .............................................. | |
| ........ | |
| (மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான தீர்வு) |
- கர்மயோகம் ........................................................ .......... (உங்கள் வாழ்வை வளமாக்கும் தீர்வு)
- ஜ்ஞானகர்ம ஸந்ந்யாஸ யோகம் (உங்கள் கர்மங்களைக் கரைப்பதற்கான தீர்வு)
- கர்ம ஸந்ந்யாஸ யோகம் ...................................... . (உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு)
- ஆத்மஸம்யம யோகம் ........................................ .......... (உங்களின் தடைகளையெல்லாம் தகர்ப்பதற்கான தீர்வு)
- ஜ்ஞானவிஜ்ஞான யோகம் .................................... .......... (உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு)
- அக்ஷரப்ரஹ்ம யோகம் ....................................... .......... (மரணபயத்தை வெல்வதற்கான தீர்வு)
- ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் ......................... .......... (உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு)
10. விபூதி யோகம் ...............................................
(உங்களின் சுதந்திரத்திற்கான தீர்வு)
11. விஸ்வரூப தர்ஸந யோகம் .............................
(துக்கங்களைத் துறப்பதற்கான தீர்வு)
12. பக்தி யோகம் ................................................
(உங்கள் வாழ்வை முழுமையாக்கும் தீர்வு)
13. க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் .......................
(குறைவுணர்வுகளைக் களைவதற்கான தீர்வு)
14. குணத்ரயவிபாக யோகம் ..................................
(மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்வதற்கான தீர்வு)
15. புருஷோத்தம யோகம் .....................................
(வளப்படுத்துதலை உங்கள் வாழ்க்கைமுறையாக்குவதற்கான தீர்வு)
16. தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் நற்றிணை உரை

ஶ்ரீ
பகவத்கீதையின்
பகவத்கீதையை வழங்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கித் துவங்குவோம்:
வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தநம் ந
தேவகீ பரமானந்தம் க்ரு'ஷ்ணம் வந்தே ஜகத்குரும் நந
கிருஷ்ணா,
வஸுதேவரின் மைந்தரே!
தேவகியின் பேரானந்தமே!
கம்ஸனையும் சாணூரனையும் அழித்தவரே!
ஜகத்குருவே, தங்களை வணங்குகிறேன்.
ஸ்ரீமத் பகவத்கீதை, தலையாய ஒரு யோக ஸாஸ்த்ர நூல். அது மட்டுமல்ல, இது தொன்மையான வேத கலாசாரம் மற்றும் ஸநாதந தர்மத்தின் மணிமகுடம். பிரபஞ்சத்தின் ஆதாரமாகவும் உருவகமாகவும் விளங்குகின்ற பரம்பொருளால் வழங்கப்பட்ட ஒரு ஸாஸ்த்ரமாக இது இருப்பதால், இந்த மொத்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது.
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ரு'தாம் ந
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே நந 4. 8
"எப்பொழுதெல்லாம் அதர்மம் பெருகி, மேலான தர்மமான ஜீவன்முக்த விஞ்ஞானம் மங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அதர்மத்தை அழித்து, காலத்தால் அழியாத மேலான தர்மமான ஜீவன்முக்த விஞ்ஞானத்தைப் புனரமைத்து, பக்தர்களைக் காக்கவும் வளப்படுத்தவும் நான் மீண்டும் மீண்டும் தோன்றுகிறேன்." - இது பரப்ரஹ்ம ஸ்ரீகிருஷ்ணரின் உறுதிமொழி.
இதுவே கீதையின் சாரமும் மையக்கருத்துமாகும்.
உங்களை ஞானியாக்கும் அனுபவ வெளிப்பாடு
நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலையான அத்வைத நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையிலிருந்து வெளிப்படுத்தியவையே ே வதங்களும் உபநிஷதங்களும்! இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமைவாய்ந்தவை.
அந்த ஞானிகளின், ரிஷிகளின் அனுபவ வெளிப்பாடுகளான வேதங்கள் மற்றும் உபநிஷதங்களின் சாரமே கீதை!
கீதையானது, பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அந்த ஞானிகளால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபநிஷதங்களைப் போன்றோ ஒரு தனி நூல் அல்ல. அது, மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது.
இது, கிருஷ்ணருக்கும் அவருடைய நெருங்கிய சீடர் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த உரையாடல். இங்குக் கிருஷ்ணர் தம் சீடனுக்கு, ஜீவமுக்த விஞ்ஞான அறிவையும் அனுபவத்தையும் சொற்கள் மூலமாகப் பரிமாறுகிறார்.
அதை அப்படியே, சிறந்த ஞானியான வியாஸ முனிவர் பதிவுசெய்திருக்கிறார். வியாஸ முனி சொல்லச் சொல்ல, ஒருங்குவித்தல், தூயஞானம் மற்றும் இனிமையான தன்னிச்சை பண்பு ஆகியவற்றின் உருவகமாகத் திகழும் விநாயகப்பெருமான் இந்த இதிகாசத்தை எழுதினார்.
பகவத்கீதையைப் பொதுவாக கீதை என்றே சொல்லுவோம். ஸம்ஸ்க்ரு’தத்தில், கீதை என்றால் ‘புனிதப் பாடல்’ என்று பொருள். பகவத்கீதை என்றால் ‘கடவுளின் பாடல்’ என்று பொருள்.
கீதையை ப்ரஹ்ம வித்யா என்றும் அழைப்பதுண்டு. ப்ரஹ்ம வித்யா என்றால் மகோன்னதமான ஸத்யத்தைப் பற்றிய அறிவு என்று பொருள். இது ஜீவன்முக்த விஞ்ஞானத்தின் கையேடு.
மேலும் இது, பூர்ணாவதாரமான ஸ்ரீகிருஷ்ணரால் நேரிடையாகச் சொல்லப்பட்டதால், ஸத்யத்தை வெளிப்படுத்துவதில் அதிகாரப்பூர்வமான அங்கீகாரம்பெற்ற நூலாகத்திகழ்கிறது.
கீதை, உலக முழுவதுமுள்ள தத்துவங்களின் சுருக்கப்படாத, ஒரு முழுமையான அகராதி. எல்லாத் தத்துவப் போக்குகளின் விதையை... எல்லா சம்பிரதாயங்களின் விதையை... எல்லா ஆன்மிக நுட்பங்களின் விதையை... நீங்கள் கீதையினுள்ளே பார்க்கலாம்.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறெந்த இதிஹாஸமோ அல்லது இதிஹாஸத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது.
ஒரு மனிதன், பூர்ணத்வத்தில் மிக இனிமையாக வாழ்ந்துகொண்டே, தம்முடைய மனித செயல்களிலும் களத்திலும் ஸ்ரத்தையைப் பாய்ச்சி வலுப்படுத்துவதன் வாயிலாக, அவற்றை எப்படி ஒரு பொறுப்பான தெய்விக செயலாகவும் களமாகவும் உயர்த்திக்கொள்ள முடியும் என்பதை ஒரு எளிமையான நடைமுறை விஞ்ஞானமாக மனிதகுலத்திற்கு கீதை வழங்கியிருக்கிறது.
எல்லாத்தரப்பட்ட மனிதர்களையும் - எளிமையான மன அமைப்பு முதற்கொண்டு சிக்கலான மன அமைப்புகொண்டுள்ள எல்லாத்தரப்பட்ட மனிதர்களையும் - வளப்படுத்துவதற்கென எத்தனையோ ஸாஸ்த்ரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதுவரை அப்படி எழுதப்பட்ட மொத்த ஸாஸ்த்ரங்களிலும் உள்ளடங்கியிருக்கும் ஸத்யங்களின் சாரத்தை கீதை தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருப்பதற்கு சாத்தியமான எல்லா வகை சந்தேகங்களுக்கான தீர்வுகளையும், மனிதனைத் தடுமாற்றத்திற்குள்ளாக்கும் உணர்ச்சிப் போராட்டங்களுக்கான தீர்வுகளையும், குறிப்பிட்ட இடம், காலம், சூழ்நிலை என்றல்லாமல், எல்லா வகையான இடம், காலம் சூழ்நிலைகளிலும் வாழ்கின்ற அல்லது வீழ்கின்ற மனித நாகரீகங்கள் ஒவ்வொன்றையும் உயர்நிலைக்கு எடுத்துச்செல்வதற்கான தர்மப் பாதையையும் இலக்கையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
